சண்டியரே 13
ஆரூரன் மிக மிக நிதானமாகவே அவளை விடுவித்தான். மயிலோ அவனை சீற்றத்துடன் பார்க்க..
“நீ பார்க்க பார்க்க காதல் கூடுதே...
நீ கோபமாக பார்க்க பார்க்க காதல் கூடுதே..!!”
என்று அவன் உல்லாசமாக பாட, மயில் உதட்டை அழுந்த கடித்துக் கொண்டாள்.
“ஓஹ்.. மை.. சண்டிராணி… எதுக்கு நீ இப்படி கஷ்டப்பட்டு கடிக்கிற? என்கிட்ட சொன்னேனா.. மாமன் ஹெல்ப் பண்ணுவேன்ல..” என்று அவள் அருகே அவன் நெருங்க.. சட்டென்று உதடுகளை அவள் உள்ளெழுத்துக் கொள்ள வெடித்து சிரித்தான் ஆரூரன்.
“நீ இன்னும் மாறல டி.. அப்படியே தான் இருக்க.. இந்த ஆரூரன் பொண்டாட்டியா..!!” என்றதும் முணுக்கென்று அவள் கண்களில் கண்ணீர் கோர்க்க..
“சரி சரி.. டேம் டேமா கண்ணீரை தொறக்காத..! நான் எதுவும் பேசல..” என்று வாயை ஜிப்பு முடிவது போல சைகை காட்டியவன், “ஆனா.. எப்போதும் அப்படியே இருப்பேன்னு நினைக்காத..!” என்று கூறியவனின் குரல் இரும்பென கனத்தது.
அவனின் அந்த குரலில் மயிலின் உடலில் ஒரு சிலிர்ப்பு சிலிர்த்து அடங்க… அவள் கண்களின் கண்ணீரை துடைக்க அவன் கரங்களும்.. அவளை அணைத்து ஆறுதல் படுத்த நெஞ்சமும்.. ஏகத்துக்கும் ஏங்க.. அதனை காட்டிக் கொள்ளாமல் நின்றான் திடமாய்..!!
அவளைப் பார்த்தவாறே இருக்கையில் அமர்ந்து கைகளை பின்னால் கட்டிக் கொண்டு இமை தட்டாமல்.. விழி அசையாமல்.. பார்வை மாற்றாமல் அவளையே பார்த்துக் கொண்டே இருந்தான் ஆரூரன்.
அவளுக்குத்தான் மிகவும் ஒரு மாதிரியாக இருந்தது. ஆனாலும் கண்களை இறுக்க மூடிக்கொண்டு படுத்தே இருந்தாள். ஒரு கட்டத்தில் அவளாக உறங்கி விட… அவள் நன்றாக உறங்கி விட்டதை உறுதிப்படுத்தியவன் அவளை அணைத்தவாறே அவளோடு அந்த ஒற்றைப் படுக்கையில் படுத்தான்.
“ரொம்ப தான்டி கோபம் வருது உனக்கு… என்னதான் கோபப்பட்டு முகத்தை திருப்பினாலும் நான் தான் உன் புருஷன் என்பதோ, நீ என் பொண்டாட்டி என்பதோ மாறாது..!” என்றவன் மென்மையாக அவள் கன்னத்தில் தன் இதழ் தடத்தை பதித்தான்.
அவளின் வாசம் அவனுள் சுவாசமாய் இறங்க.. அதன்பின்னே
தான் அவனது கண்கள் தூக்கத்தை தழுவியது.
விடிய காலையிலேயே வந்து விட்டார் தியாகேசன் மகளைக் காண.. அவளின் பத்திரத்தை உறுதி செய்ய..
வந்தவர் அறைக்கதவு உள்ளே தாழ்ப்பாள் போட்டு இருப்பதை கண்டு பதட்டப்பட்டு.. கோபப்பட்டு.., கதவை வேகமாகத் தட்டோ தட்டென்று தட்ட…
அப்பொழுது நைட் டூட்டியில் இருக்கும் வேறொரு செவிலியப் பெண் “மார்னிங் டியூட்டி சித்ரா சொல்லிட்டு தான் போனா.. நீங்க இந்த மாதிரி இடைஞ்சல் கொடுத்துகிட்டே இருந்தீங்கன்னா உங்கள ஹாஸ்பிட்டலுக்குள்ளேயே விட வேண்டாம்னு செக்யூரிட்டி கிட்ட சொல்லிடுவேன் பார்த்துக்கோங்க.. இது என்னமோ உங்க வீடு மாதிரி நினைச்சுட்டு இந்த தட்டு தட்டுறிங்க” என்று அப்பெண் எச்சரிக்க..
“போற வரங்க கிட்ட எல்லாம் திட்டு வாங்க வேண்டி இருக்கு.. எல்லாம் இவனால் தான்..!” அவர் செய்யும் சிறு சிறு தவறுக்கும் தப்புக்கும் காரணம் ஆரூரன் என்று அவர் மனது குற்றம் சாட்டியது..!! அறிவு நியாயம் பேசியது..!
படார் என்ற கதவை திறந்த ஆரூரன் “காலையிலே வந்தாச்சு.. சிவ பூஜை கரடி..!” என்றவன், அவரைக் கண்டு கொள்ளாமல் மீண்டும் மனைவிக்கு அருகிலேயே அவளை அணைத்தவாறு படுத்துக் கொள்ள.. அதை கண்டதும் தியாகேசனுக்கு ஒரு புறம் கோபமும் மறுபுறம் கூச்சமுமாய்..!
எப்படி உள்ளே அவரால் இருக்க முடியும்..? ‘இவன் செய்கிற வேலைக்கு..’ என்று பல்லை கடிக்க மட்டுமே முடிந்தது அவரால். வெளியே சென்று கைகளை இறுக்க கட்டிக்கொண்டு முகத்தை கடுகடுவென்று வைத்துக்கொண்டு அமர்ந்து விட்டார்.
அவர் வெளியே செல்வதை ஓரக்கண்ணால் பார்த்த ஆரூரன் ‘அப்படியே இருக்கணும் மாமோய்.. என் ஃபேமிலிக்குள்ளார நீ தலையிடவே கூடாது! தலையிடவும் விடமாட்டேன்’ என்று அவனுக்கு முதுகு காட்டி உறங்கிக் கொண்டிருந்தவளின் இடையில் கை போட்டு தன்னோடு இறுக்கி அணைத்து விட்ட தூக்கத்தை தொடர்ந்தான்…!!
காலையில் தியாகேசன் வரும் முன்னே செவிலியர் வந்து மயிலுக்கு பரிசோதனைகளை எல்லாம் செய்து முடித்துவிட்டு சென்றிருக்க.. அதனால் இப்போது யாரும் தொந்தரவு செய்யவில்லை. அதனால் இவனும் விட்ட தூக்கத்தை தொடர்ந்து கொண்டிருந்தான் அவளின் ஸ்பரிசத்தில்.. வாசத்தில்…!!
தன் மெல்லிடையில் இறுக்கி அணைத்திருக்கும் முடி அடர்ந்த முரட்டு கையும்.. தன் பின் கழுத்தில் சூடேற்றும் வெம்மை மூச்சும்… கூடவே ஜாக்கெட் மூடப்படாத இடத்தை அவ்வப்போது உரசும் அவனது கற்றை மீசையும்.. மெல்லியாளின் உடலோடு உரசும் ஆணவனின் தேக்கு மர தேகமும்.. பெண்ணவளுக்கு உள்ளுக்குள் பல வித உணர்ச்சிகளை தூண்டியது.
அவனுடன் பத்து நாட்கள்
அந்நியோன்யமாக வாழ்ந்தவள் அல்லவா?? அது மட்டுமன்றி இணையின் மீது கொள்ளும் உணர்ச்சிகள் இருவருக்கும் பொதுவன்றோ..!!
ஆனாலும்… உதட்டைக் கடத்து தன்னை கட்டுப்படுத்திக்கொண்டு படுத்திருந்தாள்.
என்னதான் இவன் கட்டிய கணவனாக இருந்தாலும், இப்படி வேற பேர் கொண்டு தன்னை ஏமாற்றி திருமணம் செய்ததை அவளால் ஏற்க முடியவில்லை. அவள் பெண் மனது வெகுவாய் காயப்பட்டிருந்தது.
அந்த காயத்துக்கு மருந்தாக இல்லாமல், மீண்டும் மீண்டும் அவனின் பேச்சு அவளை மீண்டும் மீண்டும் காயப்படுத்துவதாகவே அமைந்தது.
“அப்போ இவருக்கு தேவை நான் அல்ல.. ஒரு பெண்ணோட உடம்பு மட்டும்.. அது கொண்ட காமம் மட்டும் போதும் போல..” என்று மனம் குமைந்தாள்.
கூடவே அதுவரை தனக்கு மட்டும்தான் இவன் உரிமையாளன் என்று இருக்க.. ஏற்கனவே திருமணம் ஆகி.. ஒரு பொண்ணோடு இரண்டற கலந்து வாழ்ந்து ஒரு குழந்தைக்கு தகப்பன் இவன்.. என்று வலியும் சேர்ந்து கொண்டது.
என்னைப் போல என் கணவன் என்று உரிமையுடன் அவனிடம் நான் காட்டிய என் நெருக்கங்கள்.. பகிர்ந்து கொண்ட என் ரகசியங்கள்.. போல இல்லை அவன். ஏனென்றால் நான் அவனுக்கு முதல் இல்லை..!
அவனும் தன்னிடம் அவனது அந்தரங்களை பகிர்ந்துக் கொண்டியிருக்கிறான் தான். ஆனால் அது தன்னிடம் மட்டும் அல்லவே..?? வேறொரு பெண்ணிடமும் இப்படித்தானே இருந்திருக்கிறான்..
இவனால் எப்படி முடிகிறது? இருவரிடமும் உறவுக் கொள்ள..??
அந்த பெண் இறந்து சிறிது நாட்களிலேயே அடுத்து என்னை திருமணம் செய்து கொண்டு என்னிடமும் அதே நெருக்கங்கள்.. அதே கொஞ்சல்கள்.. அதே கூடல்கள்.. எப்படி முடிகிறது இவனால்??
நேற்றில் இருந்து இம்மாதிரியான எண்ண குவியல்கள் அவளை அலைக்கழித்துக் கொண்டு இருந்தது. அதனை யாரிடமும் பகிர முடியாமல் தனக்குள்ளே போட்டு மருகிக் கொண்டிருக்கிறாள் மயில்.
யாரிடமும் இதனை பகிர்ந்தால் கூட அவளைத்தான் சமாதானப்படுத்துவார்கள். யார் பேச்சையும் கேட்கவும் பிடிக்கவில்லை.. யாரையும் பார்க்கவும் பிடிக்கவில்லை..!
அதனால் யாரிடமும் எதுவும் பேசாமல் கண்களை மூடி இதற்கு எல்லாம் என்ன தீர்வு? என்ன தீர்வு? என்று யோசித்துக் கொண்டே இருக்கிறாள். மற்றவர்கள் பார்வைக்கு இவள் ஆழ்ந்த தூக்கத்தில் இருக்கிறாள் என்று காட்டிக் கொண்டிருந்தாள். ஆனால் அதையும் கண்டுபிடித்து விட்டான் கள்வன்..!!
மீண்டும் அவள் தன் எண்ண சுழலில் சிக்கித் தவித்து கொண்டிருக்க.. சட்டென்று அவள் இடையில் இருந்த வலிய கரம் அவளை தன் புறம் திருப்பி “ரொம்ப யோசிக்காத மயிலு.. பேசாம தூங்கு..!” என்றவன் அவள் மேலே சற்று படந்தாற் போல் படுத்து கழுத்து வளைவில் முகத்தை புதைத்து கொண்டு, மீண்டும் தூங்க..
‘எப்படி இவரால் மட்டும் நிம்மதியாக தூங்க முடிகிறது?’ என்று ஆத்திரம் ஆத்திரமாக வந்தது. ஆனாலும் அதை காட்ட முடியாமல் கண்களை மூடி அமைதியாக இருந்தாள்.
இவளுக்கு சற்றும் குறையாத அநேக சிந்தனைகளில் தான் சிக்கிக் கொண்டிருந்தான் ஆரூரன். ஆனால் அதை எதையும் வெளியில் காட்டிக் கொள்ளவில்லை.
காலையில் ரவுண்ட்ஸ் வந்த மருத்துவர் தங்கமயிலை சோதித்து விட்டு “இப்போ உங்க மிர்ஸஸ் ஓகே தான். நீங்க வீட்டுக்கு கூட்டிட்டு போகலாம். நான் சொன்னதை நீங்களும் கொஞ்சம் யோசிங்க மிஸ்டர் ஆரூரன்” என்றதும் “சூர் டாக்டர்” என்றான் ஆரூரன் பதிலுக்கு.
டாக்டர் கிளம்ப சொன்னது தான் தாமதம் மகளை எழுப்பி “வா.. வா கிளம்பலாம்..” என்று அவசரப்படுத்தினார் தியாகேசன். கமலாம்பிகை காலையில் தவசியோடு வந்திருக்க…
“ஏன் இவ்வளவு அவசரப்படுறிங்க? அவ கைல சலைன் போட்ட ஊசி எல்லாம் அப்படியே இருக்கு அதெல்லாம் எடுக்க வேணாமா? ரிசார்ஜ் பண்றதுக்கு பணம் எல்லாம் கட்ட வேணாமா? என்ன உங்க பாட்டுக்கு இழுத்துட்டு போறீங்க?” என்று அவர் கடிய..
“நான் போய் என் பொண்ணுக்கு பணம் கட்டிட்டு வரேன். வேற யாரும் காட்ட வேண்டாம்..!” என்று அவர் வேகவேகமாக சென்றவரை ஒரு தோள் குலுக்கலோடு அமைதியாக நின்று இருந்தான் ஆரூரன்.
தவசி அவனை சந்தேகமாக பார்க்க கண்ணை சிமிட்டு சிரித்தவன் “பண்ணட்டுமே என் மாமனார் தானே.. பொண்ணுக்காக பணம் கட்டினா குறைஞ்சா போய்விடுவார்?” என்றதும் வெடுக்கீன்று கணவனை நிமிர்ந்து பார்த்தாள் தங்கமயில்.
“என்ன மயிலு.. உங்க அப்பா உனக்காக இது கூட பண்ண மாட்டாரா?” என்றவனது கண்களின் சிரிப்பும் முகத்தில் தெரிந்த அப்பாவி லுக்கும் ஒன்றுக்கொன்று பொறந்தாமல் அப்பட்டமாகவே அவளை வம்புக்கு இழுப்பது புரிந்தது.
‘நீ என்ன வேணா பேசிக்க நான் உனக்கு பதில் பேசப்போவதில்லை..!’ என்று மௌனமாக அவள் அமர்ந்திருக்க…
வேகமாக சென்று தியாகசன் சுவற்றில் அளித்த பந்து போல் அதே வேகத்துடன் திரும்பி வந்து “அதுதான் நீ ஏற்கனவே பணம் கட்டிட தானே.. அப்புறம் எதுக்கு நான் போகும்போது சும்மா வாயை மூடிக்கிட்டு இருந்த?” என்று ஆரூரனிடம் காய்ந்தார்.
‘எப்ப இவன் பணம் கட்டுனான்?’ என்று யோசித்தபடி மயில் அவனைப் பார்க்க..
தன் மொபைலை காட்டி “இருந்த இடத்திலேயே எல்லாம் செய்ய முடியும்..! இந்த ஒற்றை சாதனத்தை வைத்து..!” என்று விளம்பரங்களில் வருவது போல அவன் பேசி காட்ட,
தவசியோ ‘நீ நடத்து.. நடத்து ராசா.. நான் வெளியில் கார் எடுக்கிறேன்” என்று அவன் வெளியில் சென்றான்.
“அவன் கார் எடுத்தா எடுத்துட்டு போகட்டும். நான் வண்டி எடுத்துட்டு வந்து இருக்கேன். மயிலு நீ என்கூட தான் வர நம்ம வீட்டுக்கு.. இவன் சங்க்காதமே இனி நமக்கு வேணாம். இவனும் இவன் குடும்பம் எப்பா வேண்டவே வேணாம்.. என்ன ஒரு பிராடு குடும்பம்..!” என்று தன் போல குழம்பிக் கொண்டு மகளை எழுப்பினார்.
“நானும் அந்த குடும்பத்தில் இருந்து வந்தவள் தான்” என்று பல்லை கடித்தார் கமலாம்பிகை.
அதையெல்லாம் கண்டு கொள்ளவில்லை தியாகேசன். மகளை ஆரூரனிடமிருந்து காப்பாற்றி விட வேண்டும் என்ற நினைப்பு மட்டுமே அவருக்கு.
ஆரூர் அணை வில்லன் ரேஞ்சுக்கு கற்பனை செய்து வைத்திருந்தவர், மகளை அந்த வில்லனிடமிருந்து காப்பாற்றி தன் வீட்டுக்கு அழைத்துச் சென்று விடுவது என்று பிடிவாதமாக நின்றிருந்தார்.
“நடந்ததுக்கு நான் விளக்கம் தரேன்னு சொல்லிட்டேன்.. என் பொண்டாட்டிய நான் என் வீட்டுக்கு தான் கூட்டிட்டு வோவேன். என்ன பஞ்சாயத்துனாலும் நீங்க அங்க வச்சு பேசிக்கங்க.. உங்க வீட்டுக்கு எல்லாம் நான் அனுப்ப முடியாது” என்று அதுவரை இலகுவாக இருந்தவன் இறுக்கமாய் கூற, தியாகேசன் அவனை முறைத்து பார்த்துவிட்டு “அதெல்லாம் முடியாது உன் வீட்டுக்கு நான் அனுப்ப முடியாதுனா முடியாது..” என்று கத்தினார்.
“நீர் என்ன சொல்றது? சட்டப்படி எனக்கு உரிமை இருக்கு. மீதி நீர் ஏதாவது பேசுனும்மா பேசும். ஆனா என் வீட்ல வந்து பேசும். இப்படி பொது இடத்தில் பஞ்சாயத்து வைப்பதெல்லாம் என்கிட்ட நடக்காது” என்று தன் கையில் இருந்த காப்பை முறுக்கிக் கொண்டு அவன் பேசிய தொணியே தியாகேசனை மிரள செய்தது.
அன்று அவர் அடக்கி வைத்த பதின்ம வயது பையன் அல்லவே இப்பொழுது ஆண்மகன் அல்லவா?
“இங்கே என்னென்ன கத்தி கத்தி உமக்கு நீரே அவமானத்தை தெறிக்காதீரு” என்றவன்,
“நர்ஸ்..” என்ற சத்தமாக அழைக்க அங்கே வந்து செவிலிப் பெண்ணிடம் அவள் கையில் இருக்கும் ட்ரிப்ஸ் ஏறிய ஊசியை காட்ட அதை எடுத்து விட்டு பேண்டேஜ் போட்டு விட்டாள்.
“மயில் எழுந்திரு.. போகலாம்” என்று ஆரூரனின் அதட்டினான்.
அதுவரை அப்பா கூட செல்லலாம் என்று முடிவில் தான் அவளும் இருந்தாள். அந்த ஒற்றை அதட்டலில் அவள் உடல் தூக்கி வாரி போட, திடுக்கிட்டு அவனை நிமிர்ந்து பார்க்க அவன் கண்களில் தெரிந்த கனலில் அவள் மறுவார்த்தை பேசாமல் கிளம்பினாள்.
‘எப்படியும் பேசி தான் ஆக வேண்டும்.. பேசாமல் ஏன் போக வேண்டும்? தாத்தாவிடமே நியாயம் கேட்போம்’ என்று எண்ணியவாறே அன்னையோடு நடந்து சென்றாள்.
இருவரையும் நிற்க வைத்து ஆலம் கரைத்து திருஷ்டி கழித்து உள்ள அழைத்தார் கமலாம்பிகை.
“எத்தனை எத்தனை பொல்லா கண் திஷ்டியோ” என்று சொல்லிக்கொண்டு செல்ல..
“நான் என் பொண்ண என் வீட்டுக்கு கூட்டிட்டு போக போறேன்.. இப்ப இதெல்லாம் ரொம்ப அவசியமா?” என்ற போகிற போக்கில் முணுமுணத்தப்படியே தான் விஜயராகவன் வீட்டுக்குள் அதாவது மாமனார் வீட்டுக்குள் நுழைந்தார் தியாகேசன்.
“வாடா தங்கமா உடம்பு இப்ப பரவாயில்லையா?” என்று விஜயராகவன் பேத்தியின் தலையை வருடி கேட்டார்.
மெல்ல தலையாட்டினாள் தங்கமயில். “மொதல்ல குளிச்சிட்டு கொஞ்ச நேரம் ஓய்வு எடுடா” என்றதும்,
“ஓய்வெடுக்கலாம் நாங்க யாரும் வரல.. முதல்ல பேசுறது பேசி முடிக்கணும். அப்புறம் என் பொண்ணு என் வீட்டுல கூட்டிட்டு போய் ஓய்வெடுக்க வச்சுக்கிறேன்” என்றார் எங்கோ பார்த்துக் கொண்டு தியாகேசன் கட்டன் ரைட் ஆக..
“முதல்ல உடுப்ப மாத்திட்டும் அவ.. ஆஸ்பத்திரில இருந்து வந்திருக்கா.. அதே உடுப்போடவா இருக்க முடியும்? நீ போய் மாத்திட்டு வாடி” என்று ஒரு அதட்டல் போட்டார் கமலாம்பிகை.
எங்க போய் மாற்றுவது என்று அவள் யோசித்துக் கொண்டே நிற்க “ஏன் ஒரு நாள்ல எல்லமே மறந்து போயிடுச்சா.. நான் வேணா ஞாபகப்படுத்த வா? இல்ல தூக்கிட்டு போகவா?” என்று அருகில் கேட்ட அவன் குரலில் வேகமாக மாடிக்கு ஓடினாள் தங்கமயில்.
அறைக்குள் நுழைந்ததுமே அறை முழுவதும் அவர்கள் காதல் கொண்டு களித்த நினைவுகளே..!
ஒவ்வொரு இடத்திலும்.. அவனின் இறுகிய அணைப்புகளும்..
முரட்டு முத்தங்களும்..
அவளின்..
செல்ல சிணுங்கல்களும்..
மெல்லிய முணங்கல்களும்..
மீண்டும் மீண்டும் அவள் காதில் ஒலிக்க..
“ச்ச.. கேடு கெட்ட மனசே..! என்று காதுகளை இறுக மூடிக் கொண்டாள்.
“காத மூடினா.. கொஞ்சுனது இல்லன்னு ஆகிடுமா? இல்ல நாம இரண்டு பேரும்…” அடுத்து அவன் என்ன சொல்ல வந்தானோ சட்டென்று அவனது வாயை தன் தளிர் விரல்களால் பொத்தினாள் தங்கமயில்.
அவள் உதடுகளை கோபத்தில் சுளித்தாள். அவள் விரல்களில் கற்றை மீசை உரச முத்தம் கொடுக்க.. அவளோ விரல்களை விலக்க,
”என்னாச்சு.. மீசை குத்திடுச்சா?’ என்று அவளது விரல்களை அவன் பிடிக்க..
வெட்கத்தை மறைத்து குறுக்காக தலையை ஆட்டினாள் மயில்.
“ஒன்னுல்ல.. ” என்றாள் வெடுக்கென்று கோபமாக.
”அப்போ குத்தலையா? ஆனா.. நீ மறைச்சத நான் பாத்திட்டேன்” என்றான் குறும்போடு.
“என்ன??” என்று அவள் அதிர்ந்து மாராப்பை சரி செய்ய..
“அடியே.. மயிலு.. நான் பார்க்காத ரகசியங்கள் ஏதும் மீதம் உன்னிடம் இருக்கா?” என்றான் சரசத்துடன்.
“நீங்க இப்படியெல்லாம் பேசி என்னை மயக்க வேண்டியது இல்ல..”
என்றாள் சீற்றத்துடன்.
“புதுசா மயக்க என்ன இருக்கு? ஏற்கனவே மயங்கிப் போய்த்தான் இருக்க..” என்று அவளது காதல் மனது கிண்டல் செய்தது. !!
‘இது நல்லதுக்கில்ல’ அவளது கோப மனது சொல்ல.. ஒரு பெருமூச்சுடன் சட்டென எழுந்து விட்டாள்.
”தள்ளுங்க.. நான் புடவை எடுக்கணும். குளிக்க போறேன்.. ” என்றாள்.
”எனி ஹெல்ப் மயிலு??” என்றான் முகத்தில் தவழ்ந்த குறும்பு புன்னகையோடு.
“என்னது.. ?” அவள் விழி விரிய கேட்க..
“ஹாஸ்பிடலில் இருந்து வந்திருக்க.. நேத்து இருந்து சரியா சாப்பிடவே இல்ல.. மயங்கி விழுந்துட்டேனா அதுக்காக தான் கேட்டேன்” என்றான் ஆரூரன் நல்லவனாய்..!
“போயா நீயும் வேண்டாம்.. உன் ஹெல்ப்பும் வேண்டாம்..!” என்று பீரோவில் இருந்து புடவை எடுத்து அவள் திரும்ப..
“என்னது நான் வேணாமா? நீ செத்தால் கூட ஆரூரன் பொண்டாட்டிய தான் டி சாவ..” என்றவன், அவளை பீரோவோடு அழுத்தியவனின் அதரங்கள் அவளது அதரங்களை கொள்ளை கொண்டது என்றால்.. அவனது திண்ணிய நெஞ்சில் அவளது மென்மைகள் நசுங்க.. அவனது கரங்கள் அவள் அங்கங்களை களவாட.. அவனின் கோபத்தை தாங்க இயலாது அவளின் அதரங்களும்.. அவளது அங்கங்களும் அவனிடம் பாடாய் பட்டது..!
அவளின் வேண்டாம் என்ற ஒற்றை சொல் அவனை ரௌத்திரனாய் மாற்றி இருந்தது.
அவள் தொய்ந்து விழப்போகும் சமயத்தில் விட்டவன் “சீக்கிரம் குளிச்சிட்டு வா” என்று கீழே சென்றான்.
“என் பொண்ணு இனி உன்னோட வாழவே மாட்டா.. நான் அவளை என் வீட்டுக்கு கூட்டிட்டு போறேன்” என்று தங்கமயில் கரத்தை பற்றி இழுத்துச் சென்றார் தியாகேசன்.
“அப்போ எங்க அக்காவும் உங்க கூட வாழாது. அதுவும் எங்க கூட.. எங்க வீட்டிலேயே இருக்கும். என்னக்கா?”
என்றதும் கமலாம்பிகையும் ஆமாம் என்று தலை அசைக்க..
அதிர்ந்து மனைவியையும் மச்சானையும் பார்த்தார் தியாகேசன்.
“மாப்பு.. வச்சுட்டான் உனக்கு ஆப்பு..!” என்று வாயை மூடிக்கொண்டு சிரித்தான் தவசி.
Superb….🫢🤭🤣thavasi reaction…
Next episode pls