ATM Tamil Romantic Novels

காதல் தேவதா 2

அத்தியாயம் 2

 

அன்று இரவு பண்ணையாரின் வீட்டிறக்கு செல்லாமல் நன்றாக படுத்து உறங்கினான் தர்மன் மறுநாள் காலை தான் எழுந்து கிளம்பி அவர் வீட்டிறக்கு சென்றான். 

 

“வா பா தர்மா உனக்கு ராத்திரி சேதி சொல்லி அனுப்புனா காலையில தான் வர நேரம் கிடைச்சிதோ” என்று அவனை பார்த்து பண்ணையாரின் மகன் சக்திவேல் கேட்டான்

“நான் ஒன்னும் உங்க வீட்டு நாய் இல்லை பண்ணையாரே நீங்க கூப்பிட்ட நேரத்துக்கு எல்லாம் ஓடி வர எனக்கு சோளி கிடக்கு என்ன விசயம்ன்னு சொல்லுங்க” என்று கேட்டான் தர்மன் தன் பின்னே கையை கட்டிக்கொண்டு நெஞ்சை நிமிர்த்தி கொண்டே ஏதோ சண்டைக்கு வந்தவனை போன்று. 

 

அவன் பேசியது கேட்டு சக்திவேலுக்கு கோபம் வந்தாலும் 

தனக்கு காரியம் ஆக வேண்டுமானால் அவனிடம் அடங்கி தான் போக வேண்டும் என்று நினைத்தான் “அது ஒன்னும் இல்லை தர்மா என் அக்கா மகள் நம்ம ஊர் திருவிழாவுக்கு பெங்களூர்ல இருந்து வரா அவளை போய் அழைச்சிட்டு வரனும் வயசுபுள்ளை உன்னைய தவிர வேற நம்பிக்கையான ஆளு யாரையும் தெரியலை நான் இன்னைக்கு ஒரு முக்கியமான வேலையா திருநெல்வேலி வர போறேன்” என்றான்.

 

“எனக்கு கழனில நிறைய வேலை இருக்கு பண்ணையாரே வேற யாரையாச்சும் அனுப்புங்க” என்றான் தர்மன். 

 

“தர்மா அதெல்லாம் உன் கழனிக்கு ஆள் அனுப்பி நான் பார்த்துக்கிடுதேன் நீ போய் செத்த கூட்டிட்டு வந்துரு” என்று கூற 

அவனும் வேறு வழியில்லாமல் ஒரு மனதாக சரி என்றான். 

 

ஏனெனில் சக்திவேல் அந்த ஊரில் பெரிய தனக்காரர் அங்கிருந்த ஏகப்பட்ட நிலங்கள் மற்றும் இடங்களுக்கு சொந்தக்காரர் அவ்வப்போது அவனுக்கும் சில நேரங்களில் உதவி செய்திருக்கிறார் அதனால் தர்மன் சம்மதம் கூறினான். 

 

“அப்போ கார் அனுப்புறேன் போய் கூட்டிட்டு வந்துரு சாய்ந்திரம் அஞ்சு மணிக்கு பிளைட்ல என் அக்கா மகள் வந்துருவா நீ இப்போ கிளம்புனா சரியா இருக்கும் ஏர்போர்ட் போய்ட்டு கூட்டிட்டு வந்துடு” என்றார் அவனும் சரி என தலையசைத்து விட்டு அங்கிருந்து கிளம்பினான். 

 

அங்கே நின்றிருந்த வேலையாட்கள் இருவர் “பண்ணையாருக்கு ஊர்ல என்ன வேற ஆளேவா கிடைக்காது இவன் கிட்ட போய் கெஞ்சிட்டு இருக்காரு” என்று ஒருவன் கேட்க

“டேய் தர்மனை பத்தி உனக்கு என்ன டா தெரியும் இப்போ வரைக்கும் ஒரு பொண்ணை கூட ஏறெடுத்து பார்த்தது கிடையாது சுத்த தங்கம் நம்ம ஊர்ல எல்லாம் தகரமால்ல இருக்கானுவ அதனால தான் பண்ணையாரு தர்மனை அனுப்புறாரு” என்றான். 

 

ஆமாம் தர்மன் உடலாலும் சரி உள்ளத்திலும் சரி இதுவரை எந்த பெண்ணையும் ஏறெடுத்து பார்க்கதவன் திருமணமே செய்ய வேண்டாம் இருப்பவன்… 

இன்னும் எத்தனை நாளுக்கு இப்படியே இருக்க முடியும் 

அவன் இத்தனை வருட தவ வாழ்க்கையையும் கலைக்க விமானம் ஏறி பயணம் செய்து ஒருத்தி வந்து கொண்டிருக்கிறாள் என்பதை இப்போது அவன் அறிந்திருக்க வாய்ப்பில்லை… 

 

பண்ணையார் சக்திவேலுக்கு ஒரே ஒரு அக்கா தேவி அவர் திருமணமாகி பெங்களூரில் செட்டில் ஆகி விட

அவரின் மகள் தான் பெங்களூரில் இருந்து இன்று வருகிறாள்

அவளை அழைக்க தான் தர்மன் கிளம்பினான். 

 

தர்மன் பண்ணையாரின் காரை எடுத்து கொண்டு கிளம்பியவன் மூன்று மணி நேர பயணத்திற்க்கு பின் விமான நிலையம் சென்றடைந்தான் சக்திவேலின் அக்கா மகளின் வரவிற்க்காக காத்திருப்போர் இடத்தில் காத்திருந்தான். 

 

அங்கே அவனுடன் இன்னும் சிலரும் தங்களின் உறவினர்களுக்காகவும் நண்பர்களுக்காகவும் காத்திருந்தனர். 

 

பெங்களூரில் இருந்து வந்த விமானம் தரையிறங்க நகரும் படிகட்டுகளில் பயணிகள் தங்கள் உடமைகளை எடுத்து கொண்டு ஒவ்வொருவராக வந்து கொண்டிருந்தனர். 

 

தர்மனுக்கு அப்போது தான் நினைவு வந்தது அவளை சிறுவயதில் பார்த்தது ஒரு புகைப்படத்தை கூட எடுத்து வராமல் வந்துவிட்டோமே என்று இப்போது எப்படி கண்டுபிடிப்பது என்று தெரியாமல் யோசித்து கொண்டே நின்றிருந்தான். 

 

அப்போது அங்கிருந்த அனைவரின் கண்களும் அங்கே வந்து கொண்டிருந்த ஒரு யுவதி ஒருத்தியின் மீது நிலைத்து இருந்தது. 

 

தர்மனும் எதார்த்தமாக திரும்பியவன் அப்போது தான் அங்கு வந்த பெண்ணை கவனித்தான் நல்ல பால் வண்ண நிறத்தில் கருப்பு நிற ஸ்லீவ்லெஸ் டாப் அணிந்து அதற்க்கு ஏற்றார் போன்று கருப்பில் கட்டம் போட்ட முட்டி அளவு மட்டுமே உள்ள பாவடை ஒன்றை அணிந்து காலிலி வெள்ளை நிற ஷூ உடன் 

தன் அரை அடி கூந்தலை விரித்து விட்டு தேவதையென வந்து கொண்டிருந்தாள் ஆராதனா. 

 

அங்கிருந்த அனைவரையும் காந்தம் போல் தன் பக்கம் சுண்டி இழுத்து கொண்டே நடந்து வந்து கொண்டிருந்தாள்  

சக்திவேலின் அக்கா மகள் ஆராதனா வயது 20 லண்டனில் உள்ள பிரபல கல்லூரியில் ஒன்றில் இளநிலை படிப்பை முடித்தவள் பெங்களூருக்கு வந்து ஒரு வாரம் தான் ஆகிறது ஊரில் திருவிழா இருந்ததால் அவளின் தாத்தா பாட்டி அவளை அழைக்கவே இங்கு வந்திருந்தாள் பதினைந்து வருடம் கழித்து இன்று தான் ஊருக்கு வருகிறாள் இங்கு ஒரு வாரம் இருந்துவிட்டு திருவிழா முடிந்தவுடன் மீண்டும் லண்டன் செல்ல போகிறாள் 

அவளின் பெற்றோரும் சகோதரம் மறுநாள் காரில் வர போகிறார்கள். 

 

தன் டிராலியை தள்ளி கொண்டே வந்தவள் தர்மன் பக்கத்தில் வந்து நிற்க ‘இவள் தான் அவளா’ என்று அவன் மனதில் நினைத்து கொண்டே இருக்கும் போதே அவள் கையில் இருந்த போனில் சக்திவேலுக்கு அழைத்து “மாமா இங்கே யாருமே இல்லை நீங்க சொன்ன ஆள் வந்தானா இல்லையா” என்று கேட்டாள் ஆராதனா.  

 

“தர்மன் வந்துருப்பானே ஆரு மா” என்றான் சக்திவேல் பதிலுக்கு 

“இங்கே யாரும் இல்லையே மாமா” என்று அவள் கூறிக்கொண்டு இருக்கும் போதே அவள் பக்கத்தில் வந்து நின்றான் தர்மன். 

 

ஆராதனா யார் என்று தன் பக்கத்தில் இருந்தவனை நிமிர்ந்து பார்த்தாள்

தர்மன் நல்ல உயரம் அவன் உயரத்துக்கு இவள் அவன் இடுப்பளவு மட்டுமே இருந்தாள்

காற்றில் அலை அலையாய் அசைந்து கொண்டே இருந்தது அவனது கேசங்கள் முறுக்கு மீசை கூர் நாசி கழுத்தில் தங்கத்தினால் ஆன பெரிய செயின் ஒன்றை அணிந்து இருந்தான் ஒரு கட்டம் போட்ட முழுக்கை சட்டை அணிந்து அதனை முழங்கை அளவு மடித்துவிட்டு கையில் தங்க காப்பு பார்க்க மைனர் போன்று இருந்தான்

சட்டையின் மேல் இரண்டு பட்டன்கள் கழண்டு இருக்க அவன் திரண்ட மார்பு என்னை பார் என் அழகை பார் என பல்லை காட்டி கொண்டு இருந்தது அதை பார்த்தவளுக்கு ஒரு மாதிரி இருக்க முகத்தை திருப்பி கொண்டாள். 

 

அவனை கண் இமைக்காமல் பார்த்து கொண்டே இருந்த ஆராதனா முன் சொடக்கிட்ட தர்மன் 

“நீ ஆராதனா தான புள்ளை சக்திவேல் பண்ணை அக்கா முள் தான” என்று கேட்டான் தர்மன். 

 

“ஒரு நிமிஷம் மாமா” என்று ஆராதனா போனில் கூறிவிட்டு 

“ஆமாம் நீங்க” என்று கேட்க 

“நான் தர்மன் உன்னை கூட்டிட்டு போக வந்தேன் புள்ளை உங்க மாமா அனுப்பி வச்சாரு” என்றான். 

 

“மாமா நீங்க அனுப்புன ஆளை பார்த்துட்டேன் ஓகே பாய்” என்று கூறிவிட்டு அழைப்பை துண்டித்தாள் ஆராதனா. 

 

தர்மன் முன்னே செல்ல அவன் பின்னே நடந்து சென்றாள் ஆராதனா, 

அங்கிருந்து அனைத்து ஆடவர்களின் பார்வையும் அவள் மீது நிலைத்து இருக்க அவன் ஒருவன் மட்டும் அவளை திரும்பி கூட பார்க்காமல் நடந்து சென்றான் வெளியே வந்தவன் நேரே காரில் ஏறி டிரைவர் சீட்டில் அமர்ந்து கொண்டான். 

 

ஆராதனா அவன் பின்னே வந்து காரின் கண்ணாடியை தட்டியவள் “ஹலோ பீம் பாய் லக்கேஜ் எல்லாம் யார் எடுத்து வைப்பா வந்து எடுத்து வை” என்றாள். 

 

தர்மன் அவளை முறைத்து பார்த்தவன் எதுவும் பேசாமல் காரில் இருந்து கீழே இறங்கி அவளின் உடமைகளை காரில் எடுத்து வந்து வைத்தான் டிரைவர் சீட்டில் அமர்ந்து கொண்டான். 

 

அவன் பக்கத்தில் ஆராதனாவும் ஏறி அமர்ந்து கொண்டாள். 

 

தர்மன் காரை ஸ்டார்ட் செய்து ஓட்டிக்கொண்டே இருக்க 

ஆராதனா தன் போனை நொண்டி கொண்டிருந்தாள் அதுவும் சிறிது நேரத்தில் சலித்து விட என்ன செய்வது என்று தெரியாமல் 

அங்கிருந்த ஸ்பீக்கரில் தன் மொபைலை இணைத்து பாட்டை ஓடவிட்டாள். 

 

ஸ்பீக்கரில் இருந்து பாட்டு ஒலிக்க ஆரம்பித்தது “ஸ்டைலீஷ் தமிழச்சி இள நெஞ்சுக்குள்ள இங்கிலீஷ் தமிழ் கட்சி என் தேகத்துல ஸ்பானிஷ் நிறமச்சி

தேன் தித்திக்கின்ற வைனிஷ் இதழச்சி” என்று பாடல் சத்தமாக ஓடிக் கொண்டே இருக்க அதற்க்கு ஏற்றார் போன்று ஆராதனாவும் கைகளை அசைத்து கொண்டும் தலையை ஆட்டி கொண்டும் வந்தாள். 

 

தர்மனுக்கு அந்த பாடலை கேட்டு ஏதோ காது வலிப்பதை போன்ற உணர்வு ஒரே இரைச்சல் இருக்க ஒரு கட்டத்திற்கு மேல் அந்த சத்தம் தாங்க முடியாமல் பாடலை நிறுத்தினான். 

 

ஆராதனா திடீரென பாடல் நின்று போனதை உணர்ந்து கண்களை திறந்தவள் “எதுக்கு பீம் பாய் பாட்டை ஆஃப் பண்ணின” என்று அவனை பார்த்து முறைத்து கொண்டே கேட்டாள் தர்மன் எதுவும் கூறாமல் காரை ஓட்டிக் கொண்டே இருந்தான். 

 

ஆராதனா மீண்டும் அந்த ஸ்பீக்கரை உயிரப்பித்து இன்னும் சத்தமாக பாடலை வைத்தாள் தர்மனுக்கு கோபம் தலைக்கு ஏறியது ஆத்திரம் தாளாமல் ஸ்பீக்கரை ஆஃப் செய்து அதை ஓரமாக எடுத்து வைத்தான். 

 

அவன் செயலில் கோபமடைந்த ஆராதனா தர்மனின் அருகில் நெருங்கி வந்து அந்த ஸ்பீக்கரை எடுக்க போக அவள் உடலின் முன்னெழில்கள் மொத்தமும் அவன் இடது கையில் பசக்கென ஒட்டி உரச 

அதை பொறுக்க முடியாமல் தர்மன் அந்த ஸ்பீக்கரை தூக்கி வெளியில் விட்டு எறிந்தான். 

 

தர்மன் கோபத்துடன் காரை ஓரம் கட்டியவன் “ஏய் அறிவுயில்லை வயசு பொண்ணு தான நீ அடக்கமா இருக்க தெரியாது இன்னொரு ஆம்பள பக்கத்துல வந்து ஒட்டி உரசிட்டு இருக்கியே வெட்கமா இல்லை நீயும் உன் உடுப்பும்” என்று கூறியவன் அவளின் அங்கங்களில் மேல் இருந்து கீழ் வரை பார்வையை ஓடவிட்டான் 

அவள் அணிந்திருந்த ஸ்லீவ்லஸ் டாப் காரின் வேகத்துக்கு நன்றாக கீழ் இறங்கி அபாயகரமான பள்ளத்தாக்கு அவன் கண்ணுக்கு படம் காட்டி கொண்டிருந்தது இடை அளவு மட்டுமே இருந்த அந்த டாப் வேறு இடைக்கு சற்று மேலே ஏறி இருக்க வெண்ணிற இடையில் அவள் அணிந்து இருந்த தங்க இடுப்பு செயின் கூட வெளியில் தொங்கி கொண்டிருந்தது. 

 

ஆராதனா அவன் பார்வையை கவனித்துவிட்டு தன்னை ஒரு முறை குனிந்து பார்த்தவள் தன் உடையை அவசர அவசரமாக சரி செய்தாள் “ஹலோ மிஸ்டர் உன் பார்வை தான் தப்பா இருக்கு இதுக்கு மேல உன் பார்வை எல்லை மீறிச்சு நான் சும்மா இருக்க மாட்டேன்” என்று அவன் முன் விரல் நீட்டி அவனை எச்சரித்தாள். 

 

“ஓஹோ உன் பக்கத்துல வந்து நின்னப்போ நீ மட்டும் என்னை மேலிருந்து கீழ் வரை பார்க்கலை” என்று தர்மன் கூறினான். 

 

அவன் கூறியதை கேட்ட ஆராதனா ஒரு கணம் தடுமாறியவள் ‘எப்படி கண்டுபிடிச்சான்’ என்று மனதில் நினைத்தவள் “நான் சும்மா பக்கத்துல யார் இருக்காங்கன்னு பார்த்தேன் அவ்வளவு தான்” என்றாள் தடுமாறி கொண்டே. 

 

அதன் பின் தன் பக்கத்தில் இருந்த ஷர்ட் ஒன்றை மேலே போட்டு கொண்டாள் “ஓகே நான் பார்த்ததுக்கும் நீ பார்த்ததுக்கும் சரியா போச்சு காரை ஸ்டார்ட் பண்ணு” என்றாள் ஆராதனா. 

 

அதன் பின் தர்மன் எதுவும் பேசாமல் காரை ஸ்டார் செய்து ஓட்ட ஆரம்பித்தான். 

 

 

தொடரும்… 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

2 thoughts on “காதல் தேவதா 2”

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Scroll to Top