சண்டியரே 10
காலையில் அவள் விழித்த போது அவனில்லை மெத்தையில்.. அவள் மட்டும் சயனித்திருந்தாள்
அவன் சட்டையை மட்டுமே அணிந்து..!
வெட்கம் ஒருபக்கம்.. அதை தான்டி கண்களில் ஓரம் கண்ணீர் ஓர் துளி.. வைரமாய் ஜொலிக்க.. அடுத்த துளி கரித்துக் கொண்டு வர, அது கன்னம் தாண்டும் முன் “என்ன மகாராணிக்கு இன்னும் தூக்கம் கலையலையா?” என்று கேட்டவன் அவளை பின்பக்கம் இருந்து அணைந்திருந்தான்.
கண்ணீரை உள்ளிழுத்துக் கொண்டவள், “நேத்து ராவெல்லாம் பொட்டு நேரம் கண்ணை தூங்க விடாம பண்ணிட்டு, இப்ப வந்து கேள்விய பாரு.. போ போ.. மாமா.. நான் இப்ப எந்திரிக்க மாட்டேன். லேட்டா தான் எழுந்திருருப்பேன்” என்றாள் வேண்டுமென்று..
“அப்படி சொல்லடி.. என் அக்கா பெத்த ராசாத்தி..!” என்று அவள் பின் கழுத்தில் தன் முகத்தை வைத்து குறுகுறுப்பு ஊட்டியவன் “எங்கே நீ குடும்ப குத்து விளக்கா ஐயைய்யா.. இவ்வளவு நேரம் ஆயிடுச்சா??? எழுந்து குளிக்கணுமே.. சமைக்கணுமே.. காபி போடணுமே.. விளக்கேத்தணுமேனு.. ஓடிப் போயிடுவேன்னு நினைச்சேன். இது இது தேன் மாமனுக்கு வசதி” என்றவன் அவள் போர்த்திருந்த போருக்குள் தானும் நுழைந்து கொண்டான்.
மீண்டும் அவளுடன் கூடி முடித்து போர்வையை விட்டு அவன் வெளியே வரும் போது, அவள் அணிந்திருந்த அவனின் சட்டை இப்பொழுது அவன் அணிந்திருக்க.. கண்ணடித்தபடியே குளியலறைக்கு புகுந்து கொண்டான்.
“இந்த மாமா ரொம்ப மோசம் நேரம் காலமே தெரிய மாட்டேங்குது..” என்றவள் போர்வையை போர்த்திக் கொண்டு அவனுக்காக காத்திருக்க…
குளித்து வந்தவன் கொஞ்சம் கூட கூச்சப்படாமல் அவள் முன்னே உடைகளை மாற்ற, இவள் தான் வெட்கபப்ட்டு கழுத்து வரைக்கும் இருந்த போர்வையை முகத்துக்கும் சேர்த்து மூடிக்கொண்டாள்.
போர்வைக்குள் ஒளிந்தவளை கண்டு வாய்விட்டு சிரித்தான், “இந்த மாதிரி நான் கண்ணை மூடிப்பேனு எல்லாம் நீ என்கிட்ட எதிர்பார்க்காதே..! சரியா?” என்றவன்,
“நான் இப்போ கீழே போயிட்டு பத்து நிமிஷத்துல மேல வந்துருவேன். வரும்போது நீ எப்படி இருந்தாலும் எனக்கு ஓகே தான்..” என்று விசிலடித்துக் கொண்டு சென்றான்.
“ஐயோ..!! மீண்டும் மீண்டுமா???” என்றவள் அவன் கீழே செல்லும் முன்னே பாய்ந்தெழுந்து போர்வையோடு குளியலறைக்குள் நுழைந்து கொண்டாள்.
அதன் பின் குளித்து புடவை அணிந்து அவள் தயாராயிருக்க அழைக்க வந்தவன், அவளோடு இணைந்து சென்று பூஜை அறையில் சாமி கும்பிட்டு அவர்கள் அன்னை படத்திற்கு முன் ஆசிர்வாதம் பெற்றார்கள்.
“குட்டிமா எங்கே?” என்று மகளை தூக்கிக் கொண்டான்.
நேற்று இவள் மருத்துவமனைக்கு வருகிறேன் என்று சொன்னதற்கு யாரும் வீட்டில் அனுமதிக்கவில்லை. “முதல் புது பொண்ணா வந்திருக்க.. இப்ப நீ பார்க்க வேண்டாம். பிள்ளைக்கு ஒன்னும் பயமில்லை சொல்லிட்டாங்க.. வீட்டுக்கு கூட்டிட்டு வந்தவுடன் பாத்துக்கலாம். அதுக்கப்புறம் நீதான பாத்துக்க போற..” என்று விஜயராகவன் கூறி விட,
தாத்தா பேச்சை தட்டாமல் இருந்தவள், இப்பொழுதுதான் முதன்முதல் பார்க்கிறாள் தன் மற்றொரு மாமனின் மகளை. மெல்ல அவளை நோக்கி வந்து “குட்டிமா.. வா..” என்று இவளும் கூறியபடி கை நீட்ட.. தூக்கத்தில் அசதியில் இருந்த குட்டியோ ஒற்றைக்கண்ணை மட்டும் விழித்து அவளைப் பார்த்து வர முடியாது என்பது போல தந்தையின் நெஞ்சிலே தஞ்சம் கொண்டாள்.
“பாரேன்.. என் மாமன் மகளுக்கு இருக்கிற கொழுப்பை.. அப்படியே அவ அப்பனாட்டம்..” என்று வாயைப் பிளந்தவள் மெல்ல அவளை தூக்கி தட்டிக் கொடுக்க முதலில் முரண்டு பிடித்தாலும் மயிலின் மென்மையான ஸ்பரிசத்தில் அவள் தேகத்தில் தன் அன்னையின் வாசத்தை கண்டவள் இப்பொழுது அவள் கழுத்தை கட்டிக்கொண்டு தூங்க ஆரம்பித்தாள்.
அவள் நன்றாக தூங்கும் வரை இங்கே அங்கே நடந்தது என்று தட்டிக் கொடுத்தாள்.
“எங்க மாமா படுக்க வைக்க?” என்று ஆதிரனை பார்த்து கேட்டிள். தானாக மகளின் பொறுப்பை எடுத்துக் கொண்ட மனைவியை நேசத்தோடு பார்த்தவன் சற்று தள்ளி இருந்தது தூலியை கண்களால் காட்டி “அதுல படுக்க வை தங்கம்” என்றான்.
பன்னிரண்டாவது பிறகு மூன்று வருடம் மயிலு ஊரை சுற்றிக் கொண்டிருந்தவள் தானே அதனால் அடுத்த வீட்டு பிள்ளைகளை தூக்கி வளர்த்து என்று அனுபவம் தான் மயிலுக்கு. அதனால் வாகாக ராகவியை படுக்க வைத்து விட்டு ஆதிரனிடம் வந்து நிற்க..
“ஓரளவு சொந்தங்களா நைட்டே கிளம்பிட்டாங்க.. இப்ப இருக்கிற ரெண்டு மூணு பேரும் மதியம் உண்டு கிளம்பிடுவாங்க தங்கம். சமையல் வேலைய கலாக்கா பாத்துக்குவாங்க.. கூட்டி பெருக்கென பணியாட்கள் வருவாங்க.. அவங்கள பக்கத்துல நின்னு நீ தான் வேலை வாங்கணும். சரியா? அதோட கூட கொல்லையில காய்கறி தோட்டம் கொஞ்சமா இருக்கு. முடிஞ்சா அதுக்கு நீ தண்ணி பாய்ச்சு.. இல்லையா சாயங்காலமா பால் கறக்க வர தையானும் அவன் மனைவியும் அதை பாத்துக்குவாங்க.. நீ குட்டிமாவ கவனிச்சிட்டே உன்னோட கிராஃப்ட் வேலையை இங்கே பார்க்கலாம்” என்றான்.
பெரிதாக உனக்கு வேலை இல்லை..! வீட்டை நிர்வகிக்க வேண்டும்.. மகளை பார்த்துக் கொள்ள வேண்டும் உன் வேலையை பார்க்க வேண்டும் என்று கணவன் கூறியதை அசைபோட்டு படி தலையாட்டிக் கொண்டாள்.
“குரு காலையிலிருந்து பாப்பா ஒண்ணுமே சாப்பிடல யா.. நேத்து நைட்டு மருந்து வீரியத்தில் தூங்கிடுச்சு.. காலைல இருந்து சிணுங்கி கிட்டே தான் இருந்தா. பால் கொடுத்ததும் கொஞ்சம் குடிச்சிட்டு கக்கிட்டா.. கொஞ்சம் முழிச்ச உடனே சத்துமாவு தண்ணியா காய்ச்சி கலாவை விட்டு ஊட்டி விட சொல்லு யா.. நான் செத்த சாய்ஞ்சு எந்திரிக்கிறேன்” என்றார் விஜயராகவன்.
நேற்று இருந்து அவருக்கும் பல அதிர்ச்சிகள்.! மனவலிகள்.! ரணங்கள்..! ஒரு வயதிற்கு மேல் அதையெல்லாம் கடக்க முடியவில்லை அவரால். வயோதிகம் கூடி விட்டது..! அதிலும் இவரை பாராமல் சென்ற பிள்ளை ஒரு பக்கம்.. பாதியிலேயே பிரிந்து சென்ற மனைவி ஒரு பக்கம்.. மகளுக்கு வாய்த்த புண்ணியவான் ஒரு பக்கம் என்று நாலா விதமாய் அவரை உறவுகள் இருந்தும் இல்லாமலும் சுழற்றி அடிக்க தடுமாறி போனவருக்கு தூணாய் இப்பொழுது ஆதிரனும் அவர் பேத்தி தங்கமயிலும் தான்.
“தாத்தா ஒரு நிமிஷம்..” என்றதும் தன்னறையை நோக்கி திரும்பியவர் “என்ன தங்கமா?” என்று கேட்டார் பேத்தியை பார்த்து…
“அது மாமா குட்டிமாங்குறாரு நீங்க பாப்பாங்குறிங்க.. அவளுக்கு இன்னும் பேரு வைக்கலையா என்ன? இல்லைனா நம்ம சொந்தத்தை எல்லாம் கூட்டி சின்னதா பேர் வைக்கிற பங்க்ஷன் வைப்போமா தாத்தா?” என்று கேட்டாள்.
“பாரா ஒரே நாளில் பொறுப்பான என் பொண்டாட்டிய..” என்று கிண்டல் அடித்த ஆதிரன்
“அவ பேரு ராகவி” என்றான்.
“ஓஹ்… தாத்தா பேரா??? சூப்பர்..!” என்று குதுகலித்தாள். “ஆனா.. நீங்க வேணா உங்க அப்பா பேரு சொல்லி கூப்பிடலாம். என்னால எல்லாம் மரியாதையை குறைவா என் தாத்தா பேரை சொல்லி கூப்பிட முடியாது. அதனால அவளுக்கு நான் வேற பேரு வைக்கவா?” என்று கேட்டாள் தங்கமயில்.
விஜயராகவன் மகனை தான் பார்த்தார். “ராகவிக்கு நான் அப்பானா.. நீ தான் அம்மா..! உரிமையை நீ முழுசா எடுத்துக்கறனா எனக்கு அதில் சந்தோஷம்தான்” என்றான்.
“தங்கம் சொல்றதிலும் ஒரு நியாயம் இருக்கு பா.. நம்ம சொந்த பந்தங்களுக்கு ராகவி யாருன்னு முறையா அறிமுகப்படுத்தி வைக்கல.. எங்க கல்யாணத்தைப்போ எல்லாருக்கும் நான் சொல்லலாம்னு நினைச்சேன் மதிய விருந்து போல.. அது உங்க மாப்பிள்ளை புண்ணியத்தால நடக்காம போச்சு.. அதனால நாம ஏன் ஒரு விருந்து வைத்து செய்யக்கூடாது?” என்று கேட்டான்.
“கறி விருந்து எல்லாம் நம்ம பக்கம் பொண்ணு பக்கத்துலதானடா வைப்பாங்க.. இப்ப இருக்கிற நிலைமைல இவன் அப்பன் உனக்கு கறி விருந்தெல்லாம் வைக்க மாட்டான்.. வேற விருந்து தான் வைப்பான்” என்று விஜயராகவன் நக்கலாக கூறி சிரிக்க.. “தாத்தா..!” என்று செல்லமாக தாத்தாவை முறைத்தாள் பெரிய பேத்தி.
“சரிடா தங்கமா.. கோச்சுக்காத கோச்சுக்காத சும்மா விளையாட்டுக்கு தான் சொன்னேன்” என்று பேத்தியை சமாதானப்படுத்தியவர் “வேணா கறி விருந்துமே நாம் பண்ணலாம். அப்போ நம்ம பேத்திய எல்லாருக்கும் அறிமுகப்படுத்தி வைக்கலாம்” என்றார்.
“ஆனா அதுக்கு முன்னாடி உங்க அக்கா கிட்ட ஒரு வார்த்தை கேட்டுக்க.. என்னதான் உனக்கு அக்கா பொண்ணு கொடுத்தாலும் சம்பந்தி முறை முக்கியம். நம்மளாவே விருந்து வைச்சுக்கோம்னா அவளுக்கு மனசு சங்கடமா இருக்கும் இல்ல.. அதனால என்ன செஞ்சாலும் ஒரு வார்த்தை கேட்டுட்டு செய்..” என்றார்.
அன்றே அக்காவிடம் கேட்க “என்ன டா தம்பி.. இதுக்கு கூட நான் அருகதை இல்லாதவளா ஆயிட்டேனா?” என்று அவர் கண்ணீர் வடிக்க..
“அக்கா அழுவாத.. உன் புருஷன் சம்மதித்து வச்சா எனக்கு பிரச்சனையே கிடையாது. ஆனா அந்த ஆளு எகனைக்கு மொகனையா ஏதாவது செஞ்சா இந்த முறை என் வாய் பேசாது..! ஆமா சொல்லி விட்டேன்..” என்றதும் கமலாம்பைக்கு என்ன செய்வது என்று புரியவில்லை.
ஆனாலும் புது மணமக்களை அதிலும் ஒரே பெண்ணை இப்படி விட முடியாது அல்லவா? “சரி ஆதிரா நம்ம வீட்டுக்கு பக்கத்துல பொதுவா ஒரு திடல் இருக்கு இல்லையா அந்த இடத்தில் வச்சுக்கலாம். பணத்தை பொதுவா ரெண்டு பேருமே போடலாம்” என்றதும்,
“அக்கா ஏன் உனக்காக நான் செய்ய மாட்டேனா?” என்றான் தம்பி பாசத்தில்.
“தம்பி முறையில நீ செய்யறது வேற இது சம்பந்தி விருந்து டா.. என் பொண்ணுக்குன்னு செய்றது என் தம்பிக்கு.. என் மாப்பிள்ளைக்குனு நாங்க செய்யுற முதல் விருந்து.. அதனால் நான்தான் அதை எந்த குறையும் வைக்காம செய்ய விரும்புறேன்” என்றவர் தம்பியோடு கலந்து பேசி விருந்து ஏற்பாடு செய்தார்.
கல்யாணம்தான் அவசரக்கதியில் ஆன மாதிரி எல்லாம் நடந்து விட சின்ன பேத்திக்கு நடக்கும் முதல் விழா சற்று அமர்கையாக நிதானமாக எல்லாத்தையும் நடத்தலாம் என்று ஒரு வாரம் இடைவெளி விட சொன்னார் விஜயராகவன்.
அது போலவே என்னென்ன தேவை என்னென்ன செய்ய வேண்டும் என்று ராகவனை அமர வைத்து இருபுறமும் ஆதிரனும் தங்கமயிலும் அமர்ந்து லிஸ்ட் போட இப்படி குடும்பமாய் அமர்ந்து ஒரு பெண்ணின் பேச்சு குரல் கலகலப்பை கேட்டு பல வருடங்கள் ஆகி விட்டதை நினைத்து வருந்தியவர் மெல்ல பேத்தியின் தலையை பாசத்தோடு வருடினார்..
“பா போதும் போதும் உங்க சென்டிமென்ட்.. எனக்கு வேலை இருக்கு.. சீக்கிரம் லிஸ்ட் போட்டு முடிங்க” என்று வேண்டுமென்று ஆதிரன் பேச.. அப்போது பார்த்து உறங்கிக் கொண்டிருந்த ராகவி சினுங்க “இதோ வந்துட்டேன்டா..” என்று ஓடி மகளை தூக்கி வந்தவனை இப்பொழுது ஒற்றை புருவத்தை உயர்த்தி “நீங்க என்ன ஆபீசர் இப்ப பண்றீங்க?” என்று கேட்டு வாரினாள் தங்கமயில்.
இவ்வாறாக விருந்துக்காக அனைத்தும் ஒருபுறம் தயாராகிக் கொண்டிருக்க.. கல்யாணம் ஆன இளம் கணவனாய் அத்தனை சேட்டைகளையும் செய்தான் ஆதிரன்.
அன்று கலாக்கா தன் உறவு முறையில் ஒரு திருமணம் என்று காலையில் சென்று விட்டார். விஜயராகவனும் காலை மில்லுக்கு சென்று விட தங்கமயில் உணவு சமைத்து கொண்டிருந்தாள்.
அப்படி எல்லாம் பெரிதாக சமைக்க தெரியாது எல்லாம் youtube-ல் உதவி தான். எப்பொழுதும் மாவு அரைத்து ஃப்ரிட்ஜில் வைத்திருப்பார்.
“இட்லி தோசை என்ன பண்ணலாம்?” என்று யோசித்தவள் “சப்பாத்தி செய்யலாமா?” என்று அவளுக்கு தெரிந்த வகையில் குருமா என்று ஒன்றை வைத்துவிட்டு சப்பாத்தி மாவை பிசைந்து கொண்டிருக்க அவளுடைய மெல்லிடையை உரசிக்கொண்டு இன்னும் இரண்டு கைகளும் அந்த சப்பாத்தி மாவில் இணைந்து கொள்ள…அவள் கணவனை கண்டு கொண்டாள்.
முதலில் ஒன்று இரண்டு தரம் தான் அவளுக்கு தூக்கி வாரி போட்டது. பின்பு அவ்வப்போது அவள் சமையலில் இருக்கும் போது இல்லை கொல்லையில் செடிகளுக்கு தண்ணீர் பாய்ச்சும் போது மாடுகளுக்கு தீனி வைக்கும் போது இல்லை அவளது கிராஃப்ட் வேலை செய்யும்போது இப்படி இடையில் கிள்ளுவது உரசுவது ஏதோ முக்கியமாக விஷயம் பேசுவது போல அதிகாரமாக அழைத்து சென்று இதழோடு இதழ் கொய்வது என்று பல சேட்டைகளை அவன் செய்திருக்க இன்று பெரிய அதிர்ச்சி எல்லாம் இல்லை அவளுக்கு.
ஆதிரன் கைகளோ வெறும் மாவை மட்டும் பிசையாமல் அவ்வப்போது அவளது இடையையும் சேர்த்து பிசைய அவனது கற்றை மீசையோடு கூடிய முரட்டு அதரங்களும் அதற்கு எதிர் புறமாய் மென்மையான முத்தங்களை அவளது பின் கழுத்தில் பதித்துக்கொண்டே இருக்க…
பின்பக்கம் அவன் மேல சாய்ந்து நின்றவளோ பேருக்கு மாவுக்குள்ள கையை வைத்துக் கொண்டு இருந்தாள்.
“மாமா.. போதும்… வேலை இருக்கு…” ஹஸ்கி வாய்சில் பேசினாள்.
“நீ மாவு பிணையுற வேலைய பாரு டி.. நான் என் பொண்டாட்டிய கொஞ்ச நேரம் கொஞ்சுட்டு போறேன்…” என்றவனின் கைகள் அவளது இடையை கிள்ளிவிட..
“ம்ம்மாஆ.. ” என்று அலறியவள் அவனது கையைத் தட்டி விட்டு நகர முயன்றாள்..
சட்டென்று அவள் கையை அழுத்தமாக பற்றி இறுக்க அணைத்தான். விடுபட முடியா புதைகுழியில் சிக்கி கொண்டது போல அவள் உணர.. அவனது கைகளோ அவளது இடையை இறுக்க தழுவி புடவையை விலக்கி.. மென்மையான வயிற்றை தடவிக் கொண்டிருக்க.. அவனது இந்த பிடிவாதத்தில் அவளோ அதிர்ந்து விழிவிரித்து அவனைப் பார்த்தாள்.
அது எதிர்பார்த்தவன் போல அவன் கண்கள் அவளது கண்களை கவ்விக்கொள்ள.. இதழ்களோ அவள் இதழ்களை நோக்கி நெருங்கிக் கொண்டிருக்க.. கரங்களோ அவளது இடையில் தவழ்ந்து கொண்டிருக்க..
அவனின் ஸ்பரிசமோ அவளுள் வெம்மையை தோற்றுவிக்க.. இந்த பலமுனை தாக்குதலிலிருந்து மீள முடியாமல் தவித்துக் கொண்டிருந்தாள் மயில்.
அவள் இதழ்களை நெருங்க சென்ற இதழ்களோ சற்றே தடம் மாறி.. கன்னத்தை உரசிக்கொண்டு காது மடலுக்கு இடம் பெயர்ந்தது.
காது மடல் அவள் உணர்ச்சி அதிகம் கொள்ளும் இடம்..! அவளது பலவீனத்தை சரியாக கண்டு அவன் தாக்க..
“மாமா… மாமா.. வேணாம்..” என்று தடுத்த அவள் கைகள் இரண்டும் அவன் ஒற்றை கையில் சிறை இருக்க.. அவளின் இடை பற்றி முன்னே இழுத்தவனின் இதழ்களோ.. அவளின் பின்னங்கழுத்தின் தோளில் அழுத்தமாக பதிந்து, பின் மெது மெதுவாக முன்னேறி அவளின் நீண்ட சங்கு கழுத்தில் கோலம் போட.. அவளோ அவனிடம் திமிறி விடுபட.. நிமிர்ந்து பார்த்தவன் தன் பெரு விரல் கொண்டு அவளின் இதழ்களை மெல்ல வருடினான்.. உதட்டை லேசா தென்றல் தீண்டும் பூவை போல தீண்ட..
அவனின் இந்த மென்மையில் பெண்மையோ உருகி கரைந்தாள் அவனது கையில்.. பொதுவாக அவனது அதிரடியை விட இம்மாதிரி மென்மேயிலில் அதிகம் உருகி போவாள் தங்கமயில்.
இருவரும் ஒருவருக்குள் ஒருவர் மூழ்கி இருந்த கணத்தில்தான் ‘நானும் இருக்கிறேன் என்னையும் கவனியுங்கள்.! என்று அழுது தன் ராகவி அழுது தன் இருப்பை காட்ட..
“அச்சோ… பாப்பா..” என்று அவனை தள்ளிவிட்டவள் வேகமாக சென்று குழந்தையை தூக்க முயல, கைகள் எல்லாம் சப்பாத்தி மாவு “அச்சச்சோ பாப்பு குட்டி அம்மாவுக்கு கை எல்லாம் சப்பாத்தி மாவுடா இருடா இருடா என்று அவள் தூலியை ஆட்டி விட்டாள். அதற்குள் கை கழுவி வந்திருந்த ஆதிரன் மகளை தூக்கிக்கொண்டு மனைவியை கேலியாக பார்த்து சிரித்தான்.
“எல்லாம் உங்களால தான் அவ தூங்கிட்டு இருக்கும்போது நான் சமைச்சு முடிச்சிருப்பேன்.. நீங்க வந்து இடையில டிஸ்டர்ப் பண்ணிட்டு இப்ப பாருங்க” என்று கணவனை திட்டிக்கொண்டு போய் சப்பாத்தி போட்டாள்.
அவனுக்கு பரிமாறும் போது அவன் ஒன்று கூறாமல் அமைதியாக உண்ண..
“என்ன மாமா ஒண்ணுமே சொல்ல மாட்டேங்கறீங்க.. நல்லா இருக்கா? எனக்கே தெரியும் என் சாப்பாடு மோசம்னு.. ஆனா நீங்க ஏதாவது சொல்லலாம்ல..” என்று
எதிர்பார்ப்போடு அவனைப் பார்த்தாள்.
அவளை பார்த்து சிரித்தவன் “எனக்கு இப்ப தெரிகிறது உன் அன்பு மட்டும் தான் தங்கம்..! சாப்பாடு எங்க வேணா நமக்கு கிடைக்கும்? இப்படி அன்போடு நம்ம பக்கத்துல நின்னு பாத்து பாத்து பரிமாறலாம் ஆள் கிடைக்காது தங்கம். எத்தனை வருஷமா அதை நான் மிஸ் பண்ணிட்டேன் தெரியுமா? இன்னிக்கி நீ எனக்கு அப்படி கிடைச்சிருக்க.. அதனால உன் சமையல் எப்படி இருந்தாலும் நீ எனக்கு பரிமாறினா அது எனக்கு அமுதம் தான்” என்றவன் கணவனின் பேச்சில் தன்னை மறந்து நின்ற அவளின் இதழில் அழுத்தமாக ஒரு முத்தத்தை கொடுத்துவிட்டு நகர்ந்தான்.
சின்ன சாப்பாட்டில் கூட ஆயிரம் குறையை கண்டுபிடிக்கும் தன் தந்தையை நினைத்து பார்த்தவளுக்கு கணவனின் இந்த பரிமாணம் அத்தனை பிடித்தது.
“ஒருவேளை கல்யாணம் ஆன புதுசுல எல்லா ஆம்பளையும் இப்படி தானோ? தெரியலையே.. இதுக்கு யாராவது டிக்ஷனரி ஒரு கைட போடுங்களேன் டா டேய்..” என்று புலம்பியவாறு சாப்பிட்டாள் சுமார் என்று சொல்ல முடியாது வெகு சுமாராகத்தான் இருந்தது.
ஆனாலும் அதை ரசித்து உண்டு தன் கணவனை மன தைரியத்தை பாராட்டிக் கொண்டே உணவை முடித்து எழுந்தாள். “அக்கா கலாக்கா சீக்கிரம் வந்து சேரு கா.. ஒரு வேளைக்கே என் சமையலை என்னாலயே சாப்பிட முடியல.. என் புருஷனையும் என் தாத்தாவையும் என் சமையலில் இருந்து காப்பாத்துக்கா” என்று புலம்பிக் கொண்டே பாத்திரங்களை ஒழித்து போட்டாள்.
அந்த ஒரு வார காலமும் கணவன் மனைவி இருவருக்குள்ளே ஆன அன்பு புரிதல் அன்னோனியம் நெருக்கம் என்று அதிகரித்துக் கொண்டே சென்றது. காதல் என்று இல்லை..
ஆனால் என் மனைவி என்ற உரிமை என்ற நேசம் அவனிடமும்..
என் மாமன் என் கணவன் என்று உரிமை.. அன்பு பாசம் அவளிடமும் இருக்க.. அதுவே அவர்களின் வாழ்க்கையை நன்முறையில் வழி நடத்தியது.
அவள் இங்கே வந்த உடனேயே வீட்டு வேலைகளை கூறி அவன் ஓரளவு விளக்கி இருக்க குழந்தையை பார்த்துக்கொள்ள மேலும் ஒருத்தரை மனைவிக்கு உதவியாக நியமித்தான் ஆதிரன்.
காலையில் விஜயராகவன் ஆதிரன் இருவருமே கிளம்பி விட இருவருக்கும் உணவு வேலையாட்கள் மூலம் அனுப்பி வைக்கப்படும். மதிய உணவுக்கு இருவருமே வந்து விட்டாலும் விஜயராகவன் ஓய்வெடுத்துக் கொள்ள.. ஆதிரன் மட்டுமே மதிய உணவு உண்டு திரும்பவும் மில்லுக்கோ அல்லது அவர்களது வேலை செய்யும் வயலுக்கோ இல்லை கரும்பாலைக்கோ இப்படி மாறி மாறி சென்று கொண்டிருப்பான்.
கமலாம்பிகை கவலைப்பட்டுக் கொண்டதால் விருந்து முழு பொறுப்பையும் அவரிடம் விட்டுவிட்டு உதவிக்கு தவசியை வைத்துக் கொள்ள சொன்னான். தவசி இவர்கள் அம்மாவின் ஒன்றுவிட்ட அண்ணனின் மகன்.
“ஏண்டா என் ஊருல என்னைய பொழப்ப பாக்க விட மாட்டேங்குற? இப்ப தானடா வந்துட்டு போனேன்..” என்றவனிடம்,
“டேய் அக்கா தனியா இருக்குடா அந்த என் மாமனாங்காரன் எப்ப எப்படி வெடிப்பான்னு தெரியல இப்போ அமைதியா இருக்கான் திடீர்னு கண்ணிவெடி மாதிரி வெடிப்பான். அதுக்கு தான் கொஞ்சம் பாத்துக்க மச்சான்” என்றான்.
“சரிடா மாப்பி.. சரிடா மாப்பி..” என்று அடிக்கடி கமலா வீட்டுக்கு அவன் வந்து போவதை தூரத்திலிருந்து பார்த்த வேம்பு “இவன் தானே அன்னைக்கு நம்மள அப்படி பேசினான்.. என்னமோ மேல இடிச்சதுக்கே கற்பு போனா மாதிரி பார்த்தான்.. டேய் ஒரு நாள் இருக்குடா உனக்கு” என்று அவனை கண்கள் மூலம் போட்டோ எடுத்து மூளையில் ஸ்டோர் செய்து கொண்டாள்.
அன்று விருந்து முதல் நாளே கமலாம்பிகை கூறிவிட்டார். “இங்கே பார் யார் நாளைக்கு விருந்து பொண்டாட்டி புள்ள வேணும்னு நினைச்சா ஒழுங்கா விருந்தில வந்து உன் மரியாதையை நீயே காப்பாத்திக்க.. இல்ல நாங்க எல்லாம் வேணாம் இத்தனை வயசுக்கு மேல தனியா தான் படுப்பேன் தனியா தான் பொங்கி சாப்பிடுவேன் நினைச்சன்னா அப்படியே இருந்துக்க..” என்று விட்டார் கமலாம்பிகை.
அதன்படி இப்பொழுது பொறுப்போம் என்று வெளியே அமைதியாக இருந்தாலும் உள்ளே அவருக்கு நெருப்பு கனன்று கொண்டுதான் இருந்தது. ஆதிரன் மேலும்.. இங்கே இல்லாத ஆரூரன் மேலும்.. அவன் பெத்த பெண் மேலும்.
விருந்து நடக்கும் முன்பே சொந்த பந்தங்கள் வந்திருக்க அனைவருக்கும் அந்த திடலில் அமர்ந்து பேசு வசதி செய்யப்பட்டிருந்தது. மேலே போடப்பட்டிருந்த மேடையில் மணமக்கள் நின்றிருந்தவர்கள் அனைவரையும் வரவேற்க கையில் ராகவி.
அனைவரிடமும் இது ஆரூரனின் குழந்தை என்று அறிமுகப்படுத்திய விஜயராகவன் “என்ன மச்சான் பிள்ளைங்க கறி விருந்தையும் உங்க பேத்திக்கும் அறிமுகப்படுத்துவது ஒன்னாவே வச்சு மிச்சம் பண்றீங்களா?” என்று கிண்டலா கேட்டன உறவுகள்.
“அதுக்கு என்ன அடுத்தது என் பேத்திக்கு வளைகாப்பு வைக்கும் போது இன்னும் இதைவிட பெருசா விருந்து வைத்து விடுகிறேன்.. அடுத்த ஒரு பேரன் பிறந்தானா.. அப்போ இன்னும் தடபுடல் படுத்திடலாம் மாப்பிள்ளை” என்று விஜயராகவன் கூற..
“அதானே விஜயராகவன் அண்ணனா கொக்கா எங்கள பத்தி உங்களுக்கு தெரியாதா?” என்று அங்காளி பங்காளிகள் பேச களை கட்டியது விருந்து.
சிலர் கல்யாணத்துக்கு வர முடியாததால் இப்போது வந்து மணமக்களை நலம் விசாரித்து பரிசையோ மொய் பணத்தையோ கொடுத்துவிட்டு செல்ல மேடையில் சிறிது நேரம் நின்றவன், “மயிலு பிள்ளையை பார்த்துக்கோ நான் விருந்து நடக்கிற இடத்துக்கு பார்க்கிறேன்” என்று அங்கே சென்று விட்டான்.
அவளும் பெண்கள் கூட்டத்தோடு அமர்ந்து ராகவிக்கு கேழ்வரகு கஞ்சியை மதிய உணவுக்காக மெதுமெதுவாக ஊட்டிக் கொண்டிருந்தாள்.
சொந்த பந்தங்கள் ஒன்றோடு ஒன்று பேசி சிரித்து கொண்டிருக்க.. அந்த பக்கம் உறவுகள் விருந்துண்டு களித்துக் கொண்டிருக்க.. இப்படி அந்த இடமே ஒரு சந்தோஷ நிலையில் மிதந்து கொண்டிருக்க.. அத்தனையும் அழிப்பது போல வேகமாக விருந்து நடக்கும் இடத்திற்கு வந்த தியாகேசன் ஆதிரன் சட்டையை கொத்தாக பிடித்து விட்டார்.
அவன் என்னவென்று சுதாரிப்பதற்குள் மீண்டும் சட்டையை பிடித்து “ஏண்டா எவ்வளவு நெஞ்சழுத்தம் இருந்தால் இப்படி பண்ணி இருப்ப?” என்றதும் அவன் புரியாமல் “என்ன தண்ணி அடிச்சிட்டு வந்து உளறிரு?” என்று கோபமாக கேட்க..
“யார்ரா உளறுகிறா? யார் டா நீ? நீ ஆதிரன் இல்ல ஆருரன்.. அந்த குழந்தை உன்னோடுது. இப்படி உன் புள்ளைக்கு ஆயா வேலை பார்க்க இரண்டாம் தரமா என் புள்ளையை கட்டிக்கிட்டியா டா?” என்று கத்தி கூப்பாடு போட்டார்.
“என்ன இவர் ஆதி மாமா இல்லையா ஆரூ.. ஆரூரனா??” என்று நினைத்து மாத்திரத்தில் என்னென்னவோ நினைவுகள் அவளது தலைக்குள் ஊர்வலம் போக மயங்கி சரிந்தாள் தங்கமயில்.
👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌
super