ATM Tamil Romantic Novels

காதல் தேவதா 5

அத்தியாயம் 5

 

சக்திவேல் ஏற்கனவே போதை மயக்கத்தில் தான் இருந்தான் கண்கள் வேறு மங்கலாக தான் தெரிந்தது வள்ளி எங்கே என்று தேட அவளோ வீட்டில் இல்லை 

வெளியே வேறு இடியும் மின்னலுமாக இருந்தது.  

 

கதவு வேறு திறந்து கிடப்பதை பார்த்தவன் வெளியே ஓடினான் 

காற்று சில்லென்று வீசிக் கொண்டே இருக்க முழுக்க இருட்டாக தான் இருந்தது. 

 

வள்ளி பயத்துடன் “பாம்பு பாம்பு” என்று கத்தி கொண்டே ஓடிக்கொண்டிருந்தாள் பக்கத்தில் ஒரு கிணறு வேறு இருந்தது. 

 

சக்திவேல் அந்த அடை மழையில் நனைந்து கொண்டே வெளியே நடந்து சென்றான் “வள்ளி வள்ளி” என்று கத்தி கொண்டே தூரத்தில் மின்னல் வெளிச்சத்தில் கிணற்று பக்கத்தில் வள்ளி நிறக்கும் உருவம் தெரிந்தது. 

 

அதை பார்த்த சக்திவேல் அவள் அருகில் நடந்து சென்றான் அவன் அவளை நெருங்குவதற்க்குள் வள்ளி பக்கத்தில் இருந்த பள்ளத்தில் விழ போக சக்திவேல் ஓடிச்சென்று அவள் கையை பிடிக்க போனான் இருவரும் ஒன்றாக சேற்றில் விழுந்து புரள ஆரம்பித்தனர். 

 

சக்திவேல் எப்படியோ அவளை தட்டுத்தடுமாறி தன் வீட்டிற்க்கு அழைத்து வந்தான். 

 

மறுநாள் காலை பொழுது மெல்ல விடிந்தது மழை முழுதாக நின்று லேசாக வெய்யில் வர ஆரம்பித்து இருந்தது சக்திவேல் தான் முதலில் கண்விழித்தான் மெல்ல கண்ணை திறந்தவனுக்கு ஏதோ வெட்டி முறித்ததை போன்று உடல் வேறு வலித்தது தலையெல்லாம் வலிக்க ஆரம்பித்தது. 

 

தலையை பிடித்து கொண்டே எழுந்தமர்ந்தவன் லேசாக தன் பக்கத்தில் பார்வையை திருப்ப அவன் பக்கத்தில் வள்ளி போர்வையின் உள்ளே கோழி குஞ்சாக சுருண்டு கிடந்தாள்

அவளை பார்த்துவிட்டு எழுந்து கொள்ளலாம் என்று நினைத்தவன் தன் படுக்கையை விட்டு எழ 

அப்போது தான் சக்திவேல் ஒன்றை கவனித்தான் தன் உடலில் ஆடையே இல்லாததை பதறி அடித்து கொண்டே தன் ஆடையை தேட அது மூலைக்கு ஒன்றாக சிதறி கிடந்தது ஓடி சென்று கீழே கிடந்த தன் வேட்டியை எடுத்து கட்டி கொண்டான். 

 

‘என்னடா இது இந்த கோலத்தில் இருக்கேன்’ என்று நினைத்து கொண்டே வள்ளியை பார்க்க அவளும் அப்போது தான் தூங்கி எழுந்தாள்

அவள் படுக்கையில் இருந்து எழுந்து அமரும் போது அவள் மேல் இருந்த போர்வை விலகி கீழே இறங்கியது அவளின் மேலேயும் ஆடை இல்லாமல் தான் இருந்தது.

 

அவளோ திணறி கொண்டே தன் ஆடையை எடுத்து அவன் முன்னே அணிய ஆரம்பித்தாள். 

 

சக்திவேலுக்கு அப்போது தான் நேற்றைய இரவு பொழுதை பற்றிய நினைவே வந்தது. 

 

நேற்று இரவு “வள்ளி அய்யோ வலிக்குது அம்மா என்னை விடுங்க நான் வீட்டுக்கு போறேன்” என்று அவள் அழுக சக்திவேலோ அவளை 

விடாமல் அவளுடன் ஒன்றி இருந்தது நினைவு வந்தது. 

 

அவன் நெஞ்சில் அவள் விரல் நகங்களின் கீரல் கூட ரத்தத்துடன் இருந்தது அங்கிருந்த கண்ணாடியில் அவன் முகத்தை பார்க்க அவளின் பொட்டு அவன் கன்னத்தில் ஒட்டி இருந்தது அவளின் பல் தடம் கூட அவன் கன்னத்தில் இருந்தது

நேற்றைய உறவின் போது அவள் வலி தாங்க முடியாமல் அவன் கன்னத்தில் கடித்து வைத்திருந்தாள்

அவளின் பல்தடம் பட்டு அந்த இடம் ரத்தம் கட்டி சிவந்து போய் இருந்தது. 

 

அந்த படுக்கையில் அவளின் கன்னி உதிரம் கூட இருந்தது ‘அய்யோ நேத்து போதையில என்ன பண்ணி வச்சிருக்கேன் நான் அவளை சீரழிச்சிட்டனா’ என்று நினைத்து கொண்டே இருக்க அவளோ தன் பாவடை சட்டையை அணிந்து கொண்டு நடக்க கூட முடியாமல் எழுந்து வர அவளை பார்த்த சக்திவேலுக்கு அவனின் மொத்த கோபமும் அவளின் மீது தான் திரும்பியது. 

 

அவள் அருகில் கோபத்துடன் சென்றவன் அவளின் முடியை கொத்தாக பிடித்து கொண்டான் “எவ்வளோ தைரியம் இருந்தா நேத்து என் கூட படுத்திருப்ப என்ன டி பெரிய இடம்ன்னு என்னை மயக்கி உன் மடியில போட்டுக்கலாம்ன்னு பார்த்தியா” என்று கேட்டான். 

 

அவளோ வலியில் அழுது கொண்டே “நீங்க என்ன சொல்றிங்க ஐயா எனக்கு ஒன்னும் புரியலையே எனக்கு ரொம்ப வலிக்குது” என்றாள் கண்கள் கலங்க. 

 

“என்ன ஒன்னும் தெரியாத பாப்பா மாதிரியா நடிக்குற” என்று கேட்டு கொண்டே அவளின் கன்னத்தில் ஓங்கி ஒரு அறைவிட்டான் 

அதில் நிலைதடுமாறி கீழே விழுந்தாள் வள்ளி உண்மையிலேயே அவளுக்கு நேற்று என்ன நடந்தது என்று கூட நினைவில் இல்லை தன் உடலில் உள்ள மாற்றங்களை வைத்துக் கூட அவளால் எதுவும் கண்டுபிடிக்க முடியவில்லை. 

 

ஏனெனில் அவளுக்கு அந்த அளவுக்கு உடலுறவை பற்றி அறிவு கிடையாது பள்ளிக்குச் சென்றிருந்தாள் கூட ஓரளவுக்கு அறிவு இருந்திருக்குமோ என்னவோ

அவளுக்கு தெரிந்தது எல்லாம் வீட்டு வேலை மட்டுமே, 

வள்ளியை அந்த அளவுக்கு மட்டுமே சொல்லி வளர்த்திருந்தார் அவளின் பெரியம்மா. 

 

வள்ளி ஒன்றும் புரியாமல் கீழே விழுந்து கிடக்க “உன் மூஞ்சை என்னைக்காவது கண்ணாடியில பார்த்துருக்கியா டி போயும் போயும் இவள் கூடவா நான் ஒன்னா இருந்தேன்” என்று வாய்விட்டு புலம்பிக் கொண்டே தன் தலையில் அடித்து கொண்டான் சக்திவேல். 

 

வள்ளி மாநிறத்துக்கே சற்று குறைவான நிறம் தான் வலது கன்னத்தில் சிறிய வெட்டு தழும்புடன் எண்ணெய் வைக்காத நீண்ட முடியை தலையை பின்னலிட்டு பாவடை சட்டை அணிந்து கழுத்தில் கருப்பு கயிறு காதில் சிறிய பிளாஸ்டிக் தோடுடன் ஒற்றை வெள்ளை கல் மூக்குத்தியுடன் சுமார் மூஞ்சி குமார் லேடி வெர்ஷன்

ஆனாலும் அவள் அழகி தான் இந்த பணக்கார பைத்தியகாரனுக்கு அது தெரியவில்லை. 

 

“நீங்க என்ன சொல்றிங்க எனக்கு ஒன்னுமே புரியலங்க ஐயா” என்று அவள் அழுது கொண்டே கேட்க

“ஏன் டி உனக்கு என் கூட படுக்க மட்டும் நல்லா தெரியுமா” என்றான் கோபத்துடன். 

 

சக்திவேல் எப்போதும் தன்னிடம் பேசுபவர்களிடம் கூட தகுதி பார்த்து தான் பேசுவான் பழகுவான் தன் வீட்டில் வேலை பார்க்கும் பெண்ணுடன் ஒன்றாக இருந்ததை அவன் மனம் ஏற்க மறுத்தது அதனால் அவளிடம் ஒரு மிருகத்தை போல் நடந்து கொண்டான். 

 

“நான் உங்க கூட படுத்தேன் அவ்வளவு தான நீங்க தான் நைட் ஏதோ தண்ணீ கொடுத்திங்க அதுக்கு அப்புறம் எனக்கு என்ன நடந்துச்சுன்னு நியாபகம் இல்லை” என்றாள். 

 

“அடிங்க என்ன டி கிளிப்பிள்ளை மாதிரி சொன்னதையே சொல்லிட்டு இருக்க” என்று அவள் கன்னத்தில் மீண்டும் ஓங்கி அடித்தான் அவளோ தேம்பி தேம்பி அழுக ஆரம்பித்துவிட்டாள். 

 

“என்ன விட்ருங்க நான் என் பெரியம்மா கிட்ட போகனும்” என்று அழுக அந்த நேரம் “வேலா வேலா அடேய் நான் பெத்த மகனே சக்திவேலா” என்று சந்தோசம் வெளியில் இருந்து அழைக்க

“ஏய் சத்தம் போட கூடாது இங்கேயே இரு” என்று வள்ளியிடம் கூறிவிட்டு தன் மேல் சட்டையை அணிந்து கொண்டு கன்னத்தில் இருந்த அவளின் பொட்டை தூக்கி எறிந்துவிட்டு அவன் தாய் உள்ளே வருவதற்க்குள் வெளியில் ஓடினான். 

 

“வீட்டுக்கு சாப்பிட வா டா ஊர் பெரியவங்க எல்லாரும் அங்கே வாந்துருக்காக” என்று கூறி கொண்டே உள்ளே வர பார்க்க அவரை தடுத்து நிறுத்தினான் சக்திவேல். 

 

“அம்மா எங்கே போற” என்று கேட்டான் “பூஜை சாமான் எல்லாம் இந்த வள்ளி கிட்ட கழுவி எடுத்து வர சொன்னேன் டா தம்பி அவள் எடுத்துட்டே வரல நகரு வீட்டுக்கு எடுத்துட்டு போறேன்” என்று கூறிக் கொண்டே உள்ளே செல்ல போக 

“அம்மா நானே வரும் போது எடுத்துட்டு வரேன்” என்றான். 

 

அவன் முகத்தை பார்த்த சந்தோசம் 

“என்ன டா தம்பி இது கன்னம் வீங்கி ரத்தம் கட்டி இருக்கு என்னாச்சு”

என்று கேட்டார்

“அது நேத்து நைட் இருட்டுல வரும் போது கீழே விழுந்துட்டன் மா” என்று சமாளித்தான். 

 

சந்தோசம் அவனை நெருங்கி அவன் கன்னத்தை தொட போக அவரின் கையை தட்டிவிட்டான் சக்திவேல்

“டேய் தம்பி ஏதோ பெரிய காயமா இருக்கே டா” என்று அவர் கூற

“ஏதாச்சும் கல்லு குத்தியிருக்கும் விடுங்க மா” என்று அவர் கையை தட்டிவிட்டவன். 

 

“நான் வரேன் நீங்க கிளம்புங்க மா” என்று அவரை அனுப்பி வைத்தான்

அவனை பார்த்து கொண்டே சந்தோசம் அங்கிருந்து சென்றார். 

 

சக்திவேல் மீண்டும் உள்ளே செல்லும் போது சத்தமில்லாமல் அழுது கொண்டே அமர்ந்து இருந்தாள் வள்ளி. 

 

“ஏய் இங்கே வா டி” என்று அவளை அழைக்க அவளும் அழுத விழிகளுடன் அவன் அருகில் வந்தாள் “இங்கே நடந்ததை யார் கிட்டையும் சொல்ல மாட்டேன்னு சொன்னா நான் உன்னை வெளியே விடுவேன் என்ன சொல்ற” என்று கேட்டான் சக்திவேல். 

 

“நான் எதுவும் சொல்ல மாட்டேன் நான் வீட்டுக்கு போகனும்” என்று அழுக “இப்போ கிளம்பு மீறி ஏதாச்சும் உன் வாயில் இருந்து வெளியே வந்துச்சு உன்னை உயிரோட வைச்சு புதைச்சிருவேன்” என்று அவளை மிரட்டி அனுப்பி வைத்தான். 

 

அவளும் பயத்துடன் சரி என தலையை ஆட்டிவிட்டு வெளியே சென்றாள். 

 

சக்திவேலின் கண்கள் இருந்தாலும் அவளை சந்தேகத்துடன் தான் பார்த்து கொண்டே இருந்தது. 

 

வள்ளி கண்ணை துடைத்து கொண்டே வீட்டிற்க்கு சென்றாள்

அவளின் பெரியம்மா நேற்று இரவு அவரின் அம்மா வீட்டிற்க்கு சென்றிருக்க வள்ளி வீட்டின் உள்ளே சென்று படுத்து கொண்டாள். 

 

வள்ளியின் உடல் அடித்து போட்டதை வலித்தது நேற்றைய கூடல் அவளை மிகவும் சோர்வைடைய வைத்திருந்தது பத்து லாரி மண்ணை அள்ளி போட்டவள் போன்று சோர்வுடன் படுத்து உறங்க ஆரம்பித்து இருந்தாள். 

 

ஆனால் அவளின் பக்கத்து வீட்டில் இருந்த சிவகாமி வள்ளியை கவனித்துக் கொண்டு தான் இருந்தாள். 

 

மாலை வேளையில் வள்ளியின் பெரியம்மா வீட்டுக்கு வந்தவர் 

அவள் சோர்ந்து போய் படுத்திருப்பதை அவளின் அருகில் பதறி அடித்து கொண்டே சென்றார். 

 

வள்ளியின் உடலை தொட்டு பார்க்க அது நெருப்பாக கொதித்தது “பாப்பா என்ன பண்ணுது” என்று கேட்டு கொண்டே அவளை எழுப்ப அவளோ கண்ணை திறக்காமல் உறங்கி கொண்டிருந்தாள். 

 

“வள்ளியம்மை கண்ணை திற” என்று கூற அவள் மெல்ல கண் திறந்தாள் அவர் ஒன்றும் புரியாமல் அவளுக்கு காய்ச்சல் தான் அடிக்கிறது என்று நினைத்து காய்ச்சலுக்கான கசாயத்தை அவளுக்கு கலந்து கொடுத்தார். 

 

வள்ளியின் வாழ்க்கையையே கெடுத்த சக்திவேலுக்கு என்ன தண்டனை கிடைக்குமோ காலம் தான் பதில் சொல்ல வேண்டும்…? 

 

 

 

 

 

 

 

 

2 thoughts on “காதல் தேவதா 5”

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Scroll to Top