19
பூர்ணாவின் திருமணம் முடிந்து விட்டது அதனால் இனி எல்லாம் சுபமா என்றால் நிச்சயம் இல்லை…
பின்னே திருமணம் செய்து பூர்ணாவை அருண் தன் வீட்டிற்கு அழைத்து வந்து விட்டதோடு சரி…
திருமண இரவில் தனித்திருக்கவும் இல்லை…உரிமையோடு கூடி உறவாடவும் இல்லை…காரணம் அருணின் காவல் பணி அது தமிழகத்தில் தேர்தல் நடந்து கொண்டு இருந்த சமையம்… தீவரமாக பிரச்சாரங்களும் பரப்புரைகளும் மேற்கொள்ளப்பட்டதால் போலீஸ் ஆங்காங்கே தேடுதல் வேட்டை பந்தபஸ்த் என அநேக வேலையில் முழ்கி இருந்தனர்…
அருணும் பூர்ணாவும் ஒரே அறையில் இருந்தாலும் தனித்தனியாக தான் இருந்தனர்…அவன் வரும் நேரம் இவள் உறங்கி விடுவாள்…அவன் தூங்கும் நேரம் இவள் விழித்திருக்க என இப்படியே இருவரும் கண்ணாமூச்சி ஆடி கொண்டு மூன்று மாதங்களை கடத்தி விட்டனர்…
இந்த இடைவெளி பூர்ணாவின் மனதில் அருணை பற்றி எண்ணம் மாறி இருந்தது…
அது நல்லதா கெட்டதா என்றால் நிச்சயம் நேர்மறையான மாற்றம் தான்… தினம் தினம் அவளுக்கு புதியவனை பிடித்தவனாய் தெரிந்தான்… என்னதான் வேலை பளு இருந்தாலும் இரவு உணவையாவது பூர்ணாவோடு சாப்பிடும் பழக்கத்தை உருவாக்கினான்… இரவு பணியில் இருந்தாலும் அவளோடு போனில் பேசியப்படி அவள் உறங்கும் வரை பல கதைகள் கதைப்பான்…
அதுல பாருங்க ஒன்னு கூட புதுசா கல்யாணம் ஆன புருஷன் பொண்டாட்டி மாதிரி பேசினதே இல்லை… வழக்கம் போல ஊர் கதை உலக கதை பேசினா எந்த பொண்ணு தான் பொறுப்பா…
தன் கணவனோடன காதல் கணங்களுக்காக பெண்ணவள் வாடினால்…அவனோடான தனிமைக்காக பூவையவள் ஏங்கினாள்…
ஒரு கட்டத்திற்கு மேல் பூர்ணாவின் ஏக்கம் எல்லையை கடக்க எரிச்சல் கொண்டாள்… எதிலா…??
அட பார்க்கும் எல்லாவற்றிலும் தான் பாஸ்…உதாரணத்துக்கு… காதல் கதைகளை கரித்து கொட்டினால்… காதல் பாடல்கள் பருவத்தை எரித்தன…அவ்வளவு ஏன் யாராவது ஜோடியா போனா கூட உள்ளூர பொசுங்கினாள் பெண்ணவள் அவள் மன்னவனுக்காக…
காதல் காதல் ன்னு உருகுறியே காதலிச்சா கல்யாணம் பண்ண என்று கேட்டால்…
ஏன் கல்யாணம் பண்ணிக்கிட்டு காதலிக்க கூடாதா என்பாள்… ஆக மொத்தம் நல்லா வாழ்ந்தா சரி…
அவன் வேலைக்கு தயாராகி செல்லும் போது எல்லாம் அவனையே கடித்து தின்பது போல் பார்த்து வைப்பாள்…
வீட்டில் இருக்கும் நேரம் அவளுக்கு கூட மாட உதவி செய்ய தோதாய் அவன் பணியன் லுங்கியில் சாவகாசமாய் சுற்றும் போது அவன் விரிந்த மார்பில் தஞ்சம் கொள்ள பெண் உள்ளம் ஏங்கும்…
காலை வியர்க்க விறுவிறுக்க உடல் பயிற்சி செய்யும் போது அவன் வியர்வை படிந்த முதுகோடு ஒட்டி கொள்ள ஆசை… கனிந்து பேசும் கண்கள் அவளை கொஞ்சம் காமமாக பார்க்க ஆசை…சிரித்து பேசும் இதழ்கள் கடித்து வைக்க ஆசை…தட்டி கொடுக்கும் கரங்கள் அவளை இறுக கட்டிக்கொள்ள ஆசை…இரண்டாய் இருக்கும் உடல்கள் ஒன்றாய் இணைய ஆசை…ஏங்கி நிற்கும் அவள் பெண்மையை அவன் காதல் தீயில் அணைக்க ஆசை…
இப்படி பல ஆசைகளோடும் கனவுகளோடும் அருணின் கண்ணாட்டி காத்து இருப்பது தெரியாமல் கடமை கண்ணியம் கட்டுப்பாடு என்று அலையும் அந்த காவலன் அறிந்து இருக்க வாய்ப்பு உண்டோ…??
காலையில் விரைவாக எழுந்து அருணிற்காக யூடுபை பார்த்து அவசரம் அவசரமாக அவனுக்காக அறுசுவை சமைத்து இருக்க… அவனோ நேரமில்லை என்று சாப்பிடாமல் கிளம்பி சென்று விட்டான்…
“ என்ன ஆச்சி இந்த ஆளுக்கு ஏன் இப்படி நடந்துக்குது…முன்ன அவர் என் பின்னாடி சுத்தினார் அப்போ நான் அவரை கண்டுக்கலைன்னு இப்போ இவர் நான் அவர் பின்னாடி சுத்தும் போது கண்டுக்காமல் என்னை பழிவாங்குறாரா… அப்படி மட்டும் இருக்கட்டும் இருக்கு அந்த ஆளுக்கு…!!”என உள்ளுற குமைந்த படி சுற்றி வந்த மருமகளை பார்த்து ஒரு பக்கம் பாவமாகவும் மறுபக்கம் பயமாகவும் இருந்தது…
பின்னே உங்க மகனுக்கு ஆசையா செஞ்சது அவர் திங்களை அதுனால அதை பூராவும் நீங்க தான் காலி பண்றிங்க என திணற திணற மொத்தத்தை அவரையே கட்டாயப்படுத்தி சாப்பிட வைத்து விடுவாள்… அது மட்டுமா உங்க புள்ளைய ஆசையா வெளிய கூட்டிட்டு போக சொன்னா அவர் அம்மா கூட போக சொல்லிட்டாரு வாங்க என வயதானவர் என்றும் பாராமல் கோவில் பூங்கா கடை என வெளியே கூட்டி சென்று அலைக்கழித்து விடுவாள்…அத்தோடவது விடுவாளா…?? இல்லை… அருண் இரவு பணிக்கு சென்று விட்டால் இவள் மாமியார் அறைக்குள் புகுந்து என்னத்த பிள்ளையை வளர்த்து வச்சி இருக்கீங்க என முழு நீளத்திற்கு அவனைப் பற்றி குற்ற பத்திரிக்கை வாசித்து விட்டு எங்க வீட்ல என்னை இப்படி வளர்த்தாங்க அப்படி வளர்த்தாங்கள் என சுயபுராணம் பாடி முடிக்கும் போது விடிந்து இருக்கும் அதுக்கு மேல எங்க தூங்க…
அவர் மகன் அவளுக்கு கொடுப்பதை எல்லாம் டபுள் மடங்காக சேர்த்து வைத்து அவருக்கே வந்து சேர்ந்தால் மனுஷி தெறித்து ஓடாமல் என்ன செய்வார்… இன்றும் அப்படியே மகன் உண்ணாமல் சென்று விட…வேற என்ன
எங்க என் மாமி’யாரை காணோம்… என விடு முழுக்க பூர்ணா அவரை தேட அவள் கண் மறைத்து வாசல் பக்கம் நழுவ பார்த்தவரை…பிடித்து கொண்டார் ஜெயந்தி…
எதே…??
எஸ் எஸ்…பூர்ணாவின் தாய் அதாவது திருமதி ஜெயந்தி கோவிந்தனே தான்…
என்ன சம்மந்தி வெளிய கிளம்பிட்டீங்களா…?? உங்களை பார்க்க தான் இவ்வளவு தூரம் வந்தேன்… வாங்க உங்க கிட்ட முக்கியமான விஷயம் பேசணும்… என அவரை கையோடு கூட்டி வர…
அவர் ஜெர்க் ஆனார் பின்னே அவரே இவர் மகளுக்கு பயந்து வீட்டை விட்டு வெளியற பார்த்தால்…கையும் களவுமாக பிடித்து இழுத்து வந்து விட்டாரே… மாட்டிக்கொண்ட பீதியில் அவர் முழிக்க…
என்ன சம்பந்தி ஏன் இப்படி திரு திருன்னு திருடனை போல முழிக்குறிங்க…என்ன ஆச்சு என ஜெயந்தி என்னவோ அறியாமல் தான் கேட்டார்…
ஏன்டா என்கிட்ட மாட்டிக்கிட்டோமேன்னு முழிக்குறாங்க…என்றபடி பூர்ணா அங்கு வர பீதி ஆனார் சாந்தி…
என்னடி சொல்ற…?? விளங்குது ஜெயந்தி கேட்க…
அது ஒன்னும் இல்லமா போர் அடிக்குது நானும் மாமியாரும் கண்ணாமூச்சி ஆடிட்டு இருந்தோம்… நீ வந்து மாமியார் பிடிச்சி கொடுத்துட்டியா அதுதான் அப்படி முழிக்குறாங்க… என்ன மாமியார் நான் சொல்றது சரிதானே…என்க
ஆமாம் ஆமாம் என்றார் வேகமாக மஞ்சள் தண்ணீர் தெளித்த ஆடு போல்…
“ நல்ல பொண்ணுடி நீ… இப்படித்தான் வயசானவங்க கூட விளையாடுறதா… ஆளுதான் வளர்ந்திருக்கியே ஒழிய உனக்கு கொஞ்சம் கூட பொறுப்பே இல்ல பூர்ணா…??” என அன்னையாக கண்டிக்க…
“அதெல்லாம் ஒன்னும் இல்ல சம்மந்தி என் மருமகள் நல்ல பொறுப்பான பொண்ணு தான்… நான் ஒன்னும் சும்மா சொல்லல சம்மந்தி வேளளா வேலைக்கு என்னை பார்த்து பார்த்து என் மருமக கவனிச்சிக்கிறதால தான் நான் முன்பை விட இப்போ தெம்பா இருக்கேன்… என சாந்தி கூற கேட்ட ஜெயந்திக்கு மனசுக்குள் நிம்மதி வந்தது…