ATM Tamil Romantic Novels

மன்னவன் பார்வையிலே 4

அத்தியாயம் 4

 

நந்தினி பெரிய மனுஷி ஆகிய விஷயம் ஊர் முழுக்க பரவியது

சாவித்திரிக்கு சந்தோஷம் தாளவில்லை சுவாமிநாதனை கையில் பிடிக்கவே முடியவில்லை.

 

ஊரில் இருந்த அனைவருக்கும் விஷயத்தை கூறினர் லலிதாவும் அண்ணாதுரையும் முன்பே வீட்டிற்க்கு வந்துவிட்டனர்.

 

அருண் ஓடி ஓடி அனைத்து வேலைகளையும் பார்த்து கொண்டிருந்தான் நந்தினியின் தோழி நிலாவும் அவளை பார்க்க வந்திருந்தாள்.

 

பள்ளியில் நிலா மட்டும் தான் நந்தினியின் உயிர் தோழி இருவரும் எப்போதும் ஒன்றாக தான் ஊர் சுற்றுவார்கள்.

 

வீராவும் பட்டு வேஷ்டி சட்டையில் அங்கே வருபவர்களை வரவேற்று கொண்டு அனைத்து வேலைகளையும் செய்து கொண்டு இருந்தான் அந்த வீடே பரபரப்புடன் இயங்கி கொண்டு இருந்தது.

 

நந்நினிக்கு ஓலை கட்டுவதற்காகா வீராவை அழைக்க அவனும் அங்கே சென்றான்.

 

வீரா ஓலை பின்னணிக் கொண்டு இருக்க நந்தியை குடிலில் வந்து அமர வைத்தனர்.

 

புடவை கட்டி ஏதோ பெரிய பெண்ணை போல் இருந்தாள் நந்தினி இத்தனை நாள் இரட்டை ஜடை போட்டு பாவடை சட்டை அணிந்து சிறு பிள்ளையை போன்று சுற்று கொண்டிருந்தவளை புடவை கட்டி பார்க்க ஏதோ பெரிய மனுஷியை போல் இருந்தது.

 

சாவித்திரி நந்தினியை பார்த்தவருக்கு தன் மகளின் நினைவு வந்து கண் கலங்க ஆரம்பித்தது இதையெல்லாம் பார்க்க தன் மகளுக்கு கொடுத்து வைக்கவில்லையே என்று கண்ணீர் விட்டு அழுத கொண்டிருந்தார்.

 

வீரா ஓலை கட்டிக்கொண்டே நந்நினியை பார்த்து கொண்டே இருக்க “எவ்வளவு பெரிய பொண்ணாகிட்டா நந்தினி” என்று அங்கே சுற்றி இருந்தவர்கள் பேசிக் கொண்டு இருந்தனர்.

 

“ஆமாம்” என்று சாவித்திரி அவர்களுக்கு பதில் கூற

“வீராவுக்கும் கல்யாண கலை வந்த மாதிரி தான் இருக்கு பட்டு வேஷ்டி சட்டையில் புது மாப்பிள்ளை மாதிரி தான் இருக்கான் பேசாம நம்ம வீராவுக்கே நந்தினியை கட்டி வச்சிடுங்க” என்று கூற வீராவின் முகம் மாறியது அவனின் முக மாற்றத்தை பார்த்த சாவித்திரி 

“யாருக்கு யாருன்னு என்ன எழுதியிருக்கோ நமக்கு எப்படி தெரியும் முதல்ல அவள் படிச்சி முடிக்கட்டும் அப்புறம் பார்ப்போம்” என்றார் சாவித்திரி.

 

அருண் அரிசி மூட்டையை தூக்கி கொண்டு வந்தவன் ஸ்டோர் ரூமில் அடுக்கி வைத்து கொண்டு இருந்தான்

நந்தினியின் தோழி நிலா அங்கே வந்தாள்.

 

அவளை பார்த்த அருண் “என்ன நிலா இங்கே என்ன பண்ணிட்டு இருக்க நந்தினி கூட போய் இருக்க வேண்டியது தான” என்று கேட்க

“நான்…நான்…உங்க கிட்ட கொஞ்சம் பேசணும்” என்றாள் தயக்கத்துடனே தன் கையை பிசைந்து கொண்டே 

“என்ன சொல்லு” என்றான் அருண்.

 

அவன் முகம் பார்க்க முடியாமல் வெட்கத்துடன் தலை குனிந்து கொண்டே “நான் உங்களை லவ் பண்றேன்” என்று அவள் தன் கால் கட்டை விரலால் தரையில் கோலம் போட்டு கொண்டே கூறி முடிக்க 

அருண் அவளின் காதை பிடித்து திருக ஆரம்பித்தான்.

 

“ஆ வலிக்குது விடு டா” என்று அவள் கத்தி கொண்டே இருந்தாள்.

 

“கழுதை முளைச்சி மூணு இலை விடல அதுக்குள்ள லவ் கேட்க்குதோ இந்த 2k கிட்ஸ் எதுவும் சரியே கிடையாது எல்லாம் முறை கெட்டு திரியுதுக 

நான்லாம் உன் வயசுல இருக்கும் போது டிபன் பாக்ஸ்சை தொலைச்சிட்டு வந்தா அம்மா அடிப்பாங்களேன்னு பயந்துட்டு இருந்தேன் ஆனால் நீ தைரியமா வந்து காதலிக்குறேன்னு சொல்ற

என் வயசு என்ன உன் வயசு என்ன போ டி” என்று அவள் தலையில் தட்டி துரத்தி விட அவள் அழுது கொண்டே “நீ போ டா எருமை” என்று அவனை திட்டியவள்.

 

“இவன் கிட்ட போய் என் லவ்வ சொல்ல வந்தேன் பாரு என்னை சொல்லனும் என் பின்னாடி எத்தனை பசங்க சுத்துறாங்கா தெரியுமா டா எருமை” என்று அழுது கொண்டே கூறியவர் அங்கிருந்து கண்ணை துடைத்து கொண்டே சென்றாள்.

 

அருண் ‘பிள்ளை பூச்சிக்கெல்லாம் கொடுக்கு முளைக்குது பாரு’ என்று மனதில் நினைத்தவன் அவளை முறைத்து கொண்டே நின்றிருந்தான்.

 

நந்தினியை அலங்காரம் செய்து மனையில் அமர வைக்கும் போது

வீராவை மேடைக்கு அழைக்க 

பட்டு வேஷ்டி சட்டையில் கம்பீரமாக ஆறடி உயரத்தில் கட்டுமஸ்தான தேகத்துடன் தான் எதற்க்கும் அஞ்ச மாட்டேன் என்ற திமிரான பார்வையுடன் மேடை ஏறியவனை 

பார்த்த அங்கிருந்த பெண்கள் பலரின் அவனை தான் மொய்ந்து கொண்டு இருந்தது.

 

இளவட்டங்கள் பலரின் கண்கள் அவனை சுற்றி வட்டம் அடிக்க அதை எதையும் கண்டுகொள்ளாமல் மேடை ஏறினான் வீரா.

 

அங்கிருந்த மூத்த பெண்மணி ஒருவர் வீராவின் கையில் மாலையை கொடுத்து “நந்தினி கழுத்தில் போடு” என்று அவள் கழுத்தில் மாலையை போட்டவன் 

நந்தினி பக்கத்தில் போட்டோவிற்க்கு போஸ் கொடுப்பதற்க்காக நின்றான்

நந்தினி நிற்க முடியாமல் தடுமாற அவளின் கையை கெட்டியாக பிடித்து கொண்டான் வீரா.

 

புலி பக்கத்தில் பூனை நிற்பதை போல் இருந்தது.

 

இவர்கள் ஜோடியை பார்த்த அங்கே கீழே இருந்தவர்கள் 

தங்களுக்குள் ஏதோ பேசிக்கொண்டு இருக்க அது சாவித்திரியின் காதிலும் வந்தது

“சாவித்திரி உன் பேத்திக்கும் 

மகனுக்கும் ஜோடி பொருத்தம் எவ்வளவு அழகா இருக்கு” என்று கூறினார் அங்கிருந்த பெண்மணி ஒருவர்.

 

சாவித்திரி “ம்ம்” என்று மட்டும் கூறியவர் அவர்கள் இருவரையும் பார்த்து கொண்டே நின்றிருந்தார்.

 

வீரா கீழே வர அந்த பெண்மணி 

அவனிடமும் “உங்க ரெண்டு பேர் ஜோடி பொருத்தமும் அம்சமா இருக்கு வீரா” என்று கூறினார்.

 

அவர் கூறியதை கேட்ட வீராவின் முகம் மாறி விட “அத்தை எனக்கு உள்ளே வேலை இருக்கு” என்று கூறிவிட்டு அங்கிருந்து சென்றான்.

 

சாவித்திரியும் அவன் முகத்தை பார்த்தவருக்கு அப்போதே புரிந்துவிட்டது தன் மகனுக்கு நந்தினியை திருமணம் செய்வதில் பெரிதாக விருப்பம் இல்லை என்று ‘இதை பற்றி இவனிடம் பேசக்கூடாது’ என்று மனதில் நினைத்து கொண்டார்.

 

நந்நினியின் மஞ்சள் நீராட்டு விழா நல்லபடியாக முடிந்தது

அதன் பின் நந்தினியை சாவித்திரி வீட்டை விட்டு வெளியே விடவேயில்லை.

 

பத்தாம் வகுப்பு பொது தேர்வு முடிவு வெளியே வர நந்தினி பார்டரில் தேர்ச்சி பெற்றாள் நிலா பள்ளியிலே முதல் மதிப்பெண் பெற்று 

மேலே படிக்க வெளியூர்க்கு சென்றிவிட்டாள்.

 

நந்தினியும் அடம்பிடித்து ஹாஸ்டலில் சேர்ந்து கொண்டாள் வீராவின் தொல்லை 

இனி இருக்காது என்று சந்தோஷப்பட்டு கொண்டாள்

வீட்டிற்க்கு வந்தாலும் வீரா இருக்கும் சமயம் இருக்க மாட்டாள் அப்போதெல்லாம் அருண் வீட்டிலேயே இருந்து கொள்வாள்.

 

பன்னிரெண்டாம் வகுப்பிலும் இதே கதை தான் நடந்தது நந்தினி எப்படியோ தட்டுத்தடுமாறி தன் பள்ளி படிப்பை முடித்துவிட 

பக்கத்தில் உள்ள கல்லூரியிலேயே அவளுக்கு சீட் அவளை அங்கேயே சேர்த்துவிட்டார் சுவாமிநாதன்.

 

நந்தினி பக்கத்தில் இருந்த கல்லூரி என்றாலும் அங்கேயும் ஹாஸ்ட்டலிலேயே சேர்ந்து படிக்க ஆரம்பித்தாள்.

 

வீரா அந்த வருடமே பிரமோஷன் கிடைத்து இன்ஸ்பெக்டர் ஆக அவனுக்கு திருமணம் செய்ய வீட்டில் வரன் பார்க்க ஆரம்பித்தனர்.

 

வீராவுக்கு நந்தினியை திருமணம் செய்து கொள்ள விருப்பம் இல்லை என்பதால் அவனை யாரும் தொல்லை செய்யவில்லை.

 

வீராவுக்கு எவ்வளவு தேடியும் ஒன்று அமைந்தால் ஒன்று அமைய மாட்டேன் என தட்டி தட்டி சென்று கொண்டிருந்தது.

 

அன்று சாவித்திரி தன் மகனுக்கு நல்ல வரன் அமைய வேண்டும் என்று வேண்டிக் கொள்வதற்க்காக கோவிலுக்கு சென்றிருந்தார்.

 

அவர் சாமி கும்பிட்டு விட்டு எதார்த்தமாக நடந்து செல்லும் போது அவரை யாரோ அழைப்பதை போன்று தோன்ற யார் என்று திரும்பி பார்த்தார்.

 

அங்கே அவரின் சித்தப்பா மகன் ராமலிங்கம் நின்றிருந்தார்

அவரை பார்த்த சாவித்திரி மரியாதை நிமித்தமாக சிரித்தவர்

“அண்ணா எப்படி இருக்கிங்க” என்று கேட்டார்.

 

“நல்லாருக்கேன் சாவி மா நீ எப்படி இருக்க வீட்ல எல்லாரும் எப்படி இருக்கான்” என்று கேட்டார்.

 

“எல்லாரும் நல்லாருக்காங்க அண்ணா நம்ம வீராவுக்கு தான் பொண்ணு தேடிட்டு இருக்கோம் ஒன்னும் அமைய மாட்டேங்குது” என்றார் சாவித்திரி.

 

“ஏன் உன் பேத்தியை கட்டி வைக்க வேண்டியது தான” என்றார்.

 

“எங்கே அண்ணா அவள் படிக்கிற பிள்ளை அவளை போய் எப்படி கட்டி வைக்க முடியும்” என்றார்.

 

“ஓஹோ நம்ம ஊரு சங்கர் அண்ணன் பொண்ணு இருக்கே கேட்டு பார்க்குறியா” என்றார் ராமலிங்கம்.

 

“சங்கர் அண்ணனுக்கு பொண்ணு இருக்கா?”

“என்ன இப்படி கேட்க்குற அவரு மூத்த பொண்ணு திவ்யா இருக்காளே நல்லா படிச்ச பொண்ணு பி.எட் முடிச்சிட்டு ஸ்கூல்ல வேலை பார்த்துட்டு இருக்கா உனக்கு தெரியாதா” என்று கேட்டார்.

 

“எனக்கு தெரியாது அண்ணா கொஞ்சம் விசாரிச்சிட்டு சொல்லுங்க நாங்க ஒரு தடவை கேட்டு பார்க்குறோம்

என் பையன் எதுக்கெடுத்தாலும் கோவப்படுவானே தவிர ரொம்ப நல்ல பையன் அண்ணா” என்றார் சாவித்திரி.

 

“சரி சாவி நான் விசாரிச்சிட்டு சொல்றேன்” என்றார் ராமலிங்கம்.

 

அதே நேரம் ஸ்டேசஷனே வீரா உள்ளே நுழையும் போது ஒரு குண்டு ஊசி விழுந்தால் கூட சத்தம் வரும் அளவுக்கு கப்பு சிப்பென்று இருந்தது.

 

அவனை கண்டால் அங்கிருப்பவர்களுக்கு எப்போதும் பயம் தான் ஏன் அவனுடன் பணிபுரிபவர்கள் கூட ஒரு அடி தள்ளி நின்று தான் பேசுவார்கள்.

 

வீரா முன்பை உடல் பருமன் கூடி இருந்தான் ஆனால் தினமும் உடற்பயிற்சி செய்வதால் அவன் உடல் கட்டுகோப்பாக இருந்தது.

 

அவனுடைய கையின் சதை கோளங்கள் அனைத்தும் பெருத்து போய் முறுக்கு மீசையுடன் பார்ப்பதற்க்கு முன்பை விட கரடுமுரடான தோற்றத்துடன் தான் இருந்தான்.

 

ஸ்டேஷன் உள்ளே வந்தவன் 

“அந்த லேடிக்கிட்ட விசாரிச்சிங்களா இல்லையா” என்று தன் பக்கத்தில் நின்ற கான்ஸ்டபிளிடம் கேட்க

“விசாரிச்சோம் சார் ஆனா உண்மையை சொல்ல மாட்றா சார்” என்றார் அவர் பயத்துடன்.

 

“இதை சொல்லா தான் உங்களை கவர்மென்ட்ல சம்பளம் கொடுத்து வேலைக்கு வச்சிருக்காங்க போய் அவளை இழுத்துட்டு வாங்க” என்றான் வீரா.

 

‘இன்னைக்கு என்னலாம் பண்ண போறானோ’ என்று மனதில் நினைத்து கொண்டே அந்த கான்ஸ்டபிள் உள்ளே சென்று

அந்த பெண்மணியை அழைத்து வந்தார்.

 

அந்த நடுத்தர வயது பெண்மணியோ வாயில் பாக்கை மென்று கொண்டே தெனாவட்டாக “இன்னா சார் அதான் எனக்கு எதுவும் தெரியுதுன்னு சொல்லிட்டன்ல்ல இன்னும் என்ன சார்” என்று திமிராக வீராவிடம் பேச.

 

அவனோ கோபத்துடன் அவள் தலைமுடியை கொத்தாக பிடித்தவன் ஓங்கி அவள் கன்னத்தில் ஒரு அறைவிட்டான்.

 

அவனின் அடி தாங்க முடியாமல் அந்த பெண்மணி தடுமாறி கீழே விழுந்தவள் மீண்டும் எழுந்து கொள்ள வீரா மறுபடியும் தன் ஷீ காலால் அவள் முதுகில் எட்டி ஒரு மிதி மிதித்தான் அந்த அடியில் அவள் சுருண்டு கீழே விழுந்துவிட்டாள்.

 

வீரா அவள் அருகில் சென்றவன் அவளின் தலை முடியை கொத்தாக பிடித்து இழுத்தவன் மீண்டும் அவளின் கன்னத்தில் பளார் பளார் என்று மாறி மாறி அடிக்க அந்த பெண்மணியின் காதில் ஒரு நிமிடத்திற்க்கு சுற்றியிருந்த எந்த சத்தமும் கேட்கவில்லை 

“சொல்லு யாரு அந்த கொலையை பண்ணா” என்று கேட்க அந்த பெண்மணி எங்கே இவன் தன்னை அடித்தே கொன்று விடுவானோ என்று பயந்தவர் உதட்டின் ஓரம் வழிந்த ரத்தத்துடனே பேச ஆரம்பித்தார்.

 

“சார் சொல்லிட்றேன் சார் நானும் அந்த குமாரும் சேர்ந்து தான் எல்லாம் பண்ணினோம் 

நீங்க எங்க வந்து சொல்ல சொன்னாலும் சொல்றேன் சார்” என்றாள் அழுது கொண்டே அப்போது தான் அவள் முடியை விட்டான் வீரா.

 

“யோவ் இவளை கூட்டிட்டு போங்கையா” என்று கூறிவிட்டு வீரா உள்ளே சென்றான்.

 

“என்னையா இந்த ஆளு பொம்பளைன்னு கூட பார்க்காம இப்படி அடிக்குறான்” என்று அங்கிருந்த கான்ஸ்டபிளிடம் இன்னொருவன் கேட்டான்.

 

“இந்த ஆளு மோசமானவன்யா இவன் கிட்ட இருந்துலாம் இரண்டு அடி தள்ளி நின்று தான் பேசனும் கோபம் வந்தா சைக்கோ மாதிரி நடந்துப்பான் இப்போ நீ பார்த்தது எல்லாம் கம்மி ஓரமா நின்னு வேடிக்கை பார்த்தியா போனியான்னு இரு நாம பேசுனது காதுல விழுந்துச்சு நம்ம தோலை உருச்சி உப்பு கண்டம் போட்டுருவான் அந்த ஆளு சரியான பைத்தியக்காரன் பத்திரமா வீடு போய் சேரும் வழியை பாரு” என்றான்.

 

கோபம் ஒரு மனிதனின் குணத்தை இழக்க வைக்கும் வீராவின் வாழ்க்கை என்னவாகுமோ…?

 

தொடரும்.

 

 

 

 

 

 

 

 

 

 

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Scroll to Top