அத்தியாயம் 2
மறுநாள் வீராவின் பெற்றோர் பள்ளிக்கு வந்தனர்.
“வீரா அந்த மிஸ் என்னலாம் சொல்ல போகுதுன்னு தெரியலையே டா எனக்கு வேற பயமா இருக்கு டா” என்றான் அருண்.
“என் அம்மா அப்பா தான டா வராங்க நீ ஏன் டா பயந்து சாவுற” என்றான் வீரா.
“தெரியலை டா உன்னை விட எனக்கு தான் ரொம்ப பயமா இருக்கு” என்றான்.
சுவாமிநாதனும் சாவித்ரியும் நந்தினியை தூக்கி கொண்டு வர வீராவையும் அழைத்து கொண்டு பிரின்சிப்பல் அறைக்கு சென்றனர்.
அவர்கள் உள்ளே வருவதை பார்த்த பிரின்சிப்பல் “நீங்க தான் வீராவோட அம்மா அப்பாவா?” என்று கேட்டார்.
“ஆமாம் மேடம் வர சொன்னிங்கன்னு சொன்னான் என்ன விஷயம் மேடம் சொல்லுங்க” என்றார்
சுவாமிநாதன்.
“முதல்ல உட்காருங்க பேசலாம்” என்க இருவரும் அங்கிருந்த நாற்காலியில் அமர்ந்தனர்
சாவித்திரியின் மடியில் நந்நினி அமர்ந்து இருந்தாள்.
வீரா எந்த வித அலட்டலும் இன்றி தைரியமாக தன் பின்னே கையை கட்டி கொண்டு நின்றிருந்தான்.
“சார் உங்க பையன் வீரா ஒரு
எல்.கே.ஜி படிக்கிற பையனோட கன்னத்துல அடிச்சிருக்கான் பாவம் அந்த பையனோட கன்னம் வீங்கி இவனோட விரல் ரேகை அப்படியே அவன் கன்னத்தில் பதிந்து இருக்கு இவன் எட்டாவது படிக்கிற பையன் எல்.கே.ஜி பையன் கிட்ட போய் இவனோட கோபத்தை காட்டியிருக்கான்
இந்த வயசுல இவ்வளவு கோபம் வரக்கூடாது சார் உங்க பையனை கண்டிச்சி வைங்க” என்றார்.
சுவாமிநாதன் கோபத்துடன் “நீ எதுக்கு டா அந்த சின்ன பையனை அடிச்ச” என்று கேட்டார்.
“அப்பா இங்கே பாருங்க” என்று நந்தினியின் கையை எடுத்து காட்டியவன் “அவன் நம்ம பாப்பா கையை எப்படி கடிச்சி வச்சிருக்கான்னு அதனால தான் அவனை அடிச்சேன்” என்றான் வீரா.
“என்ன மேடம் என் பேத்தி கை இப்படி வீங்கி போய் ரத்தம் கட்டி இருக்கு என் மகனை மட்டும் கேட்கக்குறிங்க அந்த பையனை கேட்க மாட்டிங்களா” என்றார் சுவாமிநாதன் கோபத்துடன்.
“சார் அவன் சின்ன குழந்தை சார் அவன் கிட்ட என்ன கேட்க முடியும்ன்னு நினைக்குறிங்க” என்றார் அந்த பெண்மணி.
“அப்போ என் பேத்தி சின்ன பிள்ளை இல்லையா அவங்க மிஸ் என்ன பண்ணிட்டு இருக்காங்க கிளாஸ்ல குழந்தைகளை பார்த்துக்குறதை தவிர அவங்களுக்கு வேற என்ன வேலை” என்றார் கோபத்துடன் எழுந்து நின்று கத்த ஆரம்பித்துவிட்டார்.
“சார் ஒரு நிமிஷம் நான் சொல்றதை கேளுங்க அந்த பையன் பண்ணினது தப்பு தான் நான் இல்லைன்னு சொல்ல வரல அதுக்காக உங்க பையன் பண்ணினதும் தப்பு தான் அவங்க மிஸ் கிட்ட சொல்லிருக்கனும் இந்த வயசுல இவ்வளவு கோபம் கூடாது சார் கோபம் ஒரு மனுஷனோட குணத்தை இழக்க வைக்கும் பார்த்துக்கோங்க” என்று அவரை சமாதானம் செய்ய முயற்சி செய்ய சுவாமிநாதன் தன் மகன் செய்தது சரி தான் என்பதை போன்று பேசிவிட்டு அங்கிருந்து சென்றார்.
அந்த பிரன்ச்சிப்பல் தன் அருகில் இருந்த ஆசிரியரிடம் “என்ன இவர் இப்படி இருக்காரு இந்த மாதிரி எல்லாம் இருந்தா அந்த பையன் உருப்புடவே மாட்டான்” என்றார்.
அருண் அவனுக்காக வெளியே காத்திருந்தவன் “என்ன டா சொன்னாங்க” என்று கேட்க
நடந்தவை அனைத்தையும் கூறியவன் “நான் பண்ணினது தான் கரெக்ட் எங்க அப்பாவே சொல்லிட்டாரு பாரு” என்றான் சிரித்து கொண்டே.
நாட்கள் அதன் போக்கில் நகர்ந்தன என்ன தான் வீரா கோவக்காரனகவும் முரடனாகவும் இருந்தாலும் படிப்பில் கெட்டிக்காரன் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில் அவன் பள்ளியிலேயே முதல் இடம் பிடித்தான்.
தன் மகன் பள்ளியில் முதல் மதிப்பெண் எடுத்ததில் சாவித்ரிக்கும் சுவாமிநாதனுக்கும் அவ்வளவு சந்தோஷம்.
அதே போன்று பன்னிரெண்டாம் வகுப்பு பொதுதேர்விலும் அவன் தான் முதல் மதிப்பெண் பெற்றிருந்தான்.
வீராவின் மதிப்பெண்ணுக்கு சென்னையில் உள்ள அண்ணா பல்கலைக்கழகத்திலேயே சீட் கிடைக்க அங்கே சேர்ந்து மெக்கானிக்கல் இன்ஜினியரிங் படிக்க ஆரம்பித்தான்.
அங்கே சேர்ந்தும் அவன் அமைதியாக இல்லை
முதல் நாள் வீரா கல்லூரியின் உள்ளே நுழைந்தான் அப்போது இவன் சீனியர்களில் ஒருவன்
வீராவின் பெயரை என்னவென்று கேட்க
“வீரப்பத்திரன்” என்று கூறியவுடன் அங்கிருந்த அனைவரும் சிரிக்க ஆரம்பித்துவிட்டனர்.
“என்ன டா பெயர் இது நல்லா பட்டிக்காட்டான் மாதிரி” என்று கூறிவிட்டு சிரித்து கொண்டே இருந்தனர் அந்த மாணவர்கள் உடனே வீராவுக்கு கோபம் வந்துவிட அவர்களை பார்த்து முறைத்தான்.
“என்ன டா முறைக்குற” என்று கேட்டு கொண்டே ஒருவன் அவன் அருகில் வந்து அவன் சட்டையை பிடிக்க வீரா கோபத்துடன் அவன் மூக்கில் ஓங்கி குத்திவிட்டான் அவன் மூக்கில் இருந்து ரத்தம் வர ஆரம்பித்தது.
அங்கு நின்றிருந்த இன்னும் சிலர் அவனை அடிக்க வர அவர்களையும் அடித்து துவைத்துவிட்டான் வீரா.
மறுநாள் அவன் தந்தையை கல்லூரிக்கு அழைக்க சுவாமிநாதன் வழக்கம்போல் தன் மகன் செய்தது தான் சரி என்பதை போல் வாதாடி விட்டு அங்கிருந்து சென்றார்.
அன்றிலிருந்து வீராவின் சீனியர்கள் அவனிடம் இருந்து ஒரு அடி தள்ளி தான் நின்றனர்.
வீட்டில் கூட சாப்பாட்டில் ஒரு உப்பு சரியில்லை என்றால் கூட சண்டைக்கு வருவான்.
கல்லூரியில் படிக்கும் போதே ஜீம்மில் சேர்ந்து விட உடலை கட்டுக்கோப்பாக மெருகேற்றி வைத்திருந்தான் அவனையும் அவன் உடல் பலத்தையும் பார்த்தாலே யாரும் அவனிடம் சண்டைக்கு வர மாட்டார்கள்.
அருண் ஊரின் பக்கத்திலேயே இருந்த ஒரு கல்லூரியில் பி.எஸ்.சி அக்ரி கல்ச்சர் முடித்துவிட்டு தன் சொத்துகளை கவனித்து கொண்டு இருந்தான்.
அதே சமயம் நந்தினி அந்த வீட்டின் குட்டி இளவரசியாகவே வலம் வந்து கொண்டிருந்தாள் படிப்பிலும் சுமார் ரகம் தான் அவளின் தாத்தா பாட்டி அவளை ஒரு வார்த்தை கூறிவிட்டாள் அவளுக்கு உடனே கண்ணில் இருந்து தண்ணீர் வந்துவிடும்
யாருக்கும் பயப்படாமல் இருப்பவள் வீராவை கண்டாலே ஓடி ஒளிந்து கொள்வாள் அவன் ஹாஸ்ட்டலில் இருக்கும் நாட்களில் வீட்டிலேயே இருப்பாள்.
அவன் ஊருக்கு வந்துவிட்டாள் அருணின் வீட்டிற்க்கு சென்றுவிடுவாள் சாப்பிட தூங்க மட்டும் தான் வீட்டிற்க்கு வருவாள் அதுவும் வீரா இல்லாத சமயம் மட்டுமே.
வீரா இருக்கும் போது அந்த பக்கம் எட்டி கூட பார்க்க மாட்டாள்
அருணின் வீட்டில் ஒரு பெண் பிள்ளை இல்லாத குறையை தீர்த்து வைத்து கொண்டு இருந்தாள்.
அருணின் பெற்றோர் தீபாவளி பொங்கல் என்று எந்த விசேஷம் வந்தாலும் நந்தினிக்கும் சேர்த்து உடை எடுத்துவிடுவார்கள் அந்த அளவிற்க்கு அருணிடமும் அவர்கள் வீட்டில் இருப்பவர்களுடனும் நெருங்கி இருந்தாள் நந்தினி.
வீரா கல்லூரி முடித்த கையோடு எஸ்.ஐ தேர்விற்க்கு படிப்பதற்க்காக சென்னையிலேயே இருந்து விட நந்தினிக்கு இன்னும் வசதியாகி விட்டது ஊர் சுற்றுவது மாங்காய் திருடுவது நண்பிகளுடன் சேர்ந்து குளத்தில் குளிப்பது அன்றைய பொழுது முழுவதும் விளையாடிவிட்டு மாலை தான் வீடு வருவாள்.
ஒருவேளை வீட்டிற்க்கு வர பிடிக்கவில்லை என்றால் அருணின் வீட்டிற்க்கு சென்று விடுவாள் அங்கேயே சாப்பிட்டு விட்டு உறங்கி விடுவாள்.
இப்படியாக வீரா எஸ்.ஐ தேர்வில் தேர்ச்சி பெற்று அங்கேயே இருந்து விட நான் தான் ராணி என்பதை போல் சுவாமிநாதனையும் சாவித்திரியையும் தொல்லை செய்து கொண்டு இருந்தாள் அந்த குட்டி இளவரசி.
நந்தினி வளர வளர தன் தந்தையின் சாயலில் இருந்தாள் நிறத்தில் மட்டும் தன் தாயை போல் மாநிறத்திற்கு சற்று கூடுதலான நிறத்துடன் இருந்தாள்.
அன்று வழக்கம் போல் நந்தினி வெளியே கிளம்பி கொண்டு இருந்தாள் பாவடை சட்டை அணிந்து காலில் நடப்பதற்க்காக செயற்கையான கால் போன்ற தோற்றமுடைய ஷூவை அணிந்து கொண்டு இருக்க
அவளை பார்த்து கொண்டே நின்றிருந்த சாவித்திரியின் கண்கள் கலங்க ஆரம்பித்தது.
ஷூவை மாட்டி கொண்டு ஒரு காலை தாங்கி கொண்டே நடந்து வந்தவள் “பாட்டி நான் வெளியே போய்ட்டு வரேன்” என்று கூற அவளிடம் தன் சோகத்தை வெளிக்காட்டி காட்டி கொள்ளாமல் நின்றிருந்தவர்
தன் கையில் இருந்த ஜாதி மல்லியை அவள் தலையில் வைத்துவிட்டு “போய்ட்டு நேரத்தோட வீடு வந்து சேரு” என்று கூறிக்கொண்டே தன் புடவை முந்தானையில் கண்களை துடைத்துக் கொண்டார்.
அதன் பின் அவளும் ஊர் சுற்ற கிளம்பினாள்.
வீராவின் 25 ஆவது வயதில் அவன் ஊருக்கே டிரான்ஸ்பர் வாங்கி கொண்டு வர
அப்போது தான் நந்தினியின் ஆட்டத்திற்க்கு எல்லாம் ஒரு முற்றுப்புள்ளி வந்தது.
நந்தினி ஒரு நாள் சாதாரணமாக கிளம்பி வந்தவள் வெளியே நின்று கொண்டு இருந்தாள் தன் ஒரு காலில் நடப்பதற்க்காக அணியும் ஷூவை அணிந்து கொண்டு இருந்தாள்.
அப்போது அவள் பக்கத்தில் ஒட்டி உரசி கொண்டே சிவப்பு நிற ஒரு கார் ஒன்று வந்து நின்றது.
நந்தினி ஒரு நிமிடம் நின்று அது யார் என்று பார்க்க காரிலிருந்து காக்கி யூனிஃபார்முடன் இறங்கினான் வீரா.
அவனை பார்த்தவளுக்கு கை,கால் எல்லாம் உதறல் எடுக்க ஆரம்பித்தது ‘என்ன இந்த மாமா ஜாக்கிசான்ல வர பீமா மாதிரி இருக்காரு’ என்று மனதில் நினைத்தவள் அவனை பார்த்து பயத்துடனே நின்று கொண்டு இருந்தாள்.
ஆம் வீரா நல்ல உயரம் தமிழ்நாட்டு நிறம் முறுக்கு மீசையுடன் பார்ப்பதற்க்கு உண்மையிலேயே வீரப்பத்திரனை போல இருப்பான் அதனால் தான் நந்தினி அவனை மிரடிசியுடன் பார்த்து கொண்டே நின்றிருந்தாள்.
சாவித்திரி உள்ளே இருந்து ஆரத்தி தட்டுடன் வெளியே வந்தவர் தன் மகனுக்கு சுத்தி போட வீரா கையில் இரண்டு பெரிய பெரிய பெட்டிகளுடன் உள்ளே சென்றான்.
‘என்ன மாமா எப்பவும் சின்ன பெட்டியோட தான வீட்டுக்கு வருவாரு இன்னைக்கு என்ன இவ்வளோ பெரிய பெட்டியோட போறாரு’ என்று மனதில் நினைத்து கொண்டே பயத்துடன் நின்றிருந்தாள்.
தன் காலில் ஷூவை மாட்டி கொண்டு வேக வேகமாக அருண் வீட்டிற்க்கு சென்றாள்.
அவன் வீட்டின் உள்ளே மூச்சிறைக்க நடந்து சென்றாள் அங்கே அருண் டைனிங் டேபிளில் அமர்ந்து சாப்பிட்டு கொண்டு இருந்தான்.
அவன் அருகில் சென்று அமர்ந்து கொண்டாள் நந்தினி
அருணின் தாய் லலிதா அங்கே வந்தவர் “நந்தினி சாப்பிடு டி உனக்கு பிடிச்ச பூரி பண்ணிருக்கேன்” என்று கூற
“எனக்கு எதுவும் வேண்டாம் மா” என்றாள்.
அவள் வேண்டாம் என்று கூறியவுடன் அவளை ஆச்சரியமாக பார்த்தார் ஏனெனில் பூரி என்றால் வீட்டில் சாப்பிட்டே வந்திருந்தாலும் இங்கு வந்து ஒரு வெட்டு வெட்டி விட்டு தான் செல்வாள்
‘என்ன ஆச்சி இவளுக்கு’ என்று நினைத்தவர் மீண்டும் சமயலைறைக்கு சென்றார்.
அவள் கன்னத்தில் கை வைத்து கொண்டு உம்மென்று அமர்ந்திருக்க அருண் அவளை கண்டுகொள்ளாமல் பூரி கிழங்கை வைத்து வெளுத்து கொண்டிருந்தான்.
‘கல்நெஞ்சக்காரன் இங்கே ஒருத்தி உம்முன்னு இருக்களே என்னன்னு கேட்க்குறானா பாரு’ என்று மனதில் நினைத்து கொண்டே அருணை வைத்த கண் வாங்காமல் பார்த்து கொண்டே அமர்ந்து இருந்தாள் நந்தினி.
அருண் நன்றாக சாப்பிட்டு முடித்து கையை கழுவியவன் அப்போது தான் தன் அருகில் அமர்ந்து இருந்த நந்தினியை பார்த்தான்.
‘என்னாச்சி இவளுக்கு’ என்று மனதில் நினைத்தவன் டவலால் தன் கையை துடைத்து கொண்டே வந்து அவள் அருகில் அமர்ந்தான்.
அப்போது வீட்டின் உள்ளே வந்த அருணின் தந்தை அண்ணாதுரை நந்தினியை பார்த்தவர் “நந்தினி இங்கே தான் இருக்கியா இந்தா நீ கேட்ட இங்க் பேனா” என்று அவளிடம் நீட்டினார்.
அதை அவரிடம் இருந்து வாங்கியவள் டைனிங் டேபிளில்
வைத்துவிட்டு மீண்டும் சோகமாக அமர்ந்து கொண்டாள்.
“என்னாச்சி டி நந்தினிக்கு நீ எதாச்சும் திட்டுனியா” என்று லலிதாவிடம் கேட்டார்.
“அவள் இங்கே வந்ததில் இருந்து அமைதியா தான் இருக்கா” என்றார் லலிதா.
அண்ணாதுரை அவளை பார்த்து கொண்டே தன் அறையின் உள்ளே சென்றார்.
அவள் பக்கத்தில் இருந்த அருண்
“பாப்பா என்னாச்சி” என்று கேட்டான் அவன் கேட்டது தான் தாமதம் அவள் தேம்பி தேம்பி அழுக ஆரம்பித்துவிட்டாள்.
“என்னாச்சின்னு கேட்க்குறன்ல்ல
சொல்லு” என்றான் அருண்
“அந்த சிடுமூஞ்சி ஊருக்கு வந்துடுச்சி அருண் அண்ணா” என்றாள் அழுது கொண்டே.
“யாரை சொல்ற” என்று கேட்டவன் பின் நினைவு வந்தவனாக “வீராவையா சொல்ற” என்றான்.
“ஆமாம்” என்று கண்ணீர் மல்க தலையை ஆட்டினாள்.
அவள் முகத்தை பார்த்த அருண் விழுந்து விழுந்து சிரிக்க ஆரம்பித்துவிட்டான்.
அருண் சிரிப்பதை பார்த்த நந்தினி கோபத்துடன் வெளியே சென்றவள் அங்கிருந்து நடந்து சென்றுவிட்டாள்.
“ஏய் பாப்பா நில்லு” என்று அருண் அவளின் பின்னே கத்தி கொண்டே வருவதை கூட கண்டுகொள்ளாமல் அங்கிருந்து சென்றுவிட்டாள்.
அவள் நேரே சென்றது என்னவோ அங்கிருந்த ஓடைக்கு தான் கரையில் தான் அணிந்திருந்த ஷூவை கழட்டி வைத்தவள் தன் ஒற்றை காலை மட்டும் ஓடும் தண்ணீரில் வைத்து கொண்டு அமர்ந்து கொண்டாள்.
நந்தினிக்கு சந்தோஷம் துக்கம் எது இருந்தாலும் அந்த ஓடைக்கு வந்துவிடுவாள்.
இப்போதைக்கு அவள் வாழ்வில் இருக்கும் ஒரே துன்பம் வீரா மட்டும் அதுவும் அவன் இந்த வீட்டிற்க்கு வந்தது மட்டும் தான்.
நந்தினி அழுது கொண்டே அந்த கரையில் அமர்ந்து இருந்தாள்
தொடரும்….
super
Super sis 💞
👌👌👌👌👌👌👌👌👌👌👌👌