யாயாவும் 7
ஜிஷ்ணுவின் வெகு அருகில் அவளது கன்னங்கள்.. அதுவும் ஆரவ் கன்னத்தைப் போலவே குண்டு குண்டு கன்னங்கள்.. தியேட்டரில் அருகே இருந்த போது வரி வடிவாக இருந்த தோற்றம், இப்போது இன்னும் கண்களுக்கு ப்ளீச்சென்று..!
யோசிக்கவே யோசிக்கவில்லை..! மென்மையாக.. அதே சமயம் அழுத்தமாக.. அவள் கன்னத்தில் முத்தமிட்டான்..!
ஒரு சில நொடிகள் தான் நீடித்தது அம்முத்தம்..!
அதிர்ச்சியின் உச்சத்தில் வெண்பா..!!
அவன் முத்தம் கொடுத்ததே அதிர்ச்சி என்றால் அதற்கு அவன் கொடுத்த விளக்கம் ஏக அதிர்ச்சி..!
“இட்ஸ் நாட் பை மிஸ்டேக். இன்டன்ஷனா தான் கொடுத்தேன். உன்ன பார்த்த நாள் இருந்து எங்கேயோ பார்த்த ஞாபகம் கூடவே ஆரவ்வோட ஜாடை.. ம்ம்ம்.. என்னை இம்சிக்குது. ஒருவேளை ஏற்கனவே உன் கூட வாழ்ந்திருப்பேனோனு ஒரு யோசனை..! அதுதான் மீண்டும் உன் ஸ்பரிசத்தை ஒருமுறை ட்ரை பண்ணி பார்த்தேன். இதுக்கு முன்னால நான் உன்னை கிஸ் பண்ணினதா எனக்கு நினைவில்லை..!” என்று அவன் உதட்டை பிதுக்கி சொல்ல.. விக்கித்து அமர்ந்திருந்தாள் ஜிஷ்ணுவின் விளக்கத்தில் பெண்ணவள்..!
வெண்பா அதிர்ச்சியின் பிடியில் இருந்தது என்னவோ சில நொடிகள் தான்..!
அடுத்த நொடி அவளும் பளார் என ஒரு அறைவிட்டு “எனக்கும் சேம் டவுட்..! இதுக்கு முன்னாடி உன்னோட வாழ்ந்து உன்னை அடிச்சிருக்கேனானு..!” என்று கண்களில் கனல் தெறிக்க அவள் கேட்ட கேள்வியில் அத்தனை மின்னல் ஜிஷ்ணுவின் கண்களில்..!
அவளில் கனல்..!
இவனில் மின்னல்..!
விரல்களால் மெல்ல தன் கன்னத்தை வருடியவன் “ஆளு பாக்க தான் காத்துல பறக்கற மாதிரி இருக்க. ஆனா அடி.. ம்ம்ம்.. வேற லெவல்..! குட் ஸ்டெமினா.. கீப் இட் அப்..! இப்படியே ஸ்டெமினாவ மெயின்டெயின் பண்ணு. நமக்கு
பின்னால யூஸ் ஆகும்” என்று மீண்டும் அதே மந்திர புன்னகையோடு அவன் கூற அவளோ அவனது செயலில் விக்கித்து பார்த்தாள்.
“ஆர் யூ மேட்? ஐ அம் மேரிட்..!” என்றாள் பற்களை கடித்துக் கொண்டு..!
“சோ வாட்? புருஷன் இல்லை தானே இப்போ..! நீயும் சிங்கிள்.. நானும் சிங்கிள்..!” என்று வியாக்கானம் பேசியவனை ஆயாசமாக பார்த்தாள்.
“புருஷன் இல்லை என்றால் பார்க்கிறவன் கூட எல்லாம் படுக்க முடியுமா என்ன?” என்று அவள் குரலை அடக்கி ஆவேசமாக கத்த..
“நானும் ஒன்னும் உன்ன பெட் ஷேர் பண்ண கூப்பிடல.. ஆல்ரெடி பண்ணியிருப்பேனேனோனு டவுட். அதனால ஒரு சிங்கிள் கிஸ் கொடுத்து செக் பண்ணி பார்த்தேன்…” என்றவன் கண்களில் மந்திர புன்னகை தாண்டி குறும்பு கொப்பளித்தது.
“ச்சீ..” என்று அவள் முகம் சுழித்தாள் ஜிஷ்ணுவின் பேச்சில்..!
அழுத்தமாக அவள் தாடையை பற்றி தன் புறம் திருப்பியவன், “என் இடத்துல யாரா இருந்தாலும் இதைத்தான் பண்ணி இருப்பானுங்க?” என்றான் அவள் கண்களை கூர்ந்து பார்த்தான்.
அவனது கண் பார்வை வீச்சினை தாங்க முடியாத பெண்ணவளோ அவன் பார்வையை தவிர்த்தாள்.
அவனின் செய்கை தாங்க முடியவில்லை மனதில் பெரும் பாரமாக உணர்ந்தாள் வெண்பா.
மாலில் படம் பார்க்கும் பொழுது தன்னையும் மகனையும் அவன் கவனித்துக் கொண்ட பாங்கு.. எடுத்துக் கொண்டு அக்கறை.. அதெல்லாம் மனதுக்கு ஒரு இதமாக இருந்தது. வெகு நாள் கழித்து லஸ்ட் இல்லாத ஒரு ஆணின் பார்வையை அருகாமையில் சந்திக்கிறாள் அவள். ஆனால்… அனைத்தையும் ஒரு முத்தத்தை கொடுத்த தகர்த்து விட்டான் ஜிஷ்ணு.
ஆக.. இறுதியில் எல்லா ஆண்களின் தேவையும் பெண்களின் அந்த உடம்பாகத்தான் இருக்கிறது காலையிலிருந்து இவன் காட்டிய அந்த முகம்.. ஆரவ்வோடு அழகாக பழகியது.. எல்லாமே இந்த உடலுக்காக தானா? என்று அவளுக்கு ஆறாத வலியாய் அவன் செய்கை..!
“அக்கா தங்கச்சி இல்லையா உனக்கு..?” என்று வெறுப்பாக கேட்டாள்..
அவனோ அசராமல் “எனக்கு அக்கா தங்கச்சி இல்ல..! உனக்கு இருக்காங்களா? அட்லீஸ்ட் அவங்களாவது அதுக்கு ஒத்துக்குவாங்களா..?”
என்று கண்ணடித்து கூலாக கேட்டான்.
வெண்பா ஆத்திரமிகுதியில் அவனின் கன்னத்தில் ‘பட் ‘டென மீண்டும் அறைந்தாள். அவனுக்கும் வலித்தது..!
அடித்த பெண் அவனை விட மென்மையானவள் என்றாலும் வலி வலி தானே..!
அதே வலியை அவளுக்கும் கொடுத்தான். கொஞ்சம் வித்தியாசமாக…
ஆம்.. அதற்கு பதிலாய் அவன் அவள் உதட்டில் ‘பச் ‘சென முத்தம் கொடுத்தான்.
அதிர்ந்தவள்.. அவனை மீண்டும் அறைந்தாள்..!
அறை வாங்கியவனோ.. மீண்டும் முத்தம் கொடுத்தான்..!
ஒரு “பட்..”
ஒரு “பச்சக்..!”
மீண்டும் “பட்..”
மீண்டும் “ப்ச்சக்..!”
ஆக.. இப்படியே ஒரு அஞ்சு அறை வாங்கி அஞ்சு முத்தம் கொடுத்திருப்பான் ஜிஷ்ணு.
அடுத்த முறை அவள் அடிக்கவில்லை. வலி நிறைந்த விழிகளோடு கோபம் கனன்ற அவனை பார்த்தவள், வேகமாக அவனை தள்ளி விட்டு சற்று தள்ளி நின்றிருந்த மகனை கையில் பிடித்துக் கொண்டு விறுவிறுவென்று தன் அப்பார்ட்மெண்ட்டை நோக்கி நடந்தாள் வெண்பா..!
செல்லும் அவளை உதடு கடித்து பார்த்தவன் வதனத்தில் அதே மந்திரப்புன்னகை..!!
அவள் அடித்த கன்னத்தை தடவிக் கொண்டவன் “சோ ஸ்வீட்..!” என்று கூறிவிட்டு தன் காரினை எடுத்துக்கொண்டு தன் வீட்டை நோக்கி சென்றான்.. வதனத்தில் அத்தனை நிறைவான புன்னகை கூடவே மனதுக்கு பிடித்த பாடலை அழகாக விசில் அடித்தபடியே..!
வீட்டுக்குள் ஜிஷ்ணு நுழையும் போது ஏற்கனவே அஸ்வத் வந்திருந்தான். அவனும் இன்று எந்த பட்சியும் அவனது காதல் வலையில் சிக்கவில்லை என்று கவலையோடு தன் ஆதங்கத்தை எல்லாம் அண்ணய்யாவிடம் கொட்ட காத்திருக்க..
“ஹாய் அஸ்வத்…!’ என்ற துள்ளல் நடையோடு சென்றவன் ஹாலில் அமர்ந்திருந்தவனின் சிகையை கலைத்துவிட்டு “பை அஸ்வத்..!” என்று வேகமாக படிகளில் தாவி ஏறிச் சென்று விட.. அஸ்வத் திறந்த வாயை மூடாமல் ஜிஷ்ணுவின் இந்த புதிய மாற்றத்தை பார்த்தபடி அமர்ந்திருந்தான்.
பொதுவாக இம்மாதிரி அஸ்வத் தனியாக சென்றால்.. முன்னரே வரும் ஜிஷ்ணு அவனை அமர வைத்து காதில் இரத்தம் வரும் வரை.. காதலை பற்றி அத்தனை அறிவுரைகள் கொடுத்து செல்லுபவன், இன்று தனக்கு பின்னே நேரம் சென்று வந்ததோடு மட்டுமல்லாமல்.. துள்ளலோடு சென்றவனை ஆச்சரியமாக பார்த்தான் அஸ்வத்.
“அண்ணையாவிற்கு அப்படி என்ன நடந்திருக்கும் இந்த ஒரு நாளில்? என்று புரியாமல் குழம்பி போனான் அஸ்வத்.
அடுத்து இரண்டு நாட்கள் வெண்பாவுக்கு ஒர்க் ப்ரம் ஹோம்..!
‘நாம் செய்த வேலைக்கு இவள் முதலில் வேவை செய்வாளா மாட்டாளா? இல்லை வேலையை விட்டு விட்டு போய்விடுவாளோ?’ என்று வெகுவாக குழம்பி இருந்தான் ஜிஷ்ணு.
இன்று காலை அலுவலகத்திற்கு அஸ்வத்துக்கு முன்னால் வேகமாக எழுந்து கிளம்பி வந்துவிட்டான் ஜிஷ்ணு. அவனால் வீட்டில் இருப்புக் கொள்ளவே முடியவில்லை.
அலுவலகத்திற்குள் நுழைந்ததும் முதல் வேளையாக அலுவலக ஊழியர்களுக்கு மட்டுமே ஆன வெப்சைட்டில் அவளது மெயில் ஐடிக்கு.. இன்றைக்கான வேலைகள் பற்றிய இன்ஸ்ட்ரக்ஷனை அனுப்பிவிட்டு காத்திருந்தான்.
கண்களோ கணினி திரையிலிருந்து கணநேரம் கூட விலகவில்லை..!
அவனது ஒரு கை தாடையை சுமந்து இருக்க மற்றொரு கையோ மவுசில் விளையாடுபடியே இருக்க.. இருக்கையில் அமர்ந்து அரைவட்டம் அடித்தபடி கணினியைத்தான் காதலியை போல கண்களால் களவாடிக் கொண்டிருந்தான் ஜிஷ்ணு.
இவன் இன்று அலுவலகத்திற்கு நேரம் ஆக வந்து விட்டவன் அவளிடமான பதிலையும் நேரத்தோடு எதிர்பார்த்தான்.
ஆனால் அவளுக்கு இவ்வேளை பிரதானமாக இருந்தாலும் அதை காட்டிலும் பிரதானம் அவளது மகன் ஆரவ்..!
மகனை எழுப்பி குளிக்க வைத்து அவனை அருகில் இருக்கும் நர்சரிக்கு அனுப்ப வேண்டிய முக்கிய வேலை இருந்தது. அதை எல்லாம் முடித்துவிட்டு மகனை நர்சரியில் விட்டு விட்டு அதன் பின் சாவகாசமாக ஒன்பது மணி போல்தான் அவள் ஆன்லைனுக்கே வந்தாள்.
இவனது அலுவலகத்தில் லாகின் செய்யும் ஊழியர்கள் அனைவரும் இவனது பார்வைக்கு வந்து விடுவார்கள். எந்த நேரத்தில் லாகின் செய்கிறார்கள்.. எப்பொழுது லாக் அவுட் செய்கிறார்கள் என்று அனைத்தையும் இவன் நேரடி பார்வையில் வைத்திருப்பான்.
“மணி 9 ஆவது இன்னும் ஆன்லைன் வரல இவ.. கொஞ்சம் கூட பொறுப்பே இல்ல இவளுக்கு” என்று நூறாவது முறை தனது கை கடிகாரத்தை பார்த்துவிட்டு புலம்பிக் கொண்டிருந்தான் ஜிஷ்ணு.
அவனுக்கே நேற்று தான் செய்தது அதிகப்படியாக தோன்ற.. எங்கே கோபித்துக்கொண்டு வெண்பா வரமாட்டாளோ என்று உள்ளுக்குள் லேசாக ஒரு தவிப்பு..!
அந்த தவிப்பு ஏன் எதற்கென்று ஆராயலாம் அவனுக்கு தோன்றவில்லை..!
அவனுக்கு அவளைப் பற்றி தெரிய வேண்டி இருந்தது. ஆரவ் யாரென்று தெரிய வேண்டும் அதற்கு வெண்பா அவன் அருகிலேயே இருக்க வேண்டும்.
சட்டென்று அவள் ஆன்லைன் வந்ததற்கான பச்சை நிற விளக்கு எரிய.. ஜிஷ்ணு முகத்தில் 100 வால்ட் விளக்கு ஒளிர்ந்தது..!
அப்பாடி வந்துட்டா என்ற மகிழ்ச்சி இருந்தாலும் வேலை செய்வாளா? இல்லை விட்டுவிட்டு சென்று விடுவாளா? என்று ஒரு பக்கம் பதட்டமாக பார்த்திருந்தான் கணினி திரையை.. நகத்தை கடித்துக் கொண்டே…!
அடுத்த சில நிமிடங்களில் ஓகே என்ற பதில் வர அப்பொழுது தான் பிடித்து வைத்திருந்த சுவாசத்தை வெளியிட்டவன் “ஹூர்ரே…!!” என்று வேகமாக கத்த அவன் போட்ட சத்தத்தில் அஸ்வத் வேகமாக ஓடி வந்து அவனை விசித்திரமாகப் பார்த்தான்.
தொண்டையை செருமிக் கொண்டவன், “நத்திங்.. நந்திங் நீ போலாம்..!” என்பது போல ஜிஷ்ணு கையசைக்க
“அண்ணைய்யா.. இது சரியில்லை..! சரியே இல்லை..! நேத்தி மால்ல உங்கள விட்டுட்டு போனதுக்கு வீட்டுக்கு வந்தா அட்வைஸ் பண்ணி தள்ளுவீங்க. ஆனா நேத்து அவ்வளவு ஜாலியா வந்தீங்க.. அதுவும் பாட்டும் துள்ளல் நடையோடு..! கூடவே நான் ஒருத்தன் உங்க கூட தான் ஆபீஸ் வருவேன்னு மறந்துட்டு இன்னைக்கு என்னை விட்டுட்டு ஆபீஸ் வந்துட்டீங்க..! சம்திங் ராங்.. அண்ணைய்யா..! சம்திங் ராங்..!” என்று ஒற்றை விரல் பத்திரம் ஆட்டுபவனை கண்டவன், தன் டேபிளில் இருந்து பேப்பர் வெயிட்டை எடுத்து வீச முயல..
“ஐயையோ.. கொலை கொலை..!” என்று ஓடி சென்றான் அஸ்வத். ஜிஷ்ணு முகத்தில் விஷம புன்னகை.
மெல்ல தன்னுடைய அதிரங்களை நாவால் வருடிக் கொண்டவனுக்கு அந்த மெல்லிய நடுங்கி இதழ்களின் உரசல் இன்னும் தன் அதிரங்களில் இருப்பது போலவே தோன்ற.. கண்களை மூடி இருக்கையில் சாய்ந்து வெண்பா.. வெண்பா.. என்று பிதற்றினான்.
அடிக்கடி அவனுக்குள் இருக்கும் அந்த சந்தேகம் எட்டிப் பார்க்கத் தான் செய்தது. ஆனால் அவளது மென் ஸ்பரிசமும்.. அவளுடன் உணர்ந்த உணர்வுகளும்.. அவளின் கனிந்த அதிரங்களின் முத்தம்.. எல்லாமே புதிதாக தான் தோன்றியது ஜிஷ்ணுவுக்கு..!
அவனுக்கும் இந்த உணர்வு புதிது தான்..!
மூன்று நாட்கள் விட்டுப் பிடித்தான் ஜிஷ்ணு வெண்பாவை.. ஆனால் அவளோ அலுவலகத்திற்கு வராமல் அந்த வாரம் முழுக்க ஒர்க் ப்ரம் ஹோம் என்று போட்டு இருக்க அதை கண்டு கடுப்பானவன்,
“மீட் மீ டுமாரோ, 9 அட் ஆஃபிஸ்” என்று அவளுக்கு டெக்ஸ்ட் செய்து விட்டு அமைதியாக காத்திருந்தான் அவளின் வருகைக்காக..!
“இவனுக்கு என்ன நான் வைத்த ஆளா?” என்று அவனது மெசேஜை பார்த்து மனம் பொறும்பினாலும்.. அவளால் அவனை தவிர்க்க முடியாது என்பதே நிதர்சனம்..!
அவனோ முதலாளி.. இவளோ தொழிலாளி..!
“சீக்கிரமே வேறு வேலை தேடிகிட்டு போயிடணும். இதுக்கப்புறம் இவனோட வேலை செய்றதெல்லாம் ரொம்ப ரொம்ப ரிஸ்க்..!” என்று மனதில் நினைத்துக் கொண்டவள் அப்பொழுதே வேறு சில வேலைகளையும் ஆன்லைனில் தேடினாள்.
இத்தனை வருடங்களாக அவள் செய்த வேலை தான். ஆனால் சம்பளமும் கட்டி மூட்டி தான் வரும். இந்த வீட்டின் இஎம்ஐக்கே பாதி பணம் சென்றுவிட.. மாத இறுதியில் தத்தளித்து தான் போவாள்.
ஆரவ்வை இப்போது படிக்கும் பள்ளியை விட நல்ல பள்ளியில் சேர்க்க வேண்டும். அதற்கு சம்பாத்தியம் கூட வேண்டும் என்று தான் வேறு வேலை தேடினாள். அதிலும் முதல் நாள் அவனை பார்த்து மனம் பதப்பதைத்தாலும் வேறே வழியின்றி அங்கேயே வேலைக்கு சேர்ந்தாள்.
ஆனால் ஜிஷ்ணுவின் இந்த செயல்கள் அவளை தடம் புரள வைக்க.. வேறு வேலைக்கு விழுந்து விழுந்து அப்ளை செய்து கொண்டிருந்தாள் வெண்பா.
“வெண்பா.. இன்னைக்கு என்ன ஒர்க் ப்ரம் ஹோமா?” என்றபடி உள்ளே வந்தாள் சுந்தரி, கையில் சிறிய டிபன் பாக்ஸ். அந்த டிபன் பாக்ஸை பார்த்த உடனே உள்ளுக்குள் ஆற்றாமையாக இருந்தது வெண்பாவுக்கு.
“ஆமா கா..” சிறிது நேரம் அவளோடு பேசிக் கொண்டிருந்துவிட்டு ஆரவ்வுக்காக கொண்டு வந்திருந்த பலகாரத்தை கொடுத்து சென்றாள் சுந்தரி.
எதிர் வீட்டில் இருக்கும் சுந்தரியும் அவளது கணவன் கோபால் மட்டுமே அந்த தளத்தில் இருக்கும் தமிழர்கள். மற்ற அனைவரும் கன்னடர்கள்.
சில சமயம் வேறு வழியின்றி அவர்களிடம் பேசித்தான் ஆக வேண்டிய சூழல் வெண்பாவிற்கு. சுந்தரி இவளை விட சற்று வயதில் பெரியவள், இன்னும் அவர்களுக்கு குழந்தை பாக்கியம் இல்லை. அதனால் ஆரவ்விடம் அன்பாகவே நடந்து கொள்வாள் சுந்தரி. அவ்வப்போது அவர்கள் வீட்டில் செய்யும் சிறப்பான பதார்த்தங்களை ஆரவ்வுக்கு என்று கொண்டு வருவாள் ஆசையாக..!
பிள்ளை பாசத்தில் ஆசையாக கொண்டு வருபவளை தடுக்கவும் மனம் வராது வெண்பாவுக்கு.
அதில் பல சமயம் அதனை கோபால் தான் எடுத்து வருவான்.
அதிலும் கண்களாலேயே துச்சாதனனை போல துகில் உரிக்கும் கோபாலை கண்டாலே கண்களில் இவளுக்கு நெருப்பு பறக்கும்..!
இவளை பார்த்துக்கொண்டு குழந்தையின் கன்னத்தில் அவன் வைக்கும் முத்தம் இவளுக்கு கோபத்தை வரவழைக்கும். அதற்குள் அவளது மகனே “பேட் டச் பண்ணாதீங்க அங்கிள்..” என்று முகத்தை உர்ரென்று வைத்துக் கொண்டு அவன் முத்தமிட்ட கன்னத்தை கர்சீப் பால் துடைத்து விடுவான்
“குழந்தையை வைத்து என்னை மடக்க முடியாது. அந்த உன் கீழ்த்தரமான புத்தியை மாற்றிக் கொள்..!” என்பது போல மிதப்பான பார்வை வெண்பாவிடம் இருந்து வரும். அதற்கு பின் ஒரு நாள் சுந்தரியிடம் கூறியே விட்டாள்.
“அக்கா நீங்க ஆசையா தான் தின்பண்டங்கள கொண்டு வந்து தரீங்க.. ஆனா இனிமே அது வேணாமே..!” என்றாள் பெரும் தயக்கத்துடன், ஆனால் சுந்தரியோ பதறிவிட்டாள்.
“ஏன் வெண்பா வேணா சொல்லுற? ஆசை நான் ஆரவ்வுக்கு கொண்டு வந்து தர்றது உனக்கு பிடிக்கலையா? எனக்கு பிள்ளை இல்லாத ஏக்கத்தை அவனுக்கு செஞ்சு கொடுத்து தீர்த்துக்கிறேன். அதை தடுக்காதேயேன் வெண்பா.. ப்ளீஸ்” என்று கெஞ்சுபவளிடம் எப்படி சொல்லி புரிய வைப்பது என்று உதட்டை கடித்துக் கொண்டாள் வெண்பா. ஆனால் பேசித்தான் தீர வேண்டும் அல்லவா?
“கொண்டு வாங்க.. ஆனா நீங்க கொண்டு வாங்க அக்கா. உங்க வீட்டுக்காரர் கிட்ட கொடுத்து அனுப்பாதீங்க..!” என்றாள் திட்டவட்டமாக. தீர்க்கமாக..!
அப்போதும் புரிந்து கொள்ளாத வெகுளியான சுந்தரியோ,
“வெண்பா.. நான் மலடியின் ஊர் உலகம் சொல்றாங்க.. என் கை பட்டா குழந்தைக்கு ஆகாதுன்னு பேசுவாங்க.. அது தான் எனக்கு கொஞ்சம் பயம்..! ஆரவ்வை எட்டி இருந்தே நான் ரசிக்குவேன். அதான் பலகாரத்தைக் கூட என் வீட்டுக்காரர் கிட்ட கொடுத்து அனுப்புறேன்” என்றாள்.
“குழந்தை பிறக்காதவங்க மலடி இல்ல சுந்தரி அக்கா.. மனசுல தாய்மை இல்லாதவங்க தான் மலடி. முதல்ல அதை நல்லா புரிஞ்சுக்கோங்க..! அடுத்து நான் ஒரு சிங்கிள் பேரண்ட்.. உங்க வீட்டுக்காரர் இங்க அடிக்கடி வர்றது பாக்குறவங்களுக்கு உறுத்தும். அதனால எது கொண்டு வரதா இருந்தாலும், நீங்களே கொண்டு வாங்க இல்லைன்னா எதுவும் கொடுத்து அனுப்ப வேணாம்” என்று உறுதியாக நின்றாள்.
அப்பொழுதும் கோபால் இரண்டு மூன்று முறை வந்தான் தான்.. கதவின் மேஜிக் ஹோல் வழியாக பார்ப்பவள் கதவை திறக்கவே மாட்டாள்.
அதன்பின் மனைவியிடமே கொடுத்து அனுப்புவான்.
ஆனால் அவன் பார்வையோ “என்னிடம் மாட்டாமலா போகப் போகிறாய்?” என்று அவளுக்கு கள்ளத்தனமாக சேதி சொல்லும்.
வெண்பா பிள்ளையை பள்ளிக்குக் கொண்டு விடும் போது.. அழைத்து வரும் போது வேண்டுமென்றே ஃபோன் பேசுவது போல காரிடரில் நடப்பான், அதுவும் அவன் வெற்று உடம்பை காட்டியப்படி வெறும் ஷார்ட்ஸ் அணிந்து.!
இவளோ அவனை கொஞ்சம் கூட மதிக்கவே மாட்டாள். அதுவே அவளை இன்னும் வேட்கையாய் அவளையே பருந்தாய் சுற்றுவர செய்தது கோபாலை.
அவள் துணி காய மொட்டைமாடி செல்லும் பொழுது தான் இவனுக்கு உடற்பயிற்சி செய்ய வேண்டுமென்ற எண்ணமே வரும்..!
அங்கேயும் சின்னதாய் ஷார்ட்ஸ் போட்டுக்கொண்டு டம்பில்சை தூக்கிக் கொண்டு உடற்பயிற்சி செய்வது போலவே நடிப்பான்..!
இவளும் பக்கத்தில் இப்படி ஒரு ஜந்து இருக்கிறது என்பதை கூட கண்டுகொள்ள மாட்டாள். பார்வை வட்டத்தில் அவன் விழுந்தாலும் அவள் தன் வேலையில் கண்ணாக இருப்பாள்.
அன்றும் அவள் துணியை காய போட்டுக் கொண்டிருக்க.. அவளை கடந்து செல்லும்போது “எப்படித்தான் இப்படி உணர்ச்சியை அடக்கிக்கிட்டு இருக்கியோ? அதுக்கெல்லாம் அவசியமில்லை வெண்பா.. நீ இம்முனு சொல்லு.. உனக்கு எல்லா சுகத்தையும் நான் தரேன்” என்று அவளைப் பார்த்து தாபமாக கூறிய கோபாலை பார்த்து ஏளனமாக சிரித்தவள்,
“எப்பவும் அடுத்த வீட்டு பொண்ணுங்கள பத்தி யோசிச்சிட்டு இருக்கீயே.. உன் வீட்டு பொண்ணுங்க எப்படி இருக்காங்க யோசிச்சு இருக்கீயா? நீ அடுத்த வீட்டுக்கு போற கேப்ல உன் வீட்டுக்குள்ள எவனாவது புகுந்துற போறான்.. சீக்கிரம் போ..!” என்று பதிலடி கொடுத்துவிட்டு சென்றாள்.
என்னதான் அவனுக்கு தக்க பதிலடி கொடுத்தாலும்… மனது வலிக்கத்தான் செய்தது. இதே ஒரு ஆண் தனியாக இருந்தால்.. ‘பாவம் பொண்டாட்டி பிரிஞ்சு போயிட்டா போல” என்று அவனை 50 வயதில் கூட மணமகனாக பார்க்கும் இந்த சமூகம்..
இள வயதில் கணவனைப் பிரிந்து மகனோடு இருக்கும் தன்னை மட்டும் ஏன் வேசியாக பார்க்கிறது என்று உள்ளம் குமற.. நெஞ்சு விம்ம கண்ணீர் முட்டிக்கொண்டு வந்தது வெண்பாவிற்கு.
ஆனாலும் கண்ணீரை சுண்டி விட்டவள் வழக்கமாக சொல்வதைப்போல தனக்குத்தானே தைரியம் அளித்துக்கொண்டாள்.
“இந்த உலகில் நம்மை தவிர யாரும் நம்மை அதிகமாக நேசிக்க முடியாது..! நாம் தான் நமக்கு மிகப்பெரிய பலம்..!”
அப்போதுதான் ஜிஷ்ணு அனுப்பிய மெசேஜை பார்த்து அவளுக்கு கோபம் பொத்துக் கொண்டு வந்தது.
‘இவன் பெரிய முதலாளி.. இவன் சொன்ன உடனே சொல்லுங்க எசமானு போய் கைய கட்டிட்டு நிக்கணும்..!’ என்று வகைத் தொகையாக அவனை திட்டினாலும்
“அது தான் நெசம்..!” என்று மைண்ட் வாய்ஸ் சொல்ல.. வேண்டா வெறுப்பாக கிளம்பி ஜிஷ்ணுவின் அலுவலகத்திற்கு சென்றாள் 11:00 மணிக்கு.
தொடரும்..
super sis
Niceepi.
👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌