சண்டியரே 20
அன்று ஞாயிற்றுக்கிழமை.. ஆனால் வயலில் வேலை இருக்க விஜயராகவனை வீட்டில் ஓய்வு எடுக்க சொல்லிவிட்டு ஆரூரன் வயலை நோக்கி நடந்தான்.
வயலுக்கு என்றாலே எப்பொழுதும் போல சட்டை வேஷ்டி தான். அதுவும் சட்டையின் பட்டனை முன்னால் திறந்து விட்டிருக்க உள்ளே பனியன் இருந்தாலும் அதை தாண்டி அவனது நெஞ்சு முடி கருகருவென்று கவர்ச்சியாக தெரியும்..!
சட்டையை முழங்கை வரை மடித்து விட்டிருக்க அவனின் உருண்டு திரண்டு புஜமும் திண்ணிய மார்பும் கண்டிப்பாக பார்ப்பவர்களை திரும்ப ஒருமுறை பார்க்க வைக்கும் வனப்பான ஆண் தான் ஆரூரன்.
இவர்கள் வயலில் ஆட்கள் வேலை செய்து கொண்டிருக்க… அவர்களை மேற்பார்வை பார்த்தபடி சற்று தள்ளி இருக்கும் மோட்டார் அறைப்பாக்கம் சென்றான். மோட்டார் அறையோடு மற்றொரு அரை சற்று விஸ்தாரமாக இருக்கும். மழைக்காலங்களில் வேலை செய்பவர்கள் வந்து ஒதுங்கி நிற்கவும் சாப்பிடவும் என்று..!
சில சமயம் பெண்கள் தங்கள் சிறு பிள்ளைகளை அழைத்து வந்தால் இங்கே அமர வைத்து விளையாட விடுவார்கள். இல்லை அங்கேயே தூலி கட்டி தூங்க வைப்பார்கள். அதற்கெல்லாம் வசதியாக இருக்க தான் யோசித்து கட்டி வைத்திருந்தார் விஜயராகவன்.
அங்கு இருந்த கயிற்றுக் கட்டிலில் ஒரு போர்வையை விரித்து அமர்ந்தவன் அடுத்த வயலை பார்க்க அங்கு தியாகேசன் வயலில் வேலை நடந்து கொண்டு இருந்தது.
ஆனால் தியாகேசனை காணவில்லை. “ஆளு வேலை செய்றாங்க.. இந்த ஆளு எங்க போனாரு? ஆள காணும்..!” என்றபடி இங்கிருந்து தங்கள் வேலையாள் தையானை விட்டு அங்கே நிலவரத்தை அறிந்து வரச் சொன்னான்.
தையானும் அங்கு இருப்பவனிடம் “கந்தா வத்திப்பெட்டி கொடு..” என்பது போல கேட்டு மெல்ல நிலவரத்தை கேட்டு வந்தவன், “அதுங்க சின்னையா.. உங்க மாமா எல்லாருக்கும் டீ பட்சணம் வாங்குறதுக்காக போயிருக்காராம். ஆளுங்க மட்டும்தான் இப்ப வேலையில இருக்காங்க..” என்றவற் ஆரூரன் பதிலுக்காக..
“ டீ பட்சணம் வாங்க போயிருக்காரா? இவரு ஏன் போறாரு? அப்படியெல்லாம் போக மாட்டாரே..!! அதுவும் இந்நேரத்துக்கேவா இப்பதான் இள வெயில் அடிக்குது உச்சி வெயிலுக்கு தான் போவாங்க? சரி நீ போய் வேல பாரு தையான்” என்றதும் அவனும் தலையாட்டி விட்டு சென்றுவிட யோசனையோடு அப்படியே நடந்து சென்றான் வயல் புறம்.
இவனை கண்டதும் அங்கு உள்ளவர்களும் வணக்கம் என்று மரியாதையாக கூற.. தலையாட்டியபடி “வேலைய பாருங்க.. வேலையை பாருங்க..” என்றான். இதுவும் அவர்கள் வயல்தான். ஆனால் கமலாம்பிகை என்று அப்போது சொத்தை பிரித்துக் கொடுத்துவிட்டார் விஜயராகவன்.
அதனால்தான் இவர்கள் வயலோடு ஒட்டி இருந்தது அது..!
பெரும்பாலும் அதில் என்ன போடுகிறார்கள்? அதில் என்ன வருமானம் வருகிறது? என்பதை எல்லாம் விஜயராகவேணும் ஆதிரனும் கண்டு கொள்ள மாட்டார்கள். ஆரூரன் “வயலை விட்டு விட்டு அதைவிட முக்கியமான வேலை என்ன இவருக்கு?” என்று யோசனை மிக பார்த்துக் கொண்டிருந்தான் ஆட்களை..!
அப்போது வெள்ளி கொலுசு சத்தம் அவன் காதை நிரப்ப.. திரும்பி பார்க்க.. கையில் கூடையோடு அவர்கள் வயலை நோக்கி வந்து கொண்டிருந்தாள் தங்கமயில்.
என்னதான் திருமணத்திற்கு பின் அவள் புடவை கட்டிக் கொண்டிருந்தாலும் பாவாடை தாவணியின் அழகு இதில் சற்று குறைவாகவே இருப்பது போலவே தோன்றும் அவனுக்கு.
“நீ மாமன் கிட்ட வாடி அப்புறம் வித விதமா உன்னைய தாவணி போட வைக்கிறேன்” என்று சிரித்து கொண்டவன் அவள் இங்கு வரும் முன்னே அவளை நோக்கி சென்றான்.
வரப்பில் வந்து கொண்டிருந்தவள் இவனை கொஞ்சமும் எதிர்பாராமல் சட்டு என்று தேங்கி நிற்க முடியாமல் பின்னால் சாய.. தன் வலிய கரத்தால் அவளை பிடித்து நிறுத்தியவன் “கண்ணை எங்க பொறடியில வச்சுட்டு வரியா? வரப்புல தானே வரவ.. என்னமோ ஹைவே ரூட்ல வர்ற மாதிரி வேகமா வர?” என்று வேண்டுமென்றே அவளிடம் கடுப்படிக்க..
“குறுக்க வந்தது நீங்க.. என்ன பேசுவீங்களா? ஆமா இவங்க ரோஸ் ராயல்ஸ் கார்ல வந்தாங்க நாங்க குறுக்காப்ல வந்துட்டோம்” என்று கிண்டல் அடித்தான்.
அவள் முறைக்க.. “சரி சரி.. மாமன பார்த்தது போதும். கைல என்ன வச்சி இருக்க?” என்றதும் கையில் வைத்திருந்த கூடையை பின்னால் மறைத்து கொண்டு “இது ஒன்னும் உங்களுக்கு கொண்டு வரல.. எங்க அப்பாருக்கு கொண்டு வந்தேன்” என்றாள்.
“உங்க அப்பாரு.. இங்க இல்ல டீ பட்சணம் வாங்க கடைக்கு போய்ட்டாரு.. வரும்போது நல்ல மொக்கிட்டு தான் வருவாரு..” என்றவன்,
“மாமன் தேன் ரொம்ப பசியா இருக்கேன் மயிலு.. வா வா வந்து பசியாத்து” என்று இரு பொருள் பட பேச, சட்டென்று அவள் நெஞ்சில் கை வைக்க..
“நீ ஏன் டி எப்ப பாத்தாலும் தப்பு தப்பாவே யோசிக்கிற.. நான் வயித்து பசியை மட்டும் தான் டி சொன்னேன்” என்று கண்ணடித்தவன், “திருப்பி நட..” என்று அவள் கையை பற்றி சுழற்றி மெல்ல வரப்பினூடே நடக்க வைத்தான் அவன்.
“கால் இப்பதான் கொஞ்சம் சரியா இருக்கு. கொஞ்ச நாள் வீட்டுல அடங்கி இருக்க மாட்டியோ? இப்ப இந்த சாப்பாடு எடுத்துட்டு வரலனா உங்க அப்பாரு பட்டினி கிடந்துருவாரா என்ன?” என்று அவளை திட்டியபடியே அழைத்து சென்றான்.
வேண்டா வெறுப்பாய் தான் அவளுமே சென்றாள். ஆரூரன் பசி என்றதும் ஒரு புறம் மனது துடித்தாலும் “போயா போ கோச்சிட்டு போன பொண்டாட்டிய வந்து கூப்பிட தெரியல .. உனக்கு பசி மட்டும் நான் வந்து ஆத்தனுமா?” என்று கடுப்பும் இருந்தது மறுபுறம்.
“இவன் பாட்டுக்கு அழைச்சிட்டு போறான்.. அப்பா வந்து பார்த்துட்டு தய்யா தக்காணு குதிக்க போறாரு?” என்று அவள் யோசித்துக் கொண்டே செல்ல..
“சரி சாப்பாடு எடுத்து வை..”
“வயல வேலை பாக்குறவங்களுக்கு என்ன இட்லி சாம்பாரா எடுத்துட்டு வருவாங்க? கூலு தான் எடுத்துட்டு வந்தேன் கம்பம் கூல் காய்ச்சி..” என்றாள் அவள் எங்கோ பார்த்து..
“ஏதோ ஒன்னு தா டி..” என்று அவள் கையில் இருந்த கூடையை பிடுங்கினான்.
உள்ளே கம்பங்கூழும் அதற்கு வெஞ்சனமாக மாங்காய் மிளகா தூளில் போட்டது.. காய்கறி வத்தல்.. கூடவே நாட்டுக்கோழி முட்டை ஆம்லெட்.. பச்சை மிளகாய் சின்ன வெங்காயம் என்று கொண்டு வந்திருக்க.. அதை மூக்கருகே கொண்டு சென்று வாசனை முகர்ந்தவன், “இது சாப்பாடு டி..!” என்றபடி அவன் பாட்டுக்கு ஒரு வாய் குடிப்பதும் அருகே இருக்கும் வெஞ்சினங்களை சாப்பிடுவதுமாக இருந்தான்.
“எங்க அப்பாரு வந்து கேட்டா??” என்று அவள் முறைத்துக் கொண்டு கேட்க..
“என் புருஷனுக்கு பசிக்குதுன்னு சொன்னாரு அவருக்கு கொடுத்துட்டேன்னு சொல்லு” என்றான் அலட்டமால்.
குடித்து முடித்து பாத்திரத்தை அதே கூடையில் போட்டு அருகில் உள்ள பம்பு செட்டில் கழுவி வந்தவன் அவள் இடுப்பில் சொருகி இருந்த முந்தானையை எடுத்தான் வெகு இமல்பாக. எடுக்கும்போதே இடுப்பையும் ஒரு பிடி பிடித்தான் இறுக்கமாக..
அதில் ஜெர்க்கானவள் அவன் கையைத் தட்டி விட்டு “வேலை செய்ற ஆட்கள் எல்லாம் இருக்காங்க.. இப்படித்தான் நடந்துப்பீங்களா பொது வெளியில?” என்று திட்டினாள்.
“திரும்பி பாரு எல்லாரும் காலை சாப்பாட்டுக்கு போய் உட்கார்ந்து இருக்காங்க..” என்றான் வாயை அவள் முந்தானையில் துடைத்துக் கொண்டே..
மயில் திரும்பி ஒருமுறை பார்க்க எல்லாரும் காலை உணவை அருகில் இருக்கும் மரத்தின் நிழலில் தள்ளி அமர்ந்து உண்டு கொண்டிந்தனர். இவர்கள் இங்கே இருப்பதால் யாரும் இங்கே வரவில்லை இங்கிதமாக..
“அவங்களுக்கு கூட தெரியுது சின்னையா புதுசா கல்யாணம் ஆனவரு.. பொண்டாட்டி கூட இருக்காரு.. டிஸ்டர்ப் பண்ண கூடாதுன்னு.. ஆனா உன் மரமண்டைக்கும் உங்க கொப்பன் மரமண்டைக்கும் தான் புரிய மாட்டேங்குது” என்றவன் முந்தானையோடு அவளை இழுக்க..
அவன் மேல் பொத்து என்று வந்து முட்டி நின்றாள் மயில். அவன் நெஞ்சின் கருகரு சுருள் முடியில் அவள் கன்னத்தில் செல்லமாய் கொஞ்சியது. அதில் சுகமாய் சிறிது நேரம் சொக்கியவள், சூழ்நிலை கருதி தன்னை நிதானித்துக் கொண்டாள்.
“விடுங்க..” என்று அவன் கையில் இருந்த முந்தானையை பிடிங்கியவள், கூடை எடுத்துக் கொண்டு கிளம்ப முயல, கயிற்றுக் கட்டிலில் அமர்ந்தவனோ “இரு மயிலு மாமன் கூட கொஞ்ச நேரம் உட்கார்ந்து பேசிட்டு போவியாம்?” என்றான், கட்டிலில் முழங்கையை ஊன்றி சாயந்தாற் போல படுத்தவாறு..!
“நீங்க பாட்டுக்கு எங்க அப்பாரு சாப்பாட்ட சாப்பிட்டீங்க.. இப்ப அவர் சாப்பாடு கேட்டா நான் என்ன பண்ணுவேன்? வீட்டுக்கு போயிட்டு நான் திரும்ப கொண்டு வரணும். உங்களோட எனக்கு..” என்றவர் வேகமாக திரும்ப அவனின் முகத்தில் மோதிய அவளின் முந்தாணையை வாசத்தை நுகர்ந்தவன், அவனை விட்டு செல்லும் கடைசி நிமிடத்தில் பற்றி இழுக்க.. அவன் மேலே மொத்தமாக வந்து விழுந்தாள் மயில்.
அவள் பயத்தில் எழ முடியாமல் அவன் மீது கை வைத்து ஊன்றி எழ பார்க்க.. ஆரூரனோ அதையும் தனக்கு சாதகமாக பயன்படுத்தி அவள் கையை தட்டி விட.. அவன் மீதே இன்னும் தொப்பென்று மொத்தமாக விழுந்தாள்.
அவனின் அணைப்புக்குள் முழுமையாக வந்தாள். ஒரு வாரத்திற்கு பிறகு பெண்ணவளின் முழு ஸ்பரிசம் உணர்கிறான் அவன். ஜிவ்வென்று இருந்தது. இந்த உணர்வை வேறொருத்தி நிச்சயமாக தர முடியுமா? கண்டிப்பாக முடியாது என்று அவன் உணர்ந்தான். “இந்த ஜென்மத்தல் இவ தேன்!! இவ மட்டும் தேன்!!” என்று முடிவு எடுத்தவனுக்கு தயக்கம் உடைந்தது. மெல்ல அவள் முகத்தை தன் பக்கம் திருப்பினான். அவள் கண்களை நேராகப் பார்த்து “லவ் இல்ல.. என் மேல” என்று கேட்க.. அவளோ பதறி அளித்தாள் இல்லை என்று..!
“நிஜமா லவ்வு இல்ல? நேசம் இல்ல? பாசம் இல்ல? அன்பு இல்ல?” என்று ஒவ்வொன்றாய் அவன் கேட்க.. அவள் தலையாட்டி மறுக்க..
“பொய் சொல்லாதடி..! உன் நொப்பனும் இல்லைன்னு தெரிஞ்சுகிட்டு தானே வயலுக்கு வந்தவ.. அதுவும் கூல் எனக்கு தானுக்கு எனக்கு தெரியும். என்னைக்கு உன் நொப்பன் கூல் எல்லாம் குடித்திருக்கிறாரு..” என்றான் உன்னை நான் கண்டுகொண்டேன் என்பதாய்..!
“சரி இப்படியா இவன் கண்டுபிடிப்பான்?” என்று தான் மாட்டிக் கொண்டதை நினைத்து
அவன் கண்களை எதிர்கொள்ள முடியாமல் தடுமாற.. அதில் அவனுக்கு தைரியம் ஊற்றெடுக்க.. அவள் உதடுகளை தேடிக் கவ்விக் கொண்டான். இதழ்களும் இதழ்களும் சண்டையிட்டு கொள்ளவில்லை. மாறாக மென்மையாக.. மிக.. மிக மென்மையாக கொஞ்சிக் கொண்டிருந்தன..!!
நீண்ட நெடிய முத்தத்துக்குப் பின், அவளை தன் பக்கம் திரும்பி, தன் மார்பில் அவள் முகம் வைத்து அழுத்தி கொண்டான். அவள் முகம் அவனின் இதயத்தருகில் இருக்க.. “கேளுடி நல்லா கேளு.. என் இதயத்தோட சத்தத்தை.. அது உன் பெயரை மட்டும் தான் சொல்லும்.. இப்பவும் எப்பவும்” என்றவன் அவள் முகத்தை நிமிர்த்தி, “என் காதல் இனக்கவர்ச்சி இல்ல டி.. உனக்கு தேவையான டைம் எடுத்துக்கோ.. ஆனா நீ மட்டுந்தேன் பொண்டாட்டி ஆரூரனுக்கு.. சீக்கிரம் வந்து சேரு டி வீட்டுக்கு” என்றவன் மீண்டும் மீண்டும் அவள் உதடுகளைக் கவ்விச் சுவைத்து விட்டே எழுந்தான்.
“உனக்கு காதல் வரும் வரைக்கும் நீயி வெயிட் பண்ணு மயிலு.. ஆனா இந்த என்னைய வெயிட் பண்ண சொல்லும் உரிமை உனக்கு இல்லைடி யோவ்..” என்றவனையே விழி அகலாமல் பார்த்துக் கொண்டிருந்தாள் பதுமை என பாவை.
இப்பொழுது இருவர் கண்களும் ஒன்றையொன்று கவ்விக்கொள்ள.. மிக அருகில் அவனது முகம், அவளது கண்கள் ஆழியென அவனை இழுத்துக் கொள்ள.. தங்களை அறியாமல் இருவரும் மீண்டும் நெருங்க.. அப்போது பெரும் சத்தம் “மயிலுஉஉஉஉ…!!” என்று..!!
வேற யாரு நம்ம ஆரூரன் மாமனார் தியாகேசன் தான்..!!
அவள் பயந்து அவனிடமிருந்து விலகி எழுந்து நிற்க.. தன் பார்வையாலேயே சுட்டு எறித்தான் மனைவியை ஆரூரன்.
“உங்கொப்பன் சொன்னா உடனே தள்ளிப் போட்டுவியோ.. கொப்பன்மவளே.. பக்கத்துல வா டி.!” என்று ஆரூரன் அதட்ட..
“ஏய்.. மயிலு? அவனிட்ட என்ன பேச்சு வேண்டி கிடக்கு.. ஒழுங்கா வீட்டுக்கு போ.!” என்று மறுபுறம் தியாகேசன் மிரட்ட..
இருவருக்கும் நடுவில் விழி பிதுங்கி நின்றிருந்தாள் பாவை பாவமாக..!
super sis next ud quick ka upload pannuga sis
👌👌👌👌👌👌👌👌👌👌👌
Pavam Mayilu