23
செந்தில்நாதன் வீட்டுக்கு ஒரே பையன் அவனுக்கு மூத்ததாக பெண். திருமணமாகி கன்னியாகுமரியில் பெரும் கூட்டு குடும்பத்தில் மருமகளாக வாழ்கிறாள். இவர்களும் இங்கே பெரும் குடும்பம்தான். அதனால் தான் செந்தூரார் குடும்பத்தில் இருந்து ஏதாவது ஒரு பெண்ணை தம் மகனுக்கு கட்டினால் இந்த கூட்டுக் குடும்ப அமைப்பு மாறாமல் இருக்கும் என்பது செந்தில்நாதனின் தந்தை தனபாலனின் விருப்பம்.
என்னதான் பணம் கொண்ட பணக்காரர்கள் நிறைய இருந்தாலும் அந்த பாரம்பரியம் குடும்ப சூழல் பிள்ளைகள் வளர்ப்பு என்று ஒன்று இருக்கிறது அல்லவா? அதற்குத்தான் அவர் முக்கியத்துவம் கொடுத்து ரஞ்சனியை மகனுக்கு கட்டி வைத்தது.
ஆனால் வீட்டுக்கு ஒன்று உதவாதது இருக்கும் என்பது போல மோகனாவும் ரஞ்சனியும் அப்படிப்பட்டவர்கள் என்பதை அவர்கள் அறியவில்லை. பூவோடு சேர்ந்த நாறும் மணக்கும் என்பது போல தெய்வயானை அம்மாள் வளர்ப்பில் அவர்கள் மோகனாவை தனியாகப் பிரித்துப் பார்க்கவில்லை.
உள்ளே நுழைந்த செந்தில் எப்படி பேச்சு எடுக்க என்று சிறிது நேரம் யோசித்தான். ஏற்கனவே அவர்கள் குடும்பத்தில் நடந்த குளறுபடிகளில் இவளும் எங்கே பயந்து இருப்பாளோ அல்லது மனம் கலங்கி இருப்பாளோ.. என்ன ஆறுதல் சொல்லித் தேற்றுவது என்று அவன் மெதுவாக அவள் தோளை தொட..
சட்டென்று கைகளை தட்டி விட்டவள் “இங்க பாரு இந்த மாதிரி தோடுற வேலை எல்லாம் வச்சுக்காத.. நீ எவனா இருந்தாலும் என் கிட்ட இருந்து தள்ளி தான் இருக்கணும். கீப் டிஸ்டன்ஸ் மேன்!!” என்று அவள் கூறிய தினுசே அவனுக்கு அவ்வளவு அதிர்ச்சி.
மரியாதை இல்லாத பேச்சு.. திமிரான அணுகுமுறை.. அவளது உடல் மொழியில் பயமோ கண்களில் வருத்தமோ இல்லை என்பதை சட்டென தெரிந்து கொண்டான் அவன்.
“இங்க பாரு ரஞ்சனி முதல்ல ஒக்காரு.. நமக்குள்ள பேசித் தீர்த்துக்கலாம்!” என்று மெதுவாக சூழ்நிலையை இலகுவாக்க முயன்றான் செந்தில்நாதன்.
“முதல்ல உட்கார சொல்லுவ அடுத்தது படுக்க சொல்லுவ.. எனக்கு தெரியாதா உன்ன மாதிரி ஆம்பளைங்களை பத்தி.. எனக்கு இந்த கல்யாணத்துல இஷ்டம் இல்ல. எங்க அத்தானை தான் நான் விருப்பப்பட்டேன். கல்யாணத்துல ஏதாவது குளறுபடி பண்ணி உனக்கு அந்த ஆராவை கல்யாணம் பண்ணி வச்சுட்டு.. நான் அத்தானை கல்யாணம் பண்ணிக்கலாம்னு பிளான் பண்ணினேன். எல்லாம் போச்சு.. அதனால என்ன? அதான் அத்தானுக்கு இன்னும் கல்யாணம் ஆகலையே.. உனக்கு டிவோர்ட்ஸ் கொடுத்துட்டு நான் எங்க அத்தானை கல்யாணம் பண்ணிக்க போறேன்.. அதனால் நீ என்னை தொடுற வேலையை வச்சுக்காத!!” என்று நரம்பில்லாத நாக்கால் சுழற்றி அடித்தாள் அதுவும் இன்று தான் திருமணமான கணவனிடம்..
பல கனவுகளுடன் நடந்த திருமணம் அவனுக்கு. அதுவும் முதலிரவில் பல ஆசைகளுடன் உள்ளே நுழைந்தவனுக்கு பழுக்கக் காய்ச்சிய எண்ணெயை காதில் ஊற்றியது போல இருந்தது அவளது வார்த்தைகள். கண்களை மூடி அவற்றைக் கிரகிக்க முயன்றான் செந்தில்நாதன். எல்லாம் சில நிமிடங்கள்தான். அதன் பிறகு தன்னை முழுதாக மீட்டெடுத்தவன் அவளை பார்க்க அவளோ தெனாவட்டாக நின்றிருந்தாள்.
“எவ்வளவுப் பாரம்பரியம் மிக்க குடும்பத்தில் இருந்து நீ வந்து இருக்கனு உனக்கு தெரியுமா? இல்ல என் குடும்பத்தின் பாரம்பரியம் தான் உனக்கு தெரியுமா? அசால்ட்டா டிவோர்ஸ் இரண்டாம் கல்யாணம் அப்படி எல்லாம் பேசுற.. உன்ன எல்லாம் விட்டுடுவேன்னு நினைச்சியா?” என்று அதுவரை மென்மையாகப் பேசி அவன் குரல் உயர்ந்தது.
பட்டு சட்டையின் பட்டன்களை கழற்றி காலரை பின்னால் இழுத்து விட்டவன் கைச்சட்டை பட்டனை கழட்டி மேலே ஏற்றிவிட்டு அவளை நெருங்கினான்.
“செந்தில்நாதனு பேரு வச்சு தலையைப் படிய சீவி நெத்தியில திருநீறு வச்சுட்டு சுத்துனா பழமா இருப்பேன்னு நினைச்சியா டி என் பொண்டாட்டி!! மதுரை அமெரிக்கன் காலேஜில் வந்து கேட்டு பாருடி இந்த சரக்கு செந்தில் யாருன்னு தெரியும்!! எனக்கு இருக்கிற கேங்கு எப்படின்னு தெரியும்!!” என்று அவன் பேச பேச..
ஆண்களிடம் இம்மாதிரி ஈகோவை தூண்டி விடுற மாதிரி பேசினால்.. அதுவும் பெரிய பாரம்பரிய குடும்பத்திலிருந்து வந்தவன் அமைதியாக அவளை தீண்டாமல் விட்டுவிடுவான். இதையே சாக்காக வைத்து இவனை விட்டுப் பிரிந்து நிமிலனை திருமணம் செய்து கொள்ளலாம் என்று காலையிலிருந்து அவள் போட்டு வைத்த திட்டத்தை தகர்த்தெறிந்து அவளை நோக்கி வந்தவன் அலேக்காக தூக்கி கட்டிலில் வீசினான்.
“என்னை பிடிக்கல இந்த கல்யாணத்துல பிடிக்கல நீ சொல்லி இருந்தா சரிதான் நான் யோசித்து இருப்பேன். ஆனால் அதையெல்லாம் விட்டுவிட்டு யாருக்கோ முடிவான ஒருத்தனை நீ மனசில வச்சிகிட்டு என் வாழ்க்கையோடு அவன் வாழ்க்கையை சேர்த்து அழிப்பேன்னு கங்கணம் கட்டிட்டு நின்னா.. அதை பார்த்திட்டு இருக்க நானா கேனையனு நினைச்சியா? இனிமே நீ செந்தில்நாதன் பொண்டாட்டி! அவனுக்கு மட்டும்தான் பொண்டாட்டி!!” என்றவன் அதன் பிறகு அவளை ஆக்கிரமித்திருந்தான்.
அவளை மூச்சு முட்ட முத்தமிட்டு வாய் பிரித்தபோது ரஞ்சனியின் உடல் மெல்ல நடுங்கிக் கொண்டிருந்தது. அவன் விட்டதும் சட்டென தலையணையில் முகம் புதைத்தவளை இறுக்கி அணைத்து கொண்டான். நீள் மூச்சுடன் அவள் முதுகைத் தடவி பின்கழுத்தை வருடினான். அறை முழுக்க படர்ந்த ஏசியின் குளிமையோடு பூ மணம் கமழும் அவளின் கருங்கூந்தலும் அவனுக்கு தாபத்தை ஏற்றியது.
நீள நரம்புகள் நெளிந்தோடிய அவளின் மிருதுவான கழுத்தில் மீசை முடிகள் குத்த முத்தமிட்டான். அவள் கழுத்துக் குழி சிலிர்த்து கழுத்தைத் திருப்பிக் காட்டினாள். அவளின் மென்கழுத்துத் தோலை மெல்லக் கவ்வியிழுத்து சப்பி விடுவித்தான்.
அவன் அவளை ஆக்கிரமிக்க ஆக்கிரமிக்க அவளின் எண்ணங்கள் ஒரு நொடி அவள் நெஞ்சத்தில் சிதறி வெடித்து அவள் உடலை அதிர்வுறச் செய்தது. நிமிலனின் முகம் மூடிய கண்ணிமைகளுக்குள் தோன்றி மறைந்தது. அடுத்த நொடியே தன்னைத் நொந்து கொண்டு தன் உள்ள எண்ணங்களிலிருந்து மீண்டாள். அவளறியாமல் அவளுக்குள் ஒரு விம்மலெழுந்து அடங்க முடியாமல் பெரும் கேவலாக வெளிப்பட்டது.
செந்திலோ அதனை எல்லாம் கண்டு கொள்ளவில்லை. அவன் அவளிடம் பிரியமாக பாசமாக அன்பாக காதலாக நடந்து கொள்ள தான் முயன்றான். ஆனால் அவளின் அகங்காரமும் திமிர் பேச்சும் தான் அவனை மாற்றியது. இவள் என் பொண்டாட்டி.. இதை மாற்ற முடியாது என்று காமத்தில் உடல் சூடாக அவளை ஆண்டான். அவனிடையே மூச்சுத்திணற கைகளை அழுத்திப் புதைத்து வாய்விட்டு சிறு முனகல்களாக கிடந்தாள் ரஞ்சனி.
முழுதாக அவனை ஒப்புக் கொடுத்தவன், “ஒரு பொண்ண அதுவும் பொண்டாட்டிய பலவந்த படுத்துறவன் ஆம்பளையே இல்லனு சொல்றவன் நான். ஆனா என்னையே அப்படி செய்ய வச்சிருக்கேனா இதற்கு முழு காரணமும் நீதான் டி.. இனி வேற வார்த்தை உன் வாயிலிருந்து வந்தது” என்று உறுமியவன், அவளை அணைத்தபடி உறங்கினான். ரஞ்சனிக்குதான் அந்த இரவு உறக்கமில்லா இரவாக மாறியது.
நிமிலனை இரத்த வெள்ளத்தில் பார்த்த நிரஞ்சன் “நிமிலாஆஆ” என்று கத்த.. அடுத்த ஐந்தாவது நிமிடம் மொத்த குடும்பமும் அவனது அறையில் தான். அவனை காரில் அள்ளிக்கொண்டு வேதவள்ளி அனுமதிக்கப்பட்டிருந்த மருத்துவமனையிலேயே காட்டினர்.
“பெரிதாக பயமில்லை சார். காலையிலிருந்து அவருக்கு இருக்கும் மன உளைச்சல் கூடவே சாப்பிடாமல் இருந்தது, இந்த இரத்தப்போக்கால் தான் மயக்கம். இரத்தமும் பெரிதாக வெளியேறவில்லை” என்று விட்டு அவன் கையை கிழித்து இருந்த கண்ணாடி சிதறல்களை கவனமாக நீக்கி விட்டு மருந்து வைத்துக் கட்டி இருந்தார் மருத்துவர்.
ஆனால் இந்த விஷயத்தை மயூரியிடமும் ஆராதனாவிடமும் நிரஞ்சன் கூறவில்லை. ஏற்கனவே அவன் ஃபோன் எடுக்காமல் என்னமோ ஆகிவிட்டதோ என்று பயத்தில் இருப்பவர்களுக்கு, இதை சொல்ல மனமில்லாமல் “அவன் தூங்குறான் மயூரி.. காலைல பேசிக்கலாம்!!” என்று மெசேஜ் மட்டும் தட்டிவிட்டான் நிரஞ்சன்.
அதுவரை விழித்திருந்த பெண்கள் அந்த மெசேஜை பார்த்துவிட்டு “அவன் கோபத்தில் இருக்கிறான் போல.. அதுதான் நிரஞ்சன் மழுப்பலாக இப்படி மெசேஜ் செய்திருக்கிறான்” என்று பேசிக்கொண்டே உறங்கினார்கள்.
ஆனாலும் ஆராதனாவின் மனது சமாதானம் ஆகவில்லை. நாளை தூரத்தில் இருந்தாவது அத்தானை பார்த்து விட்டு வர வேண்டும் என்று மனதில் நினைத்து கொண்டே உறங்கினான்.
காலையில் விழித்து மயூரி மெதுவாக அவர்கள் அறையை திறந்து கொண்டு உள்ளே செல்ல அங்கே ஆரன் இல்லை. ‘அப்பாடி அவன் இல்லை நேத்து பேசிய பேச்சுக்கு அவன் கையில் மாட்டி இருந்தோம்.. வச்சு செஞ்சு இருப்பான்!! நல்லவேளை.. குளிச்சிட்டு ஓடிடுவோம்” என்று யோசித்துக் கொண்டே அவள் குளித்துவிட்டு புடவை அணிந்து வர..
அப்போது தான் உடற்பயிற்சி முடிந்து வேர்க்க விறுவிறுக்க வந்தான் ஆரன். அவன் வந்தது தெரிந்தாலும் கண்டுகொள்ளாத பாவனையோடு தலையை துவட்டி கொண்டிருந்தாள் மயூரி.
‘அவனை பார்க்காத மயூ.. பார்க்காத.. நம்ம பில்டிங் ஸ்ட்ராங் பேஸ்மெண்ட் வீக்குனு அவனிடம் காட்டவே கூடாது மயூ.. பீ ஸ்ட்ராங்!!’ என்று மனதினுள் நடுங்கினாலும் வெளியே கண்டுகொள்ளாத பாவனைதான் மயூரியிடத்தில்..
கூர் பார்வையுடன் அவளை நெருங்கியவன்,
முகத்தில் வழிந்த வியர்வை ஈரத்தோடு அவளை நெருங்கி வந்தான் ஆரன். அவள் இதயத்துக்குள் தடக் தடக் என்ற ரயிலின் ஓசை..
அவளை அணைக்க தன் இரு கைகளையும் ஆரன் நீட்ட.. உள்ளெழும் பெண்மைத் தவிப்புடன் கால்கள் நடுங்க மெதுவாக பின்னால் நகர்ந்தாள் மயூரி.
அவனோ அவள் இடையை உரசியவாறு அவளுக்கு பின்னே சென்று அங்கிருந்த டவலை எடுத்தவன், அவளை பார்த்தவாறே முகத்தில் கழுத்தில் உள்ள வியர்வைகளை எல்லாம் துடைத்தான். அவளை விட்டு சிறிதும் அசையாமல் அதே நூலிழை இடைவெளியோடு தான் நின்றிருந்தான்.
“தள்ளி போங்க.. நான் ரெடி ஆகனும்” கொஞ்சம் சிணுங்கினாள்.
“ஏன்.. உரசிக்கிட்டு போனா பச்சக்குன்னு பத்திக்கும்னு பயமாருக்கா?” என்றான் சரசமாக..
”என்ன?” அதிர்ந்து பார்க்க..
“என்னை உரசிட்டு போனா என் வியர்வை உன் உடம்போடு ஒட்டிக்கும்னு பயப்புடுறியானு கேட்டேன்” என்றவன் உதட்டை கடித்து வாய்க்குள் சிரித்தான்.
“அதெல்லாம் இல்ல…” நடுங்கிய சிற்றுதடுகளை வாய்க்குள் இழுத்துக் கொண்டாள்.
”என்ன? வேணாமா?” என்றான் அவனை அணைத்து நின்றவாறு..
”என்ன வேணாமா?” என்றாள்.
“போக வேணாமா.. ரெடி ஆகனும் சொன்ன?” என்றவனின்
கைகளுக்குள் அடங்கியபடி கண்களை கூர்ந்து பார்த்தாள்.
”எதும் ப்ளான் பண்ணிறிங்களா?” என்று கேட்டாள்.
“எதுக்கு?”
எப்படி சொல்வாள் அப்பட்டமாக.. ‘என்னை எடுத்துக்கொள்ள ஏதும் பிளான் செய்கிறாயா?’ என்று!! அவள் முகத்தில் சிறு தவிப்பு தோன்ற பிளந்த வாயோடு அவனை பார்க்க..
அவள் முகத்தின் மேல் கவிழ்ந்து பிளந்து தவித்த அவளின் செழித்த உதடுகளைக் கவ்வினான் ஆரன். வெளியில் அவனை தவிர்த்தாலும் உள்ளுக்குள் உருகி தவித்த மனது, ஆவலாக இதழொற்றலை ஏற்றது. மோகத்தில் கனிந்த மெல்லிய இதழ்களைச் சுவைக்கச் சுவைக்க தன்னை மீறிய முனகலுடன் ஆரன் கழுத்தை இறுக்கி கால்களைப் பின்னி, சுவற்றில் சாய்ந்தாள் மயூரி.
அவளின் இரு இதழ்களையும் ஆரஞ்சு சுளையென சப்பிச் சுவைத்துக் கிறங்கி ஆழமாய் முத்தமிட்டு வேக மூச்சுடன் விடுவித்தான். அவளுக்கும் மூச்சிறைத்தது அவனது அதிரடியில்.. கண்கள் கிறுகிறுத்துப் போக கண்களை இறுக மூடி நின்றாள். மூடிய இமைகளில் சில்லென்று அவனது உதடுகள் பதிய அதிர்வுடன் கண் திறந்தாள்.
இருவர் பார்வைகளும் ஒன்றையொன்று கவ்விக்கொள்ள ஆழியென அவளை இழுத்தது அவனின் அந்த நீலநிற பார்வை..
குறுக்காகத் தலையசைத்து தன்னை மீட்டவளை, நீலநிற கண்மணி பாவை பளிச்சிட்டு மின்ன உதடுகளை விரித்து அவன் புன்னகை சிந்த.. அவளும் வெட்கநகை புரிந்தாள். ஆரன் எச்சில் பட்ட அவள் உதடுகள் ஈரம் மின்ன பளபளத்தன.
”வா ” என்று தலையசைத்தான் மெத்தையை நோக்கி..
தயக்கம் உதறி மெல்ல அடி வைத்து அவனை நெருங்கிச் சென்றாள் பாவை. அவன் நன்றாக சாய்ந்து அமர்ந்து அவளை இழத்து அருகே அமர்த்தி கைவளைவில் கொண்டு வந்தவன், மீண்டும் அவள் இதழில் கவிப்பாடி..
முழுதாக அவளை ஆட்கொள்ள முயல..
அந்நேரம் பார்த்து அவர்களின் அறைக்கதவு தட்டப்பட்டது. வெளியே ஆராதனாவின் குரல் “அண்ணா அண்ணா!!” “மயூ.. மயூ..” என்ற அழுகுரல்..
தாபம் மோகம் எல்லாம் பறந்து போக என்னவோ ஏதோ என்று இருவரும் பதறியடித்துக் கொண்டு வெளியே வர.. அங்கே பேச முடியாமல் திரும்பவும் “அண்ணா… அண்ணா” என்று அழுதவளை மயூரி தன் மீது சாய்த்துக் முதுகை நீவி “என்னாச்சு? அழுகையை நிறுத்திட்டு சொன்னாதானே தெரியும் ஆரா?” என்று சமாதானப்படுத்தினாள்.
“அது.. அண்ணா.. அவருக்கு.. அத்தானுக்கு.. நிமிலன்..” என்று அதற்கு மேல் அவளுக்கு வார்த்தையே வரவில்லை.
அவள் நிமிலன் என்றவுடன் மயூரி பயந்து “என்னாச்சு? என்னாச்சு அண்ணாவுக்கு? அழுகாம என்னனு சொல்லி தொலைடி.. அப்புறம் அழு” என்று இவள் கடுப்பாக கத்த..
“மயூரி.. கத்தாதே!!” என்று ஆரன் தட்டிக்கேட்க..
“அத்தானை ஹாஸ்பிடல்ல அட்மிட் பண்ணி இருக்காங்களாம். நேத்து ராத்திரி கையை வெட்டிகிட்டாராம்” என்று அவள் கூறியதும் அவ்வளவு ஒரு குற்றவுணர்வு ஆராவுக்கு. திருமணம் நின்றதால் நிமிலன் தற்கொலை வரைக்கும் சென்றிருக்கிறான் என்ற நினைத்தாள்.
“என்னாலதான்!! எல்லாம் என்னால தான்!! எனக்கு அவரை பார்க்கணும் அண்ணா.. எனக்கு இப்பவே அவரை பாக்கணும்.. என்னை கூட்டிட்டு போ முதல்ல.. என்னை அவர் கிட்ட கூட்டிட்டு போ” என்று அப்படியே தரையில் மடங்கி அமர்ந்து ஆரனின் கைகளை பற்றியபடி அழுதாள் ஆராதனா.
மயூரிக்கும் ஒன்றும் புரியவில்லை நேற்று இரவு நன்றாகத் தூங்குறான் என்று நிரஞ்சன் சொல்லியிருக்க.. இன்று காலையிலேயே இப்படி ஒரு விஷயம். மயூரியும் ஆராதனாவின் அருகில் அமர்ந்து “முதலில் நீ என்னன்னு சொல்லு ஆரா? எனக்கு ஒண்ணுமே புரிய மாட்டேங்குது? அண்ணனுக்கு என்ன நடந்தது? உனக்கு எப்படி தெரியும்? முதலில் அதை சொல்லு?” என்று அவளை உலுக்க..
“தெரியல மயூ.. என்னன்னு கரெக்ட்டா தெரியல.. காலைல நான் நிரஞ்சன் அண்ணாவுக்கு போன் செய்தேன். அவன்தான் சொன்னான் ஹாஸ்பிடல் இருக்கிறேன் அத்தானுக்கு கையில் வெட்டுப்பட்டு இருக்கு.. ரத்தம் நிறைய போய் மயங்கிக் கிடந்து இருக்காரு நேத்து நைட்டு. இவன் தான் எல்லோரையும் கூப்பிட்டு போய் ஹாஸ்பிட்டல்ல அட்மிட் பண்ணி இருக்கேன்னு சொன்னான். எனக்கு அவரை இப்பவே பார்க்கணும் மயூ.. அய்யா அவருக்கு எதுவும்னா என்னால தாங்கவே முடியாது.. எல்லாம் என்னால தான்!!” என்று மீண்டும் அவள் தலையில் அடித்துக்கொண்டு அழ…
“ஆராதனா!!” என்று கர்ஜித்தவனின் சிம்மக் குரலில் இரு பெண்களும் அதிர்ந்து அவனை திரும்பி பார்க்க ஆராதனா பற்றி இருந்த கையை உதறியவன் அங்கிருந்த சோபாவில் அமர்ந்தான்.
“நிமிலனுக்கு ஒன்னும் இல்ல.. சாதாரண கீறல் தான் ரெண்டு மூணு இடத்துல.. அதுவும் சூசைட் அட்டெம்ட் எல்லாம் ஒன்றும் கிடையாது” என்று அவன் தெளிவாக உரைக்க தன்னவனின் உடல் நலத்தை கேட்டவுடன் சற்று ஆறுதல் அடைந்தது ஆராவது மனம். ஆனால் மயூரியோ கணவனை எரித்துவிடுவது போல பார்த்தவள் அவன் அருகே நெருங்கி நின்று “அப்போ உங்களுக்கு ஏற்கனவே அண்ணனுக்கு இப்படியானது தெரியும்? ஆனால் அதை நீங்க சொல்லல அப்படித்தானே?” என்று சரியாக கேட்டவளை பார்த்தவன் இன்னும் அந்த இருக்கையில் சாய்ந்தமர்ந்து “ஆமாம்!!” என்றான்.
இதை கொஞ்சம் கூட எதிர்பார்க்கவில்லை மயூரி. “எப்படி? எப்படி உங்களால் எப்படி இருக்க முடியாது? சூசைட் அட்டெம்ட் பண்ணலைனாலும்.. அவ்வளோ பிளேட் லாஸாகி அட்மிட் ஆகி இருக்கான். அதைப்பற்றி ஒரு வார்த்தைகூட எங்க ரெண்டு பேருக்கும் நீங்க சொல்லல.. நாங்களா கேட்டவுடன் பதில் சொல்றீங்க.. நீங்க என்ன மனுஷன்?” என்று அடக்கமாட்டாமல் கேட்டே விட்டாள் மயூரி.
சட்டென்று எழுந்தவன் “யார் சொன்னா நான் மனுஷனு? மனுஷன் இல்லை நான் அசுரன்.. அரக்கன்!!” என்றவன் வேகமாக தன் அறையை நோக்கி செல்ல அவனது கையைப் பற்றி தடுத்தவள், “ஏன்? ஏன் இந்த வெறி உங்களுக்கு? என் அண்ணன் மேல.. அவன் என்ன தப்பு செய்தான்? யார்தான் என்ன தப்பு செய்தா? எதையும் சொல்லாம கொள்ளாம எல்லாரையும் போட்டு ஏன் இப்படி கஷ்டப்படுத்துறிங்க நீங்க? யாரோ தெரியாமல் செய்த காரியத்தால் என் குடும்பம் மொத்தமும் இன்னைக்கு ஹாஸ்பிடல்ல.. வேதா அத்தைக்கு உடம்பு முடியாம அவங்களும் ஹாஸ்பிட்டல் இப்ப.. எங்க அண்ணனும் ஹாஸ்பிடல்ல.. உன் குரோதத்தால்.. என் ஒட்டுமொத்த குடும்பத்தின் நிம்மதி சந்தோஷம் அமைதி எல்லாம் போயிடுச்சு!!” என்று வெறி கொண்டவள் போல கத்தினாள் மயூரி.
“யாரும் சாகவில்லைல.. உயிரோடு தான் இருக்காங்க?” என்று அவனின் வார்த்தைகளில் துடித்தவள், “ச்ச என்ன மனுஷன் நீ.. ஒருத்தவங்க கஷ்டப்படுவதை பார்த்தா துடிக்கணும் அட்லீஸ்ட் அதுக்காக வருந்தனும். அதுதான் மனுஷ தன்மை!! அது கொஞ்சம்கூட இல்லை உங்கிட்ட.. அவங்க வலியை நீ ரசிக்கிற.. ஏதோ அவங்க தப்பு செஞ்சதுக்கு கோபம் இருக்கலாம். ஆனால் இந்த மாதிரி ஒரு கொலைவெறி இருக்கக் கூடாது!!” என்று அவனுடன் மல்லுக்கட்டிக் கொண்டு நின்றாள் மயூரி..
அப்போதும் அவன் பேசாமல் “எனக்கு ஆஃபிஸ் டைம் ஆயிட்டு.. நீ தள்ளு” என்றுவன் கதவு அடைத்து செல்ல.. திரும்பி ஆராதனாவைப் பார்க்க அவள் அமர்ந்த இடத்திலேயே சிலையென அமர்ந்து கண்ணீர் மட்டும் வடித்துக்கொண்டிருந்தாள்.
“எல்லாம் இவளால தான்!! அண்ணன் கூப்பிட்டா அப்படியே வந்து விடுவாளா? காதலுக்கு நியாயம் செய்யாம.. இப்ப இவ்வளவு கஷ்டப்படுத்துறா எங்க அண்ணன” என்று கத்தியவள், “இதே மாதிரி உங்க தங்கச்சிக்கு ஆகியிருந்தா??” என்று கதவின் பின்னால் நின்று மயூரி கத்த.. சட்டென்று கதவைத் திறந்த ஆரன் முரட்டு கரத்தால் அவளது கழுத்தை பற்றி அப்படியே மேலே தூக்கினான்.
அவள் மூச்சுக்கு சிரமப்படுவதை பார்த்தவன் சட்டென்று அவளை கீழே இழுத்து “இழப்பைப் பற்றி யாருக்கும் தெரியாது.. என்னைவிட யாருக்கு அதிகமாக தெரிஞ்சிடும்? என் அப்பாவை விட யாருக்கு வலி அதிகமாக இருந்திருக்கும்?” என்றவன் அவள் கையைப் பிடித்து தரதரவென்று இழுத்து நேற்று அவர்கள் பார்த்த அந்த போட்டோ முன் நிறுத்தியது “இவங்க யாருன்னு தெரியுமா?” என்று கேட்க அவளோ தெரியாது என்று தலை அசைத்தாள்..
“எங்கள் அம்மா வேதா.. வேதரதி.. உன் இரண்டாவது அத்தை.. அவங்க இப்போ உயிரோடு இல்லை அதற்கு காரணம் உன் குடும்பம்!!” என்றவனின் பேச்சில் அதிர்ந்து அந்த புகைப்படத்தை அவள் கூர்ந்து பார்க்க அவளை மாதிரியே அதே இதழ் அடியில் உள்ள மச்சத்தோடு அழகாக புன்னகைத்துக் கொண்டிருந்தார் வேதரதி விஜயேந்திரன்!!
24
வேதவள்ளி.. வேதரதி செந்தூரார் அழகப்பரின் இரட்டைபெண்கள் குருபரனுக்கு பிறகு. குணத்தால் மட்டுமல்ல.. உருவத்தாலும் வேறுப்பட்ட இரட்டையர்கள். இவர்களுக்கு பின் இரண்டு ஆண்டுகள் கழித்து பிறந்தவர்தான் மோகனவள்ளி.
மூன்று பெண்கள் என்பதில் பெரும் ஆனந்தம் கொள்வார் செந்தூர் அழகப்பர். குருபரன் அழகப்பர் ஆரம்பித்திருந்த கப்பல் கட்டுமான தொழிலில் சிறு வயது முதலே ஆர்வம் அதிகம். அவர் அது சம்பந்தப்பட்ட படிப்பைத் தேர்ந்தெடுக்க.. இரட்டையர்களான வள்ளியும் ரதியும் உருவம் குணம் விருப்பம் என அனைத்திலும் எதிரெதிர் துருவங்கள் தான்.
ரதிக்கு அலங்கரிக்க அலங்கரித்துக் கொள்ள மிகவும் விருப்பம். அதனாலேயே அவர் ஹோம் சயின்ஸ் எடுத்துப் படித்தார். ஆனால் வள்ளிக்கு ஆளுமை அதிகம்.. அது அவரது பேச்சு நடை உடை பாவனையில் நன்றாகவே வெளிப்படும் அவர் சட்டம் எடுத்தார்.
ரதி மென்மையும் அன்பாக பேசும் தன்மையும் கொண்ட பெண்..
வள்ளி அன்பை கூட அதிகாரமாக காட்டும் ஆளுமை மிக்க பெண்..
குணத்தில் இருவரும் வேறாக இருந்தாலும் அன்பையும் பாசத்தையும் காட்டுவதில் ஒருவருக்கொருவர் சளைத்தவர்கள் அல்ல..
அனைத்தும் நன்றாகத்தான் சென்றது இருவரும் தங்கள் கல்லூரிப் படிப்பை முடிக்கும் வரை. அதன்பின் மாப்பிள்ளை தேட.. வேதவள்ளியோ “எனக்கு கொஞ்சம் நாள் வேணும்பா இப்பதான் ஜூனியராக பிராக்டிஸ் பண்றேன்.. இன்னும் கொஞ்ச நாள் போகட்டும்” என்றதும், செந்தூரார் அவரை கட்டாயப்படுத்தவில்லை. அதேசமயம் ரதியை மனதில் வைத்துக்கொண்டு மனைவியை பார்க்க..
“இரண்டு பேரும் இரட்டைப் பிள்ளைகள். ஆனாலும் ஒரே நேரத்தில் கல்யாணம் பண்ண வேணாம். ஒரு வருஷம் இடைவெளியில் பண்ணுவோம். இப்போது ரதிக்கு பார்ப்போம் அடுத்தது வள்ளிக்கு பார்ப்போம்!!” என்றார் தெய்வானை அம்மாள்.
அப்படி ரதிக்கு இவர்கள் மாப்பிள்ளை பார்க்க ஆரம்பித்த சமயத்தில்தான் ‘ஏன் தன்னுடைய ஒன்றுவிட்ட சித்தப்பா மகன் மெய்யறிவுக்கு கொடுத்தால் என்ன?’ என்று யோசனை வந்தது தெய்வானைக்கு.
மெய்யறிவு குருபரனோடு சற்றே வயது மூத்தவர். இவர்களைப் போல சொல்லிக் கொள்ளும் அளவு வசதி இல்லை என்றாலும்.. தனியாகத்தான் தொழில் தொடங்கி இம்மாதிரி வரும் கப்பல்களை அதன் பாகங்கள் பெரிய கம்பெனிகளிடமிருந்து சிறு சிறு வியாபாரிகளுக்கு கைமாற்றும் தொழிலை செய்து வந்தார் மெய்யறிவு.
மெய்யறிவு அது போல சில வேலைகளை செய்து கொடுத்துள்ளார் செந்தூராருக்கு. அதனால் உறவினன் என்பதை தாண்டி மெய்யறிவை பிடிக்கும் செந்தூராருக்கும். மனைவி சொன்னதும் அவர் மறுக்கவில்லை.
‘பணம் இன்று வரும் நாளை போகும்.. ஆனால் குணம் அது தானே முக்கியம்!’ என்று நினைத்தவர் மெய்யறிவின் தாயிடம் பேச.. அவர்களுக்கும் சம்மதம். இருவருக்கும் பொருத்தம் பார்ப்பதற்காக ஜாதகம் பார்க்க சென்ற போது தவறுதலாக வள்ளி ஜாதகம் கொடுக்கப்பட, சற்று முன்னால் பிறந்த வேதவள்ளியின் ஜாதகம் மெய்யறிவு ஜாதகத்தோடு பொருந்தி போனது.
ஆனால் திருமணம் ஆறு மாதம் கழித்து செய்யலாம், மெய்யறிவுக்கு சில பல பரிகாரங்கள் செய்ய வேண்டும் என்றார் ஜோதிடர். அதன்படி விரைவில் அன்னை ஒருபக்கம் அது செய்து கொண்டிருக்க.. மற்றொரு புறம் குருபரன் ஒரு பெண்ணை காதலித்தார் ஒரு தலையாக.. நடுத்தர வர்க்கத்தைச் சேர்ந்த அந்த பெண்ணுக்கு இவர்களின் வசதியும்.. குருபரனின் அமர்க்கையான தோற்றமும் பயத்தை உண்டு பண்ண அவர் மறுத்துவிட்டார். ஆனால் குருபரன் விடாமல் காதல் என்ற பெயரால் அந்த பெண்ணை தொந்தரவு செய்து கொண்டிருந்தார்.
இரு கை தட்டினால்தான் ஓசை அல்லவா? ஒரு கையால் தட்டினால் அதில் ஓசையும் வராது.. காதலும் வராது. வன்முறையாகவே பார்க்கப்பட்டது பெண்ணால்.
குருபரன் விடாப்படியாக ‘அது எப்படி இவ்வளவு வசதி நல்ல குணம் கொண்ட என்னை இந்த பெண் பிடிக்கவில்லை என்று எவ்வாறு சொல்லலாம்?’ என்று அவர் ஆண்மைக்கு கிடைத்த இழுக்காகவே அதை கருதி எப்படியும் அந்த பெண்ணை கைப்பிடித்தே ஆகவேண்டும் என்று பருந்தென அந்த பெண்ணை சுற்றினார்.
அரசல் புரசலாக இந்த விஷயம் செந்தூரர் காதுக்கு வந்தாலும் பெரிதாக பணத்தை எல்லாம் பார்ப்பவர் இல்லை மகளுக்கே அப்படி நினைக்கும் போது மகனுக்கு மட்டும் நினைப்பவரா என்ன? இவரிடத்தில் “உங்கள் பையன் இப்படி ஒரு பெண் பின்னால் சுற்றுகிறார்” என்று கொளுத்திப் போட, அவர்களிடம் “செல்வம் என்ற சொல்லே செல்வோம் என்றதிலிருத்து தான் வருகிறது. இன்னிக்கு என்னிடமிருக்கும் நாளைக்கு உன்னிடம்.. அதுக்கு பிறகு யாரிடமோ?? அதனால சொத்து சுகத்தை நான் பெரிதாக நினைக்கலை. என் மகனுக்கு பிடிச்சா எனக்கு சம்மதம்தான்” என்று முகத்தில் அடித்தாற்போல் திருப்பி அனுப்பி விடுவார்.
இது குருபரனுக்கு தெரிந்தவுடன் இன்னும் வசதியாக போனது அவருக்கு. தன் காதலுக்கு தந்தை குறுக்கே நிற்கவில்லை என்று ஏக சந்தோசம். ஆனால் அங்கே காதலே கேள்விக்குறிதான் என்பது அவருக்குப் புரியவில்லை..
இயற்கையாக மலர்ந்த மலர் தான் மணம் பரப்பும்.. அதிரடியாக அதை மலர வைக்கிறேன் என்று இதழ்களை வலுக்கட்டாயமாக பிரித்தால் அது துவண்டு மொட்டாகவே கருகிப் போகும். அந்தப் பெண்ணின் நிலையும் அதுவாகத்தான் இருந்தது.
ஒரு கட்டத்திற்கு மேல் தாங்க மாட்டாமல் சென்னையில் கணினி துறையில் வேலை பார்த்துக்கொண்டிருந்த தன் அண்ணனை வரவழைத்தாள். அவர் விஜயேந்திரன். தாய் தந்தையிடம் சொல்ல பயம். எங்கே ஒருவேளை நல்ல குடும்பம் வசதியான குடும்பம் மகள் நன்றாக வாழவேண்டும் என்று பயந்து கட்டு வைத்து விடுவார்களோ என்று..
அதனால் அண்ணனிடம் அழைத்து நாசூக்காக தன் மனதை அவரிடம் தெரியப்படுத்தி குருவிடம் தெளிவுபடுத்த கூறினார். தங்கையின் மனதை அறிந்து கொண்ட விஜய்யும் “சரி பாப்பா.. நீ கவலைப்படாதே நான் பார்த்துக்கிறேன்!!” என்று ஆறுதல் அளித்து குருபரனை பற்றி விசாரிக்க அனைத்தும் அவருக்கு நல்ல பதில்களே வந்தது.
“ஏன் தங்கைக்கு இவரைப் பிடிக்கவில்லை? நல்ல குடும்பம்.. பரம்பரையான வம்சம்.. வசதியாக உள்ளார்.. பார்ப்பதற்கும் நன்றாக தானே இருக்கிறார்!” என்று ஆணான அவரும் யோசித்து தங்கையிடம் கேட்க.. அவரோ “எனக்கு இவ்வளவு வசதியான கணவர் வேண்டாம். நம் நிலையில் உள்ள சாதாரண நடுத்தர வர்க்கத்தினர் போதும்” என்று பிடிவாதமாக மறுத்தார்.
“இப்போது காதல் மோகம் என்று ஆசையில் இருப்பவர் நாளை பின்னே ஏதாவது ஒரு காலகட்டத்தில் இந்த பணத்தை சொல்லிக் காட்ட வாய்ப்பு இருக்கு.. என்ன இருந்தாலும் ஒன்றுமில்லாமல் வந்தவ தானே என்று.. ஒரு சிறு வீட்டில் மகாராணியாக இருக்கத்தான் ஆசைப்படுகிறேன் ஒழிய. அந்த மாளிகையில் அடிமையாக அல்ல” என்று அவர் தெளிவாக உரைத்திட… அதன் மேலும் தங்கையை இவர் வற்புறுத்தாதவர் தாய் தந்தையிடம் சொல்லி தங்கைக்கு மாப்பிள்ளை பார்க்க சொன்னார்.
அவர்கள் எதிர்பார்த்த அதே மத்திய தரத்தில் தங்கைக்கு பிடித்தவரை தேர்வு செய்த விஜயேந்திரன் நிச்சயத்ததிற்கு அலங்கரிக்கும் பொறுப்பை ஒரு நிறுவனத்திடம் ஒப்படைத்தார். அவரால் அதிக நாள் விடுமுறை எடுக்க முடியாத காரணத்தினால்.. சென்னைக்கும் திருச்செந்தூருக்கும் அலைந்து திரிந்து கொண்டிருந்த அவரால் முழுமையாக வேலையை செய்ய முடியாத காரணத்தினால்தான் அந்த நிறுவனத்திடம் ஒப்படைத்தது.
ஆனால் அந்த நிறுவனம் செய்த அலங்காரங்கள் எளிமையாகவும் அதே நேரம் அழகாகவும் அனைவரையும் கவரும் படி இருக்க.. கல்யாணத்திற்கும் அவர்களிடமே கொடுக்க வேண்டும் மனதில் நினைத்துக் கொண்டிருந்தார். நிச்சயம் நல்லபடியாக நடந்து முடிக்க அந்த கம்பெனியிடமே கல்யாண பொறுப்பை ஒப்படைக்கும் போது தான் அவர் சந்தித்தது வேதரதியை.. அவரின் வேதாவை…
ரதயின் அலட்டலில்லாத அணுகுமுறையும் அன்பான மென்மையான பேச்சும் மனிதரை அவர்பால் வீழ்த்தியது. ரதி வீட்டில் இருக்க பிரியப்படாமல் தனது திறமையை இந்த நிறுவனத்தோடு சத்தமில்லாமல் அவர் செய்து கொண்டிருக்க.. இங்கே கண்கள் வழியே இதயம் பரிமாறப்பட்டு காதல் அரங்கேறியது வேகமாக ரதிக்கும் விஜேந்திரனுக்கும்.
திருமணம் அலங்காரத்திற்கு என்று ஆரம்பித்த அவர்களது சந்திப்பு அவர்களின் காதலுக்கு என்று நீண்டுகொண்டே சென்றது. நேரில் பார்க்க முடியாதபோது காதலை போனில் வளர்த்தார்கள். ரதிக்கும் மெய்யறிவுக்குமான அவரது திருமணத்தைப் பற்றி வீட்டில் சொல்லப்படவில்லை அப்போது. மெய்யறிவிடம் கேட்கப்பட்ட அபிப்பிராயம் ரதியிடம் கேட்கப்படவில்லை..
தங்கைக்கு காதல் குடைச்சல் கொடுத்தவனிடமிருந்து காப்பாற்றி வேற ஒரு மணாளனை கல்யாணம் செய்து கொடுக்கலாம் என்று திட்டமிட்டவருக்கு தெரியவில்லை அவனது தங்கையை தான் நாம் காதலிக்கிறோம் என்று!!
விஜயேந்திரனின் தங்கை திருமணம் நெருங்கியபோதுதான் குருபரனுக்கு விஷயமே தெரிய வந்தது. அவரின் ஈகோவிற்கு கிடைத்த மிகப்பெரிய அடி இது..
தன்னை மறுக்கக் காரணம் இல்லை என்று ஆணித்தரமாக நம்பியவருக்கு பெரிய இடியாக இருக்க.. அங்கே காதல் பொய்த்து வன்மம் தலைதூக்கியது.. அதன் விளைவு வன்முறையில் முடிந்தது.
ஒருவழியாக திருமணத்திற்கு சந்தோசமாக தயாராகிய விஜயேந்திரன் தங்கச்சிக்கு அதிர்ச்சியளித்தார் குருபரன்.. ரதி பெரும்பாலும் அவரது அலங்கார திட்டங்களை அவர் கூறிவிட ஆட்கள் வந்து தான் இங்கே மண்டபத்தில் வேலை செய்வார்கள். ஆனால் திருமணத்திற்கு வந்தே ஆக வேண்டும் என்று கட்டாயப்படுத்தி அழைத்து இருந்தார் விஜயேந்திரன். அதனால் திருமணத்திற்கு வந்திருந்த வேதரதி தன் காதலனுக்கு கண்களால் செய்தி அனுப்பிவிட்டு அங்கே ஓரமாக அமர்ந்து இருந்தார்.
அதேசமயம் கல்யாணத்தில் அதிரடியாக நுழைந்த குருபரன் “இவள் தன்னை காதலித்து ஏமாற்றி விட்டு இப்போது வேறொருவரை திருமணம் செய்கிறாள்” என்று பிரச்சினையை வளர்த்தார். அதில் கோபம் கொண்ட விஜயேந்திரன் அவர் சட்டையை பிடிக்க.. அங்கே வாய்கலப்பு கைகலப்பாக மாற.. மாப்பிள்ளை குடும்பமும் “நெருப்பில்லாமல் புகையாது!!” என்று பலவித பழமொழிகளை தள்ளிவிட்டு “அதுவும் இவ்வளவு பெரிய குடும்பத்தில் இருப்பவர் கூறுகிறார் என்றால் உன் தங்கையின் யோகிதை தான் தெரிகிறதே.. இவர் மட்டும்தானா? அல்லது இவரது போல ஏமாற்றப்பட்டவர்கள் அட்டவணையே இருக்கிறதா?” என்று ஏகத்திற்கும் சாடி விட்டு சென்று விட…
இனி என்னைத் தவிர உன்னை யார் திருமணம் செய்து கொள்ள முடியும் என்ற எகத்தாளமான பார்வையோடு குருபரன் அந்தப் பெண்ணைப் பார்க்க.. அந்தப்பார்வை அவரை வெகுவாக பாதிக்க.. இவ்வளவுக்கும் மீறி உன்னுடன் வாழ்வதை விட சாவதே மேல் என்று அந்த மண்டபத்திலேயே அவர் தற்கொலை செய்து கொண்டார்.
இதையெல்லாம் ஒரு அதிர்ச்சியோடு பார்த்து இருந்தார் வேதரதி. தன் அண்ணனின் மற்றொரு பிம்பம் அவரை நிலைகுலையச் செய்தது. அதே நேரம் தற்கொலை செய்துகொண்ட அந்த பெண்ணின் மீது பரிதாபம் பொங்க அதையெல்லாம் அண்ணன் மீது கோபமாக மாறியது. விஷயம் கேள்விப்பட்டு செந்தூரார் அங்கே வருவதற்குள் அனைத்தும் நிகழ்ந்தேறி விட.. மகனை அங்கிருந்து கண்டித்து அழைத்து செல்வதைத் தவிர வேறு வழியில்லை செந்தூராருக்கு.
குருபரனும் அந்தப்பெண்ணின் இந்த செய்கையை சற்றும் எதிர்பார்க்கவில்லை. ஒரு நெருக்கடி கொடுத்தால் கண்டிப்பாக இதே மேடையிலாவது தன்னை திருமணம் செய்து கொள்வாள் என்று எண்ணியிருக்க.. அவரின் தற்கொலை அவரை மனதுக்குள் வலியை கொடுத்தாலும் அப்படி என்ன இவளுக்கு வீம்பு என்று இன்னொரு மனது அந்த பெண்ணை சாடியது.
ஒருபக்கம் தங்கையின் மரணம் மறுபக்கம் உடைந்து நிற்கும் பெற்றோர்கள் இன்னொருபுறம் வேலை இதில் காதலிக்க நேரம் எங்கே விஜேந்திரனுக்கு? ஆனாலும் அவரின் நிலையை புரிந்துகொண்ட ரதி ஓரிரு முறை அழைத்து அவரிடம் போனில் பேச தான் செய்தார்.
தன் தங்கையின் தற்கொலைக்கு காரணமான குருபரனை ஒன்றும் செய்யமுடியாமல் அவர்களின் வசதியும் செல்வாக்கும் தடுக்க.. வெறுத்துப்போய் பெற்றோரை அழைத்துக் கொண்டு சென்னைக்கு சென்றுவிட்டார்.
இதெல்லாம் முடிய நான்கு மாதங்கள் சென்றிருக்கும் இதற்குமேல் மகனை விட்டு வைத்தால் நல்லது இல்லை என்று முடிவெடுத்த செந்தூரார் வேதரதிக்கும் குருபரனுக்கும் ஒரே மேடையில் திருமணத்தை முடிக்க நினைத்தார். குருபரனுக்கு அவர் பார்த்த பெண் தான் வத்சலா.
திருமணம் என்ற நிலையில் செய்வது அறியாமல் தவித்த வேதரதி விஜேந்திரனுக்கு போன் செய்து தகவல் சொல்ல.. ஏற்கனவே தங்கையின் தற்கொலையை நேரில் பார்த்தவர், ரதியும் ஏதும் செய்து கொள்வாரோ என்று பயந்து அவரை பார்த்து சமாதானம் செய்து, அவரின் பெற்றோரிடம் பேசி பார்க்கலாம் என்று வந்தவருக்கு.. அவர் செந்தூரார் குடும்பத்தின் பெண் வாரிசு.. குருபரனின் தங்கை என்பது பேரதிர்ச்சி!!
அண்ணன் செய்ததற்கு தங்கை என்ன செய்வாள்? என்று அவரை புரிந்துகொண்ட விஜயேந்திரன் “நான் எல்லாம் ஏற்பாடு செய்துவிட்டு வந்து உன்னை அழைத்து செல்கிறேன்!” என்றார்.
வேற ஒரு கம்பெனியின் மூலம் சிங்கப்பூருக்கு தனது வேலையை மாற்றிக்கொண்டு அன்னையையும் தந்தையையும் அவர்களின் சொந்த ஊரில் குடியமர்த்தி விட்டு அதன் பிறகு வேதரதியை காண வந்தார். அதற்குள்ள திருமணம் இன்னும் ஒரு வாரத்தில் என்ற நிலையில் இருக்க..
யாரும் அறியாமல் ரதியை திருச்செந்தூர் செந்திலாண்டவர் சன்னதியில் திருமணம் முடித்த கையோடு சென்னைக்கு ட்ரெயின் ஏறிவிட்டார். அங்கிருந்து அன்றிரவே சிங்கப்பூர் செல்லவும் ஏற்பாடு செய்துவிட்டார். இவர்கள் திருமணத்தை கோவிலில் பார்த்த சிலர் செந்தூரரிடம் கூற, அவர் இவர்களை தேட முயற்சிக்கும் முன்னே இருவரும் சிங்கப்பூருக்கு பறந்து விட்டனர்.
பெண்ணின் இந்த செயலை எதிர்பார்க்காத செந்தூரார் மனதளவில் உடைந்தார். அவரைத் தேற்றியது வேதவள்ளி தான். பாசம் வைத்த மகளின் இந்த செயலை அவரால் ஏற்க முடியவில்லை. “என்னிடம் சொல்லி இருந்தால் கண்டிப்பாக அந்த பையனுக்கு திருமணம் செய்து வைத்து இருப்பேனே? நீ இப்படி செய்துவிட்டாயே?” என்று மகளுக்காக அவர் கலங்க.. அப்போது தான் தெரிந்தது அவர் திருமணம் செய்து கொண்டது இறந்தபோன அந்தப் பெண்ணின் அண்ணன் என்று..
அதுவரை ஏதோ பெண் காதலித்து இருப்பார் என்று நினைத்தவர்களுக்கு அந்தப் பையன் தான் பழிக்குப் பழி வாங்கி விட்டான். பெண்ணின் மனதை மாற்றினானா இல்லை கடத்திக்கொண்டு போயிட்டானா என்று பயம் பீடித்தது அவர்களுக்கு. இங்கு திருச்செந்தூரில் அவன் பெற்றோரும் இல்லை சென்னையில் அவன் வேலை பார்த்த இடத்திலும் அவனைப் பற்றிய தகவல்கள் இல்லை என்று நொந்து தான் போனார்கள் செந்தூரார் குடும்பத்தார்.
மெய்யறிவுக்கு என்ன பதில் சொல்வது என்று தடுமாற்றத்துடன் மகளை பார்க்க.. வேதவள்ளியே மனமுவந்து மெய்யறிவை திருமணம் செய்துகொண்டார். அதே மேடையில் குருபரனுக்கும் வத்சலாவுக்கும் திருமணம் நடந்தது.
சிங்கப்பூருக்கு பறந்து சென்ற காதல் ஜோடிகள் தங்கள் வானில் சிறகடித்து பறக்க அடுத்த பத்தாவது மாதம் அவர்களுக்கு பிறந்தான் ஆரன். தந்தையின் பெயரை மகனுக்கு வைக்க வேண்டும் என்ற ஆசையில்தான் ஆரன் என்ற பெயரை தேர்ந்தெடுத்ததார் வேதரதி.. ஆரன் பிறந்து ஆறு மாதங்களுக்கு அப்புறம் பிறந்தவன் நிமிலன்.
அதேநேரம் விஜயேந்திரனுக்கு மும்பையில் உள்ள ஒரு பெரிய கப்பல் கட்டும் தொழிற்சாலைக்கு கம்ப்யூட்டர் டேட்டா சாப்ட்வேரில் வேலை செய்து கொடுக்க வாய்ப்பு வந்தது. அதை பற்றிக்கொண்டு மும்பைக்கு வந்து செட்டிலானார். மெதுமெதுவாக ஆரன் சொல்யூஷன் என்று தனியாக ஒரு சாப்ட்வேர் கம்பெனி ஒன்றையும் ஆரம்பிக்க முதலாண்டும் முட்டி மோதினாலும் அடுத்தடுத்த ஆண்டுகளில் அவருக்கு சிறப்பாக அமைய ஒரு நல்ல நிலைமைக்கு வந்தார் விஜயேந்திரன். அங்கே மோகனவள்ளிக்கும் திருமணம் முடிந்து நிரஞ்சன் பிறந்திருந்தான்.
மெய்யறிவும் வேதவள்ளியும் மனமொத்து வாழ்க்கை நடத்தினாலும் பிள்ளைச் செல்வம் ஏனோ தகயவில்லை அவர்களுக்கு.
ஆனால் குருபரன் மனதில் உழன்று கொண்டிருந்த அந்தப் பகை வன்மம் கொஞ்சம் கூட குறையவில்லை விஜயேந்திரன் மீது..
இவர்கள் திருமணமான முதலாண்டுலேயே விஜயேந்திரன் பெற்றோர்கள் ஒருவர் பின் ஒருவராக இயற்கையை எய்த.. அப்போது ரதி கர்ப்பமாக இருந்த காரணத்தினால் விஜயேந்திரன் மட்டுமே வந்துவிட்டு சென்றிருந்தார்.
ஐந்தாண்டுகள் சென்ற நிலையில் 4 வயது மகன் ஆரனையும், நான்கு மாத கருவாக ஆராதனாவையும் சுமந்து மீண்டும் தாய் மண்ணை மிதித்தார்கள் விஜயேந்திரன் வேதரதி தம்பதியினர், செந்தூராரின் மரணத்திற்காக..
முதலில் இவர்களை கண்டதும் யாரும் சண்டையிட இல்லை. மாறாக சகோதரிகள் மூவரும் கட்டி அணைத்து தங்கள் துக்கத்தை வெளிப்படுத்தினர். குருபரன் கூட அமைதியாகத்தான் இருந்தார். ஆனால் அந்த அமைதியின் பின்னே இருந்தது அப்போது தெரியவில்லை விஜயேந்திரனுக்கு. காரியம் எல்லாம் முடிந்தவுடன் அந்த வீட்டில் தங்க பிடிக்கவில்லை அவருக்கு. அதனால் அவர் வெளியே அறை எடுத்து தங்கி கொள்வதாக சொல்ல மகனும் அந்த புதிய சூழலில் விடாமல் அழுக தன்னுடனே வைத்துக் கொண்டார்.
பால் தெளி.. கருமாதி காரியம் என்று இப்படியாக ஒருவாரம் சென்றுவிட்ட நிலையில் அங்கே தொழிலை பார்க்கவேண்டி இன்று கிளம்பலாம் என்று மனைவியை அழைக்க வந்த விஜயேந்திரனுக்குப் பேரிடி!!
ஆம்!! வேதரதி அவருடன் வர மறுத்துவிட்டார். என்னென்னவோ காரணங்கள்..
வசதியில்லை என்று கூறினார்..
ஏமாற்றி விட்டதாக புலம்பினார்.. உன் சாவகாசமே எனக்கு வேண்டாம் சென்று விடு என்று விரட்டினார்..
உன் உறவு இத்தோடு அறுந்தது என்று தாலிக்கொடியை கழற்றி அவர் கையில் திணித்தே விட்டார்!!
பார்த்துக்கொண்டிருந்த வீட்டார் அனைவருக்குமே இது இன்னும் அதிர்ச்சியாகத்தான் இருந்தது. காதலித்தாலும் இத்தனை நாட்கள் மகள் நலமுடன் தான் அவருடன் வாழ்ந்து வருக்கிறார் என்று நினைத்த அன்னைக்கும் சகோதரிகளுக்கும் ரதியின் இந்த ஆவேசமான பேச்சைக் கண்டு.. அன்று அண்ணன் சொன்னது போல விஜயேந்திரன் கடத்தி சென்று கொடுமைப்படுத்தி இருக்கிறான் என்று நினைத்து அவர்களும் விஜேந்திரனை பேச.. அங்குள்ள உறவினர்கள் அவரை அடித்து துரத்தி விட்டனர். கையில் நான்கு வயது மகன் ஆரனை வைத்துக்கொண்டு “வேதா.. வேதா..” என்று புலம்பியவாறே வீட்டு வாசலில் கிடந்த விஜயேந்திரனைப் பார்த்து மெய்யறிவுக்கு அவ்வளவு வருத்தம்.
உறவினர்களிடம் இருந்து அவரை பிரித்து அவர் தங்கியிருந்த ஹோட்டலுக்கு அழைத்துச் சென்று முதலுதவி செய்து பிள்ளையையும் கவனித்து அவரை ரயில் ஏற்றி விட்டார் மெய்யறிவு!!
ஆனால் வேதரதியின் இந்த செயலுக்குப் பின்னால் குருபரன் இருந்ததை அவர் குடும்பமே அறியவில்லை. அன்றில் பறவைகளாக இருந்த ஜோடி பிரிய.. ஏற்கனவே நான்கு மாத சிசுவினால் சரியாக உண்ணாமல் உறங்காமல் இருந்த ரதிக்கு.. இந்த மன உளைச்சல் பயம் எல்லாம் பிடித்துக் கொள்ள ஆள் இருக்க இருக்க மெலிந்து கொண்டே சென்றார்.. யார் எவ்வளவு சமாதானம் சொல்லியும் கேட்கவில்லை. யாரோடும் பேசவில்லை. மனது முழுக்க மன்னவன் மகனின் நினைவுகளே.. நினைவு மட்டுமே சுமந்து அந்த தாய் வீட்டுக்குள்ளேயே சிறை இருக்க கூட்டை விட்டுப் பறக்க துடித்துக் கொண்டிருந்தது உயிர் பறவை..
ஆனால் வயிற்றில் இருக்கும் மகளுக்காக இழுத்துப் பிடித்துக் கொண்டிருந்த உயிர் ஒருநாள் மகவை ஈன்று பறந்தே விட்டது..
அதன்பின் ஆராதனாவை தங்கள் மகளாக தத்தெடுத்துக்கொண்டனர் வேதவள்ளியும் மெய்யறிவும். விஷயம் கேள்விப்பட்டு விஜயேந்திரன் வருவதற்குள் ரதி இறந்து ஒரு மாதம் ஆகியிருந்தது.
வந்தவர் பிள்ளையை கேட்க தர முடியாது என்று அடித்து விரட்டப்பட்டார்.
குழந்தையை வளர்க்க வேண்டுமென்றால் இந்த வீட்டோடு இருக்க வேண்டுமென மெய்யறிவை குருபரன் வற்புறுத்த.. வேறுவழியின்றி அவர்களும் வீட்டோடு மாப்பிள்ளையானார். அக்கா மட்டும் இருக்கத் தான் மட்டும் தனியாக இருக்க வேண்டுமா என்று மோகனவள்ளியும் வீட்டோடு வந்துவிட்டார்.
ஆக மொத்தம் ஆரன் குடும்பத்தை பிரித்து இவர்கள் மட்டும் குடும்பமாக இங்கே கோலாகலித்துக் கொண்டிருக்க.. அங்கே மகனோடு நடைபிணமாக தான் வாழ்ந்து கொண்டிருந்தார் விஜயேந்திரன். ஆனால் பாசம் அன்பை இருமடங்காக மகனுக்கு அளித்தாலும் மனது பூரா மனைவியின் ஞாபகங்கள் மட்டுமே..
மகனிடம் இது எதையும் அவர் கூறவில்லை. ஐந்து ஆண்டுகளுக்கு முன்னே குடும்பமாக இவர்களை சென்னையில் ஒரு முறை பார்த்த விஜயேந்திரனுக்கு மகளை கண்ணாரக் காண ஆசை தோன்ற.. அவர்களை பின் தொடர்ந்தார். விஜயேந்திரனை கண்டுகொண்ட குருபரன் குடும்பத்தை அவ்விடத்தைவிட்டு நகர்த்தி செல்ல அதைக்கண்ட அவருக்கு மனதளவில் மேலும் முடியாமல் போனது.
எவ்வளவு நாள்தான் அந்த மனதும் வலியையும் ரணத்தையும் தாங்கிக்கொண்டு இருக்கும்? அதன் பிறகு ஒருநாள் அனைத்தையும் மகனிடம் கூற.. அவர்களை வீழ்த்த வென்று சூரசம்ஹாரத்தை சூட்சமமாக நடத்த ஆரம்பித்தான் ஆரன்.
ஆரன் கூறியதைக் கேட்டுக்கொண்டிருந்த மயூரி தன் அத்தை வேதரதியை பார்த்தவாறு அப்படியே மடங்கி அமர்ந்தாள். தந்தையின் இந்த செயலை ஜீரணிக்க முடியாமல்..
இதில் யாரை நோவது? தந்தை அன்று அனுபவித்த வலியை இன்று குருபரனின் மகனான நிமிலனுக்கு கொடுத்து அதே சமயம் அவர் பிரிய மகளையும் அவரிடமிருந்து இழுத்துக் கொண்டு வந்திருந்த அவனை தப்பு என்று கூறவும் முடியாமல்.. தப்பே செய்யாமல் அங்கே மருத்துவமனையில் படுத்திருக்கும் அண்ணனின் நிலையைக் கண்டு பரிதவித்தாள் மயரி!!
வருவான் அசுரன்…
super sis very intersting waiting epi