ATM Tamil Romantic Novels

ரௌடி பேபி -3031

30 

எபிலாக்:1 

 

சில வருடங்கள் கழித்து… 

அந்த போலீஸ் காலனியில் காலை வேளையில் பரபரப்புக்கு பஞ்சம் இல்லாத மக்கள் இயங்கிக் கொண்டிருந்த நேரம்…

ஏன்டா புருஷன் பெண்டாட்டி  உங்க ரெண்டு பேருக்கும் வேற வேலையே இல்லையா எப்ப பார்த்தாலும் சின்ன பிள்ளைங்க மாதிரி சண்டை போட்டுக்குறீங்க… இதுல வேற உன் பெண்டாட்டி உன் கிட்ட கோவிச்சிக்கிட்டு காலங்காத்தல என் வீட்டு  வாசல்  முன்னாடி உன் பெண்டாட்டி புள்ளைங்களையும் பொட்டியையும்  தூக்கிட்டு வந்து நிக்கிறா… உங்க ரெண்டு பேருக்கும் பஞ்சாயத்து பண்ணியே என் பாதி ஆயுசு போயிடும் போல… இந்த வாட்டி என்னடா பண்ணி தொலைச்ச  சொல்லி தொலைடா என பூரணி காலையிலே இவ்வளவு கரமாக நிற்க காரணமே அவளின் அண்ணன் மனைவி அதான் தினேஷின் மனைவி கௌசி தான்…

 

கோவிந்தன் இறந்த பிறகு அவரது சொத்தை சரி பாதியாக பிரித்து கொடுக்கும்படி அவர் ஏற்கனவே உயிர் எழுதி இருக்க… அதன் பாடியே அசையா சொத்துக்களும் நகைகளும் பூரணிக்கு கொடுக்க அவள் அதை வாங்க மறுத்து ஆதரவற்றோர் இல்லத்திற்கு கொடுத்து விட கோவிந்தனின் எக்ஸ்போர்ட் பிசினஸை தினேஷ் பார்த்து வருகிறான் அனைத்துமே சட்டபடியாக நடத்தி வருகிறான் … தந்தை இறந்த பிறகு எந்த தவறான வழியையும் தேர்ந்து எடுக்காமல் நேர்மையாகவே தொழிலை நடத்தி வருகிறான்… ஏற்கனவே தந்தையோடு இருந்து தொழிலை கற்று கொண்ட அனுபவத்தை வைத்து  திறம்பட நடத்தி வர… தொழில் சம்மந்தமாக வரும் டென்ஷனை எல்லாம் அவன் மனைவி இடத்தில் காட்டி விட அவளோ தினேஷை சமாளிக்க முடியாது அவனோடு சண்டை போட்டு கொண்டு போகும் ஒரே இடம் அவளது நாத்தனர் பூரணி வீட்டுக்கு தான்… அருகில் இருக்கும் அவள் பிறந்த வீட்டையும் விட்டு பல மையில் தொலைவில் இருக்கும் நாத்தனார் வீட்டுக்கு தான் அவள் நேராக செல்வது காரணம்… அவள் கணவனை அடக்க கூடிய ஒரே ஆள் பூரணி என்பதால் தான்… ஆனால் அவள் அப்படி அங்கு வருவதற்கு வேறு ஒரு காரணமும் இருக்கவே தான் செய்கிறது… கணவனோடு கோவித்து கொண்டு அம்மா வீட்டிற்கு சென்றால் கூட புருஷன் கிட்ட நீ எப்படி சண்டை போடலாம் அவனுக்கு அடங்கி போ… ஒழுங்கா மன்னிப்பு கேட்டு அவன் கூட போய் குடும்பம் நடத்து என சொல்லும் தாய் இங்கே இல்லை… முதுகு ஓடிய வேலை செய்ய தேவை இல்லை மூணு நேரமும் மூக்கு பிடிக்க நாத்தனார் வீட்டு விருந்து இருக்க… பிள்ளைகளை பேணி பார்த்து கொள்ள தான் சாந்தியும் அருணும்  இருக்கின்றனரே …

 

அப்போ  ஜெயந்தி எங்கே என்கிற கேள்விக்கு விடை…

 

கோவிந்தன் இறந்த பிறகு ஜெயந்தியை பூரணி தன்னோடு வந்து விடும்படி அழைக்க… தினேஷோ அதற்கு விடவே இல்லை… என்னைய ஆனாதையா ஆக்கி ஒத்தையில் விட்டு போவத சின்னம்மா  எனக்கு உன்னையும் பூரணியையும் விட்டதா வேற யாரும் இல்லை… சின்ன வாயசுல  உங்களையே தான சின்னம்மா சுத்தி சுத்தி வந்தேன் இப்படி நீயே தவிக்க விட்டு போலாமா  என கண்ணீர்  விட்டு கெஞ்சியவனை வஞ்சிக்க மனம் வரவில்லை ஜெயந்திக்கு வளர்த்த பாசம் இடித்தது… எனவே அவர் தினேஷ் குடும்பத்தோடு ஐக்கியம் ஆகி விட, அதற்கு மேல்  பூரணியும் அவரை வற்புறுத்தவில்லை…

 

தினேஷை பற்றி ஜெயந்தி இடம் எத்தனை முறை புகார் அளித்தாலும்… வெளிய போற ஆம்பளைக்கு ஆயிரம் பிரச்சனை இருக்கும் அவனை அனுசரித்து போ …  அனுசரித்து போ… என ஒரே பல்லவியை பாட கடுப்பாகி விட்டாள்… அதன் பெட்டியும் கையுமாக பூரணி வீட்டில் தஞ்சம் அடைந்து விடுவாள்… இரண்டு மூன்று நாள் வரை பொறுத்து பார்க்கும் பூரணி கௌசியின் அட்டகாசம் தாங்காது  தினேஷ்க்கு அழைத்து அவனுக்கும் இவளுக்கும் அறிவுரை கூறி பழம் விட்டு சேர்த்து அவனுப்பி வைப்பாள்… அவளோ சென்று இருபதாவது நாளில் திரும்பி இவள் வீட்டு வாசலில் வந்து நிற்ப்பாள்… இதை எல்லாம் கண்ட சாந்தியும் அருணும் சிரித்த வண்ணமே கடந்து விட மாட்டி கொண்டு முழிப்பது என்னவோ பூரணி தான்…

 

இன்றும் அப்படி வந்து நின்றவளை பார்த்து அதிருந்து நிற்க அவளோ ஏதோ பிக்னிக் வந்த கணக்காக உல்லாசமக காலை கபளீகரம் செய்து கொண்டு இருந்தாள் இதில் ஏன் பூரணி அந்த தக்காளி செய்யல உன் கையால தக்காளி சட்னி சாப்பிடாம எனக்கு சரியாவே சோறு இறங்கள பாரு சீக்கிரம் வந்து அதை செஞ்சு கொடு அப்போ தான் கூட நாலு இட்லி போகும் என ஏற்கனவே சுட்டு வைத்த பூரியை புடி புடி  என பொளந்து  கட்ட … பல்லை கடித்த வண்ணம் அவள் அழைத்தது தினேஷை தான்…

 

ஃபோனை காதில் வைத்ததில் இருந்து பூரணி கழுவி ஊற்றுவதை வைத்தே அங்கு அவன் மனைவி செய்யும் அட்டகாசத்தை புரிந்து கொண்டவன்… அவளை அழைத்து வர  கிளம்பி விட்டான்…

 

ஏண்டி அவனுக்கு தான் அறிவில்லாமல் சண்டை போட்டான் என்றால் உனக்கு எங்க போகுது புத்தி இப்படி ஆனா ஊனா பெட்டியை தூக்கி வந்துடுறியே உனக்கு வெக்கமா இல்ல.. நான் என்ன காத்து கத்துறேன் எது பற்றியும் கவலை படாம கொட்டிக்கிறத  என பூரணி பூரி பீயித்து வாயில் போடும் வேளை  கௌசியை திட்ட அவளோ வாயில் வைத்து இருந்த பூரியோடு பூரணியை பாவமாக பார்த்தபடி இப்போ நான் சாப்பிடவா வேணாமா என்பது போல் பார்க்க…

 

இவர்கள் கூத்தை வேடிக்கை பார்த்த வண்ணமே தயாராகி வந்தனர் அம்மூவர்… அருண்  தனிப்படை காவல் உயர் அதிகாரி, அவர்கள் மூத்த மகன் வெங்கட் ஏழாம் வகுப்பு ,இளைய மகள் இளமதி நான்காம் வகுப்பு…

 

அம்மா காலையிலே எங்களை ரெடி பண்ணாம  கத்த ஆரம்பிச்சிடியா… சும்மா சும்மா அத்தைய திட்டாத அத்தை பாவம் உன்னையும்  மாமா போல டெரர்  இல்லை சாது… மாமா தான் பேட் அவரை திட்டாம அத்தையை திட்டுற அப்போ நீயும் பேட் கேர்ள் என வளர்ந்த பிள்ளை தாயை பார்த்து கேட்க…

 

வந்துட்டான் முளைச்சி மூணு இலை விடல அதுக்குள்ள நாட்டாமை தனம் பண்டற அளவுக்கு வாயை வளர்த்து வச்சி இருக்கான் என வாய் அவனை திட்டினாலும் கையோ அவன் பள்ளி செல்ல தேவாயானவற்றை  எடுத்து வைத்து கொண்டு இருந்தது… மகளுக்கு தலைவரி அழகு பார்த்து நெட்டி முறித்தவள்… மகனை பார்க்க அங்கு பரட்டை தலை பல்லை இளித்தது…

 

வாய் மட்டும் வானத்தை மிஞ்சுது ஆனா தலையை பாரு என்னடா மண்டை இது என கூறி கொண்டே சீப்பை எடுத்து கொண்டு வெங்கட் பக்கம் போக…

 

மம்மி  நோ கிட்ட வராத  இப்போ இப்படி முடி வச்சிக்கிறது இது தான் டிரெண்ட்ங் உனக்கு புரியாது நீ ஓல்ட் லேடி… டாடி காப்பத்துங்க  என தந்தை பின்னால் சென்று ஒளிய…

 

“அடங்க *** மவனே படிக்கிற வயசுல என்னடா பேஷன் டிரெண்ட்ங் அதுவும் அஞ்சாப்பு படிக்கும் போதேவா … ஒழுங்கா சொல் பேச்சு கேட்டு நடந்துக்க இல்லை முட்டியை பேர்த்து மூலையில் உட்கார வச்சிருவேன் ஜாக்கிரதை…மூஞ்சிய பாரு போலீஸ்காரன் பிள்ளை மாதிரியா இருக்கு பொறுக்கி மாதிரி…  இனி இன்னொரு தடவை இந்த மாதிரி முடியோட அலையுறத பார்த்தேன் அப்படியே மண்டைய கொண்டு போய் தார் சட்டிக்குள்ளே கவுத்துடுவேன் … ஏங்க நாளைக்கு முதல் வேளையா இவனை கூட்டி போய் முடி வெட்டிவிட்டு வரிங்க…என கணவனை பார்க்க அவன் சரி சரி என தலையை ஆட்டிட எது சொன்னாலும் தலைய தலைய ஆட்டி தொலைங்க ஒருத்தன் பேசியே கொல்றான் இவரு பேசாம கொல்றாரு …  என்றவாறு வெங்கட் தலையில் எண்ணெய் வைத்து படிய வாரி விட்டு… ம்ம் இப்ப எப்படி இருக்கு பார்க்கவே  இலட்சணமா இல்லை கண்ணாடியில் அவன் முகத்தை திருப்பி காட்ட…  அவள் கையை வெடுக்கு என்று தட்டி விட்டு விடு விடுவென பையை தூக்கி கொண்டு வெளியே சென்று விட போகும் மகனை அயர்ந்து பார்த்து நின்ற பூரணி அருகில் வந்தவன் அவளை தொட்டு அழுத்த அதில் நான் இருக்கிறேன்  என ஆறுதல் இருக்க பெரு மூச்சு விட்டாள் அதில் பிள்ளை தறுதலையாக போய் விட கூடாதே என்கிற ஆதங்கமே மேலோங்கி இருந்தது…

 

அருண் மகளையும்  மகனையும் அழைத்து கொண்டு அவர்களை பள்ளி விட்டு தானும் அலுவலகத்திற்கு செல்ல தயாராக…

 

அன்னை திட்டி விட்ட கோவத்தில் வெங்கட் வேணும் என்றே உணவு பையை விட்டு செல்ல… அதை கண்டவள்… எடுத்து கொண்டு வாசல் பக்கம் ஓடினாள்…

 

டேய் கோவிந்தா நில்லுடா கோவிந்தா சாப்பாட்டு பையை விட்டுட்டு போற பாரு… என் பூரணி வருவதை கண்டு அருண் வண்டியை நிறுத்த அவர்கள் அருகில் மூச்சி வாங்க ஓடி வந்தவள்… ஏண்டா கோவிந்தா  எப்ப பார்த்தாலும் எதையாவது மறந்து வைக்கிறேதே உனக்கு வேலையா  போச்சு என குறை பட

 

அவள் கொடுத்த பையை வெடுக்கென்று பிடிங்கி கொண்டவன்… உனக்கு எத்தனை தடவ சொல்றது ஐ அம் வெங்கட் கோவிந்தன் கூப்பிடாத கூப்பிடாதன்னு என பொது வெளியில் வைத்து பூரணி அப்படி அழைப்பது அவனுக்கு பிடிக்கவில்லை…  

 

உனக்கு பேர் வச்சதே அப்படி கூப்பிட தான்டா கோவிந்தா… கோவத்தை பாரு மூக்கு மேல வருது அப்படியே தாத்தாவை மாதிரி பார்த்து போ நல்லா படி கோவிந்தா என அவனை வெறுப்பேற்றி அனுப்பி விட்டவளுக்கு அடுத்த பஞ்சாயத்து வீட்டு வாசலில் நிற்க என்ன ஏது விசாரித்தவள்…

 

ஏன்டா தப்பு பண்ணிட்டு பொம்பளை மேலையா கை வைக்கிற என எட்டி அவன் கன்னத்தில் அறைந்ததாள்  பூரணி இதை தெரு முனை வரை திரும்பி பார்த்தபடியே சென்றன அவள் பிள்ளைகள்…

 

அப்பா சுத்தம் மோசம்பா சரியான ரௌடி மாதிரி பீகேவ் பண்டறாங்க… பாரு எப்படி அடிக்கிறாங்க என மகன் அன்னையை பற்றி புகார் வாசிக்க…

 

அவங்க தப்பு பண்ணாங்க அம்மா அடிக்கிறாங்க என அன்னைக்கு மகள் பரிந்து பேச  அவளை பார்த்து மந்தகாசமாக சிரித்தான் அருண்…

 

31

 

எபிலாக்:2 

 

 

ஏய் நீ சும்மா இரு உனக்கு ஒன்னும் தெரியாத பார்த்தல்ல எப்படி சும்மாவே என்னை எப்படி திட்டினாங்கன்னு பொறுக்கி மாதிரி ட்ரீட் பண்ணாங்க… அப்பாவே அவங்களுக்கு பயந்து அவங்களை ஒண்ணுமே சொல்ல முடியல என குறை பட்டு கொண்டான் மகன்… மகன் சாடை மாடையாக தன்னை சொல்வது தெரிந்தாலும் அமைதியாக வந்தவன் மகளை அவள் படிக்கும் மழலை பள்ளியில் விட்டு மகனை மற்றொரு   பள்ளிக்கு அழைத்து சென்றான்…

 

அவனை இறக்கி விட்டவன் அவன் உள்ளே செல்லும் முன்… பிள்ளைங்க எப்படின்னு பெத்தவங்களுக்கு நல்லாவே தெரியும் ஆனா மத்தவங்களுக்கு…?? ஒருத்தரோட வெளி தோற்றம் வச்சு தான்  அவனோட நடத்தையை எடை போடும்…    என்றவன் அருகில் சில மாணவர்கள் ஸ்டைல் என நினைத்து கொண்டு பரட்டை தலையும் சீராக அணியாத சீருடையுடன்  கெத்து என்ற பெயரில் திமிராக வலம் வர அம்மாணவர்களை கண்டு பெண்களும்  பொது மக்களும்  முகம் சுழித்த படி ஒதுங்கி   செல்வதை சுற்றி காட்டினான்…  கூடவே ஒழுங்காக சீருடை அணிந்து செல்லும் மாணவர்களையும் மற்றவர்கள் அவர்களை பார்க்கும் பார்வையையும் சுட்டி காட்டினான்…

 

பெத்தவங்களுக்கு  அவங்கள் பிள்ளையை மற்றவங்க முன்னாடி நல்ல பெயரோட வாழனும்  எதிர்பார்ப்பாங்க…  அதை விட்டு ஐய இவங்க பிள்ளையா அது தறுதலை மாதிரி சுத்திட்டு இருக்கு அது எப்படி உருப்பட போகுதுன்னு சொல்றதை இல்லை… உன் பெயரை கேட்டதும்  இவங்க பிள்ளையா ரொம்ப நல்ல பையானச்சே  ஒழுக்கமான பிள்ளையாச்சே இப்படி சொல்றதுல தான் பெத்தவங்களோட வாழ் நாள் சந்தோஷமே இருக்கு… அதுக்காக அவங்க கடுமையா நடந்து கிட்டா அது அவங்க தப்பு இல்லை… அப்படியாவது தன் பிள்ளை திருந்திட மாட்டானா என்கிற ஏக்கத்தின் வெளிபாடு என்றதும் தன் தவறு உணர்ந்து தலையை தொங்க போட்டு நிற்க…

 

அவன் தலையை ஆதரவாக தடவி விட்டவன்… இந்த வயசுல அடுத்தவங்களை பார்த்து வர  ஈர்ப்பு எல்லாம்  இயல்பு தான்… நமக்கு அது நல்லதா தான் தெரியும் ஆனால் நமக்கு சரி என்று படுவது அடுத்தவளுக்கு ஏன் தப்புன்னு படுது என்று யோசிச்சாலே போதும் எது சரி தப்புன்னு புரிஞ்சிடும் என மகனுக்கு தன்மையாக எடுத்து கூற…

 

புரிந்து கொண்டவன் நாளைக்கே முடி வெட்டிக்கிறேன் அப்பா அப்புறம் ஈவெனிங் வீட்டுக்கு போனதும் அம்மா கிட்ட சாரி கேட்கிறேன் லவ் யூ அப்பா தாங்க்ஸ் என்று விட்டு பழலயில் மணி அடித்த சத்ததை கேட்டு ஓடி சென்ற மகனை பெருமையுடன் பார்த்து விட்டு தன் அலுவலகத்திற்கு சென்றான் அருண்…

வெளியே ஒரு பஞ்சாயத்தை முடித்து விட்டு உள்ளே வந்த பூரணிக்கு போதும் போதும் என்றாகி விட்டது… இப்போதெல்லாம் விடிந்தாலே அள்ளு விட்டு போகிறது அவளுக்கு… கதவை திறந்தாலே நிதம் ஒரு பஞ்சாயத்து அவளுக்கு காத்திருக்கிறது… ஏரியாவில் எந்த  பிரச்சனைய என்றாலும் அவளிடம் தான் நிற்கின்றனர்… கரண்ட் இல்லையா பூரணி கிட்ட சொல்லுங்க தண்ணி வரலையா பூரணி கிட்ட சொல்லுங்க அட இவ்வளவு ஏன் காதல் விவகாரம் என்றாலும் பூரணி தான் அங்கே இப்படி எதற்கு எடுத்தாலும் பூரணி பூரணி என அவர்கள் மொய்க்க காரணம்   ஏன் என்றால் அந்த பகுதியில் வார்ட் மெம்பராக அவள் பொறுப்பு ஏற்ற நாள் முதல் கடமையும் கருத்துமாக அவள் செயல் பட்டு வருவது தான் என்றால் மிகை அல்ல…

 

அப்பாடா என அயர்ந்து உட்கார்ந்தவளை விடாது துரத்தி வந்தது அடுத்த பஞ்சாயத்து வேற என்ன தினேஷ் கௌசி சண்டை தான்…

 

இருவரையும் ஒன்றாக உட்கார வைத்து…

 

இங்க பாரு வெளில போற  யாருக்குது தான் டென்ஷன் இல்லாம இருக்கு உனக்கு மட்டும் தான் இருக்குற மாதிரி நடந்துக்குற… வெளில ஆயிரம் டென்ஷன் இருந்தாலும் அதை வெளியேவே விட்டுட்டு தன் வீட்டுக்குள்ள வரணும்… நீ ஆம்பளை  வெளிய ஆயிரம் பார்த்துட்டு வருவ ஆனால் அவள் குழந்தை குட்டி வீடுன்னு அவளோட உலகமோ  சின்னது… சின்ன சின்ன விஷயத்தையும் அவள் உன்னோட மட்டும் தான்  பகிர்ந்து கொள்ள  தேடுவாள்… வெளில போனவன் எப்போ வருவான்  ஆசையா ஆவலா காத்துட்டு இருக்கிறபோ அவள் கிட்ட காரணமே இல்லாம எரிஞ்சி விழுந்தால் அவள் என்ன செய்வாள்…வெளில இருக்குற டென்ஷன் எல்லாம் அவள் மேல கொட்ட அவள் ஒன்னும் குப்பை தொட்டி இல்லை உயிரும் உணர்வும் உள்ள பெண் புரிஞ்சகோ…  

 

இவ்வளவு மச்சானை  எடுத்துக்கோ அவருக்கு இல்லாத டென்ஷன் எல்லாம் காலையில் திரும்ப வர வரைக்கும் வித விதமா ரக ரகமா வரும் இருந்தாலும் வீட்டுக்குள்ள அதை அவர் இதுநாள் வரி காமிச்சது இல்லை… ஆனால் அதுக்காக நாங்க சண்டை போட்டாதே இல்லை சொல்ல மாட்டேன் நாங்களும் சண்டை போடுவோம் திட்டிக்குவோம் ஆனால் அது எங்களுக்குள்ளயே முடிச்சிப்போம் மூணாவது மனுஷன் வந்து பஞ்சாயத்து பன்ற அளவு வச்சிக்க மாட்டோம்… என்றவள் தினேஷை பார்க்க அவன் புரிஞ்சிது என தலை குனிய…

 

இங்க பாரு அவன் தொழில் செய்யுறவான் ஆயிரம் பிரச்சனை அவனுக்கு இருக்கும் அதை எல்லாம் உன் கிட்ட தான் காட்ட முடியும் ஏன்னா அவனுக்கு உன்கிட்ட மட்டும் தான் உரிமை இருக்கு… அவன் கஷ்ட பட்டு சம்பாதிச்சு கொண்டு வந்து உனக்கு தானா கொட்டுறான்… அவன் எவ்வளோ கஷ்டபட்டாலும் உன்னை நல்லா தான பார்த்துக்கிறான்… அப்போ அவன் நீ தான நல்லா பார்த்துக்கணும்… உன்கிட்ட கோவமா கத்தினா அப்போ அவனை கத்த விட்டு அமைதியா இருந்துட்டு அவன் அமைதியா இருக்கும் போது ஏன் அப்போ கேளு ஏன் அப்படி பண்ணிங்க அவன் காரணம் சொன்னா அன்பா ஆதரிச்சு நாலு வார்த்தை பேசு பேசி புரியவை அதை விட்டுட்டு அவன் கூட அடிக்கடி சண்டை போட்டு பிள்ளைங்களை தூக்கிட்டு இங்க வந்துடாத… இவ்வளவு வளர்ந்து இருக்க இல்லை நீங்க ரெண்டு அடிக்கடி சண்டை போடறத பிள்ளைங்கள் பார்த்தா  மனசு விட்டு போயிடும்… இனிமேலாவது சிறுபிள்ளையா சண்டை போடாம இல்லாம பொறுப்பா நடந்துக்கோங்க என அறிவுரை செய்து அனுப்பி வைத்தவள் அடுத்து ஏரியா மீட்டிங் என அழைப்பு வர அதற்கு புறப்பட்டு சென்றவள் …

 

அங்கு ஏரியா பிரச்சனைகள் அலசி ஆராய்ந்து தீர்த்து வைக்க தீர்மானம் நிறைவேற்ற பட்டது… அதில் பூரணியை நன்கு தெரிந்த ஒருவர்…

 

எப்படிங்க நீங்க இப்படி கலக்குரிங்க  வீட்டையும் பரத்துக்குரிங்க பொறுப்பையும் சரியா செயுரிங்க எப்படி உங்களால் எல்லாத்தையும் பேலன்ஸ் பண்ண முடியுது என்ற கேள்விக்கு…

என் புருஷன் தான் காரணம் என அருணின் நினைவில் மிடுக்காக சொன்னால் பூரணி…

 

கலைந்த கோலாமாக

களையிழந்து நின்றாலும்

 அவளை அழகி என்றே

சொல்லும் ஒருவன் …

காமம் கடந்தாலும்

காதலோடு அணைத்து

 கொள்ளும் ஒருவன் …

ஆண் வேலை பெண் வேலை

என பேதம் பார்க்காமல்

அனைத்தையும் அவளோடு பகிர்ந்து

கொள்ளும் ஒருவன்…

பெண்ணியம் பேசினால்

பிழைக்க மாட்டாய்

என மட்டம் தட்டமல்

அவளால்  பெருமை

 கொள்ளும் ஒருவன்…

வாசல் தாண்டினால்

வாழ்க்கை இல்லை  

ஆதிக்கம் செலுத்தாமல்

அவள் விரிந்த சிறகுடன்

 வளம் வர  

வானத்தையே வளைந்து

கொடுப்பவனாக

அவனகினால்

அவளே ஆக சிறந்த இந்த பிரபஞ்சத்தை  

ஆளும் ராணி ஆகிறாள்…

 

அனைத்து வேலைகலையும் முடித்து விட்டு பிள்ளைகளை சாந்தியை என அனைவரையும் உறங்க வைத்து விட்டு கணவன் மனைவி இருவரும் காதல் பொழுதை கழிக்க சமையல் அறைக்குள் தஞ்சம் புகுந்தனர்… இரண்டு பிள்ளைகளுக்கு மேல் ஆகி விட்டால் ரொமான்ஸ் பண்ண சிறந்த இடம் சமையல் அறை தான் நம்புங்க பாஸ் … வழக்கம் போல் அருண் பூரணிக்கு ஆசையாக சமைத்து கொடுக்க அவனை பின்னால் இருந்து கட்டிகொண்டு காதல் சிலமிஷம் செய்தபடி அருணை சீண்டி கொண்டு இருந்தாள் அவனின் காதல் மனைவி…

 

போலீஸ்கார் இப்போ எல்லாம் நீ என்னை கண்டுகிறதே இல்லை என கூறி அவன் காது நுனியை கடித்து வைக்க அவன் பிடறி சிலிர்த்து அடங்கினாலும் அவளை கண்டு கொள்ளாமல் சமைத்து பூரணியை நன்கு வெறுப்பு ஏற்றினான் அவள் காதல் கணவன் அவனுக்கு தெரியுமே அவளை சீண்டி விட்டாள் அதிரடியாக அவள் செய்யும் காதல் ஆக சிறந்த போதையக கூடும் அதில்  அவனுக்கு அலாதி பிரியம் ஆகவே அவளை தூண்டி விட்டு  அமைதியாக இருக்க… அவன் திட்டம் கை கூடியது…

 

யோவ் இங்க நான் மூடா இருக்கேன் நீ இப்போதான் முமுரமாக சமைக்கிறயா உன்னை என அருணை அதிரடியாக இழுத்து அதிரடியாக அவன் இதழை கொய்தல் ஏற்கனவே அவன் இதயத்தை கொய்தவள்… அவனும் அவனின் ரௌடி பேபி அதிரடி முத்தத்தில் ஆழ்ந்து தான் போய் விட்டான்…  இவர்கள் இப்போது போல் எப்போதும் அதிரடியான காதலில் கரை புரண்டு ஓட வாழ்த்தி விடை பெறுவோம்…

 

நன்றி… !!!

வணக்கம்… !!!

வாழ்க வையகம்…

வாழ்க வளமுடன்…




Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Scroll to Top