ATM Tamil Romantic Novels

தீயை தீண்டாதே தென்றலே -3

  வெறிக்கொண்ட மிருகத்தை போல் ஒரு பெண்ணை கையாண்டான் அந்த அரக்கன்… அவன் கொண்ட போதை வஸ்த்துவோ அவனுள் எஞ்சி இருந்த மனிதத்தையும் கொன்று இரத்தம் புசிக்கும் மிருகமாக மாற்றி இருந்தது… பிறர் வலியில் இன்பம் காணும் கயமை குணம் கொண்ட அந்த கொடூரனின் பிடியில் சிக்கிய லீனா நிலையோ சொல்லில் வடித்து விட முடியாது இந்த கொடுமைக்கு மரணமே மேல் என அந்த அவலையின் உள்ளம் கெஞ்சியது… 

 விடியா இரவின் இருளை விரட்டி கொண்டு கிழக்கே உதிக்கலானான் ஆதவன்… ஒரு பக்கம் பத்ரி போதையில் மயங்கி விழவும் மறுபக்கம் உடல் முழுக்க ரத்தக் காயங்களுடன் இருந்த லீனா கான் தேகம் வெளிற உள்ளம் பதற வைத்து அவளின் உடலை விட்டு உயிர் பிரியவும் சரியாக இருந்தது…  

*******

தன் முன்னால் பரத்தி வைக்கப்பட்டு இருந்த வண்ண புகைப்படங்களை தான் ஆழ்ந்து பார்த்தப்படி இருந்தான் ஆதிரன்… 

 ஒன்றில் மது அருந்தியப்படி, ஒன்றில் பெண்களோடு சல்லாபித்தபடி, மற்றொன்றில் போதை வஸ்துவை நுகர்ந்த படி, மற்றொன்றில் யாரையோக் கோபமாக அடிப்பது போல் என பத்ரியின் அத்தனை வண்டவாளங்களை எல்லாம் புட்டு புட்டு வைக்கும் புகைப் படங்கள் அவை… வயதை மீறிய மூப்பு அவன் முகத்தில் காரணம் பத்ரியை பற்றிய கவலை தான் என்பதை சொல்லாமல் சொன்னது…  

எத்தனை அருமையாய் வளர்த்த மகன் அவன்…??அவன் படித்த படிப்பு என்ன…?அவன் குணம் என்ன…??வீட்டில் இருக்கும் அத்தனை பேரின் செல்லப் பிள்ளை அவன்…?? அவனா இப்படி..?என தன் கண் முன்னால் இருந்த புகைப்படங்களில் காண்பிக்கும் எதையும் நம்ப மறுத்தன ஆதிரனின் உள்ளம்… 

“எந்த இடத்தில் தவற விட்டேன்…என் பிள்ளையை…!!” என தந்தையாக அவன் உள்ளம் மறுகியது…  

பட்ட படிப்புக்கு வெளிநாடு செல்ல வேண்டும் என்றான்…? சம்மதித்தேன்…!படிப்பு முடிந்து தொழிலை பார்க்கிறாயா ..?? என்று கேட்க… வேண்டாம் நடிக்க போகிறேன் அதுவே என் கனவு, இலட்சியம் என்றான்…!! அனுமதித்தேன்… வாய்ப்புக்காக அவன் பிறரிடம் கை கட்டி நிற்க கூடாது என்பதற்காகவே சினிமா தயாரிப்பு நிறுவனம் ஒன்றை உருவாக்கி கொடுத்தேன்…இப்படி அவன் எது வேண்டும் என்றாலும் அவன் கேட்கும் முன்பாகவே அத்தனையும் நிறைவேற்றி கொடுத்தது தான் அவன் இப்படி சீரழிந்து கெட்டொழிந்து போக காரணமோ..? என காலம் கடந்து யோசித்தான்… 

தீவிர சிந்தனைக்கு பின்பு “எது எப்படியோ நடந்து முடிந்த ஒன்றை மாற்ற முடியாது ஆனால் இனி நடக்கவிருப்பதை மாற்ற முடியும்… மாற்றி தான் ஆக வேண்டும்…!!”என தீர்மானத்திற்கு வந்தவன்… 

தன் முன்னால் போட பட்டிருக்கும் புகைபடங்களுக்கான விலையை பேசினான்… வெறும் நிழல் படத்திற்கான விலை மட்டுமல்ல தன் மகனின் எதிர்கால வாழ்விற்கும், பாரம்பரியமாக அவர்கள் கட்டி காத்து வைத்து இருக்கும் அவர்கள் குடும்ப கௌரவத்திற்காகவும் தான்… மேலும் இந்த புகைப்படம் வெளியானால் இதனால் பாதிக்க படப் போவது அவனின் ஆரூயிர் மனைவியான அனு அல்லவா… ஏற்கனவே பத்ரியின் மாற்றத்தால் பெரிதும் பாதிக்கப் பட்டு இருப்பவள் இதை எல்லாம் அறிந்தால் உயிரையே விட்டு விடுவாளே… ஆகையால் சராசரியான மகன்களை பெற்ற தந்தையை போல் மகன் செய்த தவறுகளை தட்டி கேட்காமல் மூடி மறைக்க முடிவு செய்து விட்டான் ஆதிரன்… 

அவனின் இந்த முடிவு எந்த மாதிரியான பின்விளைவுகளை ஏற்படுத்தும் என்பதை அறியாமல் உண்மையை மூடி மறைத்து வைத்தான்… அது வெறும் தற்காலிகம் என்பதையோ அல்லது மூடி வைத்த உண்மை ஒருநாள் வெடித்து வெளி வரும் என்பதையோ அவன் அறிந்து இருக்க மாட்டான்…அதனால் முன்னிலும் நிலைமை மோசமாக கூடும் என்பதை அறிந்து இருந்தால்…?? தடுத்து இருப்பானோ..!! வாய்ப்பில்லை இராசா விதி வெல்கம் டான்ஸ் போட்டு, வச்சு செய்ய வெயிட்டிங் அது கிட்ட இருந்து தப்பிக்க பிரேக் டான்ஸ் போட்டாலும் முடியாது ஏன்னா விதி வலியது…!!

அன்று ஹோலி… ஹோலிகா என்னும் அரக்கியை பகவான் தீயிலிட்டு எரித்த நாள் அதை வட மாநிலம் முழுவதும் வண்ணமயமாக கொண்டாடப் பட்டு வருகிறது… 

அன்றைய விடியல் ஒவ்வொருவர் வாழ்விலும் ஒவ்வொரு விதமாக விடிந்தது… 

கௌரி சக்கரவர்த்தி இறந்த பின்பு சக்கரவர்த்தி இல்லத்தில் எந்த நிகழ்ச்சியையும் பெரிதாக கொண்டாடுவது இல்லை… வளர்ச்சிக்காக பிள்ளைகள் வீட்டை விட்டு வெளியேறிய பின் அது பொலிவு இழந்து போய் விட்டது எனவே யாரும் எந்த ஒரு விசேஷத்தையும் பெரிதாக கொண்டாடுவது இல்லை… 

ஆனால் இந்த முறை ஹோலியை தங்களோடு வந்து கொண்டாடும் படி காதம்பரியன் செல்ல கிளிகள் வருந்தி அழைத்ததை மறுக்க அங்கு எவருக்கும் மனம் வரவில்லை எனவே மூத்த தலைமுறையினரை விடுத்து மற்றவர்கள் சென்றனர்…

 

மாறி வரும் காலத்திற்கு ஏற்ப அதிநவீனமாக மாறி இருந்தது அந்த பிருந்தாவனம் அப்பார்ட்மெண்ட்…

 

 அன்று மகிழ்ச்சியின் நிறம் அன்பின் நிறம் காதலின் நிறம் நட்பின் நிறம் என அனைத்து நிறங்களையும் ஒருங்கிணைத்து அனைவரது வாழ்க்கையையும் வண்ண மயமாக்கும் வண்ண பொடிகளை தங்களுக்கு பிடித்தமானவர்கள் மீது தூவி விளையாடி கொண்டு இருந்தனர்… 

 

 அந்த அப்பார்ட்மெண்டில் உள்ள அனைவரும் ஒன்று கூடி விசேஷமாகக் கொண்டாடி வந்தனர் அதில் அர்ஜுன் மற்றும் காதம்பரி தம்பதிகளின் இரட்டை பெண் மகள்களான ஆர்த்தி மற்றும் அதிதி.. வெள்ளை நிற உடையில் வான்தேவதைகளையும் தோற்கடிக்கும் வண்ணம் அத்தனை அழகாக பெண்பொம்மைகள் என கையில் வண்ணங்களுடன் நின்றிருந்தனர்…

 

 அவர்களுடன் அன்றைய கொண்டாட்டத்தில் கலந்து கொள்ளவென்றே சக்கரவர்த்தி குடும்பமும் வந்து சேர்ந்தனர்… 

 

ஆரன் மற்றும் மியாவின் மகன் அபினவ் உடன் வந்திருக்க… அகில் மற்றும் ஆருத்ராவும் தங்களைப் பற்றி பலர் புறம் பேசுவது பிடிக்காமல்.. பெற்றோரால் கைவிடப் பட்ட குழந்தையான பைரவியை அழைத்துக் கொண்டு வெளிநாட்டில் உள்ள அவர்களின் தொழிலை கவனிக்க குடும்பமாக சென்று விட்டனர்.. எனவே அவர்களால் இதில் பங்கு பெற முடியவில்லை..

 

 

ஆதிரன் மற்றும் அனுவும் தங்கள் அன்பு மகள் டாக்டர்.நக்ஷத்திராவுடன் வந்திருந்தனர்…

 அனைவரும் ஒன்று கூடி கசப்புகளை மறந்து மகிழ்ச்சியில் மூழ்கிய தருணம் அது அந்த கடவுளுக்கும் பொறுக்க வில்லையோ அதை கெடுக்க வென்றே வந்தது அந்த செய்தி… 

வெளியே கேளிக்கைக்காக போட பட்டு இருந்த எல் ஈ டி திரையில் பிரபலமான நியூஸ் சேனலின் செய்தி பரப்பரப்பாக ஒளிப்பரப்பாகி கொண்டு இருந்தது…

 

அவை… 

 

பிரபல திரைத்துறை நடிகையான மிஸ் லீனாகான் நேற்று இரவு இறந்த நிலையில் இன்று காலை அவரது உடலை போலிஸாரால் கண்டு எடுக்கப்பட்டுள்ளது… இந்த நிகழ்வு மக்களிடையே பெரும் அதிர்ச்சியை உண்டாக்கிய நிலையில்… போலீஸார் லீனா கான் கொல்லப்பட்டதை பிரேத பரிசோதனை மூலம் உறுதி செய்ததை அடுத்து அவரது கொலை வழக்கை விசாரித்து வந்த நிலையில்… அவர்களுக்கு கிடைத்த முதல் தகவலின் படி மிஸ் லீனா கான் நேற்று கடற்கரையில் நடந்த பார்ட்டியில் அவர் கலந்து கொண்டதாகவும் அதன் பின் அவரது ஆண் நண்பரான ராக் ஸ்டார் மற்றும் சக்கரவர்த்தி குடும்பத்தின் வாரிசான திரு பத்ரிநாத் சக்கரவர்த்தியுடன் இறுதியாக சென்றதை பார்த்த சாட்சிகள் கூறு கின்றனர்… அது மட்டுமல்லாமல் நேற்று இரவு திரு பத்ரிசக்ரவர்த்தி கடற்கரை சாலையில் கார்பந்தயத்தில் ஈடுபட்டு பொது மக்களுக்கு பெரும் இடையூறாக விளைவித்ததாக கூற படுகின்றது அது மட்டுமின்றி அவர் பெரும் போதையில் இருந்ததாகவும் அதனால் அவர் வரம்பை மீறி நடந்துக் கொண்டதாகவும் கூறப் படுகிறது… அதை சில நிருபர்கள் படம் பிடிக்க முயன்றதாகவும் அதனை அவரின் மெய்காப்பாளர்கள் தடுத்ததாகவும் இதில் இரு தரப்புக்கும் மோதல் ஏற்பட்டு நிரூபர்களின் கேமிராக்களை பத்ரியின் மெய்காப்பாளர்கள் உடைத்து விட்டதாகவும் கூறப் படுகிறது… இந்த நிலையில் பார்ட்டி முடிந்து அவருடன் சென்ற லீனா கான் மோசமான நிலையில் கொடூரமான முறையில் கொலை செய்ய பட்டு வீதியில் வீசி எறியப்பட்டுள்ளார்… இந்த நிலையில் மும்பை போலீசார் நடிகை லீனா கான் கொலை வழக்கில் திரு பத்ரிசக்ரவர்த்தி முக்கிய குற்றவாளியாக சேர்க்கப் பட்டுள்ளார்… இதனை அடுத்து பத்ரிசக்ரவர்த்தியை போலீசார் மிக தீவிரமாக தேடி வருகின்றனர்…  

 

இதை கண்ட மொத்த குடும்பமும் அதிர்ச்சியில் உறைந்திட அந்த இடத்திலே அனு மயங்கி சரிந்தாள்…

 

அர்ஜூன் மற்றும் நக்ஷத்திரா இருவரும் சிறந்த மருத்துவர்கள் என்பதால் அனுவை அர்ஜுனின் அப்பார்ட்மெண்ட்டில் வைத்தே சிகிச்சை அளித்தான்… அனு முழிக்கும் முன்பே சில வேலைகளை முடிக்க வேண்டும் என எண்ணிய ஆதிரன் அவர்களிடம் கூறி விட்டு வெளியே சென்றவன்… சரியாக அனு கண் விழிக்கும் நேரம் அங்கு வந்து சேர்ந்தான்… 

 

 கண் விழித்த அனு மகனை நினைத்து வேதனையில் அழுது கரைய அவள் கைகளை ஆதூரமாக பற்றி அழுத்தியவன் “ இனி எல்லாம் மாறும்..!!” என்றவன் வார்த்தைகளில் ஒளிர்ந்த அதீத நம்பிக்கை அனுவை அசைத்து பார்க்க… தன் கணவன் கை மேல் தலையை சாய்த்தவளுக்கும் அந்த நம்பிக்கை எதிரொலித்தது… 

 

அவர்கள் நம்பிக்கை ஜெயிக்குமா..? பொய்க்குமா…?? என்பதை பொறுத்து இருந்து தான் பார்க்க வேண்டும்…  

 

Pls leave your valuable comments❤️❤️

 

 

7 thoughts on “தீயை தீண்டாதே தென்றலே -3”

  1. Экономия времени и финансов при использовании современного оборудования.
    Мобильный барабанный грохот [url=http://barabaniy-grohot.moscow/]http://barabaniy-grohot.moscow/[/url] .

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Scroll to Top