28
அத்தை மாமாவுக்கு உடம்பு முழுக்க அறிவாள் வெட்டு விழுந்து இருக்கு… என்றதும் மீண்டும் அவர்கள் ஓலமிட…அவர்களை என்ன சொல்லி சமாதானம் செய்வது என்று தெரியாமல் மேலே தொடர்ந்தான் “மாமா கண்ணை திறந்து இருந்தாலும் இன்னும் கிரிடிகல் கண்டிஷன்ல தான் இருக்காரு அவர் பக்கத்துல போன அவர் நிலைமை இன்னும் மோசமாக தான் வாய்ப்பு இருக்கு… அதனால தான் உங்களை உள்ள விடல… அதுவும் இல்லாம அவரை நீங்க அந்த மாதிரி கோலத்துல பார்க்கிறது சரியா வராது அத்தை… நீங்க வீட்டுக்கு கிளம்புங்க நான் பார்த்துககிறேன் என கோவிந்தனின் நிலைமையை எடுத்து சொல்லி புரிய வைக்க முயற்சி செய்ய…
ஐயோ மாப்பிளை அப்படி எல்லாம் சொல்லாதீங்க மாப்பிள்ளை… அவரை ஒரே ஒரு தடவ அவரை தள்ளி நின்னாவது பார்த்துட்டா போதும் மாப்பிள்ளை … தயவு செய்து அதுக்கு மட்டும் அனுமதிங்க அதுக்காக நான் யார் காலில் வேணும் என்றாலும் விழறேன் மாப்பிள்ளை எனக்கு அவரை ஒரு தடவை பார்க்கணும் ஒரே தடவை அவரை பார்க்கணும் என ஜெயந்தி கதறி அழ தர்ம சங்கடமான நிலைக்கு தள்ள பட்டான் அருண்…
ஐயோ அத்தை என்ன பேசுறீங்க …நான் இருக்கும் போது அப்படி எல்லாம் பேசாதிங்க இருங்க எதுக்கும் ஒரு முறை நான் பெரிய டாக்டர் கிட்ட பேசிட்டு வரேன்…என்றவன் வேகமாக அவரை தேடி சென்றான்… சென்ற அடுத்த இருபதாவது நிமிடத்தில் வந்தவன்…
நான் டாக்டர் எல்லாம் பேசிட்டேன் ரொம்ப கெஞ்சி கேட்டு தான் மாமாவை பார்க்க அனுமகி வாங்கி இருக்கேன் அதுவும் அவர் ரூம் வெளிய இருந்து தான் பார்க்க முடியும்… தயவு செஞ்சு உள்ள வந்து யாரும் இதே போல அழுது வைக்காதீங்க நீங்க எல்லாம் அழறத மாமா பார்த்தா அவரும் தாங்கமாட்டார் அது அவருக்கு நல்லதில்லை…என கூறி அனைவரையும் கோவிந்தனை வைத்து இதுக்கும் தீவிர கண்காணிப்பு அறைக்கு வெளியே அழைத்து சென்று கண்ணாடி திரை ஊடே அவரை காட்ட…
அங்கே அவரை கூறு கூறாக வெட்ட பட்ட கந்தல் துணியாக பார்த்த பின் கதறமல் இருக்க முடியுமோ…
நைனாஆ…
அப்பாஆ.. .
என்னங்கஆ…
அண்ணேஏ… என கதறி துடித்தன பாசம் வைத்த நெஞ்சங்கள்…
அவர்களின் அழு குரல் தடுப்பையும் தாண்டி உள்ளே இருந்தவர் செவிகளில் கேட்டதோ மெல்ல இமை திறந்து பார்த்தவர்… கண்களில் நீர் திரை அதை கண்ட மருத்துவர்கள் இப்போ அவர் எமோஷனல் ஆனா நல்லதில்லை இதுக்கு தான் நான் யாரையும் உள்ள விட வேண்டாம் சொன்னேன் நீங்க கேட்டதால விட்டேன் ஏ சி சார் தயவு செஞ்சி எல்லாரையும் வெளியே கூடி போயிடுங்க என பணி மருத்துவர்கள் கண்டிக்க அனைவரையும் வெளியே அழைத்து சென்றவன்… அவர்களை சமாதானம் படுத்தி அனுப்பி வைப்பதற்குள் போதும் போதும் என்றாகி விட்டது…
என்ன நினைத்தானோ அவர்களோடு செல்ல இருந்த பூரணியை மட்டும் நிறுத்தி விட்டு மற்றவர்களை தினேஷோடு பத்திரமாக அனுப்பி வைத்தான்…
பின் பெரிய மருத்துவர் அழைப்பதாக கூற அவரை தனியே சென்று பார்த்து வந்தவன் தலை பிடித்தப் படி ஒரு சேரில் அமர்ந்து விட்டான்…
வெகு நேரம் அவன் அப்படியே இருக்கவே அவன் அருகில் சென்ற பூரணி அப்போது தான் அருணை கவனித்தாள் அவனது வலது தோள் பட்டையில் காயம் ஏற்பட்டு இருப்பதை நிச்சயம் அது அவள் தந்தையை காப்பாற்ற முயன்றதில் தான் ஏற்பட்டு இருக்க வேண்டும் என்பது…
அரிவாளால் ஏற்பட்ட காயம் பற்றி அவளை விட நன்கு அறிந்தவர் யாராக இருக்க முடியும்… சிறு வயது முதல் பார்த்து பழகிய வலி அன்றோ… நிச்சயம் அதீத வலியாக தான் இருக்கும் அதை தனக்குள்ளே வைத்து கொண்டு முகம் சுளிக்காமல் ஓடி ஓடி உதவி செய்பவனை குறை சொன்னால் கோபம் வர தானே செய்யும் எனவே அருண் அப்போது பேசியதை மன்னித்து விட்டாள் …
களைப்பும் சோர்வுமாக அமர்ந்து இருந்தவன் அருகில் சென்று நின்றவள் ஆதரவாக அவன் தோளில் கை வைக்க… சொல்ல முடியாத உணர்வுகளுடன் அவளை நிமிர்ந்து பார்த்தவன்… ஆதரவுக்காக அவள் பற்றிய கைகளை ஆதாரமாக பிடித்து தன் பக்கத்தில் அமர வைத்து கொண்டவன்… அவள் கைகளிலே முகம் புதைத்து கொள்ள புரியாது திகைத்தாள் பேதை… அவனின் மூளை நரம்புகள் துடிப்பது அவள் கைகள் உணர்ந்தன எதற்காகவோ அருண் கலங்கி இருப்பது நன்றாக தெரிந்தது ஆனால் அது எதனால் என்று தான் அவளுக்கு விளங்கவில்லை… விவரம் தெரியாவிட்டாலும் அவனுக்கு ஆதரவாக இருக்க மனம் ஊந்த கைகளில் இருந்த அவன் தலையை எடுத்து தன் தோளோடு இழுத்து அணைத்து கொண்டாள்…
அவள் மனதிலும் ஆயிரம் வலியும் வேதனையும் இருக்க தான் செய்தது ஆனால் ஏனோ அவள் கணவன் எதையோ வெளியே சொல்ல முடியாமல் உள்ளே போட்டு குமைந்து கொள்வதை சகிக்க முடியவில்லை… சொல்லாமல் புரிந்து கொள்ளும் உறவு பெரும் வரம் அல்லவா …?
எவ்வளவு நேரம் இருவரும் அப்படி இருந்தனரோ அதற்குள் யாரோ வந்து அவர்களை அழைக்க கண்களை அழுத்தி துடைத்து கொண்டு எழுந்தவன் பூரணியை அழைத்து கொண்டு நடந்தான்…
நான் சொல்றதை கொஞ்சம் பதட்ட படாம கேட்டுக்கோ பூரணி… மாமாவோட நிலைமை முன்னை விட ரொம்ப மோசமா இருக்கு… இதை எப்படி சொல்றது தெரியல ஆனா உன்கிட்ட உண்மையை சொல்லி தான் ஆகணும் மாமா பிழைக்கிறது அந்த கடவுள் கையில தான் இருக்கு…அதனால அவர் கடைசியா உன்ன மட்டும் பார்க்கணும் ஆசை படுறார்… இது மற்றவங்களுக்கு தெரிஞ்சா நிச்சயம் தாங்கிக்க மாட்டாங்க புரிய வைக்கிறதும் கஷ்டம் அதனால் தன் அவங்களை அனுப்பி வைத்து விட்டு உன்னை மட்டும் இருக்க சொன்னேன்… நான் டாக்டர் கிட்ட எல்லாம் பேசிட்டேன் அதுக்கான ஏற்பாடுகளும் பண்ணிட்டாங்க… நீ உள்ள போய் அவருக்கு ஆறுதலா பேசு அழுது வைக்காத புரியுதா என சின்ன பிள்ளைக்கு சொல்லி கொடுப்பது போல் சொல்லி புரிய வைக்க அது அவள் மூளைக்கு எட்டியதா என்றால் கேள்வி கூறி தான்…
ஒத்துழைக்க மறுத்த கால்களை வலுக்கட்டாயமாக எட்டு வைத்து உள்ளே சென்றவள்… அங்கு பொட்டலாமாக போட்டு வைக்க பட்டு இருந்த தந்தை பார்க்க முடியாமல் கண்ணில் நீர் திரையிட்டது அவள் அறியாமலே…
பூரணி வந்து விட்டதை மருத்துவர் கோவிந்தனுக்கு கூற திறக்கவே கனமாக இருந்த இமையை திறந்தவர் கண்களுக்கு மங்களாக தெரிய இமையை தட்டி தட்டி விழித்தவர் சலைன் போட்ட கைகளால் கஷ்டப்பட்டு தூக்கி மகளை அருகே அழைக்க…
தன்னை மீறி கதறி விட்டாள் பூரணி அப்பாஆஆ என அவர் அருகில் துடித்து ஓவடி சென்றவள்…
அவர் கையோடு தன் கையை பிடித்து கொண்டு கதற அவளை கொஞ்சம் நேரம் அழ விட்டு பார்த்தவர் பின் அவள் தலையில் கையை வைத்து அழுகையை நிறுத்த சொன்னவர்… மூக்கில் போட்டு இருந்த ஆக்ஸிஜன் மாஸ்க்கை கழட்ட வேணாம் என தடுத்தவர்களை
பொருட் படுத்தாமல் கழட்டி விட்டு பேச துவங்கினார்…
அப்பா தெரிஞ்சே நிறைய தப்பு செஞ்சுட்டேன் அந்த பாவம் எல்லாம் என்னோட…வே ஹாஹு போகட்டும் உங்களுக்கு வந்துட கூடாது அதுனாலே நானே எல்லாத்தையும் சுமந்துட்டு போயிடுறேன்… எனக்கு தேவை எல்லாம் நீயும் ஹூம் தினேஷூம் சந்தோஷமா இருக்…கணும் ஹாஹு ம் நிம்மதியா வாழனும்.. ஹா மாப்பிள்ளை ரொம்ப நல்லவர் பூரணி உன்னை நல்லா பரத்துப்பார் நம்பிக்கை ஹாஹூ எனக்கு இருக்கு… எனக்கு பிறகு உங்க அம்மாவை நல்லா பார்த்துக்கோ பூரணி அவளுக்கு உலகமே தெரியாது… நான் எவ்வளவோ மன்னிக்கவே முடியாத பாவம் அவளுக்கு செஞ்சிட்டேன்… அதெல்லாம் பொறுத்து கிட்டு என்னோட வாழ்ந்தவளுக்கு என்னால மன்னிப்பை தவிர வேற எதுவும் கேக்க முடியாத பாவி ஆகிட்டேன்… நான் ஒரு நல்ல புருஷனும் இல்லை மனுஷனும் இல்லாம வேணாலும் இருக்கலாம் ஆனால் உங்களுக்கு ஒரு நல்ல தகப்பனா இருக்க என்னால ஆன மட்டும் முயற்சி செஞ்சேன்மா… எது எப்படியோ உங்க ரெண்டு பேருக்கும் ஒரு நல்ல வாழ்க்கை அமைச்சி அதை கண்ணால பார்த்துட்டேன் இந்த சந்தோஷமே போதும்… நிம்மதியா கண்ணை மூடிடுவேன் என கூறியதை கேட்டு…
அப்படி எல்லாம் சொல்லாதீங்கபா என தடுத்து பூரணியை பொருட் படுத்தாமல் மேலே தொடர்ந்தார்…
ஹும் பூரணி தினேஷ் பாவம் மா வெளிய முரடனா தெரிந்தாலும் அவன் ஒரு முட்டாள் வெகுளிமா அவனை நீயும் மாப்பிள்ளையும் சேர்ந்து தான்மா அவனை கரை சேர்க்கணும்… அப்பா பொறுப்பை உன் மேல சுமத்துறேனா… அப்பாக்கு உன்னை விட்டா வேற யாரும் இல்லைமா … முடிஞ்சா இந்த பாவ பட்ட அப்பனை மணனிச்சிடுமா… நான் செஞ்ச பாவம் இந்த ஜென்மத்தோட போகட்டும் அடுத்த ஜென்மத்திலாவது நான் நல்லவனா வாழனும் அதுக்கு நீயே எனக்கு தாயா வரணும் நான் உனக்கே மாகாண பிறக்கணும்… என கோவிந்தன் உணர்வு பூர்வமாக பேசி கொண்டு இருக்கும் போதே…
அப்படி எல்லாம் பேசாத அப்பா … நீ பொழைச்சி வருவ என பூரணி அவரை தேற்ற…
சார் உங்க டைம் முடிஞ்சி போச்சு இதுக்கு மேல நீங்க இங்க இருக்கிறது நல்லதில்ல சீக்கிரம் கிளம்புங்க சார் என வார்டு பாய் வந்து விரட்ட…
இல்லை நான் போக மாட்டேன்… அப்பா நான் உன் கூடவே இருக்கேன் அப்பா உனக்கு ஒன்னும் ஆகாது ப்பா என பூரணி அடம் பிடிக்க … செய்வதறியாது திகைத்தனர் மற்றவர் … அது எதனாலோ…??