ATM Tamil Romantic Novels

மன்னவன் பார்வையிலே 5

அத்தியாயம் 5

 

சாவித்திரி கோவிலில் இருந்து வீட்டிற்க்கு வந்தவர் பூஜையறைக்கு சென்று பிரசாதத்தை வைத்துவிட்டு நேரே சென்றது தன் கணவர் சுவாமிநாதனிடம் தான் “என்னங்க ஒரு வரன் வந்துருக்கு நம்ம வீராவுக்கு பேசலாமா” என்று கேட்டார்.

 

கையில் நியூஸ் பேப்பரை வைத்து படித்து கொண்டு இருந்தவர் அவர் கூறியதை காதில் கூட வாங்காமல் தலையை மட்டும் ஆட்டினார்.

 

சாவித்திரி அவர் அருகில் சென்றவர் அவர் கையில் இருந்த நியூஸ் பேப்பரை பிடுங்கி கீழே வைக்க “என்னம்மா சாவி” என்று கேட்க “சொல்றது காதுல விழுதா இல்லையா வீராவுக்கு ஒரு நல்ல வரன் வந்துருக்கு பேசி முடிப்போமான்னு கேட்டேன்” என்றார்.

 

“யார் பொண்ணு என்னன்னு தெளிவா சொல்லு” என்றார் சுவாமிநாதன்.

 

“நம்ம சங்கர் அண்ணன் பொண்ணு திவ்யா தான் இன்னைக்கு ராமலிங்கம் அண்ணனை கோவில்ல பார்த்தேன் அவரு தான் சொன்னாரு நீங்க என்ன சொல்றிங்க ஒரு தடவை கேட்டு பார்ப்போமா” என்றார் அவர் அருகில் அமர்ந்து கொண்டு

“அதெல்லாம் சரி சாவி அவங்க பொண்ணு கொடுப்பாங்களா” என்று கேட்டார்.

 

“ராமலிங்கம் அண்ணன் பேசுறேன்னு சொல்லிருக்காரு நாம பொண்ணு பார்க்க போனா மட்டும் போதும் முதல்ல ரெண்டு பேருக்கும் பிடிக்கட்டும் அதுக்கு பிறகு என்ன பண்ணலாம்ன்னு பார்ப்போம் இன்னைக்கு வெள்ளிக்கிழமை அவரா வந்து என்னை கூப்பிட்டு சொல்லிட்டு போறாரு எனக்கு என்னவோ இது கூடி வரும்ன்னு தோனுது என்ன சொல்றிங்க” என்று அவரின் முகத்தை பார்த்து கொண்டே கேட்டார் சாவித்திரி.

 

“சரி சாவித்திரி ஒரு நாள் போய் பார்த்துட்டு வருவோம்” 

“ஏன் ஒரு நாள் நாளைக்கே போய்ட்டு வந்தா என்ன” என்று சாவித்திரி கேட்க 

“அதுக்கு உன் மகன் வரனுமே” என்றார்.

 

“நான் அவன் கிட்ட பேசுறேன் வருவான்” என்றார்

“சரி மா” என்று சுவாமிநாதனும் சம்மதம் தெரிவித்தார்.

 

அதன் பின் ராமலிங்கம் சங்கர் வீட்டில் பேசி முடிக்க இருவரின் ஜாதகம் சரி பார்க்க அதுவும் பொருத்தம் கூடி வந்தது.

 

திங்கள் கிழமை காலை பெண் கேட்ப்பதற்க்காக அனைவரும் கிளம்பினர் நந்தினியையும் கல்லூரியில் இருந்து விடுப்பு எடுக்க வைத்து அழைத்து வந்திருந்தார் சுவாமிநாதன்.

 

நந்தினி காட்டன் சுடிதார் ஒன்று போட்டு கிளம்பி கொண்டு இருக்க அவள் அறைக்கு வந்த சாவித்திரி “அடியேய் தாவணி கட்டு டி இது என்ன பைத்தியக்காரி மாதிரி” என்று கேட்டார் “அம்மாச்சி இந்த டிரெஸ் நல்லா தான இருக்கு” என்க

“நல்லா இல்லை கழட்டு” என்று கூறிக்கொண்டே பீரோவில் இருந்த அரக்கு நிறத்தில் பச்சை கரையிட்ட பட்டு தாவணி ஒன்றை வெளியே எடுத்தவர் “இதை கட்டிக்கோ” என்று அவள் கையில் கொடுத்தார்.

 

நந்தினி தான் போட்டிருந்த உடையை கலைந்துவிட்டு அந்த தாவணியை எடுத்து அணிந்து கொண்டாள்.

 

பின் அனைவரும் வீராவின் காரிலேயே புறப்பட்டு சென்றனர்

செல்லும் வழியில் ராமலிங்கமும் அவர்களுடன் இணைந்து கொண்டார்.

 

கார் பெண் வீட்டின் வாசலில் வந்து நின்றது அனைவரும் காரிலிருந்து இறங்கி வர கடைசியாக நந்தினி காரிலிருந்து இறங்கினாள் மெல்ல தாங்கி தாங்கி ஷூ காலுடன் நடப்பதை பார்த்த பெண்ணின் தாய் பாக்கியத்தின் முகம் அஷ்டகோனலாக மாறியது.

 

பாக்கியத்தின் பக்கத்தில் நின்றிருந்த அவரின் அக்கா செல்வி “என்ன டி இது நல்லா காரியம் நடக்கும் போது அபசகுனமா இந்த மாதிரி இருக்கறதை எல்லாம் கூட்டிட்டு வராங்க யார் இது” என்று அவர் காதில் கேட்டார்.

 

“எனக்கு எப்படி அக்கா தெரியும் இதெல்லாம் மாப்பிள்ளை வீட்ல எங்க கிட்ட சொல்வேயில்லை விசாரிப்போம்” என்றார் பாக்கியம்.

 

“கால் ஊனமா இருந்தாலும் பார்க்க கலையா தான் இருக்காள்ள” என்று செல்வி அவளை பார்த்து கொண்டே கூற அவரை திரும்பி பார்த்து முறைத்த பாக்கியம் “என் பொண்ணை விட கம்மி தான்” என்றார்.

 

சாவித்திரி உள்ளே வருவதை பார்த்து வாயை மூடி கொண்டவர் 

“வாங்க வாங்க” என்று அவர்கள் அனைவரையும் சிரித்த முகமாக வரவேற்றார்.

 

அனைவரும் உள்ளே வந்து அமர்ந்தனர்.

 

வீரா வெள்ளை நிற ஷர்ட் அணிந்து அதற்க்கு ஏற்றார் போன்று கருப்பு நிற பேன்ட் அணிந்து ஃபார்மலாக வந்திருந்தான்.

 

அவனை பார்த்த பாக்கியம் 

‘மாப்பிள்ளை நல்லா அம்சமா தான் இருக்காரு நம்ம பொண்ணுக்கு ஏத்த ஜோடி’ என்று மனதில் நினைத்து கொண்டார்.

 

“பொண்ணை அழைச்சிட்டு வாங்க மா” என்று ராமலிங்கம் குரல் கொடுக்க.

 

“இதோ இப்போ கூட்டிட்டு வரேன்” என்று செல்வி உள்ளே சென்றார்

அங்கே திவ்யா பட்டு புடவை ஒன்றை கட்டி கொண்டு தலை நிறைய மல்லிப்பூ வைத்து இதழில் உதட்டு சாயத்தை பூசிக்கொண்டு இருந்தாள்.

 

அங்கே உள்ளே வந்த செல்வி “திவ்யா நேரமாச்சு வா” என்று அழைக்க “ஒரு நிமிஷம் பெரியம்மா” என்றவள் தனது உதட்டில் லிப்ஸ்டிக் சரியாக பொறுந்தி இருக்கிறதா என்று சரி பார்த்தவள் தன்னை ஒரு முறை கண்ணாடியில் திரும்பி திரும்பி பார்த்து விட்டு

“போலாம் பெரியம்மா” என்றாள் திவ்யா.

 

“என் ராசாத்தி எம்புட்டு அழகா இருக்க” என்று கூறிக்கொண்டே அவள் கன்னத்தில் கை வைத்து நெட்டி முறித்த செல்வி அவளை வெளியே அழைத்து சென்றார்.

 

கையில் காபியுடன் வெளியே வந்த திவ்யா அனைவருக்கும் கொடுத்தவள் வீராவின் முகத்தை ஒரு முறை பார்த்துவிட்டு தலைகுனிந்து கொண்டாள்

வீரா எந்த அலட்டலும் இன்றி சாதாரணமாக தான் அமர்ந்து இருந்தான்.

 

அனைவருக்கும் கொடுத்தவள் இறுதியாக நந்தினியிடம் கொடுக்க அவளும் சிரித்த முகமாக வாங்கி கொண்டாள்.

 

திவ்யா ஒரு மூலையில் சென்று நின்று கொண்டாள் அவளின் பார்வை நந்தினியிடமே இருந்தது.

 

அவள் ஏதோ வித்தியாசமாக அமர்ந்து இருப்பதை போன்று தோன்றியது இருந்தாலும் அவள்

திவ்யாவை விடவே அழகாக இருக்க சற்று பொறாமை கூட தலை தூக்கியது எந்த வித ஒப்பனையும் இன்றி தலையை விரித்து விட்டு ஒரு சிறிய கிளிப் மட்டும் போட்டு இருந்தாள்.

 

அந்த அரக்கு நிற தாவணி அவளின் வெளுப்பான நிறத்துக்கு அவ்வளவு எடுப்பாக இருந்தது.

 

‘இவள் யாரு இவ்வளவு அழகா’ என்று யோசித்து கொண்டே நின்றிருந்தாள்.

 

இது திவ்யாவுக்கு மட்டும் அல்ல அங்கிருந்து அவளின் உறவினர்கள் அனைவருக்கும் சந்தேகத்தை தான் வரவழைத்தது.

 

“உங்களுக்கு சம்மதமாங்க அடுத்த பேச்சை எடுக்கலாமா” என்று சங்கர் சுவாமிநாதனிடம் கேட்க “உங்க வீட்ல பொண்ணு எடுக்க நாங்க தான் அண்ணா கொடுத்து வைச்சிருக்கனும் உங்களுக்கு சம்மதம்னா எங்களுக்கும் சரி தான்” என்றார் சாவித்திரி.

 

“நம்ம மட்டும் பேசிட்டு இருந்தா எப்படி பொண்ணு மாப்பிள்ளை தனியா பேசட்டுமே” என்று சுவாமிநாதன் கூறினார்.

 

“அதுவும் சரி தான் பேசி என்னன்னு முடிவை சொல்லட்டும்” என்றார் சங்கர்.

 

வீரா-திவ்யா இருவரையும் தனியாக பேசுவதற்க்காக மாடிக்கு அனுப்பி வைத்தனர்.

 

திவ்யா பயத்துடனே நின்றிருக்க 

வீரா நேராக அவளின் இரு கண்களை பார்த்து பேச ஆரம்பித்தான் “நான் வீரப்பத்திரன் மெக்கானிக்கல் இன்ஜினியரிங் முடிச்சிட்டு இதே ஊர்ல தான் இன்ஸ்பெக்ட்டரா இருக்கேன் எனக்கு எதையும் வெளிப்படையாக பேசி தான் பழக்கம் எனக்கு அப்போ அப்போ கோபம் அதிகமா வரும் 

போலீஸ்க்காரன்ங்கறதால 

அடிக்கடி வீட்ல எல்லாம் இருக்க முடியாது அதானல உங்களே பெருசா வெளியல கூட்டிட்டு போக முடியாது நேரம் கிடைக்கும் போது வெளியே போற மாதிரி இருக்கும் என்னை பத்தி பெருசா சொல்ல வேற எதுவும் இல்லை 

உங்களை பத்தி சொல்லுங்க” என்று கூறி முடித்தான்.

 

திவ்யாவுக்கு அவன் தன் கண்ணையே பார்த்து கொண்டே பேச கொஞ்சம் பதட்டமாகவே இருந்தது தடுமாறி கொண்டே தான் பேச ஆரம்பித்தாள் 

“நான் திவ்யா இந்த ஊர்ல தான் டீச்சரா இரண்டு வருஷமா வேலை பார்க்குறேன்” என்று தட்டு தடுமாறி எப்படியோ கூறி முடித்தாள் அதன் பின் என்ன கூறுவது என்று திருதிருவென முழித்தாள்.

 

“சரி என்னை உங்களுக்கு பிடிச்சிருக்கா” என்று வெளிப்படையாகவே அவன் கேட்டு விட திவ்யா என்ன கூறுவது பதட்டமாகிவிட்டாள்

“பிடிச்சிருக்கு” என்று மட்டும் கூறினாள்.

 

“ஓகே போலாமா” என்று அவன் கேட்க ‘அவ்வளவு தானா’ என்பது போல் இருந்தது அவளுக்கு

அவள் பதில் கூறும் முன்னே அவன் வேக நடையுடன் அங்கிருந்து சென்றுவிட்டான்.

 

வீரா சபையில் சென்று நின்றவன் “எனக்கு பொண்ணை பிடிச்சிருக்கு அவளுக்கும் என்னை பிடிச்சிருக்கு” என்று கூறி முடிக்க அங்கிருந்த அனைவரின் முகமும் சந்தோஷத்தில் மலர

ஒருத்தியின் முகம் மட்டும் இஞ்சி தின்ன குரங்கை போல் ஆனது.

 

அது வேறு யாரும் இல்லை நந்தினியின் முகம் தான்

‘இவரை எல்லாம் எப்படி தான் பிடிக்குதோ சரி நமக்கு என்ன’ என்று மனதில் நினைத்து கொண்டிருந்தாள்.

 

அடுத்தப்படியாக நகை என்ன செய்வது சீர் என்ன செய்வது என்று பேச “இந்த பாருங்க எனக்கு வரதட்சணை வாங்குறதுல எல்லாம் சுத்தமா விருப்பமே இல்லை” என்று வீரா கூற “அது இல்லை மாப்பிள்ளை கொடுக்க வேண்டியது என் கடமை” என்று சங்கர் கூற.

 

“உங்க பொண்ணை மட்டும் அனுப்பி வைக்குறதான அடுத்ததை பத்தி பேசலாம்” என்றான் வீரா வெட்டு ஒன்னு துண்டு ரெண்டாக அதன் பின் யாரும் வாயை திறக்கவில்லை.

 

“என்ன டி இவரு இப்படி கராறா பேசுவாரு” என்று திவ்யாவின் தங்கை மதுமிதா கேட்டாள்.

 

“ஆமாம்ல்ல” என்று திவ்யாவும் கூறினாள்.

 

மற்ற விஷயங்கள் அனைத்தையும் இருவீட்டாரும் பேசி முடித்து வரும் மாதம் 25 ஆம் தேதி நிச்சயம் அடுத்த மாதம் 3 ஆம் தேதி திருமணம் வைத்து கெள்ளலாம் என்று முடிவு செய்தனர்.

 

அனைவரும் பேசி முடிக்க

“இந்த பொண்ணு யாருங்க” என்று செல்வி சாவித்ரியிடம் கேட்டார்.

 

“என் பேத்திங்க” என்றார் சாவித்ரி 

“பேத்தியா” என்று அவர் கேட்க.

 

“உங்களுக்கு தெரியாதா அவங்க மகளோட பொண்ணு 

ஒரு ஆக்ஸிடென்ட்ல இறந்துட்டாங்க இவங்க தான் பார்த்துக்குறாங்க” என்றார் ராமலிங்கம்.

 

“எனக்கு தெரியாது ஏம்மா நீங்க தான் சின்ன வயசுல இருந்து வளர்த்திங்களா” என்று கேட்டார்

பாக்கியம்.

 

“ஆமாம் மா இவள் மூணு வயசா இருக்கும் போது அவங்க அம்மா இறந்துட்டா அன்னையிலருந்து இவளை நாங்க தான் பார்த்துக்குறோம்” என்றார் கண்கலங்க சாவித்திரி அவருக்கு தன் மகளின் நினைவு வந்துவிட்டது.

 

“பொண்ணு ரொம்ப லட்சணமா இருக்கா மா” என்றார் செல்வி

“என் மகள் மாதிரி மா அவள் கூட வயசுல அவ்வளோ அழகா இருப்பா அத்தனை பேரு நீ நான்னு போட்டி போட்டுட்டு பொண்ணு கேட்க வந்தாங்க என் பேத்தியை நல்லப்படியா கரை சேர்த்துட்டா போதும்” என்றார் கண்ணை துடைத்து கொண்டு சாவித்ரி.

 

‘இந்த அம்மாச்சிக்கு வேற வேலையே இல்லை எங்க போனாலும் அழுது என் மானத்தை வாங்கும்’ என்று மனதில் நினைத்து கொண்டாள் நந்தினி.

 

“விடுங்க மா எல்லாம் நல்லதே நடக்கும்” என்றார் செல்வி.

 

அனைவரும் பேசி முடித்து அங்கிருந்து கிளம்பும் சமயம் இறுதியாக சாவித்திரி திவ்யாவின் அருகில் வந்தார்.

 

“அம்மாடி நீ என் பேத்தியை மட்டும் நல்லபடியா பார்த்துக்கோ மா எனக்கு அது போதும் இன்னையில் இருந்து நீ தான் அவளுக்கு அக்கா” என்று அவளின் கைப்பிடித்து கூற

“பார்த்துக்குறேன் அத்தை” என்று கூறினாள் திவ்யா.

 

நந்தினி படிக்கட்டில் கீழே இறங்கி வரும் போது தடுக்கி விழ போக வீரா அவளின் இடையில் கைக்கொடுத்து பிடித்து கொண்டான்.

 

இருவர் விழிகளும் ஒருவரை ஒருவர் பார்த்து கொண்டிருக்க “பார்த்து நட டி” என்று வீரா அவளின் கைப்பிடித்து அழைத்து சென்றான்.

 

வீராவின் கண்களுக்கு தன் அக்கா மகள் இன்றும் சிறுபிள்ளை தான் ஆனால் அவர்களை பார்த்து கொண்டிருந்த மதுமிதா திவ்யாவுக்கு அது வேறு விதமாக தோன்றியது.

 

“அக்கா இவங்க ஜோடி கூட நல்லாருக்குல்ல” என்று மதுமிதா கூற திவ்யாவுக்கு கோபம் வந்துவிட்டது.

 

“என்ன முறைக்கிற எனக்கு என்னவோ இவங்க இரண்டு பேருக்குள்ள ஏதோ ஓடுதோன்னு தோனுது உரிமையா இடுப்புல கையை பிடிக்கிறார் உன் அவரு ஒரு வேளை அந்த பொண்ணு ஊனமா இருக்கறதால தான் உன்னை பொண்ணு கேட்டு வந்துருப்பாங்களோ ஒருவேளை ரெண்டு பேருக்கும் கனக்ஷன் எதுச்சும் இருக்குமோ” என்று ஒரு பெரிய குண்டை தூக்கி போட்டாள் மது.

 

திவ்யாவின் மனம் இப்போது நன்றாக குழம்ப ஆரம்பித்தது.

 

அனைத்தும் முடிந்து அறையின் உள்ளே திவ்யா வர செல்வி அவளிடம் வந்தவர்

 “ஏன் டி திவ்யா அந்த நந்தினி வேற அழகா இருக்கா நீ அந்த வீட்டுக்கு போன உடனே முதல்ல இவளை பத்தி விட்டுரு இல்லன்னா உன் புருஷன் சின்ன வீடா வச்சிக்க போறாரு” என்று கூறிவிட்டு அங்கிருந்து கிளம்பினார்.

 

திவ்யாவின் மனம் இப்போது குழம்பிய குட்டையை போல் ஆனது.

 

 

தொடரும்…

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

3 thoughts on “மன்னவன் பார்வையிலே 5”

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Scroll to Top