யாயாவும் உன்னதே 4
“இக்குரல்.. இக்கொஞ்சல்.. அன்று ஏர்போர்ட்டில் கேட்டது அல்லவா?” என்று நெற்றியில் முடிச்சு விழ யோசித்தப்படி அவ்வறையை நோக்கி அழுத்தமான அடிகளை எடுத்து வைத்தான் ஜிஷ்ணு.
ஜிஷ்ணு லேசாக கதவை திறந்து பார்க்க.. அங்கே மகனை மடியில் அமர்த்தி கொண்டு அன்போடு அளவிலாவி கொண்டிருந்தாள் ஆரணி வெண்பா.
மெல்லிய மிக மெல்லிய குரலில் தான் அம்மாவும் மகனும் சம்பாஷனை நடத்திக் கொண்டிருந்தார்கள்.
“தங்கம்.. என்ன சாப்பிட்டீங்க?” மகன் தான் மயக்கமான தருணத்தில் சாப்பிட்டானா இல்லையா? என்ன சாப்பிட்டிருப்பான்? என்று ஏக கவலை அன்னையான ஆரணிக்கு.
“ம்மா நீ தான் எனக்கு பாக்ஸ்ல ஃப்ரூட்ஸ் ஸ்நாக்ஸ் கொடுத்து இருந்தேல்ல.. அதை சமத்தா சாப்பிட்டேன்” என்றான் மகன்.
“இங்கே யாரும் சாப்பாடு கொடுத்தாங்களா?” தான் மயக்கம் போட்டு இருந்த தருணத்தில் யாரும் மகனை கவனித்துக் கொண்டார்களா என்று ஒரு சிறு எதிர்பார்ப்பு.
“காலையில நீ ஒரு ஆன்ட்டி கிட்ட பேசினேன் இல்ல.. அங்க ப்ரண்ட் டெஸ்க்ல இருந்தாங்களே.. அவங்க வந்து ஸ்நாக்ஸ் கொடுத்தாங்க.. நான் வேணா சொல்லிட்டேன் மா” என்று பெரிய மனித தோரணையில் அவன் பேசியதை கண்டு உள்ளுக்குள் சிலாகித்தவள் மகனின் நெற்றி முட்டி “ஏன்டா கண்ணா.. சாப்பிடல?” என்று கேட்டாள்.
“நீதான் அன்நோன் பர்சன்ஸ் யார் எது கொடுத்தாலும் வாங்க கூடாதுன்னு சொல்லி இருக்க தானே?” என்று இடுப்பில் கைவைத்து இப்பொழுது அன்னையைப் பார்த்து அவன் கேள்வி கேட்க..
“கரெக்ட்டா.. என் சமத்து குட்டி அப்படித்தான் இருக்கணும். அன்நோன் பர்சன் எது கொடுத்தாலும்.. நம்ம மேல அன்பா பேசினாலும் நம்ம ஏமாறக்கூடாது.. ஏன்னா..” என்று அவள் முடிக்கு முன்..
“ஸ்ட்ராங்க்.. வீ ஆர் ஸ்ட்ராங்க்..!” என்று புஜத்தை மடக்கி அவன் காட்டிய விதத்தில் அன்னை அகமகிழ்ந்து போனாள்.
“என் ஆரவ் குட்டி.. சக்கர கட்டி.. சமத்து குட்டி..!” என்று மகனின் கன்னத்தில் அவள் முத்தம் கொடுக்க கிளுக்கி சிரித்தான் அன்னையின் முத்தத்தில் ஆரவ்..!
“ஆரவ்.. ஆரவ்… எஸ்.. இதே பேரு தான் அன்னைக்கு ஏர்போட்டிலும் கேட்டது. அப்போ ஏர்போர்ட்ல நான் பாக்காத அம்மாவும் பிள்ளையும் இவர்கள்தான் போல.. இவங்க ரெண்டு பேரும் பேசுகிறது பார்த்தா பக்கா தமிழன்ஸ்.. நானோ தமிழ்நாடு போனதே இல்ல.. அப்புறம் எப்படி? எங்கே? ம்ப்ச்.. ஒன்னும் புரியல..!” என்று புரியாமல் தலையசைத்துக் கொண்டவன், கதவை பெயருக்கு தட்டி விட்டு உள்ளே நுழைய..
அதுவரை மகனோடு தனி உலகத்தில் சஞ்சரித்துக் கொண்டிருந்த ஆரணி எதிர்பாராமல் உள்ளே நுழைந்த ஜிஷ்ணுவை கண்டு உள்ளத்தில் எழும் நடுக்கத்தை மறைத்து மகனை கட்டிலில் அமர்த்துவிட்டு எழுந்து நின்றாள்.
“ப்ளீஸ்.. சிட்.. சிட்..” என்றவன் “ஆர் யூ ஓகே நவ்?” என்று கேட்க அவளும் தலையசைத்தாள்.
“நீ தமிழா?” என்று கேட்க அவள் ஆமாம் என்று மீண்டும் தலையசைக்க..
“பெட்டர்.. நான் இங்கிலிஷ்ல பேசுறேன். எனக்கு தமிழ் கொஞ்சம் புரியும்.. பேச வராது. கன்னடமும் அப்படித்தான்..!” என்று அவன் ஆங்கிலத்தில் பேச..
“எனக்கும் கன்னடம் அவ்வளவா தெரியாது சார். புரிந்துகொள்ள முடியும். இங்கிலீஷ் லெட்டர் லாங்குவேஜ் நம்ம பேசிக்க..” என்று அவளும் ஆங்கிலத்தில் பதில் அளித்தாள்.
இவர்கள் இருவரும் பேசுவதை அமைதியாக அதே நேரம் கவனித்துக் கொண்டிருந்த ஆரவ்வை பார்த்து அவன் முன்னுச்சி முடியை வேண்டுமென்றே ஜிஷ்ணு கலைத்து விட்டு “ஸ்மார்ட் பாய்..!” என்றான்.
“டோன்ட் மெஸ் அப் மை ஹேர்..” என்ற ஆரவ்வின் வார்த்தையில் அவனது முடியை நன்றாக கலைத்துவிட்டு ‘அப்படிதாண்டா செய்வேன்..!’ என்று சொல்லும் வேகம் எழுந்தது ஜிஷ்ணுவுக்குள்.
ஊரில் அவனது அவன் பெரியப்பா மக்களுக்கு திருமணம் முடிந்து குழந்தைகள் இருக்க.. அவர்களிடம் வராது ஏதோ ஒரு உரிமை இந்த குட்டி குண்டான் மேல் வருகிறதே.. ‘சம்திங் ஃபிஷ்ஷி..!’ என்று தலையை உலுக்கிக் கொண்டவன்,
“நீங்க கொஞ்சம் தெளிவாகிட்டீங்கன்னா உங்க சன்ன வெளியில ஹெச்ஆர் அர்ச்சனா இருப்பாங்க அவங்க கிட்ட விட்டுட்டு என் கேபினுக்கு வாங்க..” என்றபடி சென்று விட்டான் ஜிஷ்ணு.
ஆமோதித்த ஆரணியும் “கண்ணா இங்கேயே வெயிட் பண்ணு..!” என்று அருகில் இருக்கும் ரெஸ்ட் ரூம் சென்று தன்னை சுத்தப்படுத்தி வந்தவள், மகனை அழைத்துக்கொண்டு ஜிஷ்ணு சொன்ன ஹெச்ஆர் அர்ச்சனாவை பார்த்து பிள்ளையை அங்கே அவளிடம் ஒப்படைத்து விட்டு அவளிடமே கேட்டுக் கொண்டு
ஜிஷ்ணுவின் அறைக்குள் வந்தாள் ஆரணி வெண்பா.
“மே ஐ கம் இன் சார்?” என்றவளின் குரல் இப்பொழுது பிசிர் இல்லாமல் தெளிவாக ஒலித்தது. அதுவே அவளுக்கு ஒரு பெரும் ஆறுதல்..!
‘அப்பாடி.. இனி அவனைப் பார்த்து தடுமாற மாட்டோம்’ என்று மூச்சை வேகமாக இழுத்து விட்டு கொண்டவள் எப்பொழுதும் தனக்குத்தானே கூறிக்கொள்ளும் “பீ ப்ரேவ் டி ஆரு” என்று தன்னை திடப்படுத்திக் கொண்டு ஜிஷ்ணு முன்னால் நின்றாள்.
எதிரில் இருந்த இருக்கையை கைகாட்டியாவன், அவளின் பைலை நோக்கி கை நீட்ட.. அதை அவனிடம் ஒப்படைத்துவிட்டு அவனையேப் பார்த்து இருந்தாள் ஆரணி.
அவளது பயோடேட்டாவை பார்த்தவன் அதில் டிவோர்ஸி என்பதை கண்டு திடுக்கிட்டு நெற்றி சுருங்க அவளை பார்த்து “ஆர் யூ மேரிட்?” என்று கேட்டான்.
அவளோ திகைத்து “எக்ஸ்க்யூஸ் மீ.. எனக்கு ஒரு பையன் இருக்கான்..!” என்றாள் பதிலுக்கு.
“பையன் பொறக்கணும்னா கல்யாணம்தான் ஆகணும்னு அவசியம் இல்லையே..!” என்றான்
ஸ்டைலாக தோளை குலுக்கி..
அவனின் வார்த்தையில் அவளுக்கு வேர்த்து விறுவிறுத்து போக “சார்.. மைண்ட் யுவர் வேர்ட்ஸ்..!” என்றாள் சற்றே சீற்றமாக..!
“ஜஸ்ட் ஃபார் ஃபன்..! எல்லாத்துக்கும் இப்படி சீரியஸா இருக்காதீங்க. நான் கொஞ்சம் ஃபன் பார்ட்டி. எப்பொழுதும் சீரியஸ் மூடவே இருந்தா என்னுடைய வேலையை என்னால பார்க்க முடியாது..!” என்றான் இலகுவாக..!
“சரி..!” என்று தலையாட்டியவள் “ஆனால் அந்த ஃபன்னுக்கும் ஒரு இங்கிதம் இருக்கணும் சார் ஒரு எல்லை இருக்கணும்..! டோன்ட் க்ராஸ் யுவர் லிமிட்..! அண்ட் டோண்ட் என்டர் டு மை பர்சனல்..!” என்று நேர் பார்வையோடு பேசியவள் எங்கோ ஒரு மூலையில் அவனுள் இருந்தவளை நினைவு படுத்தினாள்.
“ஓகே..!” என்றவன் அவளுக்கான வேலையை பற்றி கூறினான்.
“வீக்கிலி த்ரீ டேஸ் மட்டும் நீங்க ஆபீஸ் வந்தா போதும். மத்த டைம் ஒர்க் ப்ரம் ஹோம் தான். ஏதாவது புதுசா லான்ச் பண்ணினாலோ இல்ல வேற ஏதாவது ஒர்க் ஷாப் அந்த மாதிரி பண்ணும்போது பிரசன்டேஷன் தேவைப்பட்டாலோ நீங்க ஃபுல் அண்ட் ஃபுல் ஆபீஸ்ல தான் இருக்கணும். ஆபீஸ்ல கிரஷ் ஓபன் பண்ணல. அதனால நெக்ஸ்ட் டைம் உங்க சன் வரும்போது அவனுக்கு ஏதாவது ஏற்பாடு பண்ணிட்டு வாங்க..” என்றான் தெளிவாக..!
“அவன கிண்டர் கார்டன் இருந்து நான் இன்னும் ஸ்கூல சேஞ்ச் பண்ணல சார்.. கூடிய சீக்கிரம் சேஞ்ச் பண்ணிடுவேன் அதுவரைக்கும் மட்டும் தான் அவன் என் கூட ஆபீஸ் வருவான்..” என்றாள்.
“ஓகே அஸ் யுவர் விஷ். பட் யாருக்கும் எந்த தொந்தரவும் கொடுக்காமல் இன்னைக்கு போல அவன் இருந்தா பெட்டர்..! உங்க சேலரி மத்த விவரம் அதை பத்தின டீடெயில்ஸ் எல்லாம் ஹெச்ஆர் அர்ச்சனாவிடம் கேட்டு வாங்கிக்கோங்க.. அப்புறம்..” என்று இழுத்தவன்..
“இதுக்கு முன்ன நம்ம பார்த்திருக்கோமா வெண்பா?” என்று அவளை கண்களை அழுத்தமாக பார்த்து கேட்க.. ஒரு நிமிடம் விதிர்விதித்துப் போனவள் சற்றென்ற தலையசைத்து “இல்லை சார்.. இல்ல.. நாம பார்த்ததே இல்லை..!” என்றாள் அழுத்தமாக..!
அவள் கண்ணில் தோன்றி மறைந்த ஏதோ ஒன்று ஜிஷ்ணுவுக்கு அவள் பொய் சொல்கிறாளோ என்று தோன்றியது. தன்னிடம் பேசும் போது ஏதோ ஒரு அதிருப்தியை அவள் உணர்வதாக ஊகித்தான் ஜிஷ்ணு.
அவளைப் பார்த்தபடியே தன் இருக்கையில் சாய்ந்து அரை வட்டம் அடித்தப்படியே இருந்தான் ஜிஷ்ணு. அவள் வேலை பற்றி அனைத்தும் பேசி விட்டான் தான் ஆனாலும் அவளை அனுப்பவில்லை.
அவளுக்கோ அது அசௌகரியமாக இருந்தது. அவனின் அந்த விழி வீச்சு தன்னை ஊடுருவி பார்த்து தன் மனதில் இருப்பதை படிப்பது போல இருக்க.. அவன் முன் சாதாரணமாக அமர முடியாமல் நெளிந்து கொண்டே இருந்தாள் ஆரணி வெண்பா.
அதுவும் அழுத்தம் திருத்தமாக அவன் அழைக்கும் வெண்பா என்ற வார்த்தை அவளுள் ஏதேதோ நினைவுகளை கிளறி விட..
சட்டென்று எழுந்து கொண்டாள் வெண்பா.
“ஷல் ஐ மூவ் சார்?” என்ற கேள்வியோடு..!
“ம்ம்ம்?” என்று கேள்வியாக அவனும் பார்த்தவன் மீண்டும் பார்வையாலேயே அவளை துளைத்தெடுத்த..
“நான்.. நான்.. போகட்டுமா?” அவளையும் அறியாமல் வார்த்தைகள் தமிழில் வந்து விழ.. அதை புரிந்து கொண்டவன் போல ம்ம்ம் என்று தலையசைத்தான், அவளிலிருந்து கண்களை கொஞ்சம் கூட விலக்காமல் ஜிஷ்ணு.
“என்ன இவன் இப்படி பார்க்கிறான்? விட்டால் பார்வையாலேயே கடித்து சாப்பிடுவான் போல..” என்று வேக வேகமாக அவனிடம் தலையாட்டி விட்டு வெளியில் வந்தவுடன் தான் மூச்சே சீராக வந்தது போல இருந்தது
அவளுக்கு.
அவன் அறைக்கு வெளியே நின்று அவன் அறையைப் பார்த்துக் கொண்டு மூச்சை நிதானமாக இழுத்து விட்டு தலையாட்டிமவளின் பாவங்களை எல்லாம் தன் மானிட்டரில் பார்த்துக் கொண்டிருந்தான் சிசிடிவி உபயோகித்தால் ஜிஷ்ணு.
“நோ.. சம்திங் ராங் இவளிடம்.. என்னென்னு கண்டுபிடிச்சே ஆகணும். அதுவரைக்கும் இவளை நம் கண் பார்வையில் வைத்துக் கொள்ள வேண்டும்” என்ற முடிவெடுத்தான்.
பொதுவாக அவன் ஃபீரிலான்சர்களிடம் ஏதாவது வேலை எடுத்தால் ஒர்க் ப்ரம் அவர்களிடம் பேசிவிட்டு அவர்கள் செய்த வேலைக்கு மட்டுமான அமௌன்ட் தான் கொடுப்பான்.
இப்படி மாத சம்பளத்தில் வேலை கொடுப்பதெல்லாம் கிடையாது..! இந்த இன்டர்வியூ நடத்தும் முன் வரை இப்படிப்பட்ட திட்டத்தில் எல்லாம் அவன் இல்லை.
அவனை இப்படி மாற்ற வைத்தது ஒன்று ஆரணி வெண்பாவின் டிசைன்ஸ். அவன் மனதில் விரும்பியதை அச்சு பிசகாமல் அவள் செய்திருக்க.. இப்படி ஒரு திறமையானவளை வெளியே விட அவனுக்கு மனமில்லை.
அடுத்தது தன்னையே உருவத்தில் அச்சடுத்து வைத்தது போல இருக்கும் ஆரவ்..!
அந்த குழந்தை யார் என்று அவனுக்கு தெரிய வேண்டும். அதற்காகத்தான் அவளை மாத சம்பளத்தில் அக்ரிமெண்டில் கட்டி போட்டு வைத்திருக்கிறான் ஜிஷ்ணு.
அன்று இரவு பெங்களூரில் உள்ள ஜிஷ்ணுவின் வீடு.. இரண்டடுக்கு வீடு அது..!
கீழே பெரிய விசிட்டர்ஸ் ஹால் அடுத்து டைனிங் ஹால் சிறிதாக ஒரு பூஜை அறை.. டைனிங் ஹாலுக்கு பின்னே சமையலறை.. அதற்கு எதிர்ப்புறம் விருந்தினர் அறைகள் என்று அழகாக இருக்கும்.
அங்கே விருந்தினர்கள் அறை ஒன்றில் தான் அஸ்வத் ஜிஷ்ணுவோடு இவ்வீட்டில் தங்கி இருக்கிறான்.
வெளியில் தங்கிக் கொள்கிறேன் என்றவனை விடாப்பிடியாக தன்னுடன் வைத்துக்கொண்டது ஜிஷ்ணு தான்.
எப்பொழுதும் சனிக்கிழமை என்றால் இருவரும் பப் சென்று விடுவார்கள். பெங்களூரில் பப்புக்கு பஞ்சமா என்ன?
ஐடி நிறுவன ஊழியர்கள்.. வீக் எண்டை கொண்டாடுபவர்கள்.. என்று ஒரு கூட்டமே வந்து அங்கே ஆர்ப்பரிக்கும் அந்த விஜேவின் ஆர்ப்பாட்டமான இசையிலும் தங்கள் நட்பு குழுவின் பேச்சிலும்.. சிலர் அதைத் தாண்டி காமத்துக்காகவும் மோகத்துக்காகவும் வருகிறவர்களும் உண்டு. பெரும்பாலும் தங்கள் ஸ்ட்ரெஸ் ரிலீஸ் செய்ய வருபவர்கள் தான் அதிகம்.
ஜிஷ்ணுவும் அஸ்வத்தும் இந்த இரண்டின் கீழும் வர மாட்டார்கள்.
“இங்க வந்தா எப்படிடா அஸ்வத்தா ஸ்ட்ரஸ் ரிலீஸ் ஆகும்? இவனுங்க பண்றது எல்லாம் பார்த்தா வேற ஒன்னும் ரிலீஸ் பண்ண தான் வரானுங்க போல..” என்று நக்கலாக
சொல்லி சிரிப்பான் ஜிஷ்ணு.
அதன் பொருள் விளங்கியவுடன் “அண்ணையா..!!??” என்று வாயை பொத்திக் கொள்வான் அஸ்வத்.
எங்க விஷ்ணு வருவதற்கான காரணம் இந்த கூட்டத்தை காணவே..! பலதரப்பட்ட மக்களீ அவர்தளின் பல தரப்பட்ட வெளியே தெரியாத முகங்களை இங்கு காண ஒரு சுவாரஸ்யம் ஜிஷ்ணுவுக்கு.
அஸ்வத்தும் அவனோடு ஒட்டிக்கொண்டு வருபவன் திரும்பி செல்லும் போது இருவரும் தண்ணி வண்டிகளாகத்தான் செல்வார்கள்.
அன்றும் அப்படி தான் ஒரு மாறுதலுக்காக அங்கே வந்திருந்தனர் இருவரும்.
தங்களுக்குத் தேவையானவற்றை ஆர்டர் செய்து விட்டு அது வந்ததும் சிப் சிப்பாக அருந்திக் கொண்டே அங்கே ஆடும் இளைஞர் இளைஞிகளில் இருந்து நடுத்தர வயதினர் சற்றே வயது முதிர்ந்தவர்கள் என்று அனைவரையும் ஒருவித புன்னகையோடு பார்த்திருந்தான் ஜிஷ்ணு.
வெளியில் வைட் கலராக இருக்கும் பலரும் இங்கே தங்களின் ஏதோ ஒரு தேடுதலை தேடி தணிக்கவே வந்திருக்கின்றனர். எதற்கு இந்த இரண்டு முகங்கள்? எல்லாம் வேஷம்..! என்று மனதில் நினைத்துக் கொண்டே தன் கையில் இருந்த ஓட்காவை குடித்துக் கொண்டிருந்தான்.
இன்றைய பொழுது காட்டிலும் அஸ்வத் அதிகமாக குடிக்க “என்னடா மீண்டும் ஒரு லவ் பெயிலியரா?” என்று சிரித்தான் ஜிஷ்ணு.
“ஆமா அண்ணையா..” என்று மீண்டும் குப்பி குப்பியாக உள்ளே தள்ளினான் அஸ்வத்.
“இதெல்லாம் ஒரு பொழப்பு??” என்று சிரித்தான் ஜிஷ்ணு.
“என்ன அண்ணையா.. அப்படி பொசுக்குன்னு சொல்லிட்டீங்க? இதுக்கு எவ்வளவு தனி திறமை வேணும் தெரியுமா? எத்தனை ஞாபக சக்தி வேணும் தெரியுமா?” என்று கேட்டவனை.. இப்போது கைகட்டி நேர் பார்வை பார்த்தவன் “சொல்லுடா அப்படி என்னடா இதுக்கு தனி திறமை வேணும்.. ஒரு ஒரு பொண்ணா பேசி மடக்க?” என்று கேட்டான் ஜிஷ்ணு. உண்மையில் ஜிஷ்ணுவுக்கு இதைப்பற்றி ஒன்றும் புரியவில்லை என்பதுதான் நிதர்சனம்.
“நல்லா கேட்டுக்கோங்க.. ஒவ்வொரு பெண்ணுக்குட்டியும் புதிய புதிய சத்தியம் செய்ய வேணும்..!
ஏற்கனவே நிறைய செல்ல பெயர்கள் வைத்து இருப்போம் மறுபடியும் இன்னொரு பொண்ணுக்கு புதிதாக ஒரு செல்லப் பேர.. மீண்டும் மீண்டும் ஒரு செல்ல பேர தேட வேணும்..!
புதிதாக வந்தவளுக்கு என்ன பிடித்தமோ அதை நம்மோடு பிடித்தமா மாத்தி கொள்ள வேணும் அட்லீஸ்ட் புடிச்ச மாதிரி நடிக்க வேணும்..!
புதிதாக வந்தவளோடு கேட்டு மகிழ மீண்டுமொரு புதிய பிடித்த பாடல்களை கண்டுபிடிக்க வேணும்..!
அவளுக்கு என்னவெல்லாம் பிடிக்கும் என கேட்டு
மீண்டும் மனப்பாடம் செய்ய வேணும்..! மனப்பாடம் செய்ததை மறக்காமல் இருக்க வேணும்..! என்று பேசும்பொழுது அஸ்வத்துக்கு மூச்சிரைக்க தண்ணீருக்கு பகலாக தண்ணியைத்தான் அடித்தான் அவன்..!
“அம்மாடி.. இவ்வளவா??” என்று பார்த்திருந்தான் ஜிஷ்ணு இமை தட்டாமல் அஸ்வத்தின் வார்த்தைகளை..! அவனின் புதிய புதிய காதலுக்கு செய்யும் மெனக்கடல்களை..!
“என்ன இதுக்கே மலைச்சு போயிட்டீங்க. இன்னும் இருக்கு அண்ணைய்யா…??” என்றவன் மீண்டும் ஒரு குப்பியை தொண்டையில் சரித்துக்கொண்டு தன் காதல் சரித்திர நிகழ்வுகளை கூறலானான்.
“ஏற்கனவே நம்ம வந்த பெண்ணோட..”
“பெண்ணோடனு சொல்லாத டா பெண்களோடுனு சொல்லு..!” இடையிட்டான் ஜிஷ்ணு..!
“எஸ்.. எஸ்.. கரேக்ட்.. ஏற்கனவே வந்த பெண்களோடு அந்த நினைவுகள் துரத்தாத புதுசு புதுசா ஓட்டல்களையும்.. தியேட்டர்களையும்
தேடி கண்டுபிடித்து செல்ல வேணும்..!”
“அந்த பொண்ணுங்கள முத்தமிடும் போது நம் நினைவில் யார் இருக்கிறார்களானு பதற வேணும்..! அப்படி எந்த பெயரையும் சொல்லாம பார்த்துக்க வேணும்..!
பெயரை மாற்றி அழைத்து விடாமல்
இதழ்களை கட்டுப்படுத்த வேணும்..!
புதுசு புதுசா வகை வகையா பரிசு பொருட்களை தேட வேணும்..!” என்று அவன் இதைவிடாமல் பேசியவன் திரும்பி பார்க்க.. அங்கே ஜிஷ்ணுவோ அவன் குடித்த ஒட்காவின் போதையின் வீரியத்தில் மயங்கி கிடந்தான்.
“அண்ணைய்யா… அண்ணைய்யா..” என்று எழுப்பி பார்த்தவன் அங்கிருந்த செக்யூரிட்டி பவுன்சர்கள் உதவியோடு ஒரு வழியாக ஜிஷ்ணுவை காரில் ஏற்றி தங்கள் வீட்டுக்கு அழைத்து வந்தான்.
ஜிஷ்ணுவை அவன் அறைக்கு அழைத்துச் செல்லாமல் தன் அறையிலேயே படுக்க வைத்தான் அஸ்வத். அவனுமே போதையில் இருந்ததால் மாடி ஏறு முயலவில்லை.
இரவெல்லாம் தூங்காமல் போதையில் “வெண்பா.. வெண்பா..” என்று உளறிக் கொண்டிருந்த ஜிஷ்ணுவை யோசனையாக பார்த்தபடி அருகில் இருந்தான் அஸ்வத்..!!
அதே நேரம் ‘யார் கண்ணில் படாமல் இருக்க வேண்டும் என்று நினைத்தேனோ.. அவன் கண்ணிலேயே பட்டு.. அவனிடமே வேலைக்கு சேர்ந்து விட்டே
னே.. இனி என்ன செய்வது?’ என்று அருகில் உறங்கும் மகனை இழுத்து தன் மடியில் போட்டுக்கொண்டு விடிய விடிய தூங்காமல் நகத்தைக் கடித்தபடியே அமர்ந்திருந்தாள் ஆரணி வெண்பா..!
தொடரும்..
👌👌👌👌👌👌👌👌👌👌👌
super sis
Интеграция мультимедийных систем: полное оснащение под ключ
мультимедийная интеграция [url=http://www.integratsiya-multimediynykh-sistem1.ru]http://www.integratsiya-multimediynykh-sistem1.ru[/url] .
Мультимедийное оснащение офисов и образовательных учреждений
оснащение мультимедийным оборудованием [url=http://www.osnashcheniye-multimediynym-oborudovaniyem1.ru/]http://www.osnashcheniye-multimediynym-oborudovaniyem1.ru/[/url] .