5
இயற்கையின் எழில் கொஞ்சும் அழகிய கிராமம் அது மணி மணியாய் நெல் மணிகள் பூத்து நிற்க பச்சை பட்டாடை மீது தறித்த தங்க ஜரிகையைப் போல் காட்சி அளித்தன வயல் வெளிகள்…
காற்றில் பரவும் குளுமையும் நாசியில் பரவும் மண் வாசனையும் கண்ணில் உறையும் இயற்கை காட்சியும் இறுகிய மனதை தளர்வடைய செய்ய போதுமானதாக இருந்தது… அந்த ரசனைக்குரிய கிராமிய காட்சிக்கு சற்றுமே பொருந்தாத ஒரு உருவம் நடு ரோட்டுல ஆடிட்டு இருக்கே அது வேற யாருமில்லை நம்ம கதையோட நாயகி தான் வாங்க கிட்ட போய் பார்க்கலாம்
பெண் : ஹான்
ஆறுக்கு ஒருவாட்டி ஏழுக்கு ஒரு வாட்டி
பத்து மணிக்கு பக்கம் ஒரு வாட்டி
படுத்த ஒரு வாட்டி
முழிச்சா ஒரு வாட்டி
கனவுல உன்ன நினச்ச ஒரு வாட்டி
பெண் : கைய தொடும்போது
ஒரு வாட்டி ஒரு வாட்டி
கால் உரசும் போது
ஒரு வாட்டி ஒரு வாட்டி
கட்ட முடி மீசை பட்டா ஒரு வாட்டி
பெண் : வந்துச்சே பீலிங்ஸ்
வந்துச்சே பீலிங்ஸ்
வண்டி வண்டியா வந்துச்சே
பீலிங்ஸ் பீலிங்ஸ் என பிரபலமான பாடலுக்கு ரீல்ஸ் பண்ணி கொண்டு இருக்கும் இவள் யார் வளர்ப்பு என்று நான் சொல்லாமலே புரிந்து இருக்குமே எஸ் எஸ் எல்லாம் நம்ம மகிழினியின் வளர்ப்பே தான்.., இதில் கூடுதல் சிறப்பு என்ன வென்றால் அவள் போட்டு இருக்கும் காக்கி உடுப்பு தான் … இப்படி காவல்துறை சீருடையுடன் மக்கள் நடமாடும் பொது வெளியில் ஆடலாமா என்று கேட்டால் எனக்கு பதில் தெரியாதுங்கோ… ஏன் என்றால்…? அவள் தான் திருநெல்வேலி கமிஷனரான இராவணனின் செல்லப் பெண் கொற்றவை ஆகிற்றே… அந்த மிடுக்கு இருக்கும்ல…
இவள் பாட்டுக்கு நடு வழியில் நின்று ரீல்ஸ் செய்து கொண்டு இருந்தது அந்த கடவுளுக்கே கடுப்பாகி இருக்கும் போல… சற்றும் எதிர்பாராத வகையில் அவள் பின்னால் சைக்கிள் வந்து மோதிட அந்த இடத்திலே கதை குளோஸ்… ஆ பதறாதிங்க நம்ம ஹீரோயின்க்கு ஒன்னுமில்லை அவள் ரீல்ஸ் போட்டுட்டு இருந்த அந்த ஆன்ட்ராய்ட் ஃபோன் தான் பாவம் பள்ளத்தில் விழுந்து பரலோகத்துக்கு போயிடுச்சு அதாவது பார்ட் பார்ட்டா புட்டுக்கிச்சுங்கோ (தப்பிச்சிடுச்சி ஹீரோயின் ரீல்ஸ் கொடுமையில் இருந்து ஹிஹி என் ஹீரோயின் தான் அதுக்காக எல்லாம் கலாய்க்காம இருக்க முடியாது பாஸ் )…
கீழே விழுந்தவள் பதறி கொண்டு போய் முதலில் ஃபோனை பார்க்க அது தான் சில்லு சில்லாக உடைந்து கிடக்கிறதே… அடப்பாவிகளா காடுகள் ஆஃப்பர்ல எங்க அம்மாவோட காசை திருடி கஷ்டப்பட்டு வாங்குன ஃபோனை இப்படி சிதற விட்டீங்களேடா உங்களை என வேகமாக தன்னை இடித்தவனை பார்க்க…
அந்தோ பாவம் அங்கு இவளை இடித்த சைக்கிள் சரிந்து கிடக்க அதன் அடியில் ஒரு சிறுமி சிக்கி கிடந்தாள் பாறைக்கு அடியில் சிக்கியிருக்கும் தேரையைப் போலவே…
ஏன்டி ஏறி மிதிக்கிற சைஸ்க் கூட இல்லாதவ தான் ஏரோப் பிளேன் ஓட்டுர கணக்கா என் மேல கொண்டு வந்து மோதிட்டு இப்படி கவுத்தி போட்ட தவளை கணக்க மல்லாந்து கிடக்கிற எழுந்துருடி என வாய் அது பாட்டுக்கு பேசிக் கொண்டு இருந்தாலும் சைக்கிளோடு விழுந்த பெண்ணை எழுப்பி விட்டவள்…அவளுக்கு எங்கேனும் அடிப் பட்டிருக்கா என்று சரி பார்த்து விட்டு மீண்டும் விட்ட இடத்தில் இருந்து திட்ட தொடங்கினாள்…
“அடியே தென்னரசு சித்தப்பபா மவ தான உனக்கு கொஞ்சமாவது கூறு இருக்கா… கண்ணு தெரியலையா உனக்கு இல்லை கண்ணை திறந்து வச்சுக் கிட்டே கனாக் காண்ட்றியா யாரு அது அந்த சுண்ணாம்புக்கு பிறந்த கொரியாக் கார பசங்க தான… தெரியும்டி இந்த காலத்துல புள்ளைங்க இருக்கீங்களே ப்பா… சரி ஏதோ என் மேலே விழுந்ததால பொழைச்ச இல்லாட்டி சிவலோகம் தான் பார்த்து வீடு போய் சேருடி..!”என அந்த பெண்ணுக்கு சீரியஸாக அட்வைஸ் பண்ண அந்த சிறுமியோ நீ என்னத்தையாவது உளரிக்கிட்டு கிட என்றப்படி அவள் பின்னால் திரும்பி திரும்பி பார்க்க இவளுக்கு தான் பங்கமானது… அதில் கடுப்புடன் அச்சிறுமியின் காதை பிடித்து திருகிய படி…
ஏன்டி இங்ஙன நான் எம்புட்டு பீல் பண்ணி கூவிட்டு கிடக்கேன் நீ அங்ஙன என்னடி பார்த்துக்கிட்டு இருக்க என்ற திசையில் இரண்டு ஆண்கள் நல்ல பயில்வான் போன்று உடல் அமைப்பை கொண்டவர்கள் வந்து கொண்டு இருக்க… அவர்களை கண்டதும் அச்சிறுமியின் உடல் பயத்தில் விரைக்க பதட்டத்துடன் கொற்றவையை அணைத்து பிடித்துக் கொண்டு “அக்கா ஆ பயமா இருக்கு என்னை காப்பாத்துங்க அக்கா அவங்க ரெண்டு பேரும் என் னை பின்னாலே துரத்திக்கிட்டே வராங்கக்கா..!!” என்றப்படி அவள் பின்னால் பதுங்க…
ஏய் என்னடி பண்ற அவங்க ஏன்டி உன்னை துரத்திட்டு வராங்க… என கேட்க
தெரியலக்கா நான் பக்கத்து ஊருக்கு டைப் ரைட்டிங் கிளாஸ் முடிச்சுட்டு வந்துட்டு இருந்தேன் இவங்க அங்க இருந்தே என் பின்னாடி வந்துட்டு இருக்காங்கக்கா.. அவங்களுக்கு போக்கு காமிச்சி வேகமா வரும் போது உன் மேல இடிச்சிட்டேன் .. அவங்க ஏதாவது பண்ணிடுவாங்களோன்னு எனக்கு பயமா இருக்குக்கா காப்பாத்துக்கா நான் அப்பா கிட்ட போனும்… என அச்சிறுமி அச்சத்தில் அழ தொடங்கிட…
ஏய் இருடி நான் தான் இருக்கேன் இல்ல பயப்படாத பார்த்துக்கலாம் என தேற்றும்படி கூறியவள் அருகே வந்த அந்த அந்நியர்களிடம் விசாரிக்க… அவர்களோ இவளது பெண் போலீஸ் உடையை பார்த்தும் பயம் கொள்ளவில்லை காரணம் தான் அவர்களுக்கு தெரியுமே இவள் டம்மி போலீஸ் என்று எனவே போதையில் திமிராகவே பதில் அளித்தனர்…
“நில்லுங்க யாருடா நீங்க..?? ஏன்டா அந்த சின்ன பொண்ணை துரத்திட்டு வரிங்க…??”கொற்றவை
அந்த பொண்ணை துரத்திட்டு வந்தா உனக்கு என்ன..?? மச்சான் அந்த பொண்ணை லஃவ் பண்றான் அதனால ஃபாலோவ் பண்றான் இதுல உனக்கு என்ன வருத்தம்… வா உன்னை நான் லஃவ் பண்றேன் என அத்துமீறி அநாகரீகமாக நடந்துக் கொள்ள முயல…
அவ்வளவு தான் காளி அவதாரம் எடுத்தால் கொற்றவை… அத்துமீறி நடக்க முயன்ற அவ்விருவரையும் புரட்டி எடுக்க ஆரம்பித்தாள்…
“ஏன்டா **** நாயே எங்க வந்து யார் மேல கை வைக்கிற… உங்களை மாதிரி **** ஆம்பளையால தான் நாட்டுல பொண்ணுங்க நிம்மதியாவே நடமாடவே முடியிறதில்லை…உங்களை எல்லாம் சும்மா விட கூடாதுடா டேய்…!!” என அவர்களை போட்டு மிதி மிதி என்று மிதிக்க வலி தாங்க முடியாமல் கத்தியப் படி கொற்றவையிடம் இருந்து தப்பி வயலுக்குள் ஓட…
இவளோ தான் ஒரு ரீல் போலீஸ் என்பதை மறந்து தன்னை ரியல் போலீஸ் வைஜேந்தி ஐ பி எஸ் என நினைத்து கொண்டு அவர்களை துரத்தி சென்று பொலந்து கட்டியவள் அவர்கள் மயங்கும் வரை விடவில்லையே… “பொண்ணுங்கன உங்களுக்கு அவ்வளவு சல்லீசா போச்சா… தட்டி கொடுக்குறவளும் பொம்பளை தான் தப்பு செஞ்சா தலைய வெட்டி எடுக்குறவளும் பொம்பளை தான் ஜாக்கிரதை இனி எந்த பொண்ணு பின்னாடி சுத்தறத பார்த்தேன் அறுத்து எறிஞ்சிடுவேன் ஜாக்கிரதை என வீராவேசமாக வசனம் பேசியவள் அந்த சிறுமியிடம் வந்து…
“எதுக்குடி இப்படி பயந்து சாகற, பொம்பளை பிள்ளைனா ஒரு தைரியம் வேணும் இல்லாட்டி நீ எங்க போனாலும் இந்த மாதிரி **** தொல்லை இருக்க தான் செய்யும் அதுக்கு பயந்து ஓடுனா ஓசோனை தாண்டி ஓடனும் அப்படியே ஓடினாலும் விட்டு வைப்பானுங்கனா நினைக்கிற…?? போடி லூஸ் அடுத்த முறை இப்படி ஏதாவது நடந்தா அவனுங்க மண்டையை உடைச்சிடு … போலீஸ்க்கு எல்லாம் பயப்படாத எதுவா இருந்தாலும் நான் பாத்துக்குறேன் என கொற்றவை அப்பெண்ணிற்கு துணிவை விதைத்தாள்…
இச்சமயத்தில் தான் கொற்றவை பத்ரி மற்றும் ராஜ்ற்கு அறிமுகம் ஆகினாள்…
“பாஸ் பாருங்களேன் அந்த லேடி போலீஸை எவ்வளவு துணிச்சலா சண்டை போட்டு அந்த பொண்ணை காப்பாற்றி இருக்காங்க… ச்ச மாஸ் இல்லை ஊருக்கு இப்படி ஒரு போலீஸ் இருந்தா போதும் இந்த நாட்டுல எந்த பொண்ணுக்கும் அநீதியே நடக்காது… தப்பு பண்றவங்கெல்லாம் பணத்தை கொடுத்து தப்பிக்கவே முடியாது என முதல் முறையாக லைவ் ஆக்ஷன் காட்சியை நேரில் கண்ட பூரிப்பில் ராஜ் பக்கத்தில் இருந்த பத்ரியை மறந்து சிலாகித்து பேச…
உள்ளம் தைத்ததோ பத்ரிக்கு சட்டென்று ராஜை பார்த்த பார்வையில் அவன் கப் சிப் என்று வாயை பொத்திக் கொண்டான் … ரொம்பவே சரியா பேசிட்டமோ அதான் பாஸ் முறைகிறார் போல அது சரி உண்மை பேசினா உள்ள எரிய தான செய்யும் என ராஜ் மனதுக்குள் நக்கலாக நினைக்க…
யாருக்கு எரியுது எங்க எரியுது எல்லாம் பின்னாடி சொல்றேன்… இப்போ நீ மூடிக்கிட்டு வண்டியை எடு என பத்ரி சொல்ல…
ஆகா எப்படி தான் கண்டு பிடிக்கிறாரோ தெரியலையே ஏற்கனவே செஞ்சதுக்கே கும்பி பாகமா இல்ல கபீம் குபமா தெரியல இதுல இதுவேறைய… இந்த மானங்கெட்ட மனசாட்சி கண்ட நேரத்துல எட்டி பார்த்து எனக்கு ஏழரை இழுத்து விடுதே முதல இதுக்கு ஒரு ஷட்டரை வாங்கி இழுத்து மூடனும் என மனதிலே புலம்பி கொள்ள…
முதல்ல அதை செய் என பத்ரி அதற்கும் பதில் கொடுக்க வாயை அனுமார் போன்று வைத்து கொண்டவன் வண்டியை எடுத்தான்…
வண்டியை எடுக்க சொன்னாலும் பத்ரியின் கவனம் என்னமோ போலீஸ் சீருடை அணிந்த கொற்றவை மீது தான் பதிந்து இருந்தது… அவன் பார்வைக்கான அர்த்தமும் அது எத்தகைய விளைவுகளை ஏற்படுத்தும் என்பதையும் பொறுத்து இருந்து பார்ப்போம் … வேற வழி
super sis
nandri sagima