21
புருஷனை உஷார் செய்வது எப்படி..? என்னும் புத்தகத்தை தான் கடைவீதி எங்கும் புரட்டி தேடிக் கொண்டு இருந்தாள் பூர்ணா…பாவம் அப்படி ஒரு புத்தகம் அவளுக்கு கிடைக்கவே இல்லையாம்… இல்லையென்றால் அத்தோடு விட அவள் என்ன சாதா பேபியா ரௌடி பேபி ஆச்சே
ஒவ்வொரு பப்ளிகேஷன் அலுவலகமாக ஏறி இருந்தா எனக்கு ஒரு புக் கொடு இல்லாட்டி ஒரு பிரிண்ட் மட்டுமாவது எனக்கு போட்டு தாங்க என்று தகராறே அப்பொழுதும் கிடைக்கவில்லை அவ்வளவு ஏன் கடல்லே இல்லையாம்பா…ஆங்
அத்தோடாவது முயற்சியை கைவிட்டாளா என்றால் அதுதான் இல்லை…நீங்க புக் எழுதி ஒரு மாபெரும் சகாப்தத்தை படைக்கிறேன் எடுறா அந்த நோட்டையும் பேனாவையும் என்று தனக்கு தெரிந்த திருமணம் ஆன பெண்கள் அனைவரிடமும் பாரபட்சம் பார்க்காமல் கணவனை கவர்(உஷார் ) பண்ணுவது எப்படி என வயசு வித்யாசம் பார்க்காமல் கேட்டு வைக்க அவரவர் சுபவத்திற்கு ஏற்ப அவர்கள் வெட்கம்,கேலி,கிண்டலாக கொண்டாலும் மறக்காமல் பூர்ணாவின் கேள்விக்கு அவர்களுக்கு தோன்றிய பதிலை அளிக்க மறக்க வில்லை … அவர்கள் சீண்டல் எல்லாவற்றையும் தூர எரிந்து விட்டு ஆர்வமுள்ள மனைவியாக கேட்ட குறிப்பை குறிப்பாக குறிப்பேட்டில் குறித்துக் கொண்டாள் குவளை பெண்…
அதில் சில…
புருஷன் மனசுல இடம் பிடிக்கணும் என்றால் முதல்ல அவன் வயிற்றில் இடம் பிடிக்கணும்…அம்மா ஜெயந்தி…
ஆம்பளைக்கு அனுசரனையா நடந்துக்கிட்டாலே போதும்
புருஷனை முந்தானையில் முடிஞ்சி வச்சுக்கலாம் – அவங்க கேக்கும் முன்னாடியே அவங்க தேவையை பூர்த்தி செய்யுறது, அவங்க களைச்சு வரும் போது கை கால் அமுக்கி விடுறது… மாமியார் சாந்தி…
புருஷன் எதிரபார்க்கிறத விட தூக்கலா கொடுத்தோம் வை நம்ம காலையே சுத்தி சுத்தி வருவாங்க …கல்யாணம் ஆன உயிர் தோழி…
பொதுவா ஆம்பளைங்களை விட்டு பிடிக்கணும்னு சொல்லுவாங்க ஆனா முதல்ல விட்டுட்ட அப்புறம் புடிக்கவே முடியாது பார்த்துக்க…பக்கத்து ஊட்டு அக்காஅவங்க புருஷன் விட்டு போன கடுப்பில்…
எனக்கு அந்த விவரம் எல்லாம் தெரியாது அண்ணி உங்க அண்ணனுக்கு நான் சிரிச்ச முகமா இருந்தாலே போதும் எல்லா கவலையும் மறந்துடும் சொல்லுவாரு – தினேஷ் மனைவி கவுசல்யா…
இவையில் பெரும்பாலும் காலம் காலமாக இந்திய பெண்களுக்கு என்றே தலைமுறை தலைமுறையாக சொல்லி வைக்கும் அதே பழைய ஃபோர்முலாவே தான்…
இதையெல்லாம் கேட்ட பூர்ணாவின் மூளையோ இந்த பழைய மசாலா எல்லாவற்றையும் சேர்த்து அரைத்து புதிய மசாலா ஒன்றை உருவாக்க…
அதான் விளைவு அதிரடி ராணியின் கவர்ச்சி அவதாரம் தான்…
பொழுதே அருணிற்கு ஃபோன் போட்டு அவன் வரும் நேரம் கேட்டு வைத்து அதற்கு முன்பே எல்லா ஏற்படுகளையும் தயார் செய்து விரைவாக மாமியாரை விரட்டி உண்ண வைத்து தொட்டிலில் ஆட்டாத குறையாக உறங்க வைத்து விட்டாள்…
பின்னே விழித்து இருந்து இவள் சூட போகும் அவதாரத்தை கண்டு கபாலம் கலங்கி விட்டால் என்ன செய்ய வயசனவங்க ஏதாவது ஏடாகூடமா ஆகிட கூடாதுள்ள அதான் முன் ஜாகிரத்தை முனியம்மா அவரை உறங்க வைத்து விட்டாள்…
கமகம என்று கறி குழம்பு வாசம் வீதி வரை தூக்க…அறை எங்கும் நறுமணம் வீச… அருணை மயக்கும் போகும் முன் ஏற்பாடுகள் யாவையும் முடித்து விட்டு அருண் வருவதற்கு முன்பு குளித்து வந்தவள் கடை வீதியில் மாமியார்க்கு தெரியாமல் பம்மி பம்மி சென்று வாங்கி வைத்த கவர்ச்சி உடையை அணிந்து வர அள்ளியது அவள் அழகு கண்ணாடியில்… அந்த உடையில் அவளை பார்ப்பதற்கு அவளுக்கே வெட்கம் பிடுங்கியது பெண்ணிடம் இத்தனை கவர்ச்சியா அவளே மெச்சினாள்… சூரியன் கூட தீண்டாத அங்கங்கள் அழகு கூடி நிற்க… அருண் அதை பார்த்தால் என்ற எண்ணமே இதழை கடிக்க வைக்க கஜாகஜா குஜா குஜா கற்பனையோடு தரையிலே மிதந்தால்…
ஆசையும் ஆவலும் வெட்கமும் நாணுமும் போட்டி போட கண்ணான கண்ணாளனுக்காக காத்திருக்க…
அவன் சொன்ன நேரமும் வந்தது அவனும் வந்தான்…
பேராசையும் பெரும் தவிப்புமாக எட்டி பார்த்தவள் இதயம் படபடவென்று துடிக்க அவன் முன்னே செல்ல கால்கள்இரண்டும் பின்ன வெட்கமேலிட மெல்ல மெல்ல அவன் முன்னால் போய் நின்னாள்…தத்தி தத்தி நடக்கும் தத்தை போல…
அவளும் நோக்கினாள் அண்ணலும் நோக்கினால் என அவள் ஆர்வமாக பார்க்க அவனோ அவளை ஏறுடுத்தும் பார்க்காமல்… சீருடையை கழட்டி வைப்பதிலே மும்முறமாக இருக்க…
இவளுக்கு தான் காற்று பிடுங்கி விட்ட பலூன் போல் ஆசை ஆர்வம் எல்லாம் வடிந்து வாய்க்கால் வழியாக ஓடி விட்டது…
சரி விட்டு புடிப்போம்… முதல் கோணல் முற்றும் கோணல் என்பார்களே… இதை சொன்னா கடிப்பாளே…
கடமையே கண்ணாக அருண் ஆடை மாற்றிவிட்டு அறைக்கு திரும்பி போகவும்… இவளுக்கு பதறி விட்டது பின்னே அருமை பெருமை மாமியாரை மடக்கி அருணிற்கு பிடித்த அசைவ விருந்து படைத்து வைக்க அவன் ஒரு கை என்ன கண்கொண்டு பாராமல் போக…
யோவ் போலீஸ்கார் சாப்பிட வரலயா …என கூவி அழைக்க…
வேணாமா வெளியே ஆச்சு… அப்புறம் இன்னைக்கு வேலை அலைச்சல் அதிகம் ரொம்ப களைப்பா இருக்கு நான் தூங்க போறேன் டிஷ்டாரப் பண்ணாதீங்க பிளிஸ் …என்று விட்டு போக…
இரண்டாவது பந்தும் அவுட்…
சரி மூணாவது முறையாவது ஏதாவது தேறுமா என்ற முயற்சி பண்ணுவோம் களைப்பா இருக்குன்னு சொல்லுச்சே கை கால் அமுக்கி விட்டு உஷார் பண்ண பார்ப்போம் என்று இவள் அருண் பின்னே செல்ல…
அவனோ உறங்காமல் உட்கார்ந்து படித்து கொண்டு இருந்தான் அதுவும் காலை மடித்து அமர்ந்து கொண்டு…
என்ன இது இப்படி உட்கார்ந்தா நாம எப்படி கால் அமுக்க…என விழித்தவள்…அவன் படித்து முடிக்கும் வரை பொறுத்து இருந்து பார்க்க நேரம் நீண்டதே ஒழிய அருண் முடித்த பாடியில்லை..
ம்ம்ஹூம் இது வேலைக்கு ஆகாது என்று அவனிடமே பாய்ந்து விட்டாள்…
ஏன்யா களைப்பா இருக்கு தூங்கணும்னு சொல்லிட்டு இப்படி புத்தகம் படிச்சிட்டு இருக்க என்ன உன் நியாயம்…?? என்றாள்…
களைப்பா இருந்தது தான் ஆனா இப்போ தூக்கம் வராலையே அதுதான் கொஞ்ச நேரம் புக் படிச்சிட்டு அப்படியே தூங்கிடுவேன்…ஆமாம் நீங்க தூங்கலையா…என அருண் திருப்பி கேட்க…
ம்க்கும் தூங்குறது ஒன்னு தான் குறைச்சல்…என முணுமுணுத்தவள்…
ஆமாம் தூங்குறதுக்கு தானா நமக்கு கல்யாணம் பண்ணி வச்சாங்க… அந்த வெளியாவது உறுப்பிடியா செய்வியா… !!” என ஒவ்வொரு வார்த்தைக்கும் அழுத்தம் கொடுத்து நக்கலாக சொன்னவள் கடுப்புடன் கட்டிலில் படுக்க…
கேக்கணும் நினைச்சேன் ஏன்மா இப்படி ட்ரெஸ் போட்டு இருக்க…??? ரொம்ப புழுக்கமோ நான் வேணுனா எ சி போட்டு விடவா… ?? என ஒண்ணுமே தெரியாதவன் போல் கேட்டேனே பார்க்கலாம்…
“அப்படியே உன் தலையில் தூக்கி போட்டுக்கோ யோவ் வேணாம் வாயை கிளறாத கம்முனு லைட் ஆப் பண்ணிட்டு படி… வீணா கடுப்பு கிளப்பாத… கேட்கிறான் பாரு கேள்வி…புழுங்குதா… ?? புடுங்குதான்னு…?? சொன்னா மட்டும் புரிஞ்சிடவா போகுது…சரியான தத்தி, ட்யூப் லைட்.. ட்யூப் லைட்.. என இவள் வாய் விட்டு புலம்ப…
என்னமா சொன்ன …?? என இவன் வேண்டும் என்று தான் கேட்டானா என முகத்தை பார்த்தால் ம்ஹும் அங்கு ஒன்றும் அறிய முடியவில்லை…
ம்ம்ம் தொந்தரவா இருக்கு ட்யூப் லைட் அணைச்சுட்டு கம்முனு படிக்க சொன்னேன்…என்று எரிந்து விட்டு இவள் படுக்க…
லைட் ஆப் பண்ணிட்டா எப்படிமா படிக்க முடியும்…என்றான் அருமை அப்பாவி…
யோவ் அவ்வளவு தான் உனக்கு மரியாதை கம்முனு இரு இல்லை…இருக்குற கடுப்புல உன்னை என்ன செய்வேன் எனக்கே தெரியாது என எரிச்சலில் கத்தி விட்டு இவள் இழுத்தி போர்த்தி கொண்டு படுக்க…
சத்தம் வராமல் பூர்ணாவை பார்த்து சிரித்து மகிழ்ந்தான் அவள் மன்னவன் …
பின்னே அவனுக்கு தெரியாதா அவன் மனைவியின் கோவம் எதற்கு என்று… அவளை வெறுப்பேற்றி பார்ப்பவனே அவன் தானே…
அன்று அடாவடியாக… அவளை மணக்க சொல்லி வீட்டு வாசலில் வந்த போது அவள் குழப்பத்தில் எடுத்த முடிவு என்பது அவனுக்கு நிச்சயம்…
அது குழப்பத்தால் எடுத்த முடிவு என்று… அவள் தெளிந்த மனதில் எடுத்திருந்தால் நிச்சயம் அப்போதே அவளுக்கு தாலி கட்டி மனைவியாக்கி இருப்பான்…
அப்படி இல்லாத பொழுது சூழ்நிலையை தனக்கு சாதகமாக்கிக் கொள்ள அவனுக்குள் இருந்த உத்தமனுக்கு ஏற்கவில்லை… எனவே அவளை சமாதானம் படுத்தவே முயன்றான்…
அருணின் சமாதானம் எதையும் ஏற்க மறுத்து வீட்டை விட்டு வெளியே சென்றவள் மழையில் நனைந்து கொண்டு கால் போன போக்கில் செல்ல…
அவளை பின்தொடர்ந்து வந்த அருணில் எந்த சமாதான பேச்சையும் அவள் ஏற்கவில்லை மாறாக பிடிவாதமாக மழையில் கரைந்தாள்…
இங்க பாரு பூர்ணா நான் சொல்றதை புரிஞ்சுக்கோ ப்ளீஸ்…உள்ள வா இப்படி நனையாதமா…வா உன் நல்லதுக்கு தான் சொல்றேன் என அவள் பிடிவாதத்தை பின்வாங்காமல் இருக்க… ஒரு கட்டத்திற்கு மேல் பொறுமை இழந்தவன் அவள் கையை பிடித்து இழுக்க…
“யோவ் விடு விடுன்னு சொல்றேன்ல… நீதான் என்ன கட்டிக்க மாட்டேன்னு சொல்லிட்டே இல்ல அப்ப எந்த உரிமையும் என் கைய புடிச்சு இழுக்குற…போயா போ உன்னை விட்டா ஊர்ல வேற ஆம்பளையே இல்லையா… போ நான் அந்த பிச்சைக்காரனை கல்யாணம் பண்ணிக்க போறேன் விடு…என பிடிவாதமாக அருணின் பிடியில் இருந்து விடு பட்டவள்…அருகில் மயக்காதீங்க பிச்சைக்காரனை நோக்கி சென்றவள்…
“யோவ் பிச்சைகாரா அந்த போலீஸ்காரன் என்னை கட்டிக்க மாட்டேன் சொல்லிட்டான்…நீயாவது என்னை கட்டிக்கோ… நகை பட்டு புடவை மாச சம்பளம் எதுவும் கேக்க மாட்டேன் கொடுக்குறத வச்சு குடும்பம் நடத்துவேன்… என இவள் கூறியதை…
அந்த தானம் ஏந்துபவர் மனநலம் பாதித்த பெண் என நினைத்து பயந்து ஓட… யோவ் நில்லுயா… என இவள் அவர் பின்னால் ஓட…
அருண் பாய்ந்து சென்ற பூர்ணாவை தடுக்க…
விடு விடு என்னை…என இவள் முரண்டு பண்ண…
“சரிஇஇஇ நானே உன்னை கட்டிக்குறேன் போதுமா… என அருண் வாயாலே சொல்ல வைத்த அந்த ராங்கிக்காரியை தான் ஏனோ அதிகம் பிடிக்கிறது அவனுக்கு…
அப்புறம் ஏன் ரௌடி பேபியை அல்லல் படுத்துறான் தான கேக்குறீங்க…
அது அவன் கொண்ட காதலுக்கு அவனே வைக்கும் அக்னீ பரீட்சை என்றால் மிகை அல்ல…
எதே பரீட்சையா… ரௌடி பேபி தேறுமா… எங்க அவள் மாஸா பண்றது எல்லாம் தமசா முடியுதே… அப்போ ரௌடி பேபி ரொமான்ஸ் சாப்டர் ஆரம்பிக்கும் முன்னவே முடிஞ்சி போச்சா…?? உஊ வா
சரி புண் பட்ட மனதை பூஸ்ட் குடிச்சு ஆத்திட்டு வாங்க அடுத்து எபில பார்ப்போம்…