27
நிமலன் ஆஸ்திரேலியா போகாமல் அவனை ஒருவழியாக ஆராதனாவை காட்டி திருச்செந்தூருக்கு இழுத்து வந்தனர். ஆனால் அவன் அவர்களின் வீட்டுக்கு செல்லவில்லை. எவ்வளவு வற்புறுத்தியும் ஆரன் வீட்டுக்கும் அவன் வரவில்லை.
“என்ன இருந்தாலும் இதுதான் உன் மாமியார் வீடு! வந்து போகத் தான் இருக்கணும்.. இப்படி முறுக்கிக்கிட்டு எல்லாம் இருக்காதே அண்ணா!!” என்று மயூரி வம்பு இழுத்தாலும் “அதுவரை நான் தனியாவே இருந்துக்கிறேன் மயூ” என்று தனியாகப் ஹோட்டலில் அறை எடுத்து தங்கியிருந்தான்.
அதனை ஏற்க முடியாமல் மயூரியும் ஆராதனாவும் நிமிலனை முறைத்துக் கொண்டு நிற்க.. ஆரன் தான் இருவரையும் சமாதானப்படுத்தி அழைத்து வந்தான். “அவருக்கும் கொஞ்சம் ஸ்பேஸ் கொடுங்க.. இரண்டு நாள் முன்னால் தான் இவ்வளவு நிகழ்வுகளும்.. அந்த அதிர்ச்சியிலிருந்து அவர் கொஞ்சம் வெளியே வரட்டும். எங்க போய்ட போறாரு.. இங்கே தானே இருக்கிறார். பார்த்துக்கலாம்!!” என்று வீட்டிற்கு அழைத்து வந்துவிட்டான்.
தந்தையிடமும் நிமிலனை பற்றி அனைத்தும் கூற அவரும் யோசனையுடனே இருந்தவர் மகனை பார்த்து “அடுத்த நல்ல முகூர்த்தம் எப்ப இருக்குன்னு பாரு.. செந்தில் ஆண்டவர் கோவில்ல ஆராதனா நிமிலன் கல்யாணத்தை முடிச்சிடலாம்!!” என்றார்.
ஆராதனாவுக்கு இது மகிழ்ச்சியாக இருந்தாலும் வேதவள்ளி மெய்யறிவு முகங்கள் வந்து சென்றன அவள் மனதில்.. என்னதான் இருந்தாலும் இத்தனை வருடங்கள் உயிரை கொடுத்து அவளை வளர்த்தவர்கள் ஆயிற்றே..
தப்பு செய்த ஒருத்தரை மட்டும் தண்டிக்காமல் குடும்பத்தையே தண்டிக்க வேண்டுமா என்ற எண்ணம் மயூரிக்கு.
“அப்பா அவங்க வீட்ல மத்தவங்களுக்கும் சொல்லணும் இல்லையா? என்ன தான் இருந்தாலும் நிமிலன் அவர்களுக்கு ஒரே பையன்.. ஏற்கனவே மயூரி கல்யாணத்தையும் அவங்க பாக்கல.. கூடவே ஆராதனாவையும் இத்தனை வருடங்களா அவங்க வளர்த்தாங்க தானே” என்று கேட்ட ஆரனைப் பார்த்து சிரித்தார் விஜயேந்திரன்.
ஆரன் பேச பேச மயூரி முகத்தில் பொங்கிய மகிழ்ச்சியையும் மனதில் குறித்துக் கொண்டவர் மயூரியை பார்த்து “என்னமா உன் புருஷன் இப்பதான் கரெக்டான குடும்பஸ்தானா மாறிட்டான் போல.. எல்லா பக்கமும் யோசிக்கிறான்.. திருச்செந்தூருக்கு வரும் முன்பு இருந்த ஆரனை காணோமே!!” என்று அவர் கிண்டல் செய்ய.. “ப்பா..!!” என்று சிணுங்கினான் மகன்.
“அவர்களை இங்கே வரச் சொல்லு ஆரன்.. கூடவே நிமிலனையும்!!” என்றவரை ஓடிச் சென்று கட்டிக் கொண்டாள் ஆராதனா.
அதன் பின்.. குருபரனை தவிர்த்து மொத்த குடும்பமும் அங்கே வந்திருந்தார்கள். குருபரனுக்கு ஒரு கை மற்றும் வாய் பாராலைஸிஸ் ஆகிவிட, அவர் இன்னும் ஹாஸ்பிட்டல் வாசம்.
முதலில் வந்த வேதவள்ளி பெண்கள் இருவரையும் சேர்த்து அணைத்து ஒரு அழுகை அழுது முடித்தார். கூடவே வத்சலாவும்.. இத்தனை நாட்கள் வரை தன் கைகளில் தன் கண் பார்வையில் வளர்ந்த பிள்ளைகள் திடீரென்று எடுத்த முடிவு அவரை சாய்த்துவிட்டு இருந்தது.
மயூரியை பார்த்து “என் கிட்ட ஒரு வார்த்தை சொல்லி இருக்கலாம் தானே உன் காதலை பத்தி” என்று அவர் குற்றம் சாட்ட..
“நீங்களும் தான் அத்தை எதையுமே எங்கிட்ட சொல்லல.. சொல்லி இருந்திங்கன்னா எங்களுக்கும் உங்களுக்கும் ஏன் இந்த நிலைமை சொல்லுங்க?” என்று மருமகள் திரும்பி அவரை பதிலுக்கு சாடினாள்.
“உண்மைதான் நீ கேட்பது!! ஆனால் ஆராதனா மீது நான் கொண்ட பாசம் என்னை வாய் திறக்க விடவில்லை!!” என்று பதில் கூறியவரை பார்த்த ஆரன், “அப்படி என்ன பெரிய பாசம் உங்களது.. அதே பாசம் பெற்றவருக்கும் இருக்கும் தானே அதை ஏன் நீங்க யோசிக்கல? இத்தனை வருடம் கூடவே வளர்ந்த உங்க தங்கச்சிய பத்தியும் ஏன் புரிஞ்சிக்கலை? அப்படியா ஒரு கெட்டவனிடம் தன் மனதை பறிகொடுத்து இருப்பாங்க? சரி.. நீங்க அதுக்கு அப்புறமாவது அவரைப் பற்றி தகவல்களை தெரிந்து இருக்கலாம் தானே.. சோர்ந்து சோர்ந்து தன்னையே மாய்த்துக் கொள்கிற அளவு சென்ற தங்கச்சியை வெறும் வேடிக்கை மட்டும் பார்த்தீங்களா? தங்கையின் கணவனை பார்த்து பேசி அவரோடு சேர்த்து வைக்கணும் என்கிற எண்ணமே உங்களுக்கு எல்லாம் வரல இல்ல!!” என்று மோகனவள்ளியையும் தீப் பார்வை பார்த்தான் ஆரன்.
“அப்புறம் என்ன நீங்க எல்லாம் சகோதர சகோதரிகள்? சொல்லுங்க.. உங்க உங்க வாழ்க்கையை பார்த்துட்டு நீங்க பாட்டுக்கு அமைதியாக இருந்திட்டிங்க.. இல்ல.. சுத்த சுயநலவாதிகள்!! என்று கத்தினான்.
“அவங்க தான் இந்த வீட்டில் இல்லை புருஷன்மாரோட இருந்தாங்க.. நீங்க அதே வீட்டில் தான இருந்தீங்க?” என்று தெய்வானை அம்மாவை குற்றம்சாட்டினான் ஆரன். “அது எப்படி வயத்து பிள்ளையோட பொண்ணு கணவனையும் மகனையும் பிரிந்து இருப்பா? அப்படியே அவர் மேல் தப்பு என்றால் உங்களிடம் வந்து ஆறுதல் தேடி இருப்பார் தானே? தனியாக அமர்ந்து தன்னை தானே மாய்த்துக் கொள்ள மாட்டார் தானே? நீங்க எல்லாம் ஒரு அம்மாவா?” என்று நெற்றி பொட்டில் அறைந்த மாதிரி அவன் கேட்ட கேள்வியில் பரிதவித்துப் போய் ஓடி வந்து அவன் கைகளை பற்றி “என்ன மன்னிச்சிடு பா ஆரன்.. சத்தியமா இப்படி என் மகன் செய்திருப்பானு நான் எதிர்பார்க்கவே இல்லை.. அவ்வளவு நம்பிக்கை வைத்திருந்தேன் அவன் மேல்..” என்று கண்ணீர் விட்டார். கதறி அழுதார்.
“ஓஓ!!! அப்போ மகன் மேல் இருந்த நம்பிக்கை உங்களுக்கு மகள் மேலே இல்லை.. மகன் மேல் இருந்த அந்தப் பாசம் மகளிடமில்லை. நீங்கள் எல்லாம் என்ன மாதிரி ஒரு தாய்?” என்றான்.
இதற்கு என்ன பதில் சொல்வார் அவரும்? ஒரு பக்கம் மகன் அடித்து சொல்கிறார் தங்கையை கட்டியவன் சரியில்லை. அதனால்தான் தங்கை பிரிந்துவிட்டாள் என்று.. அவளை மிரட்டி உருட்டி இப்படி பணிய வைத்து இருப்பான் என்று கொஞ்சம் கூட எண்ணம் வரவில்லை அவர்களுக்கு. அதனால் மகன் சொன்னதை நம்பி மகளிடம் நெருங்க முடியாமல் தவித்து கடைசியில் அவளை இழந்து விட்டு இப்போது கண்ணீர் விட்டு கதறினார் தெய்வானை அம்மாள்.
அங்கே நடப்பவற்றை எல்லாம் நிமிலன் ஒரு இருக்கையில் அமர்ந்து கைகளை கட்டிக்கொண்டு வெறும் பார்வையாளனாக பார்த்திருந்தான். வத்தலா வந்தது முதல் மகனையும் மகளையும் தான் கண்களாலேயே பருகிக் கொண்டிருந்தார்.
“ரெண்டு கண்ணு போதுமா உங்களுக்கு இல்லை? இன்னும் ரெண்டு கண்ணு வாங்கி தரவா?” என்று வத்சலாவை பார்த்து அவன் கேட்க.. அவரோ திடுக்கிட்டு அவனைப் பார்த்து என்ன சொல்வது என்று தெரியாமல் விழித்தார்.
“இல்ல.. வந்ததிலிருந்து உங்க பிள்ளைகளை மட்டும் மாத்தி மாத்தி கண்களாலேயே பார்த்துகிட்டே இருக்கீங்களே.. அதனால கேட்டேன்! இந்த கண்ணில் தெரிகிற இந்த பாசம் பரிதவிப்பு இது ஏன் அன்னைக்கு என் அம்மாவின் கண்களில் உங்களுக்கு தெரில.. உங்க வயது உடைய அதே பெண்தானே அவங்க உணர்வுகளை ஏன் உங்களால புரிஞ்சுக்க முடியல அப்போ???” என்று அவரையும் விடாமல் கேள்விக் கணைகளால் துளைத்து எடுத்தான்.
“தப்புதான்!! என் கணவனை மீறி அவரிடம் நான் பேசி இருக்க வேண்டும்.. மத்த ரெண்டு பேர் கூட இருந்த ஒரு ஒட்டுதல் எனக்கு அவர்களிடம் கிடையாது. அவங்கள எனக்குத் தெரியவும் இல்லை!!” என்று தன் மன்னிப்பை வேண்டினார் வத்சலா.
“அப்பாடி நம்ம ரெண்டு பேரையும் எதுவும் கேட்கல.. வார்த்தையாலே என்னம்மா வாள் வீசுறான் இவன்? என் பையனை லாயருக்கு படிக்க வைப்பதற்கு பதிலாக இவனை படிக்க வைத்து இருக்கலாம்!” என்று ராகவன் தன் அருகில் இருந்த சகலையிடம் முணுமுணுத்தார்.
சட்டென ஆரனின் பார்வை அவர்கள் மீது கூர்மையாக படிய.. “ஆத்தாடி நம்மள தானே பார்க்கிறான். என்ன இப்படி குறுகுறுனு பாக்குறான்? உங்களை பார்க்கிறானா? என்னை பாக்குறானா ன்னு தெரியலையே? நீங்க எல்லாம் கேட்டா ஏதாவது பதில் சொல்லுவீங்க? என்னை கேட்டா நான் என்ன பண்ணுவேன்?” என்று மீண்டும் அவர் புலம்ப…
மெய்யறிவை கூர்ந்து பார்த்தவன் “நீங்கதான் அன்னைக்கே அப்பாவை பத்திரமா அனுப்பியதுனு சொன்னார். ஆனா அப்ப கூட அவர் கிட்ட எதுவும் நீங்க கேட்கவே இல்லையே? அவர் பக்கம் நியாயத்தையும் நீங்க கேட்டு இருக்கலாம் தானே?” என்றான் ஆதங்கத்தோடு.
“ஒருத்தர் கண்ண பார்க்கும்போதே அவங்க மனதில் இருக்கிறதை பெரும்பாலும் அறிந்து கொள்ளமுடியும் ஆரன். உன் அப்பாவை பார்க்கும்போது எனக்கு தெரியும் அவர் மீது தப்பில்லை என்று!! இதில் என்ன விளக்கம் நான் அவரிடம் கேட்க? அவர் ஏற்கனவே நொந்த நிலையில் இருக்கும்போது.. அதுவுமில்லாமல்…” என்று அங்கு இருப்பவர்களை ஒரு பார்வை பார்த்தவர் “ஏழை சொல் என்றும் அம்பலம் ஏறாது ஆரன்!!” என்றார் அழுத்தமாக…
“மாமா..” என்று தவிப்போடு வேதவள்ளி ஓடிவந்து அவர் கையை பிடித்துக் கொள்ள.. “விடு வள்ளி.. நான் உன்னை சொல்லல.. என்ன இருந்தாலும் தூரத்து சொந்தம்னாலும் நான் என் அளவில் தான் அந்த வீட்டில் பார்க்கப்பட்டேன். என்னளவில் நான் தொழில் செய்து இருந்தால் உன் குடும்பம் அளவிற்கு இல்லாவிடினும் நமக்கான ஒரு உயரத்தை கண்டிப்பாக நாம் பெற்றிருப்போம். நீயும் இத்தனை வருடங்களில் ஒரு சிறந்த வக்கீலாகவும் ஏன் நீதிபதியாக கூட ஆகியிருக்கலாம்.. எல்லாம் உன் அண்ணனின் வறட்டு பிடிவாதத்தால் ஆராதனாவின் மீது நீ கொண்ட கண்மூடித்தனமான பாசத்தாலும்.. இப்போது அதை நினைத்து வருந்துவது வீண்!! பின் நடக்க வேண்டியதை மட்டும் பார்ப்போம் என்றார் மெய்யறிவு.
அவர் பேச்சிலிருந்து வீட்டோடு மருமகனாக இருக்கும் அவரது மன வருத்தத்தை தெளிவாக புரிந்து கொண்டார் வேதவள்ளி. இப்படித்தான் நம் கணவரும் நினைத்திருப்பாரோ என்ற மோகனா ஆராய்ச்சி பார்வையோடு தன் கணவனை பார்க்க.. அவரோ “சேச்சே!! அப்படியெல்லாம் என்னை பற்றி தப்பாக நினைக்காதே!!” என்று கண்களால் சைகை செய்ய அதானே என்று தன் தலையில் அடித்துக்கொண்டார்.
ஆராதனா மெய்யறிவு அருகில் அமர்ந்து “சாரிப்பா.. எல்லாம் என்னால் தானே!!” என்று அவள் மன்னிப்பு வேண்ட..
“சேச்சே.. நீ ஏன்டா சாரி கேக்குற? உன்னை இந்த நிலைமைக்கு ஆளாக்கியது நாங்க தானே? இதில் நீ எல்லாம் குழந்தையடா!! நீ ஒரு தவறும் செய்யவில்லை. இப்ப வரைக்கும் என்னை அப்பான்னு தானே கூப்பிடுற” என்று நெகிழ்ச்சியுடன் மகளை அணைத்துக் கொண்டார்.
மயூரியின் உரிமை கலந்த உபசரிப்பு.. ஆரனின் ஆட்டம்.. ஆராதனாவின் பாசப்பிணைப்பு.. நிமிலனின் பார்வையாளர் தோற்றம்.. நிரஞ்சனின் அமைதி பார்வை.. என்று அனைத்தையும் அமைதியாக பார்த்துக் கொண்டிருந்தார் விஜயேந்திரன்.
ஆரன் பேசும்போது அவர் குறிக்கிடாமல் இருந்ததற்கு காரணம் இத்தனை வருடங்களாக அவன் மனதில் தேக்கி வைத்த கோபம் ஆதங்கத்தை அவன் வெளிப்படுத்தியே ஆக வேண்டும் இல்லை என்றால் மனதளவில் அது அவனை பாதிக்கும் என்று நினைத்து தான்.
திரும்பவும் மகன் ஏதும் ஆரம்பிக்க வேண்டாம் என்று நினைத்தவர் “மெய்யறிவு!!” என்று அழைத்தார்..
“சொல்லுங்க?” என்றவரிடம் ஆராதனா நிமிலனின் திருமணத்தை ஏற்று நடத்த சொன்னார். “என்ன இருந்தாலும் நீங்க இருக்கும் போது நான் எப்படி?” என்று மெய்யறிவு கேட்க..
“இத்தனை வருடங்கள் அது தெரியவில்லையா?” என்று அப்போதும் ஆரன் கோபம் குறையாமல் கேட்க.. “ஆரன்!!” என்று அழுத்தமாக அழைத்து அவனை அமைதிப்படுத்தினார் விஜயேந்திரன்.
“எனக்கு இரண்டு குழந்தைகள். மகனின் திருமணத்தை கண்குளிர மனதார பார்த்துவிட்டேன் ஆராதனாவை இத்தனை வருடம் வளர்த்தவர்கள் நீங்கள் இருவரும் சேர்ந்து தான் அவளுக்கு கன்னிகாதானம் செய்து கொடுக்கணும்” என்று வற்புறுத்தினார்.
அதன்படியே அடுத்து வந்த நாட்களில் நிமலன் ஆராதனாவின் திருமணம் செந்திலாண்டவர் கோயிலில் ரொம்பவும் ஆடம்பரம் இல்லாமல் அமைதியான முறையில் நடந்தேறியது. குருபரனுக்கு இந்த விஷயத்தை கூட யாரும் சொல்லவில்லை. ஒற்றை ஆளாக தான் நின்று மகனின் திருமணத்தை பார்த்தார் வத்சலா. ஐயர் “மணமகனின் பெற்றோர் வாங்க” என்று அழைக்க..
“எனக்கு அப்பா கிடையாது! அம்மா மட்டும்தான்!! அதனால் அதுக்கு உண்டான சாங்கியங்களை மட்டும் செய்யுங்கள் ஐயரே!!” என்று அழுத்தமாகக் கூறியவனை மீற முடியாமல்.. வத்சலாவை வைத்தே அனைத்து காரியங்களையும் செய்தார் ஐயர்.
நல்ல நேரத்தில் ஆராதனாவின் சங்கு கழுத்தில் பொன்நாணை பூட்டி தன்னின் சரிபாதியாக ஏற்றுக் கொண்டான். பார்த்திருந்த அனைவருக்கும் மகிழ்ச்சியே!!
அன்றிரவு அவர்களுக்கான தனிமையில் நிமிலன் எங்கோ பார்த்து வெறித்துக் கொண்டு நின்றான். அவர் இருக்கும் வீட்டுக்கு வரமாட்டேன் என்று மறுத்துவிட அனைத்து சம்பிரதாயங்களும் ஆரனின் வீட்டில் தான் நடைபெற்றது இவர்களுக்கான முதலிரவு கூட ஆரனின் வீட்டில்தான்.
மெல்ல நிமிலன் அருகில் வந்தவள் இமைகள் இரண்டும் வெறித்த பார்வையில் திடுக்கிட்டு மெல்ல அத்தான் என்று அவனது கையை பற்ற ஒரே தள்ளாக தள்ளினான் அவளை..
“இப்ப தான் இந்த அத்தான் சொத்தான் எல்லாம் உன் கண்ணுக்கு தெரியுதாடி.. அன்னைக்கு இதே கையை தட்டிவிட்டு போனவ.. இன்னைக்கு எந்த உரிமையில் என் கைய வந்து பிடிக்கிற நீ?” என்று தன் மனதில் இருந்த ஆதங்கத்தை எல்லாம் கொட்டினான்.
காலை வரை தந்தை செய்த செயலுக்காக அந்த வீட்டுப்படி கூட ஏற மாட்டேன் என்றவன்.. என்ன இப்பொழுது இப்படிக் கேட்கிறான்? என்று மருண்டு விழித்தவளை பார்த்தவன் “எங்க அப்பா செய்ததற்கு நான் அவரை ஒதுக்கி வைத்தேன். ஆனா நான் என்ன தப்பு செய்தேனு நீ அந்த கல்யாணத்துல பாதியிலிருந்து எழுந்துபோன? உங்க அண்ணன் உன்கிட்டே சொன்னான் தானே? அப்போ என் மேல நம்பிக்கை இருந்தா நீ என்கிட்ட சொல்லி இருந்திருப்ப.. எனக்கும் இவ்வளவு கஷ்டம் இருந்திருக்காது இல்லை.. தற்கொலை வரைக்கும் போனேண்டி உன்னால!!” மீண்டும் ஜன்னலருகே கைகளை கட்டிக்கொண்டு நின்றான் எங்கே அவளை அடித்து விடுவோமோ என்று..
அவன் கோபமும் நியாயம் தானே என்று பின்னால் சென்று அவனை இறுக்க அணைத்தவள் “அத்தான் நாமெல்லாம் சொந்தபந்தத்தோடு சந்தோஷமாக வாழ்ந்தோம். ஆனால் அண்ணாவை நினைத்து பாருங்க? அவன் அவ்வளவும் சொல்லி, கேட்கும் போது நான் எப்படி மறுக்க முடியும்? கல்யாணத்தில் இருந்துதான் எழுந்து போனேனே தவிர.. என்னை உங்கள் வாழ்க்கையில் இருந்து இழக்கவில்லை.. என்னைத் தவிர வேறு யாரையும் கல்யாணம் பண்ணிக்க மாட்டிங்க நீங்கனு எனக்கும் தெரியும்.. உங்களுக்கும் தெரியும்!!” என்று பேசிக்கொண்டே முன்பக்கமாக வந்து அவனது தாடையை பிடித்து கொஞ்சி பேச.. அவனை கண்டு கொள்ளாத பாவனையோடு திரும்பி நிற்க…
“சரிதான் போங்க.. ஃபர்ஸ்ட் நைட்ல பொண்டாட்டி கூட குஜாலாக இருக்கணும்னு உங்களுக்கு இருக்கல போல.. வெறிக்க வெறிக்க கடல பார்த்திட்டே இருங்க” என்றவள் ஓரக்கண்ணால் கணவனைப் பார்த்துக் கொண்டே கட்டிலை நோக்கி செல்ல..
அவள் கைகளை பிடித்து தன் மேல் இழுக்க.. அவன் மேல் மொத்தமாக சரிந்தாள் ஆரா. அவளின் இள மாங்கனிகள் அவன் உடலில் அழுந்த.. இருவரின் மூச்சுக் காற்றும் முட்டும் நெருக்கத்தில் இருவரும்.. இருவரின் சுவாசங்களும் ஒன்றோடு கலந்து இதயம் தொட்டு திரும்பிக் கொண்டிருந்தது.
சட்டென்று இழுப்பட்டதில் கண்களை இறுக்கி மூடிக் கொண்டாள் ஆரா. புடவை தழுவிய ஆராவின் இடுப்பை இறுக்கி பிடித்துக் கொண்டு அவள் இதழ்களைக் கவ்வினான் சற்றே வன்மையாக. அவள் மூச்சு வாங்க இன்னும் வேகமாக விழிகளை விரிக்க.. அவள் இதழ்களை ஆவேசமாக சுவைக்க ஆரம்பித்தான் நிமிலன். அவன் வேகத்துக்கு ஏற்றவாறு உதடுகளை பிளந்து காட்டிக் கொண்டு அவனை இன்னும் பலமாக இறுக்கினாள் ஆரா.. அவனுக்கு சற்றும் சளைத்தவள் இல்லையென… அதில் அவனுக்கு இன்னும் சுவாரசியம் கூட.. அவள் மென்மைகள் அவன் நெஞ்சில் அழுந்த இறுக்கமாக இறுக்கி, மொத்த வித்தையையும் ஒற்றை முத்தத்தில் காட்டினான்.
சில நிமிட ஆவேச முத்தத்தில் இருவருமே கிறங்கினர். ஆழ முத்தத்தில் மூச்சு முட்டி முகம் விலகி ஒருவரை ஒருவரை விழி கொண்டு பார்க்க.. அங்கே கோபம் போய் தாபம் குடிகொண்டிருந்தது.
அவள் இடுப்பை வளைத்து அவளை தூக்கியவனின் முகத்தில் மோதியது அவளின் இல்லா இடை.. மெதுவாக அதில் கூச்சமூட்டி அவளை அப்படியே அள்ளிப் போய் கட்டிலில் தூக்கிப் போட்டான்.. “இப்போ வாயடி டி என் பொண்டாட்டி!!” என்றவன் பாய்ந்து அவள் மீது விழு.. அவள் சுதாரிக்க முடியாமல் திணற.. நிமிலன் அவள் உதடுகளைக் கவ்விக் கொண்டு மீண்டும் வெறியுடன் சுவைக்கத் தொடங்கினான்.
அவன் இதழ்களும் விரல்களும் அவள் உடல் எனும் வீணையில் ஸ்வரங்கள் மீட்க.. தாளம் தப்பி அவள் உடல் அதிர குலுங்க..
அவனின் ஈர உதடுகள் சற்று ஆக்ரோஷமாக அவள் அங்கங்களை கடித்து சுவைக்க… திணறித்தான் போனாள் ஆரா. ஆனால் அவனோ முரட்டுத்தனமாக அவள் முதுகில் கைகள் கோர்த்து தன்னுடன் இறுக்கி பரவி படர்ந்தான்.
அவனின் இந்த முரட்டுத்தனத்தில் அவளது உதடுகள் சற்று சுழிக்க.. நிமிலனோ சுழித்த அந்த உதடுகளையும் கடித்து சுவைத்தான். முகமெங்கும் முத்த ஊர்வலம் நடத்திய அவனது ஈர உதடுகளில் அவளின் தாப உணர்வுகளும்.. அவனின் மோக உணர்வுகளும் இரு ஸ்வரங்களாக மீட்டிக் கொண்டவை, ஒரு ஸ்வரமாக மாறி போனது விந்தை கூடலில் மட்டுமே!!
விடிய விடிய புதிதாக கற்றுக் கொண்ட மீட்டலை பெண்ணவளின் அங்கங்களில் மீட்டி புதிய புதிய ஸ்வரங்களை படைத்து மோக கடலில் முத்துக் குளித்தனர்.
அங்கே மற்றொரு புதிய ஜோடியும் தங்கள் காதல் களியாட்டத்தில் திளைத்து இருந்தனர். இதுநாள் வரை மனதில் தங்கை பற்றிய கவலையும்.. நிமலன் பற்றிய எண்ணமும் குடைந்து கொண்டே இருந்தது ஆரனுக்கு. இன்று அது முற்றிலுமாக விலகி சென்று விட சந்தோஷமாக நிம்மதியாக தன்னவளுடன் சீண்டலில் தொடங்கி தீண்டலில் முடித்தான் கூடலை..
அடுத்த ஒரு வாரத்தில் இரு ஜோடிகளுக்கும் பிரம்மாண்டமான முறையில் திருமண வரவேற்பு அங்கு நடந்தேறியது. தெய்வானை அம்மாள் அன்று தராத தன் மாப்பிள்ளைக்கான மரியாதையை அங்கீகாரத்தை இன்று இந்த வரவேற்பில் செய்தார் விஜயேந்திரனுக்கு. காலம் கடந்த மரியாதையும்.. வரவேற்பும்.. அன்பும்.. அங்கீகாரமும்.. மனதில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தி விடவில்லை விஜயேந்திரனுக்கு.
“என் வேதா போன பிறகு இது எல்லாம் கிடைத்தால் என்ன? கிடைக்கவில்லை என்றால் என்ன?” என்று விரக்தியான சிரிப்பு அவர் முகத்தில்.. ஆனால் எதையும் மறுக்கவில்லை தன் பிள்ளைகளின் எதிர்கால வாழ்விற்காக…
திரும்பவும் ஒரு சண்டை.. அந்த வீட்டிற்குள் நான் வரமாட்டேன் என்று நிமிலன். மொத்த குடும்பமும் அவனை வலியோடு பார்க்க.. “நாளை பின்ன ஆரனும் மாமாவும் நம் வீட்டுக்கு வந்தால் அவங்களுக்கு பழைய ஞாபகங்கள் மட்டும் தான் வரும். அதனால நான் என் அம்மா மனைவியோட தனியா போய்க்கிறேன். நீங்க எல்லாம் அதே வீட்டிலேயே இருங்க!!” என்றவன், புதிதாக விலைக்கு வந்த ஒரு சிறு பங்களாவை வாங்கி அதில் குடியேறி விட்டான் மனைவி அம்மாவோடு.
மருத்துவமனையில் இருந்து வீடு வந்த குருபரனை பெரிதாக யாரும் கண்டு கொள்ளவில்லை. அவரை அவரது அறையில் இருக்க வைக்காமல்.. தன் பிள்ளைக்கும் கணவனுக்கும் ஏங்கி ஏங்கி தவம் இருந்து தன் உயிரையே மாய்த்துக் கொண்ட வேதரதி இருந்த அதே அறையில் அவரை மாற்றினார்கள். கூடவே அவருக்கு உதவ ஒரு வேலை ஆள்!! முதலில் அந்த அறையை வித்தியாசமாக பார்த்தவரின் நினைவுகளுக்குள் வேதரதியின் அழும் முகம் “வேண்டாம் அண்ணா.. அப்படி செய்யாதீங்க.. என் குழந்தையையும் கணவனையும் எதுவும் பண்ணிராதிங்க.. நான் அவர் கூட போக மாட்டேன்.. கண்டிப்பாக போகல!! அவரை எதுவும் பண்ணிராதிங்க!!” என்று கதறிய அந்த கதறல்கள், திரும்பத் திரும்ப அவரின் காதுக்குள் இப்போது ஒலித்தது.
வாய்விட்டு தன் நிலைமையை கூட யாரிடமும் சொல்ல முடியாமல் ஒவ்வொரு இரவும் பகலும் வேதரதியின் நினைவுகளும் கதறல்களும் சோகமான முகத்தோடு வளைய வரும் அவரது உருவமும் அந்த அறையில் நிறைந்திருக்க மூச்சு முட்டியது அவருக்கு.
அவரின் இந்த அவஸ்தைகளை அவ்வப்போது பார்ப்பார் தெய்வானை அம்மாள். ‘இப்படித்தானே அன்று என் மகளும் துடித்திருப்பா.. அப்போது முடியவில்லை என்றாலும் இப்போது என் பெண்ணுக்கு நான் நியாயம் செய்துவிட்டேன்’ என்று கண்களாலேயே குருபரனை எரித்து விட்டு சென்றுவிடுவார்.
அன்னைக்கு உதவியாக வேதவள்ளியும் மோகனவள்ளியும் அதே வீட்டில் இருந்தாலும் இப்போது வேதவள்ளி தனது வக்கீல் பிராக்டீஸை தொடர்ந்தார் நிரஞ்சனோடு.
நிமிலனும் தன் மாமா மெய்யறிவை அவர் செய்து வந்த தொழிலையே தனியாக செய்து வர ஏற்பாடு செய்திருந்தான். ராகவன் மட்டும் இப்பொழுதும் நிமிலனோடு அலுவலகத்திற்கு வந்து சென்றார்.
மறுவீட்டுக்கு வந்த ரஞ்சனியின் முக மாற்றத்தையும் அவளின் மாற்றத்தையும் அதிசயத்து பார்த்தது வீடே.. செந்தில் “ரஞ்சனி!!” என்று குரல் கொடுத்தாலே ஓடிவந்து பவ்யமாக அவன் அருகே சென்று “என்னங்க.. என்ன வேண்டும்?” என்று கேட்க வைத்தான்…
நிரஞ்சன் தன் மச்சானை ஆரத்தழுவி “சூப்பர் மாப்பிள்ள!!” என்று பாராட்டவே செய்தான்.
திருமணம் முடிந்த நான்காவது மாதத்திலேயே ஆரன் தனது ஜாகையை மீண்டும் மும்பைக்கு மாற்றினான். அவ்வப்போது மனைவியோடு வந்து ஒரு மாதம் திருச்செந்தூரில் தங்கி இந்த தொழிலையும் பார்ப்பான். போட்டிக்காக ஆரம்பித்தது தானே அதனால் முழுக்கவனமும் அவனுக்கு மும்பையில்..
மீண்டும் திருச்செந்தூர் வந்து இருந்தனர் இப்பொழுது நிரஞ்சனுக்கு பெண் தேடும் படலம் நடந்து கொண்டிருப்பதற்காக கூடவே தொழிலையும் பார்க்க..
அதே பால்கனி..
அதே நீள் இருக்கை..
அதே கடல் தான்..
அன்று வெறுப்போடு வெறித்தவன் இன்று காதலோடு காண்கிறான்!!
இப்போது ஆரன் கைவளைவில் மயூரி.. ஆசையோடு தான் கணவனைப் பார்த்துக் கொண்டிருந்தாள் அவனின் மாற்றத்தை எண்ணி..
ஆம்!! காதல்.. ஆகப்பெரும் சக்தி..
அவனுள் இருந்த அசுரனை காதல் அசுரனாக மாற்றிய பெருமை மயூரி இந்திராக்ஷிக்கே!!
“என்னடி பார்வை பலமாக இருக்கு!!” என்றான் ஆரன்.
“ஆசைகள் உன்னிடம் அசுரனே!!
உன்னி
டம் மட்டுமே அசுரனே!!”
என்றவள் ஆரன் அலறுமாறு கன்னத்தை கடித்து வைத்தாள் மயூரி இந்திராக்ஷி.
வன் காதலாக..
அதி தாபமாக..
துளி மோகமாக..
பெரும் ஆசையாக..
சுபம்..
Can you guess what I’m craving right now? – https://rb.gy/es66fc?Clurdy
wow sema story sis but we miss aran mayu, nimilan aara, and niranjan cambo
👌👌👌👌👌👌👌👌👌👌
Мультимедийное оснащение: всё, что нужно для современных презентаций
мультимедийное оснащение [url=multimediynoe-osnaschenie1.ru]multimediynoe-osnaschenie1.ru[/url] .
Super sema super super super super ❤❤❤❤❤
Sama story very interesting 👌👌👌