24
சுடர் விடும் செங்கதிரவனின் வெப்ப கதிர்களின் வீச்சு தாளாமல் மறைந்து போனது கார் இருள் மேகம் … நேற்று பெய்த அடை மழையில் சலவை செய்த பளிச் நீல நிற உடையில் செழிப்பாக மிடுக்கினான் வானவன்…
நேற்று வரை இருண்டு கிடந்த மேகங்கள் யாவும் இன்று தெளிந்த நீல வானத்தை போலவே பூரணியின் வாழ்க்கையும் தெளிவாகவே சென்றது…
அன்று ஒரு விடுமுறை நாள் அருணுக்கும் அன்று பணி ஓய்வு என்பதால் வீட்டிலே இருந்தான்…அருணின் திருமணம் வேண்டுதல் என்று கூறி சாந்தியும் இருவருக்கும் தனிமை கொடுத்து விட்டு வெளியே சென்று இருக்க…
கணவன் மனைவி இருவரும் தங்களுக்கான தனி உலகில் சஞ்சரித்தனர்…
அருண் அன்று மதிய உணவை தயாரிக்க ஏதுவாக வழக்கமாக வீட்டில் இருக்கும் போது ஆண்கள் அணியும் ஆஸ்தான உடையான லுங்கி மற்றும் பனியனை அணிந்திருந்தான்…
அருண் சமைத்துக் கொண்டிருக்க பூரணி அங்கு சமையல் மேடை அருகே நின்று அவனோடு வாய் பேச்சில் கலகலப்பாக சென்று கொண்டு இருந்தது…
பார்த்து பார்த்து பக்குவமாக தன் கணவன் சமைக்கும் அழகை கண் கொட்டாது ரசித்தப்படி நின்று இருந்தாள் பூர்ணா…
மனைவியின் பார்வை தன்னை விழுங்குவதை உணர்ந்தவனுக்கு அது கூச்சத்தை கொடுத்தது…
“என்ன மேடம் பார்வை எல்லாம் பலமாய் இருக்கு…?? கன் படிக்கிற கையால் கரண்டியை பிடிக்கறானேன்னு பார்க்கிறியா என அவள் கவனத்தை திசை திருப்பினான்…
அட என் புருஷன் என் உரிமை நான் சைட் அடிப்பேன் கட்டி புடிப்பேன் கடிச்சி கூட வைப்பேன் என்னை யார் கேக்குறது…??என சொல்லிய அத்தனையும் செய்து விட்டு நிற்பவளை அவனால் என்ன தான் செய்ய முடியும் அவள் அடாவடி தனத்தை ரசிப்பதை விட வேறென்ன வேலை அந்த காதல் கணவனுக்கு …
ஸ்ஸ் ரௌடி பேபி இப்படி கட்டிக்கிட்டு நின்னா எப்படி சமைக்க என்றவன் என்னவோ அவளை வளைத்து நெருக்கி வாகாக அணைத்து இருந்தான்… ஒருக்கையால் அவளை அணைத்து கொண்டு மறு கையால் சமைத்து கொண்டு இருந்தான் சாமர்த்தியக்காரன்
ஹும் ஏன் போலீஸ்கார் கன் பிடிக்கிற கையாள பெண்ணை பிடிக்கலாம் ஆனால் கரண்டி பிடிக்க கூடாதா…?? என்றவளின் ஈர விரல்கள் அருண் நெஞ்சில் இருந்த முடியோடு விளையாடின… அந்த நுனி விரல்களில் இருந்த குளுமை அவன் உடல் முழுவதும் சிலிர்க்க வைக்க போதுமானதாக இருந்தது … ஸ்ஸ்
“நான் எப்போமா அப்படி சொன்னேன்… கையில் இருக்கிறது பொண்ணே கன்னோ கரண்டியோ எதுவா இருந்தாலும் கவனமாக கையாளனும் அது தான் புருஷ லட்சணம்…
நல்லா பேசறீங்க போலீஸ்கார் எங்க வீட்ல ஆண்கள் யாரும் சமையல் கட்டுக்குள்ள நுழைஞ்சே நான் பார்த்தது இல்லை… உடம்புக்கு முடியலைனா கூட செய்ய மாட்டாங்க அதெல்லாம் பொம்பளைங்க வேலை ஒதுங்கிப்பாங்க ஆனா நீ சமையல்ல பின்னி பெடல் எடுக்கிற செம ஆள் நீ , ஆனா என்ன இதை மட்டும் எங்க அம்மா ஜெயந்தி பார்த்துச்சி என்னை நிற்க வச்சி ஆயிஞ்சி மீனுக்கு ஊறுகாயா போட்டும்… என சோகம் போல் காட்டி சொன்னவள் மன்னவன் வெற்று மார்பில் முகத்தை வைத்து புரட்டி அவன் திடத்தை நிரம்பவும் சோதித்தாள் … கீழுதட்டை கடித்து உணர்வை அடக்கியவன்…
சமையல் என்கிறது ஒரு வாழ்வியல் கலையா தான் பார்க்க வேண்டுமே ஒழிய அது பெண் வேலை ஆண் வேலைன்னு பிரிச்சி பார்க்க கூடாது… இது வெறும் வாய் வார்த்தைக்காக சொல்லல பெத்தவங்கள இழந்துட்டு ஒத்தையில் பசியோட கோர முகத்தை அனுபவிச்ச பதினாறு வயசு பையனாக இருந்து சொல்றேன்… வாழ்க்கை யாருக்கு எப்போது என்ன வச்சி இருக்குன்னு யாருக்கும் தெரியாது வாழ்வியல் அடிப்படையை அனைவருமே பாரபட்சம் இன்றி கத்துகிடனும் முடிந்த வரை அடுத்தவர்களை சார்ந்து இருக்கிறதை தவிர்த்திடனும்… என கடந்த கால நினைவுகளை கிளறி விட்ட துயரத்தில் அவன் ஆழ்ந்து இருக்க…
பூர்ணாவுக்கு அவன் பால் இரக்கம் சுரந்தது… அருணின் கடந்த காலம் பற்றி அவளும் அறிவாள் தானே…
வறுமையான குடும்ப பின்னனியில் பிறந்தான் அருண்… அன்றாட பிழைப்புக்காக தின கூலி வேலைக்கு சென்று வரும் பெற்றோர்கள் என இயல்பான குடும்பத்திற்கு எமனாக வந்து சேர்ந்தது தான் அருணின் தந்தையின் குடி பழக்கம் முதலில் உடல் வலி மருந்தாக வந்தது பின் உயிர் கொல்லி மருந்தாக மாறியது தான் சோகம்… மூன்று வயதில் அருணை வைத்து கொண்டு பட்டாசு கம்பெனிக்கு வேலைக்கு சேர்ந்தவர் கடினமாக உழைத்தாரே ஒழிய உடம்பை பேணி காக்க தெரியவில்லை விளைவு தீராத காச நோயால் அருணின் பதினாறு வயதில் அவனை நிர்கதியாய் தவிக்க விட்டு சென்று விட்டார்…
அப்போது பதின் தொடகத்தில் இருந்தவனுக்கு பசித்தால் யாரிடம் சென்று கேட்பது என்று தயக்கம் ஒரு பக்கம் இருந்தாலும்… எங்கே சோறு என்று வந்து ஒட்டி கொள்வானோ என்று அவனை விரட்டிய உறவினர்களிடமே சென்று கேட்க தன்மானம் மறுக்க சோறு கரிந்தாலும் விரல் வெந்தாலும் பரவாயில்லை என்று அன்று சுயமாக சமைக்க கற்று கொண்டவன் தான்… வாழ்வில் எவ்வளவோ போராடி நீந்தி மேலே வந்து விட்ட போதிலும் வந்த இடத்தை அவன் மறக்கவில்லை … ஆகவே அவ்வபோது நேரம் கிடைக்கும் போதெல்லாம் சமைத்து உண்பான் அல்லது நண்பர்களுக்கு சமைத்து போடுவான்… பல நேரங்களில் உடல்நலக் குறைவு காரணமாக சாந்திக்கு சமைக்க முடியாது போன நேரங்களில் கூடும் மட்டும் அருண் சமைத்து விடுவான் வேலை இருந்தால் வெளியில் வாங்கி வந்து தந்து விடுவான்…
ஹே இரு இரு அருணோட அம்மா அவன் பதின் பருவ தொடக்கத்திலேயே இறந்து விட்டார்கள் என்றால் அப்போ சாந்தி யார் என்ற கேள்விக்கு பதில் பூரணியிடமே…
அன்றொரு நாள் பூரணி கடை தெருவுக்கு சென்று இருந்த போது … எதேர்ச்சையாக ஆசிரம தலைவரை பார்க்க நேர்ந்தது… அவரை கண்டவள் இயல்பாக விசாரித்து விட்டு விடை பெற நினைக்க அவளை தடுத்தவர் அருணை பற்றி நீண்டதொரு பாராட்டு பத்திரம் வாசிக்க அவரை விசித்திரமாக பார்த்தாள் பூரணி…
என்ன மா அப்படி பார்க்கிற என்னடா வாங்கின காசுக்கு மேலே அருண் தம்பியை புகழ்ந்து பேசுறேன் என்று பார்க்கிறியா… தம்பி போல் மனசு உள்ளவங்களை இந்த பூமியில் பார்க்கிறதே அதிசயம் தான் மா அவர் செய்த காரியத்துக்கு முன்னால் நான் பாராட்டினது எல்லாம் கம்மி தான்… என்றவரை குழப்பம் விலகாமல் பார்த்து நிற்க
“என்ன மா உனக்கு தெரியாதா… ??”
நீங்க எதை சொல்றீங்க எனக்கு புரியல கொஞ்சம் தெளிவா சொல்லுங்க சார் …?? பூரணி
எல்லாம் உன் மாமியார் சாந்தி பற்றி தான் மா…?? நீ பார்க்கிறத பார்த்தா அருண் தம்பி உன் கிட்ட சொல்லலை என்று நினைக்கிறேன்…??அந்த சாந்தி அருண் தம்பியோட உண்மையான அம்மா கிடையாது மா…
சின்ன வயசுலே புருஷனை இழந்துட்டு இனி பிள்ளை தான் உலகம் வாழ்ந்த அந்த தெய்வத்தை தவிக்க விட்டு வேலைக்காக ஊரை விட்டு போன மகன் போனவன் தான் எந்த தகவலும் இல்லை… பெத்த பாசம் தவிர்க்க முடியலை அந்த நன்றி கெட்ட மகனை தேடி இந்த அம்மா இந்த ஊருக்கு வந்து இருக்காங்க… வீதி வீதியா பெத்த பிள்ளையை தேடியவங்களுக்கு பையன் ஒரு பெண்ணை கூட்டிட்டு ஓடி போயிட்டான் தெரியலை… பையன் வருவான் நம்பிக்கையோட கையில காஸ் இல்லாம ரோட்டு ஓரம் தஞ்சம் புகுந்தவங்களை ***** சொறி நாயிங்க பச்சை பிள்ளைன்னு பார்க்குமா…?? வயசானவங்க பார்க்குமா…?? அந்த வெறி பிடிச்ச மனுஷ **** கிட்ட இருந்த அருண் தம்பி தான் அந்த அம்மாவை காப்பாற்றி நம்ம ஆசிரமத்துல கொண்டு வந்து சேர்த்தது…
புருஷன், பெற்ற பிள்ளையாள வந்த ஏமாற்றம் மனுஷ மிருகங்களால் ஏற்பட்ட அதிர்ச்சி எல்லாம் சேர்ந்து அந்த அம்மாவை ரொம்பவே பாதிச்சிடுச்சி… அப்போதில் இருந்து ஆம்பளைங்களை பார்த்தாலே அந்த அம்மா மிரளும்… எல்லாரையும் புடிக்கி கடிச்சி வைக்கும் பிராண்டி வைக்கும் அவங்களை எங்களால் சமாளிக்கவே முடியாது… அப்போ அருண் தம்பி தான் எல்லாத்தையும் தாங்கி கொண்டு அவங்களை கவனிச்சி கிட்டது… அந்த அம்மா குணமாக முழுக்க முழுக்க அருண் தம்பி எடுத்து கிட்ட முயற்சி மட்டும் தான் காரணம் சொன்னா அது மிகையில்லை… கொண்டு வந்து சேர்த்ததும் யாரோன்னு போகாம கூடவே இருந்து கவனிச்சிக்கிட்டது மட்டுமில்லாம அந்த அம்மாவையே தத்து எடுத்து கொண்ட அந்த பிள்ளை எனக்கு தகப்பன் சாமியா தெரியுறார் மா… இந்த விஷயத்தை ஏன் உன்கிட்ட மறைச்சார்ன்னு எனக்கு தெரியலமா…?? ஆனால் நிச்சயம் தம்பி ஏதாவது ஒரு காரணத்துக்காக தான் அப்படி செஞ்சி இருக்கும்… நான் தான் அவசரபட்டு எல்லாத்தையும் சொல்லிட்டேன்… நீ மற்ற பொண்ணுங்க மாதிரி இல்லை என்று எனக்கு தெரியும் பூரணி இருந்தாலும் சொல்றேன் அருண் தம்பியையும் அந்த அம்மாவையும் நல்லா பார்த்துக்கோ… நேரம் கிடைச்சா ஆசிரம பக்கம் வந்துட்டு போ பசங்க உன்னை கேட்டாங்க… என்று விட்டு போக…
பூரணிக்கு அவர் சொன்ன விடயம் மிக அழுத்தமான தாக்கத்தை ஏற்படுத்தியது என்பதே மெய்… உண்மையை அறிந்த கொண்ட பூரணி என்ன முடிவு எடுப்பாள் …