ATM Tamil Romantic Novels

மன்னவன் பார்வையிலே 6

அத்தியாயம் 6

 

திவ்யா யோசனையுடன் உடை கூட மாற்றாமல் அப்படியே அமர்ந்திருக்க அங்கே வந்தார் பாக்கியம்.

 

“என்னாச்சி டி ஏன் புடவையை கூட மாத்தாம அப்படியே இருக்க” என்று திவ்யாவிடம் கேட்டார்

“அம்மா இந்த கல்யாணத்தை நிறுத்திறலாமா” என்று கேட்டாள் திவ்யா.

 

அதை கேட்ட பாக்கியம் நெஞ்சில் கை வைத்துவிட்டார் “என்ன டி இப்படி சொல்ற” என்று கேட்டார்.

 

“ஆமாம் மா” என்றவள் அவளின் சித்தி மற்றும் தங்கை இருவரும் கூறியதை பற்றி தன் தாயிடம் கூறினாள்.

 

“இதெல்லாம் ஒரு விஷயமா டி 

அவரை பார்த்தா அப்படி தெரியலையே ஒரு வேளை அவரு அந்த பொண்ணு கூட ஒன்னுமன்னா இருந்தா மட்டும் என்ன பண்ண முடியும் இந்த மாதிரி சம்மந்தம் எல்லாம் தேடினாலும் கிடைக்காது கவர்மென்ட் வேலை வேற” என்றார்.

 

“அம்மா எனக்கு வர போறவரு ஶ்ரீராமனா இருக்கனும்ன்னு நினைக்குறவள் நான் அவரு இப்படி இருந்தா நான் அவரை எப்படி கல்யாணம் பண்ணிக்க முடியும்” என்றாள் திவ்யா கோபத்துடன்.

 

“திவ்யா பையன் ரொம்ப நல்லவரு டி ஒரு வேளை அவரு அந்த மாதிரி தான்னா வெளியே விசாரிச்சப்போ சொல்லிருப்பாங்கல்ல நிச்சயத்துக்கு நாள் வேற குறிச்சிட்டோம் நீ கல்யாணத்துக்கு ரெடி ஆகு அது போதும்” என்றார் பாக்கியம்.

 

“அது இல்லை மா” என்று திவ்யா ஏதோ கூற வர “நீ ஒன்னும் சொல்ல வேண்டாம் மாப்பிளை ரொம்ப நல்லவரு நீ போய் புடவையை மாத்து” என்று அவளை அனுப்பி வைத்தார் பாக்கியம்.

 

பாக்கியம் அவளிடம் சாதாரணமாக பேசினாலும் அவரும் அவள் கூறியதை யோசித்து கொண்டு தான் இருந்தார்.

 

வீராவின் வீட்டில் அனைவரும் வீடு வந்து சேர்ந்தனர்.

 

மறுநாள் காலை நந்தினி கல்லூரிக்கு கிளம்பி கொண்டு இருந்தாள் சுவாமிநாதன் தான் கல்லூரிக்கு வந்து விடுவதாக கூறி இருந்தார்.

 

ஆனால் அவருக்கு திடீரென ஏதோ வேலை வந்து விட அவர் அங்கே சென்றுவிட்டார்.

 

வீரா அன்று இரவு டியூட்டி முடித்துவிட்டு வந்து உறங்கி கொண்டு இருந்தான்.

 

“அம்மாச்சி டைம் ஆச்சு தாத்தா எங்கே” என்று கேட்டுக் கொண்டே மெல்ல தன் பையை மாட்டிக்கொண்டு வெளியே வந்தாள் நந்தினி.

 

“ஏன் டி காலையிலேயே என் புருஷனை தேடுற” என்று சாவித்திரி கேட்க

நந்தினி அவரை தன் இடுப்பில் கை வைத்து கொண்டு ஒரு கணம் முறைத்து பார்த்தாள்.

 

“ஏய் கிழவி நான் காலேஜிக்கு போக வேண்டாமா” என்று அவள் புருவத்தை உயர்த்தி கோவமாக அவரிடம் கேட்டாள்.

 

“உங்க தாத்தா டவுனுக்குல்ல போய்ருக்காரு நீ வேணும்னா அருணை கூட்டிட்டு போ” என்றார்.

 

“அருண் அண்ணா ஏதோ கட்சி மீட்டிங்காக அப்பா கூட போய்ருக்கான்” என்றாள் நந்தினி.

 

“இப்போ என்ன டி பண்றது நம்ம ஊரு கடைசி பஸ் போய்ருக்குமே” என்று இருவரும் பேசிக்கொண்டே இருக்க தூக்கி எழுந்து ஹாலிற்க்கு வந்த வீரா

“அம்மா தலை வலிக்குது ஒரு காபி வேணும்” என்று கேட்டுக்கொண்டே அங்கிருந்த ஷோபாவில் அமர்ந்து கொண்டான்.

 

அவனை பார்த்த சாவித்திரிக்கு ஒரு யோசனை தோன்ற

“தம்பி வீரா நந்தினியை காலேஜ்க்கு போய் விட்டுட்டு வரியா” என்று கேட்டார் சாவித்திரி.

 

பாட்டி வேண்டாம் என்று நந்தினி தன் கண்ணால் சைகை காட்டியதை பாவம் அவர் பார்க்கவேயில்லை.

 

“சரி மா காபி எடுத்துட்டு வா” என்றான் வீரா தலையை தேய்த்து கொண்டே.

 

சாவித்திரி உள்ளே சென்று காபியை எடுத்து வந்து அவன் கையில் கொடுத்தார்.

 

வீரா காபியை குடித்துவிட்டு கார் சாவியை எடுத்து வருவதற்க்காக தன் அறைக்குள் சென்றான்.

 

“ஏய் கிழவி நீ சும்மாவே இருக்க மாட்டியா” என்று நந்தினி அவரை திட்ட “என்னை எதுக்கு டி இப்போ திட்டுற” என்று சாவித்திரி கேட்டு கொண்டே இருக்கும் போதே வீரா அங்கே வந்தான்.

 

“போலாமா” என்று நந்தினியிடம் கேட்க அவளும் பதிலுக்கு பூம்பூம் மாடு போல் தலையை ஆட்டிவிட்டு அவன் பின்னே சென்றாள்.

 

நந்தின் போகும் போது கூட “ஏய் கிழவி உன்னை வந்து கவனிச்சிக்குறேன்” என்று அவரை திட்டிவிட்டு தான் சென்றாள்.

 

வீரா நந்தினியை தன் காரில் கல்லூரிக்கு அழைத்து சென்றான் நந்தினி செல்லும் வழியில் கூட அவனிடம் ஒரு வார்த்தை கூட‌ பேசவில்லை அமைதியாக தான் இருந்தாள்.

 

கல்லூரியின் வாசலில் காரை நிறுத்த நந்தினி தன் பையை எடுத்து கொண்டு இறங்க போக வீரா மறுபுறம் வந்து அவளுக்கு கதவை திறந்துவிட்டான்.

 

நந்தினியும் கீழே இறங்கியவள் அவன் முகம் பார்க்காமல் “தேங்க்ஸ் மாமா” என்று கூறிவிட்டு அங்கிருந்து சென்றாள்.

 

வீரா அவளை பார்த்து கொண்டே நின்றிருந்தான் அந்த நேரம் அவனது அலைபேசி ஒலித்தது அதை எடுத்து காதில் வைத்தவன் பேசிக்கொண்டு அங்கேயே நின்றிருந்தான்.

 

நந்தினி உள்ளே நடந்து சென்று கொண்டிருக்கும் போது அவள் அருகில் வந்த மாணவன் ஒருவன் அவளிடம் பேச்சு கொடுத்தான்.

 

“ஹாய் நந்தினி அது யாரு உன் கூட ஒருத்தர் வந்தாரே” என்று கேட்டான்.

 

அது தன் மாமா என்று கூறுவதற்க்கு சங்கடப்பட்ட நந்தினி “அது என் வீட்டு டிரைவர் விக்னேஷ் ஆமா நீ ஏன் இதெல்லாம் கேட்க்குற” என்றாள்.

 

“சும்மா தான் நந்தினி நீ கிளாஸ் போ நான் இதோ இப்போ வரேன்” என்று கூறிவிட்டு விக்னேஷ் அங்கிருந்து சென்றான்.

 

கல்லூரியில் இருந்து வெளியே வந்த விக்னேஷ் அந்த டிரைவர் அங்கே இருக்கிறானா என்று தேட வீரா அங்கே நின்று யாரிடமோ போன் பேசிக்கொண்டு இருந்தான்.

 

அவன் அருகில் சென்ற விக்னேஷ் தன் கை கொண்டு வீராவின் தோலை சுரண்டினான்

போன் பேசிக்கொண்டே வீரா யார் என்று திரும்பி பார்த்தான் 

அங்கே நின்றிருந்த விக்னேஷை சந்தேகமாக பார்த்தவன் 

“யார் நீ உனக்கு என்ன வேணும்” என்று கேட்டான்.

 

“நான் விக்னேஷ் உங்க கிட்ட கொஞ்சம் பேசனும்” என்று கூற

தன் போனில் பேசிக்கொண்டிருந்தவரிடம் “சார் இருங்க நான் கூப்பிட்றேன்” என்று கூறிவிட்டு போனை வைத்தான் வீரா.

 

விக்னேஷ் உடனே தன் பாக்கெட்டில் இருந்த ஒரு 500 ரூபாய் தாளை எடுத்து வீராவின் பாக்கெட்டில் வைத்தான்

உடனே வீரா அந்த ஐந்நூறு தாளை கையில் எடுத்தவன் “என்னது இது” என்று கேட்டான்.

 

“எல்லாம் விஷயமா தான் அண்ணா டீ செலவுக்கு வச்சிக்கங்க” என்க

‘இவன் என்ன பைத்தியமா’ என்பது போல் பார்த்தான் வீரா.

 

“நான் இப்போ சொல்ல போற விஷயத்தை மட்டும் செஞ்சிங்கன்னு வையிங்க இந்த மாதிரி பல ஐநூறு ரூபாய் கிடைக்கும்” என்றான்.

 

“என்ன விஷயம்” என்று வீரா அவனை மேல் இருந்து கீழ் வரை பார்த்து கொண்டே கேட்டான்.

 

வீராவின் உயரம் கூட இல்லாதவன் எப்படி கூறுவது என்று தெரியாமல் தவித்தான்

“அண்ணா கொஞ்சமா கீழே குனிங்க பனைமரத்துல பாதி உயரம் இருந்தா எப்படி சொல்றது” என்று கேட்டான்

வீராவும் சற்று கீழே குனிய “அதாவது அண்ணா நம்ம நந்தினி இருக்காளே அவள் மேல எனக்கு ஒரு கண்ணு” என்று அவன் வெட்கப்பட்டு கொண்டே கூற அதை கேட்ட வீராவின் முகம் மாறியது.

 

“நல்ல பணக்கார வீட்டு பொண்ணுன்னு வேற கேள்விப்பட்டேன் சும்மா சொல்ல கூடாது நச்சு ஃபிகர் அண்ணா 

அதான் கரெக்ட் பண்ணிடலாம்ன்னு நினைக்குறேன் அதுக்கு உங்க உதவி தேவை” என்று கூறி கொண்டே இருந்த விக்னேஷ் வீராவின் முக மாற்றத்தை அப்போது தான் கவனித்தான்.

 

“அண்ணே உங்க முகம் ஏன் டல்லா ஆகுது நீங்க ஒன்னும் கவலைப்படாதிங்க என்னோட வாழ்க்கை லட்சியமே ஒரு ஊனமான பொண்ணுக்கு வாழ்க்கை கொடுக்குறது தான்

பொண்ணு சும்மா கும்முன்னு இருக்கு யாருக்கு தான் ஆசை வராது உங்களுக்கும் வந்துருக்கலாம் சரி அதை விடுங்க 

ஊர்ல ஒரு பழமொழி சொல்லுவாங்களே கோழி குறுடா இருந்தாலும் குழம்பு ருசியா இருக்கும்ன்னு அது மாதிரி தான்” என்று அவன் கூறி முடிக்கும் முன் 

“ஒரு நிமிஷம் தம்பி” என்ற வீரா தன் காரின் கதவை திறந்து உள்ளே வைத்திருந்த லத்தியை வெளியே எடுத்தான்.

 

“எதுக்கு அண்ணா இந்த குச்சி பார்ட் டைம்மா எதாச்சும் கூர்க்கா வேலை பார்க்குறிங்களா” என்று கேட்டான் விக்னேஷ்.

 

வீரா வெறி பிடித்தவனை போல அவனை பார்த்து முறைத்தவன்

லத்தியால் அவனை சரமாரியாக அடிக்க ஆரம்பித்தான்.

 

வீரா கண்முன் தெரியாமல் அவன் உடலின் ஒரு இடம் கூட விடாமல் அடித்து வெளுத்து கொண்டிருக்க கீழே விழுந்த விக்னேஷ் அலறி துடிக்க ஆரம்பித்தான்.

 

“யோவ் எதுக்கு யா என்னை அடிக்குற” என்று அவன் கேட்க தன் லத்தியால் இன்னும் நாலு அடி அவன் வாயிலேயே போட்டான் விக்னேஷின் வாயில் இருந்து ரத்தம் பீறிட்டு வர ஆரம்பித்தது அங்கே மாணவர்கள் கூட்டம் கூடி விட்டது.

 

நந்தினி தன் வகுப்பின் உள்ளே செல்லும் சமயம் “நந்தினி விக்னஷ்சை யாரோ வெளியே போட்டு அடிச்சிட்டு இருக்காங்க” என்று அவளின் சக தோழி ஒருத்தி கூற 

நந்நினியும் பதறி அடித்து கொண்டு சென்றாள்.

 

சுற்றிலும் கூட்டமாக இருக்க விக்னேஷின் அலறல் சத்தம் வேறு அங்கே கேட்டு கொண்டே இருந்தது அதில் ஒருவர் கூட வீராவை தடுக்கவில்லை நமக்கு எதற்க்கு வம்பு என்று வேடிக்கை பார்த்து கொண்டிருந்தனர்.

 

அந்த கூட்டத்தை விலக்கி விட்டு நந்தினி உள்ளே சென்று பார்த்தாள் அங்கே விக்னேஷ் அடி வாங்கி கொண்டு இருக்க 

வீரா அவனை கொலை வெறியுடன் தாக்கி கொண்டே இருந்தான் ஒரு கணம் என்ன செய்வது என்று புரியாமல் தவித்த நந்தினி வீராவின் அருகில் சென்று “மாமா என்ன பண்றிங்க” என்று அவன் சட்டையில் கை வைத்து தன் புறம் இழுக்க வீரா திரும்பி அவளை எரிப்பதை போல் பார்த்துவிட்டு மீண்டும் அவனை அடித்து கொண்டே இருக்க.

 

“மாமா இப்போ எதுக்கு அவனை மாட்டை அடிக்கிற மாதிரி அடிக்கிறிங்க நிறுத்துங்க பிளீஸ் எல்லாரும் பார்க்குறாங்க அசிங்கமா இருக்கு” என்று நந்தினி கண்கலங்க அவனின் கைப்பிடித்து தடுத்து நிறுத்தினாள்.

 

நந்நினியின் கண்களை பார்த்த வீரா அவனை அடிப்பதை நிறுத்தினான்.

 

ஆனால் விக்னேஷ் பார்த்து முறைத்தவன் “இனி என் அக்கா மகள் கிட்ட உன்னை பார்த்தேன் உன் தோலை உருச்சி தொங்க விட்ருவேன் ராஸ்கல்” என்றவன் 

அங்கே சுற்றி இருந்த மாணவர்கள் அனைவரையும் ஒரு பார்வை பார்த்தான்.

 

“இங்கே இருக்க எல்லாரும் நல்லா கேட்டுக்கங்க இவள் என் அக்கா மகள்” என்று நந்தினியின் தோல் மீது கைப்போட்டு தன் அருகில் நிறுத்தி கொண்டவன் “உங்க எவன் கண்ணாவது அவள் மேல பட்டுச்சு பார்க்க ரெண்டு கண்ணு இருக்காது பார்த்துக்கங்க” என்று கூறியவன் தன் லத்தியை எடுத்து கொண்டு தன் காரில் ஏறி சென்றான்.

 

அங்கே சுற்றியிருந்த கூட்டம் கலைந்துவிட நந்தினி மட்டும் அழுது கொண்டே நின்றிருந்தாள்.

 

நந்தினி அழுது கொண்டே விக்னேஷின் அருகில் செல்ல 

தரையில் இருந்து எழுந்த விக்னேஷ் அத்தனை வலியிலும் “உன் சங்காத்தமே வேண்டாம்” என்று கூறிவிட்டு அங்கிருந்து ஓடினான்.

 

அவளின் மொத்த கோபம் தன் மாமனிடம் தான் திரும்பியது 

அன்றிலிருந்து வீராவை இன்னும் இன்னும் வெறுக்க ஆரம்பித்தாள் நந்தினி.

 

அன்றைய தினத்தில் இருந்து அவளுடைய ஆண் நண்பர்களில் ஒருவர் கூட அவளிடம் பேச விருப்பப்படல்லை.

 

அவள் முன்னே நடந்து வருவதை பார்த்தாலே அலறி அடித்து கொண்டு ஓட ஆரம்பித்தனர்.

 

மறுநாள் விக்னேஷின் தாய் வந்து கல்லூரி தலமையகத்தில் தன் மகனை அடித்ததற்க்காக நந்

தினியின் மீது புகார் கொடுத்துவிட்டு சென்றார்.

 

அதனால் நந்தினி கல்லூரியில் இருந்து ஒரு மாதத்திற்கு சஸ்பென்ட் செய்யப்பட்டாள்.

 

தொடரும்…

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

3 thoughts on “மன்னவன் பார்வையிலே 6”

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Scroll to Top