ATM Tamil Romantic Novels

கண்ணை கவ்வாதே கள்வா

அத்தியாயம் 1

நம் மாநிலத்தின் மையப் பகுதியில் உள்ள மிகவும் பழமையான தொன்மை வாய்ந்த காவேரி ஆற்றங்கரையில் அமைந்துள்ள முற்கால சோழர்களின் தலைநகரமாகவும் தற்போதைய தமிழகத்தின் முக்கிய நான்காவது பெரிய நகரமாக உள்ள திருச்சிராப்பள்ளி.

திருச்சிராப்பள்ளியின் பொருள் திரு – சிராய் – பள்ளி என்பதே ஆகும் பிற்காலத்தில் அதுவே மருவி திருச்சிராப்பள்ளி என்று ஆனது.

நகரத்தின் காவிரி ஆற்றின் ஒரு கரையில் மலைக்கோட்டையும் அடுத்த கரையில் ஸ்ரீரங்கமும் அமைந்துள்ளது.

ஸ்ரீரங்கம் பூலோக வைகுண்டம் என்றும் அழைக்கப்படுகிறது மேலும் இது வைணவ திருத்தலங்களில் முதல் திருத்தலமாக உள்ளது.

அத்தகைய ஸ்ரீரங்கத்தின் ஒரு பனி படர்ந்த மார்கழி மாத காலை வேளை கதிரவன் மெல்ல தன் விடியலை வானத்தில் பரப்பி கொண்டு இருந்தான்.

பறவைகள் தங்கள் தூக்கத்தில் இருந்து விழித்து கூடுகளை விட்டு சுதந்திரமாக பறந்து ஒலிகளை எழுப்பி கொண்டு இருந்தன.

 ஸ்ரீமன் நாராயணன் பெருமாளின் நாமங்களை போற்றிக் கொண்டே வீதிகளில் வந்தார்கள் பாகவதர்கள் அவர்களை வணங்கிக் கொண்டே பெண்கள் அவரவர் வீட்டு வாசலில் உள்ள கோலங்களில் தங்கள் கை வண்ணைத்தை காட்டி கொண்டு இருந்தார்கள்.

அந்த தெருவில் மூலையில் இருந்த ஒரு வீட்டின் வாசலில் கோலமிட்ட நடுத்தர வயது மதிக்க தக்க பெண்மணி ஒருவர் வாயில் விஷ்ணு சரஸ்ரணமம் சொல்லி கொண்டே உள்ளே வந்தார்.

அவர் தான் இந்த இல்லத்தின் ராணி என்று அழைக்கபடும் மீனாட்சி.

அந்த வீட்டின் உள்ளே இரு பக்கங்களில் ஒரு பக்கம் குரோட்டன்ஸ் செடிகளும் மறுபக்கம் ரோஸ் செடிகளும் நடுவே துளசி மாடமும் அமைந்திருந்தது. 

துளசி மாடத்தின் உள்ளே விளக்கும் பூஜைக்கு தேவையான அனைத்து சாமான்களும் அடுக்கி வைக்கப்பட்டு இருந்தன.

மற்றொரு புறத்தில் சிறிய கார் செட்டும் அதற்குள் ஷிப்ட் காரும் ஒரு பைக்கும் ஒரு ஸ்கூட்டியும் நிறுத்தி வைக்கப்பட்டு இருந்தது. 

இன்னும் கொஞ்சம் உள்ளே சென்றால் சின்ன சிட் அவுட் அதை தாண்டி ஹால் ஹாலில் நுழைந்தவுடன் இரண்டு பக்கமும் மூன்று பெட்ரூம் அதை தாண்டி சமையலறை பின் புலக்கடை இதுதான் அவர்களின் வசந்த மாளிகை.

ஹாலில் ஒரு பக்கம் பெரிய டிவியில் விஷ்ணு சஹஸ்ரநாமம் ஓடி கொண்டு இருக்க மறுபக்கம் சோபாவில் அமர்ந்து அன்றைய நியூஸ் பேப்பரில் செய்திகளை வாசித்தப்படியே மனைவியின் செயல்களை கவனித்துக் கொண்டிருந்தார் அந்த வீட்டு ராணியின் ஏஜமானன் அதாவது மீனாட்சியின் கணவர் மாதவன்.

மாதவன் வருவாய் துறையில் அசிஸ்டன்ட் கமிஷனராக பணிபுரிந்து கொண்டிருக்கிரார். 

மீனாட்சி மற்றும் மாதவன் தம்பதிக்கு இரண்டு செல்ல மகள்கள் உள்ளனர். 

பெரியவள் மருத்துவம் இரண்டாம் ஆண்டு படித்துக் கொண்டிருக்கிறார் சின்னவள் பிளஸ் டூ படித்துக் கொண்டிருக்கிறாள்.

நால்வர் கொண்ட அழகான சிறிய குடும்பம்.

“மீனு கொஞ்சம் காஃபி தரியா டி” என்று கேட்டார் மாதவன்.

“இதோ கொண்டு வரேங்க” என்று கிட்சன்குள் சென்ற மீனாட்சி பால் பாத்திரத்தை எடுத்துக் கொண்டு இருக்கையில் “அம்மா” என்ற சத்தத்தில் அரண்டு போய் தன் கையில் இருந்த பாத்திரத்தை கீழே போட்டுவிட்டார் மீனாட்சி.

மேல் மூச்சு கீழ் மூச்சு வாங்க கோபத்துடன் நின்றிருந்தனர் கோபத்துடன் கிச்சனிலிருந்து வெளியே வந்தார்.

வெளியே வந்து பார்த்தாள் அவரின் சின்ன மகள் தான் அங்கே கத்தி கொண்டு இருந்தாள் “என்னடி ஏன் இப்படி கத்துற” என்று பல்லை கடித்து கொண்டே கோபத்துடன் கேட்டார் மீனாட்சி.

“அம்மா என்னோட சுடியை எடுத்து அம்மு போட்டு கிட்டா வந்து அவள் கிட்ட என்னன்னு கேளு மா” என்று அவரின் கைபிடித்து கொண்டே அழுது கொண்டிருந்தாள் மீனாட்சியின் சின்ன மகள்.

“காலையிலே ஏன் டி இப்படி என்ன படுத்துறிங்க நீ முதல்ல ஸ்கூல் கிளம்பி போ டைம் ஆகிடுச்சு பாரு பஸ் வந்துடும் நான் ஈவினிங் வாங்கி வைக்கிறேன் லன்ச் பேக் டேபிள் மேல வச்சிருக்கேன் பாரு எடுத்துக்கோ” என்றார் மீனாட்சி அவளின் கண்ணை துடைத்து கொண்டே.

“அம்மா கண்டிப்பா ஈவினிங் வாங்கி வைக்கனும்” என்று அழுது கொண்டே கேட்க.

“கண்டிப்பா வாங்கி வைக்கிறேன் இப்போ கிளம்பு” என்று அவளை அனுப்பி வைத்தார்.

“ஏங்க அவளை கொஞ்சம் பஸ் ஸ்டாப்புல கொண்டு போய் விட்டுட்டு வந்துடுங்க” என்றார் மீனாட்சி.

“மீனு கொஞ்சம் காபி கேட்டனே டி” என்றார் மாதவன் பாவமாக.

“அதெல்லாம் வந்து குடிக்கலாம் இப்ப கிளம்புங்க டைம் ஆகிடுச்சு” என்றார் மீனாட்சி.

‘ஒரு காபி கேட்டது குத்தமாய’ என்று மனதில் புலம்பிக் கொண்டே சென்றார் மாதவன்.

“அப்பா போகலாம் பா வாங்க” என்று வாசலில் இருந்து அவரின் சின்ன மகள் கத்த மாதவனும் வெளியே சென்றார்.

“அம்மா போயிட்டு வரேன்” என்று வாசலில் கத்திக்கொண்டே சின்னவள் கிளம்பி சென்றாள்.

 

மீனாட்சி அவளிடம் கையசைத்து விட்டு உள்ளே வந்தவர் ‘அவள் வேற இன்னும் என்னதான் பண்ணிட்டு இருக்கா இன்னைக்கு முதல் நாள் காலேஜ் வேற இன்னும் கிளம்பமா’ என்று தன் மூத்த மகளை மனதில் நினைத்துக் கொண்டே வந்தார்.

“அம்மு என்ன பண்ற” என்றார் மீனாட்சி

“இதோ வந்துடேன் மா” என்று பதிலுக்கு கொண்டே கண்ணாடியின் முன்னே நின்றிருந்தாள் நிலா.

அவள் தான் நிலாமுகில் நம் கதையின் நாயகி தன் கல்லூரி பேக்கை மாட்டிக் கொண்டு தன் அறையில் இருந்து வெளியே வந்தாள்.

நல்ல அடர்த்தியான முடியை லேயர் கட் செய்திருந்தாள் அதை ஒரு சிறிய கிளிப்பில் அடைத்து மீதியை முடியை விரித்து விட்டு இருந்தாள். 

அழகான வில் போன்ற இரு புருவத்திற்கு இடையே சிறிய கலர் பொட்டு வைத்து காந்த கண்ணுக்கு மை போட்டு வேறு எந்த வித ஒப்பனையும் இல்லாமல் பிங்க் நிற சுடிதாரில் தேவதை என வெளியே வந்தாள்.

“அம்மா கிளம்பிடேன் மா” என்றாள் அறையின் வெளியே நின்று கொண்டு.

அவளை பார்த்த மீனாட்சி வைத்த கண் வாங்காமல் அவளையே பார்த்து கொண்டிருந்தார்.

மீனாட்சி மனதில் ‘என் பொண்ணு பார்க்க எவ்வளோ அழகா இருக்கா அப்படியே நேத்து நம்ம படத்துல பார்த்த சாய்பல்லவி மாதிரி என் கண்ணே பட்டுரும் போலையே’ என்று நினைத்தார்.

பெரிய கண்ணும் நீளமான மூக்கும் அதில் சிறிய நீல கலர் கல் பதித்த மூக்குத்தி அவளின் பால் வண்ண நிறத்துக்கு அவ்வளவு எடுப்பாக இருந்தது.

“அம்மா அம்மா” என்று அவள் கத்திய பிறகு தான் சுயநினைவுக்கு வந்தார் மீனாட்சி.

“என்னடி” என்றார் பதிலுக்கு

“என்ன சொல்லிட்டு நீ என்ன மா கனவுல இருக்க எனக்கு லேட் ஆகிடுச்சு” என்று கத்திக்கொண்டு இருந்தாள்.

நம் கதையின் நாயகி நிலா முகில் மருத்துவம் இரண்டாம் ஆண்டு மாணவி தோழிகளுக்கு நிலா.

அப்பா அம்மாவுக்கு செல்லமாக அம்மு அவள் தங்கச்சி கவி நிலாவுக்கு அக்கா பிசாசு.

“வா டி வந்து சாப்பிடு முதல்ல” என்று கூறிக்கொண்டே டைனிங் ஹாலுக்கு சென்றார் மீனாட்சி.

அவர் பின்னாடியே ஓடி வந்தவள் ஹாட் பாக்ஸை திறந்து பார்த்து விட்டு “என்ன மா இன்னைக்கும் இட்லி தானா” என்று புலம்பி கொண்டே சாப்பிட்டாள்.

“மா லஞ்ச் பிரெண்ட்ஸ் கூட கேன்டீன்லயே சாப்பிட்டுக்குறேன் காலேஜ் பஸ் போயிடும் பை மா” என்று பாதி சாப்பாட்டிலேயே கையை கழுவி விட்டு வேகமாக சென்றாள்.

பஸ் ஸ்டாப்பில் அவளுக்காக காத்து கொண்டு இருந்தாள் அம்முவின் உயிர் தோழி சமயத்தில் அவளின் உயிரை வாங்கும் தோழியும் கூட அவள் தான் கவி.

பஸ் ஸ்டாண்ற்கு மூச்சு வாங்க ஓடி வந்த அம்முவிடம் “ஏன் டி இவ்வளோ சீக்கிரம் வந்துட்ட இன்னும் கொஞ்சம் லேட்டா வந்தா பஸ் போயிருக்கும்ல்ல இன்னைக்கு காலேஜ் கட் பண்ணிட்டு நம்ம தலைவர் படத்துக்கு போய் இருக்கலாம் மிஸ் ஆகிடுச்சு” என்றாள் கவி வேதனையுடன். 

அதற்கு நிலா அவளை முறைத்த முறையில் வாயை மூடி கொண்டு முகத்தை திருப்பி கொண்டாள்.

அப்போது பஸ் வரவும் சரியாக இருக்க இருவருமே ஏறி கொண்டனர்.

“ஏன் நிலா இப்படி பஸ்ல அமைதியா போறதுக்கு ஏதாவது பாட்டு போட்டா நல்லா தான இருக்கும்” என்றாள் கவி.

“என்ன பண்ண நிலா காலேஜ் பஸ்ஸா போயிடுச்சே” என்று கவியே மீண்டும் கூறினாள்.

“அதான் உனக்கே தெரியுதுல்ல திரும்ப வந்து என்னையே கேட்டா நான் என்ன சொல்றது” என்றாள் நிலா. 

“நானே டெஸ்டுக்கு படிக்கல என்ன படிக்க எப்படி டெஸ்ட் பண்ண போறேன்னு தெரியல அந்த சொட்ட மண்டையன் வேற இன்னைக்கு கண்டிப்பா டெஸ்ட் வச்சேன் ஆவேன்னு சொல்லிட்டான் என்ன பண்றதுன்னு யோசிச்சிட்டு இருக்கேன் நீ வேற ஏதாவது ஐடியா இருந்தா சொல்லுடி” என்றாள் நிலா.

“ஓ இன்னைக்கு டெஸ்ட் வேற இருக்கா அதுவே எனக்கு தெரியாதே டி இப்ப நீ சொல்லித்தான் எனக்கே தெரியும் புதுசா யாரோ ப்ரோபசர் வந்திருக்கார் டி அவரை எப்படி கரெக்ட் பண்றதுன்னு வேணும்னா கேளு நான் சொல்றேன் டெஸ்ட் எல்லாம் என்ன பண்றதுன்னு என்கிட்ட கேட்காத எனக்கு அதை பத்தி தெரியாது” என்றாள் கவி.

இப்படியே இருவரும் பேசிக்கொண்டே செல்லும்போதே பஸ் அவர்களின் காலேஜின்‌ உள்ளே நுழைந்து விட்டது .

அனைவரும் இறங்கி அவரவர் கிளாஸ்க்கு சென்று விட்டனர்.

ரெண்டு பேரும் பேசிக் கொண்டே கிளாஸ் ரூமில் நுழையும் போது அனைவரும் படித்துக் கொண்டு இருந்தனர்.

“என்ன எல்லாருமே படிச்சுக்கிட்டு இருக்காங்க ஏன் டி கவி நம்மள தவிர எல்லாரும் சின்சியரா தாண்டி இருக்காங்க” என்றாள் நிலா. 

“நாம மட்டும் தான் டி ஜாலியா இருக்கோம் வா என்ன பண்றது.” என்றாள் கவி.

“போய் நாமளும் அவங்களோட சேர்ந்து கண்டினிவ் பண்ணுவோம்” என்றாள் நிலா.

“அது இருக்கட்டும் நிலா இன்னைக்கு நம்ம கேன்டின்ல சிக்கன் பக்கோடா போடுறாங்கலாமே நல்லா இருக்கும் வேற போய் ஒரு வாய் சாப்பிட்டு வந்துரலாம் வரியா” என்றாள் நிலா.

இருவரும் இப்படி பேசிக்கொண்டே சென்று அவரவர் இருக்கையில் அமர்ந்தனர். 

இவங்க ரெண்டு பேரும் இப்படி பேசிட்டு இருக்கும்போது கிளாஸ் ஸ்டார்ட் ஆகி புரோபசர் வந்து “சைலன்ஸ்” என்று கூறிவிட்டு அமர்ந்தார்.

“நிலா காவ்யா ரெண்டு பேரும் எப்ப பார்த்தாலும் என்னதான் பேசிட்டு இருப்பிங்களோ எனக்கும் தெரியல நானும் நீங்க காலேஜ் சேர்ந்த பர்ஸ்ட் இயர்ல இருந்து பாத்துட்டு இருக்கேன் ஆல்வேஸ் டாக்கிங் கீப் கொயட்” என்று கத்தினார்.

அதன் பிறகு கிளாஸ் எடுக்க ஆரம்பித்து விட்டார் பிரசாத் சார்.

கவி “அடுத்து அடுத்து அவர் கூறும் அனைத்திற்கும் ரன்னிங் கமெண்ட்டை கொடுத்துக் கொண்டே” இருந்தாள்.

அவளை திரும்பி பார்த்த நிலா நொந்து கொண்டு கையெடுத்து கும்பிட்டு விட்டாள் “ஆள விடு மா எப்ப பார்த்தாலும் பேசிட்டு நீ என்னை மாட்டிவிட்டுகிட்டே இருக்க அவர்கிட்ட” என்றாள்.

அதற்க்கும் திரும்ப காவ்யா ஏதோ பேச வர அதைப் பார்த்த நிலா அப்படியே அந்த பக்கம் திரும்பி கொண்டாள்.

மறுபடியும் கவி “நிலா நிலா” என்று அழைக்க அவளோ திரும்பாமல் கிளாசை கவனித்து கொண்டு இருந்தாள்.

அதே நேரம் கிளாஸ் வாசலில் பிஜி சீனியர்ஸ் இரண்டு பேர் வந்து நின்றார்கள்.

“எக்ஸ்கியூஸ் மீ சார்” என்று அழைத்தனர்.

“எஸ்” என்றார் பிரசாத் சார் திரும்பி பார்த்தவர் அங்கே நின்றிருந்த மாணவர்களை பார்த்து ‘இப்பதான் கிளாஸ் ஸ்டார்ட் பண்ணுனேன் அதுக்குள்ள வந்துட்டானுங்க’ என்று நினைத்தவர் அதை வெளியில் காட்டி கொள்ளாமல் “சொல்லுங்கப்பா உங்களுக்கு என்ன வேணும்” என்றார்.

“சார் இன்னைக்கு கல்ச்சரல்ஸ்ல ‌கலந்துக்கிறவங்க எல்லாருக்கும் ஓ.டி கொடுக்க சொல்லி ஹெச்ஓடி சொல்ல சொன்னாரு சார்” என்றனர் அந்த மாணவர்கள்.

அந்த மாணவர்கள் வகுப்பின் உள்ளே வந்து அனைவரையும் பார்த்து “இன்னும் நேம் கொடுக்காதவங்க ஆடிட்டோரியத்துல சீனியர் இருப்பாங்க அவங்களை பார்த்து கொடுத்துடுங்க” என்று கூறினர்.

அதற்க்கு “Ok சீனியர் “ அனைவரும் கோரசாக கத்தினார்.

“தேங்க்யூ சார்” என்று கூறிவிட்டு அந்த சீனியர் மாணவர்கள் இருவரும் கிளம்பிவிட்டனர்.

பின் “ஓகே ஸ்டூடன்ட்ஸ் இப்ப கிளாஸ் கவனிக்கலாமா “ என்றார் சார்.

கவி “இல்லனா மட்டும் இப்ப இவர் நம்மள விட்ற போறாராரு பாரு உட்கார்ந்து அவர் கிளாஸ் எடுக்க தான் போறாரு நாம அதை கவனிக்க தான் போறோம்” என்றாள் கவி.

நிலா திரும்பி “கவி மேடம் நீங்க மைண்ட் வாய்ஸ்ன்னு நினைச்சு சத்தமா பேசிட்டு இருக்கிங்க சார் நம்மளை வெளியே அனுப்ப போறாரு பாத்துக்கோ கொஞ்சம்” என்றாள்.

கவி ஈ என்று சிரித்து கொண்டே “அவ்வளவு சத்தமாவா கேட்டுச்சு” என்றாள் நிலா முறைக்கவும் திரும்பிக்கொண்டாள்.

இப்படியே இருவரும் அமைதியாக பேசிக் கொண்டிருக்க கிளாஸ் முடியும் பெல் அடிக்கவும் சரியாக இருந்தது.

“தேங்க்யூ சார்” என்று அனைவரும் கோரசாக க‌‌த்தவும் சார் வெளியே சென்றார்.

பின் கவியும் நிலாவும் வெளியே வந்தனர்.

இருவரும் பேசிக்கொண்டே காரிடரில் நடந்து கொண்டிருக்கும்போது பின் இருந்து ஒரு உருவம் வந்து கவியின் வாயை மூடிக்கொண்டு இழுத்து சென்றது.

கவி பக்கத்தில் தான் இருக்கிறாள் என்று பாதி தூரம் வரை பேசிக் கொண்டே சென்ற நிலா திரும்பி பார்க்கவும் கவி மறையும் சரியாக இருந்தது.

‘பக்கத்துல தான இருந்தா எங்கே போய்ருப்பா’ என்று கவியை பதட்டத்துடன் தேட ஆரம்பித்தாள் நிலா. 

அந்த உருவம் யாராக இருக்க கூடும் கவி எங்கே சென்றாளோ…? 

தொடரும்…

 

 

 

4 thoughts on “கண்ணை கவ்வாதே கள்வா”

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Scroll to Top