அத்தியாயம் 10
சுபாஷ் திடீரென தன்னிடம் அப்படி கேட்பான் என்று சற்றும் எதிர்பார்க்காத வீரா “என்ன கேட்ட சுபாஷ்” என்று தடுமாறி கொண்டே கேட்டான்.
“வீரா உனக்கு திவ்யாவை கல்யாணம் பண்ணிக்க விருப்பம் இல்லையா” என்றான் சுபாஷ்.
“ஏன் சுபாஷ் அப்படி கேட்க்குற அப்படி எல்லாம் ஒன்னும் இல்லையே” என்றான் வீரா முகத்தை சாதரணமாக வைத்து கொண்டு.
“பார்த்தா அப்படி தெரியலை நான் வந்ததுல இருந்து கவனிச்சிட்டு தான் இருக்கேன் ஒரு வார்த்தை கூட அந்த பொண்ணு கிட்ட நீ பேசல மனசுக்கு பிடிக்கலைன்னா வேண்டாம்ன்னு சொல்லிட வேண்டியது தான டா” என்றான்.
“அப்படிலாம் ஒன்னும் இல்லை எனக்கு பிடிச்சி தான் இந்த கல்யாணம் நடக்குது” என்று கோபத்துடன் கூறிய வீரா சுபாஷை திரும்பி கூட பார்க்காமல் காரில் ஏறி அங்கிருந்து சென்றுவிட்டான்.
வீரா காரை ஓட்டிக்கொண்டு இருந்தாலும் அவனுடைய மனம் என்னவோ சுபாஷ் கூறிய வார்த்தைகளில் மட்டுமே நிலைத்து இருந்தது.
வீரா வீட்டின் வாசலில் காரை நிறுத்திவிட்டு இறங்க அவன் பக்கத்தில் வந்து தன் பைக்கை நிறுத்தினான் சுபாஷ் அவன் பின்னே அமர்ந்து இருந்த நந்தினியும் மெல்ல கீழே இறங்கினாள்.
இருவரும் வாசலில் நின்று ஏதோ பேசிக்கொண்டே இருக்க
வீராவுக்கு சுபாஷை பார்க்க பார்க்க உள்ளுக்குள் எரிய ஆரம்பித்தது.
“வரேன் நந்தினி பத்திரம் வீட்டுக்கு போய்ட்டு கால் பண்றேன்” என்று சிரித்து கொண்டே சுபாஷ் கூற நந்தினியும் பதிலுக்கு “சரி” என தலையசைத்தாள்.
நந்தினி வீட்டின் உள்ளே மெல்ல நடந்து செல்ல வீரா சுபாஷை முறைத்து கொண்டே நின்றிருந்தான்.
எவ்வளவு நேரம் அப்படியே நிற்க முடியும் அவன் பைக் கண்ணை விட்டு மறையும் வரை பார்த்துக் கொண்டே இருந்தவன் கோபத்துடன் உள்ளே சென்றான்.
வீராவின் மொத்த கோபமும் நந்தினியின் மீது செல்ல ‘இவளை இன்னைக்கு என்ன பண்றேன்னு பாரு’ என்று மனதில் நினைத்து கொண்டே உள்ளே சென்றான் நேரே நந்நினியின் அறைக்குள் சென்றவன் அவள் அறையின் கதவை கூட தட்டாமல் கதவை வேகமாக திறந்தான் அங்கே நந்தினி உடை மாற்றி கொண்டு இருந்தாள்.
நந்நினி திடீரென கதவை திறக்கும் சத்தம் கேட்டு தன் பக்கத்தில் இருந்த டவலை எடுத்து தன்னை மறைத்து கொண்டாள்.
காலையில் வெளியில் செல்வதற்க்காக தாவணி பாவடை கட்டியிருந்தாள் தாவணியை மட்டும் அவிழ்த்து இருக்க வெறும் பாவாடை மற்றும் மேலாடையுடன் நின்றிருந்தாள்.
வீரா வந்து கதவை திறப்பான் என்று எதிர்ப்பார்க்காதவள் துண்டை மட்டும் எடுத்து தன் மேலே போட்டு கொண்டு நிற்க கோபத்துடன் நிமிர்ந்த வீராவின் கண்கள் அவளை அங்குலம் அங்குலமாக ரசிக்க ஆரம்பித்தது.
அவளை கண்களாலேயே களவாட ஆரம்பித்தான் பயத்தில் துடித்து கொண்டு இருந்த அவளின் செவ்விதழ்களை பார்த்தவனுக்கு உடலின் உஷ்ணம் அதிகரித்தது
அவள் மேலே இருந்த துண்டு அவளின் முன்னழகை மறைக்க முடியாமல் தடுமாறி தத்தளித்து கொண்டு இருந்தது
அவள் மேலே இருந்த கண்கள் இடைக்கு இடம் மாறியது அவளின் வெண்ணிற இடையில் தொப்புளின் மேலே இருந்த பெரிய மச்சத்தை கண்விலகாமல் பார்த்து கொண்டே இருந்தான்.
வீராவின் கண்கள் செல்லும் இடத்தை பார்த்த நந்தினி தொப்புளில் தன் கை வைத்து மறைத்து கொண்டாள் “உங்களுக்கு என்ன வேணும்” என்று கேட்டாள்.
அவளின் கேள்வியில் சுயநினைவுக்கு வந்தவன் தான் எதற்க்காக இங்கே வந்தோம் என்பதையே மறந்து போனான்
“ஒன்னுமில்லை” என்று கூறிவிட்டு அங்கிருந்து சென்றான்.
தன் அறைக்குள் வந்து கதவடைத்தவனுக்கு சொல்ல முடியாத ஒரு உணர்வு சுபாஷ் உடன் எதற்க்கு சென்றாய் என்று கேட்டு சண்டை போட தான் கோபத்துடன் அவள் அறைக்கு சென்றான்.
ஆனால் அவளை அப்படி ஒரு நிலையில் பார்த்தவனுக்கு அவனால் அடுத்த வார்த்தையே பேச முடிவில்லை தடுமாறி தயங்கி நின்று கொண்டான்.
எப்பேற்பட்ட வீரனும் தனக்கே உரிய பெண்ணின் கண்ணை பார்த்து பேச தயங்க தான் செய்வான் போல அவளின் அழகில் தன்நிலை இழந்து தவித்து கொண்டு இருந்தான் தலைவன்.
இதுவரை அவளிடம் தோன்றாத பொல்லாத எண்ணங்கள் எல்லாம் தோன்றி அவனை இம்சை செய்ய ஆரம்பித்தது
அவள் தனக்கே தனக்கு மட்டுமே வேண்டும் என்ற வேட்கை வந்தது.
இது எதனால் என்று அவனுக்கும் புரியவில்லை அவனுடைய மனசாட்சி ‘டேய் இதெல்லாம் தப்பு டா’ என்று எவ்வளவு கூறினாலும் அவன் அதை ஒரு பொருட்டாக கூட மதிக்கவில்லை.
‘அம்மா அப்பா கிட்ட சொல்லி முதல்ல இந்த கல்யாணத்தை நிறுத்த சொல்லனும்’ என்று நினைத்து கொண்ட வீரா அவன் அறையில் இருந்து வெளியே வர.
அவன் தோட்டத்தில் வேலை செய்யும் பாண்டி வீட்டின் உள்ளே அரக்க பரக்க ஓடி வந்தான்.
வீராவை பார்த்தவன் அவன் அருகில் ஓடிச்சென்று “வீரா அண்ணா வீரா அண்ணா” மூச்சிறைக்க கூற “என்ன டா என்னாச்சி” என்று அவன் கேட்க
“அண்ணா உங்க அப்பாவை பாம்பு கடிச்சிருச்சு தர்மா ஆஸ்பத்திரிக்கு தூக்கிட்டு போய்ருக்காங்க கொஞ்சம் சீக்கிரமா வாங்க அண்ணா” என்று பதட்டத்துடனே கூற
சாவித்திரி சத்தம் கேட்டு அங்கே வந்தவர்
“என்ன சொல்ற பாண்டி அவரு நல்லா தான இருக்காரு” என்று அழுது கொண்டே சாவித்திரி பாண்டியின் அருகில் வந்து கேட்டார்.
“தெரியலை மா கொஞ்சம் சீக்கிரமா வாங்க” என்று பாண்டி கூற வீராவும் சாவித்திரியும் வெளியில் வர நந்தினியும் அவர்களுடன் வந்தாள்.
மூவரும் பாண்டியை அழைத்து கொண்டு மருத்துவமனைக்கு விரைந்தனர்.
வீரா பதட்டத்துடனே காரை ஓட்டிக்கொண்டு வர சாவித்திரி அழுது கொண்டே வந்தார் அவர் அருகில் நந்தினி அவருக்கு ஆறுதல் கூறிக் கொண்டே வந்தாள்.
மருத்துவமனை வாசலில் வந்து கார் நிற்க சாவித்திரி காரில் இருந்து இறங்கியவருக்கு தலையே சுற்றுவதை போல் இருந்தது நிற்க கூட முடியாமல் தடுமாறி விழ போக காரில் இருந்து இறங்கி ஓடி வந்த வீரா அவரை பிடித்து கொண்டான்.
பாண்டி ஓடி தண்ணீர் எடுத்து வர அதை தன் கையில் வாங்கிய வீரா அவர் முகத்தில் தெளிக்க சுயநினைவுக்கு வந்தார் சாவித்திரி.
“அம்மா அப்பாவுக்கு ஒன்னும் இருக்காது எழுந்துரு வா மா உள்ளே போலாம்” என்றான் வீரா.
“ஆமா அம்மாச்சி தாத்தாவுக்கு ஒன்னும் ஆகாது வாங்க போலாம்” என்று நந்தினியும் கூறி அவரை சமாதானம் செய்து தன்னுடன் அழைத்து சென்றாள்.
அங்கே அவசர சிகிச்சை பிரிவில் மூவரும் சென்று நின்றிருக்க மருத்துவர் சுவாமிநாதனை உள்ளே பரிசோதித்து கொண்டு இருந்தார்.
“பதினெழு வருஷத்துக்கு முன்னாடி உங்க அப்பா அம்மாவையும் இப்படி தான் வச்சிருந்தாங்க டி நீ என் கையில அழுதுட்டு இருந்த இன்னும் எத்தனை வலியை தான் நான் தாங்க போறனோ அப்பனே முருகா என் உயிரை வேணும்ன்னா எடுத்துக்க இனி இந்த வீட்ல ஒரு உசுரு கூட போக கூடாது” என்று கூறி கதறி அழுது கொண்டே இருந்தார் சாவித்திரி.
“அம்மாச்சி தாத்தாவுக்கு ஒன்னு ஆகாது அழாதிங்க” என்று கூறிய நந்தினியின் கண்களிலும் இருந்தும் கண்ணீர் வழிந்தோடி கொண்டு இருந்தது.
வீரா இவர்களுக்கு ஆறுதல் கூறும் மனநிலையில் கூட இல்லை அவனுக்கும் என்ன செய்வது என்று ஒன்றும் புரியவில்லை குட்டி போட்ட பூனையாக இங்கும் அங்கும் நடந்து கொண்டு தான் இருந்தான்.
அப்போது மருத்துவர் அறையில் இருந்து வெளியில் வர வீரா பதட்டத்துடனே அவர் அருகில் சென்றான்.
“டாக்டர் என் அப்பா எப்படி இருக்காரு” என்று கேட்டான் சாவித்திரியும் கண்ணை துடைத்து கொண்டு அவன் அருகில் வந்தார்.
“உங்க அப்பாவோட நேரம் ரொம்ப நல்லாவே இருந்துருக்கு சார் நல்ல வேளை விஷம் அவரோட உடம்புல முழுசா ஏறல அதுக்குள்ள அவரு ஹாஸ்பிட்டல்ல அட்மிட் பண்ணிட்டாங்க” என்றார் மருத்துவர்.
“ரொம்ப நன்றி டாக்டர்” என்றான் வீரா அவரின் கைப்பிடித்து
“இட்ஸ் ஓகே நீங்க அந்த கடவுளுக்கு தான் நன்றி சொல்லுனும் இனிமே நீங்க அவரை கொஞ்சம் கவனமா பார்த்துக்கோங்க” என்று கூறிவிட்டு சென்றார்.
இப்போது தான் சாவித்திரிக்கு உயிரே வந்தது.
மூவரும் சுவாமிநாதனை பார்க்க அறையின் உள்ளே செல்ல அவர் காலில் கட்டுடன் அமர்ந்து இருந்தார்.
“என்னங்க” என்று அவர் அருகில் சென்ற சாவித்திரி அழ ஆரம்பித்துவிட்டார்.
நந்தினியும் “தாத்தா” என்று கதறி அழ ஆரம்பித்துவிட்டாள்.
“அழாதிங்க மா அதான் எனக்கும் ஒன்னும் இல்லைல்ல அழ கூடாது” என்று அவர் எவ்வளவு கூறியும் இருவரும் அழுகையை நிறுத்தவேயில்லை.
வீராவுக்கு என்ன சொல்வது என்றே தெரியவில்லை தன் தந்தையிடம் திருமணத்தை நிறுத்த சொல்லலாம் என்று கூற வரும் போது அவருக்கு இப்படி ஆகிவிட அவனால் இனி என்ன செய்ய முடியும்.
அன்று மாலை சுவாமிநாதனை டிஸ்சார்ஜ் செய்து விட வீட்டிற்க்கு வந்து சேர்ந்தனர்.
செய்தி கேள்விப்பட்டு சுபாஷ் மற்றும் திவ்யாவின் வீட்டில் இருந்து அனைவரும் வந்தனர் சுவாமிநாதனை பார்க்க.
அனைவரும் அங்கே அமர்ந்து இருக்க சுபாஷ் நந்தினியின் கையை பிடித்து கொண்டே நின்றிருந்தான் அவனை பார்த்த வீரா ‘இவன் தொல்லை வேற தாங்க முடியல’ என்று மனதில் நினைத்து கொண்டே இருந்தான்.
“எல்லார் கிட்டையும் நான் கொஞ்சம் பேசணும்” என்று சுவாமிநாதன் கூற அனைவரின் பார்வையும் அவரிடம் சென்றது.
“எனக்கு இன்னைக்கு நடந்த விஷயத்துல நான் ரொம்பவே பயந்து போய்ட்டேன் எனக்கு எதாச்சும் ஒன்னு நடக்குறதுக்குள்ள என் மகன் பேத்தி ரெண்டு பேரு கல்யாணத்தையும் பார்க்கனும்ன்னு ஆசையா இருக்கு அதனால வர முகூர்த்தத்திலேயே கல்யாணத்தை வச்சிடலாமா” என்று கேட்டார்.
வீரா அதிர்ச்சியுடன் அவரை நிமிரிந்து பார்த்தான்
சுபாஷ் முகத்தில் மெல்லிய புன்னகை ஒன்று மலர்ந்தது
சுபாஷ் இந்த குறுகிய காலத்தில் அந்த அளவிற்கு நந்தினியை நேசிக்க ஆரம்பித்து இருந்தான்.
“எப்படிங்க சம்மந்தி அப்படி பார்த்தா கல்யாணத்துக்கு இன்னும் ஒரு வாரம் தான இருக்கு சொந்தக்காரங்களுக்கு எல்லாம் சொல்லனும்” என்றார் திவ்யாவின் தாய் பாக்கியம்.
“அம்மாடி இது என்னோட கடைசி ஆசையா நினைச்சி கொஞ்சம் இந்த கல்யாணத்தை நடத்தி கொடுங்க மா” என்று கண்கள் கலங்க சுவாமிநாதன் கேட்டார்.
அவர் கண்கள் கலங்க அங்கிருந்து அனைவருக்கும் ஒரு மாதிரி ஆகிவிட்டது.
“சரிங்க சம்மந்தி உங்க இஷ்டப்படியே பண்ணிடுவோம்” என்றார் பாக்கியம் பதிலுக்கு.
சுபாஷ் “நானும் எல்லா ஏற்பாடும் பண்ணிட்றேன் அங்கிள்” என்றான்.
வீராவுக்கு தெரிந்துவிட்டது இனி தன்னால் ஒன்றுமே செய்ய முடியாது என்று இனி என்ன நடக்குமோ….
தொடரும்….
சூப்பர் சூப்பர் அடுத்த எபி சீக்கிரம் போடுங்க பீளிஸ் படிக்க ஆர்வம இருக்கு ❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️
ஓகே மா
👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌
Super story sis