4. மோகினி
பின்னோடு சுமி காரில் ஏறுவாள் என்று எதிர்பார்த்த நாகா அவள் வராது நிற்பதை கண்டு, தவறுக்காய் தன்னையே நொந்து கொண்டான்.
வா! என்பதாய் உள்ளிருந்து சைகை காட்டி அழைக்க,
போடா! என்பது போல அவள் தலையை சிலுப்பிக்கொண்டு சாலையை நோக்கி விடு விடுவென நடக்கவாரம்பித்தாள் சுமேரா.
அடங்காப்பிடாரி! இவ கிட்டே போய் வீழ்ந்தபாரு! எல்லாம் உன் கிரகம்டா பிரசாத்! சலித்துக்கொண்டாலும் பிடித்தது அவளின் அடம். இஷ்டமானது பேயென்றாலும் அது செய்வது யாவும் பிரியமானது சொல்லும் லூசுப்பையன் இவன்.
காரை விட்டு இறங்கி சுமியை துரத்தி பிடித்து,
“வா உன் வீட்டில் விடுறேன் கடைசி கடைசியா . .” திமுறும் சுமியை சென்டிமென்ட் பேச்சில் அடக்கி காருக்குள் இருத்தி விட்டான்.
பயணத்தின் போது இருவரும் சிறிது நேரம் பேசவில்லை.
“எல்லாத்துக்கும் சாரி நாகா!” அவனை சரி பண்ணும் நோக்கத்தில் ஊடலை விட்டு சுமி இறங்க,
“எந்த பக்கம் போனா உங்க வீடு கிட்ட ?!”
பேச்சை மாத்துறான்..
செல்லில் லொகேஷன் போட்டு தந்துவிட்டு,
“மறந்துடுவேன் சொல்லேன் நாகா”
“நீ ஏதாச்சும் பண்ணு! மறக்கிறேன்..”
என்ன சொல்ல வரான்?!
“புரில..”
“முத்தம் தா!”
ஆஆ அ.. அவ்ளோதான் சுமிக்கு கண்ணு ரெண்டும் வெளியில் வருமளவு மனஅதிர்வில் இமைகள் சுருங்கி விட்டது.
பரம்பரை நாணம் அவசரசேவைக்கு வந்தது. வெட்கத்தில் கன்னம் சிவக்க வைத்து, உடலெங்கும் ஓடிய மின்னலை கட்டி நிறுத்தி தலை குனிய வைத்து ஓரளவு சுமியை சரிபண்ணியது. ஆனால் அடிவயிற்றில் ஏற்பட்ட லேசு வலி மட்டும் சுகமாய் ஏதோ பண்ணுச்சு. முத்தம் எனும் சொல்லே கிறக்கம் தருமா? பயந்தாள் பேதை.
பாவம் பார்த்தால் வாயப்பாரு! முத்தம் வேணுமாம் முத்தம்! மூஞ்சப்பாரு! இனி பேச்சுவார்த்தை கிடையாது. நீ மறக்காதே! யாருக்கு நட்டமாம். போ! போ! முந்தைய வேதாளமாய் புளிய மரத்துக்கு போய்ட்டா சுமி.
ஒரு கையை கொண்டு ஸ்டேரிங் பிடித்து மறுகையால் இவள் கையை அழுத்த.. உருவ முயன்றவளின் விரல்களை தன் விரல்கள் கொண்டு நெறிக்க, மென்பஞ்சு விரல்களில் தீ பற்றியது.
விடு நாகா விளையாடாத! எனக்கு இதெல்லாம் பிடிக்காது.
வேணாம் சொல்ல காரணம் சொல்லு விடறேன்..
விரல்களை தன் கையால் வழி நடத்தி அவன் வாய்க்கு இட்டு செல்ல.. சுமிக்கு லோசுகர் வந்த மாறி நரம்பெல்லாம் வீக்காகி ஜெர்க்கானாள்
நாகா மென்மையிலிருந்து வன்மைக்கு மாறி விட்டதை புரிஞ்சு..
நான் உனக்கு அக்கா ஓகே!
புரில! இப்ப குழப்பி திகைப்பது நாகாவின் பக்கமானது.
நீ என் தம்பி போல.. ரெண்டு வயசுக்கு இளையவன் அதனால் காதல் என்பதெல்லாம் அபத்தம்..
காரணம் என்னவோ ஏதோ என்று தவித்துக்கொண்டிருந்தவனுக்கு சுமி சொன்ன ரீசன் சில்லியாய் இருக்க.. வண்டியை யூடர்ன் அடித்தான்..
“சுமி அக்கா! நீங்க உங்க தம்பி வீட்டுக்கு வந்துட்டு தான் போவணும்” சிரிக்காது நக்கல் அடித்தான்.
அக்கா விளிக்கு மச கடுப்பானாள் சுமி..
“நான் எங்கேயும் வரல.. இறக்கி விடுறியா? இல்லாட்டி காரிலிருந்து குதிக்கவா?” மிரட்டல் வைக்க..
குதிக்க போறியா?! கொஞ்சம் பொறு..
காரை சாலையை விட்டு மேட்டுகுடி மக்கள் வாழும் வில்லா பகுதிக்குள் காரை நிறுத்திவிட்டு அவள் பக்கமாய் அணைப்பது போல வர பல்லி போல துள்ளினாள் சுமி.
நாகாவின் அருகாமை என்னென்னவோ பண்ணுச்சு.
ஆகா உணர்வென்றால் எரிச்சல் பட்டு தள்ளிவிடலாம். காந்தம் போல ஈர்த்து ஒட்டிக்கொள்ளச் சொல்லும் தேகஉணர்வை என் சொல்ல?
பொறுங்க சிஸ்டர்! சீட் பெல்ட் எடுத்து விடறேன்.
இப்போ இறங்கி ஓடுங்க சிஸ்.. கேலி செய்ய.. கதவை திறக்க முயன்று தோற்றாள் சுமி.
நல்லா சமுக்கமாய் லாக் பண்ணி வச்சிருந்தான் நாகா.
சிறுபிள்ளையிடம் விளையாடுவது போல.
இவள் தான் அவமானமாய் உணர்ந்தான். என்ன சொன்னாலும் ஒத்துக்காத நாகாவை பிடிக்கல. இவள் என்ன எழுத்தாளரா? இவள் எண்ணம் போல கதாபாத்திரங்கள் பேச?!
எதிர்கொள்ளும் மனிதர்கள் ஒவ்வொருவரும் ஒவ்வொரு ரகம். யார் என்ன குணமாயிருப்பார்களோ? எல்லோரையும் ஒரே தராசு போட்டு எடை போடவும் முடியாது. ஒட்டுவது ஒட்டும் வேணாம்னாலும் அப்பி பிடிக்கும். விலகுவது ஒட்டாது அவர்களிடம் அன்பா இருக்கணும், பாசம் காட்டணும் எதிர்பார்த்தால் பலன் ஸிரோ தான். நேற்று நடந்ததும் நல்லது. இன்று எது நடக்கிறதோ அதுவும் நன்றாக நடக்கிறது.. நாளை நடப்பதும் சிறப்பே! நாம் பொம்மைகள் நூல் இழுப்பவனின் திசையில் போவது பேக்ட்.
சிறந்த உரைநடை . அருமை !!!
👌👌👌
👌👌👌👌👌👌👌👌👌👌👌👌
Very nice 👌. But not enough. Remba chinna epi😔
Hi sir, next epi pls
Next next epis podunga pa, interesting