அத்தியாயம் 6
சக்திவேல் கோபத்துடனே தன் வீட்டுக்கு சென்றான் அவன் வீட்டின் உள்ளே நுழைய அவனை பார்த்த
வினய் “ஏய் ஆரு மாமா வந்துட்டாங்க வா டி” என்று குரல் கொடுத்தான்.
ஆராதனா அவன் சத்தம் கேட்டு தன் அறையில் இருந்து வெளியே வந்தவள் சக்திவேலின் அருகில் ஒடிச் சென்று அவன் கையை பிடித்து கொண்டாள் “ஏய் மாம்ஸ் வந்துட்டிங்களா உங்களுக்காக தான் நேத்துல இருந்து நானும் வினய்யும் வெயிட் பண்ணிட்டு இருக்கோம்” என்றாள் ஆர்வத்துடன்.
“என் அக்கா மகள் சும்மாலாம் வெயிட் பண்ண மாட்டாளே என்ன விஷயம்” என்று கேட்டான் சக்திவேல் தன் ஒற்றை புருவத்தை உயர்த்தி கொண்டே.
“மாமா நீங்க வந்தா ஊர் சுத்தி காட்டுவிங்க வெளிய கூட்டிட்டு போவிங்கல்ல அதுக்காக தான் அவள் வெயிட் பண்ணிட்டு இருந்தா” என்று வினய் சிரித்து கொண்டே உண்மையை கூறி விட ஆரு அவன் தலையில் ஒரு கொட்டு வைத்தாள்.
“ஆ எதுக்கு டி என்னை அடிச்ச மாமா பாருங்க மாமா” என்று வினய் சக்திவேலிடம் பஞ்சாயத்து வைத்தான்.
“டேய் சின்ன பசங்களா நீங்க கொஞ்சம் நேரம் அடிச்சிக்காம இருங்களேன் டா” என்று கூறிய தேவி “வேலு நீ எப்போ டா வந்த” என்று கேட்டார் “இப்போ தான் அக்கா வந்தேன் ரொம்ப களைப்பா இருக்கு குளிச்சிட்டு வந்துட்டு பேசுறேன் அக்கா” என்று கூறியவன் தன் அறைக்கு குளிக்க சென்றான்.
சக்திவேலால் அங்கே நிற்க கூட முடியவில்லை உடல் அடித்து போட்டதை போன்று வலித்தது சென்று படுத்து உறங்கினால் போதும் என்று இருந்தது அவன் உடல்,
குளியலைறைக்கு சென்றவன் வெந்நீரை திறந்து அந்த நீரில் நிற்க அவன் உடல் எல்லாம் எரிய ஆரம்பித்தது.
வள்ளி அவன் நெஞ்சில் ஆங்காங்கே தன் நகத்தால் கீறிவிட்டு இருந்தாள் குறிப்பாக அவன் நெஞ்சி இருந்த கீறல் வேறு எரிய ஆரம்பத்தது.
“போன ஜென்மத்துல குரங்கா பிறந்து இருப்பா போல எப்படி கீறி வச்சிருக்கா” என்று புலம்பி கொண்டே குளித்து முடித்தவன் களைப்புடன் சென்று கட்டிலில் படுத்து கொண்டான்.
இரவெல்லாம் உறங்காதது வேறு சக்திவேலின் கண்கள் எரிய ஆரம்பித்தது கண்ணை மூடி உறங்க ஆரம்பித்தான்.
சக்திவேல் வெளியே வருவான் ஊர் சுற்ற செல்லலாம் என்று காத்திருந்து ஆராதனாவும் வினய்யும் சோர்ந்து போய்விட்டனர்.
மாலை சொக்கநாதன் எங்கோ வெளியே செல்ல கிளம்ப அவருடன் தாங்களும் வருவதாக அடம்பிடித்து
ஆராதனாவும் வினய்யும் அவருடன் கிளம்பினர்.
சொக்கநாதன் கோவிலில் இறங்கி கொண்டவர் அவரின் டிரைவர் முத்துவிடம் “பசங்களுக்கு நம்ம வயலை போய் சுத்தி காட்டு” என்று அனுப்பி வைத்தார்.
முத்துவும் சொக்கநாதன் வயலை சுற்றி காட்டி கொண்டே இருக்க தூரத்தில் நடந்து வந்து கொண்டிருந்த தர்மனை பார்த்தாள் ஆராதனா.
என்ன நினைத்தாளோ முத்துவிடம் கூறிவிட்டு அவன் அருகில் செல்ல
தர்மன் அவளை கவனிக்கவில்லை அவன் வயலில் வேலை முடித்து வந்தவன் உடலில் சேறும் சகதியுமாக இருக்க அதை கழுவ பம்பு செட்டுக்கு சென்றான்.
ஆராதனா அவன் பின்னேயே நடந்து சென்றாள்.
பம்பு செட்டில் தர்மன் தன் கை காலை கழுவி கொண்டு இருக்க அவன் அருகில் சென்றவள் “ஹாய் பீம் பாய்” என்று குரல் கொடுக்க தன் முகத்தை கழுவி கொண்டு இருந்த தர்மன் அவளை நிமிர்ந்து பார்த்தான்.
“சொல்லு புள்ளை நீ எப்போ வந்த” என்று கேட்டான்
“இப்போ தான் வந்தேன்” என்றாள்
“என்ன இந்த பக்கம்”என்று அவன் கேட்க
“சும்மா தாத்தாவோட வயலை சுத்தி பார்க்க வந்தேன் அப்படியே உங்க கிட்ட தேங்க்ஸ் சொல்லனும்ன்னு தான் வந்தேன் அன்னைக்கு நான் இருந்த டென்ஷன்ல உங்க கிட்ட எதுவும் பேச முடியல நீங்க பண்ணின உதவிக்கு ரொம்ப தேங்க்ஸ்” என்றாள்.
“பரவாயில்லை இருக்கட்டும் நம்ம ஊர் புள்ளை இதை கூட பண்ணலைன்னா எப்படி” என்றான்.
இங்கே இருவரும் பேசிக்கொண்டே இருக்க அங்கே வினய் தூரத்தில் இருந்த மரத்தை பார்த்துவிட்டு
“முத்து என்ன அது” என்று கேட்டான்.
“அது ஒன்னும் இல்லை சின்ன முதலாளி தேனீ கூடு கட்டியிருக்கு”
“ஓஹோ இப்போ அதுல இருக்க தேனை டேஸ்ட் பண்ண முடியுமா” என்று கேட்டான்.
“இப்போ கிட்ட போன தேனீ கடிச்சிடும் நான் உங்களுக்கு அப்புறமா எடுத்து தாரேன்”
“அதெல்லாம் எனக்கு தெரியாது இப்போ வேணும்” என்று இடம்பிடித்த வினய் கீழே கிடந்த பெரிய கல் ஒன்றை எடுத்து அந்த தேனீ கூட்டில் தூக்கி எறிந்தான்.
அது சரியாக அந்த கூட்டில் விழ தேனீக்கள் பறந்து வர ஆரம்பித்தது
“என்ன முதலாளி இப்படி பண்ணிட்டிங்களே ஓடி வாங்க தேனீ கடிச்சிடும்” என்று அவனை இழுத்து கொண்டு காரின் உள்ளே ஓடி கதவை மூடிக்கொண்டான்.
அந்த மரத்தடியில் இருந்த பம்பு செட்டில் பேசிக் கொண்டு இருந்த
தர்மன்-ஆராதனா புறம் அந்த தேனீக்கள் வர தர்மன் அதை பார்த்தவன் பதறி அடித்து கொண்டு ஆராதனாவை தன்னுடன் இழுத்து சென்று அவளுடன் மோட்டர் ரூம் உள்ளே சென்று கதவடைத்து கொண்டான்.
“என்னாச்சு” என்று பதட்டத்துடன் ஆராதனா அவனிடம் கேட்க
“வெளியே யாரோ தேனீ கூட்டை கலைச்சிட்டாங்க தேனீ வந்து கடிச்சா முகம் வீங்கி செத்து கூட போக வாய்ப்பு இருக்கு” என்றான் தர்மன்.
இருவரும் சிறிது நேரம் உள்ளேயே நின்றுவிட்டு வெளியே வந்தனர்
உள்ளே இருந்தால் வியர்த்து ஒழுகி இருக்க ஆராதனா தன் கழுத்தில் இருந்த வியர்வையே தன் தாவணியால் துடைத்து கொண்டே வெளியே வந்தாள்.
அவளின் பின்னே தர்மன் வெள்ளை நிற பனியனுடன் கலைந்த தலை முடியுடன் வியர்த்து வடிய வெளியே வந்தான்.
அங்கே வயலில் வேலை பார்க்க வந்த பெண்கள் சரியாக அங்கே கை கால் கழுவுவதற்க்காக வர இவர்கள் இருவரையும் ஒருவன் பின் ஒருவராக வருவதை பார்த்துவிட்டனர்.
மோட்டார் ரூம் அறையின் உள்ளே இருந்ததால் தர்மனின் முகத்தில் வியர்த்து ஒழுகி இருந்தது
புதிதாக கட்டும் தாவணி வேறு ஆராதனா மேலே சரியாக நிற்காமல் நழுவி இருக்க அதை அவள் சரி செய்து கொண்டே நின்றிருக்க அவளை பார்த்த அங்கிருந்த பெண்மணிகளுக்குள் ஒரே சலசலப்பு சத்தம் கேட்டு தர்மன் திரும்பி பார்த்தான்.
அங்கிருந்தவர்கள் இவர்களை பார்த்து கொண்டே ஏதோ பேசிக்கொண்டு இருக்க தர்மனுக்கு புரிந்துவிட்டது இந்த ஊர் பெண்மணிகள் எதை பற்றி பேசுவார்கள் என்று உடனே
“இந்தா புள்ளை நீ வீட்டுக்கு கிளம்பி நேரமாகிருச்சு” என்றான் அவளை பார்க்காமல் எங்கோ பார்த்து கொண்டே கூறினான்.
தர்மனின் முகத்தில் முத்து முத்தாக வியர்த்து இருப்பதை பார்த்த ஆராதனா தன் இடையில் இருந்த கைக்குட்டையை எடுத்து அவன் உயரத்துக்கு எம்பி அவன் நெற்றியில் துடைத்து விட
அங்கிருந்த பெண்மணிகள் உறுதியே செய்துவிட்டனர் இருவருக்கும் தொடர்பு இருக்கிறது என்று.
தர்மன் உடனே அவள் கையில் இருந்த கைக்குட்டையை பிடுங்கியவன் “இந்த புள்ளை சொன்னா கேட்க மாட்ட முதல்ல இங்கே இருந்து கிளம்பு” என்று கத்த
‘இவருக்கு என்ன ஆச்சு’ என்று மனதில் நினைத்து கொண்டே அங்கிருந்து கிளம்பினாள்.
அங்கிருந்த அனைவரையும் ஒரு பார்வை பார்த்துவிட்டு தர்மன் வெளியே இருந்த தன் மேல் சட்டையை எடுத்து கொண்டு அங்கிருந்து கிளம்பினான்.
அவன் சென்றவுடன் அந்த பெண்மணிகள் “என்ன டி நடக்குது இங்கே ரெண்டு பேரும் ஓன்னா வெளிய வராங்க” என்று ஒருத்தி கேட்க இன்னொருத்தி “ஏய் அந்த புள்ளை தர்மனுக்கு வியர்த்து இருக்குன்னு துடைச்சியெல்லாம் விடுதே உள்ளே அப்படி வியர்வை வர அளவுக்கு என்ன நடந்துருக்குமோ” என்றாள்.
“எல்லாம் தான் நடந்திருக்கும் பெரிய இடத்து சமாச்சாரம் எல்லாம் நமக்கு எதுக்கு டி நம்ம வேலையை பார்ப்போம்” என்று வேலையை பார்க்க ஆரம்பித்தனர்.
தர்மன் மனதில் ‘இந்த பொம்பளைங்க எல்லாம் பார்த்தாங்களே என்ன நினைச்சிருப்பாங்க’ என்று ஓடிக் கொண்டே இருந்தது.
ஆராதனா இதில் எதை பற்றியும் கவலையே இல்லாமல் தன் வீட்டிற்க்கு சென்றாள்.
காலையில் தூங்க ஆரம்பித்த சக்திவேல் இரவு தான் எழுந்தான்
எழுந்தவுடன் தண்ணீர் தாகம் எடுக்க சமையலைறைக்கு தண்ணீர் குடிக்க சென்றான்.
அங்கே வள்ளி நின்று சமைத்து கொண்டு இருந்தாள் ஜுரம் ஓரளவுக்கு குணமாகியிருக்க இரவு வேலைக்கு வந்துவிட்டாள்.
சக்திவேல் தண்ணீரை குடித்து கொண்டே ஓரக்கண்ணால் வள்ளியை பார்த்தான் இறுக்கி பிடித்த பாவடை சட்டை ஒன்றை அணிந்து இருந்தாள்.
அது அவள் சடங்கான போது உறவினர்களில் யாரோ ஒருவர் எடுத்து வந்தது மாற்றுடை எதுவும் இல்லாததால் எப்போதும் பாவடை சட்டை தான் அணிவாள்.
அவளின் முன்னெழில்கள் இவனின் கை வண்ணத்தில் சற்று அளவு கூடி இருக்க அவளின் அங்க வளைவுகள் அந்த மெல்லிய ஆடையில் அப்படியே தெரிந்தது உள்ளாடை முதல் கொண்டு அதை பார்த்தவனுக்கு கோபம் வந்துவிட அவளின் கையை பிடித்து தன் புறம் இழுத்தான்.
“ஏய் என்ன டி டிரஸ் இது எவனை மயக்க இப்படி வர வயசுக்கு வந்துட்ட தான ஏன் தாவணி போட முடியாது உன்னால, இப்படி தான் நேத்து நைட் அதை இதை காட்டி என்னை மயக்குனியா நாயே” என்றான் கோபத்துடன்.
அவளின் கையை சக்திவேல் இறுக்கமாக பிடித்து இருக்க அவளுக்கு வலிக்க ஆரம்பித்தது அழுகையுடன் “என் கிட்ட வேற சட்டை இல்லைங்க ஐயா” என்றாள்.
“ஏன் டி மாசா மாசம் சம்பளம் வாங்குறல்ல அதுல வாங்க வேண்டியது தான” என்றான்
“அது பெரியம்மா வாங்கிக்கும்” என்றாள் சிறுபிள்ளையை போன்று அழுது கொண்டே.
அதற்க்குள் யாரோ வரும் அரவம் கேட்க சக்திவேல் அங்கிருந்து சென்றான்.
மறுநாள் சந்தைக்கு சென்றவன் நான்கு செட் தாவணி பாவடை வாங்கி வந்தான் யாருக்கும் தெரியாமல் தன் வீட்டு அலமாரியில் ஒளித்து வைத்தான்.
மாலை அனைவரும் தங்கள் அறையில் இருக்க பூனை போல் சமயலைறயில் நுழைந்தான்
தன் கையில் இருந்த பையை வள்ளி முன் நீட்டினான் “இந்தா வாங்கிக்க” என்க அவளும் அதை தன் கையில் வாங்கி கொண்டாள்.
“இதுல தாவணி இருக்கு இதை போட்டுக்கோ” என்றான்
“வேண்டாம்ங்க ஐயா பெரியம்மா யாரு கிட்டையும் எதுவும் வாங்க கூடாதுன்னு சொல்லி இருக்கு” என்றாள்.
“அடிங்க அடிச்சி பல்லை கழட்டிருவேன் நாளையில் இருந்து ஒழுங்கா அடக்கமா தாவணி கட்டிட்டு வா டி” என்று ஏதோ அவன் பொண்டாட்டியை மிரட்டுவதை போல் மிரட்டிவிட்டு அவள் கையில் பையை கொடுத்துவிட்டு அங்கிருந்து சென்றான்.
அவள் எப்படி இருந்தால்
இவனுக்கு என்ன வந்ததோ அவள் மீது அப்படி என்ன அக்கறையோ…
Super and intresting sis 💞
super sis