1.என் மோகினி நீ
“என்ன சுமி கிளம்பிட்ட? இன்னும் நேரமிருக்கே பா?” வால் கிளாக்கை எட்டி ஒரு பார்வை பார்த்து பக்கத்து செக்சன் நடுவயது பெண்மணி சல்மா ஷேக் ஸ்நேகமாய் கேட்க, லேசா வெட்கம் வந்தது சுமேராவுக்கு..
அச்சோ! இது ஜஸ்ட் பெண் பார்க்கும் படலம் தானே.. சொல்லிட்டா தொடர்ந்து விசாரணை வருமே! கொஞ்சமே சுமி யோசித்தாலும் நாகரீகம் கருதி சல்மாவிடம் விஷயம் சொல்ல..
“வாழ்த்துக்கள்மா.. தங்கச்சிலை போல இருக்க உன்னை வேணாம் சொல்ல யாருக்கு மனம் வரும்? அடுத்து கல்யாண பத்திரிகையோடு தான் வருவே பார்த்துக்க.. என் வாய் பலிக்கும்” சல்மா நிறைந்த மனதோடு கையசைத்து விட்டு செல்ல..
லேசா கர்வ புன்னகை சுமிக்கு.. அதே மனநிலையோடு அடுத்த டெஸ்க் பார்க்க.. வில்லங்க பார்வையோடு நாகா@ நாகேந்திர பிரசாத். ஆந்திர சுந்தரன்.
கொக்கென்று நினைத்தாயோ கொங்கணவா?! போடா! டேய்!அலட்சியம் செய்து வாசலை நோக்கி நகர்ந்துவிட்டாள் சுமி.
அவனுக்கும் இவளுக்கு நெடுநாள் ஒரு வாய்க்கா தகராறு உண்டு.
கிட்டத்தட்ட “யாரடி நீ மோகினி” தனுஷ்-நயன் போல முதன் முதல் அவன் டீம் லீடர் இவள். கொஞ்சநாள் பணிவா மரியாதை கொடுத்தவன். கார்ப்பரேட் கல்ச்சர் மாத்திச்சோ? வேற என்னத்த கண்டானோ? சுமி! சுமி! சுமி! நின்னா, நடந்தா, பேசினா,பேரை கொலையா கொன்னான். ரெண்டு வருசமாகிருச்சு.. அவன் படிநிலைகள் மாறினாலும் இப்படி சுமி பின்னோடு நாகா அலைய ஆரம்பித்தது தொடர்ந்தது .. ம்ம்ம்.
ஒருவேளை எல்லாம் சரியாக இருந்திருந்தால் நாகாவின் இந்த நேர்மையான தேடலுக்கு பதில் கொடுத்திருப்பாள். வீட்டிலும் இவள் சொன்னால் ஆராய்ச்சி பண்ணியாவது சரி என்பார்கள். அறிவான படித்த பெற்றோர்கள் தான். இங்கு இருவருக்குமான இடைஞ்சல் வயது வித்தியாசம் மட்டுமே. நாகா இவளையும் விட இரண்டு வருட இளையவன்.
படிப்பில் அவன் ME. இவள் BE தான். இங்கும் அவன் டாப் தான். அவன் குடும்பமும் இவள் கேள்விப்பட்டவரை ஓகே தான். வயது ஒன்றே கோளாறு. சோ இவள் அவன் கோரிக்கையை ஈவு இரக்கமின்றி நிராகரித்தாள். சமூகம் ஏற்காது. கேலி செய்யும்! உத்து பார்க்கும்! குறை கூறும்! எதற்கு இந்த இம்சை.
நாகாவை ஏறெடுத்து பார்த்தாலும் ஈர்ப்பு வரலாம் என்பதால் கண் பார்த்து பேசும் வழக்கமே கிடையாது. நெற்றி, புருவம், தலைமுடி என்று எங்கெங்கோ பார்த்து உரையாடல்கள் நடத்துவாள். இவள் எத்தனை கேடயங்கள் கையாண்டாலும் தன் பேச்சினால் அவன் தரும் காதல் தாக்குதல்கள் வெகு ரசனையானது என்றாலும் நாகாவின் முன் உம் முகம் வைத்து அதை மறைத்தாள்.
காதலே இல்லையென்றாலும் காதலிக்கப்படுவதும் இனிமையான உணர்வே…
நான் இவ்ளோ முஸ்தீபு கொடுக்க காரணம் @ உண்மை உள்ளுக்குள் நாகாவை பிடிக்கும் ஊருக்காய் ஏற்க முடியாது வேண்டாம் வேண்டாம் பிடிவாதம் பிடிக்கிறேன்.
பின்னோடு காலடி சத்தம். அவன் தான்.
“சுமி!”
வேகமாய் நடந்தாள் சுமி. இவளுக்கு இணையாய் அவனும் நடந்தான்.
அப்போ உண்மையாலுமே என் மேலே உனக்கு பீலிங்ஸ் இல்லையா சுமி?
அவன் வார்த்தைகளின் வலி சுமிக்கும் வலித்தாலும்..
“இல்ல! இல்ல! என்பதை எத்தனை முறை எத்தனை விதமாய் சொன்னேன்!! உனக்கு புரியலையா?”
“இப்பத்தான் உரைக்குது சுமி..” ரகு குரல் தழும்பியது.
சுமி பெருமூச்சுவிட்டாள். என் சக்திக்கு மீறியது அவன் காதல்.
திருமணத்தில் ரிஸ்க் எடுத்து அவசரத்தில் முடிவெடுத்து ஆற அமர அழும் ஜாதி நானும் இல்ல. நான் பக்கா சுயநலவாதி.
எங்கிருந்தாலும் சேப்யா சொகுசா மரியாதையா வாழணும். அவ்ளோதான்.
உன் மனசு என்ன கல்லா?! தன்னையே சுமி கேட்டுக்கொண்டாள்.
ஆமாம்! பீலிங்ஸ் நல்லது தான். சுயத்தை அழித்து சுகம் பெறுவது. கண்ணை விற்று ஓவியம் வாங்குவதை போன்றது. என் குடும்ப இஷ்டபடி போனால் ஆயுள் முழுக்க வசந்தம். ஈஸி லைப்
“நாளைக்கு ஒருநாள் எனக்காய் தருவாயா சுமி.. அப்புறம் உன்னை தொல்லை பண்ண மாட்டேன்..”
பறவை போல நாலா பக்கமும் கோலி விழிகளை உருட்டி யோசித்து.. இந்த காதல் கைதிக்கு கருணை காட்டலாம் முடிவு கட்டியவள்,
“வீகெண்ட் பார்ட்டி இருக்கே.. எப்படி?”
“ஸ்கிப் பண்ணிரலாம் சுமி.. “
“ம்ம்ம். உனக்கு ஒரு நாள்லாம் அதிகம். ஒன்லி டூ ஹவர்ஸ் தான் .”
“ஓகே! தாங்க்யூ சுமி”
“என்னை முழுக்க விடுறனும்! இனி லவ் டார்ச்சர் கூடவே கூடாது டீலா?”
“ம்ம்ம்.. வீட்டில் பார்த்திருக்கும் மாப்பிள்ளை உனக்கு பிடிச்சவரா சுமி?”
“அதெல்லாம் ஒன்னுமில்ல.. தெரிஞ்சவரு அவ்ளோதான். ஆனா பெஸ்ட் சாய்ஸ். பரம்பரை சொத்து இருக்கு, மெடிசன் படிச்சிருக்கார் நல்ல வருமானம், எல்லாத்துக்கும் மேலே ஒரே இனம்.. “
“நானும் அதுமாறி இருந்தா ஓகே சொல்லி இருப்ப இல்ல சுமி..”
ஹுக்கும்! திரும்ப அங்கேயே வந்து நில்லு! மனதுக்குள் சலித்தாள் சுமேரா..
இன்னேரம் அவளுக்கு தோணுச்சு.. காவியக் காதலெல்லாம் இக்கலியுகத்தில் செல்லவே செல்லாது. காதலும் கசடும் கலந்து இருக்கத்தான் செய்யும். அதெல்லாம் தள்ளி மிச்ச மீதாரங்களை அள்ளி இதான் “மெய்யன்பு” நம்பிக்கொண்டு போகவேண்டியது இன்றைய நடைமுறை உண்மை. கவிதைகள் கதைகள் சொல்லும் தூய அன்புகள் எல்லாம் மயக்க பேச்சுக்கு மட்டுமே!
சுமியிடம் பதிலில்லாது போகவே,
“பெஸ்ட் விஷ்ஷஸ் சுமி..” காற்றோடு பேசி வேகமாய் திரும்பி போய்ட்டான் ஆசைகொண்ட இளம் காதலன் நாகா.
அதுக்கும் சுமி
மனசுக்குள் பள்ளம் விழுந்தது.
உனக்கு எதிரி வெளியிலில்லை. உன் மனமே உன் விஷம். சபித்தாள்
சுமியின் மனமெனும் விசக்கனியில் காதல் விதை உள்ளதா?!
நாகாவின் மென்மை அவளின் வன்மையை வெல்லுமா?!
👌👌👌👌👌👌👌👌👌