ATM Tamil Romantic Novels

ரௌடி பேபி -29

29

 

பூரணி கோவிந்தனை விட்டு வெளியேற மறுக்க

 

“ஐய்ய சார் என்ன சார் பேஜரா இருக்கு உங்க கூட… எல்லாம் முன்னாடியே பேசினது தான சார் இப்ப வந்து இப்படி முரண்டிக்கினா எப்படி… சீக்கிரம் சார்  இங்க இருந்து நீங்க  நல்லது அவ்ளோ தான் சொல்ல முடியும் அதுக்கு மேல இங்க நடக்கிறதுக்கு நாங்க பொறுப்பில்லை … புரிஞ்சிக்கமா உசுரு மேலை ஆசை இருந்தா இருந்து போயிடு என்று விட்டு அவன் வேக வேகமாக அங்கிருந்து வெளியே சென்று விட…

 

மாப்பிள்ளை நீங்க பூரணியை கூட்டிட்டு சீக்கிரம் இங்க இருந்து போயிடுங்க… நீக்காதீங்க மாப்பிள்ளை   யோசிக்காம பூரணியை கூட்டிட்டு போயிடுங்க மாப்பிள்ளை  என இறைஞ்ச…

 

என்ன நடக்கிறது என புரியாமல் பூரணி விழித்து நிறக்கும் நேரம்… அந்த  மொத்த மருத்துவமனையுமே இருளில்  முழுக்கியது… மருத்துவ உபகரணங்களுக்காக வைக்க பட்ட ஜெனரேட்டர் மூலம் மெல்லிய வெளிச்சத்தில் அந்த மூவரும்…  என்ன என்னாச்சு ஏன் கரண்ட் போச்சு என பூரணி அக்கம் பக்கம் பார்க்க அங்கு சுற்றிலும் மனித நடமாட்டமே இல்லை என அறிந்தவளுக்கு சற்று திகில் பிடிக்க  அந்த அறையின் ஜன்னல் வழியே வெளியே எட்டி பார்த்தவளுக்கு உயிரே நின்று விட்டது…

 

அம்மருத்தவமணையை  சுற்றி   முன் விளக்கை ஒளிர விட்ட பல வண்டிகள் அதில் பல குண்டர்கள் கூடவே அவர்கள் கையில் கத்தி இதை விட அந்த சூழ்நிலையை எடுத்து சொல்ல என்ன வேணும்… நிலைமையை புரிந்து கொண்ட பூரணி …

 

அங்க அவங்க எல்லாம் அப்பாவை  கொல்ல வந்து இருக்காங்க … அவங்க ஏதாவது பண்றதுகுள்ள அப்பாவை  காப்பாத்தணும்… போலீஸ் போலீஸ் என கத்தியவளுக்கு அப்போதே அங்கு உதவிக்கு என்று எவரும் இல்லை என்பது உரைக்க…

 

அப்பா அப்பா உனக்கு ஒன்னும் ஆகாது நான் இருக்கே  நான் இருக்கேன் நான் உனக்கு ஒன்னும் ஆகிய விடமாட்டேன்…  ஏங்க  அங்கையே நிக்காம வந்து அப்பாவை தூக்குங்க… அப்பாவை அவங்க கைக்கு சிக்காம சீக்கிரம் இங்கு இருந்து கூட்டி போயிடனும்… சீக்கிரம் சீக்கிரம் வாங்க வந்து அவரை அந்த வீல் சேரில் தூக்கி உட்கார வைங்க என பூரணி அவள் தந்தையை காப்பாற்ற துடிக்க மற்ற இருவரும் அவளை பாவமாக பார்த்தப்படி இருந்தனரே ஒழிய துளியும் அவளுக்கு சற்றும்  ஒத்துழைப்பை நல்கவில்லை…

 

அதை தாமதமாகவே உணர்ந்தவள் ஏன் என ஒற்றை கேள்வியோடு நிற்க… அதற்குள் அவர்கள் தளத்தில் தட தட என் அழுத்தமான காலடி சத்தம் கேட்க… வந்து விட்டார்கள் அவர்கள் கோவிந்தனை நெருங்கி வந்து விட்டார்கள் என புரிந்து கொண்டவள்…

 

அப்பாஆ என கதறி கொண்டு போய் அவரை கட்டிக் கொண்டாள்… அவரை விட்டு நகர மாட்டேன் என்பது போல…

 

பூரணி போ என கோவிந்தன் தன் மகளை தள்ள பார்க்க… அவள் அவரை விடாமல் இறுக கட்டி கொண்டு… நான் போ மாட்டேன் பா உன்னை சாக விடமாட்டேன்… என்னால தானா எல்லாம் நான் தான இதுக்கெல்லாம் காரணம்… நாணும் கூடவே இருக்கேன் என்ன ஆனாலும் உன்னை இங்க தனியா விடமாட்டேன் அப்பாவை விட்டு வரமாட்டேன் என துடித்தவளை  கண்டு நெகிழ்ந்து போனார்  கோவிந்தன் தந்தையாக… இதற்கு மேல் அவருக்கு என்ன வேண்டும் அவர் மகளின் அன்பு அவருக்கு பரிபூரணமாக கிடைத்து விட்ட திருப்தியே அவரை நிம்மதியாக சாக போதுமானதாக இருக்க…

 

இவளை இழுத்துட்டு  இங்க இருந்து போயிடுங்க மாப்பிள்ளை என அருணை பார்க்க… அவன் மறுப்பாக தலை அசைக்க… கண்களை ஆழ மூடி திறந்தவர் எனக்கு வாக்கு கொடுத்து இருக்கீங்க மாப்பிள்ளை… என் மேல சத்தியம் இங்க இருந்து போங்க என இறுதியாக அஸ்த்திரத்தை பயன் படுத்த…

 

கை முஷ்டி இறுக ஒரு முறை கண்களை மூடி திறந்தவன் … பூரணியை வலுக்கட்டாயமாக இழுத்து கொண்டு போக அவளோ அவள் தந்தையின் கையை கெட்டியாக பிடித்து கொண்டு அவரை பார்க்க… அவரும் அந்நேரம் பூரணியின் கண்களை தான் பார்த்து இருந்தார்

தந்தை மகள் இடையில் சொல்லாத உணர்வு போராட்டம் ஊமையாக அரங்கேறியது… டக் டக் என கத்திகளின் ஓசை அவ்வறையின்  வாயிலை நெருங்க தன் கையில் இருந்த பூரணியின் பிடியை தளர்த்தி அவளை அருணின் புறம் தள்ளி விட…

 

அப்பாஆ என கத்தியவளை அங்கிருந்த மற்றொரு கதவு வழியாக அருண் இழுத்து செல்லவும் அவர்கள் கோவிந்தன் அறைக்குள் நுழையவும்  சரியாக இருந்தது… அதனை தொடர்ந்து கத்தி குத்தும் கோவிந்தனின் மூச்சு சத்தமும் நின்று போனது…

 

வேகமான நடைகள் போட்டு பூரணியை இழுத்து கொண்டு மருத்துவமணையின் பின் பக்கம் வந்தவன அவள் கைகளை தன் பிடியில் இருந்து விட…

 

மறுநொடியே ஆக்ரோஷமாக அருணின்  சட்டைகளை பிடித்துக்கொண்டவள் ஏன்யா ஏன் இப்படி பண்ண  நம்ப வச்சி இப்படி கழுத்த அறுத்துதட்டியே பாவி பாவி… ஐயோஓஓ இப்படி

நானே அவரை எமனோட வாயில தள்ளிட்டேனே பாவி  நான் பாவீ  என அருணைத்  திட்ட தொடங்கியவள் சுயபட்சா தாபத்தில் உட்கார்ந்து கண்ணீர் வடிக்க  

 

அழும் அவளை சமாதானம் செய்ய அவளை அருண் தூக்க அவன் கைகளை தட்டி விட்டவள்… ஏன் அவரை விட்ட உன்னை நம்பி தான அவர் வந்தார்… நீ நினைத்து இருந்தா காப்பாற்றி இருக்கலாமே ஏன் விட்ட ஏன் அவரை சாக விட்ட ஏன் விட்ட… இல்லை அவன் சொன்ன மாதிரி உன் போலீஸ்காரன் புத்தியை காட்டிட்டியே நயமா பேசி நம்ப வச்சி பழி வாங்கிட்டியே பாவி என ஆத்திரத்தில் அர்த்தம் இல்லாமல் பேச…

 

“ஆமா நான் போலீஸ்காரன் தான் அதான் போலீஸ் புத்தியை காட்டிட்டேன் … ஊர் முழுக்க அயோக்கியதனம் பண்ணி   எதிரியை சம்பாரிச்சு வச்சிட்டு  எப்போடா வருவான் வெட்டி சாய்க்கலாம்ன்னு காத்துட்டு இருந்தவங்க மத்தியில் அவரை மனுஷன மாற்றி வாழ வைக்கணும் நினைச்சேன் பார்த்தியா அது போலீஸ் புத்தித் தான்… எல்லாத்தையும் விட்டதும் அடங்கி போக உங்க அப்பா ஒன்னும் சாதாரண ரௌடி இல்லை என்கவுண்டர் வாண்டெட் லிஸ்ட் இருக்குற ரௌடி… கத்தியை  அவர் விட்டாலும் எப்பவும் எங்க இருந்தும் கத்தி அவரை நோக்கி வர் காத்து இருக்குன்னு தெரிஞ்சும்… கடைசி நொடி  வர அவர் கூடவே இருக்க வச்சது போலீஸ் புத்தி தான்… ஆனால் பெத்த அப்பா என்  புள்ளைங்களுக்கு எந்த ஆபத்தும் வார கூடாது நான் செஞ்ச பாவத்துக்கு நானே பலி ஆகிடுறேன் தெரிஞ்சே உயிரை விட்டாரே உங்க அப்பா அந்த மனுஷன் என்கிட்ட வாங்கின சத்தியத்திற்க்கு கட்டு பட்டு கடமையை செய்ய முடியாத **** நின்றேனே  அப்போ மட்டும் நான் போலீஸ்காரன இல்லாமல் மனுஷனா போயிட்டேன்… போடிங் என திட்டி விட்டு பூரணியை அப்படியே விட்டுவிட்டு அங்கிருந்த கோவத்தில் கிளம்பி சென்ற அருண்…

 

மீண்டும் திரும்பி அவன் வந்தான் என்றால் அது தானே காதல்… எத்தனை கோபம் இருந்தாக போதிலும் அடுத்தவர் மீது அக்கறை கொள்ளும் துணை கிடைப்பது பெரும் வாரம் அல்லவா… எனவே அருண் மீண்டும் வந்தான் அவன்  மனைவிக்காக அவள் தான் கோவித்தில் பேசி விட்டாள் இவனும் பதிலுக்கு கத்தியாகி விட்டது…

 

தனியே சென்று கோவத்தை குறைத்து கொண்டு வந்தவன் பூரணியை அழைத்து கொண்டு சென்று வீட்டில் விட்டு  கோவிந்தன் சிகிச்சை பலன் இன்றி  இறந்து விட்டதாக கூறினான் … ஆம் பொய் கூறினான் ஆனால் எதற்காக எல்லாம் கோவிந்தன் கேட்டு கொண்டதன் பெயரில் தான்… அவரும் தன் சாவை நினைத்து அவர்கள் வருந்து கூடாது என்பதற்காகவும் கூடவே தன் சாவிற்கு பழிவாங்க கிளம்ப கூடாது… அவர் மறைவுக்கு பின்னராவது அவர்கள் நிம்மதியோடு வாழ வேண்டும் என்பதற்காகவும் தான்…

 

இதோ பூரணியை விட்டு விட்டு மருத்துவமணைக்கு  ஓவடியவன் அங்கு கோவிந்தனுக்கு செய்ய வேண்டியதை எல்லாம் விதிமுறை படி செய்து விட்டு அவரது இறுதி யாத்திரையில் கூடவே இருந்து ஈமக் காரியம் வரை எல்லாம் ஓய்வே எடுக்காமல் அலைந்தவன்.. கோவிந்தன் அவனுக்கு கொடுத்த பொறுப்பை எல்லாம் பற்றது பற்றது நிறைவேற்றினான் நல்ல மருமகனாக செய்து முடித்தான்…

 

தூக்கம் முடிந்து பின் தனியாக கிடந்து யோசித்த பார்த்த பூரணி அருணிடம் மனமார மன்னிப்பு கேட்க…  அன்போடு மன்னித்து ஆசையாக அவளை அணைத்து கொண்டான்… அடுத்த சில மாதத்திலே பூரணி கருதரித்திருக்க  அடுத்த பத்தாவது மாதத்தில் அவள் கையில் ஒரு ஆண் குழந்தை… அதற்கு பெயர் வெங்கட கோவிந்த கிருஷணன் என பூரணி பிடிவாதமாக வைக்க… அருணின் இதழிலோ  புன்னகையுடன் “ரௌடி பேபி” என சொற்கள் தவழ்ந்தது…  

சுபம்

 

 

 

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Scroll to Top