ATM Tamil Romantic Novels

காதல் தேவதா 14,15

அத்தியாயம் 14

 

ஆராதானா பயத்தில் ஆதரவாக அவனை இன்னும் இன்னும்  நெருங்கி அணைத்து கொண்டே இருந்தாள் தர்மனுக்கு அவளின் அணைப்பு உள்ளுக்குள் ஏதோ செய்தது

அவளின் முன்னெழில்கள் அவன் மார்பில் அவளின் அசைவிற்க்கு ஏற்ப உரசி கொண்டே தீ மூட்ட அவன் ஆண்மை விழித்து கொள்ள பார்த்தது ‘இது தவறு’ என்று நினைத்தவன் சட்டென அவளிடமிருந்து விலகினான் அவளின் முகத்தை கூட பார்க்காமல் “புள்ளை சாப்பாடு வாங்கிட்டு வந்திருக்கேன் சாப்பிட வா” என்று கூறிவிட்டு வெளியே சென்றுவிட்டான். 

 

ஆராதானா வெளியில் வந்து பார்த்தவள் அப்படியே மலைத்து போய் நின்றுவிட்டாள் 

நான்கு ஐந்து பொட்டலங்களில்  சாப்பாடு விரித்து வைக்கப்பட்டு இருந்தது சப்பாத்தி,பிரியாணி, பரோட்டா இன்னும் பல 

அதை பார்த்தவள் 

மலைத்து போய் வந்து அவன் எதிரே தரையில் அமர்ந்தாள். 

 

அனைத்தையும் தர்மன் விரித்து “சாப்பிடு புள்ளை” என்றான் 

“இவ்வளவோ என்னால சாப்பிட முடியாது எனக்கு இது போதும்” இரண்டு சப்பாத்தியை எடுத்து தன் தட்டில் வைத்து கொண்டாள். 

 

“இப்படி சாப்பிட்டா முருங்கை காய்க்கு கை கால் முளைச்ச மாதிரி தான் இருப்ப உடம்புல வலு வேண்டாம் நல்லா சாப்பிடு” என்று இன்னும் இரண்டு சப்பாத்தியை அவள் தட்டில் வைத்து தானும் சாப்பிட ஆரம்பித்தான். 

 

ஆராதானா சாப்பிட்டு கொண்டே இருந்தவள் தர்மனை நிமிர்ந்து பார்த்தாள் அவனோ வெட்டி வீசிக்கொண்டு இருந்தான் அங்கிருந்த அத்தனை பொட்டலங்களும் அடுத்த பத்து நிமிடத்தில் காலியானது அவள் இன்னும் அதே இரண்டு சப்பாத்தியில் தான் அமர்ந்து இருந்தாள். 

 

அவன் சாப்பிடுவதையே ஆச்சரியமாக பார்த்து கொண்டு இருந்தாள். 

 

தர்மன் அனைத்தையும் சாப்பிட்டு முடித்து ஏப்பம் ஒன்றை வெளியிட்டவன் அவளை நிமிர்ந்து பார்த்தான் “என்ன புள்ளை கோழி கொறிக்குற மாதிரி கொறிச்சிட்டு இருக்க சீக்கிரம் சாப்பிடு” என்று கூறிவிட்டு எழுந்தவன் சென்று சமயலைறைக்கு பாலை காய்ச்சி ஆற்றி எடுத்து வந்தான். 

 

இரண்டு பெரிய டம்ளர் நிறைய பாலை ஊற்றி எடுத்து வந்து ஒன்றை அவளிடம் கொடுக்க ஆராதானா அலறியேவிட்டாள் “இல்லை எனக்கு வேண்டாம் இதுவே சாப்பிட முடியல” என்றாள் பயத்துடனே. 

 

தர்மன் தன் கையில் இருந்த பால் டம்ளரை குடித்து முடித்தவன் அவளை மிரட்டி அந்த ஒரு டம்ளர் பாலையும் குடிக்க வைத்தான். 

 

ஆராதானா நன்றாக சாப்பிட்டதில் சோர்வுடன் சென்று படுத்தவள் 

கண்களை மூடி படுக்க நாகலிங்கத்தின் உருவம் மனக்கண்ணில் வந்து அவளை பயமுறுத்தியது உடனே பதறி அடித்து கொண்டு எழுந்தவள் தர்மனை தேட அவன் வெளியே கயிற்று கட்டிலில் படுத்திருந்தான். 

 

அவன் அருகில் சென்று கண்களை மூடி படுத்திருந்த தர்மனை “என்னங்க” என்று எழுப்பினாள். 

 

தர்மன் உடனே கண்ணை திறந்தவன் எழுந்தமர்ந்து “என்ன புள்ளை தூங்கலையா நீ இன்னும்” என்று பதட்டத்துடனே கேட்டான் “தூக்கம் வரலை பயமா இருக்கு அங்கே வந்து படுக்கிறிங்களா” என்று கேட்டாள். 

 

அவளை பார்க்க பாவமாக இருக்க தர்மன் எழுந்து அவளின் பின்னே வந்தான் அறையின் விளக்கை அணைத்து விடிவிளக்கை போட்டு விட்டு கீழே பாயை விரித்து படுக்க போக “பிளீஸ் மேலே வந்து படுக்கிறிங்களா பயமா இருக்கு” என்றாள் ஆராதானா. 

 

தர்மன் “இல்லை புள்ளை வேண்டாம் நான் இங்கனேயே படுத்துகிடுதேன் சின்ன கட்டில் சரி வராது” என்றான் “பிளீஸ் பயமா இருக்கு இல்லைனா நானும் உங்க கூட கீழயே படுத்துகிறேன்” என்றாள் கெஞ்சுவதை போல். 

 

தர்மன் மீண்டும் எழுந்து அவள் பக்கத்தில் வந்து படுத்து கொண்டான் ஆராதானா சுவற்றை ஒட்டி படுத்து கொண்டாள் அவனின் பெரிய  உருவத்துக்கு அந்த சிறிய கட்டில் போதவில்லை திரும்பி திரும்பி படுத்து கொண்டிருந்தான். 

 

ஆராதானா அவன் பக்கத்தில் வந்து படுத்த பின் தான் நிம்மதியாக உறங்கவே ஆரம்பித்தாள். 

 

இருவரும் மெல்ல கண்ணயர்ந்தனர்… 

 

மறுநாள் காலை தர்மன் முதலில் எழுந்தவன் வீட்டின் நடுவே இருந்த நடுகூடத்தில் குளித்து உடை மாற்றி வந்தான் ஆராதானா அப்போது தான் மெல்ல கண்விழித்தாள். 

 

அவள் கண் விழித்தவுடன் தன் பக்கத்தில் பார்க்க அங்கே யாரும் இல்லை என்றவுடன் வெளியே வந்து சோம்பல் முறித்து கொண்டே நின்றிருந்தாள்

தர்மன் தலையை துவட்டி கொண்டே அவள் பக்கம் திரும்பினான். 

 

ஆராதானாவின்  புடவை ஆங்காங்கே விலகி அவளின் இரட்டை கோபுர கலசங்கள் அவன் கண்ணுக்கு தெரிய உடனே அவன் உடலில் ஏதோ மின்சாரம் பாய்ந்ததை போன்ற ஒரு உணர்வு அவள் முன்னெழில்கள் இரண்டும் தொடங்கும் இடத்தில் ஏதோ பெரிய  பூ போட்ட டாட்டூ வேறு போட்டு இருந்தாள் அது வேறு அவன் கண்ணில் பட்டு தொலைத்தது எதுவும் பேசாமல் சட்டென திரும்பி நின்று கொண்டான் தர்மன். 

 

அவன் வீட்டிற்க்கு சமையல் வேலை செய்ய வரும் வீராயி இவர்கள் இருவரையும் பார்த்துவிட்டு சங்கடத்துடன் சமயலைறைக்குள் சென்றுவிட்டாள். 

 

தர்மன் தலையை துவட்டுவதை போல் வெளியே சென்றுவிட்டான் அவன் மனதில் ‘அவள் சின்ன பொண்ணு அவள் வயசு என்ன உன் வயசு என்ன’ என்று தனக்கு தானே திட்டி கொண்டான் அவனின் மனசாட்சியோ ‘அவள் சின்ன பொண்ணு தானா’ என்று அவனிடம் மீண்டும் கேள்வி கேட்க அதை அடக்கினான். 

 

ஆராதானா புதிதாக கட்டிய புடவையை கட்ட தெரியாமல் ஆங்காங்கே இழுத்து சொருகி கொண்டு முகத்தை கழுவி முடித்தவள் சமயலறைக்குள் வந்தாள். 

 

வீராயி அவளை நெளிந்து கொண்டே ஓரக்கண்ணால் பார்த்தாள்

ஆராதானா தண்ணீர் தாகம் எடுக்க அங்கிருந்த ஒரு சொம்பு தண்ணீரை குடித்தாள். 

 

“குளிக்கலையா மா நீங்க” என்று அவள் கேட்க “இனிமே தான் குளிக்கனும்” என்றாள் பதிலுக்கு 

“நான் ஒரு கூறு கெட்டவள் புதுசா கல்யாணம் ஆனவக வீட்டுக்கு கதவை தட்டாமையே வந்துப்புட்டேன் மன்னிச்சிடுங்க” என்றாள். 

 

ஆராதனாவுக்கு அவள் கூறிய எதுவும் புரியவில்லை “நீங்க இங்கே வேலை பார்க்குறிங்களா அக்கா” என்றாள்

“ஆமாம் மா” என்றாள் வீராயி பதிலுக்கு “நான் குளிக்கனும் பாத்ரூம் எங்கே இருக்குன்னு தெரியுமா” என்று கேட்டாள். 

 

“வாங்க மா நான் காட்டுறேன்” என்றவள் அவளை பின்கட்டிற்க்கு அழைத்து சென்றாள் அங்கே குளியலறை கழிவறை இரண்டும் தனித்தனியே இருக்க ஆராதனா குளிக்க சென்றாள். 

 

தன் உடையை கலைந்து குளிக்கும் போது தான் அவளுக்கு நினைவு வந்தது மாற்றுடை இல்லாதது குளித்து முடித்தவுடன் அங்கே இருந்த தர்மனின் டி ஷர்ட்டை எடுத்து தலை வழியாக மாட்டி கொண்டாள்

கீழே அவன் வேட்டியை மடித்து கட்டி கொண்டு வீட்டின் உள்ளே வந்தாள். 

 

அவளை பார்த்த வீராயி சிரித்துவிட்டாள் தர்மன் தன் அறையில் எதையோ எடுத்து கொண்டு இருக்க 

ஆராதனா அறையின் உள்ளே வந்தாள் அவள் கோலத்தை பார்த்தவனுக்கு கோபம் வந்துவிட்டது.

 

“ஏன் புள்ளை உனக்கு துணிமணி வேணும்ன்னா என் கிட்ட கேட்க கூட மாட்டியா அந்த அளவுக்கு கூட வக்கு இல்லாதவனா நான்” என்றான் கோபத்துடன். 

 

“சாரி குளிச்சிட்டு டிரஸ் மாத்த போனேன் அங்கே எதுவும் இல்லை சோ உங்க டிரஸ் மட்டும் தான் இருந்துச்சு அதனால தான் அதை போட்டேன்” என்றாள் தயங்கி கொண்டே. 

 

“வீராயி” என்று கத்தி அழைத்தவன் “இந்த புடவையை அந்த புள்ளைக்கு கட்டிவிடு” என்று கூறிவிட்டு அவள் கையில் தன் தாயின் புடவையை கொடுத்துவிட்டு சென்றான். 

 

வீராயி அறையின் உள்ளே வந்தவள் அலமாரியில் இருந்த ஜாக்கெட் ஒன்றை எடுத்து அவளிடம் கொடுத்தாள் “இதை போட்டுக்கங்க மா” என்று. 

 

“நீங்க வெளியே போங்க அக்கா நான் கட்டிக்கிறேன் நேத்து வந்த ஆன்ட்டி கொஞ்சம் சொல்லி கொடுத்தாங்க” என்றாள். 

 

வீராயி வெளியே சென்ற பின் தனக்கு தெரிந்த அளவு புடவை கட்டி முடித்து வெளியே வந்தாள் தர்மன் அவளுக்காக காத்திருந்தான். 

 

“வா புள்ளை கடைக்கு போய் உனக்கு துணி எடுத்துட்டு வருவோம்” என்றான் அவளும் பதிலுக்கு சரி என தலையாட்டி விட்டு அவனுடன் வெளியே வந்தாள். 

 

இருவரும் புல்லட்டில் ஏறி அமர்ந்து ஜோடியாக ஊரில் நகர் வலம் சென்றனர் ஊரே அவர்களை தான் வேடிக்கை பார்த்தது சொக்கநாதன் வெளியே நின்று யாரிடமோ பேசிக்கொண்டிருக்க அவர் கண்ணிலும் இது பட்டது “என் மானத்தை வாங்குறதுக்குன்னே என் மகள் வயித்துல பிறந்து இருக்கா மூதேவி” என்று ஆராதனாவை பார்த்து முறைத்து கொண்டே திட்டினார். 

 

புல்லட்டின் வேகத்துக்கு ஆராதானா தடுமாறுவதை பார்த்த தர்மன் அவளின் கையை பிடித்து தன் தோளில் வைத்தான் “என்னை பிடிச்சிக்க புள்ளை” என்றான். 

 

நாகலிங்கமும் பசுபதியும் இவர்களை பார்த்து தான் கொண்டே நின்றிருந்தனர்

“அண்ணே உங்களுக்கு கிடைக்க வேண்டிய பொண்ணு அநியாயமா பழம் நழுவி சாக்கடையில் விழுந்த மாதிரி அந்த தர்மனுக்கு போயிடுச்சே” என்றான் 

பசுபதி அவனை கொம்பு சீவி விட அவனும் அவர்களை முறைத்து கொண்டே நின்றிருந்தான். 

 

இருவரும் ஜோடியாக ஜவுளிக்கடை உள்ளே நுழைந்தனர். 

 

அந்த கடையில் வேலை செய்யும் ஒருவன் “என்ன சார் பார்க்குறிங்க” என்று கேட்டான். 

 

“பொண்ணுங்க போடுற துணிமணி வேணும்” என்றான் தர்மன்

“பர்ஸ்ட் ப்ளோர் சார்” என்று கூறினான். 

 

“இந்தா புள்ளை நீ போய் துணி எடுத்துட்டு இரு நான் பேய் பணம் எடுத்துட்டு வரேன்” என்று கூறிவிட்டு தர்மன் வெளியே சென்றான். 

 

ஆராதனா மேலே சென்று உடையை பார்த்து கொண்டே இருக்க திடீரென அவள் பக்கத்தில் யாரோ வருவதை போன்று தோன்ற அங்கே திரும்பினாள். 

 

நாகலிங்கம் தான் அவளை நெருங்கி நின்றிருந்தான் அவனை பார்த்து பயந்தவள் இரண்டடி பின்னே செல்ல 

“என்ன புள்ளை இப்படி பயந்து ஓடுற அன்னைக்கு ஒத்துகை பார்த்தோம் இன்னைக்கு எல்லாம் பண்ணி பார்ப்போமோ” என்றான் அவளை இன்னும் நெருங்கி. 

 

“ஏய் என் கிட்ட வராத” என்றாள் அவள் நடுக்கத்துடனே நாகலிங்கம் சிரித்து அவள் கையை பிடித்து தன் புறம் இழுத்தவன் “விட்டுட்டு போக தான் இவ்வளவு தூரம் துரத்திட்டு வந்தனா நான் மானை வேட்டையாடுற புலி டி உன்னை வேட்டையாடாம விட மாட்டேன் 

உன்னை கன்னி கழிக்கனும்ல்ல அதுக்கு பிறகு என் சகல கூட குடும்பம் நடத்திக்கோ” என்றான். 

 

“ஏய் என் கையை விடு டா” என்று அவள் கத்தி கொண்டு இருக்க

சரியாக அந்த நேரம் தர்மன் அங்கே வந்தான் அவனை பார்த்த நாகலிங்கம் ஆராதனா கையில் இருந்து தன் கையை விலக்கி கொண்டு சாதாரணமாக நின்று கொண்டான். 

 

அத்தியாயம் 15

 

தர்மன் தூரத்தில் நடந்து வந்து கொண்டு இருந்தான் அவன் கையில் பணத்தை வைத்து கொண்டு எண்ணி கொண்டே வந்து கொண்டிருந்தான் அதனால் நாகலிங்கத்தை கவனிக்கவில்லை. 

 

ஆராதனா அருகில் வந்து நின்றவன் அப்போது தான் நாகலிங்கத்தை பார்த்தான். 

 

ஆராதனா தர்மனின் கையை பயத்துடனே கெட்டியாக பிடித்து கொண்டாள் தர்மன் அவள் அருகில் இருந்த நாகலிங்கத்தை சந்தேகமாக பார்க்க “என்ன பங்காளி துணி எடுக்க வந்திகளா நானும் அதுக்கு தான் வந்தேன்” என்றான் அவனை பார்த்து வழிந்து கொண்டே நாகலிங்கம். 

 

தர்மனுக்கு ஏனோ அவன் பார்வை முழி எதுவும் சரி இல்லை என்று தோன்றியது “துணி கடைக்கு துணி எடுக்க வராம வேற எதுக்கு வருவாக” என்றான் நாகலிங்கத்தை முறைத்து கொண்டே. 

 

“சரி பங்காளி கீழே ஆம்பளைங்க துணியெல்லாம் இருக்கும் நான் அங்கே போறேன்” என்று வழிந்து கொண்டே கூறிவிட்டு அங்கிருந்து ஓடிவிட்டான். 

 

அவன் அங்கிருந்து செல்லும் வரை ஆராதனா பதட்டத்துடனே தான் நின்றிருந்தாள் ஏனோ தர்மனின் மனதை அது உருத்தி கொண்டே தான் இருந்தது அதை தன் மனதில் குறித்து கொண்டான். 

 

நாகலிங்கத்துக்கு தர்மனை பார்த்தாள் எப்போதும் பயம் தான் 

அவனிடம் முன்பே வேறு ஒரு பிரச்சனையில் அடி வாங்கி இருக்கிறான் அதன் தழும்பு கூட அவன் கன்னத்தில் இன்றும் இருந்தது. 

 

“என்னாச்சு புள்ளை நீ துணி எதுவும் எடுக்கலையா” என்று தர்மன் அவளிடம் கேட்க அவளோ “எடுக்கணும்” என்றாள் வியர்வை வடிந்த முகத்துடன்

தர்மன் அதையும் தன் மனதில் குறித்து கொண்டான்

“அப்போ வா” என்று அவளை அழைத்து சென்றான் தர்மன். 

 

சொக்கநாதனின் இல்லம்… 

 

“அந்த சின்ன சிறுக்கிக்கு எவ்வளவு தெனாவட்டு இருக்கனும் அவனை அணைச்சிக்கிட்டு வீதியில உலா வாரா” என்று சொக்கநாதன் புலம்பிக் கொண்டே வீட்டின் உள்ளே வந்தார்.

 

ஆராதானாவை திட்டியவுடன் அங்கிருந்த சக்திவேலுக்கு கோபம் வந்துவிட்டது “அப்பா என்ன தான் இருந்தாலும் அவள் நம்ம வீட்டு புள்ளை அவளை பத்தி தப்பா பேசாதிங்க அவள் அவளோட புருசன் கூட தான போனா வேற எவன் கூடவும் வண்டியில போகலையே” என்றான் கோபத்துடன். 

 

“உன்னை வேண்டாம்ன்னு சொல்லிட்டு கண்டவன் கூட படுத்தவ தான அவள், அவளுக்கு என்ன நீ வக்காளத்தா” என்றார் சொக்கநாதன் கோபத்துடன். 

 

“அப்பா என் அக்கா மகள் நான் தூக்கி வளர்த்த பிள்ளை எனக்கும் அவள் மகள் மாதிரி தான் அவளை பத்தி இனி ஒரு வார்த்தை தப்பா பேசுனிக நான் மனுசனாவே இருக்க மாட்டேன்” என்றவன் தன் அறையில் சென்று வேகமாக கதவடைத்து கொண்டான். 

 

மறுநாள் காலை சக்திவேல் எப்போதும் போல் வயலுக்கு சென்று வேலையெல்லாம் சரியாக நடக்கிறதா என்று பார்க்க சென்றான். 

 

அப்போது வள்ளி வீட்டின் வழியாக நடந்து வந்து கொண்டிருந்தான் சக்திவேல் வள்ளி குடிசையை கடக்கும் போது வெளியே ஒரே கூட்டமாக இருந்தது. 

 

சக்திவேல் அந்த குடிசையில் அருகில் சென்று என்னவென்று விசாரித்தான் “ஐயா நம்ம வள்ளியை பொண்ணு பார்க்க வந்துருக்காக” என்று கூற அவ்வளவு தான் அவன் கோபத்தில் சிவந்தது. 

 

அங்கிருந்த யாரையும் கண்டுகொள்ளாமல் சக்திவேல் விறுவிறுவென நடந்து அந்த குடிசையின் உள்ளே சென்றான். 

 

அவனை பார்த்த வள்ளியின் பெரியம்மா “வாங்க ஐயா” என்று கையெடுத்து கும்பிட்டார் பதிலுக்கு அவனும் தலையசைத்துவிட்டு வள்ளியை தேடினான். 

 

அவளோ தரையில் பச்சை நிற நைலான் புடவை ஒன்றை அணிந்து கொண்டு தலைகுனிந்து அமர்ந்து இருந்தாள் அவள் நேர் எதிரே அவளை திருமணம் செய்ய போகும் அந்த மணமகன் கருப்பாக கட்டை குட்டையாக சுருள் முடியுடன் அமர்ந்து இருந்தான் அவன் பக்கத்தில் அவனின் தாய் தந்தை இருந்தனர். 

 

அந்த மாப்பிள்ளையின் தாய் கையில் வெற்றிலையில் சுண்ணாம்பு தடவி வாயில் வெற்றிலை மடித்து மென்று திண்று கொண்டு இருந்தார். 

 

அந்த மாப்பிள்ளைக்காரன் வள்ளியை கண்களாலேயே கபலிகரம் செய்து கொண்டு இருந்தான். 

 

இதையெல்லாம் பார்த்த சக்திவேலுக்கு இன்னும் கோபம் அதிகமானது வள்ளியின் பெரியம்மாவிடம் திரும்ப அவரோ 

“வர தை மாசம் கல்யாணத்துக்கு நாள் குறிச்சி இருக்கங்க ஐயா நீங்க தான் வந்து கல்யாணத்தை நடத்தி வைக்கனும்” என்றார். 

 

“என் கிட்ட ஏன் நீங்க ஒரு வார்த்தை கூட சொல்லாம நாள் குறிச்சிங்க” என்றான் கோபத்துடன் சக்திவேல். 

 

“ஐயா சொல்லக்கூடாதுன்னு இல்லைங்க எனக்கு கொஞ்ச நாளா உடம்பு முடியலைங்க எனக்கு எதாவது ஒன்னு ஆகுறதுக்குள்ள அவளை ஒருத்தன் கையில பிடிச்சி கொடுத்துட்டா என் கடமை முடிஞ்சுது” என்றார் வள்ளியின் பெரியம்மா. 

 

சக்திவேலால் அதற்க்கு மேல் அங்கு நிற்க முடியாமல் விறுவிறுவென அங்கிருந்து வெளியே நடந்து சென்றான் அவன் தலையில் ஏதோ ஒரு பெரிய பாறாங்கல்லை வைத்ததை போன்று வலித்தது 

மனதில் ஏதோ இனம்புரியாத ஒரு பாரம் தாங்க முடியாமல் கோபத்துடன் தன் வீட்டிற்க்கு சென்று தன் படுக்கையில் விழுந்தவனுக்கு அங்கேயும் சாதாரணமாக இருக்க முடியவில்லை அவன் மொத்த கோபமும் வள்ளியின் புறம் தான் திரும்பியது. 

 

அவள் அந்த மாப்பிள்ளையின் முன் தலைகுனிந்து அமர்ந்து இருந்தது வேறு அவன் நினைவில் வந்து அவனை பாடாய் படுத்தியது. 

 

அவன் மனதில் இருந்த வலியை போக்கும் வழி தெரியாமல் நேரே தன் பைக்கை எடுத்து கொண்டு அந்த ஊரின் எல்லையில் இருந்த ஓயின் ஷாப் ஒன்றிற்க்கு சென்றான் அங்கே தன்னையே மறக்கும் அளவுக்கு குடிக்க ஆரம்பித்தான். 

 

தர்மன் ஆராதானாவும் துணிமணிகளை எடுத்து முடித்து வீடு வந்து சேர்ந்தனர் வீராயி சமைத்து வைத்துவிட்டு வெளியே சென்று இருந்தார். 

 

இருவரும் அமர்ந்து சாப்பிட ஆரம்பித்தனர் தர்மன் ஒரு அசைவ பிரியன் என்பதால் பெரும்பாலும் அவன் வீட்டில் அசைவம் தான் இருக்கும். 

 

அன்றும் கிடா கறி குழம்பு வைத்திருக்க தர்மன் நன்றாக சாப்பிட ஆரம்பித்தான் ஆராதானா தட்டிலும் நிறைய கரியோடு குழம்பையும் ஊற்றினான் “நல்லா சாப்பிடு புள்ளை உடம்புல அப்போதான் வலு இருக்கும்” என்று அள்ளி வைத்தான். 

 

அவள் முன்னே இருந்த தர்மன் அந்த ஆட்டின் எலும்பை வாயில் வைத்து மென்று விழுங்கி கொண்டு இருக்க அதை பார்த்த ஆராதானாவுக்கு அருவருப்பில் உமட்டி கொண்டு வர பின்பக்கம் ஓடி வாந்தி எடுக்க  ஆரம்பித்தாள். 

 

தர்மன் கையை கழுவி விட்டு அவளின் பின்னே ஓடி வந்து அவளின் தலையை பிடித்து கொண்டான். 

 

அவள் முழுதாக வாந்தி எடுக்கும் வரை அவளின் தலையை பிடித்து கொண்டே இருந்தான். 

 

தர்மன் அங்கிருந்து தண்ணீரை சொம்பை எடுத்து வந்து அவள் கையில் கொடுத்து “முகம் கழுவிக்க புள்ளை” என்றான். 

 

ஆராதானா தன் முகத்தை கழுவியவள் சோர்வுடன் நின்றிருக்க 

“என்ன பண்ணுது புள்ளை மயக்கம் எதாச்சும் வருதா ஏன் வாந்தி எடுத்த” என்று கேட்டான். 

 

“இல்லை எனக்கு மட்டன் பிடிக்காது” என்றாள்

“அதை முன்னாடியே சொல்ல மாட்டியா வா” என்று அவளின் கைப்பிடித்து உள்ளே அழைத்து சென்றான். 

 

வீராயி கொஞ்சம் ரசம் வைத்துவிட்டு சென்றிருக்க சாப்பாட்டை போட்டு ரசம் எடுத்து வந்து அவளிடம் கொடுத்தான் ஆராதானாவும் சாப்பிட ஆரம்பித்தாள். 

 

தர்மன் அவளுக்கு பிடிக்காது என்பதற்காக அவள் முன் சாப்பிடாமல் எழுந்து சென்று கட்டிலில் அமர்ந்து சாப்பிட்டான். 

 

இருவரும் சாப்பிட்டு முடிக்க தர்மன் வயலுக்கு செல்வதாக கூறிக் கிளம்ப 

ஆராதானாவுக்கு அங்கே தனியாக இருக்க பயமாக இருந்தது “என்னங்க நானும் உங்க கூட வரவா” என்று கேட்டாள். 

 

“இல்லை புள்ளை அங்கே வெட்கையா இருக்கும் நீ இங்கேயே இரு” என்று அவன் எவ்வளவு கூறியும் அவள் கேட்கவேயில்லை எங்கே நாகலிங்கம் இங்கேயும் வந்துவிடுவானோ என்ற பயம் அவளுக்கு அதனால் அவனுடன் கிளம்பி சென்றுவிட்டாள். 

 

இருவரும் ஜோடியாக வர அங்கே தர்மனின் வயலில் வேலை செய்து கொண்டு இருந்தவர்கள் இவர்களை தான் வேடிக்கை பார்த்தனர் குறிப்பாக ஆராதானாவை, அவர்களின் பார்வை அவளுக்கு சங்கடத்தை ஏற்படுத்தியது. 

 

அதை புரிந்து கொண்ட தர்மன்

அவளின் கைப்பிடித்து அழைத்து சென்று அங்கிருந்த மா மரத்தின் நிழலில் ஒரு கயிற்று கட்டிலை போட்டு “இங்கனயே இரு எதாச்சும் வேணும்னா கூப்பிடு” என்று கூறிவிட்டு தன் மேல் சட்டையை கழட்டி வைத்துவிட்டு வேட்டியை மடித்து கட்டி கொண்டு கையில்லா பனியனுடன் வயலில் இறங்கி வேலை பார்க்க ஆரம்பித்தான். 

 

தர்மன் எப்போதும் வேலையை மேற்பார்வை மட்டும் பார்க்க மாட்டான் அனைவருடன் தன் வயலில் இறங்கி வேலையும் செய்வான் இன்றும் அப்படி தான் அனைவருடன் வேலை செய்து கொண்டு இருந்தான். 

 

ஆராதனா அவன் வேலை செய்வதை வேடிக்கை பார்த்து கொண்டே அமர்ந்து இருந்தாள். 

 

அங்கே வேலை செய்து கொண்டு இருந்த பெண்களில் ஒருத்தி “என்ன கொழுந்தனாரே புது பொண்டாட்டியை வீட்ல விட மனசு இல்லையோ பார்த்துட்டே இருக்கனும்ன்னு கையோட கூட்டிட்டு வந்துட்டிக போல” என்றாள் கிண்டலாக. 

 

அவன் பதில் பேசாமல் வேலை செய்து கொண்டே இருக்க இன்னொருத்தி “புதுசா கல்யாணம் முடிச்சவரு ராத்திரியெல்லாம் வேலை பார்த்து அசதியா இருப்பிக வயலுக்கு வர மாட்டிகன்னுல்ல நினைச்சேன் வந்துட்டிக” என்றாள் அவனை பார்த்து சிரித்து கொண்டே. 

 

ஊருக்குள் இது போன்ற கிண்டல் கேலிகள் சாதாரணம் என்பதால் அவன் பெரிதாக அலட்டி கொள்ளவில்லை.

 

ஆராதனா அமர்ந்திருந்த கட்டிலின் அருகில் ஒரு பெரிய காளை மாடு அவளை முட்டுவதை போல் வந்து நிற்க அவளோ பயத்துடனே தர்மனின் அருகில் ஓடி வந்தாள். 

 

அதை பார்த்த தர்மன் “வரப்புல ஓடி வரதா புள்ளை விழுந்துடுவ அந்த மாடு ஒன்னும் பண்ணாது அங்கனேயே இரு” என்று கூறிக் கொண்டே இருக்க ஆராதனா அதை காதில் வாங்காமல் ஓடி வந்தாள் செருப்புடன் வந்ததாள் வரப்பில் இருந்து வழுக்கி வயலில் இருந்த சேற்றில் பொத்தென்று விழுந்தாள். 

 

தர்மன் தன் கையில் இருந்த மண்வெட்டியை கீழே போட்டுவிட்டு பதறி கொண்டே அவள் அருகில் ஓடினான். 

 

சேற்றில் விழுந்து கிடந்தவளை தன் கைப்பிடித்து தூக்கி நிற்க வைக்க ஆராதனா மீண்டும் நிற்க முடியாமல் கால் வழுக்கி விழ போக தர்மன் அவளின் வெற்றிடையில் தன் கையை நுழைத்து இறுக்கமாக அவளை பிடித்து தன்னோடு சேர்த்து அணைத்து கொண்டான். 

 

ஆராதனா அவனின் பனியனை பிடித்து கொண்டே நின்றிருந்தாள்

அவள் உடலில் இருந்த சேரு மொத்தமும் அவன் நெருங்கி நின்றதில் அவன் உடலுக்கு இடம் மாறியது. 

 

அவளின் முன்னெழில்கள் அவள் அங்கங்களில் உரச அவளின் மேனியின் மென்மை செழுமை அனைத்தும் தர்மனை பரிதவிக்க செய்தது தன் தவிப்பை அடக்க முடியாமல் அவளின் வெற்றிடையை தன் பலத்துக்கு அழுத்தி பிடித்து விட “ஆஆ வலிக்குதுங்க” என்றாள். 

 

அங்கே வயலில் வேலை பார்த்து கொண்டு இருந்தவர்கள் இவர்களை வேடிக்கை பார்த்து கொண்டே இருந்தனர் அதில் ஒருத்தி 

“என்ன மா புது பொண்ணு என் கொழுந்தன் ஒரு பிடிக்கே தாங்க மாட்ற தர்மா உன் நிலைமை திண்டாட்டம் தான் போல” என்று கூறி சிரிக்க “இந்தாரு அண்ணி எல்லாரும் வேலையை பாருங்க” என்று கூறி அதட்டியவன் அவளை தன் கை அணைவில் வைத்து கொண்டு அங்கிருந்து அழைத்து சென்றான். 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

5 thoughts on “காதல் தேவதா 14,15”

  1. Оснащение переговорной комнаты: звук, видео и автоматизация под ключ
    оборудование переговорной [url=https://osnashcheniye-peregovornoy1.ru/]оборудование переговорной[/url] .

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Scroll to Top