சண்டியரே 4
“என்னையா சொல்ற? என்ன நடந்தது புரியும்படியா சொல்லு யா? என்று கலக்கத்துடன் கேட்கும் தந்தையை பார்த்தான் ஆதிரன்.
அதற்குள் அவன் தோள் வளைவில் தூங்கிய குழந்தை வீறிட்டு அழுக “ஒன்னும் இல்லடா.. செல்லம்.. ஒன்னும் இல்லடா..” என்று தட்டிக் கொடுத்தவன், அருகிலிருந்த பையில் இருந்த ஃபீடிங் பாட்டில் எடுத்து க்கொண்டு சமையலறை சென்றான். சுடுதண்ணீர் வைத்து பாட்டில் எல்லாம் கழுவி பிள்ளைக்கு பால் ஆத்தி வந்ததை இன்னும் அதிர்ச்சி விலகாமல் பார்த்துக் கொண்டிருந்தார் விஜயராகவன்.
பாலை கலக்கி இளம் சூட்டில் அவளுக்கு புகட்ட பெறாத தந்தையை பார்த்துக் கொண்டே சிரிப்புடன் சப்புக் கொட்டிக் கொண்டே குடித்தாள் அப்பெண்ணரசி.
மகளின் அழகில் நெஞ்சம் விம்ம நெற்றியில் குனிந்து முத்தம் வைத்தான் ஆதிரன். அவளோ பாலைக்குடிப்பதை விட்டுவிட்டு அவனைப் பார்த்து “ங்கா..! என்று கை காலை உதைத்து விளையாடினாள்.
“கொஞ்சல் கேக்குதா உங்களுக்கு கொஞ்சல்?” என்றதும் அவளும் மீண்டும் ங்கா என்று சொல்லி சிரிக்க..
“வயிறு ஃபுல்லா ஆனதும் ஆட்டம் கேக்குது லட்டுவுக்கு” என்றபடி மீண்டும் குழந்தைக்கு பாலை புகட்ட அவளும் குடித்துவிட்டு பெறாத தந்தையிடம் அவளின் கொஞ்சல் மொழியில் உரையாடிக் கொண்டிருந்தாள்.
இவனும் பதில் ஏதோ பேச குழந்தையும் சிரிக்க என்று பார்க்கவே அத்தனை கவிதையாக இருந்தது விஜயராகவனுக்கு.
ஆனாலும் மகன் சொல்லியதில் இருந்து இன்னும் வெளியே வர முடியவில்லை அவரால்.
“யய்யா குரு..” என்று தீன குரலில் கேட்டதும் தான் தந்தையின் நிலைப்புரிந்தவன், மெல்ல குழந்தையை தூக்கிக்கொண்டு சென்று, குழந்தையை அவர் மடியில் கிடத்திய அவரின் காலடியில் அமர்ந்து கொண்டான்.
“கொஞ்ச நாள் முன்னாடி தான்பா அவன கண்டுபிடிச்சேன். வீட்டுக்கு வர சொல்லி அவ்வளோ கேட்டும் வரமாட்டேன்னு பிடிவாதமா சொல்லிட்டான்.. திடீர்னு ஒரு வாரத்துக்கு முன்ன அவசரம்னு வர சொன்னான். போனா.. இவள கையில கொடுத்தவன்.. ஒரு ஆக்சிடென்ட்ல அவன் மனைவி இறந்துட்டாளாம். சொல்லி நைட் எல்லாம் அழுதுகிட்டே இருந்தான். மறுநாள் பார்க்கும் போது லெட்டர் எழுதி வைத்துவிட்டு குழந்தையை விட்டுட்டு போயிட்டான்பா.. எங்க போனா என்னன்னு ஒன்னும் தெரியல… நானும் அங்கன ஃபுல்லா விசாரிச்சிட்டேன் ஒன்னும் விஷயம் கிடைக்கல” என்று உதட்டை கடித்து கண்ணீரை அடக்கியபடி சொன்ன மகனை கண்ணீர் வழிய பார்த்திருந்தார் விஜயராகவன்.
“அப்ப கடைசி வரைக்கும் என்னை மன்னிக்கவே இல்லே யா அவன்..உன்கிட்ட பேசினானா? ஆனா. என்கிட்ட ஒத்த வார்த்தை பேச மனசு வரலையே யா.. அவ்ளோ பெரிய பாவியா நானு..?” என்று தலையில் அடித்துக் கொண்டு அவர் அழுக.. ஆதிரனால் தந்தையை அவ்வாறு பார்க்க முடியவில்லை.
அதுவரை இருவரையும் பார்த்தபடி ஜம்பமாக அவர் மடியில் படுத்து இருந்த பேத்தி வீறிட்டு அழ ஆரம்பித்தாள்.
சட்டென்று தனது அழுகை நிறுத்திக்கொண்டு பேத்தியை ஆசையாக தூக்கிக் கொண்டார் விஜயராகவன்.
“உங்கள மன்னிக்காமலா பேத்திய உங்ககிட்ட கொடுக்க சொல்லி இருப்பான் உங்க மகன்..உங்க பேத்தி பேரு ராகவியாம்” என்று கண்ணீரை உள்ளே இழுத்துக் கொண்டு சிரித்தான் ஆதிரன்.
“ஆரூரனோட ரெண்டு உயிரும் இங்க தான் பா இருக்கு..கண்டிப்பா திரும்பி வருவான் நம்புவோம்..! இப்ப வாங்க.. வந்து படுங்க” என்று தந்தையை அவன் அறையில் படுக்க வைத்தான்.
மகளோடு வெளியே செல்ல முயன்ற மகனின் கையை பற்றினார் விஜயராகவன்.
“தம்பி என்னமோ மனசே சரியில்லை யா? நீயும் பேத்தியோட இங்கே படுத்துக்கிறியா? இன்னைக்கு ஒரு நாள் மட்டும்..” என்று கெஞ்சினார்.
“என்னப்பா நீங்க..இதுக்கு எதுக்கு கெஞ்சணும்?” என்றவன் தந்தையின் அறையிலேயே அம்மாவின் பருத்தி புடவை ஒன்றை எடுத்து தொட்டில் கட்டி அதில் மகளை படுக்க வைத்து ஆட்டிவிட.. சற்று நேரத்தில் உறங்கி விட்டாள்
இவனும் தந்தையின் அருகே படுத்துக்கொண்டான்.ஆதிரனின் கையை பற்றி தன் நெஞ்சின் மேல் வைத்துக்கொண்டே உறங்க முற்பட்டார் விஜயராகவன்.
ஆனால் அதில் அவனுக்குத்தான் தூக்கம் பறந்து போனது. விடிய விடிய தந்தையை பார்த்துக் கொண்டே யோசனையோடு அமர்ந்திருந்தான். அவ்வப்போது தூக்கத்திலும் பசிக்கும் அழுகும் குழந்தையை தூக்கி சமாதானப்படுத்தி பாலூட்டி படுக்க வைத்து என்று தூக்கம் தூரம் போனது அவனுக்கு.
அவர்களின் பெண்ணரசியை கவனிக்க என்று இந்த ஒரு வாரமாய் புதிய கலைகளையும் கற்று இருந்தான் ஆதிரன்.
மறுநாள் விஜயராகவன் எழுந்து வரும்போது கூடத்தில் பாய் விரித்து அதில் பருத்தி புடவையை விரித்து மகளை விளையாட விட்டிருந்தவன், உள்ளே வீட்டு சமையலாள் கலாவிடம் குழந்தையை பற்றி கூறி என்னென்ன கொடுக்கலாம் என்று அவரின் பக்குவத்தையும் கேட்டுக் கொண்டிருந்தான்.
“குரு..” என்ற தந்தையின் அழைப்புக்கு “இதோ வரேன் பா” என்றவன் அவருக்கு நீராகாரத்தை கொடுத்து விட்டு மகளை தூக்கி மடியில் அமர்த்தி புட்டிபாலை புகட்ட.. இரண்டே இரண்டு வாய் தான் உள்ளே சென்றிருக்கும் அதன் பிறகு தள்ளிவிட்டு.. பாலை வழிய விட்டு என்று அத்தனை அட்ராசிட்டி செய்தாள் ராகவி.
“ஏய்..லட்டு.. உன்னை என்ன பண்ண? ஓவரா விளையாடுற? பாலை குடிடா தங்கம்..” அத்தனைக் கெஞ்சி கொஞ்சி விளையாட்டு காட்டி ஒரு வழியாக பாலை புகட்டி முடிப்பதற்குள் போதும் போதும் என்றானது ஆதிரனுக்கு.
மகனையும் பேத்தியையும் பார்த்துக் கொண்டே அமர்ந்திருந்தவருக்கு அப்பொழுது தான் ஃபோன் வந்தது தியாகேசனிடம் இருந்து.
கல்யாணத்தை கோவிலில் முடித்து பின் மண்டபத்தில் மதிய விருந்து ஏற்பாடு செய்வதாய் பேசி இருந்தனர். இரு வீட்டு சொந்தங்களும் பெரும்பாலும் ஒன்று என்பதால் தனியாக வரவேற்பு என்ற வைக்காமல் முதல் நாளே வைத்து விடலாம் என்று பேசி இருக்க.. அதன் பின் மூன்றாம் நாள் பெண் வீட்டில் வைத்து கறி விருந்து என்று தியாகேசன் சொல்லி இருந்தார்.
அதற்கான விவரங்களை சொல்ல அவ்வப்போது விஜயராகவனுக்கு அழைப்பதுண்டு.
நாளை காலை குலதெய்வ கோவிலுக்கு சென்று விட்டு மாலை போல பெண் அழைப்புக்கு செல்ல வேண்டும். அதை ஞாபகப்படுத்த தான் தியாகேசன் பேசினார்.
“சரி மாப்ள..சரி மாப்ள..” என்று எல்லாத்துக்கும் சரி சொன்ன மாமனாரின் குரல் பேதத்தை கண்டு “ஏன் மாமா எதுவும் உடம்பு சரி இல்லையா? மாப்பிள்ளை வந்துட்டாரா?” என்று கொஞ்சம் பதட்டமாகவே கேட்டார்.
கல்யாணம் பேசி முடிவானதிலிருந்து ஆதிரன் அந்த வீட்டு பக்கம் செல்லவே இல்லை. மகளும் ஏதோ போல தான் இருக்கிறாள். இருவரும் பேசிக் கொள்வதும் இல்லை என்று தெரியும். சிறிது வயதிலிருந்து தெரிந்தவர்தள்.. ஒன்றாக வளர்ந்தவர்கள் தானே தனியாக பேசிக்கொள்ள என்ன இருக்கிறது என்று இருந்தவருக்கு இப்போது ஏதோ இடித்தது. அதனால் அதனை மாமனாரிடம் கேட்டு விட..
“குரு நேத்தி நைட்டே வந்துட்டான் மாப்ள..ஒன்னும் பிரச்சனை இல்ல
அவன் வர கொஞ்சம் லேட்டாச்சுது. அதான் கொஞ்சம் தூக்கம் சரியில்லாம குரல் எப்படியோ இருக்கு. நாங்க வரோம் மாப்ள” என்று மாப்பிள்ளையின் மனதை புரிந்தது போல விஜயராகவன் கூறினார்.
“வாங்க மாமா..மாப்பிள்ளையும் இன்னும் கல்யாணம் பேசுனது இருந்து வீட்டுக்கே வரவே இல்லையே.. மதியம் சாப்பாட்டுக்கு வரீங்களா?” என்று கேட்டார் ஆவாலாக..
“கல்யாணத்துக்கு முன்னால் கை நனைக்க கூடாது மாப்பிள்ளை, காலை சாப்பாட்ட முடிச்சிட்டு வரோம்” என்று ஃபோனை வைத்த விஜயராகவனின் மனதில் இப்பொழுது பல கேள்விகள்..!! பல சிந்தனைகள்..!!
அதனோடு மகனை பார்க்க அவனோ இந்த உலகத்திலேயே இல்லை தன் மகளோடு அந்த உலகத்தில் ஐக்கியமாக இருந்தான்.
“குரு..” என்று அழைத்தும் அவன் திரும்பியே பார்க்கவில்லை. இரண்டு மூன்று முறை சத்தமாக கூப்பிட்ட பிறகே “என்ன அப்பா” சிரிப்போடு பார்த்தவனை.. அவர் கவலையாக பார்க்க…
“இவ்வளவு நாள் நம்ம கிட்டவே வரமாட்டானு நினைச்சிட்டு இருந்தோம். இப்ப அவன் புள்ள நம்மகிட்ட இல்லையா? அவனே தேடி கண்டிப்பா வருவேன் அப்பா அவனை பத்தி கவலைப்படாதீங்க” என்று ஆரூரன் நினைவில் தந்தை கவலைப்படுவதாக எண்ணிக்கொண்டு இவன் தந்தைக்கு சமாதானப்படுத்த..
“அவன பத்தி கவலை ஒரு புறம் இருக்கத்தான் செய்யுது யா. அத விடு..! ஆனா உன்னைய பத்தி நீ நினைச்சு பார்த்தியா?” என்றதும் அவன் புரியாமல் தந்தையை பார்த்து
“என்ன பத்தி என்ன நினைக்கணும்?” என்று மீண்டும் குழந்தையின் புறம் திரும்பி அவள் முக்கோடு மூக்கு உரசி “நீங்க சொல்லுங்க தங்க புள்ள.. அப்பா பத்தி என்ன நினைக்கிறிங்க சொல்லுங்க.. சொல்லுங்க..” என்று குழந்தையிடம் விளையாட்டினான்.
என்னமோ அந்த பெரிய மனுஷியும் அதுக்கு தக்கவாறு உம் உம் என்று கைகளை ஆட்டி ஆட்டி பேச… அதில் நெக்குறுகி போனான் பெறாத தந்தை.
“நாளன்னைக்கு உனக்கு கல்யாணம் அந்த நினைப்பாவது உனக்கு இருக்கா இல்லையா?” என்று சற்று அதட்டலாகவே கேட்டார் விஜயராகவன்.
“என்ன??” என்று அதிர்ந்தவனிடம்,
“என்ன யா அதிர்ச்சியா பாக்குற? உனக்கு கல்யாணம் பேசியிருந்தது ஞாபகம் இருக்கா இல்லையா? ஒரு வாரம் தான ஊருக்கு போனா அதுக்குள்ள எல்லாத்தையும் மறந்துட்டியா?” என்று அதிர்ச்சியோடு கேட்டார் ராகவன்.
“இல்ல..இல்ல எல்லாம் ஞாபகம் இருக்கு பா.. நாள் போனதே தெரியல. சீக்கிரம் வந்திடுச்சேனு ஒரே யோசனை.. அதுவும் இல்லாம இந்த குட்டியை பத்தி நான் இப்போ அந்த கல்யாணப் பொண்ணு கிட்ட பேசணுமே” என்றான் ஆதிரன்.
“என் பேத்தி கிட்ட என்ன யா பேசணும்?” என்றதும் நிமிர்ந்து தந்தையை பார்த்தான். ஆனால் ஒன்றும் கூறவில்லை.
“வெளியே பொண்ணு எடுத்தா தான் யா புரிஞ்சுக்க மாட்டாங்க..ஆனா என் பேத்தி புரிஞ்சிப்பா யா..! அதுவும் இல்லாம உன் அக்காவுக்கும் இது தம்பி பொண்ணு தானே.. அதனால வித்தியாசம் பார்க்காமல் ரெண்டு பேரும் நல்லாவே என் பேத்திய வளர்ப்பாங்க யா” என்று எதிரக்காலத்தால் நடக்கப்போவது போல பேசிய தந்தையை அமைதியாக பார்த்தான் ஆதிரன்.
“சரி யா..சாப்பிட்டு கிளம்பு ஒரு எட்டு உங்க அக்கா வீட்டுக்கு போயிட்டு வந்துருவோம்” என்றார்.
“வேணாம்பா..அக்காவை அத்தானையும் இங்கே கிளம்பி வர சொல்லுங்க” என்றான் ஆதிரன்.
ஏன் என்று பார்த்தவரிடம் தன் கையில் இருந்த மகளை காட்டிய ஆதிரன் “நாளைக்கு ஒரு சொல்.. என் பொண்ணை யாரும் பேசிட கூடாது பா” என்றான்.
அதன்படி மாப்பிள்ளையை அழைத்து இருவரையும் வீட்டுக்கு வர சொன்னார் விஜயராகவன்.
ஆதிரன் யோசனையாக தன் அறையிலேயே தான் இருந்தான். குழந்தை கூடத்தில் தூலி கட்டி தூங்க வைத்திருக்க விஜயராகவனும் பேத்தியின் அருகிலேயே அமர்ந்திருந்தார். இருவருமே அன்று வேலைக்கு செல்லவில்லை. ஆனால் மேற்பார்வையாளரிடம் என்னென்ன வேலைகள் செய்ய வேண்டும் என்பதை கூறியிருந்தான் ஆதிரன்.
நண்பகல் வேளையில் கமலமும் தியாகேசனும் அந்த வீட்டுக்குள் வந்தனர். வீட்டுக்குள் நுழையும் போது ஒரு வித கூச்ச உணர்வு தியாகேசனுக்கு அவர் செய்த செயலின் விளைவால்..
ஆனாலும் நம் மாமனார் தானே? என்ன மச்சான் தானே? அதனை தூக்கி தூர எறிந்து விட்டு விடுவிடென்று தான் மனைவியோடு உள்ளே நுழைந்தார்.
“என்னை இருந்தாலும் என் மாமனார் வீடு..நாளைக்கு என் பெண் வந்து வாழப்போகும் வீடு. நான் ஏன் தயங்கி தயங்கி வர வேண்டும்? அப்ப பிரச்சனைக்கு காரணமானவனே இப்போது இங்கே இல்லையே..” என்ற எண்ணம் அவருக்கு.
இவர்கள் உள்ளே நுழையும் போது இருவரையும் வரவேற்று விஜயராகவன் உள்ளே வேலையாள் கலாவை அழைத்து இருவருக்கும் நீர்மோரை கொடுக்க சொல்ல.. வெயிலுக்கு சுகமாக அதனை கொடுத்து ஆசுவாசமாக அவர்களும் அமர, “யய்யா குரு உங்க அக்கா அத்தான் வந்து இருக்காங்க பாரு” என்று மேலே நோக்கி குரல் கொடுத்தார் விஜயராகவன்
ஃபோனில் கரும்பாலையின் சூப்பர்வைசர் இடம் பேசிக்கொண்டு இருந்தவன் “இதோ பா” என்றவன் வேகமாக கீழே வந்து இருவரையும் வாங்க என்று அழைத்தவன் அப்பாவின் அருகிலேயே அமர்ந்து கொண்டான்.
“கல்யாண வேலை எல்லாம் ஜோரா நடந்துட்டு இருக்கு மாப்பிள்ளை” என்று இவன் ஊரில் இல்லாத இந்த ஒரு வாரத்தில் நடந்த வேலைகளை பற்றி அவனிடம் கூற எல்லாத்துக்கும் தலையை மட்டும் ஆட்டிக் கொண்டிருந்த தம்பியை யோசனையோடு பார்த்தார் கமலாம்பிகை.
தம்பி முகத்தில் கல்யாணம் பத்தி எந்த சந்தோஷமும் மகிழ்ச்சியுமோ எதுவும் இல்லை. ஏதோ இழந்தவன் போலவே இருந்தவனை கண்டு திடுக்கிட்டு “அப்பா..” என்று தம்பியை கண்களால் காட்ட அவரும் கண்ணை மூடித் திறந்து அமைதியாக இரு என்றார்.
தியாகேசன் பேசி முடித்ததும் “நீங்க எல்லாம் சொல்லிட்டீங்க அத்தான் நானும் ஒரு விஷயம் சொல்லணும்” என்றவன் சற்று தள்ளி தூளியில் தூங்கிக் கொண்டிருந்த மகளை தூக்கிக் கொண்டு வந்தான்.
“யார் பொண்ணு?” என்று கேட்டதும் “என் மகள் தான்.. ராகவி” என்றதும் அதிர்ந்த எழுந்து விட்டார்கள். பேரதிர்ச்சியே..!!
திருமணம் நாளன்று இருக்க இவன் என்ன குழந்தையோடு இருக்கிறான் என்று..!
“இருங்க இருங்க அத்தான் உங்க மூளைக்கு அதிகமாக வேலை கொடுக்காதீங்க..ஏற்கனவே அது எக்கு தப்பா தான் யோசிக்கும். இது நம்ம சிவாடா குழந்தை” என்று நடந்ததை சுருக்கமாக கூற இருவரும் பேச்சின்றி ஆதிரனையே வெறுத்து பார்த்திருந்தனர்
கமலா சுயநினைவுக்கு வந்து குழந்தையை தூக்கிக் கொஞ்ச தியாகேசன் ஒன்றும் பேசாமல் யோசனையோடு இருந்தார்.
“அதெல்லாம் சரி குழந்தை என்ன பண்ண போறீங்க?” என்றதும் அதில் விஜயராகவன் திடுக்கிட்டு மகனைப் பார்க்க..
தந்தைக்கு கண்களாலே செய்தி சொன்னவன் சிரிப்போடு “என்ன பண்ணனும்னு நீங்க நினைக்கிறீங்க?” என்று கேட்டான்.
“நீங்க ஏதோ ஒரு முடிவு எடுத்து தானே குழந்தையை கூட்டிட்டு வந்து இருக்கீங்க..நீங்க சொல்லுங்க” என்று பட்டுக்கொள்ளாமல் கேட்டார் தியாகேசன் ஆதிரனை பார்த்து..
“இந்த சொத்துல எனக்கு எப்படி உரிமை இருக்கோ..அதே மாதிரி என் தம்பிக்கும் உரிமை இருக்கு. அதனால அவனோட வாரிசு அவன் வீட்டில் உரிமையோடு வளருவாள். என்னோட அரவணைப்பில் பாதுகாப்பில்..!!” என்றான் தீர்க்கமாக.
“உங்க தம்பியோ இல்ல அவர் மனைவியோ யாராவது ஒருவர் இருந்திருந்தா இந்த குழந்தை வளர்க்கறது வேற..ஆனா புதுசா கல்யாணம் பண்ணிக்கிட்டு வர என் பொண்ணுக்கு ஏன் அந்த தலையெழுத்து? அவ ஏன் இந்த குழந்தைய வளர்க்கணும்?” என்று போட்டாரே ஒரே போடு..!!
கமலாவுக்கும் கணவனின் பேச்சு அதிர்ச்சி தான் “என்னங்க என்ன இப்படி பேசுறீங்க? இதுவும் என் தம்பி பொண்ணு தான்.!” என்று பதறினார்.
“நீ சும்மா இரு கமலா வாய் பேசாதே.!” என்று அவரை அதட்டினார்.
கையை கட்டிக்கொண்டு ஆதரன் அவர்களை நிமிர்ந்து பார்த்தவன் “என் தம்பி மக என்கிட்ட தான் வளருவா. அதுல எந்தவித மாற்றமும் இல்லை. பிறகு உங்க விருப்பம்..” என்று அவன் உதட்டை பிதுக்க..
“இது சரி வராது மாமா..மாப்பிள்ளைக்கு நீங்க கொஞ்சம் எடுத்து சொல்லுங்க” என்றதும் இப்பொழுது விஜயராகவனுக்குமே சற்று கோபம் தான்.
“ஏன் கமலா இவ உனக்கும் தம்பி பொண்ணு தானே..இவளுக்கு சொத்துக்கித்து நீங்க சம்பாரிச்சு கொடுக்க போறிங்களா? இல்ல தானே.. அவங்க அப்பன் சொத்துல அவ வளர போறா.. அவன் பெரியப்பனோட அரவணைப்புல தங்கமாக இருக்க போறா? இதுல உங்களுக்கு என்ன வந்தது? அப்படி உன் பொண்ணு பாக்குற அளவு இங்கே எந்த வேலையும் இல்லை எல்லாத்துக்கும் ஆள் இருக்கு” என்று அவரும் தன்னிலை விளக்கம் அத்தனல கொடுத்தும் தியாகேசனால் ஏற்க முடியவில்லை.
அதுக்கு முழு முக்கிய காரணம் அது ஆரூரனின் குழந்தை.. அதை எப்படி என் மகள் வளர்ப்பாள்? அதைத்தான் அவரால ஏற்க முடியாமல் போக..
“இந்த கல்யாணத்தை பத்தி யோசிக்கணும் மாமா” என்று மனைவி ஒரு முறை முறைத்து விட்டு விடு விடு என்று செல்ல அப்ப நான் என்னன்னு பேசிட்டு சொல்றேன் என்று கமலா “நான் வீட்டுக்கு போய் பேசுறேன் பா” சென்றார்.
“இவ்ளோதான் உங்க மாப்பிள்ளை லட்சணம்..!இப்பவாது புரிஞ்சுக்கோங்க” என்ற ஆதிரன் “குழந்தைக்கு சில தேங்க்ஸ் வாங்கணும் நான் வெளில போறேன் நீங்க கொஞ்சம் பாத்துங்க” என்று வெளியே சென்று விட்டான்.
வேம்புவோடு டிவிஎஸ் பிப்டியில் சென்றுக் கொண்டிருந்த மயிலை மடக்கினான் ஆதிரன்.
“என்ன மாமா…” என்று அவள் திக்கி திணற..அருகில் நின்ற வேம்புவை ஒரு முறை முறைக்க அவளோ பத்தடி தள்ளி ஓடியே போனாள்.
அருகில் சென்றவன் அவள் முகத்தை நெருங்கி, தன் மூச்சுக்காற்று அவள் முகத்தில் மோத..
“அப்படி என்னடி நீ பெரிய மகாராணி..உங்க அப்பன் பெருசா பேசிட்டு போறான் சொல்லு வை அந்த ஆளு கிட்ட.. என்னைக்கு இருந்தாலும் நீ தான் என் பொண்டாட்டினு..!” அவளோ பயந்து இரண்டு அடி பின்னால் போக.. நாளனைக்கு கல்யாணத்தை வச்சுட்டு ஏன் இந்த மாமா லூசு மாதிரி பேசுறாரு என்று புரியவில்லை தங்கமயிலுக்கு.
“புரிஞ்சுதா?” என்று அவளை நெருங்க.. அவனை நெருக்கம் ஏதோ செய்ய.. அவள் கைகள் இரண்டும் முன்னால் வந்து அவன் நெஞ்சில் பதிந்து.. தன்னை நெருங்கவிடாமல் தடுத்தது.
அவள் உதடுகள் நடுங்க.. அதை வாய்க்குள் இழுத்து கவ்விக்கொண்டாள்.
“பயப்படாத மயிலு..நான் உன்னைய திண்ற மாட்டேன்.. ஆனா.. நான் மட்டும் தான் இதுக்கு சொந்தக்காரன்” என்று
அவள் மடித்திருந்த இதழ்களை விடுவித்தவன் அதிகாரமாய் சொல்ல..
“என்ன??!!!” என்று அதிர்ந்தவளிடம்,
“கெட் ரெடி பொண்டாட்டி..!” என்று தன் வண்டியில் பறந்தான் ஆதிரன்.
👌👌👌👌👌👌👌👌👌👌👌👌