21
“ஆராதனா விஜயேந்திரன் என்றும்” அவளை “என் தங்கை என்றும்” கூறி அந்த குடும்பத்தில் இருந்து பிரித்து அவன் அழைத்து வர… மயூரி அதிர்ச்சியுடன் ஆரனை பார்த்தாள். அதைவிட அதிர்ச்சியாக ஆராதனாவை பார்த்தாள். ஆனால் இருவருமே அவளை திரும்பிக்கூட பார்க்கவில்லை.
மண்டபத்து வாசல் வந்த பிறகுதான் ஆராதனா திரும்பி பார்க்க அங்கே வேதவள்ளி மயங்கி சரிய.. அவரை பிடித்தபடி மெய்யறிவு நிற்க.. அதைக்கண்டவளுக்கு சொல்லவென்னா துயரம் மனதில் எழ.. அனைத்தையும் உதட்டை கடித்து உள்ளிழுத்துக் கொண்டாள். தன்னையே பார்க்கும் ஆரனை பார்த்து லேசாகப் புன்னகை செய்து அவனுடன் நடந்தாள்.
மயூரி திரும்பி திரும்பி பார்த்தவாறே நடந்து வந்தாள். என்ன தான் காதல் கொண்ட மனது ஆரன் பின்னே சென்றாலும்.. பெற்றவர்களையும் மற்றவர்களையும் நினைத்து மனம் கலங்க தான் செய்தது.
அவளை புரிந்து மயூரியின் கை விடாமல் காரில் அமர்ந்தவன் அடுத்து நின்றது திருச்செந்தூர் முருகன் சன்னதியில் தான். அங்கே வாசலிலே வந்து பென்னி இவர்களை வரவேற்க.. உள்ளே திருமணத்திற்கு தேவையான அனைத்து ஏற்பாடுகளும் நடந்து இருந்தது. முருகன் சந்நிதானத்தில் கந்தனவனின் ஆசியோடு கூடவே விஜயேந்திரனின் மகிழ்ச்சியோடு இனிதே நடந்தது ஆரன் வித்யூத்.. மயூரி இந்திராக்ஷி திருமணம்.
நாத்தனார் ஆக பின்னின்று மூன்றாவது முடிச்சு ஆராதனா போட அவளைப் பார்த்து புன்னகைத்தான் ஆரன்.
இவர்கள் வந்தபோது மூவரையும் கண்களில் நிரப்பிக்கொண்டு மகிழ்ச்சி பொங்க பார்த்திருந்தார் விஜயேந்திரன். ஆனால் அருகில் சென்று பேசவில்லை. திருமணத்துக்கான முகூர்த்தநேரம் முடிய போகிறது என்று ஐயர் ஏற்கனவே கூறிக்கொண்டிருக்க வந்ததும் அவர்களின் திருமணத்தை தான் முதலில் முடித்தார்.
பின் தன்னிடம் ஆசி வாங்கும் மகனையும் மருமகளையும் கண்குளிர பார்த்தார் விழியை இன்னும் அகற்றாமல்.. அவரது உதடுகள் “வேதா.. வேதா” என்று ஜபித்துக் கொண்டது.
அதன் பின்னே ஆராவை அவர் முன்னால் நிறுத்தினான் ஆரன்.
ஆராதனாவை புகைப்படத்தில் இதுவரை கண்டதோடு சரி.. வளர்ந்து நிற்கும் தன் மகளை ஆசை தீர பார்த்தவர், கைகள் நடுங்க அருகில் அழைக்க.. மண்டியிட்டு அமர்ந்தவளை நடுங்கும் விரல்களால் அவள் கன்னங்கள் வருடி தடையை கொஞ்சி தலையில் வைத்து ஆசீர்வதித்தார்.
இதுவரை யார் என்றே தெரியாத ஒரு மனிதரின் இந்தப் பாசம்.. அன்பு.. அப்பா என்ற உறவு.. ஆராதனாவுக்கு நெகிழ செய்தது. கூடவே மனதில் அவர் பட்ட வலியும் ரணமும் சேர அவரின் கைகளை இறுகப் பற்றி கண்களில் ஒற்றிக் கொண்டாள் “அப்பா..” என்று அழைத்தவாறு..
இது போதுமே!!
இந்த ஜென்மத்திற்கு இந்த ஒரு வார்த்தை போதுமே!!
அப்பா! அப்பா!! அவர் என்றுமே கிடைக்கவே கிடைக்காது என்று நினைத்த அவரின் பொக்கிஷத்தின் வாயினால் “அப்பா!!” என்ற வார்த்தை. மனிதருக்கு மனம் நிறைந்து விட்டது. அந்த நிறைவு கண்களில் கண்ணீர் ஆக வெளிப்பட பார்த்திருந்த ஆரனுக்கும் கண்கள் கலங்க உதட்டை கடித்து முகம் திருப்பிக் கொண்டான். மயூரி அங்கே நடப்பது புரியாமல் திருதிருத்தாள்.
இந்த சந்தோஷம்.. எவ்வளவு கோடிகள் கொட்டிக் கொடுத்தாலும் கிடைக்க முடியாத சந்தோஷம்!! என்னதான் ஆரனை அவருக்கு செல்லப்பிள்ளையாக.. ஒற்றைப் பிள்ளையாக.. வளர்த்து இருந்தாலும் பார்க்காத.. கையில் வளர்க்காத மகளின் மீது அளவு கடந்த பாசம் வைத்திருந்தார் விஜயேந்திரன். ஒருமுறையேனும் அவளை நேரில் பார்த்திட முடியாதா என்று ஏங்கி இருந்தவரின் கண் முன்னே இல்லையில்லை அவரின் கைக்குள்ளேயே இருக்கிறாள் அவரின் உதிரத்தில் ஜணித்த மகள்.
இன்று கேட்க “அந்த அப்பா!!” என்ற அழைப்பு உயிர்வரை உருவி இன்பமாய் வலித்தது. சந்தோஷம் நாடி நரம்பு எங்கும் பரவி விரவி படர்ந்தது. இதயத்திற்குள் இன்னொரு இதயம் ஒன்று துடிப்பது போல பெரும் மகிழ்ச்சி. தன் மகனையும் மகளையும் கூடவே தன் வேதாவின் உரிப்பான மயூரியையும் கண்களில் நிறைத்தவர், அப்படியே கண்கள் சொருக மயங்கினார்.
விஜயேந்திரன் மயங்கியதை பார்த்ததும் பெண்கள் இருவரும் பதற.. “ஒன்னுமில்ல.. அவர் கொஞ்சம் எமோஷனல் ஆனா.. மயக்கம் வரும். இது அப்பப்போ நடக்கிறது தான். ஒன்னும் ப்ராப்ளம் இல்லை” என்றவன் அவருடைய உதவியாளரை பார்க்க அவர்கள் வந்து சிறு காட்டன் துணியை தண்ணீரில் நனைத்து அவர் முகத்தில் தடவ.. அப்போதும் அவர் விழிக்கவில்லை. இருவரும் அவனை பார்க்க “கொஞ்ச நேரம் தூங்கி எந்திரிச்சா சரியாயிடும்” என்று மெதுவாக தூக்கி அவருக்கு என்று பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்ட காரில் அவரை அமரவைத்து, கூடவே அவரது உதவியாளர்கள் இருவரையும் அனுப்பி வைத்தவன் அடுத்த காரில் பின்தொடர்ந்தான்.
இவர்களுக்கு முன்னே பென்னி சென்று அவர்களை வரவேற்பதற்கு தேவையான ஏற்பாடு செய்து வைத்திருந்தான். ஆனால் உரிமையோடு ஆலம் எடுக்க ஆளில்லை என்பதால் ஆராதனாவை பார்த்தவன் ‘நீ செய்’ என்பது போல செய்கை செய்ய.. அவளும் சந்தோசத்தோடு ஆலம் கரைத்து வீட்டுக்குள் இருவரையும் அழைத்தாள். ஆனால் எங்கே விளக்கேற்ற சொல்வது? அவன் தான் பூஜை அறை என்ற ஒன்றை நிர்மாணிக்கவே இல்லையே..
“அண்ணா நான் மயூவை விளக்கேற்ற சொல்லனும்.. பூஜை அறை..” என்று ஆராதனா இழுக்க, “எனக்கு பூஜையறை சாமி கடவுள் எல்லாமே இங்கேதான்!!” என்று ஒரு அறையை திறந்து விட சிறியதாக இருந்தாலும் அழகாக இருந்த அந்த அறையை பார்த்துக்கொண்டே உள்ளே நுழைந்தார்கள் பெண்கள் இருவரும். அப்போதுதான் அந்த அறையில் பெரிதாக மாட்டப்பட்டிருந்த அதுவும் அச்சு அசலாக மயூரியை போன்றே இருந்து அந்த புகைப்படத்தை பார்த்து அதிர்ச்சியுற்றனர்.
ஆனால் ஏன் இந்த புகைப்படத்திற்கு மாலை அணிவித்து இருக்கிறார்கள்? என்று இருவரும் புரியாமல் ஆரனை திரும்பிப் பார்க்க.. அந்த புகைப்படத்தை உற்றுப் பார்த்துக் கொண்டிருந்தவன் முகம் இறுக்கமாக இருந்தது.
அங்கிருந்த மற்றொரு அறைக்கு அவர்களை அழைத்து சென்றவன் “ரெண்டு பேரும் ரெஸ்ட் எடுங்க” அருகில் இருந்த கப்போர்ட்டை காண்பித்து “உனக்கு தேவையானதெல்லாம் இதுல இருக்கு ஆரா” என்றவன் வெளியே சென்று விட, இப்போது நன்றாக ஆராவை முறைத்துக் கொண்டு நின்றாள் மயூரி.
சென்றவன் திரும்பிவந்து “இது ஆராவோட ரூம்!!” என்று மயூரியின் கண்களை பார்த்து கூறிவிட்டு சென்றுவிட, அவன் சொன்னதின் அர்த்தம் புரிந்தவளுக்கு குப்பென்று முகம் சிவந்தது.
அதை கண்டும் காணாமல் அந்தக் கப்போர்ட்டில் தேடி இலகுவான ஒரு சல்வார் எடுத்து மாற்றிக் கொண்டு வந்தாள் ஆராதனா. எப்பவுமே அவள் அமைதிதான். ஆனால் இன்று கடலின் ஆழ்ந்த அமைதி! அந்த அமைதிக்கு பின்னே இருக்கும் ரகசியம்தான் என்ன? என்று புரியாமல் மயூரி “என்னடி நடக்குது இங்க? நான் என்னமோ அவர் எனக்காக தான் வந்தாருனு பார்த்தா.. கூட உன்னை கூட்டிட்டு வந்துட்டார். அங்கு அண்ணனோட உன் கல்யாணம்? எனக்கு ஒண்ணுமே புரியல! என்ன சொல்றதுன்னு தெரியல.. இவரு ஒன்னும் சொல்ல மாட்டேங்குறாரு. ஆனால் எப்படி நீ இதுக்கு சம்மதிச்ச.. எனக்கு மண்டை எல்லாம் வெடிக்கிற மாதிரி இருக்குது. ஆனா உனக்கு எல்லாம் தெரிஞ்சு இருக்கு. தெரிஞ்சுதான் நீ அவரை அண்ணனு கூப்பிடுற. அது உன் முகத்திலே தெரியுது. தயவுசெய்து சொல்லு ஆரா.. என்ன நடக்குது இப்போ.. என்ன நடந்தது அப்போ?” என்று அவள் கேட்க மீண்டும் ஒரு புன்னகையை சிந்தினாள் ஆரா.
“இங்கே பாரு மயூ.. இந்த விஷயத்தை சொல்லக்கூடியது அண்ணா மட்டும்தான். நீ எதா இருந்தாலும் அவர்கிட்டயே கேட்டுக்கோ.. இதை பத்தி உன்கிட்ட என்னால ஒரு வார்த்தை கூட பேச முடியாது. காலையில கண் விழித்தது. எனக்கு ஒரு மாதிரி இருக்கு. நான் கொஞ்சம் தூங்குறேன்” என்று ஆராதனா படுத்து கண்களை மூட.. ஆனால் தூங்கவில்லை என்பது அவளது உடல் மொழியிலேயே தெரிந்தது.
“என்னங்கடா நடக்குது? ஒண்ணுமே புரியலையே?” என்று ஆராதனாவை பார்த்தவாறு சோபாவில் சாய்ந்து அமர்ந்தவள் அப்படியே நன்றாக உறங்கி விட்டாள். ஏதோ அந்தரத்தில் பறக்கும் உணர்வு வர அந்த உணர்வு இன்னும் பிடிக்க இன்னும் வாகாக சாய்ந்து தூங்கியவள் அறியவில்லை அவள் ஆரனின் நெஞ்சத்தை மஞ்சம் கொண்டு இருக்கிறாள் என்று!! அவர்கள் அறையின் மெத்தையில் அவளை கிடத்தினான். மிதமான ஏசி இரவுமின் விளக்கை எரிய விட்டு வெளியே வர விஜயேந்திரன் ஆராதனாவோடு பேசிக்கொண்டிருந்தார். இவனும் போய் அருகே அமர்ந்து இடையிடையே பேச.. பல ஆண்டுகளுக்கு பின்னாலான அந்த குடும்ப பிணைப்பு சூழ்நிலை இதமாக உணர்ந்தார் விஜயேந்திரன்.
இவர்களுக்கு எதிர்ப்பதமான மனநிலையில் இருந்தனர் செந்தூரன் குடும்பத்தில். “வழி விடு.. வழி விடு..” என்று மெய்யறிவு ஓடினார். வேதவள்ளி தட்டிப் பார்த்து எழும்பாமல் இருக்க.. அவரை அள்ளிக்கொண்டு “ஹாஸ்பிடலுக்கு போறேன்.. நீங்க பார்த்துக்கோங்க” என்று அவர் விரைய அவர் பின்னாலேயே நிமிலன் நிரஞ்சன் ஓட.. குருபரன் அதிர்ச்சியில் தேங்கி நிற்க, வத்சலா கணவன் கையை பற்றி உலுக்கியவர் “ஆனது ஆகிப்போச்சு முதல்ல வந்தவங்களை கவனிங்க” என்றவர், மோகனவள்ளியை அழைத்துக் கொண்டு ரஞ்சனிக்கு செய்ய வேண்டிய சடங்குகள் செய்ய வைத்து நல்லபடியாகவே ரஞ்சனியை புகுந்த வீட்டுக்கு அனுப்பி வைத்தனர்.
மருத்துவமனையில் “பெரிதாக ஒன்றுமில்லை அதிர்ச்சியில் வந்த மயக்கம். வேண்டுமென்றால் இன்று ஒரு இரவு தங்கிவிட்டு காலையில் அழைத்துச் செல்லுங்கள்” என்று மருத்துவர் கூற.. வேதவள்ளியும் மயக்க நிலையிலேயே இருக்க “ஆனால் அவ மயக்கம் தெளியலையே டாக்டர்!” என்று மெய்யறிவு கவலையுடன் கேட்டார். “இல்லையில்லை.. மயக்கமில்ல ஆழ்ந்த உறக்கத்தில் இருக்காங்க. தூங்கி எழுந்தால் சரியா போய்டும்” என்றார்.
மெய்யறிவோடு நிமிலன் நிரஞ்சன் வத்சலா இருக்க மற்றவர்கள் வீட்டுக்கு சென்றுவிட்டனர்.
நிமிலன் ஒரு வார்த்தை பேசவில்லை நிரஞ்சனிடம், முறைத்துக் கொண்டே இருந்தான். நிரஞ்சனுக்கும் லேசாக மனதில் குற்ற உணர்வு. ‘முன்னமே இதை சொல்லியிருக்கலாமோ? நம்மால் நிமிலன் திருமணமும் நின்று விட்டதே!” என்று அவனுடைய பார்வையைத் தவிர்த்தபடி அமர்ந்திருந்தான்.
ஒரு கட்டத்திற்கு மேல் நிரஞ்சன் நிமலனை தவிர்க்க முடியாமல் அவன் அருகே வந்து “உண்மையிலேயே ஆரனை பற்றி எனக்கு ஏதும் தெரியாது மச்சான். ரெண்டு பேரும் ஒருத்தரை ஒருத்தர் விரும்புறாங்க எனக்கு தெரிஞ்சது. மயூ இந்த கல்யாணத்துக்கு சம்மதிக்கலைனா உனக்கும் ஆராவுக்கும் கல்யாணம் நடக்காது. எங்கம்மா குட்டையை குழப்பும் நினைச்சு தான் நான் அவங்களுக்கு ஹெல்ப் பண்ணுனேன். காதலிக்கிற ரெண்டு ஜோடி நல்லபடியா கல்யாணம் பண்ணிக்கனும்னு நல்ல எண்ணத்தில்தான் தான் நான் ஹெல்ப் பண்ண போனேன். ஆனா.. ஆரன் எப்படிடா நம்ம தாத்தாவுக்கு பேரனா இருக்க முடியும்? அதுவும் இல்லாம ஆராதனா அவனுக்கு தங்கச்சினு சொல்றான்? எனக்கு ஒண்ணுமே புரியல டா!” என்று தன்னிலை விளக்கம் கொடுத்தவனை முதலில் முறைத்தாலும்.. எய்தவன் இருக்க அம்பை நோவது தவறு என்று புரிந்த நிமிலன் “இது எல்லாத்துக்கும் வேதவள்ளி அத்தையும் மாமாவும் தான் பதில் சொல்ல முடியும்” என்றான் இறுக்கமான குரலோடு..
“நீங்க ரெண்டு பேரும் வீட்டுக்கு கிளம்புங்க பா.. நானும் தங்கச்சியும் தான் இருக்கிறோமே.. நாங்க பார்த்துக்குறோம். காலையில வாங்க டிச்சார்ஜ் பண்ண” என்ற மெய்யறிவு திரும்ப அறைக்குள் சென்று விட, நிரஞ்சனும் நிமிலனும் வீட்டுக்கு கிளம்பினார்கள் அந்த அர்த்த ராத்திரி வேளையில்…
வீடே விழாக்கோலம் பூண்டிருந்த அந்த தோரணையும் அலங்காரமும் இன்னும் மாறவில்லை. அதற்குள் என்னென்ன நடந்துவிட்டது? நேற்று இரவு கண்கள் முழுவதும் இனிய கனவுகளோடு இருந்தவனுக்கு இன்றைய இரவு வெறுமையாய் இருந்தது…
அறைக்குள் நுழையவே அவனுக்கு பிடிக்கவில்லை எங்கும் எதிலும் ஆராதனா…
சிறிது நேரம் அமைதியாகச் சென்றது. மனதைக் கட்டுப்படுத்த முயன்றான். ஆனால் அது பலனளிக்கவில்லை. அவனுக்கு அவள் மீது ஆசையும், கோபமும் ஒருங்கே பெருகியதே தவிர சிறிதும் குறையவில்லை. கண்களை மூடிய நிமிலனுக்கு ஆராவின் நினைவு இன்னும் அதிகமாக வந்தது. அவன் கண்களை மூடி தூங்கத்தான் முயன்றான். ஆனால்.. ஆராவின் நினைவுகள் அதிகமாகி அவன் மனதைக் கொஞ்சம் வதைத்தது. அவளின் அழகு முகம் அடிக்கடி வந்து அவனை ஏங்கச் செய்தது.
தூக்கம் பிடிக்காமல் கொஞ்ச நேரம் புரண்டு புரண்டு படுத்துக் கொண்டிருந்தான். இடையிடையே பெருமூச்சுக்களை வெளியேற்றிக் கொண்டிருந்தான். ஆராவின் நினைவில் இருந்து அவன் மீள்வது அவ்வளவு எளிதான காரியமாக இருக்கப் போவதில்லை என்பதை அவன் நன்றாகவே உணர்ந்தான்.
‘ச்சே.. அவளை போய் எதுக்கு இந்த அளவுக்கு நேசிச்சு தொலைச்சோம்!’ என்று மனதுக்குள்ளேயே வருத்தப் பட்டான்.
இதற்கும் மற்ற காதலர்களைப் போல காதலை சொல்லிக்கொண்டது இல்லை.. விழி வழியே காதல் பாஷைகள் பேசிக்கொண்டது இல்லை.. ஆனால் அவள் இருக்கும் இடத்தில் இவனும் இருப்பதாய் பார்த்துக் கொள்வான். அவளை தன் கண் வட்டத்திலேயே வைத்து இருந்தான். மயூரியை அழைத்து செல்வது போல அவளைப் பார்க்கவே சொல்லுவான்.
இத்துணை நேசம் கொண்ட என்னை எப்படி அவளால் தூக்கி போட முடிந்தது? என்னை தூக்கி எறிந்துவிட்டு அவளது அண்ணனோட செல்ல எப்படி? எப்படி முடிந்தது?? என்று நினைத்து நினைத்து வருந்தியவனின் கை முட்டிகள் இறுகி எதிரே இருந்த டீபாவில் குத்த கண்ணாடி டீப்பாய் சில்லு சில்லாக சிதறியது.
கண்ணாடி சில்லுகள் இவன் கைகளில் கிழித்து ரத்தம் பெருகியது. அதோட “ஆராஆஆஆ!!!” என்று புலம்பியவன் இரத்தப் பெருக்கில் மெல்ல மெல்ல மயக்கமானான்.
இங்கே ஆராதனா அண்ணன் தோள் விளைவில் சாய்ந்திருந்தாள். “ஐ அம் வெரி சாரி ஆரா.. எனக்கு வேறு ஆப்ஷன் தெரியல. உன் கல்யாணத்தை நிறுத்துறதை தவிர..” என்று தங்கையின் தலையை ஆதரவாக வருடியவாறு ஆரன் கூற..
“சச்சை.. உன்னை நான் ஏன் தப்பா நினைக்க போறேன் ணா.. அதுவும் இல்லாம நீ அவ்வளவு சொன்னதுக்கு அப்புறம். அதுவும் அப்பா பட்ட கஷ்டத்தை கேட்ட எனக்கே அப்படி வலித்தது என்றால் நேரில் பார்த்த உனக்கு எப்படி எல்லாம் இருந்திருக்கும். கவலைப்படாதே!! எல்லாம் மாறும்” என்று அவனுக்கு ஆறுதல் அளிக்க “சரி போய் ரெஸ்ட் எடு!” என்றவன், இரண்டு அடி எடுத்து வைத்து பின் திரும்பியவன் சங்கடமாக ஆராவை பார்க்க..
“என்ன ணா.. எதாவது சொல்லனுமா? சங்கடம் வேணாம் சொல்லு சும்மா” என்றாள் ஆரா..
“அது உன் கல்யாணத்தை நிறுத்தி விட்டு.. நான் மட்டும் கல்யாணம் பண்ணிக்கிட்டேன். கொஞ்சம் கில்ட்டியா ஃபீல் பண்றேன்” என்றவன் அவளை நேர்கொண்டு பார்க்க முடியாமல் திரும்பி சிகையை கோதிக்கொள்ள.. அருகே வந்து அவனது கைகளை தனது கைகளுக்குள் பொதித்துக் கொண்டவள், “இந்த மாதிரி எண்ணம் எல்லாம் உனக்கு வரவே வேண்டாம் ணா.. மயூவை எவ்ளோ லவ் பண்ற நீ.. அவ உன்னை எவ்வளவு லவ் பண்றான்னு எனக்கு தெரியும் தானே.. அவளோடு சந்தோஷமான வாழ்க்கையை வாழு. என் வாழ்க்கை எங்கேயும் போய் விடாது. எனக்கானது என்னிடம் கண்டிப்பா தேடிவரும். இந்த பிரிவு கூட அன்பை பலப்படுத்தத்தான்” என்று அன்னையாக மாறி அவனுக்கு அறிவுரை கூற.. அதில் கலங்கிய கண்களை தங்கை அறியாமல் ஒளித்தவன் “போய் தூங்கு” என்று அனுப்பி வைத்தான்.
அறைக்குள் வர மயூரி ஜன்னல் வழியே தெரிந்த கடலை தான் வெறித்துக் கொண்டிருந்தாள். ஆரன் சிரித்துக்கொண்டான். பால்கனியில் உட்கார்ந்து நான் பார்த்தால், இவ ஜன்னல் வெளியே பார்க்கிறாள் என்றவன் மெல்ல கதவை தாழிட்டு அவளை நெருங்கினான்.
சான்ட்டின் இரவு உடையில் அவளது உடல் வனப்புகள் நெளிவுகள் அவனை கிறக்கமுற செய்ய.. “நாம சும்மா இருந்தாலும் இவ நம்மை சும்மா இருக்க விட மாட்டா போலயே.. டெம்ட் பண்றாளே!!” என்று நெற்றியை நீவிக் கொண்டு பார்வையை திருப்பிக் கொண்டவனால் வெகுநேரம் தாக்கு பிடிக்க முடியாமல் மீண்டும் விழிகளைத் திருப்பி அவளை தான் பார்த்தான்.
‘ஆமாம் நான் ஏன் தயங்குறேன்? இனி அவள் என் மனைவி என்ற உரிமை இருக்கிறது தானே” என்று பின்புறம் இருந்து அவளை இறுக்கமாக அணைக்க.. முதலில் அந்த அணைப்பில் குழைந்ததவள், அடுத்த நொடி அவனை தள்ளிவிட்டு திரும்பி பால்கனி நோக்கி சென்றாள்.
சட்டென்று அவள் கையை பிடித்து இழுக்க அவன் உடலோடு உடல் ஒட்டி நின்றாள். அவ்வளவு நெருக்கத்தில் அவனைப் பார்த்தவளுக்கு நடுக்கம் இன்னும் இன்னும் கூடவே செய்தது.
மெல்லிய இதழ்கள் அவனின் அழுத்தமான உதடுகளை மிக நெருக்கத்தில் சந்தித்தன. அவளின் இனிமையான மூச்சுக் காற்று அவன் முகத்தில் வந்து மோதியது. இரவு நேர கடல் காற்று அவள் குழல்களை கலைத்து விளையாடி செல்ல.. அது அவளை வனமோகினியாக அவனுக்கு காட்ட.. அவன் கைகள் மெல்ல அவள் இடுப்பைச் சுற்றி படர்ந்து அவளைத் தன்னுடலுடன் சேர்த்து அணைத்தன. அவளின் மெத்தென்ற பெண்மையின் முன் பக்கம் முழுவதும் அவன் மீது படர்ந்தது. தன் கைகளை இறுக்கி நடுக்கத்தை மறைத்துக் கொண்டாள் பெண்.
சட்டென அவள் உதட்டில் தன் உதட்டை உறவாட இவன் முனைய… அவளோ முகத்தை திருப்பி முத்தத்தை தவிர்க்க.. “என்னை தவிர்க்க முடியாது மயூ பேபி.. சம்ஜே!!” என்றவனின் மயக்கும் குரலில் அவள் திரும்ப, இப்போது வாகாக உறவாடியது உதடுகள் இரண்டும்.
அவனுக்குள் ஜில்லென ஒரு குளிர்ச்சியான உணர்ச்சி பரவ.. அவளை இன்னும் இறுக்கி நெருக்கமாக்கினான் அவளுக்கு.
இருவர் உதடுகளும் பொருந்திக் கொள்ள.. கண்கள் இரண்டு ஒன்றோடொன்று பிணைந்து கொள்ள.. இருவர் இதயமும் அடுத்தவர் நெஞ்சினில் பலமாய் துடிக்க.. கைகள் இரண்டும் பெண்ணவளை இறுக்கி தழுவ..
அவளது கைகளை தன்னை சுற்றி படர விட்டுக் கொண்டவன், அவளது அழகிய இதழ்களை அவன் உதட்டருகில் கொண்டு வந்தவன்,
மெல்ல முணுமுணுத்தான்
“கிஸ் மீ மயூ பேபி..” என்று!!
அதற்கு பின்னான முத்தாடல்களுக்கும்..
உடலாடல்களுக்கும்.. பொறுப்பு துறப்பானது இருவருக்கும்.
“ஆரன்.. ஆரன்” என்று கிறக்கமும் மயக்கமுமாக அவளது சிணுங்கலும் முனகலும் இடை விடாமல் அவன் செவிகளை அறைந்து கொண்டே இருந்தது அவ்விரவில்..
மயூரியிடம் இருந்த தயக்கம்.. கூச்சம்.. நடுக்கம்.. பயம் எல்லாம் முற்றிலுமாக அவளை விட்டு நீக்கினான் தன் உதடுகளை கொண்டும்.. விரல்களை கொண்டும்..
மெல்லினமாக ஆரம்பித்தவன் இடையிடையே வல்லனித்தை தத்தெடுத்து முழுவதுமாக வன்மைகக்கு மாறினான்.
அவனது இத்தனை வருட தாபம் மோகம் எல்லாம் சுனாமியாய் பொங்கி அவளை வாரி சுருட்டி கொள்ள.. அவனின் மோகநதியில் பயணித்தவள் சட்டென்று பிரிந்து எழுந்து அமர, மிட்டாய் பிடுங்கிய பிள்ளையாய் மிரண்டு விழித்து கோபங்கொண்டான் ஆரன்.
“ம்ப்ச்.. இப்போ என்னடி” என்று முற்றிலுமாக தாபம் வடியாத குரலில் அவன் கேட்க..
“அது.. அது.. வந்து..”
“என்ன வந்து போய்னு.. முதல்ல இப்போ வா.. வா டி!!” என்று அவன் அணைக்க முயல, குனிந்து நழுவி தப்பித்து ஒரு ஓரமாய் நின்றாள் ஏதோ வில்லனிடமிருந்து தப்பிக்கும் நாயகி போல..
உச்சியில் விர்ரென்று ஏறிய தாபம் இறங்க மறுக்க.. தன்னை மறுத்து போகும் பெண் மீது ஆணனவனுக்கு ஈகோ சுள்ளென்று ஏறியது உச்சிக்கு இப்போது.
கண்கள் இடுங்க அவளை பார்த்தவன், “அப்போ என் மேல உனக்கு காதல் இல்லை.. என் கையிலால எதுக்கு தாலி வாங்குன? என் கையில் எதுக்கு உருகி வழிஞ்ச? திகட்ட திகட்ட என் கிட்ட முத்தம் வாங்குனவ மொத்தம் கொடுக்க முடியல.. ஏன்? ஏன்டி?” என்று அவன் கோபங்கொண்டு கத்த..
அதுவரை அமைதியாக இருந்தவள், “யோவ்.. மும்பை வடாபாவ் வாயை மூடு யா.. யாருக்கு.. யாருக்கு காதல் இல்லை? எனக்கா? உனக்கா?” என்று சிலிர்த்து கொண்டு நிமிர்ந்து நிற்கும் மனைவியை பார்த்தவன், “வடா பாவ்ஆ!!” என்று திகைத்தான்.
அசுரன் அதகளம் இனி..
22
“நான் என் உன் மேல வைச்சிருந்த காதலுக்கே நியாயம் செய்திட்டேன். ஆனா.. நீ என்ன பண்ணின? எனக்கு தாலி கட்டுனதை தவிர.. என்னை பொத்தி பொத்தி வளர்த்த குடும்பம் மொத்தத்தையும் பிரிந்து உன் பின்னால வந்திருக்கேன்.. என்னை பார்த்து நீ காதல் இல்லைன்னு சொல்ற? அப்படி நீ என்ன செய்த காதலுக்காக சொல்லு? எனக்காக என் அண்ணன் கிட்ட சண்டை போட்டியா? எங்க அப்பா அம்மா கிட்ட தான் பொண்ணு கேட்டியா? எனக்கு கல்யாணம் சொன்னதும் என்ன ஏதுன்னு விசாரிக்காம.. என்னை என்ன பாடுப்படுத்தின.. அதெல்லாம் கூட பொறுத்திக்கிட்டேன். ஆனா என்னை நீ சந்தேக படுற.. ம்ம்ம். என் அண்ணன் கல்யாணம் நல்லா படியாக ஆரா கூட நடக்கனும் தான் நான் அமைதியா இருந்தேன். ஆனா நீ வந்து எல்லாத்தையும் கெடுத்திட்ட..” என்று வேங்கையென உறுமியவளை கட்டிலில் ஜம்பமாக அமர்ந்து கூரிய விழிகளுடன் பார்த்துக் கொண்டிருந்தான் ஆரன்.
“என் தங்கை பற்றி நீ கவலைப்பட வேண்டாம் மயூரி!!” என்றான் அழுத்தமான குரலில்…
“ஏன்? ஏன்? நான் தான் கவலைப்படனும். இத்தனை நாளா நான் தான் அவளுக்கு. இனியும் அண்ணி ஸ்தானத்துலேயும் நான் தான் செய்யனும்” என்றவளை பார்த்தவனின் பார்வையில் என்ன இருந்தது என்று கணிக்க முடியவில்லை.
“காதல்.. காதலனு சொல்லுறிங்களே.. இப்போ ஒரு ஆறு மாசம் இருக்குமா உங்க காதல்? அவளோடு எத்தணை வருட காதல் தெரியுமா என் அண்ணன் மேல? அத்தனையும் தூக்கி போட்டுட்டு உங்க பின்னாடி வந்துட்டா.. அவளுக்கு நீங்க என்ன நியாயம் செய்திங்க? சொல்லுங்க? உங்களுக்கு என்னவோ என் குடும்பத்தாரால நடந்தியிருக்கு. அதுக்கு பழி தீர்க்க நீ பயன்படுத்தியது உங்க மேல நான் வைச்ச காதலையும்.. ஆரா உங்க மேல வைச்ச பாசத்தையும்.. அது புரியுதா உங்களுக்கு?.. இன்னைக்கு ஆராவுக்கும் எங்க அண்ணனுக்கு கல்யாணம் நடக்க வேண்டியது.. ஆனா.. இப்போ அவ தனிமைல.. அவள தவிக்கவிட்டுட்டு என்னால உங்க கூட சந்தோஷமாக இருக்க முடியாது.. நீங்க நல்லா தனியா உட்கார்ந்து யோசிங்க.. நான் அங்க தூங்க போறேன்” என்றவள் அவன் “என்ன?? அங்க தூங்க போறியா??” என்று வாய் திறக்கும் முன் ஓடி விட்டாள்.
“மயூரி!!” என்று அவள் சொன்ன நியாயங்களை கிரகிக்க முடியாமல் மெத்தையில் குத்தினான் ஆரன்.
அசுரனுக்கு அசூரியாய் ஆகிப்போனாள் மயூரி!!
ஆராவின் அறை கதவை தட்ட, திறந்தவளின் முகமோ சிவந்து இமைகள் எல்லாம் வீங்கி இருந்தது.
அவளை முறைத்தப்படி உள்ளே வந்த மயூரி மெத்தையில் படுத்துக் கொள்ள..
“ஏய் மயூ.. நீ என்ன இங்க வந்து படுக்குற? போ.. போ.. உங்க ரூம்க்கு போ” என்று விரட்ட.. அவளது குரல் ஞஙணமன பாடுவதில் இருந்தே ஆரா அழுதது தெளிவாக புரிய..
“ஆரா.. நான் இங்க தான் தூங்குவேன்” என்றவள் போர்வையை போரத்திக் கொண்டு தூங்க முற்பட.. அவளிடமிருந்து போர்வையை பறித்தவள் “திஸ் இஸ் டூ மச் மயூ.. ஒழுங்கா எந்திரிச்சு ரூமுக்கு போ.. எங்க அண்ணன் பாவம்!!” என்றாள்.
இன்னும் நன்றாக தலையணையில் சாய்ந்து அமர்ந்தவள் “உங்க அண்ணன் மட்டும்தான் பாவமா? அப்ப எங்க அண்ணன்?” என்று கூரிய வாளின் கூர்மையோடு வந்தது மயூரியின் வார்த்தை.
அதற்கு பதில் சொல்ல முடியாமல் முகத்தை திருப்பிக் கொண்டாள் ஆராதனா. அவளுக்கு தெரியும் இத்தனை வருடம் தான் கொண்ட காதலை ஒரே கணத்தில் உதறித்தள்ளி நிமிலனுக்கு தீராத வலியையும் ரணத்தையும் கொடுத்துவிட்டோம் என்று!!
தன் மீது பாசம் அன்பு பொழிந்த வேதவள்ளிக்கும் மெய்யறிவுக்கும் பெரும் துயரத்தையும் தீராத காயத்தையும் கொடுத்து விட்டோம் என்று!!
ஆனால் அதை விட.. அதிக ரணத்தோடு வலியோடு கண்களில் உயிரை தேக்கி உருக்கும் பார்வை பார்க்கும் விஜயேந்திரனின் முகம் ஞாபகத்துக்கு வர.. அனைத்தையும் கண்ணை மூடி கட்டுப்படுத்திக் கொண்டாள் ஆராதனா!!
“என் அப்பாவிற்கு நடந்தது மிகப்பெரும் கொடுமை தெரியுமா? ஈருடல் ஓருயிராய் வாழ்ந்த துணையை பிரிவது எவ்வளவு துக்கம் தெரியுமா? ஆனால் இதுநாள் வரைக்கும் உன் அண்ணனை நான் மட்டும்தான் மனதில் சுமந்து கொண்டிருக்கிறேன். பதிலுக்கு ஒரு பார்வை கூட பார்த்தது கிடையாது உன் அண்ணன் தெரியுமா? ஒத்துக்கொள்கிறேன் உன் அண்ணனுக்கு இன்னைக்கு ஏற்பட்டது அவமானம் தான். அதற்கு காரணம் நான் மட்டுமே அல்ல. அதை காலம் அவருக்கு உணர்த்தும். இப்போது உன் அண்ணன் அனுபவிப்பது எல்லாம் வலியே இல்லை என் அப்பாவின் வலிக்கு முன்..” என்றாள் உடைந்த குரலில் ஆராதனா.
அவள் என்னதான் பக்கம் பக்கமாக வசனம் பேசினாலும் மனதுக்குள் நிமிலனுக்காக மருகிக் கொண்டிருக்கிறாள் என்று நன்றாகவே புரிந்தது மயூரிக்கு.
“சரி அதெல்லாம் விடு ஒரு போன் பண்ணி எங்க அண்ணன் கிட்ட மட்டும் பேசு.. எந்த நிலைமையில் இருக்கான்னு தெரியல? அட்லீஸ்ட் உன் பக்கம் நியாயத்தை சொல்லு.. தப்பே செய்யாத அவனுக்கு எதுக்கு தண்டனை!!” என்று அவளை மாற்றும் வேலையில் இறங்கினாள் மயூரி.
“வேணா.. வேணா.. உங்க அண்ணன் பயங்கர கோபத்தில் இருப்பாரு என் மீது.. இந்த நிலையில் நான் போன் செய்தால் அவருடைய கோபம் அதிகரிக்குமே தவிர குறையவே குறையாது!!” என்று இவள் மன்றாட அவளும் விடாமல் “போன் பண்ணு.. போன் பண்ணு!!” என்று நச்சரிக்க ஒருவழியாக தைரியத்தை வரவழைத்துக்கொண்டு போன் செய்தால் நிமிலன் ஃபோன் எடுக்கவே இல்லை.
“நான் சொன்னேன் தானே கோபமா இருப்பார்னு.. என் நம்பரை பார்த்ததுமே அவர் எடுக்கல” என்று ஆராதனா வருத்தமாக கூற..
இரு.. இரு.. நீ அப்படியெல்லாம் யோசிக்காதே!! நாம நிரஞ்சனுக்கு போன் செய்து பார்க்கச் சொல்லலாம்” என்று அவள் நிரஞ்சனுக்கு போன் செய்ய..
மயூரி நம்பர் பார்த்ததுமே அவனுக்கு மனதில் திட்டினான். “இவங்களுக்கு உதவி செய்யப்போய் குடும்பமே என்னை இப்போ ஏதோ வில்லனை முறைப்பது போல முறைத்துக் கொண்டே இருக்கு.. இப்ப எதுக்கு இவ மறுபடியும் போன் பண்றானு தெரியலையே??” என்று யோசனையோடு எடுத்து காதில் வைத்தான் நிரஞ்சன்.
“நிரஞ்சா.. அண்ணா எங்க.. எவ்வளவு நேரமா போன் அடிக்கிறேன்.. எடுக்கவே இல்லை” என்று மயூரி பதட்டத்துடன் கேட்டாள்.
“ஆமா அப்படியே உங்க அண்ணன் கிட்ட சொல்லிட்டு கல்யாணம் பண்ணி புருஷன் வீட்டுக்கு போய் இருக்க.. நீ போன் பண்ணவுடன் தங்கச்சி மேல பாசத்துல பாஞ்சு போன எடுத்துட போறான். போவியா அங்குட்டு..” என்றான் சலிப்பாக..
“இல்ல ணா.. ஏதோ சரியில்லை அவர் போன் ரிங் போயிட்டே இருக்கு எங்க மேல கோபம்னா போனை கட் பண்ணி இருப்பார்” என்று லவுட் ஸ்பீக்கரில் அவன் பேசியதை கேட்ட ஆராதனா பதில் கூறினாள்.
“நீயும் அங்க தான் இருக்கியா? நீங்க ரெண்டு பேரும் பண்ணி வச்சதுக்கு ஏற்கனவே பெரியம்மா ஹாஸ்பிடல் இருக்காங்க.. அவனாவது நிம்மதியா தூங்கட்டும். சும்மா சும்மா போன் பண்ணி அவனுக்கு தொந்தரவு செய்யாதீங்க” என்றான்.
“என்னது அம்மாவுக்கு உடம்பு சரியில்லையா? இப்ப எப்படி இருக்காங்க? என்ன ஆச்சு? டாக்டர் என்ன சொன்னாங்க? ஒன்னும் பிரச்சனை இல்லையே? அம்மாவுக்கு பிபி வேற இருக்கு.. இப்ப எப்படி இருக்காங்க? சொல்லு ணா” என்று படபடவென கேள்வி கணைகளைத் தொடுத்தாள் ஆராதனா.
“இவ்வளவு அக்கறைப்படுறவங்க அவன் கூப்பிட்ட உடனே போகாமல் இருக்கணும். அப்படி என்னதான் நம்ம குடும்பத்துக்கும் அவனுக்கும் சம்மந்தம்னு தெரியல.. எல்லாத்துக்கும் பதில் பெரியம்மா வந்தா தான் கிடைக்கும். அவங்களுக்கு ஒன்னும் இல்ல.. அதிர்ச்சியில வந்த மயக்கம்னு சொல்லி இருக்காங்க. இப்போ நல்லா இருக்காங்க” என்றான் கொட்டாவி விட்டுக்கொண்டே..
“நாங்க எவ்வளவு பதட்டத்தில் இருக்கோம்.. இப்போ உனக்கு தூக்கம் முக்கியமா? ஒழுங்கா போய் அண்ணன் என்ன பண்றானு பாத்துட்டு எனக்கு போன் பண்ற.. இல்ல..” என்று மரியாதை எல்லாம் பறக்கவிட்டு மயூரி மிரட்ட..
“இதுவும் பேசுவிங்க.. இதுக்கு மேலயும் பேசுவிங்க நீங்க ரெண்டு பேரும்.. நீங்க எல்லாம் காதல் செஞ்சுட்டு நிம்மதியா இருக்கீங்க.. உங்களுக்கு ஹெல்ப் பண்ண போய் நான்தான் அல்லோலகல்லோல பட்டுட்டு இருக்கேன். ஒழுங்கா ரஞ்சனி கல்யாணம் முடிஞ்சதும் உன் கழுத்துல தாலி கட்டி இருந்தா எனக்கு இவ்ளோ பிரச்சனை வந்திருக்காது” என்றான்.
“என்னது என் கழுத்துல நீ தாலி கட்டி இருப்பியா? அவ்வளவு துணிச்சலா உனக்கு” என்று மயூரி அதட்டலாக கேட்க…
“ஐயையோ மைண்ட் வாய்ஸ்னு நினைச்சு சத்தமா பேசிட்டோமோ?” என்று அவன் முணுமுணுக்க..
இருக்கும் மனநிலையில் இவனது பேச்சு இருவருக்கும் புன்னகைதான் கொடுத்தது.
“சரி.. சரி போய் சீக்கிரம் பார்த்துட்டு வந்து சொல்லு!!” என்று இவர்கள் போனை கட் செய்தனர்.
“நிமிலா.. நிமிலா..” என்று அறைக்கதவை நிரஞ்சன் தட்ட அதுவோ சாத்தப்படாமல் இருந்தது.
உள்ளே நுழைந்த நிரஞ்சன் ரத்தம் பெருக்கெடுத்து நினைவு தப்பி மயக்கத்திலிருந்து நிமிலனைப் பார்த்து “நிமிலாஆஆஆ” என்று அந்த வீடே அதிர கத்தினான்.
இங்கே இரு வீட்டிலும் ரணகளமும் குதூகலமும் மாறி மாறி இருக்க.. அங்கே ரஞ்சனியோ முதல் இரவில் அறையில் கடுப்போடு அமர்ந்திருந்தாள்.
“அந்தப் படுபாவி ஆரன் முதலிலேயே வந்து என் கல்யாணத்தையும் சேர்த்து நிறுத்தி இருக்க கூடாதா? இந்நேரத்துக்கு நான் என் அத்தானை கல்யாணம் பண்ணிக்கிட்டு சந்தோஷமா ஃபர்ஸ்ட் நைட் கொண்டாடியிருப்பேன். இப்போ இந்த செந்தில்நாதனோடு எனக்கு ஃப்ர்ஸ்ட் நைட்டா?? நினைக்கவே கொமட்டுதே.. அடேய்.. செந்திலு.. தில்லு இருந்தா என்னை தொடுடா பார்க்கலாம்” என்று சூளுரைத்துக் கொண்டிருந்தாள்.. அந்த தில்.. செந்தில்.. சற்று நேரத்தில் அவளை பந்தாட போவது தெரியாமல்…
வருவான் அசுரன்…
Настенные экраны для проектора: качество изображения и стильный дизайн
купить экран для проектора [url=https://proekcionnye-ehkrany.ru]https://proekcionnye-ehkrany.ru[/url] .
super sis sema intersting
Super sema super super super super ❤❤❤❤❤❤❤❤❤❤
Подключите интернет в офис: настройка сети и обслуживание
интернет для организаций [url=https://internet-v-ofis1.ru]https://internet-v-ofis1.ru[/url] .