சண்டியரே 14
சிறுத்த சிற்றிடை அவனின் வலிய கரங்களுக்குள் சிக்கி தவிக்க… அவள் தலைமுடியை தன் முரட்டு விரல்களால் இறுக்க.. அவள் இதழ்களோ அவன் இதழ்களுக்குள் சிக்கி வதைப்பட.. அவன் கரங்களோ அவள் அங்கங்களை தீண்டி தீண்டி தீயை மூட்ட.. அவனின் இந்த பலவித தாக்குதலால் சுழலுக்குள் சிக்கி தவிக்கும் காகிதம் போல தவித்தாள் தங்கமயில்.
அவனது பற்தடம் அழுத்தமாக அவளது அதரங்களில் பதிந்தது. “இந்த உதடு தானே என்னை வேண்டாம் என்று பேசியது..! இனி பேசுமா? பேசுமா?’ என்பது போல இருந்தது அவனது தண்டனைகள்..!!
அவனது இந்த முரட்டு தனத்தில் பயந்த பாவை அவனை தன்னிடமிருந்து தள்ள.. அவரது கரங்களை தன் கரங்களோடு சேர்த்து தன் செய்கைக்கு கூட்டு களவாணியாக்கினான் இந்த கள்வன்..!
அவனது இந்த செயலில் மயில் விதிர்விதித்து கண்கள் பயத்தில் விரிய அவனைப் பார்த்து “மாமா..” என்று அலற.. அனைத்தும் அவன் அதரங்களுக்குள் சென்று மறைந்தது.
கூடவே அவளை உணர துடிக்கும் அவனின் உணர்வுகளுக்கு ஆடைகள் தடைகளாய் தடுக்க.. அதனை கடக்க முடியாமல் அவன் அத்தடைகளை அகற்ற..
“மாமா… ப்ளீஸ்…” என்று மாராப்பு இல்லாத மார்பின் மீது அவள் கைகளால் மறைக்க..
“ஏன்.. டி? ஏன்?? எதுக்கு இப்போ என்கிட்ட மறைக்கிற? என்கிட்ட மறைச்சு வேற யாருக்காவது பத்திரப்படுத்தி வைக்க போறியா?”அவன் அடர் அமிலத்தை அவள் மீது கொட்ட.. அதில் துடிதுடித்துப் போனாள் பெண்.
‘நான் அப்படியா?’ என்று அவள் அடிப்பட்ட பார்வை பார்க்க “சரிதான் போடி..! ரொம்ப தான் காதலா பாக்குறா.. கொஞ்ச நேரத்துக்கு முன்னாடி தான் என்னை வேணாம்னு சொன்னா..” என்று வார்த்தைகள் என்னவோ கோபமாக வந்தாலும்.. அவன் தேகமோ அவள் தேகத்தோடு முட்டி மோதி அவளை அறிந்துக் கொண்டு தான் இருந்தது.
தாய் விட்டு பிரிந்த பசுங்கன்று மீண்டும் தாயிடம் சேரும்போது இருக்குமே ஒரு முரட்டுத்தனமான பாசம்.. அது போன்ற நேசம் தான் ஆரூரனோடதும்..!!
நான் வேணாமா? நான் வேணாமா? என்று கேட்டு கேட்டு..
அவளின் இதழ்களை விட்டு விட்டு கொய்தான்.
அவளின் அங்கங்களில் முட்டி மோதி அங்கங்கே பற்தடம் பதிய கடித்தான்.
அவளின் பிறை நிலவாய் தெரியும் செழுமைகளில் முகத்தை பிரட்டி எடுத்தான்.
அவளின் சிற்றிடை அவனின் வலிய கரங்களில் சிக்க, இறுக்கி பிடித்து தன் வலியை காட்டினான்.
இவ்வாறாக அவளை ஒரு வழிப்படுத்தி.. அவளை நெருங்காமல் நெருங்கி.. கூடலில்லா கூடலை முடித்தவன்,
“குளிச்சிட்டு சீக்கிரம் கீழ வா” என்று வேக நடையோடு அங்கிருந்து சென்று விட்டான்.
அவன் செய்கையில் திக்கிதிணறி சுவற்றில் அப்படியே சாய்ந்து நின்றிருந்தாள் தங்கமயில்.
‘நான் வாய் வார்த்தையாக வேண்டாம் சொன்னதற்காகவா எப்படி??’ என்று தன் அலங்கோல நிலையை பார்த்து பெருமூச்சுவிட்டப்படி குளியலறைக்குள் புகுந்தாள் தங்கமயில்.
குளித்து முடித்து அவள் கீழே வரும்போது ஊர் மொத்தமே அங்கே தான் அமர்ந்திருந்தது.
ஊருக்குள் உறவா? உறவுக்குள் ஊரா?
ஒரு காலத்தில் ஊரே உறவாக இருக்கிறது என்று சந்தோஷப்பட்டாலும் இம்மாதிரி தருணங்களில் ‘ஏன்டா இம்புட்டு பேரும் உறவா வந்து வாய்ச்சிங்க?’ என்று மனம் கடுப்பிடிக்க தான் செய்ததது தங்க மயிலுக்கு.
இத்தனை பிரச்சனைக்கும் காரணமானவன் எங்கே என்று அவள் கண்கள் துழாவி தேட.. அவனோ கூடத்திற்கு சற்று தள்ளி இருந்த சோபாவில் அமர்ந்து ராகவியை மடியில் வைத்து கொஞ்சிக் கொண்டிருந்தான்.
“பிரச்சனையே உன்னைய வச்சி தான்.. இவனோ அதுக்கும் தனக்கும் சம்பந்தமே இல்லாதவன் போல போய் அமர்ந்திருக்கிறானே??!!” என்று பற்றி கொண்டு வந்தது தங்கமயிலுக்கு. ஆனாலும் இப்படி பொதுவில் காட்ட முடியாது என்று அமைதியாக அன்னையின் அருகில் வந்து நின்று கொண்டாள்.
“அதான் பொண்ணு வந்துருச்சுல மச்சான் பஞ்சாயத்தை ஆரம்பிங்க” என்று எங்கோ பார்த்துக் கொண்டு பேசினார் தியாகேசன்.
“அப்படி சட்டுன்னு எதுவே முடிவு செய்ய முடியாது மாப்பிள்ளை.. ஒன்னுக்குள்ள ஒன்னு நீங்க.. அவரு வீட்டு பொண்ணு உங்க வீட்டுக்கு வாழ வந்திருக்கு. அதேபோல உங்க பொண்ண உங்க மச்சானுக்கு கொடுத்து இருக்கீங்க.. அப்படி நறுக்குத்தெடுத்தார் போல எதையும் முடிச்சு விட முடியாது. கொஞ்சம் அமைதியா இருங்க” என்று விஜயராகவனின் பங்காளி ஒருவர் கூற அமைதியாக அமர்ந்திருந்தார் தியாகேசன்.
“ஏம்மா இத்தனை பேர பஞ்சாயத்துக்கு கூட்டி வச்சிருக்கீங்க? நமக்குள்ள பேசினா ஆகாதா?” என்று அம்மாவிடம் கடுப்பிடித்தாள் கமலாமாம்பிகை.
“அதை என்கிட்ட கேட்காத உங்க அப்பன் கிட்ட கேளு.. கூறுகெட்ட மனுஷன் ஊரையே கூட்டி வந்து வச்சிருக்கான். ஆனா அதுவும் நல்லதுக்கு தான்.. நாம பேசுனா அடங்குவானா உன் அப்பன். ஊரே கூடி கும்பி அடிச்சா தான் இவன் எல்லாம் அடங்குவான்” என்று மரியாதை காற்றில் பறக்க கணவனை திட்டி தீர்த்தார் அவர்.
“ஏதோ உறவு இருக்கிறது இந்த மட்டில் அம்மா மரியாதையாக பேசுகிறார்” என்று அப்பாவை பாவமாக பார்க்க..
தியாகேசன் உடனே மகள் அருகில் வந்து நின்று “என்ன மயிலு என்ன பண்ணுது? சேர் போடவா ஏதும் குடிக்க கொண்டு வரவா?” என்று அடுத்தடுத்து அவர் பாசத்தை கொட்ட..
“பாரு.. பாரு.. பாசம் காட்டறான் பாசமா.. அம்புட்டும் வேசம்டி” என்று கடுகடுத்த கமலாம்பிகை மகளுக்கு குடிக்க எதுவும் கொண்டு வர சொல்லலாம் என்று திரும்ப அதற்குள் ஒரு பெரிய குவளையில் பழரசத்தை கொண்டு வந்த அவள் முன் நீட்டினான் ஆரூரன்.
“குடிச்சிட்டு தெம்பா பேசு.. மயிலு” என்று கூற அங்கிருந்தவர்கள் கண்களில் எல்லாம் அத்தனை மின்னஞ்சல்கள்
“பாரு மாப்பிள்ளை.. எப்மடி பொண்டாட்டி கவனிக்கிறாருனு” என்று..!
தியாகேசன் இப்பொழுது மனைவியை முறைத்து “நீ கொண்டுவந்து கொடுத்திருக்கலாம்ல.. ஊருக்கு முன்னால சீன் போடுறீங்களா சீனு?” என்று பல்லைக் கடித்தார்.
“சரி சரி மச்சான் தியாகசா.. இப்படி வந்து உட்காரும். பிரச்சனையை முதலில் பேசி தீர்ப்போம். அப்புறம் மேல் மகளை கவனித்துக் கொள்ளலாம். அதான் உரிமை பட்டவன் பக்கத்துல இருந்து பார்த்து பார்த்து செய்கிறானே வாய்யா வந்து உட்காரும்..” என்று அவரின் மச்சான் முறையில் உள்ளவர் அழைக்க..
“இந்த வரேன் மாப்பிள்ளை..” என்று அருகே சென்று அமர்ந்து கொண்டார்.
“மாமா நீங்களே ஆரம்பிங்க..” என்று விஜயராகவனிடம் ஒருவன் கூற..
“சிவ ஆரூரா..!” என்று சத்தமாக அழைத்தார் விஜயராகவன்.
அவரின் வாயால் இபடி சிவ ஆரூரன் என்று அழைத்து எத்தனை வருடங்களாகி விட்டது? எப்பொழுதும் பெரியவனை குரு என்றும்.. சிறியவனை சிவா என்றும் தான் அழைப்பார். எப்பயாவது தான் இந்த ஆரூரன் என்று பெயர் அவர் வாயில் வரும்.
இன்று கூப்பிட்டதும் ஒரு முழு வினாடி அதனை கண்கள் மூடி அனுபவித்தான் ஆரூரன்..!
“பெரியப்பா நீங்களே பேசுங்க நான் பேசினா அது சரி வராது” என்றார். அதாவது இவர்கள் கல்யாணத்துக்கு தூது வந்த அந்த சிமிழி பெரியப்பாவை பேச தூண்டினார் விஜயராகவன்.
“நீ சொல்றதும் சரிதான்.. என்னடா ஆரூரா ஆதிரன் வேஷம் போட்டுட்டு சுத்துறியாமாம்” கிண்டலாக கேட்டார் அவர்.
“போட வேண்டிய கட்டாயம் தாத்தா..! ஏன் சினிமாவுல உங்க புரட்சித்தலைவர் போட்டா கைதட்டி சிரிக்கிறீங்க ரசிக்கிறீங்க” என்று அவன் சொல்ல..
“சினிமாவும் வாழ்க்கையும் ஒன்னா?” என்று கடுப்பாக பேசினார் தியாகேசன்.
“கண்டிப்பா கிடையாது..! திரையில அந்த கதை ஒரு முடிவுக்கு வரும். ஆனால் நம் வாழ்க்கை அப்படி கிடையாதே.. பல திருப்பு முனைகளோடு சென்று கொண்டே இருப்பது. அதுவும் இல்லாது அது கற்பனை..! ஆனா நிஜம்.. கற்பனை விட அதி பயங்கரம்..!’ என்று மாமனுக்கு பதில் கொடுத்தவன் “சொல்லுங்க தாத்தா..” என்றான் இப்பொழுது நல்ல பிள்ளையாய் பவ்யமாக.
“நீ ஏன் டா ஆதிரன்னு சொல்லிட்டு இங்க வந்த.. நீ இங்கனா.. அப்ப ஆதிரன் எங்க? எதுக்கு இப்படி ஆதிரனு பொய் சொல்லி நடிச்ச?” என்று கேட்டார்.
“சொல்ல வேண்டிய கட்டாயம் சூழ்நிலை தாத்தா.. என் அப்பா கிட்ட கூட என்னால ஒன்னுமே சொல்ல முடியாத சூழ்நிலை அப்போது” என்றான்.
சட்டென விஜயராகவன் அவனை பார்த்து முறைத்து “நீ வந்த அன்னைக்கே எனக்கு தெரியும் நீ ஆரூரன் தானு..! பெத்த எனக்கு தெரியாதா புள்ள யாருன்னு?” என்றதும் இவ்வளவு நேரம் மற்றவர்களுக்கு ஷாக் மேல் ஷாக் கொடுத்த ஆரூரன் இப்பொழுது அதிர்ந்து தந்தையை பார்த்து நின்றான்.
அனைவரும் இப்பொழுது விஜயராகவனை பார்க்க.. “இவன் பத்து வருஷமா என் கூட இல்லை ஆனாலும் இவனை எனக்கு தெரியாதா?? குருவுக்கும் இவனுக்கும் எனக்கும் வித்தியாசம் புரியாதா?? என்னதான் எனக்கு வித்தியாசம் தெரியாதுன்னு உருவ அமைப்பை மாற்றினாலும் பழக்கவழக்கம்னு ஒன்னு இருக்கு. அதெல்லாம் மாற்ற முடியுமா என்ன?” என்று மகனை கூர்ந்து கேட்டதும் அவனும் தலை குனிந்து கொண்டான்.
“சரி அதெல்லாம் இருக்கட்டும். ஆதிரனுக்கு நிச்சியம் பண்ண பொண்ண நீ ஏன்டா கட்டிக்கிட்ட?” என்று தியாகேசனுக்கு சார்பாக அவன் பங்காளி பேச…
“ஏன்னா.. ஒன்னு ஆதிரனுக்கு இந்த கல்யாணத்துல விருப்பம் இல்லை. இரண்டாவது எனக்கு விருப்பம் அதனால் நான் பண்ணிக்கிட்டேன்” என்றான்.
“ஆதிரனுக்கு கல்யாணத்துல விருப்பம் இருக்கா இல்லையானு உனக்கே எப்படி தெரியும்? நீ தான் ஊரு பக்கமே வரலையே?” என்று மடக்கிவிட்டதாக அவர் கேள்வி கேட்க..
“ஊருக்குள்ள வரலைன்னாஇங்க என்ன நடக்கிறது எல்லாம் தெரியாம போயிடுமா?” என்று ஏகத்தாளமாக சிரித்தவன் “நான் ஊருக்குள்ள இல்ல தான். ஆனாலும் அவர் பொண்ணுக்கு அவரால கல்யாணம் பண்ண முடிஞ்சதா? வெளியில மாப்பிள்ளை பார்த்து கட்டி கொடுக்க முடிஞ்சுதா?” என்று பின்னால் கைகட்டிக் கொண்டு அவரை நேர் பார்வை பார்த்து கேட்க தியாகேசன் மட்டும் இல்லை தங்கமயில் கூட அதிர்ந்து அவனைப் பார்த்தாள்.
“என்ன மாமோய்.. நான் சொன்னதை நீ மறந்து இருக்கலாம் ஆனா நான் மறக்க மாட்டேன். ஊரை விட்டு போகும்போது உன் கிட்ட சவால் விட்டு போனேன் இல்லையா.. ‘உன் பொண்ண பொண்டாட்டியாக்கி உன்னை மாமனாராக்கி எங்க புள்ளையை விட்டு உன் மூஞ்சில உச்சா அடிக்க சொல்றேன்னு’ சொன்னேனே மறந்துட்டீரா… எப்படி சொன்ன மாதிரி செஞ்சு காட்டினேனா?” என்று மீசையை முறுக்கி திமிராக பார்த்தவனை, முறைத்தவர் விஜயராகவனிடம் திரும்பி “பாருங்க.. உங்க புள்ள லட்சணத்தை” என்று கடுகடுத்தார்.
“அவன் அப்படி பேசுறதுக்கு காரணம் என்ன? நீங்க என்ன அவனிடம் பேசி அப்படி பேச தூண்டி விட்டிங்க?” என்று மகனை அறிந்தவராய் சரியாக கேட்டார்.
“என் பொண்ணு பின்னாடி சுத்தனான்”
“முன்ன மாதிரி அவன் உன் மச்சான் மட்டும் கிடையாது. இப்போ மாப்பிள்ளையும் கூட ஒழுங்கா மரியாதையா பேசு” என்றார் சிமிழி பெரியப்பா.
“ம்ம்.. சரி..சரி.. ஏற்கனவே அவர பத்தி ஊர்ல தெரிஞ்சு தான.. அதனால என் பொண்ணு பின்னாடி சுத்தாதன்னு சொன்னேன். எல்லா அப்பனுக்கும் உள்ள பயம் தானே.. எல்லா அப்பனுக்கும் உள்ள பொறுப்பு தானே.. அதனால தான் நான் அப்படி சொன்னேன். அதுக்கு உங்க புள்ள என்ன செஞ்சிருக்கா.. ரு.. பாருங்க” என்றார். அவர் குரலில் நினைத்ததை முடித்து விட்டானே என்று அத்தனை ஆத்திரம்.
“ஆக மொத்தம் இளந்தாரி பையனுக்கு சமமான சண்டை போட்டு அவனை ஏத்தி விட்டுட்டு இப்ப வந்து குத்துதே குடையுதேனா எப்படி தியாகேசா?” என்றார் சிமிழி பெரியப்பா.
“அதெல்லாம் கிடக்கட்டும். இவருக்கு ஏற்கனவே கல்யாணம் ஆகி ஒரு குழந்தை இருக்கு. அதெல்லாம் மறைச்சு என் பொண்ண இப்போ ஏமாத்திக் கட்டிகிட்டாரு.. சரியான ஏமாந்தக்காரன்.. இப்படிப்பட்ட ஏமாற்று பேர்வழியோட என் பொண்ணு வாழ மாட்டா.. இவரு என் பொண்ணுக்கு வேண்டாம். என்னுடைய பொண்ணு வாழ வேண்டாம்.. நான் என் பொண்ண என் வீட்டு கூட்டிட்டு போறேன்.. அதை மட்டும் பேசுங்க..!”
“என்ன ஆரூரா.. இதுக்கு நீ என்ன சொல்ற?” என்று அந்த தாத்தா கேட்க..
“எனக்கு ஒரு குழந்தை இருக்குதான். ஆனா அவன் அம்மா இப்ப உயிரோட இல்லை. இரண்டாந்தாரம் கட்டிக்கிறது ஒன்னும் நம்ம பக்கத்துக்கு புதுசு இல்லையே.. இப்போ எனக்கு இருக்கிற ஒரே மனைவி தங்கமயில் தான். ஆனால் அவளை நான் விட்டுக் கொடுக்க மாட்டேன். எப்பொழுதும் அவள் என் பொண்டாட்டி தான்” என்றான்.
“அதெல்லாம் முடியவே முடியாது. உன் கூட என் பொண்ண வாழ வைக்கவே மாட்டேன். என் பொண்ணு என் வீட்டுக்கு தான் நான் கூட்டிட்டு போவேன்..” அடம் பிடித்தார் தியாகேசன்.
“சரி.. உங்க பொண்ண உங்க வீட்டுக்கு கூட்டிட்டு போய் என்ன பண்ண போறீங்க?” என்று நக்கலாக அவன் கேட்க..
அவனின் அந்த நக்கல் தொணி உள்ளே குமறிக் கொண்டிருந்த அவரின் கோபத்தை விசிறி விட “ஏன் நீ இரண்டாவது கல்யாணம் பண்ணும்போது என் பொண்ணுக்கு பண்ணி வைக்க மாட்டேனா? ஜாம்ஜாமுனு இன்னொரு கல்யாணம் பண்ணி வைப்பேன்” என்றதும் கமலா காதை பொத்திக் கொண்டார்.
தங்கமயிலோ அப்பாவின் இந்த பேச்சில் இருந்த அருவருப்பையும் கோபத்தையும் அடக்க, கண்களை இறுக்க மூட அவள் கண்ணினோரம் இரு துளி கண்ணீர்.
அங்கிருந்து யாருக்குமே தியாகேசன் பேச்சை சகிக்க முடியவிலலை. இன்னும் கிராமத்தில் பழைய பழக்கவழக்கங்களில் ஊறிப்போனவர்கள். மனைவி இருந்தால் கணவனுக்கு இரண்டாவது கல்யாணம் செய்வதில் தப்பில்லை என்று எண்ணுபவர்கள்.. கணவனை இழந்த பெண்ணுக்கு இரண்டாவது திருமணம் முடிப்பதா என்று யோசிப்பவர்கள் தான்.
இப்போது சற்று காலம் மாறினாலும்.. சில பழக்கவழக்கங்களை குணாதிசயங்களை மாற்ற முடிவதில்லை..!!
கல்யாணம் பண்ணாமல் இருந்தாக்கூட பரவாயில்லை. இல்லை புருஷன் சரியில்லை என்றாலும் அறுத்து கட்டலாம் இங்கே கணவனும் நன்றாக இருக்க.. சொத்து பத்தோடு, கூடவே உறவுமுறை.. அப்பனின் வீம்புக்காக சிறுசுகளின் வாழ்க்கை அழிப்பதா? என்பதுதான் அங்குள்ளவர்கள் மனதில் இருந்தது. ஆனால் இதை அவர்கள் மட்டும் பேசி தீர்க்க முடியாது பெண்ணும் பேச வேண்டும் அல்லவா?
“ஆத்தா மயிலு.. உங்க அப்பன் சொல்றத கேட்டியா? ஒன்ன அவன் கூட கூப்பிடறான் போறியா?” என்று கேட்டதும், அவள் பதில் சொல்லாமல் அமைதியாகவே தலை குனிந்து நின்றாள்.
அவளுக்கு ஆரூரன் தன்னை ஏமாற்றி திருமணம் செய்து கொண்டதற்கு நியாயம் சொல்லாமல் மற்றது பேசுகிறார்களே என்பது மட்டும்தான் இருந்தது. கூடவே இந்த அப்பா திசையை மாற்றுகிறாரே… இவரோடு சென்றால் எங்கே மீண்டும் அந்த லோகநாதன் பிடித்து கட்டி வைத்து விட்டால் என்று பயந்தாள்.
அதே நேரம் இவன் செய்த பிழையை மன்னித்து ஏற்கும் மனமும் இல்லை இரு கொள்ளு எறும்பாய் தவித்தாள் பெண்ணவள்..!
“இங்க பாரு மயிலு.. நீ அப்பா கூட வா. அப்பா உன்னை நல்லா கவனிச்சிக்கிறேன்” என்றதும் அவள் முகத்தை திருப்பினாள்.
உடனே அவருக்கு புரிந்து போயிட்டு “நான் லோகநாதன் எல்லாம் கட்டி வைக்க மாட்டேன் மயிலு. உனக்கு யாரை பிடிக்குதோ அவனையே நான் உனக்கு கட்டி வைக்கிறேன். நீ அப்பா கூட வா ஆத்தா” என்று மகள் கையை பிடித்து இழுத்தார்.
சட்டென அவர் முன் வந்த நின்ற ஆரூரன் “உங்க பொண்ண உங்க வீட்டுக்கு கூட்டிட்டு போறீரா.. அப்ப எங்க பொண்ண நாங்க எங்க வீட்டுல வச்சுக்கிறோம்” என்றதும் கூடியிருந்தவர்கள் எல்லாம் திடுக்கிட்டு பார்க்க..
“ஒரு பஞ்சாயத்தை முடியல.. அடுத்தது அடுத்த பஞ்சாயத்தா? நீ நடத்து மாப்பி” என்று தவசி ஓரமாக அமர்ந்து முணுகிக் கொண்டிருந்தான்.
ஒருசிலருக்கு சிரிப்பு கூட முட்டியது இந்த வயசில் தியாகேசன் தனியாக இருந்தால் எப்படி இருக்கும் என்று நினைத்து…
“என்ன சொல்ற?” என்று அவர் பல்லை கடிக்க..
“ஆமா உம்ம பொண்ணு உமக்கு உரிமை.. அதனால தங்கமயில நீ உம்ம வீட்டுக்கு கூட்டிட்டு போறீரு.. அதேபோல தானா எங்க அக்காவும்..! இவ்ளோ நாள் உம்ம கூட வாழ்ந்ததே பெருசு.. அதனால நானும் எங்க அக்காவ எங்க வீட்டிலேயே வச்சுக்கிறோம். என்னக்கா?” என்று திரும்பி கமலாம்பிகையிடம் கேட்க, தம்பி ஏதோ ஒரு முடிவு எடுத்து செயல்படுத்துகிறான் என்று அவனுக்கு ஆதரவாக ஆமாம் என்று தலையசைத்தார்.
“நீ எக்கேடு கெட்ட போ.. உனக்கு அப்ப புருஷன் வேணா இல்ல.. போடி.. போ.. போய் அப்பா வீட்டிலேயே இருந்துக்கோ..!” என்றதும் அத்தோடு அவருக்கு நிறுத்தாமல் அடுத்த ஆப்பை மெல்ல இறக்கினான் ஆரூரன்.
“அது மட்டும் கிடையாது. என் ஒன்றுபட்ட மாமா ஒருத்தர் ஆர்மி ரிட்டர்ன். ஆர்மில இருந்ததால கல்யாணமே பண்ணிக்கல.. அவருக்கு இரண்டாம் தரமா எங்க அக்காவ கல்யாணம் பண்ணி வைக்கலாம்னு ஐடியால இருக்கேன். எங்க அக்காவை நல்லா பார்த்து பாரு அடிக்க மாட்டாரு.. இம்சை படுத்த மாட்டாரு..” என்றதும் தூக்கி வாரி போட்டு மனைவியை திரும்பி பார்க்க.. அவரோ கணவனை பார்க்காமல் முகத்தை திருப்பிக் கொண்டார்.
தங்கமயில் ஆரூரனின் திட்டத்தை ஓரளவு புரிந்து கொண்டவள் “மாமா..” என்று பல்லை கடிக்க..
“என்னடி மாமா.. நீ தான் உங்க அப்பன் பேச்சு கேட்டு அவரு கூட போற இல்ல.. அது மாதிரி எங்க அக்காவும் அவங்க அப்பா பேச்சை கேட்டு அவர் சொன்னத தான் செய்யும். என்னக்கா?” என்றதும் ஆமாம் என்று தலையை மட்டும் அசைத்தார் கமலாம்பிகை.
பெரியவர்களெல்லாம் சிரிப்பை அடக்கி கொண்டிருக்க.. தவசியோ அப்படி எல்லாம் செய்யவில்லை வாய்விட்டு சிரித்தவன் “மாப்பு.. உனக்கு வச்சுட்டான் ஆப்பு சித்தப்பு” என்றான்.
இவ்வளவு பேசிய பின்னும் தியாகராஜன் சற்று தடுமாறினாலும் “நீ என்ன வேணா செய்.. உன்னிடம் என் மகளை விட்டு வைக்க மாட்டேன்” என்று மீண்டும் மயிலை பிடித்து இழுக்க…
இப்பொழுது மயில் அடுத்த கையை பற்றியவன் “உனக்கும் என் அக்காவுக்குமே ஒன்னும் இல்லன்னு ஆகப்போகுது.. அப்புறம் பொண்ணு எப்படி உன்னோட கஷ்டடியில் வரும். பொண்ணுங்க எப்பவுமே அம்மாவோட கஷ்டடியில் தான். சட்டம் தெரியும் மாமோய்.. உனக்கு? அது மட்டும் இல்லை மயூரனுக்கும் இன்னும் 18 வயசு வரல.. அதனால ரெண்டு பிள்ளைகளும் இனிமே எங்க வீட்டுல தான்” என்றான் ஆரூரன்.
பின் தங்கமயிலை தாய் மாமனாய் இப்பொழுது அவன் அழைத்து வர..
அவனுடைய சாமர்த்தியத்தை கண்டு அனைவருமே வாயைப் பிளந்தனர்.
தியாகேசனுக்கு ஆரூரனிடம் தான் தோற்பதை பிடிக்கவில்லை. எப்படி எப்படி இவன் செய்யலாம் என்றபடி தான் பார்த்திருந்தவர் இப்பொழுது டிராகையே மாற்றினார்.
“அதிரன நீ என்னடா பண்ணுன? அவன கொன்னுட்டியா? அவன் சொத்த ஆட்டைய போடலாம்னு தான் நீங்க வந்து இருக்கீயா? அவனுக்கு கல்யாண பிடிக்கல நாங்க எப்படி நம்புறது? எல்லாம் உன் திட்டம் தானே!” என்றதும் ஒரு நிமிடம் நிதானித்தவன் பின் அவரை நேராக பார்த்து பேச முனைய..
“என் பையன் யாருன்னு உனக்கு தெரியுமா? இந்த சொத்தை வச்சு தான் அவன் பிழைக்க வேண்டியது இல்லை. என்ன தெரியும் உனக்கு?” என்று விஜயராகவன் தன் கணீர் குரலில் கூற.. எல்லாரும் பார்க்க “அவன் டாக்டர்.! டாக்டர் சிவா ஆரூரன். ஹாட் ஸ்பெசலிஸ்ட் ஃப்ரம் லண்டன்” என்றார் விஜயராகவன்.
அப்பாவின் பேச்சில் ஆரூரன் மறுபடியும் அவரை வியந்து பார்க்க..
“ஒருமுறைதான் உன்னை புரிந்துக் கொள்ளாம போனேன் சிவா. ஒவ்வொரு முறையும் இல்லை” என்று மகனை பார்த்து கூறி..
அவன் கண்கள் கலங்க உதடு துடிக்க நின்றிருந்தவனை கண்டவர் உள்ளம் துடிக்க மகனிடம் ஓடி வந்து இறுக்க தழுவிக் கொண்டார்.
“இங்க பாரு தங்கமா.. நீங்க என் மருமகளா இருந்தாலும் சரி இல்லை என் பேத்தியா இருந்தாலும் சரி.. இந்த வீட்லதான் இருக்கிற.. உங்க அப்பனா நம்பி அவன் கூட எல்லாம் என்னால அனுப்பி வைக்க முடியாது. ஏற்கனவே ஒரு குடிகார பையலுக்கு கட்டி வைக்க பார்த்தவன் தானே.. அடுத்து ஒரு கொலைகாரனுக்கு கட்டி வைக்க மாட்டானு என்ன நிச்சயம்?” என்று விஜயராகவன் கேட்க..
“யோவ்.. மாமா.. இதெல்லாம் என் லிஸ்டிலேயே இல்லையே” என்று மாமனாரை பாவமாக பார்த்தார் தியாகேசன்.
“உங்க ரெண்டு பேருக்கும் சில பல மனஸ்தாபங்கள் இருக்கலாம் அதெல்லாம் மனம் விட்டு பேசுங்க.. பேசினா தீராத பிரச்சனைகள் கிடையாது” என்று மகனை ஆதரமாக பார்த்தவர்,
“கமலா வந்தவங்களுக்கு எல்லாம் விருந்துக்கு ஏற்பாடு செய். எல்லாரும் இருந்து சாப்பிட்டு தான் போகணும்” என்றார்.
அதுபோலவே மதியம் விருந்து தடப்புடல் பட்டது. அதில் கலந்துக்காமல் திண்ணையில் ஓரமாக அமர்ந்திருந்த தியாகேசனை பார்த்த ஆரூரன்..
“என்ன மாமா நீ போட்ட செரவடியெல்லாம் புசுபுசுன்னு போச்சு போல.. நீ எப்படி என்னை என் குடும்பத்தில் இருந்து பிரிச்சு தனியாளா ஆக்கானியோ அதுபோல உன்னையும் ஆக்கிட்டேன் பாத்தியா?” என்றவனை திடுக்கிட்டு பார்த்தார் அவர்.
“மாமோய்.. இந்த ஆதுரனை வீழ்த்த ஏதாவது புதுசா யோசிச்சிட்டு வாரும் சரியா? அதுவரை நான் வெயிட்டிங்..!! என்று அவன் கண்ணடித்து சிரித்தான்.
“சரியான வில்லன் டா நீ..!” என்று திகைத்து நெஞ்சில் கை வைத்து விட்டார் தியாகேசன்.
தொடரும்…
super sis
👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌
Intha twist sama super Athuran doctor a