ATM Tamil Romantic Novels

காதல் தேவதா 17,18

அத்தியாயம் 17

 

கதவு தட்டும் சத்தம் கேட்டு வள்ளிக்கு பயத்தில் கை கால் எல்லாம் உதறல் எடுக்க ஆரம்பித்தது சக்திவேலிடம் இருந்து விலக பார்க்க அவனோ “எங்கே டி போற” என்று கூறியவன் அவளின் இடையில் கையைக் கொடுத்து அவளை கெட்டியாக தன்னோடு அணைத்து கொண்டான். 

 

வள்ளியின் பெரியம்மா மீண்டும் “வள்ளி வள்ளி” என்று கதவை தட்டி கொண்டே இருந்தார் அவள் திறக்கவில்லை என்றவுடன்

“எப்படி தூங்குறா பாரு காலையில வெளியே வரட்டும் இருக்கு இவளுக்கு” என்று கூறிவிட்டு சென்று படுத்து கொண்டார். 

 

கதவு தட்டும் சத்தம் நின்றவுடன் தான் வள்ளிக்கு  உயிரே வந்தது தன்னிடம் இருந்து சக்திவேலை வலுக்கட்டாயமாக பிரித்து விலக்கினாள். 

 

சக்திவேலுக்கு உடனே கோபம் வந்து விட “அடிங்க என்னையே தள்ளி விடுறியா” என்று கோபத்துடன் கையை ஓங்கி கொண்டு அவளை அடிக்க வந்தான்

“இந்தா பாருங்க எனக்கு கல்யாணம் ஆக போகுது நீங்க இந்த மாதிரி எங்க வீட்டுக்கு வந்தா எல்லாரும் என்னை பத்தி என்ன நினைப்பாங்க” என்றாள் தலைகுனிந்து கொண்டே. 

 

“ஓஹோ ஊமைச்சி மாதிரி இருந்த இப்போ உனக்கு இந்த அளவுக்கு அறிவு வளர்ந்திருச்சா நீ எவனை வேணும்னாலும் கட்டிக்க எனக்கு என்ன டி வந்துச்சு ஆளும் மூஞ்சியும் கருவாச்சி” என்று கோபத்துடன் அவளை திட்டிவிட்டு அந்த அறையை விட்டு வெளியே சென்றான். 

 

வள்ளியின் வீட்டின் பக்கத்து வீட்டில் இருந்த சிவகாமி இதையெல்லாம் கவனித்து கொண்டு தான் இருந்தாள். 

 

வள்ளிக்கு இப்போது தான் உயிரே வந்தது தன் பாயில் சென்று படுத்து கொண்டாள். 

 

சக்திவேல் அங்கிருந்து நடந்து சென்று கொண்டிருந்தவன் மனதில் ‘அவள் எவனை கட்டிக்கிட்டா உனக்கு என்ன டா வந்தது’ என்று தன்னைத்தானே  திட்டிக் கொண்டவன் தன் வீட்டிற்க்கு சென்று படுத்து கொண்டான். 

 

தர்மனின் இல்லம்… 

 

தர்மன் மருந்தின் வீரியத்தால் நன்றாக படுத்து உறங்கி கொண்டு இருந்தவன் மெல்ல கண்விழித்தான்

அவன் நெஞ்சில் தலையை வைத்து கொண்டு ஆராதனா ஆதரவாக படுத்து உறங்கி கொண்டு இருந்தாள். 

 

ஆராதனா தன் புடவையை கலைந்து நைட்டி ஒன்றை மாட்டி கொண்டு தர்மனின் அருகில் வந்து அமர்ந்து இருந்தாள் அவன் உறங்குவதை பார்த்தவளுக்கு அவளுக்கும் உறக்கம் வந்தது தனியாக படுக்க வேறு பயமாக இருந்தது. 

 

தர்மனின் பக்கத்தில் வந்து படுத்தவள் அவன் நெஞ்சில் தலை வைத்து அப்படியே உறங்கிவிட்டாள் 

பூனை குட்டி தன் தாயை அணைத்து கொண்டு படுத்திருப்பதை அவனை அனைத்து தன் உடலை குறுக்கி கொண்டே படுத்திருந்தாள். 

 

தர்மனுக்கு அவளை எழுப்ப மனம் வரவில்லை அவளையே வைத்த கண் வாங்காமல் பார்த்து கொண்டே படுத்திருந்தான் ஆராதனா நல்ல சந்தன நிறம் சின்ன கண்கள் தூங்கி கொண்டே மெலிதாக சிரித்தாள் அவள் கன்னத்தில் விழுந்த லேசான குழியை பார்த்தவன் அவள் தூக்கம் கலையா வண்ணம் லேசாக தன் விரலால் அவளின் கன்னத்தை தொட்டு பார்த்தான். 

 

அந்த அடர் நீல நிற எலாஸ்டிக் வைத்த நைட்டி அவளி்ன் நிறத்துக்கு அவ்வளவு எடுப்பாக இருந்தது. 

 

அவன் கண்கள் இன்னும் அவளை விட்டு விலகவேயில்லை கூரான மூக்கு இயற்கையிலேயே சிவந்த இதழ்கள் வலது பக்கத்தில் அந்த இதழின் மேலே இருந்த சிறிய மச்சம்

சங்கு கழுத்து அதில் அவன் கட்டிய தாலி மெல்லிய கழுத்தை ஒட்டிய தங்கத்தில் வைரக்கல் பதித்த செயின் அதற்க்கு கீழேயும் அவன் கண்கள் தாராளமாக சென்றது. 

 

அந்த எலாஸ்டிக் நைட்டியின் கழுத்து பகுதி கீழே இறங்கி இருக்க அவள் மார்பு மத்தியில் இருந்த அதே பூ போட்ட டாட்டூவின் தொடக்கத்தில் கொஞ்சம் தெரிந்தது. 

 

அவன் கண்கள் அங்கிருந்து விலகவேயில்லை அந்த டாட்டூவை முழுதாக பார்த்து விட மாட்டோமா என்று அவன் கண்கள் அங்கேயே நிலைக்குத்து நின்றது 

ஒரு பெண்ணின் விருப்பம்  இல்லாமல் அவளை இப்படி பார்ப்பது தவறு என்று தன்னை தானே திட்டி கொண்டவன் அவள் உறக்கம் கலையா வண்ணம் அவளை விட்டு விலகி கட்டிலில் இருந்து கீழே இறங்கினான். 

 

அவன் எழுந்ததில் உறக்கம் கலைந்த ஆராதனா மெல்ல எழுந்தமர்ந்தாள்

தர்மன் நடக்க முடியாமல் நடந்து செல்வதை பார்த்தவள் அவன் அருகில் சென்று “என்னங்க என்னை எழுப்பி இருக்க வேண்டியது தான வாங்க நான் கூட்டிட்டு போறேன்” என்று அவன் கையை தன் தோள் மீது போட்டு கொண்டு அவனை அழைத்து சென்றாள். 

 

தர்மனின் கைகள் அவளின் கழுத்துக்கு கீழே இருக்கு அவளின் முன்னெழில்கள் லேசாக அவன் கைகளை தொட்டு தீண்டி சென்றது. 

 

அவன் கைகள் அதன் மென்மையை உணர அவனோ தடுமாற ஆரம்பித்தான் அதன் வனப்பை முழுதாக தன் கைகளால் தொட்டு உணர வேண்டும் என்ற வேட்கை வந்தது. 

 

தன்னை கட்டுக்குள் கொண்டு வர சிரமப்பட்டவன் அவள் மேலே இருந்து தன் கையை விலக்கி கொண்டான். 

 

ஆராதானா என்னவென்று அவனை திரும்பி பார்க்க “இல்லை புள்ளை நானே போய்க்குறேன்” என்று கூறியவன் நிற்க முடியாமல் நிலை தடுமாறி கீழே விழ போக ஆராதானா அவன் கையை பிடிக்க சென்று தானும் அவன் மீது விழுந்தாள் அவளின் அஞ்சனங்கள் அவன் நெஞ்சில் நச்சென்று மோதி அவன் பொறுமையை சீண்டி பார்த்தது. 

 

இருவரும் ஒருவர் மீது ஒருவர் விழுந்து கிடக்க இருவரின் கண்களும் ஒருவரை ஒருவர் பார்த்து கொண்டே இருந்தது. 

 

தர்மன் அதற்க்கு மேல் தன்னை நிலைப்படுத்த முடியாமல் ஆராதானாவை புரட்டி கீழே தள்ளியவன் அவள் மீது படர்ந்தான்

அவளின் செவ்விதழ்கள் அவனின் கண்களுக்கு விருந்தாக ஒரு நிமிடம் கூட யோசியமல் அவளின் இதழை தன் உதடுகளால் சிறைப்பிடித்தான். 

 

அவளின் மென்மையான இதழ்களை தன் முரட்டு உதடுகளால் கவ்வி இழுக்க ஆராதானா கண்கள் பயத்தில் படபடவென அடித்து கொண்டது இது தான் அவள் வாழ்வின் முதல் முத்தம் என்ன தான் மேல் நாட்டு கலாச்சாரத்தில் படித்தாலும் ஒருவனுக்கு ஒருத்தி என்ற வழியை பின்பற்றுபவள் அவள். 

 

தர்மன் முதலில் அவள் இதழ்களில் மென்மைமாக முத்தமிட்டவன் தன் தவிப்பை அடக்க முடியாமல் சத்தமாக முத்தமிட்டு தன் நாவை அவள் இதழின் உள்ளே நுழைத்து அவளின் உமிழ்நீரை ஒரு சொட்டு மிச்சம் வைக்காமல் அவள் நாவே வரண்டு போகும் அளவுக்கு உறிஞ்சி இழுத்தான். 

 

வெகுநேரம் தொடர்ந்த அந்த முத்த யுத்தத்தில் அவளும் மதி மயங்கி கிடந்தாள்

அவளின் இதழில் முத்தமிட்டது போதும் என்று நினைத்து அங்கிருந்து விலகியவன் அவள் நெற்றி கண் கன்னம் என அனைத்திலும் தன் மீசை முடி குத்த முத்தமிட்டான் 

அவளின் கழுத்தில் பச்சை நரம்போடிய பகுதிகளில் முத்தமிட்டான். 

 

சட்டென அவள் சுதாரிக்கும் மீண்டும் அவள் இதழை கவ்வி தேன் பருகி கொண்டே இருக்க வீராயி சமைப்பதற்காக வீட்டிற்க்கு 

வந்தவள் “தர்மா அண்ணா” என்று அழைத்து கொண்டே வர தர்மன் உடனே அவளை அணைத்து கொண்டே எழுந்தவன் அவளை விட்டு விலகி பதட்டத்துடன் தன் வேஷ்டியை ஒழுங்காக கட்டி கொண்டு வெளியே சென்றான். 

 

ஆராதானாவின் முகம் அவன் முத்தமிட்டதில் ரத்த நிறத்தில் மாறி இருந்தது வெட்கத்துடன் தலை குனிந்து அமர்ந்து இருந்தாள் 

திருமணத்திற்கு முன்பே அவனை முதல் முறையாக விமான நிலையத்தில் பார்க்கும் போதே அவளுக்கு அவனை பிடித்துவிட்டது அவள் பெற்றோரிடம் உறவினர்களிடமும் அவன் தனக்காக சண்டையிடும் அவள் தன்னையே அவனிடத்தில் இழந்து இருந்தாள். 

 

அதனால் தான் அவன் முத்தமிடும் போது விலக்காமல் அவனுடன் ஒன்றி போனாள். 

 

தர்மன் குளியலைறையின் உள்ளே சென்று கதவடைத்து கொண்டான்

‘டேய் என்ன டா பண்ணி வச்சிருக்க’ என்று தன்னை தானே திட்டி கொண்டான் அதன் பின் தன் மனதை ஒரு நிலைப்படுத்தி கொண்டு வெளியே வந்தான். 

 

அறையின் உள்ளே சென்று தன் மேல் சட்டையை அணிந்து கொண்டவன் 

“என்னை மன்னிச்சிடு புள்ளை ஏதோ தெரியாம” என்று தயங்கி தயங்கி கூறியவன் “நான் வெளியே போய்ட்டு வரேன்” என்று கூறி கிளம்பினான். 

 

“நானும் உங்க கூடவே வரவா எனக்கு தனியா இருக்க பயமா இருக்கு” என்று ஆராதானா கேட்க 

“வீராயி உன் கூட துணைக்கு இருக்கும் புள்ளை இங்கனையை பத்திரமா இரு” என்று கூறிவிட்டு சென்றான். 

 

ஆராதானா அங்கேயே இருக்க பிடிக்காமல் எழுந்து சமயலறைக்கு சென்றாள் அங்கேயே வீராயி அருகில் “நான் ஏதாச்சும் ஹெல்ப் பண்ணவா அக்கா” என்று கேட்டாள். 

 

“ஒன்னும் வேண்டாம் கண்ணு நானே பார்த்துக்குறேன்” என்று கூறிவிட்டு வீராயி மீன் குழம்புக்கு தேவையான பொருட்களை எடுத்து வைத்து கொண்டிருந்தாள். 

 

ஆராதானா சிறிது நேரம் அவள் சமைப்பதை பார்த்து கொண்டே இருந்தவள் அவளிடம் பேச்சு கொடுக்க ஆரம்பித்தாள் 

“அக்கா இவர் வீட்ல இவரு ஒருத்தர் மட்டும் தானா” என்று கேட்டாள்

“யாரு தர்மா அண்ணனையா கேட்க்குற” என்றாள்

“ஆமாம்” என்று தலையை ஆட்டினாள். 

 

“ஆமா கண்ணு அவங்க அப்பா அம்மா தர்மா அண்ணன் சின்ன வயசா இருக்கும் போதே போய் சேர்ந்துட்டாங்க” என்றாள்

“இவருக்கு கூட பிறந்தவங்க யாரும் இல்லையா அக்கா” என்று கேட்டாள். 

 

“இல்லை கண்ணு இவக அய்யனுக்கும் ஆத்தாவுக்கும் ரொம்ப வருசமா குழந்தையே இல்லையாம்

இவகளுக்கு வயசான பிறகு தான் தர்மா அண்ணன் பிறந்துச்சு

அதனாலேயே அவங்க சீக்கிரமா இறந்துட்டாங்க தர்மன் அண்ணாவுக்கு ஒரே ஒரு அத்தை இருந்தாக அவங்களும் இப்போ உயிரோட இல்லை அதனால் கல்யாணம் பண்ணி வைக்கவோ அதை பத்தி பேசவோ யாரும் இல்லை அந்த அண்ணனும் இத்தனை வருசமா அப்படியே இருந்துருச்சு” என்றாள் வீராயி சாப்பாட்டை வடித்து கொண்டே. 

 

“நீங்க எப்போ இருந்து இங்கே வேலைக்கு வரிங்க” என்று கேட்டாள்

“அஞ்சு வருசமா தர்மா அண்ணனுக்கு நான் தான் சமைச்சு தரேன் என் பிள்ளைகளுக்கு ஸ்கூல் பீஸ் தர்மா அண்ணன் தான் கட்டுது ரொம்ப தங்கமான மனுசன்” என்றாள் வீராயி. 

 

ஆராதானாவுக்கு திடீரென பழைய நினைவுகள் நிழலாடியது தன் தாத்தா தர்மனிடம் பேசக்கூடாது என்று கூறியது “எங்க தாத்தாவுக்கு இவரை பிடிக்காதா அக்கா” என்று கேட்டாள்

“ஆமாம் கண்ணு ஊருக்கே தர்மா அண்ணனை பிடிக்கும் உங்க தாத்தன் ஒருத்தரை தவிர” என்றாள். 

 

“ஏன் பிடிக்காது அக்கா” என்று கேட்டாள்

“எனக்கு தெரியாதே கண்ணு” என்றாள் வீராயி. 

 

ஆராதானா ஏன் தாத்தாவுக்கு இவரை பிடிக்க மாட்டேங்குது என்று யோசனையுடனே நின்றிருந்தாள். 

 

அத்தியாயம் 18

 

சக்திவேலின் இல்லம்….

 

சக்திவேல் போதை தெளிந்து காலை மெல்ல கண்விழித்தான் எழுந்து கொள்ளும் போதே அவனுக்கு தலைவலி உயிரே போனது தலையே வெடித்துவிடும் அளவுக்கு வலித்தது. 

 

தலையை கையால் பிடித்து கொண்டே எழுந்து அறையில் இருந்து வெளியே வந்தான் அப்போது அவன் முன்னே வள்ளி காபியுடன் வந்து நின்றாள் அவளை கொலை வெறியுடன் ஒரு பார்வை பார்த்து கொண்டே அவள் கையில் இருந்த காபி டம்ளரை வாங்கினான். 

 

ஒரு வாய் அந்த காபியை  குடித்தவன் தன் வாயில் இருந்து கீழே துப்பினான்

“த்துஉ என்ன எழவு டி இது மாட்டுக்கு வைக்கிற கழனி தண்ணீ மாதிரி இருக்கு இதை நீயே குடி” என்று அவள் கையில் திணித்து விட்டு அங்கிருந்து கோபத்துடன் சென்றான். 

 

வள்ளி அவனை பார்த்து கொண்டே பயத்துடன் நின்றிருந்தவள் அந்த காபியை கொஞ்சமாக குடித்து பார்த்தாள் ‘நல்ல தான இருக்கு அப்புறம் ஏன் இப்படி திட்டிட்டு போறாரு’ என்று மனதில் நினைத்தாள். 

 

மீண்டும் சக்திவேல் குளித்து முடித்து வந்து டைனிங் டேபிளில் சாப்பிட அமர்ந்தான் வள்ளி அவனுக்கு பரிமாற ஆரம்பித்தாள். 

 

வள்ளி அவன் தட்டில் சாப்பாட்டை வைத்து குழம்பை ஊற்றினாள் சக்திவேல் சாப்பாட்டை பிசைந்து ஒரு வாய் தன் வாயில் எடுத்து வைத்தான் “த்துஉ” என்று துப்பினான் “கருமம் குழம்பா டி இது இதை மனுசன் திண்பானா உப்பு இப்படி கரிக்குது” என்று கூறிக் கொண்டே அவளை பார்த்து முறைத்தவன் தட்டில் இருந்த வெண்டாக்காய் பொறியலை தன் வாயில் எடுத்து வைத்தவன்

“ஏன் டி எழவு எடுத்தவளே என்னை நிம்மதியாவே இருக்க விட மாட்டியா அய்யோ காரமா இருக்கு என் நாக்கு வெந்துடும் போல இந்த சாப்பாட்டை தூக்கி குப்பைல கொட்டு” என்று திட்டியவன் தன் தட்டை தூக்கி சுவற்றில் வீசிவிட்டு அங்கிருந்து எழுந்து சென்றுவிட்டான். 

 

வள்ளியை பார்த்த சந்தோசம் “ஏய் வள்ளி உனக்கு சரியா சமைக்க தெரியலைன்னா உன் வீட்டோடவே இருந்து தொலைக்க வேண்டிதான டி உனக்கு மாசா மாசம் சம்பளம் சொலையா மூவாயிரம் எதுக்கு கொடுக்குறோம் வேலை செய்ய முடிஞ்சா இங்கே வா இல்லைன்னா வராத” என்று காட்டமாக கூறிவிட்டு சென்றார். 

 

வள்ளியின் கண்களில் இருந்து கண்ணீர் தாரை  தாரையாக வழிந்தது அவளுக்கு தெரியும் அவன் வேண்டுமென்றே தான் தன்னிடம் இப்படி நடந்து கொள்கிறான் என்று 

ஆனால் அவளால் என்ன செய்ய முடியும் தன் இயலாமையை நினைத்து அழுது கொண்டே இருந்தாள். 

 

அப்போது திடீரென வள்ளிக்கு உமட்டி கொண்டு வர பின் வாசல் நோக்கி ஓடினாள் அங்கே தன் வயிற்றில் இருக்கும் மொத்தமும் வெளியே வரும் அளவுக்கு வாந்தி எடுக்க ஆரம்பத்தாள் கூடவே தலை வேறு அவளுக்கு சுற்றுவதை போல் இருந்தது கண்கள் இருட்டி கொண்டே வர சோர்வுடன் அங்கேயே அமர்ந்து கொண்டாள். 

 

தர்மன் காலை சென்றவன் அன்று இரவு தான் வீடு வந்து சேர்ந்தான் 

வீராயி அதுவரை ஆராதனாவுடன் இருந்தாள். 

 

தர்மன் வந்த பிறகு வீராயி தன் வீட்டிற்க்கு சென்றாள் 

எப்போதும் போல் இருவரும் ஒன்றாக அமர்ந்து சாப்பிட ஆரம்பித்தனர். 

 

இருவரிடமும் எந்த வித பேச்சு வார்த்தையும் இல்லை அமைதியாக சாப்பிட்டனர் காலை நடந்த நிகழ்வு இருவரையும் அமைதியாக இருக்க வைத்திருந்து. 

 

ஆராதனாவுக்கு அவனை நிமிர்ந்து பார்க்கவே கூச்சமாக இருந்தது தலைகுனிந்து சாப்பிட்டு கொண்டு இருந்தாள் ஆனால் தர்மனோ அவளை விழி எடுக்காமல் பார்த்து கொண்டே சாப்பாட்டையும் அவளையும் சேர்த்து தன்னுள் விழுங்கி கொண்டு இருந்தான் குறிப்பாக அவள் இதழின் மேலே இருந்த மச்சம் அவனை கட்டியிழுத்தது. 

 

இருவரும் சாப்பிட்டு முடித்து எழுந்து கொள்ள ஆராதனா சமையலறையில் பாத்திரங்களை கழுவி அடுக்கி வைத்து கொண்டு இருந்தாள். 

 

தர்மன் அவளின் பின்னே சமயலறையின் உள்ளே வந்தவன் அவளை இடிப்பதை போல் நெருங்கி ஒட்டி நின்று அவள் காதில் தன் மீசை முடி குத்த “புள்ளை எனக்கு பால் வேணும்” என்று கேட்டான். 

 

ஆராதனாவின் காதில் அவன் உஷ்ண மூச்சு பட்டதும் அவளுள் ஏதோ செய்தது தவிப்புடன் “நீங்க போங்க நான் எடுத்து வரேன்” என்றாள் திக்கி திணறி கூறியவள் வெட்கி தலை குனிந்து கொண்டாள். 

 

தர்மனும் அவளிடம் இருந்து விலகி 

அங்கிருந்து தன் அறையில் இருந்த பெட்டில் சென்று அமர்ந்து கொண்டான். 

 

ஆராதனா தலைகுனிந்து பாலை கையில் வைத்து கொண்டு ஏதோ முதலிரவுக்கு வரும் பெண்ணை போல் அறையின் உள்ளே வந்தாள். 

 

தர்மனிடம் பால் டம்ளரை கொடுத்துவிட்டு விளக்கை அணைத்தவள் விடிவிளக்கை ஒளிர்வித்துவிட்டு பெட்டில் சென்று எப்போதும் போல் சுவற்றை ஒட்டி படுத்து கொண்டாள். 

 

தர்மனுக்கு அவள் அருகில் சென்றால் தான் இருக்கும் நிலையில் அவளை ஆண்டு விடுவோம் என்று பயந்தவன் கீழே பாயை விரித்து போட்டு படுத்து கொண்டான். 

 

இன்று முழுவது வேலை செய்த களைப்பில் தர்மன் படுத்த உடனேயே உறங்க ஆரம்பித்துவிட்டான் 

ஆராதனா நடு இரவில் கண்கவிழிக்கும் போது விடிவிளக்கின் வெளிச்சத்தில் தர்மன் உறங்கி கொண்டு இருப்பதை பார்த்தாள். 

 

தர்மன் நன்றாக உறங்கி கொண்டு இருந்தான் அவனிடமிருந்து சீரான மூச்சு காற்று வெளியே வந்து கொண்டிருந்தது. 

 

ஆராதனா அவன் புறம் திரும்பி படுத்து தர்மனை சைட் அடிக்க ஆரம்பித்தாள்

தர்மன் நல்ல உயரம் அதற்க்கு ஏற்ற உடல் வாகு உடையவன் நிறம் ஆராதனா அளவுக்கு இல்லை என்றாலும் கார்மேக நிறம் தான் முறுக்கு மீசை முழுதாக மழிக்கப்பட்ட தாடை 

வில் போன்ற பட்டை தீட்டிய புருவங்கள் கூரான நாசி வெள்ளை நிற கையில்லா பனியன் அணிந்து இருந்தான் பரந்த தோள்கள் அவன் நெஞ்சில் இருந்த ரோமங்களை பார்த்தவளுக்கு வெட்கம் வந்தது 

அவனை சந்தித்த முதல் நாளே அவனை ரசனையுடன் பார்த்தது நினைவுக்கு வந்தது. 

 

அனைத்தையும் தன் மனதில் அசைபோட்டவள் அவனை பார்த்து கொண்டே உறங்க ஆரம்பித்தாள். 

 

காலை முதலில் கண்விழித்தது தர்மன் தான் கண்ணை திறந்தவன் தன் பக்கத்தில் கட்டிலில் படுத்திருந்த ஆராதனாவை பார்த்தான் அவள் நன்றாக உறங்கி கொண்டு இருக்க அவள் அணிந்திருந்த நைட்டி தொடை வரை மேலே ஏறி இருந்தது

அதை பார்த்தவன் அவள் அருகில் சென்று அவள் ஆடையை சரி செய்தான். 

 

பின் அவன் சென்று குளித்துவிட்டு வந்து அறையில் உடை மாற்றி கொண்டு இருக்க அவனை பார்த்த ஆராதனா “என்னங்க தலை என்ன இவ்வளவு ஈரமா இருக்கு சரியா துவட்டலையா நீங்க” என்று கூறிக் கொண்டு அங்கிருந்த துண்டை எடுத்து அவனுக்கு தலை துவட்ட முயற்சி செய்ய பாவம் அவளால் அது முடியவில்லை அவன் உயரத்துக்கு அவளால் எக்கி துவட்ட முடியவில்லை. 

 

“ஹலோ பீம் பாய் இங்கே  வந்து உட்காருங்க” என்று அவன் கைப்பிடித்து அழைத்து சென்று கட்டிலில் அமர வைத்தாள் அவன் அருகில் நெருங்கி அவன் தலையை துவட்ட ஆரம்பித்தாள். 

 

தர்மனின் கண்கள் அவள் மார்பின் மத்தியில் இருந்த டாட்டூவை விட்டு விலகவேயில்லை அதன் முழு பரிமாணத்தையும் எப்போது பார்ப்போம் என்று இருந்தது தவிப்புடன் அதை பார்த்து கொண்டே இருந்தான். 

 

பின் அவன் வயலுக்கு சென்று விட வீராயி அவளுக்காக துணை இருந்தாள். 

 

அவன் கால் கட்டை பிரித்த பின் அந்த காயத்துக்க துளி அளவு கூட முகம் சுழிக்காமல் சுத்தம் செய்வது அதில் மருந்திடுவது என்று அனைத்தையும் ஆராதனாவே பார்த்து கொண்டாள். 

 

இப்படியே நாட்கள் நகர்ந்தன தர்மனுக்கு தன்னவள் தன்னிடம் உரிமையாக இருந்தது பிடித்திருந்தது வாரத்தில் ஒரு நாள் சந்தைக்கு புல்லட்டில் செல்லும் போது அவள் தன் இடையை கட்டி கொண்டு அமர்வது நடந்து செல்லும் போது கூட அவன் கையை கெட்டியாக பிடித்து கொண்டு விடாமல் இருப்பது என அனைத்தும் பிடித்திருந்தது

யாருமற்றவனுக்கு அனைத்தும் அவள் ஒருத்தியாகி போனாள். 

 

இப்படியே அவர்கள் வெளியில் சொல்லாமல் ஒருவரை ஒருவர் நேசிக்க ஆரம்பித்து இருந்தனர். 

 

அன்றும் அப்படி தான் ஆராதனா சாப்பிட்டு கொண்டு இருக்கும் போது அவள் இதழில் சாப்பாடு ஒட்டி இருக்க அதை உரிமையுடன் துடைத்துவிட்டான் தர்மன் சாப்பாடு கீழே விழுந்த பிறகும் அழுத்தி துடைத்து கொண்டே தான் இருந்தான் “என்னங்க போயிடுச்சா” என்று கேட்க்கும் போது அவள் இதழில் இருந்து தன் கையை விலக்கி கொண்டான். 

 

நாளுக்கு நாள் தர்மனுக்கு தன் மனைவியின் மீது இருந்த பித்து அதிகமானதே தவிர சற்றும் குறையவே இல்லை. 

 

காலை ஆராதனா எழுந்து வாசல் தெளித்து கோலம் போட்டு கொண்டு இருந்தாள் அப்போது அங்கிருந்த ஊர்மக்கள் பதறி அடித்து கொண்டு எங்கேயோ ஓடிக்கொண்டிருந்தனர். 

 

வீராயிடம் என்னவென்று விசாரிக்க 

“கந்துவட்டிக்கு பணம் கொடுப்பாரே நாகலிங்கம் அவரு வண்டியில போய்ருக்காரு ஏதோ ஒரு லாரிக்காரன் வந்து இடிச்சி தள்ளிட்டு போய்ட்டான் அவரை ஆஸ்பத்திரிக்கு கூட்டிட்டு போறாக” என்று கூறிவிட்டு அவளும் அங்கிருந்து ஓடினாள். 

 

ஆராதனா இப்போது தான் நிம்மதி பெருமூச்சு ஒன்றை வெளியிட்டு உள்ளே சென்றாள். 

 

அடுத்த சில நாட்கள் கழித்து…

ஆராதனா வீராயியுடன் சமைத்து கொண்டு இருந்தாள் அவளும் இப்போது ஒரளவுக்கு தர்மனுக்காக அசைவம் சமைக்க ஆரம்பித்து இருந்தாள். 

 

அப்போது அந்த வீட்டின் கதவை யாரோ வேகமாக தட்டும் சத்தம் கேட்க 

தர்மன் சென்று கதவை திறந்தான். 

 

அங்கே சிவப்பு நிற டி ஷர்ட் மற்றும் நீல நிற ஜீன்ஸ் அணிந்து ஒரு நவநாகரீக வாலிபன் ஒருவன் பேக்கை மாட்டி கொண்டு நின்றிருந்தான். 

 

அவனை பார்த்த தர்மன் “யார் நீங்க” என்று கேட்டான் “அங்கிள் ஆரு பேபி இல்லை” என்று கேட்டு கொண்டு 

“ஆரு பேப்ஸ்” என்று அழைத்து கொண்டே ஷூ காலுடன் உள்ளே வந்தான். 

 

“தம்பி ஷூவை வெளியே கழட்டிட்டு உள்ளே வாங்க” என்று தர்மன் கூறி கொண்டே இருக்கும் போதே ஆராதனா சத்தம் கேட்டு வெளியே வந்தாள். 

 

“ஏய் அஜீ பேபி நீ எப்போ வந்த” என்று ஓடிச்சென்று அர்ஜூனை கட்டிக் கொண்டாள். 

 

அர்ஜூனும் அவளை அணைத்து கொண்டவன் “ஜஸ்ட் இப்போ தான் வந்தேன் பேப்ஸ்” என்றான். 

 

இவர்கள் இருவரும் அணைத்து கொண்டு நிற்பதை பார்த்த தர்மன் முழி பிதுங்கி நின்றிருந்தான். 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

5 thoughts on “காதல் தேவதா 17,18”

  1. Купить машину в Новосибирске: выгодные цены и программы trade-in
    авто бу в новосибирске купить [url=https://auto-nsksity.ru]https://auto-nsksity.ru[/url] .

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Scroll to Top