ATM Tamil Romantic Novels

ரௌடி பேபி -25

25

 

ஆசிரம தலைவர் சொல்லி சென்றதையே யோசித்த படி இருந்தவளுக்கு அருண் மீது ஆறாத வருத்தம் ஒன்று தோன்றியது… நிச்சயம் அது கோபம் அல்ல தன்னிடம் மறைக்கும் அளவிற்கு அதில் என்ன இருக்கிறது என்கிற வருத்தம் மட்டுமே… எதையும் மனதில் வைத்து பேசும் ராகம் அவள் அல்லவே ஆகவே நேரடியாகவே கேட்டு விட்டாள்…

 

 

அன்று வழக்கத்தை விட அருண் வேலை முடிந்து வருவதற்கு நேரமாகியது இருந்தும் அவனுக்காக காத்து இருந்தாள்… அப்படி அவள் காத்து இருக்க வேண்டாம் என்று அருண் சொல்லி இருந்தாலும் இன்று அவளுக்கு காத்திருப்புக்கு காரணம் உண்டே…

 

களைப்பாக வந்தவனை இரக்கம் சுரந்தது இருந்தாலும் அவனிடம் கேட்டு ஆகிய வேண்டும் என்ற பொறுமை காத்தவள் அருண் உண்டு முடித்து தங்கள் தனி அறைக்குள் தனியே வரும் வரை காத்து இருந்தவள் அவன் உள்ளே வந்ததும் கேட்க நினைக்க ஆனால் அதற்கு முன்பே பேச்சை தொடங்கினான் அருண் அன்று காலை தொட்டு வீடு திரும்பும் வரை நடந்ததை மனைவியோடு பகிர்ந்து கொள்வது அவன் இயல்பாக கொண்டு இருந்தான்…

 

அத்தனையும் நிதானமாக கேட்டு கொண்டவள் … அவன் பேசி முடித்ததும் நான் கவனிச்ச வரை எல்லாத்தையும் நீ என்கிட்ட சொல்லிடுற அதே போல என்கிட்ட ஏதாவது சொல்லாம மறைச்சி இருக்கியா என பூரணி தூண்டில் போட்டு பார்க்க…

 

கனநேர அமைத்திக்கு பின்னர் ஆசிரமத்துக்கு   போயிட்டு வந்தியா பூரணி என வார்த்தையில் கனமில்லாமல் கேட்டான் அந்த காவலன்…

 

இல்லை கடைக்கு போன அப்போ ஆசிரம தலைவர பார்த்தேன் என மறைக்க எதுவும் இல்லை என்னும் ரீதியில் அவள் பதில் அளிக்க…

 

நீண்டதொரு மூச்ச எடுத்து விட்டவன்… உன்கிட்ட மறைக்கணும் என்று நான் மனசார நினைக்கல பூரணி…

 

நீயும் அம்மாவும் இயல்பா இந்த குடும்ப கட்டமைப்புக்குள்ள  பொருந்தனும் தான் நான் நினைச்சேன்… எங்க நான் உண்மையை உன்கிட்ட சொன்னா அவங்கள அந்நிய பட்டு பார்த்துடுவியோ என்று ஒரு சின்ன பயம் தான் காரணம் நான் சொல்லாததற்கு… எனக்கு தெரியும் நீ அப்படி பட்ட பொண்ணு இல்லைன்னு இருந்தாலும் நூற்றில் அறை சதவீதமாக கூட நீ அவங்களை அந்நியமா பார்க்கிறத என்னால தாங்க முடியாது மா…இதுல என்னோட சுயநலமும் கலந்து இருக்கு  சின்ன வயசுல அம்மாவை இழந்த எனக்கு மறு வாய்ப்பா கடவுள் அவங்களை எனகிட்ட  அனுப்பி வைச்சதா நான் உறுதியா நம்புறேன்… பிளீஸ் எனக்காக இதை மட்டும் பண்ணுமா உனக்கு உண்மை தெரிஞ்சிடுச்சி அவங்களுக்கு தெரிஞ்ச உள்ளூர குமைந்து போய்டுவாங்க அப்புறம் அவங்களே விலக ஆரம்பிச்சிடுவாங்க என்னால இன்னொரு முறை அம்மாவோட பிரிவை தாங்க முடியாது என தாய் பசாத்திற்காக கை ஏந்தும் தன்னவனை பார்த்து அவளுக்குமே கண்ணீர் வெளிபட்டது… சிரிப்பில்  மட்டுமல்ல அழுகையையும் பகிர்ந்து கொள்வதும்  தானே  அன்பின் அடையாளம்…

 

பெற்ற தாயையே முதியோர் இல்லத்தில் சேர்த்து விடும் இந்த களிக்காலத்தில் முன்பின் அறியாதவரை அன்னையாக ஏற்று அவரை போற்றி வரும் அவள் கணவன் மெய்யாகவே தங்க மனதுக்காரன் தான்…

 

அவன் சொன்னது போல் பூரணிக்கு முன்பே உண்மை தெரிந்து இருந்தால் எப்படி நடந்து கொண்டு இருப்பாள் என்று சொல்லிவிட முடியாதே… ஆனால் இப்போது அருண் அவன் மனதை திறந்து கொட்டி விட்ட பின்பு அவளுக்கு எந்த தடையும் இருக்கவில்லை எனவே…

 

என்ன போலீஸ்கார் இப்படி சொல்லிட்ட என் மாமியாரை  விட்டா எனக்கு வேற பொழுதுபோக்கிற்க்கு  நான் யார்கிட்ட  போவேன்… மாமியார் மருமக சண்டைக்கு இப்படி மவுஸ் இருக்குறதே  அவங்கள வச்சி தான் தெரியும்… என்கிட்ட சொல்லிட்ட இல்லை… இனி என் மாமியார்க்கு ஸ்பெஷல் கவனிப்பு தான் என சொன்னவள் அத்தோடு விடவில்லை…

 

சாந்தியை ஒரு வழி பண்ணி விட்டாள் அவரை சும்மாவே இருக்க விடமாட்டாள் தொல்லைகள் கொடுத்து தெறிக்க விடுவாள் ஆனால் அது அத்துனையும் அன்பு தொல்லையாகவே இருக்கும்…

 

அன்று அப்படி தான் பூரணியிடம் ஏன்மா இப்படி ஈரம் சொட்ட சொட்ட உட்கார்ந்து இருக்க இந்நேரத்துல யாராவது தலைக்கு குளிப்பங்களா என கேட்க அதற்கு பூரணியோ உங்களுக்கு தெரியுது உங்க புள்ளைக்கு தெரியலையே ஆபீஸ் விட்டு போச்சுன்னு எடுக்க வந்தவர் என்னை போட்டு புரட்டி எடுத்துட்டார் அந்த  அலுப்பு தீரதான் அத்தை இந்த நேரத்துல குளிக்க வேண்டியதா போச்சு ப்பா என்ன வலி என்ன அத்தை இப்படி உங்க புள்ளைய முரடான வளர்த்து வச்சி இருக்கீங்க ஹையோ இடுப்பு வலிக்குது என சிறிதும் இலட்ஜையே இல்லாது பேசுபவளை கண்டு தலையில் அடித்து கொண்டார் சாந்தி… மற்றொரு நாள் வாயை பொத்தி கொண்டு உம்மென்று  உட்கார்ந்து இருந்தவளை கண்டார் சாந்தி அவளிடம் ஏதாவது கேட்டால்  கோக்கு மாக்காக பதில் வரும் என்று தெரிந்தே  அமைதியாக இருந்தவர்க்கு ஏனோ பூரணியின் அமைதி வெகுவாக பாதித்தது என்பது உண்மை என்னதான் வாய் அடித்தாலும் அறை மணி நேரம் கூட அவரை  விட்டு பிரிந்து இருக்க மாட்டாள் எங்கே இருந்தாலும் அத்தை அத்தை என்று அழைத்து கொண்டு பின்னோடு வந்து விடுவாள் எது எப்படி இருந்தாலும் அருண் சென்ற பின் அவரை கண்ணும் கருத்துமாக கவனித்து கொள்ளும் மருமகள் மேல் என்னவோ பிரியம் தான் ஆனால் அவள்  வாயை திறந்தால் மட்டும் தெறித்து ஓடி விடுகிறார் அந்தோ பாவம்… (என் கதாநாயகி என்றாலே வாயாடியா தான் இருப்பாள் இந்த அம்மாவுக்கு தெரியாது போல)  மனம் பொறுக்காமல ஏன் என்னாச்சு என்று கேட்டு விட பாருங்க அத்தை உங்க பிள்ளைக்கு கொஞ்சம் கூட விவஸ்த்தையே இல்லாம வாயை கடிச்சி வச்சிட்டார் என இரவு நடந்த கூடலில் அருண் கடித்து வைத்ததை காட்டி முறையிட அந்தோ பரிதாபம் , சாந்திக்கு இதுக்கு என்ன சமாதானம் சொல்ல என  தெரியாமல் விழி பிதுங்கி போனார்…

என்ன அத்தை புள்ளைய வளர்த்து வச்சி இருக்கீங்க சரியான கடி நாய் உள்ள வந்த உடனே மேலே விழுந்து கடிச்சி வைக்கிறார் நீங்க கொஞ்சம் எடுத்து சொல்லுங்க அத்தை… இல்லை நான் திருப்பி கடிச்சா உங்க புள்ளைக்கு தான் சேதாரம் ஆகும் பார்த்துகங்க சொல்லிட்டேன்… என்றவளை என்ன பொண்ணுடா  என திகைத்தார்… பூரணி என்னதான் கலாட்டா செய்தாலும் அருணை உங்க மகன் உங்க மகன் என்று கூறுவது அவருக்கு ஒரு நிம்மதியை தந்தது என்பதே  உண்மை…

 

பூரணிக்கு உண்மை தெரிந்து விட்டது என்பதை அனுபவம் வாய்ந்த அந்த பெண்மணியாள் யூகிக்க முடிந்த போது அவருள் எழுந்த அச்சத்தை எல்லாம் அவரின் மருமகள் அதியரடியால் அள்ளி தூரம் வீசி விட்டாள்… பூரணி அவரை மாமியராகவும் அருணின் தயாராகவும் மனமார ஏற்று கொண்டதே அவருக்கு முழு நிம்மதி…அதில் பேர பிள்ளைகளை  பார்த்து விட்டால் தன் ஜென்மம் ஈடேறி விடும் என்கிற ஆசையில்   சீக்கிரம் தனக்கு பேர பிள்ளையை வேண்டி அவர் பக்தி யாத்திரை சென்று இருக்க…

 

இங்கு கணவன் மனைவி இருவரும் ஹனிமூன் செல்ல நினைக்க விதியோ அதுக்கெல்லாம் உங்களுக்கு செட் ஆகாது ராசா என்று  அவர்கள் போக இருந்த ரயில் பயணத்தை அதி கனமழையின் காரணமாக ரத்து செய்து இருக்க…  வேறு வழி இன்றி இருவரும் அவர்கள் வீட்டிலே தேன் நிலவய் கொண்டாடினர்  தனி ஒரு பொழுதில் மூண்றாம் உலகையே படைத்தனர்…

 

அப்படி அருண் தேன் நிலவுக்காக  எடுத்த விடுப்பு இன்னும் மிச்சம் இருக்க பூரணியோடு தனித்து இருக்கும் பொழுதுகளை தவிர்த்து அத்தனை வேலைகலையும் பகிர்ந்து கொண்டவன் இன்று தான் சமையல் நளபாகம் அவனுடையது என்று கூறி அந்த பொறுப்பை ஏற்று கொண்டான்…

 

தேவைக்கு மட்டும் தேடிக்

கொள்ளும் அவள் உலகில்…

அவளுக்காய் அவளவன் … 

நான் என்கிற

கர்வம் இல்லாத ஆண்

அவனோரு சிறகில்லா

ஆண் தேவதை தான்…

 

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Scroll to Top