சண்டியரே 11
“ஆமா.. நான் ஆரூரன்..! சிவ ஆரூரன்..!” என்றான் தன் முழு உயரத்துக்கு நின்று நிமிர்வாக.. திமிராக.. சிவ ஆரூரன்.
இவ்வூரை விட்டு சென்ற போது பதின்ம வயது பையனாக, யாரையும் நிமிர்ந்து பார்க்க கூட கூசியவனாக சென்றவன்.. இன்று ஆளுமையுடன் நிமிர்ந்து அனைவரையும் கூர் பார்வை பார்த்தபடியே கூறினான் நான் சிவ ஆரூரன் என்று..!!
சிவ ஆரூரன்.. விஜயராகவனின் இரண்டாவது தவப் புதல்வன். குரு ஆதிரனின் அருமை தம்பி..!!
“ஏலே ஆரூரா… எவ்வளவு தைரியம் இருந்தா உன் பிள்ளைக்கு ஆயா வேலை பார்க்க என் பொண்ண கட்டி இருப்ப?” என்று இதுவரை ஆதிரனாக இருந்தவனின் சட்டையை பிடித்து உலுக்கினார் தியாகேசன்.
எகத்தாளமாக ஒரு பார்வை பார்த்தான் தியாகேசனை..!! லாவகமாக தன் சட்டையிலிருந்து அவரது கையை தட்டி விட்டு..
“ஆமா நான் ஆரூரன் தான்..! இப்ப அதுக்கு என்ன மாமோய்?? நீரு சட்டையை பிடிச்சு உலுக்குனவுடனே பயந்து ஓடிப்போக நான் என்ன இன்னும் ஸ்கூல் பையன்னு நினைச்சீரோ?” என்றவன் சட்டையின் கசங்க பகுதிகளை நீவி விட்டுக்கொண்டு பதட்டமில்லாமல் கூறினான்.
அங்கிருந்து மொத்த கூட்டமும் சலசலப்போடு அவனைத்தான் பார்த்தன..
“என்ன ஆரூரனா? ஆரூரனா?”
“சிறு வயதில் ஊர விட்டு போன ஆரூரனா இவன்?”
“அட்சு அசல் அப்படியே ஆதிரன் போல இருக்கிறானேப்பா இவன்?”
“அட..! அவங்க ரெண்டு பேரும் ரெட்டை பிறவிகள் தானே? பின்னே ஒருத்தன் போல இன்னொருத்தன் இருக்கிறது. ஆச்சரியமா என்ன?”
“அது சரி.. ஆனா இவன் இங்க இருக்கானா அப்ப ஆதிரன் எங்கே? அவனுக்கு என்ன ஆச்சு?”
இப்படி ஏகப்பட்ட சலசலப்புகள் அந்த கூட்டத்தில் கேட்டுக் கொண்டே இருந்தது.
“நான் ஆரூரன்.. சிவ ஆரூரன்..!” என்று நெஞ்சை நிமிர்த்திக் கொண்டு கூறியவனைக் கண்ட தங்கமயிலின் நினைவு அடுக்குகளில் பல உரையாடல்கள்.. பல எண்ணங்கள் ஊர்வலமாய் உலா வர.. இந்த கணத்தின் கனம் தாங்காமல் மயங்கி சரிந்தாள் மாது.
ஆரூரா… என்று மெல்லிய குரலில் கூறிக் கொண்டே ராகவியை கையில் வைத்திருந்த கமலாம்பிகை தம்பியை வாஞ்சையோடு பார்த்தார். எத்தனை வருடங்களுக்கு பின் பார்க்கிறார் கண்களிலும் முகத்திலும் பாசத்தை தேக்கி அவர் பார்த்துக் கொண்டே இருக்க.. மகள் மயங்கி சரிவதை அவர் கவனிக்கவில்லை.
மயூரனுக்கோ ஒன்று தெரியவில்லை. மயூரன் அப்பொழுது சிறு பாலகன் என்பதால் அன்று நடந்தது எதுவும் தெரியவில்லை. அவனுக்கு தெரிந்ததெல்லாம் ஆரூரன் என்று மற்றொரு மாமன் உண்டு. ஆனால் அவன் இப்பொழுது இவர்களை விட்டு பிரிந்து இருக்கிறான் என்பது மட்டுமே.. அதனால் அவன் சுவாரசியமாக அங்கே நடப்பவற்றை பார்த்து இருந்தான்.
மற்றவர்கள் கவனம் எல்லாம் ஆரூரன் மேலையும் தியாகேசன் மேலேயும் இருக்க.. மயில் மயங்கி சரிந்தது யாரும் கவனிக்கவில்லை. ஓடிப்போய் அவளை தாங்கிப் பிடித்தது என்னவோ ஆரூரன் தான்.
மகள் மயங்கியதை விட அவளை தாங்கிப் பிடித்தது ஆரூரன் என்றதை தான் தியாகேசனால் தாங்கிக் கொள்ளவே முடியவில்லை.
“என் மகளை தொடாத டா.. விடு டா அவளை.. தள்ளி போடா..” என்று ஏகத்துக்கும் அவர் பேச..
திரும்பி அவரை ஒரு பார்வை பார்த்தவன் “அவ உம்ம மகளா இருக்கலாம். ஆனா இப்போ என் பொண்டாட்டி..! அவள தொட்டு தூக்க என்னைத் தவிர வேற எந்த பயலுக்கும் உரிமை கிடையாது..! எவனையும் அவ சுண்டு விரலைகூட தொட விடமாட்டான் இந்த ஆரூரன்” என்று தியாகேசனிடம் உறுமியவன், அவளை தூக்கிக்கொண்டு அந்த திடலில் அமைக்கப்பட்டிருந்த மேடையில் கிடத்தினான்.
“தண்ணி கொண்டு வாங்க..” என்று அவன் சத்தமாக சொல்ல..
யாரோ ஒருவர் தண்ணி கொண்டுவர அதை தெளித்துப் பார்த்தும் அவள் தெளியவில்லை..!!
“அடப்பாவி.. அடப்பாவி.. என் பொண்ண என்னடா பண்ணுன? என் பொண்ணு கண்ணு முழிக்க மாட்டேங்கிறாளே டா..” என்று தவியாய் தவித்து போனார் தியாகேசன்.
அந்த நேரத்திலும் அவரை நக்கலாக பார்த்து மெல்ல அவர் காதருகே குனிந்தவன் “ஒரு புருஷன் என்ன பண்ணுனுமோ அதுதான் என் பொண்டாட்டி கூட பண்ணினேன்..” என்று இடக்காக கூறி நாக்கை கன்னத்தில் சுழற்றி அவரை ஒரு பார்வை பார்த்தான் ஆரூரன்.
‘இயல்பாக கணவன் மனைவிக்குள் நடப்பது பற்றி இப்படிப் பட்டவர்த்தனமாக சொல்கிறானே அதுவும் பெத்த தந்தையிடமே..!’ என்று தியாகேசனுக்கு கோபம் பொங்க, “டே.. ஆரூரா..” என்று அவனது சட்டையை கொத்தாக பற்றினார்.
“சும்மா சும்மா சட்டையை புடிக்காதீக மாமோய்.. சட்டை நல்லா இருக்கு வேணும்ன்னு சொல்லுக நானே வீட்டுக்கு போய் கழட்டி துவைத்து அனுப்பி வைக்கிறேன்.. என்ன?” என்று மீசையை வருடி கொண்டே பேசியவனை முறைக்க மட்டுமே இப்போது தியாகேசனால் முடிந்தது.
ஆரூரனும் சளைக்காமல் தியாகேசனுக்கு எதிர்பார்வை பார்க்க..
“நிறுத்திருங்கிகளா ரெண்டு பேரும்..! முதல்ல பேத்திக்கு என்ன ஆச்சுன்னு பாருங்க.. அப்புறம் பொறுமையா உங்க சண்டைய வச்சுக்கலாம்” என்று விஜயராகவனின் கணீர் குரலில் தான் இருவரும் இயல்பு நிலைக்கு திரும்பினர்.
மெல்ல குனிந்து “தங்கம்.. தங்கம்.. என்னை பாரு டி..” என்று மென் குரலில் ஆரூரன் அழைக்க.. அது எதுவுமே உச்சகட்ட அதிர்ச்சியில் மயங்கி கிடந்த தங்கமயிலின் காதுகள் வழிப் பயணித்தாலும் மூளையை சென்று அடையவில்லை
சட்டென்று அவளை தூக்கியவன் காரை நோக்கி செல்ல… கமலாம்பிகையும் ராகவியை தூக்கிக்கொண்டு அவனுடன் ஏறிக்கொண்டார்.
காரின் இரு பக்கமும் ஓடி ஓடி வந்து “நான் எங்க உட்கா? நான் எங்க உக்கார?” என்று அல்லாடிய தியாகேசனை கண்டுக்கொள்ளாமல் காரை எடுத்து ஆரூரன் விரைந்து விட.. அருகில் இருந்தவரின் மோட்டார் பைக்கை வாங்கிக் கொண்டு அவனை பின்தொடர்ந்தார் தியாகேசன்.
தியாகேசன் வருவதற்குள் விரைவாக விரைந்து அருகில் உள்ள மருத்துவமனையில் அவளை அனுமதித்தான். பின் மருத்துவர் தங்கமயிலை சோதித்துவிட்டு, இவன் தனியாக அழைத்து பேசினார். குழந்தை இருப்பதால் அங்கு கமலம்பிகையை அனுமதிக்க வில்லை. அவர் வெளியே நின்று தவிப்போடு காத்திருந்தார்.
தங்கமயில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்த அறையில் இருந்து சோர்ந்து போன முகத்துடன் வெளியே வந்தான் ஆருரன்.
“தம்பி மயிலு எப்படி இருக்கா? என்ன சொன்னாரு டாக்டரு?” என்று கமலா கேட்க..
“நல்லா இருக்கா அக்கா.. அதிர்ச்சி தானாம் வேற ஒன்னும் இல்லனு டாக்டர் சொல்லிட்டார்” என்றவன் முடிக்கு முன் குழந்தை அவனிடம் தாவ.. ஆசையாக குழந்தையை வாங்கி அணைத்துக் கொண்டான் ஆரூரன்.
இப்போதுதான் அவனை உற்றுப் பார்க்கிறார் கமலாம்பிகை. இதுவரை ஆதிரன் என்ற நினைப்பிலேயே அவனிடம் பேசியவர் இப்பொழுது அவனது கைகளை பற்றி “ஆரூரா..!” என்று மென்மையாக அழைக்க..
மெல்ல திரும்பி சிரித்தான் ஆரூரன்.
“கடைசியா இந்த தம்பியை ஞாபகம் வந்திருச்சு போல?” என்று அக்காவை கூர் பார்வையோடு கேட்டான்.
பட்டென்று அவன் கையில் ஒரு அடி போட்டவர் “ஊர விட்டு ஓடிப்போனவன் ஒரு வார்த்தை இத்தனை வருஷத்துல பேசினியாடா என்னிட்ட?” என்று மூக்கை உறிந்தார். அவன் புன்னகையோடு தான் நின்றிருந்தான் எதுவும் பேசவில்லை.
“ஏன் இப்படி எல்லாம் பண்ண டா? என்கிட்ட ஒரு வார்த்தை சொல்ல கூடாதா? நீ பாட்டுக்கு கோவத்துல கிளம்பி போயிட்ட.. உன்னை தேடாத இடம் இல்ல தெரியுமா? எவ்வளவு கோயில்.. எவ்வளவு வேண்டுதல்.. உனக்காக..!! நானும் அப்பாவும் கண்ணீர் வடிக்காத நாள் இல்ல.. ஆனா நீயும் ஆதிரனும் ஏதோ தொடர்புல இருக்கிங்கனு என் உள் மனசு சொல்லிக்கிட்டே இருந்துச்சு.. அது உண்மை தானே? நீ இங்கனா அப்போ ஆதிரன் எங்கே?” என்று கேட்டவருக்கு புன்னைகையே பதிலாக தந்தான் ஆரூரன்.
“என்னடா சிரிக்கிற ஆதி எங்கடா?* என்றதும்
“எல்லாத்தையும் இங்கே சொல்லனுமா என்ன? வீட்டுக்கு போய் பொறுமையா பேசலாம் இப்போ உன் புருஷன் வராரு அவரை சமாளி..” என்று ராகவியை தூக்கிக்கொண்டு வேண்டும் என்றே தங்கமயில் அனுமதிக்கப்பட்டிருந்த அறையில் சென்று அமர்ந்து கொண்டான். இப்பொழுது அவளை சிகிச்சை அறையில் இருந்து நார்மல் அறைக்கு மாற்றி இருந்தார்கள்.
‘இனி இவரை வேற சமாளிக்கணுமா?’ என்ற பெருமூச்சு விட்டபடி கணவனை பாவமாக பார்த்தார் தியாகேசன்.
“ஏன் டி நம்ம பொண்ண ஒருத்தன் தூக்கிட்டு போறான்? கொஞ்சம் கூட கூறு இல்லாம அவன் கூடவே போற? பின்னால புருஷன் நான் கத்தி கதறிக்கிட்டு வந்துட்டு இருக்கேன்.. கண்டுக்கிட்டியா நீ? ஒரு போன் பண்ணி சொன்னியா? ஹாஸ்பிடல் ஹாஸ்பிடலா அலஞ்சி திரிஞ்சு வந்து சேர்ந்து இருக்கேன்.. புடிச்சு வச்ச பிள்ளையார் மாதிரி நின்னுகிட்டு இருக்க.. எங்க டி என் பொண்ணு? என்ன டி சொன்னாரு டாக்டரு?” என்று கத்தி தீர்த்தார் மருத்துவமனை என்றும் பாராமல் தியாகேசன்.
காதை குடைந்து கொண்டு கமலாம்பிகை “என்னமோ மூன்றாவது மனுஷன் தூக்கிட்டு போன மாதிரி கத்துறீங்க.. கதறுறீங்க தூக்கிட்டு போனது என் தம்பி.. அவ புருஷன் புரியுதா? போய் அமைதியா உட்காருங்க” என்று அவர் சொல்ல,
தியாகேசனின் கத்தலை கண்டு அங்கு வந்த செவிலியர் “சார் இது ஹாஸ்பிடல்னு நினைச்சீங்கன்னா இல்ல என்னன்னு நினைச்சீங்க? வீட்டு பிரச்சனையெல்லாம் ஹாஸ்பிடல்ல வெளியில வச்சு பேசிட்டு வாங்க இங்க அமைதியா இருக்கணும்” என்று கண்டித்து விட்டு சென்றார்.
தியாகேசனும் மென் குரலில் பல்லை கடித்துக்கொண்டு “எந்த ரூம்லடி பொண்ணு இருக்கா? டாக்டர் என்ன சொன்னார்?” என்று கோபத்தை அடக்கி கொண்டு கேட்டார்.
“எதிர்த்த ரூம்ல நான் இருக்கா.. சும்மா அதிர்ச்சி மயக்கம் தானாம். நான் கூட எங்க சந்தோசமான விஷயம் சொல்லப் போறாளோனு ஒரு நிமிஷம் சந்தோசமா இருந்தேன்.. ம்ஹிம்” என்று வேண்டுமென்று தியாகேசனை வெறுப்பேற்றினார் கமலாம்பிகை.
அவருக்குமே கோபம்..!
ஆரூரன் இப்படி ஊரைவிட்டு சென்றதற்கு முக்கிய காரணமே தியாகேசன் தான். ஆனால் அதற்கு ஒன்றும் செய்ய முடியாமல் அப்பொழுது கையாலாக தனத்தோடு இருந்து விட்டார். ஆனால் இப்பொழுது அதே மாதிரி இருக்க கமலாம்பிகையால் முடியாது. ஒரு பக்கம் தம்பி.. மறுபக்கம் மகள்.. இருவரின் வாழ்க்கையும் இருக்கிறது. இவரின் வீணான பிடிவாதத்தால் அதை வீணடிக்க அவர் விரும்பவில்லை.
“அதோ அந்த ரூம்ல தான் தம்பி குடும்பத்தோடு உட்கார்ந்து இருக்கான்” என்று காட்டியவர் “வாங்க போய் பாத்துட்டு வரலாம் பொண்ண..” என்று அவரை அழைக்க..
“எனக்கு போக தெரியும்” என்று விடுவிடுவென்று முன்னே சென்றார் தியாகேசன்.
கதவை படார் என்று திறந்து உள்ளே நுழைய.. அங்கே கலைந்த எழிலோவியமாக கிடந்த மகளும் அவள் தலை மாட்டுக்கு அருகே அமர்ந்து கையில் குழந்தையை வைத்துக்கொண்டிருந்த ஆரூரனும் கண்ணில் பட்டனர்.
அதிலும் ஆரூரன் “அம்மாவை பாருடா.. அம்மாவை எழுப்புங்க.. அம்மாவை எந்திரிக்க சொல்லுங்க..” என்று பேசிக்கொண்டு இருந்தான்.
இவை எல்லாம் கண்ணில் பட ஏற்கனவே எரிமலை மேல் அமர்ந்திருந்தவர் இப்போது எரிமலை போலவே வெடித்து கிளம்பி “யார் பிள்ளைக்கு யாருடா அம்மா?” என்று மீண்டும் கத்தினார்.
ஆரூரனோ தியாகேசன் என்ற ஒரு மனிதனை நிற்பதை அவன் கண்டு கொள்ளவே இல்லை. திரும்பவும் மகளின் பொன் பஞ்சு கரங்களைக் கொண்டு தங்கமயிலின் கன்னத்தில் வருடினான்.
“அம்மாவ எழுப்புங்க.. அம்மாவ கூப்பிடுங்க.. ம்மா.. சொல்லுங்க.. ம்மா.. சொல்லுங்க சொல்லுங்க..” என்றதும் அக்குழந்தையோ தந்தை சொல்வதை புரிந்தும் புரியாமலும் என்னென்னமோ தனது மழலை குரலில் பேசினாள்.. தன் எச்சில் தெறிக்க கொஞ்சினாள்.. அவள் மேல் உருண்டு புரண்டாள்..!
பார்ப்பவர் அனைவருக்கும் வெகு கவித்துவமாக இருந்தது அம்மா பெண்ணின் இந்த பிணைப்பு..!
ஆனால் இதனை பார்க்க பார்க்க இன்னும் பற்றி கொண்டு வந்தது தியாகேசனுக்கு.
“டேய் ஒழுங்கா உன் பொண்ண கூட்டிட்டு நீ வீட்டுக்கு போ.. என் பொண்ண பாத்துக்க எனக்கு தெரியும்..” என்று அவர் கத்த..
திரும்பவும் வந்த செவிலிய பெண் “என்ன சார் அப்பவே சொன்னுன் இல்ல ஹாஸ்பிடல் கத்தாதிங்கன்னு..! திரும்பத் திரும்ப காத்திட்டு இருக்கீங்க..” என்று இவரை சற்று அதட்ட…
“அட..! நீ வேற ஏம்மா போமா.. மனுஷன் இருக்கிற இருப்பு புரியாம..” என்று அந்த பெண்ணிடம் முகம் தூக்கினார்.
“இது உங்க வீடு இல்ல மெதுவா பேசுங்க பக்கத்துல எல்லாம் பேஷண்ட்ஸ் இருக்காங்க.. அவங்களுக்கு தொந்தரவு கொடுக்காமல் என்ன வேணாலும் பேசுங்க..!” என்று அதட்டிவிட்டு சென்றாள் அந்த பெண் செவிலியர்.
தங்கமயிலு ஆழ்ந்த உறக்கத்தில் இருக்க.. இப்பொழுது ஆரூரனுக்கு போட்டியாக தியாகேசனும் அறையில் மயில் விழிக்க காத்திருந்தார்.
கமலாம்பிகை இருவரையும் பார்த்து “கொஞ்சம் வெளியாவது வாங்க.. அவ தூங்கட்டும்..! தூங்கி முழிச்சதும் பார்க்கலாம்.. பேசலாம்..” என்று இருவரையும் மாத்தி மாத்தி கூப்பிட இருவருமே இருக்கும் இடத்தை விட்டு அசைய மறுத்து விட்டனர்.
அட ஆரூரா… தியாகேசா..!!
மயக்கம் தெளிந்த மயிலின் முடிவு என்னவாக இருக்கும்??
தொடரும்…
Super
super
👌👌👌👌👌👌👌👌👌👌👌👌