4
அந்த இளம் காலை பொழுதில் ‘சில்லென்று’ வீசும் தென்றலுடன் சாலையில் இரு மருங்கிலும் விளைந்த நெற்ப் பயிர்களும் பருவப் பெண்ணாக நல்ல வளமுடன் செழிப்பாக வளர்ந்து நிற்க அந்த மண் சாலைக்கு சற்றுமே சம்பந்தம் இல்லாமல் பயணிக்கும் விலை உயர்ந்த நான்கு சக்கர வாகனமும் அதனுள் ஒலிக்கும் பாடல்களும் காண்போரை திரும்பி பார்க்க செய்தது…
மேற்கூரையை திறந்து விட்டப்படி அவர்கள் பயணமும் அதில் அவர்கள் தேர்ந்தெடுத்த பாடல்களும் வழிப்போக்கர்களை விழி பிதுங்கி நிற்க வைத்தது… அப்படி என்ன பாட்டு போட்டு இருப்பாங்கன்னு தானே கேக்குறீங்க… இதோ உங்களுக்காக…
“பதினெட்டு வயது
இளமொட்டு மனது ஏங்குது பாய் போட
பனி கொட்டும் இரவு
பால் வண்ண நிலவு ஏங்குது உறவாட
கங்கை போலே காவிரி போலே
ஆசைகள் ஊறாதா
சின்னப் பொண்ணு செவ்வரி கண்ணு…
ஜாடையில் கூறாதா…!!”
“மாசி மாசம் ஆளான பொண்ணு
மாமன் எனக்குத்தானே
நாளை எண்ணி நான் காத்திருந்தேன்
மாமன் உனக்குத்தானே
பூவோடு ஆ……ஆ…..ஆ……தேனாட
தேனோடு ஓ……ஓ…..ஓ….. நீயாடு…!!”
என்ற எண்பது தொன்னூறுகளில் பிரபலமான குத்து பாடல்கள் அதுவும் இந்த தலைமுறையின் இளம் வயதினர்கள் கேட்கிறார்களா… அதுவும் வடமாநிலத்தவர்கள் போல் இருக்கும் இவர்களா.. என்னும் வியப்பே அதற்கு காரணம்…
இசைக்கும் பாடல்களுக்கும் ரசனை மிகுந்த அழகிய சூழலுக்கும் ஏற்ப கைகளால் தாளம் போட்ட படியும் வாயில் பாட்டை முணுமுணுத்தப் படி ஒருவன் மகிழ்ச்சியாக வாகனம் ஓட்டிக் கொண்டு இருக்க… மற்றவனோ அந்த சூழலுக்கு சற்றும் பொருந்தாது இயற்கையின் அழகை ரசிக்கும் ரசனையின்றி வெற்று கண்களோடு பார்த்தவன்… காரில் ஒலிக்கும் பாடல்களை கேட்டு வெறுப்புடன் இறுகி போய் அமர்ந்து இருந்தான்…கடத்தி வரப்பட்ட யுவராஜனை போல்…அவனே பத்ரி சக்ரவர்த்தி…
என்ன மக்களே இந்தப் பகுதியை எங்கையோ பார்த்த மாதிரி இருக்கா…???
காதல் செய்யாதே இராவணா நியாபகம் இருக்கா…???எல்லாம் அதுல வர அதே இன்ட்ரோ தான்…எதுக்கு இந்த விளம்பரம் தானே கேக்குறீங்க…?? எல்லாம் ஒரு காரண காரியத்தோடு தான்…
என்னவா…??
எப்பவும் வாழ்க்கையில் முடிந்ததை திருப்பி பார்க்க கூடாது என்பார்கள் ஆனால் எதோ ஒரு தவிர்க்க முடியாத சந்தர்ப்பத்தில் நமக்கு வாழ்க்கையை திரும்பி பார்க்கும் வாய்ப்பு கிடைத்தால்…?? எப்படி இருக்கும்…?? ( அவரவர் மன நிலைக்கு ஏற்றபடி கருத்தை நிரப்பி கொள்ளுங்கள்…இப்படிக்கு டூபாக்கூர் ரைட்டர்…) எதிர்பாராத பல திருப்பங்கள் நிகழும்…
அது போல் அல்லாமல் உண்மையாகவே கடத்தி வரப்பட்ட கடுப்பில் இருந்தான் பத்ரி… அதுவும் அவனது தந்தையின் உத்தரவின் பெயரில் அவனது சொந்த பி ஏவால் கடத்தப்பட்டது தான் கடுப்பின் உச்சம்…கடத்தினது கூட தெரியாத அளவுக்கு போதையில் கிடந்தான் என்பது தான் கடுப்பின் உச்சம்…
“ஏன் பாஸ் மூஞ்ச இப்படி உர்ன்னு வச்சி கிட்டு இருக்கீங்க கொஞ்சம் சிரிங்க பாஸ்..!!” என ராஜ் பத்ரியின் பி ஏ கேட்க…
அவனை பார்த்து முறைத்த முறையில் ராஜின் கரங்கள் தானாக எழுந்து அவனது கன்னத்தை பொத்தியது தன்னிச்சையாக அவனறியாமலே… பின்னே அப்பா பிள்ளை பஞ்சாயத்தில் அடிபட்டு கிழிவது என்னமோ இவன் சட்டையும் கன்னமும் தான் அப்படி இருக்க இன்று இவன் செய்த வேலைக்கு இந்நேரம் பத்ரி இவனுக்கு பாடை அல்லவா கட்டி இருக்க வேண்டும்… ஆனால் அதற்கு நேர் மாறாக அமைதியே உருவாய் அவன் அமர்ந்து வருவது இவனுக்கு உள்ளே கிலிப் பிடித்தது… புலி எதுக்கு பதுங்கி இருக்கு இப்ப பாயவா இல்லை தனியா கூட்டி போய் கூறு போட காத்திருக்கா என்பதை தெரிந்து கொள்ளவே வாய் வார்த்தை விட்டு பார்த்தான்… அதற்கும் முறைப்பை தவிர நோ ரெஸ்பான்ஸ்… அந்த நேரம் பார்த்து ராஜின் பிரத்தியேக புதிய அலைபேசி அழைக்க… அதை எடுத்து பார்த்தவனுக்கு பகீர் என்றது ஆகா பெரிய பாஸ் வேற நேரங்காலம் தெரியாம ஃபோன் பன்றாரே இப்போ எடுக்கலாமா…? வேணாமா…?? என ராஜ் யோசித்து கொண்டு இருக்கும் போதே…
“உன் பெரிய பாஸ் தான பன்றாரு எடுத்து பேசு என்கிட்ட சம்பளத்தை வாங்கிக்கிட்டு அவர் கிட்ட தான விசுவாசத்தை காட்ற…உன்னை அப்புறம் கவனிக்கிறேன் இப்போ நீ ஃபோன் எடுத்து பேசலனா அடுத்து நம்மளை கண்டுப்பிடிக்க நாலு ஹெலிகாப்டர் நாற்பது குவாலிஸ்டார் நானூறு வீரர்கள்ன்னு ஒரு படையே இங்க அனுப்பி வைப்பார்… என்ன பார்க்கிற தி க்ரேட் மிஸ்டர் ஆதிரன் சக்ரவத்தி செய்யக் கூடியவர்ன்னு எல்லாருக்கும் தெரியும்… அவர் அங்க எதையும் செய்யும் முன்னாடி ஃபோன் எடுத்து பேசு என அழுத்தி கூற… ராஜின் மரத்த மூளை செல்கள் வேலைசெய்ய டக் என்று ஃபோனை எடுத்தான்…
தேங்க் காட் இப்போவாது ஃபோன் எடுத்தியே… உங்களுக்கு என்ன ஆச்சோ ஏது ஆச்சோன்னு தேட சொல்லி இப்போதான் இந்தியன் ஏர் ஃபோர்ஸ் கிட்ட சொல்லி இருந்தேன் நல்லவேளை நீ ஃபோனை எடுத்துட்ட இல்லை இந்தியா மொத்த ஃபோர்ஸையும் அங்க இறக்கி இருப்பேன் என ஆதிரன் அஸால்ட்டாக கூறிவிட்டு ஆசுவாசம் அடைய… இங்கு ராஜ்க்கோ பத்ரி சொன்னது புரியவர “நல்ல அப்பா நல்ல புள்ளைடா சாமி அது சரி காசு பணம் இருந்தா கைலாசவையே விலைக்கு வாங்கலாம்ங்கும் போது இது எம்மாத்திரம்..! என நினைத்து கொண்டான்…
தொடர்ந்து தொலைப்பேசியில் ஆதிரன் குரல் ஒலிக்க தன் கவனத்தை அதில் செலுத்தினான்…
ராஜ் அவன் எங்க உன் கூட பத்திரமா தான இருக்கான்… எந்த பிரச்சனையும் பண்ணலையே… நான் உன்னை நம்பி தான் ராஜ் அவனை அனுப்பி வச்சி இருக்கேன் தயவு செஞ்சு கொஞ்சம் கவனமா அவனை பார்த்துக்கோ ஐ நோவ் அது கொஞ்சம் கஷ்டமான வேலை தான்… பட் உன்கிட்ட ஒரு கைமாறா தான் கேக்குறேன் நான் சொல்லற இடத்திற்கு அவனை கூட்டி போனாலே போதும் மத்த ஏற்பாடு எல்லாம் நான் முன்னாடியே பண்ணிட்டேன் அங்க போனா எல்லாத்தையும் அவர் பார்த்துப்பார் என ஆதிரன் ராஜ்க்கு அவன் செய்ய வேண்டியதை கூறி கொண்டு இருக்கும் போதே அவனிடம் இருந்து ஃபோனை பிடுங்கிய பத்ரி…
“என்னை என்ன பேடி பையன்னு நினைச்சிக்கிட்டீங்களா பிரச்சனை வந்தா ஓடி ஒளிஞ்சிக்க… நீங்க பண்ண காரியத்தால எனக்கு **** முத்திரை குத்திட்டானுங்க என்னை விட்டு இருந்தா இந்த பிரச்சனை நானே சால்வ் பண்ணி இருப்பேன்… அதை விட்டு என்னை கடத்தி ஆ ஹே வாட்ஸ் யுவர் ப்ராப்ளம் மேன் ஏன் இப்படி பண்ணிங்க என தந்தை என்றும் பாராமல் பத்ரி ஆதிரனிடம் கத்த…
அந்த பக்கதில் இருந்த ஆதிரனுக்கு அது வலித்தாலும் மனதை இறுக்கி கொண்டு…
லிசன் பத்ரி ஐ நோவ் எவ்ரிதிங் அபௌட் யு சோ உனக்கு எது நல்லது எது கெட்டது பார்த்து தான் செய்கிறேன்… இதுவரைக்கும் உன் விருப்பப் படி விட்டதுக்கு தான் எங்க கொண்டு வந்து நிறுத்தி இருக்க பார் இதுக்கு மேல உன்னை உன் விருப்பத்திற்கு விட என்னால முடியாது…இனி நான் சொல்ற மாதிரி தான் நீ செய்யுற செய்யணும் புரிஞ்சிதா…
“என்னோட விஷயத்துல முடிவு எடுக்க நீங்க யார்… என்னோட வாழ்க்கை என்னோட விருப்பம்…அதுல நீங்க தலையிடாதீங்க மிஸ்டர் ஆதிரன்…!!”என இவன் கோவத்தில் கிடந்து கத்த..
“டேய் நான் உனக்கே அப்பன்டா உன்னோட வாழ்க்கை முடிவு பண்ற உரிமை என்னை விட இங்க எவனுக்கு இருக்கு… உனக்கு உன் அம்மா மேல கொஞ்சமாவது பெத்த பாசம் இருந்தா ஒழுங்கா நான் சொல்றத கேட்டு நட…நான் சொல்ற இடத்துக்கு போய் அவரை பாரு அவர் சொல்ற படி நடந்துக்கோ எல்லாம் நல்லபடியா முடியும்… இதுல ஏதாவது கோளாறு பண்ண நினைச்ச..? மகனே உன்னை எப்படி என் வழிக்கு கொண்டு வரணும்னு எனக்கு ரொம்ப’ நல்லாவே தெரியும்… என்னை அந்த நிலைமைக்கு தள்ள மாட்டேன்னு நம்புறேன்… நீ சின்ன பையன் என் சுய ரூபத்தை தாங்க மாட்ட பார்த்துக்கோ… என சிங்கத்தின் கர்ஜனையாக ஆதிரனின் குரல் ஒலிக்க… அடங்கி தான் போனான் அவனின் இளம் சிங்கம்…
ஆதிரன் ஃபோன் வைத்த உடன் தன்னாள் ஒன்றும் செய்ய முடியாத இயலாமையில் கத்தி கர்ஜித்தவன் கார் கதவில் தன் கோபத்தை வெளிபடுத்திட கண்ணாடி உடைந்து அவன் கையில் ரத்தம் பீறிட்டு வர ராஜ் பதறி காரை நிறுத்தி அவனுக்கு முதலுதவி செய்ய அதை கோபமாக பிடிங்கி எறிந்தவன்… ஆற்றாமையில் கண்களை மூடி காரின் இருக்கையில் சாய்ந்து அமர்ந்துக் கொள்ள வேறு வழி இன்றி ராஜ் வண்டியை கிளப்பி கொண்டு சென்றான்…
செல்லும் வழி நெடுக்க அந்த செம்மண் சாலையில் தன் செங்குருதியை சொட்ட விட்ட படி சென்றான் அவன்… முதலில் அந்த மண்ணோடு அவன் உதிரம் கலந்து ஒருநாள் அதே மண்ணோடு அவன் உயிரும் கலந்து போகும் என்பதை அவன் அறிந்து இருந்தால்… (சொன்னா வரமாட்டான் அதான் சொல்லாம தூக்கி வந்துட்டேன் எப்பூடி)
அவர்கள் வந்து சேர வேண்டிய இடத்திற்கு அவர்கள் வந்து விட்டதை தெரிவித்தது அந்த பெயர் பதாகை
திருநெல்வேலி மாவட்டம்.. அம்பாசமுத்திரம் ஊராட்சி.. சிங்கம்பட்டி கிராமம் தங்களை அன்புடன் வரவேற்கிறது…என வந்தவர்களை இனிதாக வரவேற்றது..
Pls like and leave your valubale comments pls ❤️❤️
Interesting Epi✨
நன்றி சகிமா ❤️❤️
Super sema super super super super super super super super super super next episode fasta podunga pls 💜💜💜💜💜
ஓகே dear நன்றி ❤️❤️
Hey yenga ooru pa nice going
நன்றி சகிமா