ATM Tamil Romantic Novels

காதல் தேவதா 9, 10

அத்தியாயம் 9

 

அந்த மோட்டார் ரூம் முழுவதுமாக இருட்டாக இருக்க அவனின் நெருக்கம் அவளுக்கு பயத்தை கொடுத்தது “பெரியம்மா” என்று வள்ளி அழுது கொண்டே கத்தி அழைக்க ஆரம்பித்தாள் ஏனெனில் கூப்பிடும் தூரத்தில் தான் அவளின் வீடு இருந்தது யாராவது வந்துவிட மாட்டார்களா என்று அவள் பயத்துடன் இன்னொரு முறை கத்தி அழைக்க போக அவளின் வாயை தன் கையால் அழுத்தி மூடினான் சக்திவேல். 

 

அவளோ பயத்துடன் அவனிடமிருந்து விலக பார்க்க அவளை நகர கூட விடாமல் அவளின் இடையில் தன் கை நுழைத்து வளைத்து கெட்டியாக பிடித்து கொண்டான் சக்திவேல். 

 

“என்ன டி ரொம்ப துள்ளுற எப்பவும் அரைகுறையா தான் இருப்பியா நானா இருந்ததால சரியா போச்சு வேற எவனாவது இந்த இடத்தில் இருந்திருந்தா நல்லா வெடக்கோழி மாறி இருக்க உன்னை” என்று அவளை மேல் இருந்த கீழ் வரை ஒரு பார்வை பார்த்து கொண்டே கூறியவன் “உன்னை அடிச்சி சாப்பிட்டுட்டு போய் இருப்பான் நல்லா சாப்பிடுவியோ தளதளன்னு தக்காளி பழம் மாதிரி இருக்க” என்று இரட்டை அர்த்தத்தில் கூறியவன் “இப்போ நான் உன் வாயில இருந்து 

என் கையை எடுப்பேன் வாயை திறந்து கத்துன

அப்படியே இங்கேயே கழுத்தை திருவி தூக்கி போட்டுட்டு போய்டே இருப்பேன்” என்று அவன் கூற அவளும் பதிலுக்கு சரியென தலையை ஆட்டினாள். 

 

அவள் வாயில் இருந்து தன் கையை எடுக்கும் சமயம் அவளின் செர்ரி பழ இதழ்களை லேசாக வருடி கொடுத்தவன் அதன் மென்மையில் தன்னையே துளைத்துவிட்டான். 

 

இன்னும் அழுத்தமாக தன் கட்டை விரலால் அவளின் இதழில் வருடிய பின் தான் அதிலிருந்து தன் கையை எடுத்தான். 

 

சக்திவேல் தன் உடலோடு சேர்த்து வள்ளியை இன்னும் நெருக்கி அணைக்க அவளோ தவித்து போனாள் தடுமாறி கொண்டே தள்ளி நிற்க போக “கிட்ட வா டி” என்று கூறிக் கொண்டே அவளை இன்னும் நெருங்கினான். 

 

அவளின் கண்கள் திருதிருவென முழித்து கொண்டே இருக்க “அப்பா என்ன கண்ணு டி இது உன் முகத்துலையே இந்த கண்ணு ஒன்னு தான் அழகா இருக்கு” என்று கூற “நான் பெரியம்மா கிட்ட போகனும்” என்றாள் அழுது கொண்டே. 

 

சக்திவேலுக்கு உடனே கோபம் வந்து அவளின் இதழை நெருங்க போக 

வெளியே வள்ளியின் பெரியம்மா

“வள்ளி…வள்ளி….” என்று கத்தி கொண்டே வந்தார். 

 

சக்திவேல் உடனே அவளிடமிருந்து விலகியவன் கதவு இடுக்கின் வழியாக வெளியே எட்டி பார்த்தான் 

“இந்த பொண்ணு துவைச்ச துணியை எல்லாம் கீழே போட்டுட்டு எங்கே போனா” என்று தேடிக்கொண்டு இருந்தவர் துணியை எடுத்து கொண்டு வீட்டிற்க்கு சென்றார். 

 

அவர் சென்றவுடன் சக்திவேல் வள்ளியின் கைப்பிடித்து வெளியே அழைத்து வந்தான் “வீட்டுக்கு போ” என்று அனுப்பி வைக்க அவளும் அப்படியே நடந்து சென்றாள். 

 

அவள் இருந்த கோலத்தை பார்த்த 

சக்திவேல் “அடியேய் கூறு கெட்டவளே நில்லு டி இப்படியேவா வீட்டுக்கு போவ” என்று அவளை பார்த்து கோபத்துடன் கேட்டான். 

 

“மேலே போட்டுக்க துணி இல்லையே” என்றாள் பதிலுக்கு ஏதோ சிறுபிள்ளை போன்று

“ஏன் டி ஆண்டவன் உனக்கு மூளையவே கொடுக்கலையா பொட்ட புள்ளை தானா நீ” என்று அவளை திட்டியவன் அவளை முறைத்து கொண்டே தன் மேல்சட்டையை கழட்டி “போட்டுக்க” என்று அவள் கையில் கொடுத்தான். 

 

அவன் வெறும் கையில்லா வெள்ளை நிற பனியனுடன் நின்றிருக்க “இல்லை நீங்க” என்று அவள் தயக்கத்துடன் ஏதோ கூற வர 

“அடிங்க போட்டுக்க டி” என்று மிரட்டி கொடுக்க அவளும் அவன் மேல்சட்டையை அணிந்து கொண்டு அவனை திரும்பி திரும்பி பார்த்து கொண்டே வீட்டிற்க்கு சென்றாள். 

 

அவள் பெரியம்மா வீட்டிற்க்குள் வருவதற்க்குள் அவன் சட்டையை கழட்டிவிட்டு உடை மாற்றி நின்று கொண்டாள். 

 

அவளின் பெரியம்மா வீட்டின் உள்ளே வந்தவர் “எங்கே டி போன” என்று கேட்க “குளிக்கத்தான் பெரியம்மா” என்றாள் பதட்டத்துடன் 

“சரி சரி அடுப்பை பத்த வைச்சு சோத்த ஆக்கு நான் சிவகாமி வீடு வர போய்ட்டு வாரேன்” என்று கிளம்பினார். 

 

அவர் சென்றவுடன் வள்ளி சக்திவேலின் சட்டையை தன் தகர பெட்டியின் உள்ளே வைத்து பூட்டினாள். 

 

சக்திவேல் ரோட்டில் நடந்து வந்து கொண்டிருக்க அவன் எதிரே வந்த அவன் நண்பன் காளி அவனை பார்த்துவிட்டு “என்ன மாப்பிள்ளை சட்டையில்லாம வர” என்று கேட்க

“ஐய்யப்பனுக்கு வேண்டுதல் ஒரு நாள் சட்டையில்லாம வரேன்னு” என்று கோபத்துடன் கூறியவன் அதற்க்கு மேல் அங்கு நிற்காமல் வீட்டிற்க்கு செல்ல போக

“நம்ம வள்ளி வேற ஆம்பள சட்டை போட்டுட்டு போச்சே அதுவும் ஐய்யப்பனுக்கு வேண்டி இருக்கும் போல” என்று அவனை கிண்டலாக குத்தி காட்ட சக்திவேல் அவனை முறைத்துவிட்டு அங்கிருந்து நடந்து சென்றான். 

 

காளி அவனை சந்தேகமாக பார்த்து கொண்டே நின்றிருந்தான். 

 

நாகலிங்கத்தின் இல்லம்… 

 

நாகலிங்கம் கோபத்துடன் வீட்டின் உள்ளே விறுவிறுவென நடந்து வந்தவன் தன் அறைக்கு சென்று கதவடைத்து கொண்டான். 

 

அவன் பின்னே வந்த முத்தம்மாள் பதறி அடித்து கொண்டு ஓடி வந்து கதவை தட்ட ஆரம்பித்தார்

“ஐயா ராசா அம்மா உனக்கு வேற நல்ல பொண்ணா பார்த்து கட்டி வைக்கிறேன் வாய்யா” என்று அழுது கொண்டே கத்தி கொண்டே இருக்க அவன் எதுவும் பேசவும் இல்லை கதவை திறக்கவும் இல்லை. 

 

கட்டிலில் கோபத்துடன் அமர்ந்து இருந்தான் சத்தம் தாங்க முடியாமல் வந்து கதவை வேகமாக திறந்தவன்

“என்ன வேணும் உனக்கு நான் இன்னும் சாகல உயிரோட தான் இருக்கேன் போதுமா” என்றான் கோபத்துடன். 

 

“ஐயோ ராசா என்ன வார்த்தையா சொல்லிப்புட்ட நானே கருவேப்பிலை கொத்து மாதிரி ஒன்னே ஒன்னு கண்ணே கண்ணுன்னு ஒத்த பிள்ளையை வச்சி இருக்கேன் நாம வேற பெண்ணை பார்த்துக்கலாம் யா உங்க அப்பன் தான் என்னை அம்போன்னு விட்டுட்டு போனான் நீயும் என்னை விட்டுட்டு போய்ட்டா எனக்கு யாரு யா இருக்கா சொல்லு” என்றார் அழுத விழிகளுடன். 

 

“அம்மா நீ அழாத கண்ணை துடைச்சிக்க உன் மகன் ஒன்னும் உன் புருசனை மாதிரி கோழையில்லை நான் வீரன்

எனக்கு வேற பொண்ணுலாம் வேணாம் எனக்கு அவள் தான் வேணும்”

 

“ஐயா ராசா அவுக தான் பொண்ணு கொடுக்க மாட்டேன்னு சொல்லாட்டாகளே இனி என்ன செய்ய முடியும் யா”

 

“ஆத்தா உனக்கு ஒன்னும் தெரியாது நீ பசுபதியை வர சொல்லு” என்றான் கோபத்துடன் அங்கிருந்த நாற்காலியில் அமர்ந்து கொண்டு. 

 

அடுத்த பத்து நிமிடத்தில் அவன் அல்லக்கை பசுபதி அவன் முன் வந்து நின்றான். 

 

“ஐயா கூப்பிட்டிகளா கஞ்சி கூட குடிக்காம ஓடி வந்த என்ன விஷயம்ங்க” என்றான் பசுபதி. 

 

“அது ஒன்னும் இல்லை பசுபதி நாளைக்கு தான நம்ம ஊர்ல தீமிதி” என்று அவன் கேட்க

“ஆமாங்க உங்க முகம் ஏனுங்க வாடி போய் இருக்கு” என்றான். 

 

நாகலிங்கம் அதற்க்கு பதில் கூறாமல் “நாளைக்கு ராத்திரி தீமிதி அப்போ சக்திவேல் அக்கா மகளை தூக்கனும் பசுபதி” என்றான்

“ஐயா பெரிய இடம் எதுவா இருந்தாலும் யோசிச்சு முடிவு பண்ணுங்க” என்றான். 

 

முத்தம்மாள் அவன் கூறியதை கேட்டு அதிர்ச்சியுடனே நின்றிருந்தார். 

 

“அதெல்லாம் எனக்கு தெரியாது அவள் கழுத்துல தாலின்னு ஒன்னு ஏறுனா அது என் கையால தான் இருக்கனும் அவள் கழுத்துல தாலியை கட்டி காலத்துக்கும் அவளை கண்ணீர் சிந்த வைக்கல நான் மாயாண்டி மகன் இல்லை” என்றான் கோபத்துடன். 

 

அதே நேரம் ஆராதனா எந்த வித கவலையும் இன்றி வினய்யுடன் குஸ்தி போட்டியை பார்க்க நின்று கொண்டு இருந்தாள். 

 

மைதானத்தின் சுற்றி கட்டைகளால் தடுப்பு எழுப்பி நடுவில் செம்மண்ணால் தரை அமைக்கப்பட்டு இருந்தது ஊரே ஆரவாரமாக காத்திருந்தது பக்கத்து ஊருக்கும் இந்த ஊருக்கும் இன்று போட்டி. 

 

முதலில் சிறுவர்களுக்கான போட்டி ஆரம்பமானது தர்மன் கருப்பு நிற சட்டை வெள்ளை நிற வேட்டி அணிந்து கையை தன் மாணவர்கள் சண்டையிடுவதை பார்த்து கொண்டு இருந்தான். 

 

ஏனோ அங்கு வந்த ஆராதனாவின் கண்கள் அவன் மீது தான் இருந்தது

ஆறடி உயரத்தில் கட்டுமஸ்தான உடல்வாகுடன் முறுக்கு மீசையுடன் 

“டேய் ஒழுங்கா ஆடுங்க” என்று கோபத்துடன் அந்த சிறுவனை பார்த்து கத்தி கொண்டே இருந்தான். 

 

தன் பக்கத்தில் இருந்த டிரைவர் முத்துவிடம் “அண்ணா அவரு ஏன் கத்திக்கிட்டு இருக்காரு” என்று ஆராதனா தர்மனை காட்டி கேட்க. 

 

“அவரு தான் மா குஸ்தி வாத்தியார் இந்த ஊர்ல அவரு அளவுக்கு யாரும் சண்டை போட மாட்டாக அடுத்து அவரோட போட்டி தான் அவரு பலத்துக்கு எவனும் அவர் பக்கத்துல நிற்க கூட முடியாது” என்றார். 

 

சிறுவர்களுக்கான போட்டி முடிந்து பெரியவர்களுக்கான போட்டி ஆரம்பமானது. 

 

தர்மன் அப்போதும் நின்று கத்தி கொண்டு தன் மாணவர்களுக்கு அறிவுரை வழங்கி கொண்டே இடது கையால் தன் மீசையை முறுக்கி விட்டு கொண்டே நின்றிருந்தான். 

 

இறுதி போட்டியில் தர்மன் அவன் உடலோடு இறுக்கி பிடித்த கருப்பு நிற டி ஷர்ட்டுடன் களம் இறங்கினான். 

 

தர்மனை பார்த்த அங்கிருந்த அனைவரும் கத்தி ஆரவாரம் எழுப்பினர். 

 

அவன் எதிரே மலை மாமிசம் போன்று ஒருவன் நின்றிருக்க விசில் அடித்தவுடன் இருவரும் சண்டையிட ஆரம்பித்தனர். 

 

தர்மனிடம் பலத்துக்கு அவனால் தாக்கு பிடிக்க முடியவில்லை அந்த வீரன் கீழே விழ அவன் மேலே படர்ந்து அவனை தர்மன் அழுத்தி பிடித்து கொண்டான் அவன் எழுந்து கொள்ள முடியாமல் மூச்சுக்கு திணறி கீழே படுத்தேவிட்டான். 

 

தர்மன் வெற்றிபெற்றதாக அறிவிக்கப்பட்டது போட்டி முடிந்ததும் அவன் அருகில் ஓடி வந்த ஆராதனா 

“வாவ் சூப்பரா சண்டை போட்டிங்க பீம் பாய்” என்று சிரித்து கொண்டே அவன் கையை பிடித்து குலுக்கினாள். 

 

தர்மன் பதிலுக்கு தன் முகத்தில் எந்த வித எதிரொலிப்பையும் காட்டாமல் வெறும் தலை அசைப்பை மட்டுமே பதிலாக கொடுத்தவன் அவள் கையில் இருந்த தன் கையை விலக்கி கொண்டான். 

 

அங்கே இருந்த பொதுமக்கள் இவர்கள் இருவரும் ஜோடியாக நிற்பதை தான் வேடிக்கை பார்த்து கொண்டிருந்தனர். 

 

தர்மன் மேடையேறி கோப்பையை வாங்க ஆராதனா கைத்தட்டி ஆரவாரம் செய்தாள். 

 

அவள் அருகில் வந்த வினய் “அவர் மேலே உனக்கு என்ன அவ்வளவு அக்கறை” என்று தர்மனை பார்த்து கொண்டே கேட்க

“ஜஸ்ட் என்னோட பிரண்ட் டா” என்றாள் சாதாரணமாக. 

 

அத்தியாயம் 10

 

தர்மனை பார்த்த வினய் “என்னடி இந்த ஆளு பார்க்க காண்டாமிருகம் மாதிரி இருக்காரு இவரு கூடலாம் உனக்கு என்ன பிரண்ட்ஷிப் வேண்டி கிடக்கு” என்று கேட்டான். 

 

அவன் கூறியதை கேட்ட ஆராதனாவின் முகம் கோபத்தில் சிவந்தது “ஏய் மக்கு வினய் அவரு எனக்கு நிறைய ஹெல்ப் பண்ணி இருக்காரு டா பார்க்க தான் டெரரா இருப்பாரு பட் ரொம்ப நல்லவரு” என்றாள் ஆராதனா. 

 

“நீ இங்கே வந்தே ஒன் வீக் தான ஆகுது அதுக்குள்ள அப்படி என்ன ஹெல்ப் பண்ணினாரு அவரு உனக்கு” என்றான். 

 

“அதெல்லாம் சொன்னா உனக்கு புரியாது டா மக்கு பைய்யா” என்றாள் ஆராதனா. 

 

அவன் மறு கேள்வி ஏதோ கேட்க வர அதற்க்குள் சந்தோசம் “ஆரு வினய்” என்று கத்தி கொண்டே அங்கு வந்தார். 

 

இவர்கள் இருவரையும் பார்த்தவர் “ரெண்டு பேரும் வீடு தங்கவே மாட்டிகளா பிள்ளைகளா உங்க அம்மா அங்கே உங்களை வலைவீசி தேடிக்கிட்டு இருக்கா வாங்க வீட்டுக்கு போலாம்” என்று இருவரையும் இழுத்து கொண்டு வீட்டிற்க்கு சென்றார். 

 

மறுநாள் மாலை தீமிதிக்கான ஏற்பாடுகள் அனைத்தும் விரைவாக நடைபெற ஆரம்பித்தது வெளியூரில் இருந்து கூட பக்தர்கள் வந்து அலகு குத்தி தங்கள் வேண்டுதல்களை நிறைவேற்றி கொண்டு இருந்தனர். 

 

ஆராதனாவின் அம்மா தேவியும் தீமிதிப்பதாக வேண்டி இருக்க மொத்த குடும்பமும் கிளம்பி கொண்டு இருந்தது. 

 

ஆராதனா கிளம்ப போக அவளின் பாட்டி சந்தோசம் அவளின் கையை பிடித்தவர் ஒரு அரக்கு நிற பட்டு புடவையை அவள் கையில் கொடுத்தார் “ஆரு மா இன்னைக்கு இந்த பட்டு புடவையை கட்டிக்கோ” என்றார். 

 

“பாட்டி எனக்கு புடவையெல்லாம் கட்ட தெரியாது” என்க

“அவ்வளோ தான நான் கட்டி விடுறேன் வா” என்று அவளின் அறையின் உள்ளே இழுத்து சென்றார். 

 

ஆராதனாவுக்கு அந்த புடவையை கட்டி முடித்து மனம் நிறைய அவளை ஒரு பார்வை பார்த்தவர் “என் கண்ணே பட்டுரும் போல என் ராசாத்தி மகாலட்சுமி மாதிரி இருக்க வீட்டுக்கு வந்த உடனே சுத்தி போடனும்” என்றார். 

 

ஆராதனா புடவை கட்டி வெளியே வர அங்கே வந்த சக்திவேல் அவளை கண்டுகொள்ளவேயில்லை அவனுக்கு அவள் மீது எந்த வித ஈர்ப்பும் இல்லை அதனால் சாதரணமாக அவளை கடந்து சென்றுவிட்டான். 

 

அனைவரும் கிளம்பி கோவிலுக்கு சென்றனர். 

 

முதலில் அம்மனுக்கு பூஜை நடைபெற ஆராதனா வீட்டு சார்பாக 

அம்மனுக்கு தங்கத்தினால் ஆன அட்டிகை தானமாக வழங்கப்பட்டது

வழக்கம் போல் சொக்கநாதனுக்கு தான் முதல் மரியாதை வழங்கப்பட்டது. 

 

ஆராதனா கையெடுத்து கும்பிட்டு வேண்டி கொண்டே இருக்க அவளை வைத்த கண் வாங்காமல் ஈரையை வேட்டையாடும் கழுகை போல் வெறியுடன் பார்த்து கொண்டிருந்தான் நாகலிங்கம். 

 

அனைவரும் அம்மனை கும்பிட்டு முடிக்க பூசாரிக்கு அருள் வந்து சாமியாட ஆரம்பித்தார் ஊரே கையெடுத்து கும்பிட்டு நின்றது. 

 

அங்கிருந்த இருவர் பூசாரியை அமைதிப்படுத்தி அழைத்து கொண்டு சென்று குறி சொல்லும் இடத்தில் அமர வைத்தனர். 

 

அவர் சாமி ஆடிக் கொண்டே இருக்க

ஒவ்வொருவராக வரிசையாக வந்து குறி கேட்க ஆரம்பித்தனர். 

 

ஆராதனாவின் கையைப் பிடித்து இழுத்து சென்றார் சந்தோசம் 

“பாட்டி எதுக்கு இதெல்லாம்” என்றாள் “சாமி விசயத்துல தடை சொல்ல கூடாது ஆரு மா” என்றவர் ஒவ்வொருவராக குறி கேட்டு நடந்து செல்ல ஆருவின் முறையும் வந்தது. 

 

பூசாரி கையில் வேப்பிலையை வைத்து ஆடிக்கொண்டே ஆராதனாவின் நெற்றியில் விபூதியை பூசியவர் அவள் தலையில் கை வைத்தார் அவளோ தயக்கத்துடன் நின்றிருந்தாள் “சாமி திருவிழா முடிச்சு கல்யாணம் வச்சிக்கலாம்ன்னு இருக்கோம் கைக்கூடி வருமா” என்று சந்தோசம் கேட்டார். 

 

“உன் பேத்திக்கு கல்யாண யோகம் கைக்கூடி வந்துருக்கு நல்லதே நடக்கும்” என்று கூற ஆராதனாவின் முகம் வாடியது “தாயி மனசு நோகாத உன் மனம் போலவே மாங்கல்யம் அமையும் ஆத்தா எல்லாத்தையும் பார்த்துப்பா” என்றார் சாமி ஆடிக்கொண்டு. 

 

சந்தோசம் ஓரத்தில் நின்றிருந்த சக்திவேலின் கையைப்பிடித்து இழுத்தவர் “நீயும் வா டா” என்க “எதுக்கு மா” என்று அவன் கேட்டு கொண்டே அவர் அருகில் வந்து நின்றான். 

 

“சாமி என் மகனுக்கும் நாலு நல்ல வார்த்தை சொல்லுங்க” என்றார்

சக்திவேலின் நெற்றியில் விபூதியை பூசிய அந்த பூசாரி அவன் தலையில் கை வைத்து கண்களை மூடியவர் 

“சீக்கிரமே புத்திர பாக்கியம் கிடைக்கும்” என்றார்

“சாமி என் மகனுக்கு இன்னும் கல்யாணமே ஆகல அதுக்குள்ள எப்படி” என்று சந்தோசம் தயக்கத்துடன் கேட்டார். 

 

“எல்லாம் ஆத்தா பார்த்துக்குவா” என்று கூறினார் அதை கேட்ட சந்தோசம் சரி கல்யாணம் முடிஞ்ச உடனே குழந்தை நின்னுடும் போல என்று நினைத்து கொண்டார். 

 

அதன் பின் இரவு தீமிதிக்கான பூக்குழி தாயாராக இருக்க ஒவ்வொருவராக தீக்குழியில் இறங்கி நடக்க ஆரம்பித்தனர். 

 

சக்திவேல் வீட்டில் ஏதோ வேலை இருப்பதாக கூறிவிட்டு தன் வீட்டிற்க்கு சென்றான் சந்தோசம் சில பொருட்களை கூறி அதையும் கையோடு எடுத்து வர சொன்னார். 

 

வீட்டின் பூஜை அறையில் தன் தாய் கூறிய அனைத்து பொருட்களையும் எடுத்து கொண்டவன் வெளியில் செல்ல போக அங்கே வள்ளி வெளியே இருந்த பிள்ளையார் புகைப்படத்திற்கு தன் நுனி காலால் எக்கி நின்று மாலை போட்டு கொண்டு இருந்தாள். 

 

அவளின் தாவணி விலகி இடை தெரிய அவளின் வயிற்றை பார்த்த சக்திவேலுக்கு இன்று பூசாரி கூறிய வார்த்தைகள் அனைத்தும் நினைவிற்க்கு வந்தது அவளின் கைப்பிடித்து தரதரவென இழுத்து கொண்டு உள்ளே சென்றான். 

 

வீட்டில் இருந்த அனைவரும் கோவிலுக்கு சென்றிருக்க அங்கே யாரும் இல்லை வள்ளி அவனை பார்த்து கொண்டே பயந்து போய் நின்றிருந்தாள். 

 

சக்திவேல் அவளை பார்த்தவன் லேசாக தடுமாறி கொண்டே “ஏய் உனக்கு நாள்லாம் கரெக்டா தான வருது” என்று கேட்டான். 

 

வள்ளிக்கு அவன் கேட்ட எதுவும் புரியாமல் பேய் முழி முழிக்க 

“சரியான கூறு கெட்டவள் தலைக்குலாம் சரியா தான டி குளிக்கிற” என்று கேட்டான். 

 

வள்ளியோ அவன் தலைக்கு குளிப்பதை பற்றி தான் கேட்க்கிறான் என்று நினைத்தவள்

பயத்துடனே “ம்ம்” என்று தலையை மட்டும் ஆட்டினாள் 

“சரி போ” என்று அவளின் கையை விடுவித்தான் சக்திவேல். 

 

அவள் சென்ற பின் தன் விரல் விட்டு “ஒன்னு ரெண்டு மூணு” என்று எண்ணியவன் ‘அய்யோ மூணு வாட்டியா ஒன்னா இருந்தோம் ஒருவேளை இருக்குமோ இல்லை எதுவும் இருக்காது’ என்று தன்னை தானே தேற்றி கொண்டு அங்கிருந்து சென்றான். 

 

வள்ளிக்கு ஒன்றும் புரியவில்லை எதற்காக இங்கு வந்தான் எதற்காக இதையெல்லாம் கேட்டான் என்று. 

 

ஆராதனா தீமிதியை பார்த்து கொண்டே ஓரமாக நின்றிருந்தாள் 

அவள் பக்கத்தில் நின்றிருந்த வினய்க்கு தண்ணீர் தாகம் எடுக்க 

“ஆரு வரீயா தண்ணீ குடிச்சிட்டு வரலாம்” என்றான் வினய். 

 

“எனக்கு வேண்டாம் டா நீ போ” என்று கூறினாள் அவனும் அவளை அங்கேயே விட்டு நடந்து சென்றான். 

 

அவளை நோட்டம் விட்டு கொண்டே இருந்த பசுபதி தன் அலைபேசியில் எடுத்து நாகலிங்கத்தை அழைத்தான் “அண்ணே அந்த பொண்ணு தனியா தான் இருக்கு” என்று கூறினான். 

 

“சரி டா நீ போய் பேச்சு கொடுத்து கூட்டிட்டு வா” என்று கூறிவிட்டு அழைப்பை துண்டித்தான். 

 

பசுபதி ஆராதனா அருகில் சென்றவன் “ஆராதனா மா சக்திவேல் ஐயா உங்களை உடனே வீட்டுக்கு கூட்டிட்டு வர சொன்னாரு வரீயா மா” என்றான்

“ஏன் அண்ணா மாமா இப்போ தான வீட்டுக்கு போனாரு” என்று கேட்டாள். 

 

“தெரியலை மா ஏதோ அவசரம்ன்னு சொன்னாரு” என்றான்

“இருங்க அம்மா கிட்ட சொல்லிட்டு வரேன்னு” என்று அவளின் தாயை தேட அவரோ தீக்குழியில் இறங்கி கொண்டு இருந்தார். 

 

“நான் உங்களை மாமா வீட்ல பார்த்தேயில்லையே நீங்க எங்கே வேலை பார்க்குறிங்க” என்று பசுபதியிடம் ஆராதனா கேட்டாள். 

 

“நான் உங்க தென்னந்தோப்புல வேலை பார்க்குறேன் என் பெயர் முருகன்” என்று கூறியவன் அவளை தன்னுடன் அழைத்துச் சென்றான். 

 

“சரி வாங்க போலாம்” என்று ஆராதனா அவனுடன் நடந்து சென்றாள். 

 

ஆராதனா சரியான வழியில் செல்ல போக “அம்மா இந்த பக்கமா போனா சீக்கிரமா போயிடலாம்” என்று அவன் வேறு வழியை காட்ட

அவளும் அவன் பின்னே சென்றாள். 

 

ஆராதனா நடந்து சென்று கொண்டிருக்கும் போது ஆள் நடமாட்டம் அற்ற மாந்தோப்பு ஒன்று வர “அண்ணா எங்க தாத்தா வீடே வரலயே” என்று அவள் சந்தேகமாக கேட்க 

அவளின் பின்னே வந்த நாகலிங்கம் அவளின் வாயை பொத்தி அந்த மாந்தோப்பு உள்ளே இழுத்து சென்றான். 

 

ஆராதனா அவனிடமிருந்து விலக போராடி கொண்டே அவனுடன் சென்றாள். 

 

அவளை தூக்கி சென்ற நாகலிங்கம் அங்கிருந்த அவனுக்கு சொந்தமான மோட்டார் ரூம் உள்ளே போட்டான் 

ஆராதனா துள்ளி எழுந்து ஓட போக கதவை தாழிட்ட நாகலிங்கம் அவள் கன்னத்தில் பளார் என்று ஒரு அறை விட்டான். 

 

பசுபதி மாந்தோப்பின் வெளியே யாராவது வருகிறார்களா என்று பார்ப்பதற்காக நின்றிருந்தான். 

 

ஆராதனாவின் இதழின் ஓரம் ரத்தம் வழிய ஆரம்பித்தது இருந்தாலும் அதையெல்லாம் பொருட்படுத்தாது 

எழுந்து அவனை தள்ளி விட்டு ஓட பார்க்க அவள் இரண்டு கன்னத்திலும் மாறி மாறி அடித்த நாகலிங்கம் அவளின் தலை முடியை கொத்தாக பிடித்து கொண்டான். 

 

“எவ்வளவு தைரியம் இருந்தா அன்னைக்கு பொண்ணு கேட்க வரும்போது என்னை பார்த்து சிரிப்ப என்னை பார்த்தா கோமாளி மாதிரி தெரியுதா டி உனக்கு” என்றவன் அவளின் முடியை இன்னுமே இறுக்கி பிடிக்க “ஆஆ” என்று வலியில் கத்திய ஆராதனா “சாரி தெரியாமா பண்ணிட்டேன் பிளீஸ் என்னை விட்டுரு” என்றாள் அழுது கொண்டே. 

 

அவளை பார்த்து சத்தமாக சிரித்த நாகலிங்கம் “ஏன் டி உன்னை விட்டு கொடுக்க தான் இங்கே தூக்கிட்டு வந்தனா ஊர்ல நான் கை வைக்காத பொண்ணுங்களே இல்லை டி ஆனா அவங்க எல்லாரையும் விட நீ ஒரு தனி ரகமா இருக்க நல்லா வெள்ளை ரசகுல்லா மாதிரி” என்றான் அவளின் கன்னத்தை பிடித்து தடவி கொண்டே ஆராதனா அவன் பேச்சில் முகம் சுழித்தாள். 

 

“ஹேல்ப் யாராவது வாங்களேன் பிளீஸ் என்னை காப்பாத்துங்க” என்று அவள் கத்தி கூப்பாடு போட

“இது என்னோட மாந்தோப்பு இந்த நேரத்தில இங்கே எவனும் வர மாட்டான்” என்று கத்தி சிரித்தவன் அவளை மையலுடன் மேல் இருந்து கீழ் வரை ஒரு பார்வை பார்த்தான். 

 

“சும்மா சொல்ல கூடாது அம்சமா இருக்க இந்த புடவையில உன் அழகுக்கு இந்த ஊர்ல எவளும் உன் பக்கத்துல கூட நிற்க முடியாது” என்று கூறி கொண்டே அவளை நெருங்க அவன் மீது இருந்து மது வாடை வீசியது நாகலிங்கம் நன்றாக குடித்துவிட்டு தான் வந்திருந்தான்

ஆராதனா அவனிடமிருந்து விலகி கொண்டே பின்னே சென்றாள். 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

3 thoughts on “காதல் தேவதா 9, 10”

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Scroll to Top