சண்டியரே 7
“நீ இப்படி வந்து திருட்டுத்தனமா இழுத்துட்டு போவேன்னு எனக்கு தெரியும்டா” என்று திடீரென்று வந்து குதித்தான் திடீர் மாப்பிள்ளை லோகநாதன்.
“இந்த கொசு தொல்லை தாங்கலடா யாராவது பூச்சி மருந்து அடிச்சு கொல்லுங்கடா..!” இடது கையால் நெற்றியை தேய்த்துக் கொண்டவன், வலது கையும் தங்க மயலின் தோளை அணைவாக அரவணைப்பாக அணைத்து இருந்தது.
லோகநாதனுக்கு தங்கமயில் மீது ஏற்கனவே ஒன்றல்ல இரண்டல்ல அத்தனை கண்கள்..! அவள் வண்டியில் போகும் வரும்போதெல்லாம் அவளைப் பார்த்து ஜொள்ளிட்டு நிற்பான்.
சில சமயம் சீண்டவும் செய்வான்..!
பல சமயம் பார்வையிலேயே கபளீகரம் செய்வான்..!
ஆனால் ஆதிரனுக்கு பயந்து அடக்கிக் கொள்வான்.
“கட்டுனா இப்படி ஒரு பொண்ண கட்டணும் டா.. எப்படி இருக்கா பாரு..” என்று பச்சை பச்சையாக அவளின் வெளி அங்கலாயவங்களை வர்ணித்து அவனின் குடிக்கார கூட்டாளிகளுடன் பேசிக் கொண்டும் இருப்பான்.
ஆனால் திடீரென்று அவன் அப்பனே இவனிடம் என் பொண்ணை கட்டிக்கோ என்று நிற்க.. கசக்குமா என்ன அவனுக்கு ??
தேனை திருடி திங்கும் நரிக்கு அதன் ருசி போகுமா என்ன? இனி திருடி திங்க தேவையில்லை. இந்தா பிடி என்று அந்த நரியிடமே தேன் குடுவையை கொடுத்தால்.. இரவெல்லாம் தூக்கம் இல்லாமல் தவித்தான். எங்கே ஆதிரன் வந்து தேன் குடுவையை அதாவது தங்கமயிலை தூக்கி விடுவானோ என்ற பயம்.
அதனால் நாளைக்கு திருமணம் அதுவும் ஆதிரனோடு நிச்சயமான பெண் எப்படியும் இரவோடு இரவாக தப்பித்து செல்ல வாய்ப்பிருக்கிறது என்று அவன் கிறுக்கு மூளை கூற, தியாகேசனை தேடி வருவது போல வந்தவன் கண்ணில்,
தியாகேசன் பப்பரப்பா என்று வாசலில் தூங்க, அதுவும் வெளி கதவு பூட்டி இருக்க சற்று நிம்மதி தான் “பரவால்ல மாமனார் உஷாரா தான் இருக்கிறார்..” என்றபடி யோசித்தவன் “ஒரு வேள என் மயிலு.. கொல்லப்பக்கமா தப்பச்சிட்டா..” என்று அவன் வரும் வேலையில் கதவை திறந்து கொண்டு வந்த ஆதிரனை கண்டதுமே நெஞ்சு வெடித்து விடுவது போல இருந்தது.
அதிலும் மயிலை அணைத்து ஆதிரன் ஆறுதல் படுத்த இன்னும் கொதித்துக் கொண்டு வந்தது குடிகாரனின் ரத்தம்.
“எப்படி இரண்டு பேரையும் கையும் காலுமா பிடிச்சிட்டேன் பார்த்தியா ஆதிரா?” என்பது போல அவன் நிற்க…
“டேய் உன்னைய.. இந்த குடிமகன் தொல்லை தாங்கல..” என்று நெற்றியை இடது கையால் தேய்த்தவன், “இங்க பாரு டி உங்க அப்பனால என்ன பாத்தா உச்சா போடுற பயகிட்ட எல்லாம் நான் சண்டை போட வேண்டியதா இருக்கு.. என் கெரகம்..!” என்று பல்லை கிடைத்தவனை முறைத்தாள் மயில்.
“என்னடி நாளைக்கு கல்யாணத்தை வெச்சுட்டு மாமானு பாசமா பார்க்காம இப்படி முறைக்கிறவ, இந்த முறைப்ப எல்லாம் இன்னிக்கி நைட்டோட விட்டுரு ராசாத்தி.. நாளைக்கு நைட்டு இந்த கண்ணுல நான் முறைப்ப எல்லாம் பார்க்க கூடாது.. சரியா?” என்று அவளைப் பார்த்து மீசைய முறுக்கி கண்ணடித்தவன் கண்களில் சொன்ன செய்தியில்..
“ம்மா.. மாமா…” என்று தடுமாறினாள் தங்கமயில்.
“டேய் அங்க என்ன பேச்சு இங்கே பேசு.. நாளைக்கு எனக்கு மயிலுக்கும் தான் கல்யாணம் ஒழுங்கா மருவாதியா அவளை விட்டுட்டு போயிடு. நாளை இந்நேரம் அவ என் பொண்டாட்டியா இருப்பா..” என்று கண்ணில் தாபத்தோடு மயிலை விழுங்கி விடுவது போல பார்த்தவனை கண்ட மயிலு..
“மாமா..” என்று பயந்து இன்னும் ஆதிரையின் கையை நெருக்கமாக பிடித்துக் கொண்டாள் மயில்.
“வில்லன்னு ஒருத்தன் வந்தாதான் நீங்க எல்லாம் ஹீரோ கிட்டயே வருவீங்களா..” என்று சிரித்தவன்,
“இங்க பாரு லோகநாதா.. நானே செம்ம கடுப்புல இருக்கேன். நீயே வாண்ட்டடா வந்து என்கிட்ட மாட்டுன இருக்கிற கடுப்பெல்லாம் உன் மேல காட்டுனா.. நீ இந்த லோகத்திலே இருக்க மாட்ட..!” என்று சீரியஸாக கிண்டல் அடித்தான் ஆதிரன்.
“இந்த பம்மாத்துக்கெல்லாம் நான் பயப்பட மாட்டேன் மயில எனக்கு தான் தரேன்னு அவங்க அப்பா சொல்லி இருக்காரு” ஏதோ மிட்டாய்க்கு பங்கு கேட்டு சண்டைக்கு வருபவனை போல நின்றவனை பார்த்து தலையில் அடித்துக் கொண்டான் ஆதிரன்.
“இங்க பாரு லோகு.. முதல்ல நிச்சயம் பண்ணவன் நான் தான் எனக்கு தான் முதல் உரிமை புரியுதா? ஏதாவது தேவையில்லாத வசனம் பேசி என்கிட்ட வாங்கி கட்டாதே.! உன் கிட்ட சண்டை போட மூடுல நான் இல்லவே இல்லை. காலையில் கல்யாணம் விருந்து அது இதுன்னு நான் செம பிஸி போ போ காலையில கல்யாணத்துக்கு வந்து சேரு மதியானம் மட்டன் பிரியாணி தான் சொல்லி இருக்கேன்” என்றதும் பல்லை கடித்தாள் தங்கமயில்.
“நீ ஏன் டி வெறும் பல்வை கடிக்குறவ.. நாளைக்கு மட்டன் பீசோடு எலும்பு தரேன் அதை கடிக்கலாம்” என்று மயிலின் கன்னத்தில் ஆதிரன் தட்ட.. அவன் கையை தட்டி விட்டவள்,
“என்ன மாமா நீ.. வசனமா பேசி தள்ளிட்டு இருக்க.. அவன் வாயில ரெண்டு குத்து.. வயித்துல ஒரு கிக்கு.. எக்கி நடுமண்டல நச்சுன்னு ஒரு போடு.. “என்று அவள் சரமாரியாக சொல்ல..
“அட நிறுத்து டி சண்டிராணி.. நிறுத்துடி. ஏற்கனவே குடிச்சு குடிச்சு பாதி உடம்பு தான் அவன்கிட்ட இருக்கு. மீதி உடம்பும் இந்த குத்துல பரலோகம் சேர்ந்திடும். என்னைய புடிச்சு போலீஸ்ல மாட்டி கொடுத்துவான் உங்கப்பன்.. உண்மைய சொல்லு நீ நெசமாவே என்னை கட்டிக்க ஆசைப்படுறியா? இல்ல உங்க அப்பனோடு சேர்த்து என்னை ஜெயிலு தள்ள பாக்குறியா?” என்று தங்கமயிலை பார்த்து கேட்க, அவள் இன்னும் முறைத்துக் கொண்டுதான் இருந்தாள் ஆதிரனை.
“மாமா..” என்று ஏற்கனவே கோத்திருந்த கையை இன்னும் அழுத்தி பிடித்து தன் கோபத்தை காட்டினாள் தங்கமயில்.
“பரவால்லடி.. மாமன் மேல உள்ள கோபத்தை நாசுக்க காட்டுற பாத்தியா அங்கன நிக்கிற டி என் அக்கா மகளே. !” என்றவன் சிலாகிக்க..
“போ மாமா.. நான் என்ன செஞ்சாலும் பகடி பேசுற” என்று அவள் கையை விலக்க முயல, அவனும் இன்னும் அழுத்தமாக கோர்த்து தன்னுள் பொதித்துக் கொண்டான்.. கையை மட்டுமல்ல அவளையும்..!!
“என்னங்கடா நடக்குது.. நான் வந்து ரொம்ப நேரமாகுதுடா..!” என்று வடிவேல் பானையில் அவர்களைப் பார்த்து முறைத்துக் கொண்டு நின்று இருந்தான் லோகநாதன்.
இருவர் கையும் சேர்ந்திருப்பது பார்த்து “அவள தொடாத டா..!” என்று அவன் கத்த..
“ஓ தொடக்கூடாதோ? தொட்டா என்ன செய்வ?” என்றவன் அவளை நெருக்கி தன்னோடு ஒற்று கையால் அணைத்து கொண்டான். இப்பொழுது அவள் முகம் ஆதிரன் நெஞ்சில் அழுத்தமாய் பதிய பற்றி கொண்டு வந்தது லோகநாதனுக்கு.
“இருடா இப்பவே போய் என் மாமனாரை கூட்டிட்டு வரேன்.. கூட்டிட்டு வந்து உங்க ரெண்டு பேரையும் என்ன செய்யறேன் பாரு..!” என்றவனை..
“கொஞ்சம் நில்லடா இதையும் பார்த்துட்டு போய் மொத்தமா உன் மாமனாரிடம் போய் சொல்லு” என்றவன், மயிலை திருப்பி அவளது உதட்டை நோக்கி குனிய,
“மாமா.. ப்ளீளீஸ்ஸ்ஸ்.. இது ..தப்பப்ப்ப்…” என்று தள்ள முயன்ற மயிலின் சிவந்த உதடுகளை கவ்விக்கொண்டான் ஆதிரன்.
இதுவரை பேசிக் கொண்டிருந்த லோகநாதன் வார்த்தைகளில் கோபம் வந்து அவனை நாலு அப்பு அப்புவான்.. நன்றாக மொத்தி எடுப்பான் என்று அவள் நினைத்திருக்க.. ஆனால் ஆதிரனோ திடீரென இதழோடு இதழ் சேர்த்து முத்தம் குடுப்பான்னு மயில் எதிர்பார்க்கவில்லை…!!
“மாமா.. ப்ளீளீஸ்ஸ்ஸ்.. இது ..தப்பப்ப்ப்…” என்று தள்ள முயன்ற மயிலின் சிவந்த உதடுகளை கவ்விக்கொண்டான் ஆதிரன்.
இதுவரை பேசிக் கொண்டிருந்த லோகநாதன் வார்த்தைகளில் கோபம் வந்து அவனை நாலு அப்பு அப்புவான்.. நன்றாக மொத்தி எடுப்பான் என்று அவள் நினைத்திருக்க.. ஆனால் ஆதிரனோ திடீரென இதழோடு இதழ் சேர்த்து முத்தம் குடுப்பான்னு மயில் எதிர்பார்க்கவில்லை…!!
தன்னோடு உதட்டில் அவன் உதட்டை வைத்ததும் வாய்க்குள்ளயே முனகினாள்.
“ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்விவிவிவிவிடுடுடுடுடுங்க..” அவனை தள்ளுவதா வேணாமா என்று குழம்புவது போல அவளுடைய கைகளை அவனுடைய நெஞ்சில் வைத்திருந்தாள்.
ஆதிரனோ எந்த பதட்டமும் தயக்கமும் இல்லாமல் மயிலின் செவ்விதழ்களை சுவைக்க ஆரம்பித்தான்.. அதே நேரம் அவனுடைய கைகள் அவளது மெல்லிடையை இறுக்கி பிடித்தது.
இருமுனை தாக்குதலில் மாட்டி துடித்தாள் பெண்ணவள். ஆதிரனோ தன்னுடைய அதரங்களால் அவளின் அதரங்களை பிரித்து தனித்தனியாக மென்று தின்று கொண்டிருந்தான்.
மயில் கொஞ்சம் கொஞ்சமாக அவனுடைய கட்டுப்பாட்டுக்குள் சென்றாள்.. அவனுடைய நெஞ்சில் வைத்திருந்த கை எப்போது அவனுடைய கழுத்தை சுற்றி வளைத்தது என்பதை பாவை அவள் அறியாள்? அவளே அறியாமல் செய்ய வைத்திருந்தான் ஆதிரன்.
ஒரு லிப் லாக் சீனை லைவ்வாக பார்த்துக் கொண்டிருந்தான் லோகநாதன் அதிர்ச்சி விலகாமல்..!!
தன் மாமனுக்கு சுவைப்பதற்கு தன் இதழ்களை சுவைக்க கொடுக்க மயில் மறுக்க.. அவனோ அதையெல்லாம் தடுத்து அவளை தன்னவள் என்று பட்டவர்த்தனமாக லோகநாதனுக்கு காட்டி கொண்டாருந்தான்.
“ம்மாமாஆஆஆ..” சன்னமாக முனகியபடி ஆதிரன் தலையை பிடித்து தள்ளினாள் மயிலு.
ஆதிரன் இதழ்களை விடுவித்துவிட்டு நிமிர்ந்து அவள் முகத்தை பார்த்தான்..
‘ஏன்டா மென்று தின்றது போதுமானு? கேட்கும் வண்ணம் அவனை பார்த்தாள்..
“கல்யாண பாப்பாவுக்கு இப்போ பயம் கொறைஞ்சுருச்சா” என்று கண் சிமிட்டி சிரித்தான் ஆதிரன்.
இவர்கள் இருவரையும் ஒன்றும் செய்ய முடியாத கையாலாகாதனத்தோடு பார்த்திருந்தான் லோகநாதன். அவன் முகத்தை பார்த்த மயிலுக்கு அப்போதுதான் திருப்தியாக இருந்தது.
உதட்டோரம் சிரிப்போடு ” கொறைஞ்சுருச்சு” என்றாள்.
“இப்போ உள்ள போலாமா இல்ல இன்னும் கொஞ்ச நேரம்…” என்று ஆதிரன் மீண்டும் அவள் இதழ்களை பார்த்துக்கொண்டு கேட்க..
இப்போதைக்கு உள்ளே போவது தான் உசிதம் என்று அவளுக்கு தோன்றியது.. இன்னும் கொஞ்ச நேரம் நின்றால் லோகநாதனை வெறுப்பேத்தவென்று மீண்டும் எடக்கு மடக்காக ஏதாவது இந்த மாமா செஞ்சாலும் செய்யும் என்று கணித்தவள்
“உள்ள போலாம் மாமா” என்றாள் மென் குரலில்..
“என்னவோ இன்னைக்கு உன்னை பார்க்கும் போது பொண்டாட்டின்னு எக்கச்சக்கமா உன் மேல உரிமையும் லவ்வும் வருது மயிலு” என்றவனை அவள் பாவமாக பார்க்க.. லோகநாதனும் கோபமாக பார்த்தான்.
“அதே சமயம் அவ்வளவு வெறியா இருக்கு இந்த தக்காளி பயல பாக்கும் போதெல்லாம்.. மொதல்ல நீ உள்ள போய் சாப்பிடு, அப்புறம் வச்சுக்குறேன்.. அவனை..” லோகநாதனை பார்த்தவாறு கையில் உள்ள காப்பை உயர்த்திய ஆதிரன் திரும்ப அங்கே அவன் இல்லை.
“மாமா.. எங்க போனான் அவன் ஒருவேளை அப்பாவ கூப்பிட்டு வந்துருவானோ?” என்று பயந்தாள் மயில்.
“விடு டி.. இவனுக்கு டெமோ காட்டின மாதிரி உங்க அப்பாவுக்கும் ஒரு டெமோ காட்டிட்டா போச்சு..!” என்று அவளை இழுத்து இடையோடு அணைத்தவனை, முறைத்தாள்.
“என்னடி முறைக்கிற ஃபர்ஸ்ட் டைம் நானே ஒரு டெமோ காட்டி இருக்கேன். அது பிடிச்சதா இல்லையான்னு ஒரு வார்த்தை சொல்றியா நீ? முறைச்சிகிட்டே நிக்கிற? இதனை எப்படி எடுத்துக்க நானு.. பர்ஃபாமன்ஸ் பத்தலைன்னா அடுத்து கொஞ்சம் எஃப்போர்ட் போடுவேன்ல..” என்று காலரை பின்பக்கம் தள்ளி விட்டு அவளை தாபமாக பார்த்து கேட்க அவளோ முகத்தை திருப்பிக் கொண்டாள்.
“இப்படி எல்லாம் பேசாத மாமா..! ஏதோ அவன பார்த்து அந்த நேரம் கொஞ்சம் பயமா இருந்துச்சு.. உன் பக்கத்துல வந்துட்டேன்னு உடனே நீ ரொம்ப உரிமையை எடுத்துக்காதே.!” என்று சிடுசிடுத்தாள்.
“இந்த பொண்ணுங்கள புரிஞ்சுக்கவே முடியலையே தியாகேசா..! எப்ப கங்கவா இருக்கீங்க எப்ப சந்திரமுகியா மாறீங்கன்னு.? என்னவோ போடி மாமனுக்கு இதுதான் முதல் கல்யாணம்.. கொஞ்சம் பார்த்து பதமா மாமாவ பாத்துக்க..” என்றவன் “சரி உள்ள போ.. அந்த கொசு உங்க அப்பன கடிச்சு எழுப்பிட்டு வந்துறபோது” என்றதும் ஆமா மாமா என்று அவசரமாக உள்ளே ஓடி விட்டாள் மயில்.
செல்லும் அவளைத்தான் யோசனையோடு பார்த்திருந்தான் ஆதிரன். ஒரு சமயம் தன் கையில் கிறங்கி மயங்கி இருக்கிறாள்.. மறுசமயம் இப்படி சிடுசிடுக்கிறாள் பொதுவாவே எல்லா பெண்களும் இப்படித்தானா?” என்று புரியாமல் தன் வீட்டை நோக்கி நடந்தான் ஆதிரன்.
மறுநாள் காலை.. மாமன் இருக்கும் தைரியத்தில் திருமண கோலத்தில்.. திருவாரூர் தியாகராஜர் கோயிலில் நின்றிருந்தாள் தங்க மயில்.
மாமன் மீது நேசம் என்றில்லை. ஆனால்… எங்கே அப்பா பிடிவாதத்தில் லோகநாதனை தனக்கு பிடித்துக் கட்டி வைத்து விடுவாரோ என்ற பயத்தில்…
நேரம் சென்று கொண்டிருந்தது.. இன்னும் ஆதிரன் வந்தப்பாடில்லை..! ஆதிரன் மட்டுமல்ல அவன் பக்கத்து சொந்தங்கள் விஜயராகவன் என்று யாருமே வராமல் இருக்க, குழம்பி போய் அன்னையைப் பார்த்தாள். கமலாம்பிகையோ ஒரு வித பயத்தில் இருந்தவர் கணவனை பார்க்க அவரோ கோணலாக சிரித்தார்.
“நீ எதிர்பார்க்குற எவனும் வரமாட்டானுங்க..!” என்றவாறு..
தியாகேசனை எதிர்த்து கரம் பிடிப்பானா குரு ஆதிரன்??
தொடரும்
👌👌👌👌👌👌👌👌👌👌👌👌
super sis