ATM Tamil Romantic Novels

என் மோகினி நீ

2 மோகினி
 
உலகமெல்லாம் ஆண் என்பவனுக்கு என்ன இலக்கணம் உள்ளதோ! தெரியாது. தமிழன் அடையாளம் ஈரத்துடன் கூடிய வீரம். இளவட்டக்கல் தூக்கியும் மஞ்சுவிரட்டில் சீறி பாய்ந்து காளைகளோடு திமிறித்திரிவது ஆண்மைக்கு அழகு.
 
இந்த ஆந்திர கிறுக்கன் இம்புட்டு சாப்டா இருப்பது தமிழச்சிக்கு ஆகல. என்ன இது?  அதிருப்தி வந்தது. மசாலா தெலுங்கு படமெல்லாம் அப்போ சும்மாவா?! கடப்பா கல்குவாரி, பட்டாக்கத்தி, குடம் குடமா ரத்தம், இரும்பு ராடு எல்லாம் இல்லையா?!!
 
நாகாவின் மென்மைக்கு அவன்  ஊரே சுமியிடம் அசிங்கப்பட்டது ஒருவித அறியாமையே!
 
கை பட்டா குத்தம் கால் பட்டா குத்தம் என்பதாய் பின்னோடு வந்ததுக்கும் “பொறுக்கி” என வசை! விட்டு விலகியதுக்கும் “கோழை” என்பதாய் வசை பாடினாள் சுமேரா.
 
நவீன காலத்துக்கு ஈடா பேரு மாடர்னா இருந்தாலும் உள்ளுக்குள் ஆதி தமிழச்சி இருக்கத்தான் செய்தாள் சுமியிடம்.. 
 
வீட்டில் பெண் பார்க்கும் படலமும் கனஜோராய் அரங்கேறியது.
 
பேபி பிங்க் பட்டு சேலையில், கூந்தலில் சரம் சரமாய் மல்லிகைப்பூ வைத்து அளவான மேக்கப் என்று சுமி வர.. டாக்டர் மாப்பிள்ளை சந்தோஷ் டக் அவுட். ஏற்கனவே மாடர்ன் ட்ரெஸ்ஸில் சுமியை பார்த்திருந்தாலும்  பாரம்பரிய உடையழகில் மயங்கிப் போனான். 
 
சந்தோஷ் பெற்றோரும் உடனடியாக சம்மதம்  தந்துவிட, சல்மா சொன்ன மாதிரி கல்யாண நாள் குறிப்பது வரை பேச்சுவார்த்தை தொடந்தது.
 
இவளை உள்ளே அனுப்பிவிட்டு மூணு நாள் ஆடம்பர திருமணம், ரெண்டாயிரம் பேர் விருந்தினர், தங்கம், வெள்ளி, கார், பிளாட் என்று வரதட்சணை லிஸ்ட் தரப்பட.. சுமியின் பெற்றோரான சிவராமன்- ஜோதி மலர் தம்பதியினர் “எங்க பேமிலில கேட்டுட்டு சொல்றோம்ங்க” என்று நயமாய் சொல்லி விடை கொடுத்தனர்.
 
உள்ளறையினின்று வரதட்சணை லிஸ்ட் கேட்ட சுமிக்கு முகம் சுண்டிப் போனது. ஒரு பொண்ணு சேப் லைப்க்குள் போகணும்னா இவ்ளோ விலை தரணுமா?! மலைத்தாள்.
 
பெற்றோர் கொடுத்த பதில் ஸ்மார்ட் என்றே தோணுச்சு..
 
“பாப்பா! சந்தோஷ்ய பிடிச்சிருக்கா? ஓகே தானா? முடிச்சிடலாமா?” சிவராமன் மகள் முகத்தை ஆராய்ச்சியாய் பார்த்து கேட்க..
 
“நானும் யோசிக்கணும்பா” சொல்ல நினைத்தாள். 
 
இவ்ளோ வரதட்சணை கொடுக்கணுமாப்பா?!  கலக்கத்துடன் சுமி கேட்க..
 
“அது சேவிங்ஸ் இருக்கு தரலாம்.  வேலைய விடனும் சொன்னாங்க அதான் யோசிச்சு பதில் சொல்றோம் அனுப்பினோம். என்ன பண்ணலாம் மீரா?”
 
“அதான் என் ஐடன்டிடி பா.. வேலையை விட வாய்ப்பேயில்லை..” 
 
“அத நம் பக்கமிருந்து ரிக்வஸ்ட்யா வைப்போம்.. சந்தோஷ் வீட்டில் என்ன சொல்றாங்கன்னு கேட்டுப்போம்” மலர் இடையிட..
 
சுமேரா முகம் வெளிறி போனது. நான் வேலைக்கு போவதுக்கு எதுக்கு அவங்ககிட்ட கேட்கணும்?! எரிச்சலில் முகம் சுளித்தாள்.
 
வீட்டின் சூழ்நிலை சூடாவதை உணர்ந்த ராம்..
 
“பேச்சை விடுங்க! கூட்டத்தை கலைங்க.. இந்த வாரம் ஆறப் போடுவோம்.. பிறகு பார்போம்” முடித்துவிட, அக்குடும்பம் அமைதியானது.
 
******************
சுமிக்குத்தான் அன்றிரவு தூக்கமில்லை.. முதன்முதல் அரேஞ் மேரேஜ் குறித்து அடிவயிற்றில் திகில் கவ்வியது. விடிகாலையில் அசந்து தூங்கியபொழுதும் கூட கெட்டக்கனவுகள் ஓடவிட்டது பரிதாபம். 
 
பாசத்தில் விழுந்து மற்றவர்கள் கையில் தன் வாழ்க்கையை கொடுத்து ஏமார்ந்தது நைன்ட்டி கிட்கள் என்றால்
கம்ப்யூட்டர் அறிவுக்கும் வாழ்வியல் அறியாமைக்கும் நடுவில் சிக்கி தவித்து தன்னையே நம்பி தன்னையே ஏமாற்றிக்கொள்ளும் டூகே கிட் லிஸ்டில் சுமி இருந்தாள்.
 
ஒவ்வொருவரின் தனித்தனி பயணத்தின் பாதைகள் புதிர்தான். பயணியின் மனநிலையால் அதன் அனுபவங்கள் மாறுபடும்.
 
*********
 
மறுநாள் தூக்கமின்மையால் செவ்வரிகளோடு கூடிய விழிகளோடு,லைட் கலர் காட்டன் சுடி போட்டு பார்மலாய் நாகா லொகேஷன் போட்டுவிட்ட உயர்தர உணவகத்துக்கு போனாள் சுமி. வாசலிலேயே எதிர்கொண்டு அழைத்தும் போனான் சுந்தரன்.
 
சுமி மனம் முழுக்க நாகாவின் கண்ணாமூச்சி விளையாட்டை முடித்துவிடணும் என்ற எண்ணமே நிரம்பியிருந்தது. 
 
 சுமிக்கு என்ன பிடிக்கும் என்று கேட்டு கேட்டு உணவு வாங்கி தர, அலைப்புறுதலிலிருந்த பெண்மனம்  அமைதியானது.. 
 
ஓரளவு அவர்கள் உண்டு முடித்து  பேச தோதான நேரமும் கிடைக்க ..
 
சுமி!
 
ம்ம்ம்
 
நேற்று என்னாச்சு?
 
அதுபாட்டுக்கு போயிட்டுருக்கு..
 
ஏன் இப்டி யாருக்கோ போல சொல்ற?
 
“அது அப்படித்தான்.. விடு…”
 
சுமி ஹாண்ட் பேகிலிருந்து செல்லை எடுத்து பார்த்து,
 
“ஒரு மணிநேரம் ஆகிருச்சு நாகா.. வேற பிளான் இருக்கா?.” 
 
“இருக்கு! பேசணும் சுமி..”
எப்பவும்  மை போல லேசு புன்னகை பூசி அலையும் நாகாவின் கண்களில் இன்று தெரிந்த தீவிரத்தன்மையில் சுமி அரண்டாள்.
 
என்னை எதுக்கு ஒதுக்குற?  என்ன குறை கண்ட?
 
வயசு தான் ! சுமிக்கு பதில் சொல்ல முடில.. நாக்கின் அடியில் சொற்களிலிருந்தாலும் முகத்தில் அடிக்கும்படி பதில் சொன்னால் இதயம் வலிக்குமோ? லேசா அஞ்சினாள்.
 
மௌனம்!
 
“உன்னை பார்த்த நொடி பிடிச்சுதுன்னு பொய் சொல்ல மாட்டேன் சுமி.. பார்க்க பார்க்க பிடிச்சது. எனக்கு லவ்ன்னா நீ மட்டுமே! பெண் என்றாலும் நீ மட்டும் தான்! ” உடைந்த குரலில் கண்ணோடு கண் பார்த்து பேச சங்கடப்பட்டு போனாள் சுமேரா..
 
காதலியின் இழுத்து மூடப்பட்டசெப்பு இதழ்கள் அவள் மனதையும் சொல்லாமல் சொல்லிவிட, இன்னும் உணர்ச்சியின் பிடியில் வீழ்ந்தான் நாகேந்திரபிரசாத்.
 
பொட்டு பொடிசெல்லாம் கைகோர்த்து, பக்கம் பக்கம் ஒட்டி உரசி, கிடைக்கும் கேப்பிலெல்லாம் “பச்சக்” “பச்சக்” முத்தம் கொடுத்துக்கொண்டு அலையும் யுகத்தில் “ஆம்” “இல்லை” பதில் வாங்கவே வருஷகணக்கில் காத்து கிடப்பது என் இளமைக்கு அவமானம். நான் இவ கண்ணுக்கு ஆம்பளையா தெரிலையா?! இவ யாரையும் லவ் பண்ண மாதிரியும் இல்ல. 
 
கிறுக்கி உம்முன்னு
அலைஞ்சே சாவடிக்கிறா! சுமி கிடைக்க வேண்டி காதல் வடம் இழுக்கும்பொழுதெல்லாம் அவள் மறுக்க, இவன் இன்னும் மருகி அவளிடம் முழுக்க சாய்ந்து போனது காதலின் உச்சம். 
 
நாகாவுக்கு கோபம் வரும் தான். தன்னையும் விட சக்தி புத்தியில் குறைவானவர்களிடம் மீது அவன் காட்டுவதில்லை.. பாசமான கூட்டு குடும்பம் அன்பை கற்று தந்திருக்க,  படிப்பு பண்பை ஊட்டியிருக்க நற்குடி ஆணாயிருந்தான். விருப்பம் கொண்டவள் மீது கடுமை காட்ட அஞ்சி.. பிச்சைக்காரன் போல மண்டியிட்டு கெஞ்சி காதலை வேண்டி நின்றான். இதுவும் பேராண்மையே!
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

2 thoughts on “என் மோகினி நீ”

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Scroll to Top