ATM Tamil Romantic Novels

ஆசைகள் உன்னிடம் அசுரனே.. 17

17

 

யாருக்கும் நிற்காமல் காலம் நேரம் செல்வது போலத்தான் தெய்வானை அம்மாள் திருமண வேலைகளையும் யாரையும் எதிர்பார்க்காமல் மடமடவென்று செய்தார். மண்டபத்திற்கு பிரச்சினை கிடையாது. சொந்த மண்டபம் இருக்கிறது. நகைகளுக்கும் பஞ்சமில்லை.. ஏற்கனவே அவரவர் மகள்களுக்கு சேர்த்து வைத்த நகைகளும்.. கூடவே இன்னும் தேவைக்கு கடலைப் போல நகைக்கடை இருக்க.. வேண்டுமென்றதை கிள்ளி வைக்கலாம் இல்லை அள்ளியே வைத்தார் மூன்று பேருக்கும் சமமாய் தெய்வானை அம்மாள்.

 

 

 

அடுத்து பட்டுக்கு அவர்கள் வழக்கம்போல் கொடுக்கும் நெசவாளர்கள் இடமே நெய்ய கொடுத்திருந்தார். பெரும்பாலும் மகள் மருமகள்கள் பேத்திகளுக்கு என்னதான் புதுப்புது மாடல்களில் எடுத்தாலும் பட்டினில் அதுவும் தங்கஜரிகையில் நெய்து வாங்குவதுதான் தெய்வானை அம்மாளின் பிடித்தம். அதுபோலவே இப்போது பார்த்து பார்த்து செய்து வைத்தார். இதிலெல்லாம் வத்சலா வேதவள்ளி மோகனவள்ளியோ தலையிடவில்லை. 

 

 

 

தங்களுக்கே பார்த்து பார்த்து செய்த அன்னை பேத்திகளுக்கு செய்ய மாட்டாரா? என்ற எண்ணம் அவர்களுக்கு!  

 

 

 

நகை பட்டை பார்த்து பார்த்து எடுத்து என்ன செய்வது? மனம் போல வாழ்க்கை அமையவில்லை என்றால் அனைத்தும் இருந்தும்.. இல்லாதது போல தான்.. தங்க கூண்டே என்றாலும் அதில் அடைப்பட்டு இருக்க.. வானில் சிறகை விரித்து பறந்து திரியும் கிளிக்கு பிடிக்குமா என்ன? அதுபோலதான் வாழ்க்கையும். அது சில நேரங்களில் நம்மை வஞ்சிக்கவும் சில நேரங்களில் துஞ்சிக்கவும் வைக்கிறது.

 

 

 

செந்தூராரின் வீடு திருமண களைகட்டியது. ஆனால் பிள்ளைகள் அனைவருக்குமே இதில் மனம் முழுக்க சந்தோஷம் என்று இல்லவே இல்லை.

 

 

ஆராதனாவுக்கு அவர்களின் கல்யாணத்தை விட மயூரி ஆரன் நினைத்து கவலை.

 

 

நிமிலனுக்கோ எங்கே ஆராதனாவை ஆரன் தள்ளிக் கொண்டு சென்று விடுவானோ என்று மனதில் உறுத்தலோடு அவளையே அவ்வப்போது கோபத்தோடு பார்த்திருந்தான்.

 

 

 

நிரஞ்சனோ எப்படி ஆரனை இங்கே அழைத்து வந்து மயூரி கழுத்தில் தாலி கட்ட வைப்பது என்று தன்னை 007 ஜேம்ஸ்பாண்ட் லெவலுக்கு நினைத்து திட்டங்களை போட்டுக்கொண்டிருந்தான் வக்கீல்.

 

 

 

ரஞ்சனிக்கு உள்ளுக்குள் நிமிலன் உடனான திருமணம் நடக்குமா? என்று கொஞ்சம் உறுத்தல் இருந்தாலும் அன்னை கண்டிப்பாக சாதித்து விடுவார் என்ற நம்பிக்கையில் அவள்தான் நகை பட்டு ஷாப்பிங் பட்டி டிங்கரிங் என்று பிஸியாக இருந்தாள்.

 

 

 

ஆனால் மயூரி இது எதையும் சிந்தையில் ஏற்றுக்கொள்ளாத ஒரு மோன நிலையிலேயே சுற்றிக் கொண்டிருந்தாள்.

 

 

 

அவளுடைய உலகம் ஆரன் அவனையே சுற்றிக் கொண்டிருந்தது. இல்லை இல்லை அவனது நினைவுகளால் பெண்ணவளை சுழட்டிக் கொண்டிருந்தான் பம்பரத்தை போல ஆரன். ஒரு நேரம் சற்று அவனைப்பற்றி நல்ல விதமாக ஓடினால் அடுத்த நிமிடமே அவனின் வார்த்தைகள் அம்புகளாக பெண்ணின் மனதைத் தைத்தது.

 

 

 

திருமணம் பற்றி இதுவரை அலுவலகத்தில் கூட யாருக்கும் எதுவும் இவள் சொல்லவில்லை.

 

நிச்சயத்தை முதல் நாள் அன்றே வைத்து விடுவது என்று பெரியவர்கள் பேசி இருக்க முறையாக நேரம் காலம் பார்த்து சொன்னவுடன் சொல்லிக்கொள்ளலாம் என்று சிறியவர்களுக்கு அறிவுறுத்தி இருந்தனர் பெரியவர்கள்.

 

 

 

அதனால் எப்பொழுதும் போல அலுவலகத்திற்கு கிளம்பி கொண்டிருந்தாள் மயூரி. முதல்நாள் ஷாப்பிங் சென்டர் வந்திருந்த வத்சலாவும் வேதவள்ளியும் பெண்கள் மூவருக்கும் தேவையான துணிமணிகள் எடுத்து வந்திருந்த போது, வேதவள்ளி மருமகளுக்கு என்று தனியாக ஷிபானில் ஆகாய வண்ண புடவை ஒன்றை எடுத்துவந்து இன்று கட்டிக் கொள்ள சொன்னார்.

 

 

 

“அத்த.. வேலைக்கெல்லாம் சாரி வேணாம் அத்த.. ஒரு மாதிரி அன்கம்பார்டேபில இருக்கும். அங்க தெரியுதா இங்கே தெரியுதான்னு அதிலேயே மைண்ட் போகும் த்த.. ப்ளீஸ்” என்றாள் மயூரி.

 

 

 

“ஏன்டா ஒழுங்கா கட்டுனா அப்படியெல்லாம் எதுவுமே ஆகாது. வா நான் வேணா உனக்கு கட்டிவிடுறேன். ஆனா இந்த சாரிய கட்டிட்டு போடா.. எனக்கு ரொம்ப பிடிச்ச கலர்! உனக்காக ஆசை எடுத்துட்டு வந்தேன். கல்யாணத்துக்கப்புறம் புருஷன் எடுத்துக் கொடுத்தது தான் கட்டுவ.. அப்போ அத்தை எல்லாம் ஞாபகம் இருக்குமா உனக்கு?” என்று அவர் வருத்தம் போல கிண்டலாக பேசி மருமகளின் மனதை அறிந்து கொள்ள முயன்றார்.

 

 

 

அவர் புருஷன் என்று கூறுகையில் சட்டென ஆரனின் முகம் அவள் கண்களுக்குள் மின்னி மறைய புன்முறுவலுடன்.. “அதெல்லாம் ஸ்ட்ரிக்டா சொல்லிடுவேன் என் அத்தை அப்புறம் தான் அவருனு” என்று நாணத்துடன் சொன்னா மருமகளை நினைத்து அவருக்கு சந்தோஷம்.

 

 

ஆனால் மருமகளின் மனதில் இருப்பவன் யார் என்று அறிந்தால் நிலைக்குமா இது?

 

 

ஆனால் ஆரனை நினைத்தாலே..

 

மனதில் எதிர்பார்ப்பு கூடவே அவனின் மீதான கோபம் அவன் வார்த்தைகளில் உண்டான வலி என அனைத்தும் அப்பட்டமாக அவள் விழிகளில் மின்னி மறைய சற்று முன் நாணம் கொண்ட கண்கள் தற்போது காட்டும் பாவனைகளை கண்டு குழம்பித்தான் போனார் வேதவள்ளி. அந்தப் பெண்ணின் மனதில் என்னதான் இருக்கிறது?

 

 

ஒவ்வொரு நொடியும் ஜாலம் காட்டும் இந்த மான் விழியாளின் மனதினுள் புகுந்து பார்த்திட இயலுமா என்ன?

 

பெண்ணின் ஆழமான ரகசியங்களை அவள் வார்த்தைகளால் அன்றி கண்டுபிடிக்க படைத்த அந்த பிரம்மனாலும் முடியாது!!

 

 

எல்லாம் நல்லபடியாக நடக்க வேண்டும் என்று பெருமூச்சோடு மருமகளின் கைகளில் புடவையும் அதற்கு மேட்சான ரெடிமேட் பிளவுஸையும் கொடுத்துவிட்டு சென்றார் வேதவள்ளி.

 

 

புடவை கட்டும் போது அன்று கோயிலில் பார்த்த ஆரனின் ரசனை மிகுந்த கண்களும்.. காதல் ததும்பும் முகமும்.. நினைவில் வந்தாலும் அதற்குப்பின் அவன் கொடுத்த கனல் கங்குளையும் மறக்கவும் முடியாமல் தவித்தாள் பெண்.

 

 

 

இனி அவனை பார்க்கவே கூடாது!! முடியுமா என்னால்? அவனை பார்த்திடாபல் தவிர்த்திட முடியுமா? என்று தறிகெட்டு ஓடிய எண்ணங்களை அடக்கி விரிந்த கூந்தலில் சென்டர் கிளிப் போட்டு மிதமான ஒப்பனையில் அழகு ஓவியமாக இறங்கிவந்த மயூரியை வீட்டினர் அனைவரும் பாராட்ட, வத்சலாவோ திருஷ்டி எடுத்தே மகளை அனுப்பினார்.

 

 

 

வரதராஜன் அலுவலகத்திற்குள் தன்னுடைய வெஸ்பாவை நுழைக்கும் போதே, அங்கே காருடன் நின்றிருந்த ஆரனின் டிரைவரைப் பார்த்தாள். ஆனால் அதில் ஏறாமல் இவள் வண்டியை உள் நுழைத்து வண்டியை நிறுத்தி விட்டு வருவாள் என்று எதிர்பார்ப்புடன் கதவைத்திறந்து காத்திருந்தான் அந்த டிரைவர்.

 

 

ஆனால் அவளோ அலுவலகத்தில் இருந்தபடியே டிரைவரை அழைத்து “எனக்கு இனி அங்கே வேலை இல்லை.. என் வேலை வேறு இடத்துக்கு மாறிவிட்டது என்று உங்கள் முதலாளியிடம் சொல்லுங்க” என்றவள் விடுவிடு என்று அலுவலகத்திற்குள் நுழைந்து விட்டாள்.

 

 

 

“செய்வதெல்லாம் செய்துவிட்டு இன்னும் அவன் ஆபீசுக்கு வருவேன்னு எவ்வளவு நம்பிக்கை இவனுக்கு!! ஆறடி உயரம் முழுக்க கொழுப்பு அவனுக்கு!! எந்த தைரியத்தில் டிரைவரை அனுப்பி வைத்து இருப்பான்? டிரைவர் என்ன.. அவனே வந்தால் கூட நான் செல்ல மாட்டேன்!! போடா நீயும் ஆச்சு.. உன் லவ்வும் ஆச்சு.. இந்த மயூரி ஒன்றும் அவ்வளவு எளிதல்ல!!” என்று பேச்சில் சிங்க பெண்ணாக சிலிர்த்துக் கொண்டவளை அவளது மனசாட்சியோ, ‘அவனே நேரில் வந்து கூப்பிட்டால் இப்படி பேசுவாயா?’ என்று கேவலமாக பார்த்துவிட்டு சென்றது.

 

 

“என்னை நேரில் இங்கே வந்து பிக் செய்யும் அளவிற்கு அவனுக்கு நேரம் இருக்கா என்ன? எப்பவுமே அவனது தொழில்தான் முக்கியம்!! அதுவுமில்லாமல் அவன் பேசிய வார்த்தைகளை நான் மறக்கவும் இல்லை. அவனை மன்னிப்பதாயும் இல்லை!!” என்று மனசாட்சிக்கு கவுண்டர் கொடுத்தபடி உள்ளே நுழைந்தாள்.

 

 

அங்கிருந்த மற்ற நண்பர்களை பார்த்து தலையசைப்புடன் சிரித்துவிட்டு வரதராஜனிடம் அட்டனன்ஸ் போடுவதற்காக உள்ளே சென்றாள்.

 

 

 

ஆனால் உள்ளே அவளுக்கு அட்டனன்ஸ் போட்டான் ஆரன் “ஹாய்‌ மயூ பேபி” என்று!!

 

 

 

அதுவும் புடவையில் அவளை பார்த்துவிட்டு ரசனையோடு விழிகளை உயர்த்தி சுழட்டி தலைசுற்றி மயங்குவது போல பாவனை செய்தவன், பின்பு பறக்கும் முத்தத்தை பறக்க விட, உள்ளுக்குள் சிலிர்த்துக் கொண்டிருந்த சிங்கப்பெண் சுணங்கி படுத்துக் கொண்டாள், நாணம் கொண்டு..

 

 

 

“இவன் ஏன் வரதராஜன் சார் ரூமில இருக்கிறான்? அவர் எங்கே?” என்று அவள் கண்களால் துழவ..

 

 

அருகில் இருக்கும் குளியல் அறையை காட்டியவன், “கவலைப்படாதே வந்திடுவார்!! ஆனால் உன்னை என்னிடம் இருந்த எல்லாம் காப்பாற்ற வரதராஜன் என்ன.. வளர்ந்து கெட்ட உன்‌ அண்ணன் வந்தாலுமே முடியாது” என்றான் இடது பக்க புருவத்தை உயர்த்தி..

 

 

அதற்குள் வரதராஜன் வந்துவிட “வா மா மயூரி.. உனக்காக தான் சார் வெயிட் பண்ணிட்டு இருக்கார். எவ்வளவு பிசினஸ் அவருக்கு. தன் பொன்னான நேரத்தை எல்லாம் விட்டுட்டு உனக்காகத்தான் காத்திருக்கிறார். சீக்கிரம் கிளம்பி போ” என்றவர் இண்டர்காம் மூலம் வெளியில் இருக்கும் தனது பிஏவை அழைத்தார்.

 

 

 

வந்தவன் கைகளில் பிரஸ் ஜூஸ் உடன் வர, அதை மிக பவ்வியமாக வரதராஜன் வாங்கி தானே கொடுத்தார் அவனிடம். முதலில் மறுத்த நினைத்தவன் தன்னருகில் வரதராஜனிடம் எதுவும் பேச முடியாமல் ஆரன்‌ மீது அடக்கப்பட்ட கோபத்தை கண்கள் வழியே காட்டி நின்றவளை கண்டவனுக்கு அவளை சீண்டிட எண்ணம் வரவே ஆர அமர கண்களால் பருகியபடி அந்த ஜூஸை பருகினான் ஆரன்.

 

 

 

அதன் பிறகு அவளிடம் வருகிறாயா என்றெல்லாம் இவன் அனுமதி எதுவும் கேட்கவில்லை. “கிளம்புறோம் சார்!!” என்று வரதராஜனிடம் கூறி விட்டு அவளைப் பார்த்தவன் விடுவிடுவென்று முன்னே செல்ல இவள் இரண்டு நிமிடம் தேங்கி நிற்பதை பார்த்த வரதராஜன் “சீக்கிரம் போ மா.. டைம் ஆகுது பாரு!!” என்று விட்டால் இவரே இழுத்து வந்து அவனது காருக்குள் தள்ளி கதவை சாற்றி விடுவதை போல அவசரப்படுத்தினார்.

 

 

காரில் ஏறும்போது டிரைவரை பார்த்தவளுக்கு வெட்கமாகி போனது. சற்று நேரம் தான் சிலிர்த்து கொண்டு அவரிடம் தான் பேசியது என்ன? இப்பொழுது இவன் பெண்ணே பம்மிக் கொண்டு காரில் ஏறுவது என்ன? “மயூரி உனக்கு வந்த நிலையை பாரு!!” என்று தனக்கு தானே நொந்துகொண்டவள் வாயை இறுக்க மூடிக் கொண்டாள்.

 

 

ஆரனின் அலுவலகத்துக்குள் வருவதறகான அவனுக்கு என்று இருக்கும் பிரத்யேக லிப்டில் ஏறினார்கள். அருகில் ஒருத்தி இருக்கிறாள் என்பதை சற்றும் கவனிக்காமல் தன்பாட்டில் பாக்கெட்டில் கைவிட்டப்படி விசிலடித்துக் கொண்டிருந்தான்.

 

 

 

அவனது அலுவலக அறை உள்ள தளம் வந்தவுடன் லிப்ட் கதவு திறக்க.. இவள் முன்னோக்கி ஒரு எட்டு வைக்க.. சட்டென்று அவள் இடையை பற்றி பின்னால் இழுத்தவன், லிப்ட்டை மாடியில் அவனது வீடு இருக்கும் தளத்திற்கு பட்டனை அழுத்தினான்.

 

 

அவள் என்ன என்று உணரும் முன்னே அவனது வீடு இருக்கும் தளம் வந்திருக்க.. பற்றிய இடையை சற்றும் விடாமல் தன்னுடன் இறுக்கியபடி லிப்ட்டிலிருந்து வெளியே வந்தவன் அங்குள்ள டிஜிட்டல் லாக்கில் சீக்ரெட் எண்ணை அழுத்த கதவு திறந்து கொண்டது.

 

 

 

“முதல் முதலில் கல்யாணமாகி நம்ம வீட்டுக்கு வரும் போது வலது காலை எடுத்து வைக்கனுமாம் மயூ. ஆனா.. இப்போ நீ என் மனைவி இல்லைல்ல.. அதனால்..” என்றவன் பற்றியிருந்த அவளது இடையில் இறுக்கத்தை அதிகரித்து சட்டென்று கைகளில் ஏந்திக் கொண்டு உள்ளே நுழைந்தான்.

 

 

 

“உனக்கு ஒன்னு தெரியுமா மயூ பேபி?” என்று விஷமச் சிரிப்புடன் கேட்டவனை பார்த்து ‘எங்கே கீழே போட போகிறானோ?’ என்று அதிர்ந்து அவனின் கழுத்தில் மாலையாக கைகளை கோர்த்துக்கொண்டு என்ன என்பது போல பார்த்தாள்.

 

 

 

“வெளிநாட்டில மேரேஜ் முடிஞ்சு ஃபர்ஸ்ட் நைட் ரூமுக்குள்ள போறதுக்கு இப்படித்தான் தூக்கி போவாங்களாம்.. ஐ மீன் ஹஸ்பெண்ட் வொய்ப்பை தூக்கிட்டு தான் பெட்ரூம் போகணும்” என்றவன் கூறி உதட்டை மடித்து சிரிக்க.. ஏற்கனவே கிடைத்த கேப்பில் எல்லாம் கிடா வெட்டும் இவனின் சாதுரியத்தை தெரிந்தவள் தானே… இப்போது தனியே அவனிடம் அதுவும் அவனது வீட்டில் மாட்டி இருக்கிறோமே என்று நெஞ்சம் பதைபதைக்க அவனிடம் இருந்து திமிறி விலக பார்க்க அவனோ வெடித்துச் சிரித்தான்.

 

 

 

மெல்ல அவளை அங்கிருந்த சோபாவில் அமர்த்தி அவளருகே அமர்ந்து.. “என் மேல அவ்வளவு தான் உன் நம்பிக்கையா மயூ பேபி?” என்றான் கூர்ந்த கண்களும் கூரிய வார்த்தைகளோடு..

 

 

அவளோ பதிலளிக்காமல் அந்த வீட்டையே பார்த்திருந்தால் விழிகளை மட்டும் சுழற்றியபடி..

 

 

அவளின் பதிலுக்காக் காத்திருக்கும் ஒவ்வொரு நொடியும் நீண்டதொரு பேரவஸ்தையுடன் நகர்வது போலிருந்தது ஆரனுக்கு. சிறிது நேரம் அவளிடமிருந்து எந்த ஒரு பதிலும் இல்லை!!

 

 

அவன் அவளையே பார்த்திருக்க.. அவளோ அவனை கண்டு கொள்ளாமல் வீட்டைப் பார்த்துக் கொண்டு மெதுவாக அங்கிருந்து ஒரு அறைக்குள் நுழைந்தாள்.

 

 

ஆனால் அவளுக்கு நம்பிக்கை இல்லாவிட்டால் இவ்வளவு தூரம் தன்னோடு வந்திருக்க மாட்டாள் என்று தெரியும் ஆரனுக்கு. அதனால் சிரிப்போடு அவளை உள்ளே போக விட்டவன் சில நொடிகள் கழித்து அவள் பின்னால் போனான். உள்ளே போன மயூரி அந்த அறையிலிருந்த போட்டோவை பார்த்து விழி விரித்தாள். 

 

 

சோபாவில் கன கம்பீரமாக சற்றே பெரிய மீசையோடு ஆரன் அமர்ந்திருக்க அவனது வலப்பக்கம் மயூரி அமர்ந்திருந்தாள் ஆரனின் தோளில் கைவைத்து சற்றே சாய்ந்து.. தத்ரூபமாக வரையப்பட்ட அந்த ஓவியத்தில் இருந்து கண்ணை எடுக்க முடியாமல் லயித்திருந்தாள் மயூரி.

 

 

 

அவள் பின்னால் நின்ற ஆரன் இயல்பாக அவளைப் பின்னாலிருந்து கட்டிப் பிடித்தான். அவளோ அவன் அணைப்பிலும் அந்த ஓவியத்தின் வனப்பிலும் கட்டுருந்தாள்.

 

 

அவன் கைகள் மெல்ல அவளை இறுக்கி, “எப்படி இருக்கு மயூ பேபி?” என்றான். அவளது தலை மட்டும் அசைய சிலை போல சமைந்திருந்தவளை சிறையெடுத்தான் கோமகன்.

 

 

 

அவளை அணைத்து கழுத்தில் வாசம் பிடித்தான். “என்ன ஒரு சுகம்.. இப்படி இறுக்கமா அணைவா உன்னோடு இருக்கிறப்ப” எனக் கொஞ்சலாக முனகினான்.

 

 

ரசித்தாலும் உடம்பை வளைத்துக் குறுகினாள். அவன் உடலின்‌ வெம்மையை உண்ரந்தவள் நெளிந்தாள் சங்கடமாக.. அவனோ

 

அவளை இறுக்கி அணைத்திருந்த அவன் கையை மெது மெதுவாக அழுத்தம் கொடுத்தான். அவள் நெளிய நெளிய.. இவன்‌ அணைப்பு 

 

இறுக இறுக.. அதன் பின் அப்படியே நின்றாள்.

 

 

அவளது காது மடலில் அவன் உதட்டை வைத்து அழுத்தி முத்தமிட்டான்.

 

 

“என் அழகு ராட்சசிடி நீ!!” என்று சிவந்து கனிந்த அவளது உதட்டில் மெல்லிய முத்தம் கொடுத்தான். அழகு புயலாக நிற்கும் அவளைப் பார்வையால் மேய்ந்தான் ஆரன்.

 

 

“இவ்வளவு அழகும் அந்த நிரஞ்சனுக்கு தானே மயூ பேபி? அப்படி தானே..” என்றதும் அழகிய அந்த இதமான சூழ்நிலை மீண்டும் 

 

கணமானதாக மாற..

 

 

 

கண்கள் கலங்கி அவனை நிமிர்ந்து பார்த்தவளது முகம் இன்னும் சிவந்தது கோபத்தில்.. விரக்தியில்.. அழுகையில்.. ஆனால் இப்போது அவள் இன்னும் அழகாய் தெரிந்தாள் ஆரன் கண்களுக்கு.

 

 

அவள் அழகை கண்கள் நிறைய அள்ளி பருகியவனின் ஆண்மை முறுக்கிக் கொள்.. இன்னும் இந்த சீண்டல் வேண்டும் என்பதாய் குதுகளித்தது ஆரனின் மனது.

 

 

தன் கை விளைவில் அவளை வைத்தவனின் உதடுகள் “ஏன் மயூ பேபி.. உன் கல்யாணத்துக்கு அப்புறம் நான் உனக்கு எக்ஸ்.. அவன் உனக்கு ஹஸ்.. நல்ல ரைமிங்ள.. அப்புறம்..” என்றவன் இன்னும் இன்னும் வார்த்தைகளால் அவளை ரணப்படுத்த..

 

 

“சொல்லாதிங்க ப்ளீஸ்!!! உங்க வார்த்தையால கொல்லாதிங்க ப்ளீஸ்!!” என்று வீடே அதிரும் படி கத்தினாள்.

 

 

“என்னால் அதை கற்பனை செய்து கூட பார்க்க முடியல. அப்படி ஒரு நிலைமை வந்தால் நான் உங்க பொண்டாட்டி ஆகுவேன் இல்லை மயூரி இந்திராக்ஷி தான் என்றும் இருப்பேனே ஒழிய கோழைத்தனமா இறக்க மாட்டேன்!!” என்றாள் நிமிர்வாக.

 

 

அவள் சொல்வதை கேட்டுக் கொண்டு ஆரன் அமைதியாக இருந்தான். இல்லையில்லை. வெளியே அமைதியாக உள்ளே ஆர்ப்பரிக்கும் கடலென மனதுடன் அல்லாடிக் கொண்டிருந்தான் ஆரன். அவன் காதல் கொண்ட மனதுக்கு தான் தெரியாமே, தன்னவள் எவ்வளவு நல்லவள் என்று.. எவ்வளவு தன் மீது காதல் கொண்டுள்ளாள் என்று!! ஆனால் விதி.. அவளை சிக்க வைத்து சிரிக்கிறது. அதை நினைத்தவன் அவளுக்காக உள்ளுக்குள் மறுகிக் கொண்டிருந்தான். வெளியே அசுரனாக மகிழ்ச்சி காட்டினான்.

 

 

 

“அப்போ நான் உன்‌ எக்ஸ் இல்ல.. ஹஸ்னு சொல்லுற.. ஹவ் அபொட்‌ வீ ஹாவ் செக்ஸ்?” என்ற‌ அசுரனின் வார்த்தைகளில் சுக்கு சுக்காக உடைந்தவள், அவனை தள்ளி விட்டு கண்ணீர் வழிந்த கன்னத்தை துடைத்து கொண்டு வெளியே ஓடினாள்.

 

 

 

அப்போது ஆரனை பார்க்க விஜயேந்திரன் வர, எதிர்கொண்டு ஓடும் பெண்ணை பார்த்து அவர்

 

திகைக்க..

 

 

மயூரியோ கலங்கிய கண்களோடு யாரையும் நிமிர்ந்து பாராமல் ஓடினாள்.

 

 

அசுரனிடமிருந்து தப்பிக்க அல்ல!!

 

தன் மனதிடமிருந்தே தப்பிக்க…

2 thoughts on “ஆசைகள் உன்னிடம் அசுரனே.. 17”

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Scroll to Top