அத்தியாயம் 11
“சொன்னா கேளு பிளீஸ் என்னை விட்டுரு என் மாமாவுக்கு தெரிஞ்சா உன்னை கொலை கூட பண்ண தயங்க மாட்டாரு” என்ற ஆராதனா அழுது கொண்டே பின்னே நகர்ந்து சென்றாள்.
அவள் மாமா என்று கூறியவுடன் நாகலிங்கத்துக்கு சக்திவேலின் நினைவு வந்தது அவன் நினைவே அவள் மீது இன்னும் கோபத்தை வரவழைத்தது அதே கோபத்துடன் அவள் அருகில் சென்றவன் தன் ஆத்திரம் தீரும் வரை ஆராதானாவின் கன்னத்தில் அவன் பலத்துக்கு மாறி மாறி அறைந்தான்.
அவன் அடித்ததில் ஆராதனா சோர்ந்து போய் கீழே விழுந்துவிட்டாள் இதுவரை அவளின் தாய் தந்தை கூட அவளை அடித்தது இல்லை பூஞ்சை உடம்பை உடையவளுக்கு காட்டிலும் மேட்டிலும் வேலை பார்த்தவனின் கையால் அடி விழ அவளால் வலி தாங்க முடியவில்லை.
“இதுக்கு மேல வாயை திறந்த உன் உடம்புல உயிர் இருக்காது” என்று கூறியவன் அவளின் புடவை முந்தானையில் கை வைத்து இழுக்க ஆராதனா தன் மானம் காக்க தன் மேலே கை வைத்து மறைத்துக் கொண்டாள்.
புடவையை உருவி தூக்கி எறிந்த நாகலிங்கம் அவள் அருகில் இன்னும் நெருங்கி வர ஆராதனா தேம்பி தேம்பி அழுக ஆராம்பித்துவிட்டாள் “பிளீஸ் என்னை விட்டுரு” என்று கெஞ்சினாள்
அவள் உடலளவிளும் சரி மனதிலவிளும் சரி வலுவிழந்து நின்றிருந்தாள்.
அவளை பார்த்தவனுக்கு அவள் மீது இரக்கம் வருவதற்க்கு பதிலாக அந்த மனித மிருகத்துக்கு அவளை அடைய வேண்டும் என்ற வெறி தான் அதிகரித்தது.
அவளின் தோள்வளைவில் கை வைத்து அவள் மேலாடையை பிடித்து இழுக்க அதுவும் கிழிந்து போனது
அவளோ அவனிடமிருந்து விடுபட போராட ஆனால் அது முடியாமல் தவித்தாள்.
சரியாக அந்த நேரம் தன் வயலுக்கு தண்ணீர் பாய்ச்சி முடித்து அந்த வழியாக நடந்து வந்து கொண்டிருந்தான் தர்மன்.
அங்கே தொட்டியில் இருந்த தண்ணீரில் தன் கை காலை கழுவி கொண்டே இருந்தவனுக்கு யாரோ ஒரு பெண் முனகுவதை போல் சத்தம் கேட்டது.
அந்த மோட்டார் அறையின் உள்ளே நாகலிங்கம் ஆராதனா கத்தாமல் இருக்காமல் வாயை பொத்தி கொண்டு அவளை பிடித்து கொண்டே நின்றிருந்தான்
‘எழவெடுத்தவன் போய் தொலையுறானா பாரு’ என்று நினைத்துக் கொண்டே நின்றிருந்தான்.
தர்மன் தயங்கி கொண்டே தன் கை காலை கழுவி முடித்தவன் அங்கிருந்து நடந்து செல்ல போனான் ஒரு பத்தடி தூரம் நடந்திருப்பான் மீண்டும் அவன் ஆழ் மனதில் ஏதோ தோன்ற மீண்டும் அந்த மோட்டார் கதவை எட்டி உதைத்து விட்டு உள்ளே வந்தான் யார் என்று உள்ளே சென்று பார்க்க அதற்க்குள் அவன் தலையில் பின்னிருந்து யாரோ பலமாக இரும்பு ராடால் அடிக்க தலை சுற்றி மயங்கி கீழே விழுந்தான்.
நாகலிங்கம் யார் என்று தர்மனின் பின்னே பார்க்க பசுபதி தன் கையில் இரும்பு ராடுடன் அங்கே நின்றிருந்தான்
“பசுபதி சரியான நேரத்துக்கு வந்து என்னை காப்பாத்திட்ட டா” என்றான்.
ஆராதனா வாயில் இருந்த தன் கையை எடுக்க அவளும் மயங்கி கீழே விழுந்தாள் நாகலிங்கம் அதிர்ச்சியுடன் அவளின் மூக்கில் கை வைத்து பார்க்க மூச்சு இல்லை
“டேய் பசுபதி மூச்சு நின்னு போச்சு டா இவள் செத்தே போய்ட்டா போல டா” என்றான் பயத்துடன்.
“அய்யய்யோ இப்போ என்ன பண்றது அண்ணா அந்த புள்ளைய கொன்னுட்டிங்களா” என்று பசுபதி பதறி கொண்டே கேட்டான்.
“நான் என்ன டா பண்ணுன வாயில கை வைச்சு அழுத்தினேன் அதுல அவள் செத்தே போய்ட்டா போல டா வா இப்படியே ஓடிடலாம்” என்றான் நாகலிங்கம்.
“அய்யோ அண்ணா இது உங்க மாந்தோப்பு இவங்க ரெண்டு பேரும் இங்கே இப்படி கிடந்தா உங்க மேல தான் சந்தேகம் வரும்” என்றான் பசுபதி.
“ஆமால்ல சரி டா இப்போ என்ன பண்றது எல்லாரும் இன்னும் கொஞ்ச நேரத்துல இவளை தேட ஆரம்பிச்சிடுவாங்கலே” என்றான் நாகலிங்கம்.
“அண்ணே உங்க டெம்போ இங்கே தான இருக்கு இவங்க ரெண்டு பேரையும் உள்ளே போட்டு காட்டு வழியா கூட்டிட்டு போய் தர்மன் வீட்ல போட்டுருவோம் தர்மன் மயக்கம் தெளிஞ்சி எழுந்தா அவன் மேல தான் பழி வரும் நம்ம மேல யாருக்கும் சந்தேகம் வராது” என்றான் பசுபதி.
“இதுவும் நல்ல யோசனையா தான் இருக்கு சீக்கிரமா தூக்கு” என்றான் நாகலிங்கம் இருவரையும் தூக்கி வண்டியில் போட்டவர்கள் நேரே தர்மன் வீட்டு கதவை திறந்து அங்கிருந்த பெரிய கட்டிலில் இருவரையும் போட்டனர்.
பசுபதி தர்மனின் மேலாடையின் பட்டனை கழட்டி கலைத்து விட
“டேய் டேய் அவன் முழிச்சிக்க போறான் டா” என்றான் நாகலிங்கம் பதறி கொண்டே.
“அண்ணே தர்மன் இந்த பொண்ணை கடத்திட்டு வந்து கற்பழிக்க முயற்சி பண்ணி கொன்னுட்டதா இருக்கட்டும்” என்றான்.
“பசுபதி உன் மூளையே மூளை டா நீ போய் ஊர்ல எல்லார் கிட்டையும் இந்த விசயத்தை பரப்பி விடு” என்று கூறி அவனை அனுப்பி வைத்தான் நாகலிங்கம்.
இருவரும் அங்கிருந்து வெளியில் சென்றனர்.
கோவிலில் தீமிதி முடிந்து அனைவரும் அவரவர் வீட்டிற்க்கு சென்றனர் வினய் அருகில் வந்த தேவி “ஆரு எங்கே டா வினய்” என்று கேட்டார்.
“தெரியல மா வீட்டுக்கு போய்ருப்பான்னு நினைக்கிறேன்” என்றான் சாதாரணமாக.
“சரி வா நாமளும் போவோம்” என்று அவனை அழைத்து கொண்டு அங்கிருந்து கிளம்பினார்
வீட்டில் வந்து பார்க்க அங்கே அனைவரும் இருக்க ஆராதனா மட்டும் இல்லை.
சக்திவேலும் அப்போது தான் வீட்டின் உள்ளே வந்து நுழைந்தான் “வேலா ஆரு எங்கே டா” என்று அவனிடம் தேவி கேட்டார் “தெரியல அக்கா கோவில்ல தான் இருப்பான்னு நினைக்குறேன்” என்றான்.
“அங்கே அவள் இல்லை டா எங்கே போனான்னு தெரியலை டா” என்றார் பதட்டத்துடனே.
“அக்கா பயப்படாத பக்கத்துல தான் எங்கேயாவது போய்ருப்பா போன் பண்ணி பாரு” என்றான்
“அம்மா அவள் போன் வீட்ல தான் இருக்கு” என்று எடுத்து வந்தான் வினய்.
அதுவரை சாதாரணமாக இருந்த சக்திவேலும் இப்போது தான் பதட்டப்பட ஆரம்பித்தான் ‘ஆரு எங்கே போய்ருப்பா’ என்று மனதில் நினைத்தவன் “அக்கா இங்கேயே இரு கோவில்ல போய் பார்த்துட்டு வரேன்” என்று அங்கிருந்து ஓடினான்.
கோவிலில் சக்திவேல் அனைவரிடமும் விசாரித்து கொண்டே இருக்க அவன் அருகில் சாதாரணமாக வந்த பசுபதி “உங்க அக்கா மகள் தர்மனோட போறதை பார்த்தேன் அண்ணே” என்றான்.
“எப்போ பார்த்த” என்று சக்திவேல் அவனிடம் பதட்டத்துடனே கேட்க
“தீமிதிக்கு முன்னாடி தான் அண்ணே பார்த்தேன்” என்றான்.
சக்திவேல் பதட்டத்துடனே தன் பைக்கை எடுத்து கொண்டு தர்மனின் வீட்டிற்க்கு பயணமானான்.
தர்மனின் இல்லம்…
தர்மனுக்கு லேசாக இப்போது தான் மயக்கம் தெளிந்து அவன் மெல்ல கண்விழித்து எழுந்து கொள்ளும் போது அவன் பின்னந்தலையில் பயங்கராமாக வலித்தது என்னவென்று தொட்டு பார்க்க லேசாக ரத்தம் கசிந்து இருந்தது.
தர்மன் மேலே சட்டையில்லாமல் வெறும் பனியனுடன் இருந்தான் கீழே இருந்த வேட்டி எங்கேயோ கிடக்க அதை தன் கையில் எடுத்து கட்டிக்கொண்டவன் தன் பக்கத்தில் திரும்ப அங்கே ஆராதனா அரைகுறை ஆடையுடன் படுக்கையில் விழுந்து கிடந்தாள்.
அவளை பார்த்த தர்மன் பதறி அடித்து கொண்டு அவள் அருகில் ஒடி வந்தவன் “இந்தா புள்ளை கண்ணை திறந்து பாரு” என்று அவளின் கன்னத்தில் தட்டி எழுப்பினான் அவளோ அசையாமல் கிடக்க பக்கத்தில் இருந்த தண்ணீர் சொம்பை எடுத்தவன் அவள் முகத்தில் தண்ணீரை தெளிக்க மெல்ல கண்விழித்தாள் ஆராதனா.
ஆராதனா கண்ணை திறந்தவள்
தன் கண் முன்னே தெரிந்த தர்மனின் முகத்தை பார்த்தவள் பயத்துடன் எழுந்து அமர்ந்தாள்
சுற்றி முற்றி கண்ணை சுழற்றியவள் இது என்ன இடம் என்று பார்த்தாள்.
“புள்ளை இது என் வீடு நீ எப்படி இங்கே அதுவும் இந்த கோலத்துல” என்று தர்மன் கேட்டு கொண்டே இருக்க ஆராதனா பதட்டத்துடனே எழுந்தவள் அங்கிருந்து வெளியில் ஓட பார்க்க கட்டிலின் கால் தடுக்கி மீண்டும் அவன் மீதே விழுந்தாள்.
தர்மன் அவள் திடீரென தன் மீது விழுவாள் என்று எதிர்ப்பார்க்காதவன் நிலைதடுமாறி கட்டிலில் விழுந்தான்.
இருவரும் ஒருவரை ஒருவர் அணைத்து கொண்டு கட்டிலில் விழுந்து கிடந்தனர்.
அப்போது கதவை திறந்து கொண்டு ஒரு கூட்டமே உள்ளே வந்தது
தேவி அவரின் கணவர் ராஜமாணிக்கம் வினய்
சொக்கநாதன்- சந்தோசம் மற்றும் அவர்களின் உறவினர்கள் அனைவரும் அங்கே வந்து நின்றனர்.
ஆராதனா தர்மன் இருவரும் சத்தம் கேட்டு அங்கே திரும்பி பார்த்தனர்.
ஆராதனா பதறி அடித்து கொண்டு தன் தாயிடம் ஓடினாள் தேவி தன் அருகில் ஓடிவந்த மகளின் கன்னத்தில் பளார் என்று அறைவிட்டார்.
“வெட்கமாயில்லை நீயெல்லாம் ஒரு பொண்ணா என் வயித்துல தான் நீ பொறந்தியா டி பாவி மகளே இதுக்கு தான் உன்னை ஊரில் இருந்து கூட்டிட்டு வந்தனா” என்று அழுது கொண்டே கேட்டார் தேவி.
“அம்மா நான் எந்த தப்பும் பண்ணல
வினய் நீயாச்சும் அம்மா கிட்ட சொல்லு” என்று கூறிக் கொண்டு இருக்க அங்கிருந்த ஆண்களின் பார்வை ஆராதனாவின் உடலில் மேய தர்மன் அவள் அருகில் சென்று தன் மேல் சட்டையை அவளுக்கு போர்த்தி விட்டான்.
சொக்கநாதன் தர்மனின் அருகில் சென்று அவனை அடிக்க கையை ஓங்கி கொண்டு போக அவரின் கைப்பிடித்து தடுத்தான் தர்மன்.
“ஐயா நாங்க எந்த தப்பும் பண்ணல சொல்ல வருவதை கொஞ்சமாச்சும் கேளுங்க” என்று கூறினான் தர்மன்.
“இன்னும் என்ன டா சொல்ல போற என் குடும்ப மானமே போச்சே இவ்வளவு நாள் சாமியார் வேஷம் போட்டு இந்த ஊர்ல இருக்க எல்லாரையும் ஏமார்த்தி இருக்க” என்றார் கோபத்துடன்.
அங்கிருந்த பெண்களில் இருவர்
“நாங்க தான் அன்னைக்கே பார்த்தோமே நீங்க ரெண்டு பேரும் பம்பு செட் ரூம்ல இருந்து ஒன்னா வெளியே வந்ததை” என்றனர்.
“ஆமா திருவிழா முழுக்க ரெண்டு பேரும் ஜோடியா தான திரிஞ்சாங்க
இப்போ வீடு வரைக்கும் வந்துடுச்சு என்ன தான் இருந்தாலும் இந்த பட்டணத்து பிள்ளைகளுக்கு எப்படி தான் இவ்வளவு தைரியம் வருதோ” என்றனர்.
தேவி ஆராதனா கன்னத்தில் மீண்டும் அறைந்தார் “எங்க குடும்ப மானத்தையே வாங்கிட்டியே டி பாவி” என்று கதறி அழுதார்.
ஆராதனா சந்தோசத்தை பார்த்து “பாட்டி நீங்களாவது நான் என்ன சொல்ல வரேன்னு கொஞ்சம் கேளுங்க பிளீஸ்” என்றாள் சந்தோசம் அவள் முகத்தை கூட பார்க்க பிடிக்காமல் முகத்தை திருப்பி கொண்டே நின்றார்.
super sis
Dharma avalai kalyanam pannikkoda