அத்தியாயம் 3
“டாக்டர்.. என் பொண்ணு..”
“யாரு?”
“மயூரி.. அவ தான் என் பொண்ணு..”
“ஓ.. மயூரி.. அந்த ரெண்டு வயசு பொண்ணு?”
“ஆமா.. அவளுக்கு என்னாச்சு டாக்டர்?”
“ஒன்னுமில்ல பதட்டப்படாதீங்க.. இங்கப்பாருங்க மிஸ்ஸஸ். ஆதித்யா.. இப்பத்தான் நீங்க ரொம்ப தைரியமா இருக்கணும்..”
“டாக்டர்? எனக்கு ஒன்னுமே புரியல.. எதுவா இருந்தாலும் தெளிவா சொல்லுங்க.. ப்ளீஸ்..”
“ஹலோ டாக்டர்..”
“ஹலோ.. மிஸ்டர். ஆதித்யா கரிகாலன்.. ப்ளீஸ்.. சிட்டவுன்..”
“தாங்க் யூ டாக்டர்.. அப்புறம் எங்க பொண்ணு.. இப்போ எப்படி இருக்கா? எனி இம்ப்ரூவ்மெண்ட்?”
“ம்ம்.. பெட்டர் நவ்.. ஆனா, இதெல்லாம் கொஞ்ச நாளைக்கு தான்..”
“டாக்டர்.. ப்ளீஸ்.. இங்க நடக்குது கொஞ்சம் சொல்றீங்களா? என் பொண்ணுக்கு என்னாச்சு?”
“மயூரிக்கு வந்திருப்பது கேன்சர்.. இயர்லி ஸ்டேஜ்..”
“வாட்? என் பொண்ணுக்கு கேன்சரா? அவ.. அவ.. சின்ன பொண்ணு.. வெறும் ரெண்டு கால் வயசு தான் ஆகுது..”
“இங்கப்பாருங்க மிஸ்ஸஸ் ஆதித்யா.. இப்போ கேன்சருங்குறது பிறந்த குழந்தைக்கு கூட வருது.. பட், இயர்லி ஸ்டேஜ்ல கண்டுபிடிச்சு.. ட்ரீட்மெண்ட் எடுத்துக்கிட்டோம்னா.. க்யூராக வாய்ப்பிருக்கு..”
“இதை க்யூர் பண்ண நான் என்ன பண்ணனும்? சொல்லுங்க டாக்டர்..”
“நான் இல்ல.. நாங்க..”
“புரியல டாக்டர்..”
“இது ஒரு ஜெனிட்டிக் செல் வகையான நோய்.. சோ, இதை சி.பி.டி. முறையில க்யூர் பண்ண போறோம்..”
“சோ, கோர்ட் ப்ளட் ட்ராஸ்ப்ளான்ட்?”
“எக்ஸாக்ட்லி.. மிஸ்டர். ஆதித்யா..”
“டாக்டர்.. அதென்ன சி.பி.டி. முறை?”
“அது.. தொப்புள் கொடியின் இரத்தத்தில் இருந்து ஸ்டெம் செல்களை எடுத்து புதிய செல்களை உருவாக்குறது.. இதுல ஹெச்.எல்.ஏ மேட்சாகுறது ரொம்ப முக்கியம்..”
“தொப்புள் கொடில இருந்தா? ஹெச்.எல்.ஏ மேட்சாகணுமா? அதெப்படி? யாராவது டொனேட் பண்ணுவாங்களா?”
“மிஸஸ் ஆதித்யா.. இந்த கேன்சரை குழந்தையோட டி என் ஏவோட மேட்ச் ஆகுறவங்களால தான் க்யூர் பண்ண முடியும்.. அதாவது குழந்தையோட சிபிலிங்க்ஸோட செல்களின் ஜெனிடிக் மரபுகள் (HLA) கூட மேட்சாகணும்..”
“அப்படினா நாங்க..”
“அஃப்கோர்ஸ்.. இன்னும் பத்து மாசத்துல.. மயூரிக்கு சிபிலிங்க் வேணும்.. அதுவும் உங்க ரெண்டு பேரோட டிஎன்ஏவோட..”
“டாக்டர்.. அதுவரைக்கும் மயூரியோட ஹெல்த்?”
“டோண்ட் ஒர்ரி மிஸ்டர். ஆதித்யா.. நம்ம மெடிக்கல் ஃபீல்டு எவ்வளவோ முன்னேறியிருக்கு.. அதுவும் இயர்லி ஸ்டேஜ்லேயே கண்டுபிடிச்சுட்டதுனால க்யூர் பண்ணிடலாம்.. நீங்க மட்டும் உங்க நம்பிக்கையை இழந்துடாதீங்க..”
“தாங்க் யூ.. தாங்க் யூ டாக்டர்..”
“பட்.. மயூரியோட சிபிலிங் கொஞ்சம் சீக்கிரம் வேணும்..”
“ஷ்யர் டாக்டர்.. எங்கப் பொண்ணுக்காக நாங்க என்ன வேணா செய்வோம்..” என்ற ஆதித்யா கரிகாலன், சிலை போல் அமர்ந்திருந்த பாரதியை தோளோடு அணைத்து தூக்கியவாறு வெளியே அழைத்து வந்தான்.
“என் பொண்ணு.. அவளைப் பார்க்கணும்..”
“அவ என் பொண்ணும் கூட.. நம்ம பொண்ணு.. இன்னொரு தடவை என் பொண்ணுன்னு சொன்ன.. அவ உன் கண்ணுல கூட படாத தீவுல கொண்டு போய் வைச்சுடுவேன்..”
“ஏன் எனக்கு மட்டும் இப்படி எல்லாம் நடக்குது? அவ இல்லாம.. நான்.. எப்படி இருப்பேன்?” என்று கண்ணீர் வடித்தவளின் முகத்தை தன் கைகளில் ஏந்தியவன்,
“இங்கப்பாரு.. நம்மைப் பொண்ணுக்கு எதுவும் ஆகாது.. ஆகவும் விடமாட்டேன்.. என்னைய நம்பு.. ப்ளீஸ் அழாத..” என்றவன் அவளை தன் மார்போடு அணைத்துக் கொள்ள, அவனது மார்பில் சாய்ந்து அழுகத் தொடங்கினாள்.
“இங்கப்பாரு.. நீ இப்படியே அழுதுட்டு இருந்தேனா.. நீயே நம்ம பொண்ணை பயமுறுத்திடுவ.. அவ குழந்தை இந்த நோய், இதெல்லாம் அவளுக்கு எதுவுமே தெரியாது.. நாம தான் அவளுக்கு மாரல் சப்போர்ட்டா இருக்கணும்.. ரிலாக்ஸ்.. உன் மூச்சை இழுத்து வெளியே விடு.. ரிலாக்ஸ்.. போ.. போய் முகத்தை கழுவிட்டு வா..” என்றவன் கூற கழிவறைக்குள் தன் முகத்தை கண்ணாடியில் பார்த்தவளுக்கு தான் கடந்து பாதைகள் தெளிவான படமாய் தன் முன்னே தோன்ற, தன் முகத்தில் தண்ணீர் அடித்து கழுவியவள், வலுக்கட்டாயமாக புன்னகையை தன் முகத்தில் வரவழைத்தவள், அப்படியே வெளியே வந்தாள்.
“அம்மா..” என்று சிரித்தவாறு ஆதித்யா கரிகாலனின் கையில் இருக்கும் சின்னஞ்சிறு ஓவியத்தை பார்க்கும் போது, கடவுளின் மீது கோபம் கோபமாக வந்தது. ‘எத்தனை மனிதர்கள் கொலை கொள்ளை என பல தவறுகள் செய்து கொண்டிருக்கும் போது, இந்த மச்ச மண்ணோடு உயிர் தான் அவருக்கு வேணுமா? கடவுளே இதெல்லாம் நியாயமே இல்ல..’ என்று நினைத்தவளுக்கு கண்ணீர் பொங்கி வர, அதனை தனக்குள் அடக்கியாறு, தன் மகளை நோக்கிச் சென்றாள்.
“பாப்பு குட்டி..” என்றவாறே பாரதி கை நீட்ட, “அம்மாஆஆஆ..” என்று அவளிடம் தாவினாள் மயூரி.
“ம்ம்மா.. பாப்பாக்கு மயக்கமா வந்துச்சு.. அப்புறம் இங்க.. இங்கெல்லாம் ஊசிக்குத்துனாங்க.. பாப்பாக்கு வலிச்சுதும்மா..” என்ற சின்னச்சிட்டை இறுக்கி அணைத்தவளை தன்னுடன் மெல்ல அணைத்துக் கொண்டவன், அவளது காதில்,
“ரிலாக்ஸ்.. ரிலாக்ஸ்..” என்றவாறே தன் மகளின் கன்னத்தில் முத்தமிட்டவன்,
“நம்ம பொண்ணுக்கு ஒன்னும் ஆகாது.. ஆகவும் விடமாட்டேன்..” என்று தனக்குள் முணுமுணுத்துக் கொண்டான்.
*********************************************
“இப்ப நாம எங்கப் போறோம்?”
“நம்ம வீட்டுக்கு தான்..”
“நம்ம வீட்டுக்கா? உங்க வீட்டுக்கா?”
“என்னோட வீடு தான்.. உன்னோட வீடும் கூட.. அது நம்ம வீடு..” என்றவன் பல்லைக் கடித்துக் கொண்டு கூறியவுடன், அவளது நினைவுகளில் சில நிகழ்வுகள் வந்து போக, அவளது முகம் வேதனையில் சுருங்கியது.
“நான்.. நான்.. உங்க வீட்டுக்கு வரல..”
“அது என்னோட வீடில்ல.. நம்மளோட வீடு.. நீயும் நானும் பிறந்து வளர்ந்த வீடு.. அதுவுமில்லாம நமக்கு இப்போ மயூரி தான் முக்கியம்.. நமக்கு நேரம் ரொம்ப குறைவா இருக்கு.. புரியுதா? சென்னைல தான் பெஸ்ட் ட்ரீட்மெண்ட் கிடைக்கும்.. நாம ரெண்டு பேரும் இப்ப மயூரிக்கு தம்பியோ தங்கச்சியோ கொடுத்தாகணும்.. அதுக்கு நீ என் கூட தான் இருக்கணும்.. புரியுதா?”
“இல்ல.. இதுக்கு நான் ஒத்துக்கமாட்டேன்.. நாம.. நாம ஏன் வாடகைத்தாய் ஏற்பாடு பண்ணக் கூடாது?”
“நீ நிஜமாகவே லூசா? இல்ல லூசு மாதிரி நடிக்கிறியா?நம்ம ரெண்டு பேரோட டிஎன்ஏல தான் வேணும்னு சொன்னாங்களா? இல்லையா? இங்கப்பாரு.. நீ.. உனக்கு பிடிச்சாலும் பிடிக்கலைனாலும் நாம ஒன்னா சேர்ந்து வாழ்ந்து தான் ஆகணும்.. புரிஞ்சுதா? சீக்கிரம் கிளம்பு.. இப்ப கிளம்பினால் தான் விடியறதுக்குள்ள வீட்டுக்கு போக முடியும்.. நாளைக்கு காலைல அங்கே இருக்குற ஹாஸ்பிட்டல்ல அப்பார்ட்மெண்ட் இருக்கு..”
“அப்போ என்னோட திங்க்ஸ் எல்லாம் இங்க இருக்கே?”
“எது? அந்த ரெண்டு ச்சேரும்.. ஒரு பாயும் தானே?”
“உங்களுக்கு வேணா அது ரொம்ப ச்சீப்பா இருக்கலாம்.. ஆனா, எனக்கு அதெல்லாம் விலைமதிப்பில்லாதது..”
“ஓகே.. ஓகே.. க்கூல்.. க்கூல்.. ரிலாக்ஸ்.. நான் அந்த திங்க்ஸ் எல்லாத்தையும் பக்கத்துல இருக்குறவங்களுக்கு கொடுக்க சொல்லிட்டேன்.. அந்த வீட்டை பூட்டி சாவியை ஓனர்கிட்ட கொடுக்க சொல்லிட்டேன்.. போதுமா?”
“அப்புறம் இன்னொரு விஷயம்..”
“சொல்லு..”
“மயூரி குணமானதும், நானும்.. அவளும்.. தனியாவே..”
“ஸ்டாப்பிட்.. இனப்.. கொஞ்சம் நிறுத்துறியா?” என்று கத்தியவனின் குரலில், பாரதியின் தோளில் தூங்கிக் கொண்டிருந்த மயூரி மெல்ல அசைய, தன் கண்களை இறுக்க மூடிக் திறந்தவன், தனது கோபத்தை கட்டுக்குள் கொண்டு வந்தான்.
“இங்கப்பாரு.. நான் உன்கிட்ட ரொம்ப பொறுமையா பேசிட்டுருக்கேன்.. என்னைய கோபப்படுத்தாத.. உன்னால என் குழந்தையை நல்லா பார்த்துக்க முடியாதுன்னு கோர்ட்ல நிரூபிச்சு, மயூரியோட கஸ்டடியை என்னால் எடுத்துக்க முடியும் .. செஞ்சு காட்டவா? வந்துட்டா.. தனியாவே வாழ்ந்துக்குவாளாம்.. அப்புறம் எதுக்குடி மிரட்டி என்னைய கல்யாணம் பண்ணிக்கிட்ட? தலைப்பாடா அடிச்சுக்கிட்டேனே.. உனக்கும் எனக்கும் செட்டாகாதுன்னு.. கொஞ்சமாவது காது கொடுத்து கேட்டியா? இதோ பார்.. நாங்க தான் உன்னோட குடும்பம்.. நான் வேணாம்.. என்னோட பொண்ணு மட்டும் உனக்கு வேணுமா? ஒன்னு விட்டேன்.. அப்படியே பல்லைக் தட்டி கைல கொடுத்துடுவேன்.. வாயை மூடிட்டு கார்ல ஏறுடி.. ஏறுங்குறேன்.. சும்மா பார்த்துட்டே நிற்குற? இன்னும் பத்தே மாசத்துல எனக்கு குழந்தையை பெத்துக் கொடுத்துட்டு, நீ எங்க வேணாப் போ.. என் குழந்தைகளை என்கிட்ட இருந்து பிரிக்கணும்னு கனவுல கூட நினைச்சு பார்க்காத.. புரியுதா?” என்றவன் அவளை காருக்குள் தள்ளி காரை எடுக்க, நடக்கும் விதியை தடுத்து நிறுத்த முடியாது, அதனோடு பயணிக்கலானாள் பாரதி.
காரில் வந்த ஏழு மணி நேரமும் நடந்தனவற்றை அசை போட்டுக் கொண்டிருந்தவளின் கண்கள் மெல்ல இமையால் மூட, காரினை ஒரு ஓரமாக நிறுத்தினான் ஆதித்யா கரிகாலன். தனது பின் சீட்டில் இருக்கும் கோர்ட்டையும் டவலையும் எடுத்தவன், இருவருக்கும் போர்த்தி விட்டான். தன் மடியின் மீது தலை வைத்து தூங்கிக் கொண்டிருந்த தன் மகளின் நெற்றியில் முத்தமிட்டவன்,
“இனிமே எல்லாம் சரியாகிடும்..” என்று தனக்குள் முணுமுணுத்தவாறே, சென்னையை நோக்கி பயணமானான். நாம் நினைப்ப
தனைத்தும் நடந்து விட்டால், அங்கு கடவுளுக்கு என்ன வேலை? ஆதித்யா கரிகாலன் நினைப்பது அனைத்தையும் கடவுள் நடத்திட வைப்பாரா?
👌👌👌👌👌👌👌👌👌👌