சண்டியரே 16
வழக்கம்போல கைவினை பொருட்களை கொடராச்சேரியில் உள்ள ஒரு பல்பெருள் விற்பனை அங்காடியில் கொடுத்துவிட்டு, பொன்வயலை நோக்கி வந்து கொண்டிருந்தாள் தங்கமயில்.
இப்போது புடவையில் கழுத்தில் மின்னும் தாலிச்செயினோடு.. மற்றது மாற்றமில்லை..!! மாறவுமில்லை..!!
அவளது.. அதே டிவிஎஸ்50..
அதே கைப்பை..
அதே பேச்சு..
அதே துடுக்குத்தனம்..
அவளின் அதே அந்த பயம்..!!
ஆம் சாலையை கடக்கும் போது வருமே இனம்புரியாத ஒரு பயம்..! அவளது பயம்..!!
இன்றும் சாலையில் வரும் போது ஒரு கட்டத்திற்கு மேல் ரோட்டை க்ராஸ் செய்ய பயமாக இருந்தது அவளுக்கு.
சாலையின் ஒரு புறம் வண்டியை நிறுத்திவிட்டு இரு புறங்களும் பார்த்தாள் ஏதாவது வண்டி வருகிறதா என்று..! வண்டி எதுவும் கிராஸ் செய்ய வரவில்லை. ஆனால் சாலையில் வண்டிகள் போவதும் வருவதுமாகவே இருக்க.. உதட்டை கடித்துக் கொண்டு சுற்றும் முற்றும் பார்த்தாள்.. யாராவது உதவுவார்களா என்று..!
ம்ஹூம்… நேரம் தான் கடந்துக் கொண்டே இருந்தது. ஆனால் யாரும் வந்தப் பாடில்லை.
“ச்சே.. இவ்வளோ பேரு போறானுங்க வரானுங்க.. ஆனா ஒருத்தன் கூட க்ராஸ் செய்ய மாட்டுறானே.. என் நேரம்..! இந்த கொளுத்துற வெயில இப்படி நிக்குறேன்..” என்று வெயிலை அண்ணார்ந்து பார்த்தவள் வழியும் வியர்வையை புடவை முந்தாணையால் துடைத்துக் கொண்டாள்.
“நீ எவ்ளோ நேரம் நின்னாலும் ஒருத்தரும் வரபோறது இல்ல.. நான் க்ராஸ் பண்ண போறேன் வரியா மயிலு.. மாமன் கூட..” என்ற குரலில் திடுக்கிட்டு திரும்பிப் பார்க்க.. அங்கே தன் வெண்ணிற ராயல் என்ஃபீல்டில் அமர்த்தலாய் அமர்ந்திருந்தான் ஆரூரன்.
கிட்டத்தட்ட 15 நாட்களுக்கு பிறகு கணவனை காண்கிறாள் தங்கமயில்..!
முன்னிருந்த அந்த முறுக்கு மீசை இப்போது இல்லை.. அழகாக ட்ரிம் செய்திருந்தான்.
எப்பொழுது இருக்கும் இரண்டு வார தாடி இல்லை.. வளவளப்பான தாடையை அவளை வரவேற்றது. கட்டம் போட்ட சட்டையும் இல்லை.. அதில் முன்னால் இரண்டு பட்டன் திறந்திருக்கவுமில்லை.
பார்மல் சட்டை அவனின் உடம்பை லவாகமாக கவ்வியிருந்தது. அதில் சற்று பொறாமை கூட முகிழ்த்தது தங்க மயிலுக்கு..!
வேட்டிக்கு பதில் பேண்ட் இருக்க, நார்மலான ஸ்லிப்பர் இல்லாமல் ஷூ அணிந்திருந்தான். உச்சி முதல் உள்ளங்கால் வரை அக்கு அக்காக ஆராய்ந்தாள் கணவனை பெண்மயில்..
“தலமுடி மட்டும் தான் மாறல மத்தது எல்லாத்தையும் ஒட்டுமொத்தமா மாத்தி வெச்சி இருக்கு இந்த மாமா.. என் மாமா மாதிரியே தெரியல யாரோ மாதிரி இருக்கு பார்க்க..!” என்று மனதுக்குள் நொடித்துக் கொண்டாள்.
“மாமன பார்த்து முடிச்சுட்டேன்னா கிளம்பலாமா மயிலு” என்று ஒற்றைப் புருவத்தை அழகாக உயர்த்தி கேட்டான் ஆரூரன்.
அந்த ஒற்றைப் பருவ உயர்வு கூட அவனை இன்னும் மேன்லியாய் காட்ட, அவன் பால் ஈர்க்கப்படும் மனதை கட்டுப்படுத்தி.. இப்பொழுது வெடுக்கென்று முகத்தை திருப்பிக் கொண்டாள் தங்கமயில்.
“இப்படி வெடுக்கு வெடிக்குனு முகத்தை திறப்பாதனு நான் உன்கிட்ட சொல்லியிருக்கேன் மயிலு.. நீ கேக்க மாட்டேங்குற..! இருக்குடி ஒரு நாள் உனக்கு” என்று வண்டியின் ஹேண்டில்பாரை முறுக்கிக் கொண்டே அவளிடம் பேச அவளோ திரும்பினாள் இல்லை.
“இங்க பாரு டி.. இன்னும் எவ்வளவு நேரம் நின்னாலும் இப்படியே தான் நின்னுட்டு இருக்கணும். ஒரு பயலும் இந்த பக்கம் கிராஸ் பண்ண போறது இல்ல.. இப்பவே உச்சி வெயிலு மண்டையை பொளக்குது. இன்னும் கொஞ்ச நேரம் நீ வெயில் நின்னா மயக்கம் போட்டு விழ போற.. யாரும் உன்னை கண்டுக்கவே மாட்டாங்க.. பாத்துக்கோ..! மாமன் செல்லும்போதே கூட வந்துடு” என்றதும் அவனின் பேச்சில் கொஞ்சம் திடுக்கிட்டு தான் போனது மனது அவளுக்கு.
ஆனாலும் வெளியே காட்டிக் கொள்ளாமல் அமர்த்தலாகவே அந்த டிவிஎஸ் பிஃப்ட்டியில் அமர்ந்திருந்தவளை பார்த்தவனுக்கு கோபத்துக்கு பதில் அவளது இந்த திமிர் பிடிக்கவே செய்தது.
“ஆரூரன் பொண்டாட்டிக்கு உள்ள அம்சமான திமிரு டி உனக்கு..!” என்று மனதில் கொஞ்சிக் கொண்டவனும் வெளியில் விரைப்பாகவே பார்த்தான் அவளை.
“அப்ப சரி.. நீ இப்படியே நடுரோட்டில் நில்லு.. நான் கிளம்புறேன்” என்று அவனும் ரோட்டை கிராஸ் செய்வது போல செய்ய.. அவள் பின்னால் வந்த பாடு இல்லை.
“இவளை எல்லாம்..” இன்று பல்லை கடித்தவன் “வெயில நின்னு காஞ்சி கருவாடா போடி..” என்று அவளை முறைக்க..
அவளோ அப்பொழுதுதான் கவனமாக இருபுறமும் வண்டி வருகிறதா என்று பார்த்துக் கொண்டே இருக்க..
“நீ எல்லாம் திருந்த மாட்டடி..! திருந்தவே மாட்ட..!” என்று வேகமாக முன்னால் சென்றான். ஆனால் மனதே இல்லை அவளை அப்படி விட்டு செல்ல.. திரும்பவும் யு டெர்ன் எடுத்து அவன் வருவதற்குள்..
‘அதான் ஒரு வண்டியும் வரவில்லையே நாமே கிராஸ் பண்ணா என்ன?’ என்று வேகமாக வண்டியை திருப்ப.. அப்பொழுது சட்டென்று வேகமாக வந்த வண்டியோடு மோதி கீழே விழுந்தாள் மயில்.
“ஏ தங்கம்..” என்று பதறியபடி வந்தவன் அவளை தூக்க, அவளோ பயத்தில் விடவெடுத்து போய் நின்று இருக்க.. எதிரே வந்தவனை பார்த்து முறைக்க..
“சத்தியமா நான் ஒன்னும் பண்ணல சார்.. இந்த அக்கா தான் இண்டிகர் போடாம டக்குனு திரும்பிட்டாங்க.. நானும் எதிர்பார்க்கவே இல்லை சார்” என்று அவன் அத்தனை மன்னிப்பு கேட்டான்.
அங்கே சிதறி கடை இருந்த அவள் பொருட்களையும் அவனை சேகரித்துக் கொடுக்க.. அவளால் நிற்க கூட முடியவில்லை. “கால காட்டு..” என்று அவள் காலை ஆராய்ந்தான். அவளது கால் ஏகத்திற்கு வீங்கி இருந்தது.
“ஷிட்..! ஃப்ராக்ஸரானு தெரியலையே?” என்று முணுமுணுத்தவனுக்கு அவ்வளவு காண்டு மயில் மேல்.
மயில் வண்டியை மோதியவனை பார்த்து “ஒரு ஹெல்ப் மட்டும் பண்ணுங்க இந்த வண்டியை கொஞ்ச நேரம் இங்கேயோ பார்த்துக்குங்க.. நான் மெக்கானிக் அனுப்புறேன். அவர் வந்து எடுத்துட்டு போவாரு” என்று கேட்டான்.
“அதுக்கு என்ன சார் பார்த்துக்கிறேன்” என்று பவ்யமாக கூறினான் அவன்.
“யோவ்.. என் வண்டி தூக்கிட்டு ஓடலாம்னு எல்லாம் பார்க்காத.. சுத்துப்பட்டு ஃபுல்லா எங்க ஆளுங்க தான்” என்று அவனை மிரட்டினாள் மயில்.
‘உனக்கு நிக்கவே முடியல இதுல உனக்கு மிரட்டல் வேண்டி இருக்கு’ என்று ஆரூரன் கடுகடுக்க..
“அய்யய்யோ அப்படிலாம் இல்ல அக்கா.. நான் அப்படிப்பட்ட ஆள் இல்லக்கா” என்று அவன் வார்த்தைக்கு ஒரு அக்கா போட்டு கூப்பிட..
“அக்கா சொல்லாதையா.. வயசான மாதிரி பீல் ஆகுது இல்ல.. கல்யாணம் ஆயிட்டா உடனே அக்காவா?* என்று சிடுசிடுத்தாள்.
ஆரூரன் சிரிப்பை மறைத்துக் கொண்டு மெக்கானிக்கு ஃபோன் செய்தான்.
அங்கிருந்து மெக்கானிக் அழைத்து இந்த இடத்தில் வண்டி இருக்கிறது என்று கூறி சீக்கிரமா வருமாறு கூறினான்.
“ஏறி உட்காரு டி” என்று தன் வண்டியில் ஏறி அமர வைத்தான்.
“என் வண்டிய அம்போன்னு விட்டுட்டு நீங்க பாட்டு போலாம்னு சொல்றீங்க..” என்று பதறினாள் தங்கமயில்.
“பெரிய பொக்கிஷம் இந்த வண்டி.. பேரிச்சம்பழத்துக்கு கூட எவனும் உன் வண்டிய எடுக்க மாட்டான் டி.. ஓட்ட tvs 50 வச்சிக்கிட்டு பொன்வயலுக்கே ஆட்டம் காட்டுற நீ” என்றபடி அவன் வண்டியை முறுக்கிக் கொண்டு வேகமாக செல்ல..
தங்கமயிலுக்கு அவனை தீண்டாமல் எப்படி வண்டியை பிடிக்க வேண்டும் என்று தெரியவில்லை. அவனை விட்டு சற்று தள்ளி தான் அமர்ந்து இருந்தாள்.
சட்டென்று அவன் வண்டியை நிறுத்த அவன் முதுகில் அவள் முட்டிக் கொள்ள.. வலது கையால் அவளது கையை எடுத்து தன் இடுப்போடு போட்டுக் கொண்டவன், “ஒழுங்கா இப்படியே வர.. தள்ளி உட்கார்ந்த, போகும்போது ஆத்துல புடிச்சு தள்ளிவிட்டுவேன்” என்று மிரட்டியே கூட்டி சென்றான்.
வரும் வழி எல்லாம் திட்டிக்கொண்டே தான் வந்தான். ஆனால் அவளோ “எங்கோ இந்த மாமன் கூட்டி போகிறானே? இவன் முன்னை விட இப்பொழுது ஏன் டிப்டாப்பாக இருக்கிறான்? இந்த பொன்வயல் கிராமத்து சர்க்கரை ஆலைக்கும் அரிசி மில்லுக்கு போறதுக்கு உனக்கு ஏன் எத்தனை அல்ட்டாப்பு மாமோய்?” என்று மனம் கணவனை பொறுமிக் கொண்டே தான் வந்தது.
முன்னை விட அவனது கவர்ச்சி சற்று கூடியிருக்க.. இவளோ வெயில் அலைந்து கருத்து போயிருந்தாள். தன்னைவிட அழகனாய் கணவன் காட்சியளிக்கிறானே என்று பொங்கிய பொறாமை தான்.
எப்பொழுது வண்டி வந்து நின்றது என்று அவளுக்கு தெரியவில்லை. அவளை முறைத்தவாறே இறங்கியவன், அவளை இறங்கியதும் கால் ஊன்றி முடுயாமல் தடுமாற சற்றென்று வண்டியை ஒரு கையிலும் மறு கையில் அவளை பிடித்தவன் “அதான் முடியலைல.. என்னமோ புதுசா தொடுற மாதிரி தள்ளிப் போற?” என்று இடை செருகலாக பேசிய வார்த்தைகள் எல்லாம் அத்தனை கூச்சத்தை தந்தது பெண்ணவளுக்கு.
“நான் என்ன கால் உடைஞ்சு போயா வந்திருக்கேன். லைட்டா சுளுக்கு வீட்டுக்கு போய் சுடு தண்ணியில உருவி விட்டா சரியா போயிடும்” என்றாள்.
அப்பொழுதுதான் அந்த மருத்துவமனையை பார்த்தாள் “இத்துனோடு சுளுக்குக்கு இவ்வளவு பெரிய ஹாஸ்பிடலுக்கு வரணுமா? நான் வீட்டுக்கு போறேன்” என்றவளை முறைத்து கைத்தாங்கலாக உள்ளே அவன் அழைத்து வர…
எதிர்பட்ட செவிலியர்களில் இருந்து அங்கு வேலை பார்க்கும் ஊழியர்கள் ஏன் மருத்துவர்கள் கூட அவனிடம் மரியாதையாக வணக்கம் வைத்து செல்வதை ஓரக்கண்ணால் கவனித்துக் கொண்டு வந்தாள்.
‘இவருக்கே ஏன் எல்லாரும் மரியாதை தராங்க?’ என்று யோசித்தவளுக்கு அவன் மருத்துவர் என்பதை மறந்து விட்டு இருந்தது.
“சிவ ஆரூரன்.. கார்டியாலிஜிஸ்ட்” என்று தங்க நியான் எழுத்துக்களில் பெயர் பதாகையில் பளப்பளத்த அவன் பெயரை பார்த்த பிறகு தான் “ஆமா இல்ல.. இவர் தான் மெத்த படிச்ச பெரிய டாக்டர் ஆச்சே.. இங்க வேலை செய்கிறாரோ? ஆனா மத்தியானத்துக்கு மேல ஏன் வராரு? டாக்டர் தான்.. ஆனா கடமை உணர்ச்சி வேணா காலையிலேயே வராம? காலையில் என்ன பண்ணுவாரு?” என்று அவள் மூளையில் நண்டென குடைந்து கொண்டிருந்தான் ஆரூரன்.
“இப்படி வந்து உட்காரு” என்று அவளை இருக்கையில் அமர வைத்தவன், அவனுக்கென்று இருக்கும் செவிலியரை வரவழைக்க “எஸ் டாக்டர்” வந்த நின்றவளிடம்
“ஆர்த்தோ அருளரசன் இருக்காருன்னு பாருங்க.. என் வைஃப் கீழ விழுந்து கால் அடிபட்டு இருக்கு. அவர்கிட்ட ஒரு ஒப்பினியன் கேட்கணும்” என்றதும் இதோ டாக்டர் என்று வேகமாக சென்றவள், அதைவிட வேகமாக வந்து “இருக்காங்க டாக்டர் ஓபி முடிஞ்சதாம். உங்களை வர சொன்னாங்க” என்றாள்.
“நம்ம ஓபி கொஞ்சம் லேட்டா ஆரம்பிக்கலாம். வெயிட் பண்ண சொல்லுங்க” என்று செவிலியரிடம் கூறியவன் மனைவியை அழைத்துக்கொண்டு சென்றான்.
எலும்பு முறிவு மருத்துவர் அவளை பார்த்துவிட்டு “ஜஸ்ட் ஸ்ப்ரைன் தான் ஆரூரன். பெருசா எல்லாம் ஒன்னும் இல்ல.. ஒரு ஒன் வீக் ரெஸ்ட் எடுத்த சரியாயிடும்.. நான் கொஞ்சம் மெடிசின்ஸ் ஆயின்மெண்ட் எழுதி தரேன். அது தடவி வெந்நீரில் ஒத்தடம் கொடுத்தா கூட போதும்”என்று அவர் எழுதி கொடுக்க..
“தேங்க்ஸ் டாக்டர்..” என்றபடி மனைவி அழைத்து வர,
“நான் சொன்ன மாதிரி தான் அந்த டாக்டரும் சொன்னார்.. வெறும் சுளுக்குக்கு இதெல்லாம் தேவையா? நான் உங்களை கேட்டனா? எல்லாம் உங்களால தான் நீங்க பாட்டு போயிருந்தா நான் பாட்டுக்கு வெயிட் பண்ணி பொறுமையா வந்து இருப்பேன்.. என்னை விழ வைத்தது நீங்கதான்” என்று பொரிந்து கொண்டே வந்தாள். ஆனால் சத்தமாக இல்லை அவனுக்கு மட்டும் கேட்கும் குரலில்..
படிப்பில்லை என்றால் அறிவில்லை என்று பொருள் இல்லை..!
இங்கே கணவனுக்கு அதிக மரியாதை அதுவும் அவன் படிப்பு அவன் வகிக்கும் பதவி அனைத்தையும் புரிந்து கொண்டு சத்தமிடாமல் மெல்லிய குரலில் திட்டிக் கொண்டுதான் வந்தாள். அதை புரிந்து கொண்ட ஆரூரனும் “பரவாயில்லை.. தங்கம்.. வளர்ந்துட்ட.!” என்று நக்கல் அடிக்க போயா என்று முகத்தை திருப்பிக் கொண்டாள்.
“நான் வரலைன்னா இன்னைக்கு முழுக்க அங்கே தான் நின்னுகிட்டு இருப்ப டி” என்று அவளிடம் பேசிக் கொண்டிருக்கும்போது “ஹாய் ஆரூரன்..” என்று கொஞ்சும் கிளியின் குரல் கேட்க இருவரும் திரும்பி பார்க்க..
அவர்கள் எதிரில் கைனகாலஜிஸ்ட் யாமினி அவனிடம் பேசினாள். அதுவும் தங்கமயில் அறவே வெறுக்கும் ஆங்கிலத்தில்..!!
அவளது கர்ப்பிணி பேஷன்ட் ஒருத்தரின் வயிற்றில் வரும் குழந்தைக்கு பிறப்பிலேயே இதய நோய் இருப்பது கண்டறியப்பட, அது பற்றி தான் விவாதித்துக் கொண்டிருந்தாள். இவனும் மனைவி கால் வலியில் நிற்பதை மறந்து விட்டான். மருத்துவத்தில் புகுந்து விட்டான்.
இருவரும் பொறுமையாக பேசுவதை பார்த்து கையை விடுவித்து கொண்டவள், மெல்ல நடந்து சற்று தூரத்தில் இருக்கும் இருக்கையில் அமர்ந்து கொண்டாள்.
தூரித்தில் அமர்ந்து இருந்தாலும் கண்களும் கருத்தும் இவர்கள் மேல தான். அந்த டாக்டரை அணு அணுவாக ஆராய்ந்தாள்.
புடவையை கூட இவ்வளவு நளினமாக கட்ட முடியுமா? அதுவும் அழகாகவும் தெரிந்தாலும் ஒரு புறம் கவர்ச்சியாகவும் தெரிந்தது..! அதே சமயம் தன்னையும் பார்த்துக் கொண்டாள். அவள் கட்டியிருப்பதும் புடவை தான். அந்த டாக்டர் கட்டி இருப்பதும் புடவை தான். ஆனால் இரண்டுக்கும் உள்ள வேறுபாடு மலைக்கும் மடுவுக்கும் உள்ளது போல் அவளுக்கு தோன்றியது.
“எவ்ளோ அழகாக இருக்காங்க இல்ல.. இந்த மாதிரி எத்தனையோ பேர மாமா பார்த்திருப்பாரே.. அதெல்லாம் விட்டுபுட்டு ஏன் என்னைய வந்து கட்டிகிட்டார்? இப்ப பாரு நமக்கு நாமே நம்மள பத்தி தாழ்வாய் நினைக்கிற மாதிரி இருக்கு பாரு..” என்று யோசாத்தவள்,
“எப்படி இந்த மாமா இளித்து இளித்து பேசுறாரு.. அந்த டாக்டர் அம்மாவும் அவருக்கு குறையாமல் எல்லா பல்லையும் காட்டுது” என்று கடுகடுப்போடு அமர்ந்திருந்தாள்.
அப்பொழுதுதான் மனைவி அருகில் இல்லாததை கவனித்தவன் “ சாரி டாக்டர் யாமினி.. டைம் ஆயிடுச்சு ஓபி வேற ஸ்டார்ட் பண்ணனும். ஃப்ரீ டைம்ல நாம டிஸ்கஸ் பண்ணுவோம்” என்று அவளும் சென்று விட மனைவியை பார்த்தவன் “உள்ள போய் உட்காரலாம் இல்ல”என்றதும்,
“ஒன்னும் வேண்டாம்.. அதான் வைத்தியம் பார்த்தாச்சு இல்ல நான் அப்பா வர சொல்லி வீட்டுக்கு போய்கிறேன்” என்றாள்.
அவனுக்கு மீண்டும் எரிச்சல் வர “கடுப்பேத்தாம உள்ள வாடி இல்லன்னா இங்கேயே கடிச்சு வைச்சிட போறேன்” என்று சீற, அமைதியாக இருந்தவளின் கரம் பற்றி தன் கேபினுக்குள் அழைத்து சென்றான் ஆரூரன்.
“இப்ப என்ன உனக்கு கடுப்பு??” என்று சரியாக அவளை அறிந்து கொண்டவன் போல கேட்க..
“எனக்கு என்ன கடுப்பு. நான் நல்லா தான் என்று இருக்கிறேன்” என்று சிடுசிடுத்தாள்.
“அப்ப கடுப்பு இல்லனா பொறாமையோ?” என்று அவன் வேண்டுமென்று கேட்க..
*உங்க மேல என்ன பொறாமை நீங்க யார் கூட வேணாலும் பேசுங்க.
யார் கூட வேணாலும் சிரிங்க.. ஏன் யார் கூட வேணாலும் குடும்பம் நடத்துங்க..” என்று சொல்ல முடிக்கும் முன், சட்டென்று அவளது தொண்டையைப் பற்றியவன் “என்ன சீண்டாதனு உன்ட்ட அன்னைக்கே சொல்லி இருக்கேன். அன்னைக்கு இப்படி தான் பேசி சீண்டி உன்ன ரொம்ப படுத்தி வச்சேன்.. மறுபடியும் என்னை சீண்டுன.. ஹாஸ்பிடல்ல கூட பாக்க மாட்டேன்..” என்று அவன் எச்சரிக்க…
அந்த நேரத்தில் மயிலுக்குள் என்ன புகுந்ததோ “நான் ஏன் உங்களை சீண்ட போறேன்? உண்மைய தானே சொன்னேன்? எதுக்கு என்னை கட்டிக்கிட்டீக? இந்த மாதிரி யாரையாவது கட்டி இருக்க வேண்டியதுதானே? நல்ல சிரிச்சு சிரிச்சு பேசலாம்.. இடுப்பு தெரியுற மாதிரி முதுகு தெரியிற மாதிரி புடவை கட்டிக்கிட்டு ஜோடி போட்டுகிட்டு போகலாம்..” என்று அவள் பேச அவனும் அமைதியாக அவளைப் பார்த்து இருந்தான்.
“ஒருவேளை எங்க அப்பா சொன்னது போல உங்க பொண்ணுக்கு ஆயா வேலை செய்ய அவங்கள போல மெத்த படிச்சவங்க சம்மதிக்கலையா? என்னைய அதுக்கு தான் என்ன கட்டிக்கிட்டிங்களா?” என்று எரிந்து விழுந்தாள்.
“நிஜமாவே நான் ஏன் உன்னை கட்டிக்கிட்டேன் உனக்கு தெரியாதா? அப்புறம் எப்ப பாரு அடுத்தவங்களோட என்னை வைத்து பேசாதன்னு சொல்லி இருக்கேன்” என்றவன் சுவற்றிலேயே அவளை சிறை பிடித்தான் இருகைகளாலும்.
“உன்னால மட்டும் தான்.. உன்னால் மட்டும் தான் என் உணர்வை தூண்ட முடியும்.. ஆண் என்று கிளர்ச்சி அடைய வைக்க முடியும்.. என்னை ஆட்டுவிக்க முடியும்.. என்னை ஆள முடியும்.. என்னையே என்னை உணர வைக்க முடியும்.. நான் சொன்னதோட அர்த்தம் புரியுதா டி உனக்கு?” என்று மென் குரலில் அவள் காதலின் தன் கற்றை மீசை உரச அவன் பேச..
அவன் கூறியதில் அவள் மிரண்டு விழிக்க.. அதில் மயங்கியவன் தன் உதட்டை அவள் நெற்றியில் பதித்து மென்மையாக ஒரு முத்தம் கொடுத்தான்.
“இந்த ஒத்த முத்தம் எனக்கு கொடுத்த இன்பத்துக்கு.. வேற எதுவுமே இணையில்ல டி மயிலு.. வேறனா.. எதுவுமே தான்!!” என்றான் ஆழ்ந்த குரலில்..
அப்பாடி என்ற ஆசுவாசம் அவளிடம்..!!
தன் ஆண்மைச் சிலிர்ப்பை தன்னுள் தக்க வைத்துக் கொண்டு அவள் நெற்றியில் இருந்த தன் உதடுகளை கீழே இறக்கினான். அவளின் வெப்ப மூச்சை முகர்ந்து அவள் உதட்டில் தன் உதட்டை வைத்து முத்தம் கொடுத்தான்.
ஒரே ஒரு முத்தம்தான்!!
ஆனால் மொத்தமாய் அவளை கேட்டது அவனது மனம்..!
அவள் மேல் காதல் கொண்ட மனம்..!
அவளோடு கூடல் கொண்ட மனம்..!
இப்போது ஊடலாய் நிற்கும் மனம்..!
அவனின் முத்தத்தில்.. சட்டென அவள் முகம் சிலிர்த்தது. உதடுகள் சுருங்கி சிணுங்கியது.
மீண்டும் இயல்புக்குத் திரும்பியது!!
அதை கவனித்தவனின் முகத்தில் கள்ள புன்னகை!!
இதழ்களை மெல்ல பிரித்தவன். அவள் கீழ் உதட்டை மட்டும் கவ்வி மெதுவாக உறிஞ்சினான்.
அதி வன்மையாக..
பெரும் கோபமாக..
கொஞ்சமே கள்ளமாக..
உள்ளுக்குள் முகிழ்த்த காதலாக..
”ம்ம்ம்ம்..!!” என்கிற நீளமான முணகல் ஒன்று மயிலிடமிருந்து வெளிப்பட்டது. அவள் நகக்கண்கள் அவனின் முதுகில் சற்று அழுந்திப் பதிந்து அவனை துன்புறுத்தியது.
அவள் உதட்டை உறிஞ்சிக் கொண்டிருந்தவனை விழிகளை அகல விரித்துப் பார்த்தவள், கண்களாலேயே பொசுக்கினாள்!!
“ஆஹான்.. கண்ணாலையே பொச்சுக்கிடுவியோ?” என்ற எள்ளல் பார்வை பார்த்தவனை, ஒரு நொடி நேரத்தை பயன்படுத்தி அவள் உதடுகளை பிடுங்கிக் கொண்டு சடாரென அவள் இடது கை வைத்து அவனின் முகத்தை இரண்டடி பின்னால் தள்ளி விட்டாள்.
ஒற்றைக் கை பிடிமானத்தில் இருந்தவன் அவள் இந்த திடீர் தாக்குதலை எதிர்பாராமல் சட்டென்று இரண்டடி பின்னால் நகர்ந்தான்.
“எவ்வளவு அதப்பு இருந்தா என்னையே தள்ளி விடுவ?” எப்படி அவள் என்னை தள்ளிவிடலாம் என்று மனம் சட்டென கொதி நிலையை அடைந்தது. காய்ச்சல் வந்தவன் போல.. அவன் உடம்பு முழுவதும் படர்ந்த உஷ்ணம்.. கிர்ரென தலைக்கு ஏறி அவனின் மூளையை தாக்கி அமிழ்ந்திருந்த கோபத்திற்கு தூபம் போட்டது.
அவனுக்குள் இருந்த மென்மை.. ரசனை எல்லாம் காணாமல் போய்.. அவளின் பெண்மை அம்சங்களை.. மென்மையான மேடு பள்ளங்களை எல்லாம் அடித்து துவைத்து.. துவம்சம் செய்ய வேண்டும் போலொரு வேகம் அவனிடம்!!
“15 நாளா உன்னை தொந்தரவு செய்யக்கூடாதுன்னு நான் இருந்தா என்னை தூண்டி விடுறடி நீ..” என்று அழுத்தமாக அவளுள் புதைந்தான்.
தொடரும்…
👌👌👌👌👌👌👌👌👌👌👌👌
super sis
Yein pirinji vantha Mayilu waiting for next episode sis
Super sema ❤️❤️❤️❤️❤️