அத்தியாயம் 3
அது என்னவோ நந்தினிக்கு வீராவை பார்த்தாள் எப்போதும் பயம் தான் அவன் ஊருக்கு இங்கேயே வந்துவிட்டான் என்றதில் அவளுக்கு தன்னை அறியாமல் அழுகை அழுகையாக வந்தது.
அருண் தன்னை பார்த்து சிரித்தது வேறு எரியும் நெருப்பில் எண்ணெய்யை ஊற்றியது போல் இன்னும் அழுகை அதிகமானது.
நந்தினி தன் கால்களுக்கு இடையில் ஓடும் தண்ணீரை விரக்தியுடன் பார்த்து கொண்டே அமர்ந்து இருந்தாள்.
மாலை வரை அங்கேயே அமர்ந்து இருந்தாள் எவ்வளவு நேரம் அப்படியே அமர்ந்திருக்க முடியும் வீட்டிற்க்கு சென்று தானே ஆக வேண்டும்.
இருட்ட தொடங்கும் சமயம் மெல்ல தன் ஷூவை எடுத்து மாட்டி கொண்டு அங்கிருந்து சென்றாள் நந்தினி.
தன் வீட்டிற்க்கு செல்லாமல் அருண் வீட்டிற்க்கு தான் சென்றாள் லலிதா சமைத்து வைத்திருந்த சாப்பாட்டை சாப்பிட்டவள் அங்கேயே ஹாலில் பாயை விரித்து படுத்து உறங்க ஆரம்பித்தாள்.
அருண் வந்து அவளை எழுப்பி அவளிடம் சமாதானம் பேச எவ்வளவு முயற்சி செய்தும் அவள் பேசவேயில்லை படுத்து உறங்கிவிட்டாள்.
மறுநாள் காலை நந்தினி இழுத்து போர்த்தி கொண்டு உறங்கி கொண்டு இருக்க லலிதா வந்து அவளை எழுப்பினார் “அடியேய் நந்தினி எழுத்துரு டி ஸ்கூலுக்கு நேரமாச்சி” என்று எழுப்பினார்.
அவளும் அரை தூக்கத்திலேயே எழுந்து அமர்ந்தவள் அந்த வீட்டிற்க்கு செல்லவே பிடிக்காமல் சென்றாள்.
“நேத்து போன கழுதை இன்னும் வீட்டுக்கு வரல வரட்டும் கவனிச்சிக்குறேன் இவள் கூட இருக்கவளுக எல்லாம் பெரிய மனுஷி ஆகி வீட்டோட இருக்காளுக இவள் மட்டும் இன்னும் அவுத்து விட்ட காளை மாடு மாறி ஊர் சுத்திட்டு இருக்கா” என்று புலம்பி கொண்டே வேலை செய்து கொண்டு இருந்தார் சாவித்திரி.
நந்தினி அவர் திட்டியதை அனைத்தையும் கேட்டு கொண்டே வீட்டின் உள்ளே நுழைந்தாள்.
அவளை பார்த்த சாவித்திரி “ஏன் டி இந்நேரம் ஆகுதே என்னைக்காச்சும் ஒரு நாள் வீடு தங்குறியா” என்று கூறிக்கொண்டே தோசை கரண்டியால் அவளை அடிக்க வர
அவர் அடிக்கும் முன்னே நந்தினி தேம்பி தேம்பி அழ ஆரம்பித்துவிட்டாள்.
அப்போது அங்கே வந்த சுவாமிநாதன் “அடியேய் எதுக்கு டி என் பேத்தியை போட்டு இந்த அடி அடிக்குற” என்று கேட்க
“ஏங்க நான் அவளை இன்னும் அடிக்கவேயில்லை கையை தான் ஓங்குனேன் அதுக்கே அவள் அழ ஆரம்பிச்சிட்டா” என்றார் கோபத்துடன்.
“நீ அடிச்சிருப்ப அவளே பாவம் புள்ளை எப்படி அழுகுது பாரு” என்று கூறிக் கொண்டே அவளை தன்னுடன் அழைத்து சென்றார்.
“அம்மாடி நீ போய் ஸ்கூலுக்கு கிளம்பு” என்றார் சுவாமிநாதன்
நந்தினி கண்ணை துடைத்து கொண்டு குளிக்க சென்றாள்.
குளித்து முடித்தவள் யூனிஃபார்ம் போட்டு ஷாலில் பின் குத்திக் கொண்டே வெளியே வர வீரராகவும் தன் அறையில் இருந்து கிளம்பி வெளியே வந்தான்.
அவனை பார்த்து பயத்துடனே தலையை குனிந்து கொண்டே வந்தவள் சாப்பிட அமர்ந்தாள்.
வீராவும் அவள் எதிரில் அமர்ந்து யாருடனோ போனில் பேசிக்கொண்டே சாப்பிட்டு கொண்டு இருந்தான்.
எங்கே அவன் தன்னை பார்த்து எதாவது பேசி விடுவானோ என்று பயத்துடனே அவசர அவசரமாக சாப்பிட்டு முடித்தவள் எழுந்து கை கழுவி விட்டு தன் பையில் நோட்டு புத்தகங்களை எடுத்து வைத்து கொண்டு இருக்க “நந்தினி வெளியே மழை வர மாதிரி இருக்கு மாமா கூடவே போய்டு” என்று சுவாமிநாதன் கூறினார்.
“வேண்டாம் தாத்தா நான் நித்யா கூட சைக்கிள்லையே போறேன் நான் மழை வரதுக்குள்ள போய்டுவேன்” என்று அவள் கூறிக்கொண்டே இருக்கும் போதே வெளியே மழை வெளுக்க ஆரம்பித்தது.
மழை பொழிவதை பார்த்தவளுக்கு அழுகையே வந்துவிட்டது கண்கள் கலங்க தன் பையை மாட்டிக்கொண்டவள்
முகத்தை தூக்கி வைத்து கொண்டே வீராவுடன் சென்று காரில் ஏறினாள்.
வீரா காரை ஓட்டிக்கொண்டு சென்று கொண்டிருந்தவன்
“நந்தினி மா நீ எந்த கிளாஸ் படிக்குற” என்று கேட்டான்.
“பத்தாவது மாமா” என்றாள் நந்தினி பயத்துடனே
‘எப்போ டா ஸ்கூலுக்கு செல்வோம்’ என்று மனதில் நினைத்து கொண்டிருந்தாள் நந்தினி.
“நல்லா படி எதாச்சும் டவுட்னா கேளு” என்றான்
அவளும் பதிலுக்கு தலையை மட்டும் ஆட்டினாள்.
அதற்க்குள் பள்ளி வந்துவிட தன் பையை எடுத்து கொண்டு கீழே இறங்கினாள் நந்தினி.
அவளுடன் வீரா கீழே இறங்க “இல்லை மாமா நானே போய்டுவேன்” என்று நந்தினி கூறினாள்.
அவள் கூறுவது எதையும் காதில் வாங்காமல் கீழே இறங்கினான் வீரா அங்கே பக்கதில் இருந்த பேருந்து நிலையத்தில் ஒரு பெண்ணிடம் நான்கு பேர் வம்பிழுத்து கொண்டு இருக்க அவர்களின் அருகில் சென்றான்.
வீரா அங்கிருந்த ஒருவரையும் விடாமல் கன்னத்தில் பளார் பளார் என்று அறை விட அந்த சத்தம் பத்தடி தள்ளி நின்ற
நந்தினிக்கு கேட்டது அவன் அடிப்பதை பார்த்து அரண்டு போய் நின்றிருந்தாள்.
“இனிமே எவனாவது இங்கே நிற்க்குறதை பார்த்தேன் தொலைச்சிடுவேன் ராஸ்கல்” என்று மிரட்டியவன் அவர்களை அங்கிருந்து அடித்து விரட்டி அடித்தான்.
அங்கிருந்து வீரா நந்தினியின் அருகில் வரும் போதே அவள் வியர்வை வடிய பயத்துடனே நின்றிருந்தாள்
அவள் அருகில் வந்து நின்றவன் “பார்த்து போ” என்று கூற அவள் பயத்துடன் தலையை மட்டும் ஆட்டிவிட்டு அங்கிருந்து பள்ளியின் உள்ளே சென்றாள்.
நல்லநாளிலேயே அவனை பார்த்து பயந்து ஓடுவாள் இனி சொல்லவே வேண்டாம்
அவன் இருக்கும் பக்கம் தலை வைத்து கூட படுக்க மாட்டாள்.
அன்று காலை அப்படி தான் நந்தினி பள்ளிக்கு கிளம்பி கொண்டு இருந்தாள் அவளுக்கு இன்று ரேங்க் கார்ட் கொடுத்திருக்க அதை யாரிடமும் காட்டாமல் தாத்தாவிடம் மட்டும் காட்டி சைன் வாங்கி விடலாம் என்று நினைத்து கொண்டிருந்தாள்.
அவள் ஹாலிற்க்கு வரும் போதே வீரா கிளம்பி தன் காலில் ஷூவை மாட்டிக்கொண்டு இருந்தான்.
“என்ன டி மசமசன்னு நின்னுட்டு இருக்க இந்தா டிபன் பாக்ஸ் கிளம்பு” என்று சாவித்திரி அவள் கையில் கொடுக்க அதை வாங்கி தன் பையில் வைத்து கொண்டவள் அங்கே வீராவின் எதிரில் அமர்ந்து இருந்த சுவாமிநாதனிடம் சென்றவள்.
“தாத்தா” என்று அழைக்க அவரும் என்னவென்று நிமிர்ந்து பார்த்தார் பயத்துடன் தன் கையில் இருந்த ரேங்க் கார்ட்டை அவரிடம் கொடுத்தாள்.
“என்ன மார்க் வாங்கி வச்சிருக்க
கழுதை இதுக்கு தான் உன்னை படிக்க அனுப்புறனா” என்று அவளை திட்டி கொண்டு இருக்க
இது வீராவின் காதிலும் விழுந்தது “அப்பா இங்க கொடுங்க” என்று ரேங்க் கார்ட்டை தன் கையில் வாங்கி பார்த்தான் வீரா.
அவளின் மார்க்கை பார்த்த வீரா “என்ன டி மார்க் இது?” என்று கோபத்துடன் அவளை பார்த்து கேட்க
நந்தினி கண்கள் சிவக்க தலைகுனிந்து அழுக ஆரம்பித்துவிட்டாள்.
“நந்தினி நிமிர்ந்து என்ன பாரு” என்க நந்தினி பயத்துடனே அவனை பார்த்தாள் “இந்த மாதிரிலாம் நீ படிச்சா உருப்புடவே மாட்ட அப்பா இவளுக்கு ரெண்டு மாடு வாங்கி கொடுத்துடுங்க மேய்ச்சிட்டு வீட்லயே இருக்கட்டும்” என்றான் அவளை பார்த்து கொண்டே.
“என்னாச்சி என்ன நந்தினி” என்று கேட்டு கொண்டே சாவித்திரி அங்கே வந்தார்.
“அம்மா இவள் ரெண்டு பாடத்துல பெயில் ஆகி இருக்கா
நாளையில் இருந்து இவள் எங்கேயும் வெளியே போக கூடாது வீட்லயே இருந்து படிக்க சொல்லு நான் டெய்லி வந்து இவள் என்ன படிச்சான்னு கேட்பேன் நான் கிளம்புறேன் எனக்கு டைம் ஆச்சு சாய்ந்திரம் வந்து என்ன படிச்சன்னு கேட்ப்பேன் சொல்லனும்” என்று கூறிவிட்டு வீரா அங்கிருந்து சென்றான்.
நந்தினி அழுது கொண்டே நின்றிருக்க “இவளுக்கு நல்லா வேணும்” என்று சாவித்திரி கூறிவிட்டு அங்கிருந்து சென்றார்.
சுவாமிநாதன் அவளின் ரேங்க் கார்ட்டில் கையெழுத்து போட்டுவிட்டு அவளிடம் கொடுத்தார்.
அதை தன் கையில் வாங்கி கொண்டவள் அங்கிருந்து அழுது கொண்டே பள்ளிக்கு சென்றாள்.
அங்கே ஆசிரியர் நடத்தும் பாடம் எதுவும் அவள் மண்டையில் ஏறவில்லை வீராவை எதாவது செய்ய வேண்டும் என்ற எண்ணம் மட்டும் தோன்றி கொண்டே இருந்தது.
நந்தினி அன்று முழுவதும் நன்றாக யோசித்து ஒரு திட்டத்துடன் வீட்டிற்க்கு வந்தாள்.
அன்று டியூட்டி முடித்து வந்த வீரா அவளிடம் கேள்விகளை கேட்க அவள் ஒன்றும் தெரியாமல் திருதிருவென முழிக்க கம்பை எடுத்து அவளை அடி வெளுத்துவிட்டான்.
அடி வாங்கி கை கால் எல்லாம் வீங்கி போய் அமர்ந்து இருந்தவளை பார்த்து அருண் சிரித்து கொண்டே இருந்தான்.
“டேய் சிரிக்காத டா” என்று கூற ஒரு கணம் வாயில் கையை வைத்து கொண்டு அமைதியாக இருந்த அருண் மீண்டும் சிரிக்க ஆரம்பித்துவிட்டான்.
“இனி நான் உன் வீட்டு பக்கமே வர மாட்டேன் போ டா” என்று கோபத்துடன் கூறிவிட்டு அங்கிருந்து சென்றுவிட்டாள்
இவை அனைத்திற்க்கும் காரணமான வீராவின் மீது அவள் மொத்த கோபமும் திரும்பியது.
நந்தினி வீட்டின் உள்ளே வரும் போதே அனைவரும் உறங்கிவிட்டனர் பூனை போல் மெல்ல நடந்து வந்தவள் வீராவின் அறைக்கு சென்றாள்.
அவனை பார்க்க பார்க்க அவளின் கோபம் அதிகரிக்க தன் பக்கத்தில் இருந்த போர்வையை எடுத்து அவன் முகத்தை முடியவள் கையை ஓங்கி கொண்டு அவன் தலையில் கொட்ட போக
வீரா அவளை கீழே தள்ளி உடனே திரும்பி படுத்தவன் அவள் மேல் வந்தான் “எவன் டா அது” என்று கோபத்துடன் கேட்டு கொண்டே அவளின் கழுத்தை பிடித்தவன் கையில் இருந்த துப்பாக்கியால் அவள் நெற்றியில் வைத்து சுட போக நந்தினி பயந்தேவிட்டாள்.
நந்தினியின் தொண்டையை அவன் இறுக்கி பிடித்திருக்க
அவளால் கத்த கூட முடியவில்லை
வீராவின் மொத்த பாரமும் அவள் மீது இருக்க மூச்சு விட கூட சிரமப்பட்டாள் ‘எப்படியும் இவன் கையால் இன்று சாக தான் போகிறோம்’ என்று நினைத்து கொண்டு இருந்தாள்.
அவன் கையை மெல்ல தன்னிடமிருந்து போராடி விலக்கியவள் “மாமா சாரி மாமா ஏதோ தெரியாம பண்ணிட்டேன்” என்று அழுக ஆரம்பித்துவிட்டாள் அப்போது தான் வீரா கவனித்தான் அது நந்தினி என்று விடிவிளக்கின் வெளிச்சத்தில் அவள் முகத்தை பார்த்தவன் அவள் மீது இருந்து எழுந்தான்.
எழுந்து லைட்டை போட்டவன்
“என்ன டி பண்ணிட்டு இருக்க இங்கே” என்று அவன் கேட்க
“தண்ணீர் குடிக்கலாம்ன்னு வந்தனா கால் தடுக்கி உங்க மேல விழுந்துட்டேன் மாமா” என்று அழுது கொண்டே கூறினாள்.
அவளை பார்த்து முறைத்தவன் “கிச்சன் அந்த பக்கம் தான இருக்கு” என்று அவன் கேட்க
“அது…அது…இருட்டுல இங்க தான் கிச்சன் இருக்குன்னு நினைச்சு வந்துட்டேன் மாமா” என்றாள் அழுது கொண்டே.
அவள் கூறுவதும் எதுவும் உண்மையில்லை என்று அவனுக்கும் தெரியும் வேறு எதற்க்கோ வந்திருக்கிறாள் என்பதும் தெரியும்
இருந்தாலும் அவளை ஒன்றும் கூறாமல் “சரி போ” என்று அங்கிருந்து துரத்திவிட்டான்.
நந்தினி வீராவின் அறையில் இருந்து தன் அறைக்குள் வந்தவளுக்கு இன்னும் கை நடுக்கம் நிற்கவேயில்லை பயத்துடனே சென்று படுத்து கொண்டாள்.
“கண்ணை மூடினால் வீராவின் முகம் வேறு வந்து பயமுறுத்தியது” உறங்க முடியாமல் திரும்பி திரும்பி படுத்து கொண்டிருந்தாள்
உடல் வேறு அடித்து போட்டதை போன்று வலித்து கொண்டே இருந்தது.
“படிக்கிறதை தவிர எல்லா வேலையும் பார்க்குறா பாரு” என்று வாய்விட்டு அவளை திட்டிய வீராவும் லைட்டை அணைத்து விட்டு தூங்க சென்றான்.
மறுநாள் காலை சாவித்திரி வந்து அவளை எழுப்பினார்
“அடியேய் நந்தினி எழுந்துரு டி பள்ளிக்கூடத்துக்கு நேரமாச்சு” என்று எழுப்ப அவள் அசையாமல் படுத்திருக்க
மீண்டும் அவள் தோளில் அடித்து எழுப்ப நந்தினி ஒரு பக்கமாக படுத்து மீண்டும் உறங்க ஆரம்பித்தாள்.
ஏனோ இன்று நந்தினிக்கு உடல் எல்லாம் வலித்தது எழுந்து கொள்ள கூட முடியவில்லை சோர்வாக இருந்ததால் மீண்டும் உறங்க ஆரம்பித்தாள்.
எதார்த்தமாக திரும்பிய சாவித்ரி அவள் உடையில் இருந்த கரையை பார்த்தவருக்கு அனைத்தும் புரிந்து போனது.
தன் பேத்தி வயதிற்க்கு வந்துவிட்டாள் என்பதை புரிந்து கொண்டவருக்கு தலை கால் புரியவில்லை சந்தோஷத்தில் அவளை அடித்து எழுப்பியவர்
“என்னங்க என்னங்க” என்று கத்தி சுவாமிநாதனை அழைத்து விஷயத்தை கூறினார்.
ஊரில் உள்ள அனைவருக்கும் நந்தினி பெரிய பெண்ணான விஷயம் தெரிந்தது.
தொடரும்….
Топовый стоматолог ортопед в Минске предлагает, с гарантированным качеством и профессионализмом.
Стоматология центральный район Минск [url=zazubami.by]zazubami.by[/url] .
super sis
👌👌👌👌👌👌👌👌👌👌