ATM Tamil Romantic Novels

3 என் மோகினி நீ

3. மோகினி

தன் சதியிடம் சரணடைவதும் ஆண்மை தான் நிரூபித்தான் நாகா.

காதலின் கற்பூர வாசமெல்லாம் சுமி எனும் கழுதைக்கு எப்படி தெரியும்?! முன்னே பின்னே யாரையாவது எட்டி பார்திருக்கணும்? உறவு நிலைகளின் இன்ப உணர்வுகளை கற்பனையாவது நினைத்திருக்கணும்.. தன் உடலையே நேசிச்சிருக்கணும். ஒன்னும் கிடையாது.

நாகாவின் நேசப்பார்வை இவளுள் மேலுக்கு கலகம் விளைவித்திருக்குமே தவிர வேர்வரை போகல. அவன் பீலிங்ஸ் புரிந்தாலும் சரிவராது என்பதால் இரக்கப்பட்டாள் அவ்ளோதான்.

பல மவுனங்களுக்கு பதில் “ஆம்” என்றே கொள்ளப்படும். அரிய மவுனங்களுக்கும் சில நேரம் “முடியவே முடியாது” என்று அடம் இருக்கும்.

எதிரிலிருப்பவனின் தீவிரத்தைவிட கீழ் உதடு கடித்து சுமியும் மறுப்பை காரணம் சொல்லாமலேயே உணர்த்திவிட்டாள்.

உங்க வீடு என்னை ஏற்காதா?

ஆமாம்.. பழி கூறினாள்.

என் பேமிலிய கூட்டிட்டு வந்து பேசறேனே..

ஆகாது .. ப்ளீஸ். விட்ரு நாகா.. நான் அப்படி ஒன்னும் ஸ்பெசல் இல்ல.. பேச வேண்டியது முடிஞ்சிருச்சு.. போய்ட்டு வரேன்.. லேசா தலை வலிக்கிற மாறி இருக்கு.. கிளம்பறேன்..
எழ முயற்சிக்க,

எதிரிலிருந்தவன் சட்டென இவள் அருகிருந்த சேரில் வந்து அமர்ந்து கொண்டான்.

சுற்றி முற்றி பார்த்து இவள் இவள் இடது கையை தன் வலது கையால் வன்மையாய் பற்றிக்கொண்டான். சுமிக்கு லா பேச வாய் தான் காது வரை நீளும். அதிரடி என்றால் அடிவயிற்றில் பயம் புரளும்.

ஏய் நாகா என்னதிது? கைய விடு! கிசிகிசுத்து கையை உதற முயல..

நான் உன்னை ஒன்னும் பண்ணமாட்டேன்.. நீ போவதை தடுக்கத்தான் பிடிச்சி வச்சிருக்கேன்.. சோ கொஞ்சம் பொறு! என் கடைசி டெசிசனை கேட்டுக்கோ..

அமைதியானாள். அவன் நரம்போடிய பெரிய கைகள் இவளின் நலிந்த வெளுத்த குட்டி குட்டி விரல்களை சிறை பிடித்து வைத்திருந்தது ஒரு மாறித்தான் இருந்தது.

யாருடணும் ஒட்டி பழகாத சுமிக்கு அந்நிய ஆணின் முதல் ஸ்பரிசம் இது. நெளிய மட்டும் தான் செய்யல.. ஆனால் இச் செயல் அழுத்தம் கொடுத்தது உண்மை.

இதோ பாரு சுமி.. நீ மட்டும் தான் எனக்கு வேணும்.. உனக்கும் சின்ன பிள்ளைக்கு சொல்ற மாறி சொல்லி புரிய வச்சாச்சு.. நீ கன்சிடர் செய்யல. ஓகே நான் அக்ஸப்ட் பண்ணிக்கிறேன்.. எல்லாத்துக்கும் தேங்க்ஸ்”

ம்ம்ம்..

கொஞ்சம் நேரம் எடுத்துக்கொண்ட நாகா,

இன்றிலிருந்து உன்ன நான் எந்த வகையிலும் தொல்லை பண்ண மாட்டேன். யாரோ போல இருந்துக்கிறேன். நண்பனாக கூட உன்ன என்னால் நடத்த முடியாது. குட் பை உன் கண்ணில் கூட படமாட்டேன். நீ ஒரு கல்லு சுமி, டே ஒன்னே முகத்தை திருப்பிட்டு போயிருக்கலாம் .. வருஷ கணக்கா ஓரப்பார்வையிலே கொன்னுட்ட சுமி.. பை” குரல் முற்றிலும் உடைந்தே போனது.

அவனையும் அறியாமல் கடைசியில் சுமியை குற்றம் சொன்ன ரெட்டை வாக்கியங்களை வெறுத்தான். நொடியின் பின்னத்தில் சட்டென எழுந்து கிடுகிடுவென அவ்விடத்தினின்று எழுந்து போய்ட்டான்.

நாகா அழகன். ஆறடிக்கும் மேலே நல்ல உயரம், மாநிறம், அளவாய் மீசை நறுக்கி கிளீன் சேவ், நகங்கள் செதுக்கி சுத்தமாய், வாசத்தோடு வலம் வருபவன். சுமியின் கீழ் வேலை பார்க்க வந்த போது அப்பாவியாய் தெரிந்தான். பின் நூறுபேரை வேலை வாங்குபவன் போன்று ஆளுமையாயிருந்தான். வயசு என்று சுமி நினைத்தது எண்ணிக்கை தான். அவன் வயதுக்கும் மேலே உடலும் ஆளுமையும் இருந்தது சுமி கண்ணில் படவில்லை.

தான் பிடிச்ச முயலுக்கு மூணு கால் நினைப்பில் கிடக்கும் பித்தனை போல கிடந்தாள் சுமி. எண்ணம் நின்று விட்டது. அவ்ளோதான்.

இத்தனை நாள் பின் சுற்றியவன் இனி மாட்டேன் சொன்னது ஒரு அதிர்ச்சி.

நீ இதை முன்னமே செய்திருக்கலாம் ஊக்குவித்தது தப்பு! சொன்னது ஆகச்சிறந்த உண்மை.

போகும் முன் நாகாவின் கண்ணில் நீர் கோர்த்திருந்ததோ? கிளாஸ் போல பள பளப்பா மின்னுச்சே! மெய்யோ?!! பொய்யோ?!! சிலையாய் நின்றாள் சுமி.

கண் திறந்து மயங்கி நின்றவள் உணர்வில் விழித்த நேரக்கணக்கு தெரில.. ஹோட்டலின் வாசல் ஓடி பார்த்த பொழுது நாகா முகப்பில் நிற்பது தெரிய, வேக நடை கொண்டு “நாகா” அழைக்க.. திரும்பவில்லை.

அவன் கையில் இவள் கையை கோர்க்க, தட்டி விட்டான். முரட்டு தனம் இவளுக்கு ஈகோ பிச்சிகிச்சு. ஹாங் இதோடா இவன் தொடுவான் நான் சும்மா இருக்கணும்.. நாம தொட்டா சிலுத்துகிறான்.. கடுப்பாகி அவன் ஒருபக்க கையை தன் பாதி உடம்போடு கை சேர்த்து லவர் போல இறுக்க.. சுற்றியிருந்த நாலஞ்சு பேருக்கு வேடிக்கையாயினர் இருவரும்.
அவன் நகர்ந்தால் இவள் இன்னும் ஒட்டினாள்.

இவனை சமாதானம் செய்து மனசை கூல் செஞ்சு தான் பிரியணும். வேறொன்னும் புதிய இலக்கு ஏதுமில்லை.

கல்லு முள்ளு போல வெளியில் தெரியும் பெண்கள் கூட ரோஜாப்பூக்களே! மலர்வுகள் ஒவ்வொரு விதம்.

நாகாவிடம் ஒரு அட்டெண்ட் ஆடி கார் ஒன்றின் சாவி கொடுத்து டிப்ஸ் பெற்று விடைபெற, இவன் கிட்டே இந்த கார் இருக்கா என்ன? வியந்தாள். அவனை மிட்டில் கிளாஸ் பேமிலி நினைத்திருந்தாள். இப்போ ஹயர் மிடில் என்று ஸ்கேல் மாற்றினாள்.

அவன் இவளை பிரித்து ட்ரைவர் சீட்டுக்கு போக.. நிற்கவா? போகவா? திகைத்து சுமி தனித்து நின்றாள்.

படித்தவள் தான் தன்னிச்சையாய் பத்திரமாய் சென்னை முழுசும் சுற்றுபவள் தான். இன்று என்ன செய்ய? தெரில! புரில!

 

1 thought on “3 என் மோகினி நீ”

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Scroll to Top