ATM Tamil Romantic Novels

மன்னவன் பார்வையிலே 9

அத்தியாயம் 9

 

சுவாமிநாதனும் சாவித்திரியும் அவர்களை வழியனுப்பி விட்டு உள்ளே வர “அம்மா அப்பா இப்போ நந்தினிக்கு கல்யாணம் அவசியமா” என்று கேட்டான் வீரா.

 

“ஏன் டா அவளுக்கு கல்யாணம் பண்ணினா உனக்கு என்ன டா பிரச்சனை” என்று சுவாமிநாதன் கேட்டார்.

 

“அவள் சின்னப்பிள்ளை மா சுபாஷ்க்கு என் வயசு ஆகுது 

இவள் இன்னும் காலேஜ் கூட முடிக்கலை”

 

“அதனால என்ன டா உங்க அப்பாவுக்கும் எனக்கும் கூட தான் பதிமூன்று வயசு வித்தியாசம் நாங்க சந்தோஷமா இல்லையா

அதுவும் இல்லாம உனக்கு வர போறவள் இவளை நல்லா பார்த்துப்பான்னு என்ன நிச்சயம் நாங்க உயிரோட இருக்கும் போதே இவளுக்கு ஒரு நல்லது பண்ணிட்டா எங்களுக்கு அது போதும்” என்றார் சாவித்திரி.

 

“அம்மா அது இல்லை மா அவளுக்கு பிடிச்சிருக்கான்னு ஒரு வார்த்தை கேட்டிங்களா நீங்க” என்றான் வீரா கோபத்துடன்.

 

“நந்தினி உனக்கு சுபாஷ் பிடிச்சிருக்கா மா?” என்று சுவாமிநாதன் கேட்டார் நந்தினியிடம்.

 

அவள் வெட்கத்துடன் தலை குனிந்து “ம்ம்” என்று கூறிவிட்டு தலையை மட்டும் ஆட்டியவள் 

அங்கே நிற்க முடியாமல் கூச்சத்துடன் அங்கிருந்து தன் அறைக்கு சென்றாள்.

 

“போதுமா டா அவள் முகத்தை பார்த்தாலே தெரியலை அவளுக்கும் சுபாஷ் பிடிச்சிருக்குன்னு போய் கல்யாண வேலையை பாரு ரெண்டு பேருக்கும் சேர்த்து ஒரே நேரத்துல கல்யாணத்தை வச்சிருவோம்” என்று மன மகிழ்ச்சியுடன் கூறினார் சாவித்திரி.

 

வீராவுக்கு தன்னை அறியாமல் கோபம் தலைக்கு ஏறியது நேரே ஸ்டேஷனுக்கு சென்றவன் அங்கிருந்த அனைவரிடமும் தன் கோபத்தை காட்ட ஆரம்பித்தான்.

 

அன்று எம்.எல்.ஏ வீட்டில் திருடி ஒருவன் பிடிபட்டு வந்து ஸ்டேஷனில் அமர்ந்து இருந்தான்.

 

“யார் நீ” என்று அவனிடம் வீரா விசாரிக்க “சார் அவன் எம்.எல்.ஏ வீட்ல திருடி மாட்டிக்கிட்டான்” என்று கான்ஸ்டபிள் ஒருவன் கூற

“யோவ் அந்த லத்தியை எடுத்துட்டு வா” என்று கூறினான் வீரா.

 

வீராவின் கண்ணுக்கு அங்கே அமர்ந்து இருந்த அந்த திருடன் சுபாஷாக தெரிய அந்த லத்தியை தன் கையில் வாங்கியவன் அவனை அடி வெளுக்க ஆரம்பித்தான்.

 

“ஐயா என்னை விட்டுருங்க ஐயா வலிக்குது” என்று அழுது கொண்டே அவன் காலில் விழுந்து கெஞ்சி கதறி அழ ஆரம்பித்தான்.

 

அப்போதும் அவனை விடாமல் வீரா அவனை அடி வெளுத்து எடுக்க அந்த ஸ்டேஷனே அவனை பரிதாபமாக பார்த்தது

அந்த திருடனின் அலறல் சத்தம் ஸ்டேஷன் எங்கும் எதிரொலித்து.

 

வீரா அவனை தன் கை வலிக்க அடித்து முடிக்க ஒரு கான்ஸ்டபிள் ஓடி வந்து அவனை தடுத்தான் “சார் இதுக்கும் மேல நீங்க அவனை அடிச்சா அவன் செத்துடுவான் சார்” என்றான்.

 

அப்போது தான் வீராவின் கோபம் கொஞ்சம் குறைந்து அமைதியாக அமர்ந்தான்.

 

“யோவ் கான்ஸ்டபிள் ஒரு டீ சொல்லு” என்று கூற அடுத்த ஐந்து நிமிடத்தில் அவனின் டேபிளுக்கு டீ வந்தது.

 

அதை எடுத்து தன் கையில் வைத்து வீரா டீயை குடிக்க ஆரம்பித்தான்.

 

‘எனக்கு ஏன் அவள் கல்யாணம் பண்ணினா இவ்வளவு கோபம் வரனும்’ என்று நினைத்து கொண்டே டீயை குடித்து கொண்டு இருந்தான்.

 

அப்போது அவன் அலைபேசி ஒலிக்க திவ்யா தான் அழைத்து இருந்தாள் அதை எடுத்து பார்த்தான் உயிர்ப்பித்து காதில் வைத்தான் “சொல்லு” என்க

“ஏன் என் கூட பேச மாட்டிறிங்க” என்று திவ்யா வாயை திறந்து கேட்டேவிட்டாள்.

 

“ஏய் உன் கூட பேசுறது மட்டும் தான் எனக்கு வேலையா எனக்கு வேற வேலையே இல்லையா நான் இப்போ பிஸியா இருக்கேன் வை போனை” என்று கூறிவிட்டு அவள் மறுவார்த்தை கூறும் முன்னே அழைப்பை துண்டித்தான் “இவள் ஒருத்தி சரியான இம்சை” என்று வாய்விட்டே புலம்பினான்.

 

அன்று முழுவதும் தான் எதற்க்காக இவ்வளவு கோவப்படுகிறோம் என்று கூட தெரியாமல் அனைவரையும் வைத்து செய்து கொண்டு இருந்தான் வீரா.

 

மாலை அங்கேயே இருக்க பிடிக்காமல் வீரா வீட்டிற்க்கு வர நந்தினி அவன் வந்ததை கூட கவனிக்காமல் யாருடனோ போனில் பேசிக்கொண்டே இருந்தாள்.

 

‘யார் கிட்ட பேசிட்டு இருக்கா’ என்று மனதில் நினைத்து கொண்டே அவளின் எதிரில் வந்து அமர்ந்தான் வீரா 

நந்தினி அவன் பார்வையை கண்டுகொள்ளாமல் சுபாஷிடம் போனில் பேசிக்கொண்டு இருந்தாள்.

 

“ம்ம் சொல்லுங்க” என்று சிணுங்கி கொண்டே சுபாஷிடம் பேசிக்கொண்டு இருந்தாள்.

 

அவள் முகத்தை பார்க்கும் போதே வீராவுக்கு தெரிந்துவிட்டது அவள் சுபாஷிடம் தான் பேசிக்கொண்டு இருக்கிறாள் என்று.

 

‘பொண்ணு பார்த்துட்டு போய் ஒரு நாள் கூட ஆகல அதுக்குள்ள பேச ஆரம்பிச்சிட்டானா எப்படி நந்தினி நம்பர் அவனுக்கு கிடைச்சிருக்கும்’ என்று கொலை வெறியுடன் அவளை முறைத்து பார்த்து கொண்டே அமர்ந்து இருந்தான் வீரா.

 

“நந்தினி” என்று வீரா அவளை அழைக்க அவன் அழைத்தது அவள் காதில் விழவேயில்லை அவளோ சுவாரசியமாக ஏதோ பேசிக்கொண்டே இருந்தாள் 

“நந்நினி” என்று வீரா மீண்டும் கத்தி அழைக்க நந்தினி பயந்துவிட்டாள் அவள் உடல் தூக்கி வாரிப்போட்டது தன் மொபைலின் அழைப்பை துண்டித்தவள் பயத்துடனே வீராவை பார்க்க “ஒரு காபி எடுத்துட்டு வா நல்லா சூடா இருக்கனும்” என்று கூற நந்தினி எழுந்து உள்ளே சென்றாள்.

 

சாவித்திரி வெளியே நின்றிருந்தார் நந்தினி சமயலறைக்கு சென்று காபி போட்டு எடுத்து வந்து வீராவின் கையில் கொடுத்தாள்.

 

நந்தினி வீராவின் முகத்தை பார்க்காமல் வேறு எங்கோ பார்த்து கொண்டே கொடுக்க 

வீராவுக்கு உடனே மூக்கின் மேல் கோபம் வந்தது ‘என் முகத்தை பார்க்க கூட இவளுக்கு பிடிக்கலையா’ என்று நினைத்தவன்.

 

அந்த காபி டம்ளரை தன் கையில் வாங்கியவன் வேண்டுமென்றே அதை கீழே தவறவிட்டான்.

 

அந்த சூடான காபி நந்தினியின் காலில் ஊற்றி விட “ஆஆஆ” என்று அவள் அலறி துடிக்க ஆரம்பித்தாள்.

 

வீரா சந்தோஷமாக அவள் முகத்தை பார்த்து கொண்டே இருந்தான்.

 

சாவித்திரி சத்தம் கேட்டு உள்ளே ஓடி வர “ஐயோ நந்தினி சாரி கை தவறி தெரியாம காபி உன் மேல கொட்டிருச்சி” என்றான் வீரா பதட்டத்துடனே.

 

“அம்மாடி என்னம்மா ஆச்சி” என்று கத்தி கொண்டே அவள் அருகில் ஓடி வந்தார் சாவித்திரி.

 

நந்நினி வலியில் எதுவும் கூற முடியாமல் அலறி கொண்டே இருக்க “அம்மா காபி நந்தினி மேல தெரியாம கொட்டிருச்சி” என்றான் வீரா.

 

“பார்த்து வாங்க மாட்டியா டா” என்று வீராவை கடிந்து கொண்ட சாவித்திரி சமையலறையின் உள்ளே சென்று தோசை மாவை கொஞ்சமாக கையில் எடுத்து வந்து அவள் காலில் தடவி விட்டார்.

 

நந்தினிக்கு இப்போது எரிச்சல் கொஞ்சம் குறைந்து சில்லென்று இருந்தது இருந்தாலும் அந்த இடமே வீங்கி கொப்பளித்துவிட்டது.

 

அவளை பாவமாக சாவித்திரி பார்த்து கொண்டே இருக்க 

வீரா அவளை வன்மத்துடன் பார்த்து கொண்டே இருந்தான் 

‘என் முகத்தையே பார்க்க மாட்ட உனக்கு இது வேணும் டி’ என்று மனதில் நினைத்து கொண்டே இருந்தான்.

 

வீரா சிறிது நேரம் அமர்ந்து யோசித்தாளே அவனுக்கு புரிந்துவிடும் நந்தினியின் மீது தனக்கு என்ன உணர்வென்று ஆனால் அவன் யோசிக்காமல் அவளை சிறுபிள்ளை போன்று தண்டித்து கொண்டு இருந்தான்.

 

வீராவுக்கு நந்தினியின் மீது ஈர்ப்பையும் தாண்டி காதல் மலர்ந்து இருந்தது பாவம் அதை அவனே இன்னும் உணரவில்லை 

அவள் தன்னை கவனிக்கவில்லை என்று ஆத்திரப்பட்டு கொண்டு இருந்தான்.

 

ஆந்திரக்காரனுக்கு புத்தி மட்டு என்பார்களே அது உண்மை தானோ என்னவோ…

 

இப்போதெல்லாம் வீரா டியூட்டிக்கு சென்றாலும் அவனின் எண்ணம் முழுவதும் நந்தினியிடம் தான் இருந்தது சுபாஷ்ம் அவளும் என்ன பேசிக்கொண்டு இருப்பார்கள் என்ற எண்ணம் மட்டுமே ஓடிக்கொண்டிருந்தது.

 

அன்றும் அப்படித்தான் வீரா இரவு நன்றாக படுத்து உறங்கி கொண்டிருந்தான்.

 

அப்போது அவன் கனவில் சுபாஷ் நந்தினியும் ஆடைகள் அற்று ஒரு போர்வைக்குள் நெருக்கமாக இருப்பதை போன்று ஒரு கனவு வர அடித்து பிடித்து கொண்டு எழுந்தான் வீரா.

 

வீரா முகமெல்லாம் வியர்த்து வடிந்து இருந்தது பக்கத்தில் இருந்த விடிவிளக்கை போட்டவன் தண்ணீர் பாட்டிலில் இருந்த தண்ணீரை குடிக்க ஆரம்பித்தான்.

 

‘நோ அவங்க ரெண்டு பேர் கல்யாணத்தையும் நடக்க விடமாட்டேன்’ என்று மனதில் தனக்குள்ளேயே கூறிக்கொண்டான்.

 

மறுநாள் காலை வீட்டில் அனைவரும் பரபரப்பாக கிளம்பி கொண்டு இருந்தனர்.

 

‘எங்கே போறாங்க’ என்று மனதில் நினைத்து கொண்டே இருந்தான் வீரா.

 

தன் தாயிடம் சென்றவன் “அம்மா எங்கே கிளம்பிட்டு இருக்கிங்க” என்று கேட்டான் வீரா.

 

“நேத்து தான டா உன் கிட்ட சொன்னேன் கல்யாணத்துக்கு புடவை எடுக்க போறேன்னு” என்றார் சாவித்திரி.

 

“ஓஹோ” என்றவன் நந்தினியை பார்த்தான் வெள்ளை நிற காட்டன் சுடிதாரில் கிளம்பி தயாராகி நின்று கொண்டு இருந்தாள்.

 

நேற்று அவன் தாய் கூறும் போது வீரா ஏதோ யோசனையில் இருந்ததான் அவன் அதை காதில் வாங்கி கொள்ளவில்லை.

 

அதே நேரம் சுபாஷ் தன் பைக்கை அவர்கள் வீட்டின் வாசலில் நிறுத்திவிட்டு உள்ளே வந்தான்.

 

அவனை பார்த்த வீரா “அம்மா நானும் வரேன்” என்றான் 

“என்ன டா நேத்து தான டியூட்டி இருக்குன்னு சொன்ன இப்போ வரேன்னு சொல்ற” என்று கேட்டார் சாவித்திரி.

 

“இல்லை நானும் வரேன் மா எனக்கும் டிரஸ் எடுக்கனும்” என்றான் வீரா.

 

சுபாஷ் எங்கே அவனை கண்டு கொண்டான் கண்களால் நந்தினியிடம் கதை பேசிக்கொண்டே இருந்தான்.

 

அனைவரும் கிளம்பி துணிக்கடைக்கு சென்றனர் திவ்யா மற்றும் திவ்யாவின் பெற்றோர்களும் வந்திருந்தனர்.

 

சுபாஷ் ஒரு நிமிடம் கூட நந்தினையை விட்டு விலகவேயில்லை பசை போட்ட அட்டையை போன்று அவளுடன் சுற்றி கொண்டு இருந்தான்.

 

அதற்க்கு எதிர்மறையாக வீரா திவ்யாவின் புறம் திரும்பவேயில்லை.

 

வீரா வன்மத்துடன் அவர்களை பார்த்து கொண்டே இருந்தான்.

 

“என்னங்க இந்த புடவை எப்படி இருக்கு” என்று திவ்யா அவன் அருகில் வந்து கேட்க 

அந்த புடவையை பார்க்கமலேயே “நல்லா இருக்கு” என்று பார்க்கமேலேயே பதில் கூறினான்.

 

அனைவரும் புடவை கடையில் இருந்து சாப்பிட செல்ல அந்த ஹோட்டலில் நந்தினி அருகில் அமர்ந்து சுபாஷ் அவளுக்கு சாப்பாட்டை ஊட்டி விட வீராவுக்கு அவனை கொன்றுவிடலாமா என்று கூட தோன்றியது.

 

சுபாஷ் அப்போது தான் எதார்த்தமாக அவன் புறம் திரும்பினான்.

 

வீராவின் பார்வையை அப்போது தான் கவனித்தான்.

 

அனைவரும் சாப்பிட்டு முடித்து வெளியே வரும் போது வீராவின் அருகில் சென்ற சுபாஷ் “மச்சான் உனக்கு இந்த கல்யாணத்துல விருப்பம் இல்லையா?” என்று கேட்டான்.

 

தொடரும்…

 

 

 

 

1 thought on “மன்னவன் பார்வையிலே 9”

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Scroll to Top