அத்தியாயம் 6
காரினை ஃபைவ் ஸ்டார் ஹோட்டலில் நிறுத்தியவன், அவளை தரதரவென இழுத்துக் கொண்டு உள்ளே சென்றான்.
“எதுக்கு இங்க கூட்டிட்டு வந்துருக்கீங்க? விடுங்க.. ஏன்.. இப்படி இழுத்துட்டு போறீங்க? விடுங்கன்னு சொல்றேன்ல..” என்றவன் பேசிக் கொண்டிருக்கும் போதே, அங்கு வழக்கமாக அவன் தங்கும் அறைக்கு கூட்டிச் சென்றிருந்தான். நினைத்ததை செய்து முடிக்கும் முடி சூடா மன்னனவன்.. அவனை தடுக்கும் தைரியம் யாருக்கு உண்டு? தனதறைக்கு சென்றதும் அறைக்கதவை சாற்றியவன், அவள் அணிந்திருந்த புடவைக்கு விடுதலை அளிக்க, தன் இருகைகளையும் மார்பிற்கு குறுக்காக வைத்துக் கொண்டு, தன்னை மறைக்க முயன்றவள், அவன் புறம் அல்லாது, திரும்பி நின்றாள்.
“வேணாம்.. இங்க வேணாம்.. ப்ளீஸ்..” என்றவளின் கண்ணில் பழைய நினைவுகள் வந்தே போக,
“அதுக்கெல்லாம் இப்ப நேரமில்ல..” என்றவன் பின்புறமிருந்து அவளை அணைக்க, மெய் சிலிர்த்தது அவளுக்கு. மூன்று வருடங்களுக்கு முன், இவ்வணைப்பில் தான் மயங்கி நின்றது ஞாபகத்திற்கு வந்தது. அவனது கைகள் அவளது இடையை அளக்க, கூசிச் சுருங்கியது அவளது தேகம். அவனது முகத்தாடை, அவளது தோளில் வைத்து தேய்க்க, உடலில் மின்சாரம் பாய்ந்தது. அவனது இதழ்கள் அவளது தோள் வளைவில் அழுத்தமாக பதிய, அவளோ கூச்சம் தாங்காது, தனது இதழை கடித்துக் கொண்டாள். அவனது மீசை முடி குத்த, மீண்டும் மீண்டும் மெய்சிலிர்த்தது. அவனது மூச்சுக் காற்று பின்னங்கழுத்தில் அறைந்து மோத, நிற்க தள்ளாடினாள் மாது. அவனது கைகள் முன்னேறி, அவளது கைகளோடு இணைந்தன. தன் உயிர் பொக்கிஷங்களை பாதுகாத்துக் கொண்டிருக்கும் கைகளை எடுத்தவன், அதன் விரல் நுனியில் இருந்து முத்தக் கவிதை வடிக்க, அவன் இழுத்த இழுப்பிற்கு சென்றாள் மங்கை. அவளது செவ்விதழ்களை விரல்களால் அவன் வருட, அவனது தொடுகை அவளது உள்ளாங்கால் விரல் வரை மின்சாரம் போல் பாய்ந்தது. அவளை கைகளில் அள்ளிக் கொண்டவன், படுக்கையை நெருங்க, அவனது முகத்தையே விழியகலாது பார்த்துக் கொண்டிருந்தாள். ஒரு ஆணிடம் இருந்து ஒரு பெண் எதிர்பார்ப்பது என்ன? சொந்த வீடா? காரா? பணமா? சொத்துக்களா? இல்லையே.. உன்னுடன் எப்போதும் நானிருப்பேன்.. என்ற பக்கத்துணையைத் தானே! ஒவ்வொரு ஆணும் தன் மனைவி தன்னையை தோழியாக, சக மனுஷியாக நடத்தினாளே போதுமே.. அவனுடன் இறுதி வரை, சாவையும் தாண்டி வருவாளே.. ஆனால், அவனோ, தன் குடும்பத்திற்காக, தனக்காக அவள் மாற வேண்டும் என்று தானே எதிர்பார்க்கிறான்? அவள் செய்யாத ஒன்றை செய்தாளென்று ஊரும் உறவும் கூறும் போது, இல்லை என் மனைவியைப் பற்றி நீ பேசாதே.. என்று கூறியிருந்தால், அவர்களுக்குள் மூன்று வருட பிரிவு வந்திருக்காதே.. இறுதியாக அவனை விட்டு அவள் பிரிய வேண்டும் என்று முடிவெடுத்தது எதனால்? அந்த காட்சி அவளது கண் முன்னே தோன்ற, இதுவரை அவனது தொடுகைக்கு குழைந்து போயிருந்த தேகம், இரும்பாக இறுகியது. இதுவரை சுகமாக தெரிந்த, அவனது அணைப்பு, இப்போது சுடுகோலாக சுட்டது. அவனிடம் இருந்து விலக முயன்றவளை இறுக அணைத்தவன, அவளது காதோரம்,
“மயூரிக்காக..” என்று கூற, சர்வமும் அடங்கியது. தன் குழந்தைக்காக என்று நினைத்து படுத்திருந்தவளின் உடல், மரக்கட்டையாக மாற, அவளது மாற்றத்தை உணர்ந்தவனுக்கு கோபம் வந்தது. தான் என்ன செய்துவிட்டோம் என்று, இவள் இவ்வாறு நடந்து கொள்கிறாள் என்று தான் நினைத்தான். ஆனால், அவனுக்கு தெரியாது ஒன்று, பெண் என்பவள் மகாசக்தி.. அவளாக நினைத்தால் ஒழிய, வேறு யாராலும் அவளது உணர்வுகளை தூண்ட முடியாது. அவளது கன்னத்தை மென்மையாக பற்றியவன்,
“வேற எதையும் நினைக்காத.. நீ மட்டும் தான் என் மனைவி.. உன்னை தவிர வேற யாரையும் இது வரைக்கும் மனசால கூட, நான் நினைச்சதில்ல.. எனக்கு உன்னைய ரொம்ப பிடிக்கும்.. என் மேல நீ வைச்சிருக்கும் காதல்.. அது ரொம்ப பிடிக்கும்.. ரிலாக்ஸ்.. ரிலாக்ஸ்..” என்று கூறியவாறே முன்னேற, அவளது உடலும் தளர்ந்து, அவனது குழையத் தொடங்கியது. அவளது மனதில் தோன்றிய எண்ணங்களை வலுக்கட்டாயமாக தள்ளி வைத்தாள். இப்போது அவள் கண் முன்னே இருப்பது, அவளது ஆதித்யா கரிகாலன்.. யாரை சிறு வயதில் இருந்து, நெஞ்சில் வடித்து, வாழ்ந்து வந்தாளோ.. அதே ஆதித்யா கரிகாலன்.. அவளுக்கு மட்டுமே சொந்தமானவன்.. அவளை மடி தாங்கி வளர்த்தவன்.. அவளுக்காக வாழ்பவன்.. அவனுக்காக தன்னை கொடுப்பதில் மகிழ்ச்சியாகவே உணர்ந்தாள். மெய்யோடு மெய் சேர்த்து, உயிரோடு உயிர் கோர்த்து, சில வருடங்களானாலும், அவளது பெண்மை, அவனுக்கு இன்பமே கொடுத்தது. அள்ள அள்ள குறையாதது அட்சய பாத்திரம் மட்டும் தானா? மங்கையவளின் தேகமும், ஆண்டவன் அள்ள அள்ள குறையாத சுகத்தை அவனுக்கு வழங்கியது. உடலில் இருக்கும் ஆடை களைந்து, கலைத்து புதிய உயிருக்கு வித்திட்ட, இருவரும் அயர்ந்து உறங்கிக் கொண்டிருக்க, ஆதித்யா கரிகாலனின் கைப்பேசி அழைத்தது. அதனை எடுத்து காதில் வைத்தவன், தன் அருகில், தன் கையணைப்பில் உடலெல்லாம் வியர்த்து, உறங்கிக் கொண்டிருப்பவை பார்த்தான். அவளை எழுப்ப மனமில்லாது எழுப்பினான்.
“திவி.. திவி..”
“ம்ம்..”
“சீக்கிரம்.. எந்திரிச்சு.. குளிச்சு, கிளம்பு..”
“ஏன்? எதுக்கு? பாப்பா? பாப்பாக்கு என்ன?”
“ப்ச்.. பாப்பாக்கு ஒன்னுமில்ல.. வடிவக்கா படியில இருந்து உருண்டு விழுந்துட்டாங்களாம்.. அனிதா போன் பண்ணா.. அவளை போய் பார்க்கணும்.. கிளம்பு..”
“ப்ச்.. அவ்வளவு தானா? நான் கூட என்னமோ? ஏதோன்னு பயந்துட்டேன்.. எனக்கு தூக்கம் வருது.. நான் வரலை..”
“ப்ச்.. உன்னைய எப்படி நான் தனியா விட்டு போறது?”
“அப்போ.. என்னைய ஹாஸ்பிடல் கூட்டிட்டு போங்க.. நான் பாப்பாவை பார்த்துக்குறேன்.. நீங்க போய் அவளை பார்த்துக்கோங்க..”
“கொஞ்சமாவது மனசாட்சியோட பேசு.. அவங்க தான் உன்னைய சின்ன வயசுல இருந்து, தூக்கி வளர்த்திருக்காங்க.. அவங்க உன்னோட சித்தி.. அதையும் மனசுல வைச்சுக்கோ..”
“அது மனசுல இருக்குறனால தான் வரலைங்குறேன்.. உங்களுக்கு வேணும்னா நீங்க போங்க.. என்னைய எதுக்கு, சும்மா துணைக்கு கூப்பிடுறீங்க..”
“ஏய்.. உன்னை..” என்றவன் கோபமாக பேசிக் கொண்டிருக்கும் போதே, மீண்டும் கைப்பேசி சிணுங்க, அதனை எடுத்து காதில் வைத்தவன்,
“ஓகே.. நான் டேவிட்டுக்கு போன் பண்ணி சொல்லிட்டேன்.. நீங்க கிளம்பி போங்க.. நாங்க பின்னாடியே வர்றோம்..” என்று பதில் அளித்து விட்டு,
“சீக்கிரம் கிளம்பு..” என்று உத்தரவிட்டு, கிளம்பச் சென்றான். அவனது விருப்பத்திற்கு மாறாக இங்கு எதுவும் நடக்காதே! அவனை வாயிற்குள் வசைபாடியபடியே தானும் அவனுடன் கிளம்பினாள். மருத்துவமனைக்குள் கார் நுழைந்ததுமே, தன் முகத்தை இறுக்கமாக வைத்துக் கொண்டாள். வடிவழகியிருக்கும் அறை வந்ததும் வாசலிலேயே நின்று கொண்டாள். ஏனென்று கேள்வியாக பார்த்தவனுக்கு,
“நீங்க மட்டும் போங்க.. நான் வரல..” என்று எங்கோ பார்த்தவாறு பதில் அளித்தவளின் கையை பிடித்து உள்ளே அழைத்துச் சென்றான். அவர்கள் உள்ளே நுழைந்ததும்,
“மாமாஆஆஆ..” என்று அழுதவாறே ஓடிவந்து, அவனது மார்பினில் சாய்ந்து கொண்டாள் வைஷ்ணவி. அதுவரை இறுக்கமாக பற்றியிருந்த பாரதியின் கையை, சட்டென விட்டவன், தன் மார்பினில் அழுது கொண்டிருந்தவளை தாங்கி பிடிக்கலானான். அதை பார்த்தவளுக்கு அவன் மீதான, அவநம்பிக்கை இன்னும் அதிகமானது.
“இவரும்.. சராசரி ஆம்பிளை தானே? கிளி மாதிரி பொண்டாட்டி இருந்தாலும் குரங்கு மாதிரி வாப்பாட்டி வைச்சுக்க தானே செய்வாரு.. இவரைப் போயி நம்பினியே? உனக்கு எத்தனை தடவை பட்டாலும் புத்தியே வராது..” என்று தன்னைத் தானே திட்டிக் கொண்டவள், அவனிடம் இருந்து மெல்ல விலகி, அறைக்கு வெளியே வந்தாள். முகத்தில் வெறுப்புடன் செல்லும் பாரதியை, ஓரக்கண்ணால் பார்த்திருந்த வைஷ்ணவியின் இதழோரம் மின்னி மறைந்தது புன்னகை. ஆதித்யா கரிகாலனிற்கு தான் தூக்கி வளர்த்த அக்கா மகளை தாங்குவது ஒன்றும் புதிதாக தோன்றவில்லை.. அவனை பொறுத்தவரை அனிதாவும் வைஷ்ணவியும் ஒரே மாதிரி தான். ஆனால் பாரதி, அவள் அவனுக்கு அக்கா மகளாக இருந்தாலும், அவளுடன் அவனுக்கு ஏற்படும் உணர்வு, இதுவரை யாரிடமும் தோன்றவில்லை.. தோன்ற போவதுவுமில்லை.. ஆனால், பனமரத்திற்கு கீழ்நின்று பாலை குடித்தாலும், கள்ளை தான் குடித்தான் என்று சாதிக்கும் உலகமிது.. அப்படிப்பட்ட உலகில் தான் இன்னமும் சீதைக்கேற்ற ராமனாக தான் இருக்கிறேன் என்பதை நிரூபிக்க முடியுமா? அப்படியே நிரூபிக்க முயன்றாலும் உலகம் நம்புமா? உலகம் நம்புவது இருக்கட்டும், முதலில் பாரதி நம்புவாளா? அதற்கு அவன் ஆஞ்சநேயரை போல் தன் இதயத்தை திறந்து காட்ட
வேண்டுமே? அதை செய்வானா இரும்பு இதயம் கொண்ட ஆதித்யா கரிகாலன்?
👌👌👌👌👌👌👌👌👌👌