ATM Tamil Romantic Novels

ரௌடி பேபி -27

27

 

விடுப்பு முடிந்து அருண் அன்று பணிக்கு திரும்ப வேண்டிய நாள் செல்லும் முன்பே பூரணியிடம் அன்று அவள்  தந்தை சரணடைய போகும் செய்தியை கூறி விட்டு தான் சென்றான்…

 

அருண் கூறிவிட்டு சென்றதில் இருந்தே பூரணிக்கு இதயம் படப்படப்பாக இருந்தது.. நேரம் ஆக ஆக  அது கூடியதே ஒழிய குறையவில்லை… கடவிலே இதுவரி நான் உன்கிட்ட எதுவும் கேட்டது இல்லை… இப்போ ஒண்ணு ஒண்ணு மட்டும் கேடக்குரென கோவிந்தன் கோர்ட் போயிட்டு தண்டனை வாங்கிட்டு வீட்டுக்கு நல்லபடியா வந்துடனும் என ஏதோ முதல் முறையாக  பள்ளி சென்ற சிறுவன் திரும்பி வீட்டுக்கு வார வேண்டும் என எதிர்பார்க்கும்  தாயை போல் நினைத்து விட்டாள் பாவம் அவள் தந்தை பாசத்திற்கு முன் மூளை மங்கி விட்டது போல… கோவிந்தன் சென்று இருப்பதோ  தன் குற்றங்களை ஒப்பு கொண்டு சரணடைய அங்கு அவருக்கு என்ன காத்து இருக்கிறது என்று தெரியாமல் இவள் இப்படி வேண்டிக்கொள்வதை நினைத்தால் அவள் மேல் பரிதாபம் தான் தோன்றுகிறது…

 

நேரம் நண்பகலை தாண்டும் வேளை பூரணிக்கு இதயத்தில் ஏதோ பிசைய ஆரம்பித்தது… அருணுக்கு அழைக்கலாம் என்றால் அவனுக்கு அழைத்து அழைத்து  செறிவட்டையே தேய்ந்து விடும் போல அவன் எடுக்கவில்லை… முக்கியமான வேலை இருந்தாள் ஒழிய இப்படி அவள் அழைப்பை ஏற்காமல் போக மாட்டான்.. சரி எனவே அவனே வேலை முடிந்து வந்து பார்த்து அழைப்பான் என்று காத்து இருக்க…

 

சற்று நேரத்தில் அருணே அவளுக்கு அழைத்தான்… “பூரணி எங்க இருக்க…??” வழக்கத்தை விட பதட்டமாக இருந்தது அவன் குரல்…  வீட்ல தான் இருக்கேன் ஏன் என்னாச்சு அவனது பதட்டம் இவளுக்கும் தொற்றி கொண்டது…

 

அதற்கு அவன் பதில் சொல்லும்முன் அங்கு ஒரே கூச்சல் சலசலப்பு அதற்கிடையில் அருண் சொல்ல வருவது அவள் காதுகளில் விழவே இல்லை… ஆனால் அவள் உள் மனம் அடித்து சொல்லியது ஏதோ ஒரு துர் செய்தி அவளுக்காக காத்திருக்கிறது   என்று… வேணாம் வேணாம் மனமே வேணாம் அல்லதை நினைக்காதே என சொல்லி கொண்டே இருந்தவள் காதில் அந்த வார்த்தைகள் தெளிவு அற்று ஒலித்தன… பூரணி .. உங்க அப்பாக்கு என்பதற்கு மேல் அவள் செவிகள் கேட்கும் புலனை இழுந்து விட கொய்யிங் என்பதை தவிர வேறு உணர முடியவில்லை…

 

அதற்குள் அந்த முனையில் இருந்த அருண் நூறு தடவையேனும் பூரணியை அழைத்து இருப்பான்…

 

ஹலோ…. ஹலோ… பூரணிஇஇ …

 

ஹாஆன் ஹலோ என்ன என்ன சொன்ன அப்பா அப்பாக்கு என்ன…??ஹேலோ என புரியாத குழந்தை போல் பூரணி திரும்ப திரும்ப கேட்ட விதத்திலே அவள் நிலையை உணர்ந்தது கொண்டவனுக்கு  அவளை எப்படி சமாளிப்பது என்றே தெரியவில்லை அங்கு இருக்கும் சூழ்நிலையை சமாளிக்கவே பெரும் போராட்டமாக இருக்க இதில் அவன் உயர் அதிகாரி வேறு அவசரமாக  அவனை அழைக்க … பூரணி சொல்ல நேரமில்ல முதல்ல டிவில நியூஸ் பாரு என்று அறக்க பறக்க பேசிவிட்டு போனை வைத்து விட…

 

டிவியில் செய்தியை பார் என்று அருண் கூறியதை கேட்டவள் கைகள் நடுங்க டிவியை ஆன் செய்து பார்த்தவள் அந்த இடத்திலே அப்படியே கால்கள் மடங்கி விழுந்தாள்… அவள் கண்களோ  தொலைக்காட்சியில்ஒளிபரப்பான செய்திகளிலே நிலைக்குத்தி நின்றது…

 

பல வருடங்களாக  பல கொலை கொள்ளை ஆள் கடத்தல் போன்ற பல்வேறு வழக்குகளில் போலீஸாரால் தேட பட்டு வந்த பிரபல ரௌடி துரைமுகம் கோவிந்தன் இன்று தானே முன் வந்து கோர்ட்ல் சரணடைய வந்தவரை அடையாளம் தெரியாது நபர்களால் சுற்றி வளைக்க பட்டு சரமாரியாக வெட்டப்பட்ட நிலையில் உயிருக்கு கவலை கிடமான நிலையில் அரசு மருத்துவமனையில் அனுமதிக்க பட்டுள்ளார்… தொடர்ந்து முகமூடி அணிந்த அந்த மர்ம கும்பலை பிடிக்க முயன்றதில் காவலர்கள் சிலர் படுகாயம் அடைந்தனர்…

 

செய்தியை கேட்ட அதிர்ச்சியில்  கத்தி கூட  அழ முடியாத நிலையில் நெஞ்சடைக்க நின்றாள் பூரணி… 

 

செய்தியை பார்த்து விட்டு பூரணி ,சாந்தி, ஜெயந்தி, தினேஷ் ,கௌசி ,அல்லிராணி கூட கோவிந்தனை காண ஓடிவந்தார்… பலகட்ட தீவிர சிகிச்சைக்கு பின்பு கண் திறந்தவரை…   பார்க்க யாரையும்  அனுமதிக்கவில்லை  என கூறி மறுத்து விட ஜெயந்தி கத்தி கதறி அழ அல்லிராணி நெஞ்சில் அடித்து கொண்டு அழுது ஆர்ப்பாட்டம் பண்ணியதில் அங்கிருந்த அனைவரையுமே கிளம்பி போகும் விரட்டினர்…

 

 என் மச்சான் போலீஸ் தாங்க என தினேஷ் குரல் குடுத்ததும் தான் அடங்கினர்…  அவர்கள் வந்த நேரம் அருண் மேலதிகரிகளுடன் தீவிர ஆலோசனையில் ஈடுபட்டு கொண்ட இருந்தான்… இதோ அதோ என ஆறு மணி நேரமாக நடந்தது விவாதம்… எல்லாம் முடிந்து அருண் அங்கே வரும் வரை யாருமே கோவிந்தனை கண்ணால் காண முடியவில்லை…

 

அவன் வந்ததும் நடந்தத்தை சொல்லி கோவிந்தனை பார்க்க கேட்க… இருங்க நான் என்ன என்று போய் கேட்டு விட்டு வருகிறேன் என்றவன் உள்ளே சென்று  இரண்டு மணி நேரத்திற்கு மேல் தான் வெளியே  வந்தான்…

இங்க பாருங்க உங்களால் இப்போ அவரை பார்க்க முடியாது என அருணும் மருத்துவர்கள் சொன்னதையே திரும்பி சொல்ல எல்லோருமே ஓஓ என்று கூவி அழுதனர்…

 

ஏன் மச்சான் எங்களை பார்க்க விட மாட்டிங்குறிங்க எங்க கிட்ட இருந்து எதையாவது மறைக்கிறீங்களா எதுவா இருந்தாலும் சொல்லிடுங்க… மச்சானா இருந்தாலும் நீங்களும் போலீஸ்காரர் தானே…உங்களை நம்பி தானே அனுப்பினோம்  கூட்டி போய் என்ன செஞ்சிங்க எங்க நைனாவை…  என தினேஷ் வருத்ததில் பேசினான் விட்டு இருந்தால் இன்னும் என்னென்ன பேசி இருப்பானோ  அதற்குள் அவனை அடக்கிய ஜெயந்தி

 

டேய் தினேசு  வாய வச்சிக்கிட்டு சும்மா இருட அவர் நம்ம வீட்டு மாப்பிள்ளைடா…  என தினேஷை அடக்கிய ஜெயந்தி…” ஏன் மாப்பிள்ளை என்னாச்சு ஏன் அவரை பார்க்க முடியாதுன்னு சொல்றீங்க எதுவா இருந்தாலும் மறைக்காமல் சொல்லிடுங்க மாப்பிளை அவருக்கு என்ன தான் ஆச்சு தயவு செஞ்சு உண்மை சொல்லிடுங்க மாப்பிளை…!!” என ஜெயந்தி கையெடுத்து கும்பிட்டு கேக்க…

 

மாமா கோர்ட்ல சரணடைய போறது எப்படியோ வெளியே தெரிஞ்சி போச்சு அத்தை எங்க அவர் வாயை திறந்தா நாம மாட்டிக்கிவோம் என்று அவரை கோர்ட் வாசலில் வச்சே போட்டுட்டாங்க…

 

அவங்க போடுற வரைக்கும் விட்டு எங்கைய போனிங்க நீங்க எல்லாம் … அவனுங்க நைனாவை போட விட்டு வேடிக்கை பார்த்துட்டு இருந்தீங்களா … எப்படியோ பிளான் பண்ணி இந்த போலீஸ்காரங்க   என் நைனாவ காலி பண்ணிட்டிங்க என தினேஷ் ஆவேசமாக கத்த…

 

சொல்லணும் என்றால் என்ன வேணும் என்றாலும் சொல்லலாம் தினேஷ்… யாரும் எதிர்ப்பாராமல் நடந்த சம்பவம் இதுல உங்க அப்பாவை காப்பாற்ற எவ்வளவு முயற்சி பண்ணோம் தெரியுமா…??  அதுனால எத்தனை போலீஸ்காரங்க வெட்டு பட்டு கிடக்குறாங்க தெரியுமா…?? தன் வேலையை குறை சொன்ன கோவத்தில் அருணும் பொங்கி விட… கோவிந்தனை காப்பாற்ற முயன்றதில் அருண் சில வெட்டுகள் வங்கி இருப்பதை அப்போது தான் பூரணியும் கவனைத்தாள்… பழி சொன்னால் யார் தாங்குவார்கள்…??

 

அத்தோட  உங்க அப்பாவை போட்டு தள்ளனும் நினைச்சு இருந்த கோர்ட்வரை கூட்டி போக வேண்டிய அவசியம் எங்களுக்கு இல்லை…அப்புறம் அருவாள் வேணும் தான் என்கிற எந்த  அவசியமும் இல்லை  ஒரு துப்பாக்கி குண்டு போதும்… என்றதும் அங்கிருந்தோர் முகம் வெளிருவதை கண்டவன் தன் கோவத்தை மட்டு படுத்தி கொண்டு  தன்மையாகவே  பேச முயன்றான்…

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Scroll to Top