ATM Tamil Romantic Novels

யாரார்க்கு யாரடி உறவு 2

அத்தியாயம் 2

“ஹலோ மிஸ்டர்.. ஆதித்யா கரிகாலன்.. வெல்கம் டூ அவர் ஸ்கூல்..” என்றவாறு சந்தியா அவன் மீது பன்னீர் தூவ, அத்துளிகள் அருகில் நின்றிருந்த பாரதியின் மீது பட்டதும் நிகழ் உலகத்திற்கு வந்திருந்தாள். கண்களை சிமிட்டி, தனது உணர்வுகளை உள்ளடக்கியவள்,

 

“வெல்கம்.. ச.. சசச.. சார்..” என்று கூற,

 

“இந்தாங்க சந்தானம் எடுத்துக்கோங்க சார்..” என்ற மாணவிக்கு பதிலாக திரும்பி தன் அருகில் நிற்கும் பாரதியை பார்த்தான் ஆதித்யா கரிகாலன். அதனை புரிந்து கொண்ட பாரதியோ, அம்மாணவியின் கையில் இருந்த சந்தனக்கின்னத்தை தன் கையில் ஏந்தியபடி ஆதித்யாவின் முன்னே நீட்ட, அவளது உயரத்திற்கு குனிந்தவன், தனது நெற்றி முடியை ஒதுக்கி அவளின் முன்னே காட்ட, 

 

“க்கும்.. சீக்கிரம்.. எல்லோரும் உன்னையே பார்த்துட்டுருக்காங்க..” என்ற சந்தியாவின் கிசுகிசுப்பான குரலில், தனது மூச்சை இழுத்து மெல்ல வெளியிட்டவள், வலுக்கட்டாயமாக தனது முகத்தில் சிரிப்பை வரவழைத்தாள். 

 

“வெல்கம் சார்..” என்றவாறே அவனது நெற்றியில் சந்தனம் வைத்தவள், தட்டில் இருந்த பூவை அவனது தலையில் போட்டு,

 

“ப்ளீஸ்.. கம்..” என்றவள், அவனை உள்ளே செல்லுமாறு தனது இரு கைகளையும் உள் புறமாக நீட்ட, தன் கோர்ட் பாக்கெட்டில் இருந்து கருப்பு நிற கண்ணாடியை எடுத்து அணிந்து கொண்டவன், 

 

“அண்ட் யூ?” என்று கேட்க, தன் பற்களை கடித்தவாறே,

 

“ஷ்யர் சார்..” என்றவாறு அவனுடன்‌ இணைந்து பள்ளிக்குள் சென்றாள். தனதருகே நடந்து வந்தவளின் காதருகே குனிந்தவன்,

 

“எப்படியிருக்க?” என்று கேட்க,

 

“நான் ரொம்ப நல்லாருக்கேன் சார்..” என்றவளின் கால் சற்று தடுமாற, அவள் கீழே விழாமல் இருக்க அவளது கையைப் பிடித்து கொண்டவனை தீயாய் பார்த்தவள், அவனது கையை உதற, தனது தோள்களை குலுக்கிக் கொண்டு அவளை விட்டு வேகமாக முன்னே நடக்க, அவனைத் தொடர்ந்து அவனது பாதுகாவலர்களும் பின்னே செல்ல, அவனைச் சுற்றி பாதுகாப்பு வளையம் தானாக உருவானது. அவளால் அப்பாதுகாப்பு வளையத்தைத் தாண்டி, உள்ளே செல்வது அசாத்தியம் என்பதை புரிந்து கொண்டவளுக்கு, இதயத்தில் ஏதோ ஒரு மூலையில் சுருக்கென குத்தியது. 

 

“ஹேய்.. வா.. வா.. நாம தான் ஹாஸ்பிட்டாலிட்டி டீம்.. சீக்கிரம் டின்னரும் நாம தான் அரேஞ்ச் பண்ணணும்.. வா.. வா..” என்றவாறே சந்தியா ஒருபுறம் இழுக்க, அவள் இழுத்து இழுப்பிற்கு சென்றாள் பாரதி. முழு நிகழ்ச்சியும் முடியும் வரை பொம்மை போல் தன் வேலைகளை செய்யத் தொடங்கியவளின் அழைப்பேசி சிணுங்க, அதனை எடுத்து காதில் வைத்தவளின் கை கால்கள் நடுங்கத் தொடங்கியது. அவளது முகப்பாவனைப் பார்த்த சந்தியா,

 

“என்னாச்சு? ஏன் ஒரு மாதிரி இருக்க?” என்று கேட்க, அதற்கு ஒன்றுமில்லை என்று தலையாட்டியவள், பள்ளி முதல்வரைச் காண அவரது அறைக்குச் சென்றாள். 

 

“எக்ஸ்கியூஸ் மீ மேம்.. மே ஐ கமின்..” என்று உள்ளே நுழைந்தவளின் கண் முன்னே கால் மேல் கால் போட்டவாறு அமர்ந்திருந்த ஆதித்யா கரிகாலன் படவே, சொல்ல வந்த விஷயத்தை சொல்ல முடியாது, வாயிற்குள் முழுங்கினாள் பாரதி. 

 

“வாட் மிஸ் பாரதி?! எனி ப்ராப்ளம்? என்று கேட்டவருக்கு இல்லையென தலையாட்டியவள், 

 

“மேம்.. டின்னர் இஸ் ரெடி..” என்று கூற, ஆதித்யா கரிகாலனைப் பார்த்தவர்,

 

“சார்.. ப்ளீஸ்.. கம் வித் அஸ்.. எங்கக்கூட டின்னர் சாப்பிடிங்கன்னா.. எங்களுக்கு இன்னும் சந்தோஷமா இருக்கும்..” என்று கூற,

 

“சாரி மேம்.. எனக்கும் உங்க எல்லோர்கூடவும் டின்னர் சாப்பிடணும்னு தான் ஆசையாயிருக்கு.. பட், ஐம் சோ சாரி.. எனக்கு அட்ஜெண்ட்டா.. கொஞ்சம் போகணும்..” என்றவாறு எழுந்து கொள்ள முயற்சி செய்ய, அதே நேரத்தில் தட்டில் ஜுஸ் க்ளாஸுடன் நுழைந்தாள் சந்தியா. 

 

“சார்.. ப்ளீஸ்.. இந்த ஜூஸையாவது குடிங்க சார்..” என்றவாறே தட்டினை அவன் முன்னே நீட்ட, அதன் வாசனையை உணர்ந்த பாரதி,

 

“இது பைனாப்பிள் ஜூஸா?” என்று மெல்ல கேட்க,

 

“ம்ம்.. ஆமா..” என்று கிசுகிசுத்தாள் சந்தியா. 

 

“நாம் ஆரெஞ்ச் ஜூஸ் தானே ரெடி பண்ணோம்?!” 

 

“அது.. அது வந்து.. கீழ கொட்டிடுச்சு..” என்று மெல்லிய குரலில் கூறிய‌ சந்தியாவை முறைத்துப் பார்த்தவள், 

 

“அந்தத் தட்டை என்கிட்ட கொடு..” என்ற பாரதி,

 

“சாரி மேம்.. ரெண்டே நிமிஷம்.. நான் வேற ஜூஸ் எடுத்துட்டு வர்றேன்..” என்றவாறே திரும்ப,

 

“பரவாயில்ல.. அந்த ஜூஸையே கொடுங்க.. நான் சீக்கிரம் குடிச்சுட்டு கிளம்புறேன்..” என்றவன் ஜூஸை எடுப்பதற்காக தட்டை நோக்கி கை நீட்ட, 

 

“இல்ல.. வேணாம்.. இது பைனாப்பிள் ஜூஸ்.. உங்களுக்கு ஒத்துக்காது..” என்று அவனிடம் ஜூஸை கொடுக்காது, அதனை மறைத்தவளை புரியாது திகைத்துப் பார்த்தனர் அங்கிருந்த அனைவரும். 

 

“இல்ல.. இவருக்கு பைனாப்பிள் ஜூஸ்.. ஒத்துக்காதுன்னு கூகுள்.. ஆமா.. கூகுள்ல பார்த்து தெரிஞ்சுக்கிட்டேன்..”

 

“கூகுளைப் பார்த்து நீ தெரிஞ்சுக்கிட்ட? ரைட்?” என்றவனுக்கு ஆமென் தலையாட்டினாள் பாரதி. 

 

“பாரு.. நேத்து நைட்டு வரைக்கும், இவர் நம்ம ப்ரொபோஸல் எதையும் அக்செப்ட் பண்ணவேயில்ல.. இன்விடேஷன்ல கூட நாம் அவரோட நேம் போடவேயில்ல.. அப்படியிருக்கும் போது, நீ எப்படி இவரைப் பத்தி தெரிஞ்சருக்க முடியும்?” என்று சந்தியா கேட்க திருதிருத்தாள் பாரதி. 

 

“அது.. அது வந்து..” என்றவளின் கைப்பேசி சிணுங்க, அதனைப் பார்த்தவளின் முகம் பரப்பரப்பாக, 

 

“மேம்.. இப்போ நான் உடனே கிளம்பணும்.. ப்ளீஸ்.. நான் கிளம்பட்டுமா?” என்றவளின் முகத்தைப் பார்த்தவன்,

 

“ஓகே மேம்.. அப்புறம் பார்க்கலாம்.. நான் கொஞ்சம் அட்ஜெண்ட்டா கிளம்புறேன்..” என்றவன் அங்கிருந்து எழுந்து கொண்டவன், சிறிது தூரம் சென்றதும், மெல்ல திரும்பி,

 

“மிஸ். பாரதி..” என்றவன், 

 

“நான் மிஸ்னு சொல்லலாம்ல?” என்று தன் புருவத்தை உயர்த்தி கேட்க,

 

“இல்ல.. இவ மிஸஸ் பாரதி.. இவளுக்கு கல்யாணமாகி மூணு வருஷமாகிடுச்சு..” என்ற சந்தியாவிற்கு, “ஓஹோ..” என்று பதிலளித்தவன்,

 

“மிஸஸ் பாரதி.. நான் போற வழில உங்களை ட்ராப் பண்றேன்.. என்கூட வாங்க..” என்று விட்டு முன்னே செல்ல,

 

“நோ.. தாங்க் யூ சார்..” என்றவளின் தோளில் கை வைத்த சந்தியா,

 

“இங்குப் பாரு.. பாரு.. உனக்கு என்னப் பிரச்சினைன்னு எனக்கு தெரியாது.. ஆனா, ஏதோ சீரியஸ்ஸான விஷயம்னு மட்டும் புரியுது.. அவர் கூட போனா சீக்கிரம் போய் இறங்கிடுவ.. இப்போவே மணி பத்து.. இதுக்கு மேல நீ பஸ் ஸ்டாப் போயி, பஸ் பிடிச்சு போகுறதுக்குள்ள, ரொம்ப லேட்டாகிடும்.. நீ சார் கூடவே கிளம்பு.. உன்னோட ஹேண்ட்பாக்கை நான் எடுத்துட்டு வர்றேன்..” என்றவாறே பாரதியை ஆதித்யா கரிகாலனுடன் தள்ளிக் கொண்டு செல்ல, மறுக்க முடியாது, நடந்தாள் பாரதி. ஏதோ ஒரு மாணவியின் மூலம், பாரதியின் கைப்பையை எடுத்து வரச் செய்த சந்தியா, அதனை பாரதியின் கையில் கொடுத்து,

 

“வீட்டுக்கு போனதும் போன் பண்ணு..” என்றவாறே, அவளை ஆதித்யா கரிகாலனின் வாகனத்தில் ஏற்றி விட்டாள். சிறிது தூரம் சென்றதும் ஆதித்யா கரிகாலனின் கார் சட்டென நிற்க, என்னவென்று பார்த்தாள் பாரதி. 

 

“தீபன்.. நீ நம்ம பாடிகார்ட்ஸோட வண்டில வா.. கார் கீயை என்கிட்ட கொடு..” என்று கார் சாவியை அவனிடம் இருந்து கேட்டு வாங்கிய ஆதித்யா, பின் சீட்டின் புறமாய் திரும்பி,

 

“நான் ஒன்னும் உனக்கு டிரைவரில்ல.. கொஞ்சம் மேடம்.. முன்னாடி வந்து உட்காருறீங்களா?” என்று கேட்க, காரை விட்டு கீழே இறங்கிய பாரதி, வேக வேகமாக பஸ் ஸ்டாப்பை நோக்கி நடக்கத் தொடங்க, இரண்டே எட்டில் அவளை நெருங்கியவன், துண்டை மடித்து தோளில் போடுவது போல், அவளை தூக்கி தன் தோளில் போட்டுக் கொண்டு, அந்த ஆளில்லாத ரோட்டில் நடந்து வந்தவன், காருக்குள் திணித்து கதவை அடைத்தவன், மறுபுறம் வந்து ஏறினான் ஆதித்யா கரிகாலன். 

 

“விடுங்க.. என்னை விடுங்கன்னு சொல்றேன்ல..”

 

“வாயை மூடப் போறியா? இல்ல.. மூட வைக்கவா?” 

 

“என்னைய விடுங்க.. இப்ப அர்ஜெண்டா வீட்டுக்கு போகணும்.. ப்ளீஸ்..”

 

“இப்ப உன்னைய விட்டா.. திரும்பவும் உன்னைய தேட விட்டுடுவ.. மூணு வருஷம்.. மூணு வருஷம் டி.. நான் என்ன பண்ணேன்னு எனக்கு இந்த தண்டனை? நான் உனக்கு என்ன குறை வைச்சேன்? எதுக்காக டி இந்த கண்ணாமூச்சி ஆட்டம்?”

 

“நீங்க பேசுற எதையும் கேட்குற நிலைமைல நான் இப்போ இல்ல.. ப்ளீஸ்.. என்னைய விடுங்க..”

 

“நான் பேசுறது உனக்கு புரியலையா? புரியாதுடி.. உனக்கு சுத்தமான புரியாது டி.. மூணு வருஷம்.. ஆயிரத்து தொண்ணூற்றி ஐந்து நாட்கள்.. பைத்தியம் மாதிரி திரிச்சேன்டி..” என்றவன் காரினை கோபமாக கிளப்ப,

 

“ப்ளீஸ்.. ப்ளீஸ்.. இன்னைக்கு ஒரு நாள் மட்டும் என்னைய விட்டுடுங்க.. ப்ளீஸ்.. ஏன்னா.. ஏன்னா?” என்று திணறியவளின் புறம் திரும்பியவன்,

 

“சொல்லு.. ஏன்? ஏன்? ஏன் இப்படி பண்ண? சொல்லு..” என்று கத்த, 

 

“நான்.. நான்.. இப்போ எதுவும் சொல்ல முடியாது.. தயவு செஞ்சு நான் இப்போ வீட்டுக்கு போகணும்..” என்று கெஞ்சியவளை கூர்ந்து பார்த்தவன்,

 

“காரணம்?” என்று கேட்க,

 

“காரணமா? காரணம் வேணும் இல்ல? மூணு வருஷத்துக்கு முன்னாடி நீங்க ஒன்னுமே பண்ணல இல்ல? நீங்க ஒன்னுமே பண்ணாம வீட்டை விட்டு ஓடுறதுக்கு நான் லூசு பாருங்க.. ப்ச்.. இப்போ பழசெல்லாம் எதுக்கு? என்னைய இறக்கி விடுங்க..” என்றவனின் கார் ஒரு வீட்டின் வாசலில் போய் நிற்க, எட்டிப் பார்த்தவள் அதிர்ந்து போனாள். 

 

“இது.. இது..”

 

“ உன்னோட வீடு தான்..”

 

“அதெப்படி உங்களுக்கு தெரியும்?”

 

“இப்போ அது ரொம்ப முக்கியமா?” என்றவன் காரினை அவளது வீட்டு வாசலில் நிறுத்திய மறு நொடி, காரில் இருந்து குதித்து இறங்க முயன்றவளின் கையைப் பிடித்து தடுத்தவன்,

 

“மயூரி இங்க இல்ல..” என்று கூற, ஒரு நிமிடம் அவளது மூச்சு நின்று போனது. 

 

“நீ.. நீ.. நீங்க என்ன சொல்றீங்க?”

 

“மயூரி இப்போ.. இங்க.. இல்ல..”

 

“அவளை.. அவளை.. என்னப் பண்ணீங்க? சொல்லுங்க.. அவ எங்க? என் பொண்ணை நீங்க என்னப் பண்ணீங்க?”

 

“அவ இப்போ ஹாஸ்பிட்டல்ல இருக்கா.. டோண்ட் ஒர்ரி.. ட்ரீட்மெண்ட் போயிட்டுருக்கு..”

 

“ஹாஸ்பிட்டல்யா? அவ மயங்கி விழுந்ததாத் தானே சொன்னாங்க..”

 

“ம்ம்.. ஆமா..”

 

“என் பொண்ணுக்கு என்னாச்சு? சொல்லுங்க.. என் பொண்ணுக்கு என்னாச்சு?”

 

“அவ உன் பொண்ணா? அப்போ எனக்கு? சொல்லு.. அப்போ நான் யாரு? அரை நாள் நான் நம்ம பொண்ணை மறைச்சு வைச்சதையே உன்னால தாங்க முடியல.. மூணு வருஷம் முழுசா மூணு வருஷம்.. என் பொண்ணு கூட எனக்கு இருந்த மூணு வருஷத்தை திருடிருக்க.. உன்னை என்ன பண்ணலாம்?”

 

“மயூரி உங்கப் பொண்ணு தான்னு என்ன நிச்சயம்? ம்ம்.. சொல்லுங்க.. அவ உங்கப் பொண்ணுன்னு எனீன நிச்சயம்?”

 

“நீ பேசுறப் பேச்சுக்கு அப்படியே ஒன்னு வைச்சா என்னன்னு தோணுது.. ஏன்டி.. உன்னோட மூணு வருஷ ஜாதகத்தையே புரட்டிப் போட்டிருக்கேன்.. என்னைப் பத்தி என்ன நினைச்சுட்டுருக்க? மூணு வருஷத்துக்கு முன்னாடி இருந்த அதே ஆதித்யா கரிகாலன், இப்பவும் இருப்பேன்னு நினைச்சியா? அப்போ என்னைய ஈசியா ஏமாத்துன மாதிரி இப்பவும் ஏமாத்தலாம்னு பார்க்குறியா?”

 

“யார்.. யாரை ஏமாத்துனா? மூணு வருஷத்துக்கு முன்னாடி ஏமாந்தது நானா? நீங்களா? ப்ச்.. இப்ப இதைப் பத்தி பேசுறதுக்கெல்லாம் நேரமில்லை.. என் பொண்ணை நான் பார்க்கணும்.. ப்ளீஸ் என்னைய கூட்டிட்டு போங்க.. ப்ளீஸ்..” என்று அழுதவளை பார்த்தவனுக்கு என்ன தோன்றியதோ, 

 

“சரி.. வா.. போகலாம்..” என்றவனை காரில் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றவனுக்கு மாபெரும் அதிர்ச்சி ஒன்று காத்திருந்தது. மருத்துவர் கூறியதைக் கேட்டதும் உறைந்து போ

ய் அமர்ந்திருந்தாள் பாரதி. 

அப்படி மயூரிக்கு என்னவானது? மயூரியை மீட்டெடுப்பார்களா? பிரியும் படி அவர்களது வாழ்க்கையில் என்ன நேர்ந்தது?

 

1 thought on “யாரார்க்கு யாரடி உறவு 2”

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Scroll to Top