ATM Tamil Romantic Novels

ரௌடி பேபி -22

22

அருணிற்கு பூர்ணா எடுக்கும் முயற்சிகள் எதுவும் தெரியாமல் இல்லை தெரிந்து தானே அவள் எடுக்கும் முயற்ச்சிகளுக்கு  எதிர்வினை ஆற்றாமல் இருக்க தன்னைதானே  கட்டுப்படுத்தி கொள்ள அவன் படும்பாடு இருக்கே ஹையோ ஹையோ சொன்னாலும்  புரியாது… கண்ணுக்கு இலட்சணமா ஒரு பொண்டாட்டிய வச்சிக்கிட்டு  கண்டுக்காம இருக்குறது எவ்வளவு கு(க)ஷ்டம்னு அவனுக்கு தானே தெரியும்… 

 

உடனே நீங்க கேக்கலாம் அப்புறம் ஏண்டா இப்படி பன்றன்னு அதற்க்கு அவனிடம் இருந்து வரும் பதில் இதுவே 

 

அருணின்  திருமணம் என்னவோ ஒரு  குழப்பத்தில் நடந்த விட்டது என்றாலும் அவன் இல்லற வாழ்க்கையையும்  அப்படியே துவங்குவதில் அவனுக்கு துளியும் விருப்பம் இல்லை…

 

எனவே பூர்ணாவோடு மனம் விட்டு பேசி அவளுடன் புரிந்துணர்ந்து இந்த அழகிய திருமண வாழ்க்கை தொடங்க அவன் திட்டமிட விதியோ அவனுக்கு கடமை என்னும் கயிற்றை கட்டி  அவர்களுக்கு நடுவே கபடி விளையாடுகியது…என்ன செய்ய 

 

கழுத்தை நெட்டி முறிக்கும் வேலை சுமை நடுவே மூச் விடுவதே சிரமமாக இருக்க எங்க இருந்து அவளோடு  அளவளாவுவது…??என மொக்கை காரணத்தை அவன் சொன்னாலும் உண்மை என்னவோ அவன் மனம் மட்டும் அறிந்த ரகசியம்… நாம என்னைக்கு ரகசியத்தை ரகசியமாவே வச்சி இருக்கோம்… வாங்க உங்களுக்கு மட்டும் ரகசியமா கண்ணோடு சொல்றேன்…  

 

 அருணின் பாரா முகத்திற்கு நேரமின்மை  மட்டும்தான் காரணமா என்றால் நிச்சயம் இல்லை… வலிய ஆண் மகனான அவனே தன் காதலை அவளிடத்தில் மறையாது சொல்லி விட்ட பின்பும்… தனக்குள் உணர்ந்த காதலை வெளிப்படுத்தாத அந்த அழுத்தக்காரியிடம் சரணடைய மனம் ஒப்பவில்லை…என்பதே மெய் 

 

 எப்பொழுது திருமணத்தன்று  கொட்டும் மழை இரவிலும் அவனைத் தேடி வந்துவிட்டாளோ அதற்கு மேல் அவள் இல்லை என்று மறுத்தாலும் அவன் மீதான அவள் காதல் இவனுக்கு உறுதியாகிவிட்டது… ஆனால் அவளுக்குள் இருக்கும் காதலை வெளிப்படுத்தாமல் அம்முக்குனியாகவோ அல்லது தனக்குள் இருக்கும் காதலை உணர்ந்தும் உணராமல்  சுற்றும் அவன் மனைவியை  சும்மா விடவும் மனம் இல்லை…  அவளாக சொல்லாமல் இவன் விட போவதில்லை… அவள் சொன்னால் அன்றி அவன் காதல் நிறைவு பெற போவதில்லை என்பதில் அவன் உறுதியாக இருக்க… இதோ என்றும் போல் இன்றும் அவளோடு அவன்  காதல் கண்ணாமூச்சி ஆட நினைத்தவன் அவள் எவ்வளவு  போகிறாள் என்று பார்க்க நினைத்தப் படியே வந்தவனுக்கு இன்று கிடைத்தது என்னவோ… ஹை வோல்டேஜ்  அதிர்ச்சி தான் அதுவும் கதவை திறந்ததும் தன் காதல் பெண்ணே அந்த உடையில் பார்த்த பின் அதை கடந்து செல்வது அவன் ஆண்மைக்குமே  பல பரீட்சை தான்… அருணின் உடம்பில் ஹார்மோன்கள் தாறுமாறாக எகிறியது என்பதே மெய்…

 

அதை கட்டுப்படுத்தவே கையில் புத்தகத்தை ஏந்தியது… அப்போதும் விடாமல் தொடர்ந்து வந்தாள் அவனின் செல்ல மந்தாகினி…  

 

அவள் விழி அசைவில் விழுந்து கூந்தல் கோதலில் உதிர்ந்து அவள் மூச்சு காற்றோடு கரைபவனுக்கு… பருவ மங்கையின் பால் வண்ண மேனியில் பளிச்சிடும் புது தாலியும் பருத்து கிடக்கும் பருவ மேடுகளும் அவன் இதயத்தை இடற செய்யும் வளிப்பான வளைவுகளும் அருணை முதல் பந்திலே போட்டு தாக்கி கிளீன் போல்ட் ஆக்கியது தெரியாத  அந்த பேதையோ அடுத்த கட்ட முயற்சிக்கு ஆலோசிக்க ஆயுத்தமாக்கி விட்டாள்… 

 

பூர்ணா எடுக்கும் புது புது முயற்சிகளால் அருணை விட பெரிதும் அரண்டு போவது என்னவோ அவள் மாமியார் சாந்தி தான்… பின்னே ஒவ்வொரு முறையும் அவள் முயற்சி தோல்வி அடையும் போதெல்லாம் இவரை அல்லவா பிடுங்கி எடுக்கிறாள் அட அது கூட பரவல மக்களே இவள் கேக்கும் சில அந்தரங்க கேள்விக்கு எல்லாம் அவரால் பதில் சொல்ல லட்ஜையாக இருக்கிறது இப்போதெல்லாம் அவளை கண்டாலே  பயந்தே தெறித்து ஓடுகிறார்…என்னத்த கேட்டு வைப்பளோ என்கிற பயம் அது… 

 

கடிகாரத்தில் நகரும் நொடியிகளின் முல்லை போல் வேகமாக நகர தினேஷ் கௌசல்யாவின் வரவேற்ப்பு நாளும் வந்தது… ஜெயந்தியிடம் சொன்னது போல் சாந்தி அருண் மற்றும் பூர்ணாவையும் முன்னவே அனுப்பி வைத்து விட்டார்… அருண் இப்போது தங்களுக்கு  வரவேற்பு வேண்டாம் என்று சொல்லி விட்டான்… 

அதற்காக சும்மா விடுவாரா கேடி  மாமனார்  பொண்ணை கொடுத்து அருணையே மடக்க பார்த்தவர் ஆயிற்றே… ஆகவே தினேஷ்கக்கு துணை மாப்பிளையாக நீங்க கூடவே நில்லுங்க மாப்பிளை அவனுக்கு அதிகம் வெளி உலகம் தெரியாது எனக்கும் வந்தவங்கள கவனிக்கவே நேரமிருக்காது அப்படியே மருமகளுக்கு துணையா பூர்ணா நிக்கட்டும் மசக்கையான பொண்ணு வேற என கூறி ரெண்டு ஜோடியையும் மேடை ஏற்றி விட வந்தவர்கள் யார்  என்று கேட்ட கேள்விக்கு  மகளும் மருமகனும் மருமகன் போலீஸ் உத்யோகம் ரொம்ப நல்லவர் பூர்ணாவுக்கு ஏற்ற மாப்பிளை என பெருமை பீற்றி கொண்டு திரிந்தார்… ஒரே கல்லில் ரெண்டு மாங்காய் அடித்த திருப்தி அவரிடத்தில்… அவரின் தந்திரம் அருணுக்கு தெரியாமல் இல்லை… இருந்தாலும் பெண்ணை பெற்றவரின் ஆசையும் நியாயமானது அன்றோ… 

 

கண்ட இடமெல்லாம் கண் கவர் அலங்காரம் கண்ணை பறித்தது, திரளான மக்கள் கூட்டம் கலகலப்புக்கு டி ஜ கச்சேரி ஆட்டம் பட்டம் கொண்டாட்டம் எண்ணில் அடங்கா சைவ அசைவ வகைகள் என    அவ்வளவு காசை வாரி இறைத்து இருபத்து அப்பட்டமாக தெரிந்தது… 

 

குறிபிட்ட நேரத்திற்கு மேல் அருணால் அங்கு நிற்கவே முடியவில்லை ஏற்கனவே வேலை டென்ஷன் இதில்  அதீத வெளிச்சமும் இரைச்சலும் தலையை பிளக்க அதற்கு மேல் தாங்க முடியாமல்  அங்கு இருந்து நகர விரும்பியவன் பூர்ணா பார்க்க அவளோ மும்முறமாக கதை பேசி கொண்டு இருக்க…அடுத்து  கோவிந்தனை தேட எங்கு இருந்தாலும் மேடையில் ஒரு கண் வைத்து இருந்தவர் அருணின் முகமாற்றத்தை கண்டு அருகில் வரவும் அவரிடம் கூறி விட்டு மண்டபத்திலே தனி அறை ஒன்றில் ஓய்வு எடுக்க சென்று விட்டான்… 

 

நீண்ட நாள் கழித்து தன் தோழிகளை சந்தித்த சந்தோசத்தில் அருணை அப்படியே விட்டவள் அவர்களோடு ஐக்கியமாகி விட்டாள்… 

 

தோழிகளை ஒன்று சேர்ந்து உலக அரசியல் முதல் உள்ளூர் அரசியல் வரை பிரித்து மேய்ந்து விட்டு சாப்பிட செல்ல… கூட்டத்தில் இருந்து பூர்ணாவின்  உயிர் தோழியான நிதியை அவளை தனியே தள்ளி கொண்டு போய் மடக்க… கேவலமாக இளித்து சமாளித்து வைத்தவள் அவள் ஒரு இடி இடித்த பின்பே  அனைத்தையும் சொல்ல  

அடிபாவி இவ்ளோ நடந்து இருக்கு என்கிட்ட ஒரு வார்த்தை கூட சொல்லல… ஏண்டி பூனை குட்டி போட்டது எலி ஜட்டி போட்டதுன்னு  எல்லாத்தையும் சொல்லுவ இவ்ளோ பெரிய விஷயத்தை என்கிட்ட மறைச்சு இருக்க சரியான கேடி நீ சரிடி கல்யாணத்துக்கு  அப்புறமாவது என்கிட்ட சொல்லணும் தோணலை இல்ல உனக்கு என்னடி பார்க்கிற சொல்ல மறந்துட்டியா..?? ஓஓ மேடம் கரைகண்ட காதலில் முழுகி முத்து எடுக்க போயிட்டங்களோ…??என்னடி போலீஸ் தீயா வேலை பார்க்கிறாரா அப்புறம் மேடம் வாழ்க்கையில  ஒரே ரொமான்ஸ் சீன் தான்போல… என ஆதாங்கத்தில் தொடங்கி கேலியில் முடிக்க… 

 

க்கும் பெரிய  ரொமான்ஸ் சீனு நீ அதை பார்த்த அட போடி நானே என் கதையில் ரொமான்ஸ் அப்படிங்குற வார்த்தையாவது இந்த ரைட்டர் மறந்து கூட  எழுதிடாதான்னு ஏங்கிட்டு இருக்கேன் எங்க அப்படி ஒரு சீனே இன்னும் வரல என பீல் பண்ணி கூவ… 

 

என்னடி சொல்ற…? என வியந்த தோழியிடம் தன் மன குமுறலோடு சேர்த்து நடந்ததையும் சொல்லிவிட…  

 

அடிபாவி பாவம் நீ சொன்னதை கேட்ட பிறகு உண்மையவே என் அண்ணன் அதான் உன் ஹஸ்பண்ட் அவர் தான்டி பாவம்… அந்த மனுஷனை இப்படி அலைய விட்டதுக்கு உன்னை எல்லாம் இன்னும் வச்சி செய்யணும்டி நல்லா வேணும் உனக்கு … முதல்ல வேணாம் சொல்லுவாளாம் அப்புறம் இவளே அவர் தன் வேணும் என்று  அடம் பிடிப்பாளம்… ஆம்பளை மனசு என்ன கில்லூ கீரையாடி உனக்கு… சரி போனது கூட போகட்டும் கல்யாணத்துக்கு அப்புறமாவது உன் மனசை அவர்கிட்ட சொன்னியா…??என தோழி கேக்க திருவிழாவில் தொலைந்து போன குழந்தை லுக் கொடுத்தாலே பார்க்கலாம்… 

 

உன்னை தான்டி கேக்குறேன் உன் லவ்வை அண்ணா கிட்ட வாய் விட்டு சொன்னியா… என அதட்டி கேக்க … 

 

சொன்னா தான் தெரியனுமா…? போடி நான் அதெல்லாம் ஒண்ணும் சொல்லல… என பயந்த புள்ளையாக பம்ப  

 

லுசாடி நீ … உன் மனசுல இருக்கிறத அவர்கிட்ட சொல்லாம அவருக்கு எப்படி தெரியும்… தெரியாம தான் கேக்குறேன் நிஜமாவே நீ அவரை விரும்பி தான் கட்டிக்கிட்டிய இல்லை அந்த லூசு கும்பல் கிட்ட இருந்து தப்பிக்க பண்ணிக்கிட்டியா எனக்கே இப்போ டவுட்டா இருக்கு… என நண்பியின் நாடி பிடித்து பார்க்க… 

 

ஏய் என்னடி நீயே இப்படி சொல்ற மெய்யாவே  போலீஸ்கார காதலிச்சு  தான் கட்டிக்கிட்டேன்… மனுஷன் மனசுக்குள்ள என்னவோ பண்ணிட்டார் இல்லாட்டி புத்தி கெட்டு போய் அப்படி எல்லாம் பண்ணுவேணா 

 

“அப்போ அதை அவர் கிட்ட சொல்றதுக்கு என்னடி உனக்கு … ??”   என நிதிக்கு  நிஜமா விளங்கவில்லை… 

 

அது வந்து என இழுத்த பூர்ணா சொல்ல போகும் காரணத்தை மற்றுமொரு காதுகளும் ஆர்வமாக கேட்க காத்து இருக்க… 

 

இழுக்காம சொல்லி தொலைடி என நிதி கடுப்பாக 

 

தலை குனிந்த படி பூர்ணா சொன்ன காரணத்தை கேட்டு எங்கையவது சுவற்றில் முட்டி கொள்ளலாம் என நிதி நினைக்கும் போதே… 

 

அட்டகாசமான சிரிப்பு சத்தம் ஒன்று தோழிகளை திகைக்க வைக்க… 

 

வெடித்து சிரித்தபடி வெளியே வந்தான் அருண்… 

 

அவனை கண்ட பெண்கள் திகைக்க இவ்வளவு நேரம் இங்க தான் இருந்தாரா poபோச்சு போச்சு நான் சொன்ன எல்லாத்தையும் கேட்டு இருப்பார் போல என் மனமே போச்சு என நெருப்பு கோழியாக தோழி பின்னால் மறைந்து கொண்டால் பூர்ணா… 

 

அவளின் செய்கைகளை பார்த்த அருணுக்கு சிரிப்பு மட்டும் அடங்கவே இல்லை… 

 

அருண் இப்படி புரண்டு புரண்டு சிரிக்கும் அளவுக்கு அப்படி என்ன காரணம் சொல்லி இருப்பாள் தான கேக்குறிங்க… எங்க நீங்களே சொல்லுங்க பார்ப்போம்… என்ன முடியாதா ம்ம் சும்மா ஒரு கெஸ் பண்ணுங்க பார்ப்போம் … நீங்க என்ன நினைக்குறிங்க கமெண்ட் சொல்லுங்க… அடுத்த எபி ரொமான்ஸ் ஓட வரேன் 

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Scroll to Top