2
அமைதியான இரவில் ஆர்ப்பரிக்கும் அந்த அலை கடலோசையின்பேரிரைச்சலைப் போல்…அவன் ஆழ் மனதிலும் பல எண்ண அலைகள் எழுந்து ஆழிப்பேரலையாக அவனை வாரி சுருட்டிட… உடல் இறுகி நின்றவன்உள்ளமும் இறுகி போனான்…
அத்தனை தொழில்களிலும் கொடி கட்டி பறக்கும் சக்கரவர்த்தி குடும்பத்தின் முதல் வாரிசு தி கிரேட்பத்ரிநாத்சக்ரவர்த்தியின் கொள்ளு பேரன் பத்ரி… அது மட்டுமா அவன் அடையாளம் இல்லை…
வட இந்தியா முழுவதும் ராக் ஸ்டார் பத்ரி என்றால் தெரியாதவர்களே இருக்க முடியாது… பருவ குமரி முதல் பல்லு செட் போட்ட பியூட்டி வரை அத்தனை அத்தனை
ரசிகர்களை சம்பாதித்து இருக்கிறான்…அத்தனையும் அவன் நடிப்பு திறமையால் என்றால் அது மிகையல்ல…
நெப்போடீஸம்ஃபேவரடீஸம் போன்ற அதி முக்கிய கிரிடீஸீசம் எல்லாவற்றையும் தன் நடிப்பால்துவம்சம் செய்து விட்டு பாலிவூட்டில் முன்னணி நட்சத்திரமாக வலம் வருகிறான்…அது மட்டுமல்ல சக்கரவர்த்தி ப்ரொடக்ஷன்ஹவுஸ் என்றபெயரில்படத் தயாரிப்பு நிறுவனம் ஒன்றையும் நடத்தி வருகிறான்… அதில் அவன் சொல்லும் நபரேபாலிவுட்டின்அடுத்த சூப்பர்ஸ்டார் ஆவர்… அவன் நினைத்தால் கண்ணாடி கல்லையும் நட்சத்திரமாகஜொலிக்க வைக்க முடியும்… வைரக் கல்லையும் கூழாங்கல்லாக மாற்றி, தூக்கி வீச முடியும்… அப்படி பட்டவன் பின்னால் இவர்கள் சுற்றுவது ஒன்றும் வியப்பாக இல்லை…
பெயரும்புகழும் வந்து விட்டால் இயல்பான குணம் குன்றிஆணவமும்செருக்கும்கூடவே வந்து விடுமா…?? ஆம் என்பது போல் தான் பத்ரியின் தற்போதைய நிலை …
தெவிட்டாத போதை,ஊற்றி கொடுக்கும் நண்பர்கள்,வளைய வரும் அழகிகள், குவிந்து கிடக்கும் செல்வம்,என தடமாறியது அவன்வாழ்க்கை…
எடுத்து சொல்ல யாருமில்லை என்பதை விட, யார் எடுத்து சொன்னாலும் ஏற்க்கும் மனநிலையில் அவன் இல்லை என்பதே மெய்… தட்டிக் கேட்ட பெற்றவர்களை தடுத்துவிட்டான்… கண்டிக்க வந்த பெரியர்வர்களைகண்டுக்காது போனான்… அறிவுரை சொன்னவர்களை அறவே வெறுத்தான்… மொத்தத்தில் யாருக்கும் அடங்காத காளையவன்…
பாலகன் பத்ரி மறைந்து போய், தான் தோன்றி தனமாக மாறி இருந்தவன் இப்போது முற்று முழுவதிலுமாக அரக்கனாக உங்கள் முன்… இவன் இரக்கத்திற்கு இலக்கணம் கேட்பவன்…
அதே சமையம் அழகான அரக்கனாக மாறி இருந்தான்…
கண்ணோரம் சிரிக்கும் குறும்பு கண்ணன் மறைந்து, இந்திரன் தோற்றத்தில் பரிணாம வளர்ச்சி அடைந்து இருந்தான்…
கண்களே கூர்மையாய், பார்வையே கத்தியாய், சிங்கத்தின் பிடரியே கேசமாய், ஈட்டியேநாசியாய், குட்டி புதர்களேகுறுந்தாடியாக வைத்து கொண்டு, கவ்வி பிடித்த சட்டையில்கட்டுடல்கட்சிதமாய் அதில் முன்பு அவிழ்த்து விடப்பட்ட இரட்டைபொத்தான் இடைவெளியில் திரண்டு தினவு எடுத்த மார்புடன்பெண்களே சொக்கி, சோஹாட்…!! என சொல்லும் வண்ணம் ஆண் அழகனாக உரு மாறி இருந்தான்…
ஒன்றன் பின் ஒன்றாக அடித்துச் செல்லும் அந்த அலைகளை போல பத்ரியின் உள்ளத்திலும் எண்ண அலைகள் அடித்த சென்றன… ரோஹித் சொல்லி சென்ற வார்த்தைகளால்ஏற்பட்டவை அவை; என்னதான் அவன் அதை வெளியே காட்டிக் கொள்ளாவிட்டாலும் அவன் மனதில் உள்ள சில ரணங்களை அது கீறி விட்டு இருந்தது என்பதும் உண்மையே…
ரணங்கள் தந்த வலியை விட அதை உருவாக்கிய உருவத்தின் பிம்பம் இன்னும் நீங்காது அவன் மனதில் பசுமையாக இருந்தது தான்… அவனை முழு மிருகமாக மாற்றி விட்டு இருந்தது…ஏமாற்றம் தந்த வலி பெரிதல்லவா..?
அடிபட்ட வேங்கை என உள்ளே துடித்து கொண்டு இருந்தான்… அவனை மற்றவர்கள் சாதாரணமாக பார்த்த போதிலும், ஏனோ அவனுக்கு அதில் ஏளனம் இருப்பதாக தோன்ற… சீற்றம் கொண்டான்எதிரில் எவர் வந்தாலும் அடித்து புசிக்கும் மூர்க்கம் குடி கொண்டது. இப்போது அவன் கண்ணில் தெரிந்தது எல்லாம் கோபம்…! கோபம்…! கோபம் மட்டுமே…!
அவனுள் தணலெனதகித்தது கோபத்தீ… அதை மது அணைக்கும் என்று நினைத்தானோ என்னவோ, முழு பாட்டிலைமடமட வென்று குடித்து பார்த்தான்… ம்ம்ஹூம் எரியும் தீயில் பெட்ரோல் ஊற்றியகதையாகியது… உள்ளே கோபத்தீ ஜுவாலையாக கொழுந்து விட்டு எரிந்தது…
தன்னருகில்அவனுக்காகவே காத்து கிடந்த, எதிலும் தாராளம் என்னும் மனப்பான்மை உள்ள பெண்ணின் இடையை வளைத்து, வலிக்க பற்றி தன்னோடு இறுக்கிக்கொள்ள… அவனுக்காகவே காத்து இருந்தவள் போல் அவனோடு ஒன்றி கொண்டாள் அந்த சிற்றிடை கொண்ட அழகி… அவ்வளவு போதையிலும் அவன் பிடி இரும்பாக இறுக்க வலியில் முகம் சுழித்தாள்…
“ஸ்ஸ் வலிக்குதுடார்லிங்…!!” என ஸ்ருங்கார குரலில் கூறியவளை, தன் சீறும் பார்வையில் “வலித்தால் தாங்கிக்கொள்” என அடக்கியவன், மீண்டும் அவள் இடையை வலிக்க வலிக்க பற்ற அதில் அவள் தன் உதட்டை கடித்து வலியை அடக்க முயன்றாள், இருந்தும் அவள் கண்களில் நீர்துளிர்ப்பதை அவளால் தடுக்க முடியவில்லை…
அவளுக்கு அந்த வலியை காட்டிலும் பத்ரியால் நாளை வரப் போகும் பணம்,பெயர், புகழ் முக்கியம் என்பதால் அவன் இரும்பு பிடியில் ஊமையாக அடங்கி போனாள் வேறு வழி இன்றி… அன்றைய இரவு அவளுடன் தன் உடல் வெம்மையையும், மனபுழுக்கதையும் தீர்த்து கொள்ள முடிவு செய்துவிட்டான்…
பத்ரியின் கைப்பிடியில் அடங்கி இருக்கும் பெண் பாவையை அழைத்து கொண்டு, வாகனம் நோக்கி நடக்க அவர்கள் பின்னால் இருந்து ஒரு பெண் குரல் சினந்துபெருத்த ஒலித்தன…
“ஹே கேர்ள்! டோன்ட்டச்ஹிம். ஹீஇஸ் மை மேன்…!!” என வந்தவள்லீனாகான்… திரை உலகில் வளர்ந்து வரும் நாயகிகளில் ஒருத்தி… அவள் வளர்ச்சிக்கு மிகவும் முக்கியமான காரணம்… அவள் பத்ரியின் தற்போதைய கேர்ள் ஃப்ரெண்ட் என்கிற பதவி என்றால் அது மிகை அல்ல… பத்ரி காதலி என்றே அவளுக்கு வந்து குவியும்வாய்ப்புகள் ஏராளம்… அதன் மூலம் அவள் ஈட்டுவது பல கோடிகள்ஆயிற்றே, அப்படி இருக்க அவள் இடத்தை எப்படி மற்றொருத்திக்கு விட்டுக் கொடுப்பாள்…
பத்ரி அந்த புது பட நாயகியைஅணைத்ததுமே ஓடிவந்து விட்டாள்… வந்தவள் பிடித்து தள்ளாத குறையாக அந்த அழகியைபத்ரியிடம் இருந்து விலக்கியவள், அவள் இருந்த இடத்தில் இவள் பிடிவாதமாக தன்னை நுழைத்து கொண்டு…
“இது தான் உனக்கு கடைசி… இன்னொரு முறை பத்ரி கிட்ட நெருங்க பார்த்த உன் கரீயரைஅழிச்சிஒன்னும்இல்லாதவளாஆக்கிடுவேன் ஜாக்கிரதை…??” என மிரட்டி விரட்டி விட்டு, பத்ரி தோளோடுதொற்றிக்கொண்டவள் … “பேபிஇ நீங்க ரொம்ப மோசம், நான்இருக்கும்போதேஇன்னொருத்திய தேடலாமா? கேட்டாதருவேனே தாராளமா…!!” என அவள் உடல் அங்கம் அப்பட்டமாக அவன் மீது உரசி படு கிளர்ச்சியாய் பேசினாள் லீனா…
தன்னுடன் ஒட்டுண்ணியாய் ஒற்றி கொண்டு இருந்தவளைஉதாசினமாகஉதறித்தள்ளியவன்… அவள் கழுத்தை இறுக பற்றியவன்…
“இங்க பாரு யார் கூட படுக்கணும்,கூடாதுங்கிறத நான் தான் முடிவு பண்ணனும் … நீ என் அடிமை .. ஒரு அடிமை முதலாளிக்கு சொல்ல கூடாது புரிஞ்சிதா… அண்ட் ஒன் மோர் ஐ அம்நாட்எனிவொன்பிலாங்கிங்ஸ்சம்ஜே…!!” (iam not anyone belongings) என அவ்வளவு போதையிலும் தெளிவாக மிரட்டுபவனைக் கண்டு அவள் கண்கள் ரசனைக்குள்ளாக்கீற்று…
அவள் கழுத்து வளைவு அவன் கைப்பிடிக்குள் இருந்த போதிலும்…
“ம்ம் இந்த திமிர் தான் மேன்உன்கிட்ட எனக்கு ரொம்ப பிடிச்சது… நான் கண் அசைச்சாலே என் கால்ல விழ பல ஆம்பளைங்க காத்து கிடக்கும் போது… என்னை உதாசீனம் படுத்துற உன் திமிர்சான்ஸே இல்லை அட்எனிகாஸ்ட் ஐ மேக்யுமைன்ஒன்டே… என திமிராக சொல்ல…
பிடித்து இருந்த அவள் கழுத்தை முன்னால் இழுத்து முகத்தருக்கே கொண்டு வந்தவன் அவள் காதுகளில் “அந்த நாள் உன் வாழ்வில் வராது” என்க…
குரல் வளை நெறித்த போதிலும் ஐ **** யு என அவன் காதை உரசி உதட்டை அசைக்க…
“ஐ கில்யு..?”என்றபடிபத்ரிஅவள் கழுத்தை தூக்கி பிடிக்க …
வலிக்க பிடித்த அவன் கையை தடுத்தவள் “எஸ்கில்மீ ,தினமும் கட்டில் மேல் நீ காட்டும் சாகசத்தால் செத்து பிழைக்க நான் காத்து இருக்கிறேன்..!” என குழைவாக சொன்னவள் அவள் கழுத்தை பிடித்து இருந்த பத்ரியின் கையை பிடித்து அவன் உள்ளங்கையில்முத்தமிட்டவள்
, அதை விடாமல் தன் கன்னத்தோடு சேர்த்து பிடித்து கொள்ள…
Then it is my responsibility to show you hell(அப்போ உனக்கு நரகத்தை காட்ட வேண்டியது என் பொறுப்பு)என்று தன் கைவளைவுக்குள் சிறைப் பிடித்தபடி இழுத்து சென்றான் பத்ரி… அவர்கள் வெளியே வந்ததும்…
பளீச் என்று தொடர் மின்னல் ஒளி அவர்கள் இருவரின் மேலும் மோதின….
அவர்களை போல் மேல் தட்டு வர்க்கத்துக்கு இது மிக சாதாரணம் தான், ஆனால் இதை பெரிது படுத்திடிஆர்பி ஏற்றி கொள்ள துடிக்கும்மீடியாவிற்கு இது மிக பெரிய தீனி.. அதுவும் அவன் மிகப் பெரிய குடும்பத்தின் வாரிசு மற்றும் பாலிவுட்திரைஉலகையே தன் கை விரலால் ஆட்டிப் படைக்கும் சாம்ராட் அவன்…
அவனை பற்றிய கிசுகிசு என்றால் பல கோடியை தாண்டுமே… அப்படி இருக்க கிடைக்கும் கலாக்காய் பெரிது அன்றோ…
அவன் போகும் இடம் எங்கும் கழுகுகளாகவட்டமிட்டு வந்தனர்.. இன்றும் அவ்வாறே வந்த இரண்டு பத்திரிக்கையாளர்களை அவனின் நிழல் படைதடுத்து அவர்களின் கேமராக்களை சில்லுச் சில்லாக உடைத்தெறிந்து அவர்களின் கைகால்களை முறித்து அனுப்பினர்…
அதுவே நாளைய தலைப்பு செய்தியாக மாறி அவன் வாழ்க்கையையே புரட்டி போடும் என்று பத்ரி சிறிதும் எதிர்பார்த்து இருக்க மாட்டான்…
ப்ளீஸ் கமெண்ட் abt ஸ்டோரி
super sis
😍😍நன்றி சகிமா
Ваш аэроклуб: прыжки с парашютом для всех желающих
прыжок с парашютом досааф [url=https://pryzhki-s-parashyutom-v-spb.ru/]https://pryzhki-s-parashyutom-v-spb.ru/[/url] .
Super sema super super super super super super super super super super 💖💖💖💖
நன்றி நன்றி மா ❤️❤️❤️