ATM Tamil Romantic Novels

யாயாவும் உன்னதே.. 8

யாயாவும் 8

 

 

வெண்பா டைவர்ஸி.. சிங்கிள் பேரண்ட் என்று தெரிந்தது முதல் கோபால் மட்டுமல்ல அவனை போன்ற ஆட்களுக்கு கணவனைப் பிரிந்து இருப்பவள்.. உடல் உணர்ச்சிகளுக்கு வடிகாலற்று இருப்பவள்.. இரண்டு வார்த்தை ஆறுதலாக பேசினாலோ.. பணத்தைக் காட்டினாலோ.. பாதுகாப்புக்கு நான் இருக்கிறேன் பசப்பு வார்த்தை பேசினாலோ.. மயங்கிவிடுவாள் என்ற கீழ்தரமான எண்ணம்..!

 

இத்தனை வருடங்களில் எத்தனையோ இது போல பார்த்து விட்டாள் தான் வெண்பா. ஆனால் ஒவ்வொரு முறையும் இவர்களை போன்றவர்கள் அவளை வலிக்க வார்த்தைகளால் அடிக்கும் போது.. முன்னை விட இன்னும் வலிமையாக.. புடம் போட்ட தங்கமாக தன்னை மெருகேற்றிக் கொண்டு வருகிறாள் ஆரணி வெண்பா..!

 

காலையில் கோபால் பேசிய பேச்சு கூடவே அன்று ஜிஷ்ணு தன்னிடம் முறைகேடாக நடந்து கொண்ட விதம் என்னதான் அதற்கு அவன் காரணம் கற்பித்தாலும் தப்பு தப்பு தானே…!!

 

அந்த வெறுப்புடனே வெண்பா அலுவலகத்துக்கு வந்திருந்தாள். ஆனால், ஜிஷ்ணுவோ அந்நாள் அப்படி ஒரு விஷயம் நடந்த மாதிரியே காட்டிக்கொள்ளாமல் அவளை வரவேற்றான் காலை முகமண்னோடு…!

 

“குட் மார்னிங் வெண்பா..!”

 

அவள் அமைதியாக இருக்க.. ஜிஷ்ணு அவளை விடாமல் ஒரு நிமிடம் பார்த்தவன் ஸ்டைலாக தோளை குலுக்கி விட்டு, மேலும் அவனை சங்கடப்படுத்த விடாமல் அன்று நிகழ்வு பற்றி எதுவுமே கேட்காமல் எதிரில் இருந்த இருக்கையை காண்பித்து அமர செய்தவன் வேலை பற்றி மட்டுமே பேசினான்.

 

“ஆமா.. வீக்லி 3 டேஸ் உனக்கு ஆபீஸ் ஒர்க் ஞாபகம் இருக்கா?” என்று சாதரணமாக கேட்டவன், அவனின் அடுத்த ப்ராஜெக்ட் பற்றி பேசி இயல்பாக நடந்து கொள்ள, அவள் தான் குழம்பி போனாள். 

 

‘நிஜமாலுமே அன்று பேசியது இவன் தானா?’ என்று இவளின் எண்ண ஓட்டங்கள் முழுக்க அவனைப் பற்றியே சுற்றியே சுழன்று கொண்டிருக்க.. ஜிஷ்ணு சொன்னது எதையுமே அவள் கவனிக்கவே இல்லை.

 

“ஓகே வெண்பா.. நான் சொன்னதெல்லாம் புரிஞ்சுதா? நான் சொன்ன மாதிரியே இந்த புது ப்ராடக்டுக்கு எல்லாம் கிரியேட் பண்ணி கொண்டு வாங்க.. யூ மே கோ நவ்..!” என்றதும் அவளோ பேந்த பேந்த விழித்தாள்.

 

‘என்ன சொன்னான் இவன்? ஆமா.. என்ன ப்ராடெக்ட்? நம்ம மண்டையில் ஒன்னுமே ஏறவில்லையே?? அச்சோ வெண்பா… இப்படியா இருப்ப இப்ப பாரு.. இவன் வச்சு நம்மள செய்யப் போறான்?’ என்று அவள் பரிதாபமாக அவனைப் பார்த்தாள்.

 

கண்களை சுருக்கி முகத்தை ஒரு பக்கம் லேசாக சாய்த்து அவள் பார்க்கும் இந்த விதம் மீண்டும் அவன் மனதில் மின்னலாய் தோன்றி மறைந்தது, ‘ஏற்கனவே இந்த முக வெட்டு.. இந்த கண்களின் அளவளவால் உனக்கு பரிச்சயமடா மடையா..!’ என்று..!

 

தலையை உலுக்கி கொண்டவன் அவளிடம் முதலாளியாகவே நடந்து கொண்டான்,

 

“இன்னும் இங்கே உட்கார்ந்து என்ன என்னையே சைட் அடிச்சிட்டு இருக்க? வேலை பார்க்கும் எண்ணம் இல்லையா?” என்று அதிகாரமாக அவன் கேட்டதும் அவள் விதிர்விதிர்த்து போக..

 

“போ.. போ.. ஆபீஸ் டைம்ல போய் பொறுப்பா வேலைய பாரு..!” என்றவன் தனது கணினிக்குள் முகம் புதைத்துக் கொண்டான் முகிழ்த்த சிரிப்பை அடக்கி கொண்டு… 

 

ஆனால் கணினி திரையில் அவன் பார்த்தது என்னவோ சிசிடிவி கேமரா உபயோகத்தால் எதிரே இருக்கும் பெண்ணின் வதனத்தில் தோன்றி மறையும் உணர்வுகளை தான்..!

 

“ஹா ஹா.. அம்மாயி.. லெஸ்ஸா மாட்டுந்திவா (நல்லா மாட்டிகிட்டியா)” என்று உள்ளுக்குள் நகைத்தான்.

 

அவளோ செய்வது அறியாது கைகளை பிசைந்து கொண்டு அமர்ந்திருந்தாள், கண்களோ அங்கும் இங்கும் அலைபாய்ந்தது.

 

“அம்மாயி.. அம்மாயி.. நுவ்வு சால அந்தமைனா.. உம்மா (நீ ரொம்ப அழகு டி பெண்ணே..! உம்மா)” என்று சிசிடிவி திரையில் தெரிந்த அவளது வதனத்தை ஒற்றை விரலால் அளந்தான்.

 

அவனை வார்த்தையாலே வாட்டி வதைக்க வேண்டும் என்று வந்தவளோ.. இப்போது ஒரு வார்த்தை பேச வழியின்றி பாவமாய் அவனை பார்க்க..

 

மீண்டும் அந்த கண்கள்… அவனை அத்தனை ஈர்த்தது காந்தமாய்..! 

 

இரும்பாய் ஆவலோடு ஒட்டிக்கொள்ள அவனுக்கும் விருப்பமாய்..!

 

‘ம்ப்ச்.. இன்னைக்கு எதையாவது செஞ்சு வச்சு அதுக்கு புதுசா ஒரு விளக்கம் சொல்ல நாம பிரிப்பேர் பண்ணிட்டு வரலையே.. நெக்ஸ்ட் டைம் ப்ரிப்பேர் பண்ணிக்கிட்டு தான் இவளை சீண்டவே செய்யணும்..! பட் உன்னை இப்படி சீண்ட.. செல்லமாக தீண்ட ஏனோ பிடிக்குது டி அம்மாயி’ என்று இன்னும் அவளின் அழகு வதனத்தை கணினி திரையில் பார்த்துக் கொண்டே தனக்குள் பேசி ரசித்தான்.

 

பின் தலையை மட்டும் சாய்த்து புருவத்தை உயர்த்தி அவளிடம் என்ன என்று கெத்தாய் கேட்க..

 

அவளோ வேகமாக தலையாட்டி ஒன்றிமில்லை என்றவள்,

மெல்ல தைரியத்தை வரவழைத்துக் கொண்டு “சார் ப்ளீஸ் இன்னும் ஒரு முறை எக்ஸ்ப்ளைன் பண்றீங்களா? எனக்கு நிறைய டவுட்ஸ் இருக்கு..” என்று திரித்துக் கூறினாள். எங்கே முழுவதும் கேட்கவில்லை என்று கூறினால் சீட்டை கிழித்து அனுப்பி விட்டால் என் செய்வது?

 

‘நீ எத்தன் என்றால் எத்தனுக்கு ஜித்தன் இந்த ஜிஷ்ணு டி பெண்ணே..!’ இன்று முகிழ்த்த சிரிப்பை மீசை முறுக்குவது போல மறைத்துக் கொண்டவன்,

 

“என்ன டவுட்?” என்று புருவம் உயர்த்தி அழுத்தமாய் கேட்க.. 

 

இப்பொழுது சுத்தமாய் கொலாப்ஸ் ஆன செல்போன் போலவே அவன் என்ன சொன்னான் என்று தெரியாமல் எதை கேட்பது என்று பரிதாபமாக அவனை பார்த்தாள்.

 

ஏனோ அந்தப் பார்வை அவனை நெகிழச் செய்தது. உள்ளம் பனியாய் உருகச் செய்தது. அத்தனைக்கும் அவளது விழிவீச்சில் இவனை கவர்வதற்கான எந்த வித பொய் அலங்காரங்களும் இல்லை..‌ வெறும் மெய் மட்டுமே..! மையிட்ட அந்த மெய் விழி அவனை அத்தனை வசீகரித்தது.

 

பெருமூச்சுடன் அவளைப் பார்த்தவன் “இது போல.. எனக்கும் சில சமயம் உங்களால் நிறைய டிஸ்டர்ப் ஆகுது வெண்பா..” என்றான் ஆழ்ந்த குரலில்..

 

அவள் திடுக்கிட்டு பார்க்க.. “எஸ்..! ஏற்கனவே அதுக்கு ரீசன் நான் சொல்லி இருக்கேன். உங்களுக்கும் அதுபோல இருக்கும் போல.. அதனாலதான் இப்ப நான் சொன்னது எதுவுமே உங்க மைண்டல ஏறல” என்று அவன் அவளை கூர்ந்து பார்த்து கேட்க, அவளோ உதடு கடித்து தலையை குனிந்து கொண்டாள்.

 

தன் கையில் இருந்த பேனாவால் அவள் பற்களில் இருந்து உதட்டை அவன் எக்கி விடுவிக்க திடுக்கிட்டு அவள் பார்க்க.. பேனாவை அவள் முன் ஆட்டியவன் “பென்னால் தான் பெண்ணே..!” என்றான் மந்திரப்புன்னகையோடு..!

 

அவனின் இந்த புன்னகை அவளுக்கு மூச்சடைத்தது..!!

 

மீண்டும் அவளுக்கு ஒரு முறை அந்த ப்ராக்டெக்டை பற்றி கூறி விளக்கியவன், “மனசு ரொம்ப கஷ்டப்பட்டு கட்டுப்படுத்தாதீங்க வெண்பா..! கோ வித் ஃப்லோ..!” என்று கடைசியாக கூறி புன்னகை புரிந்தவனின் அந்த முகம் அவளுள் ஏற்கனவே புதைந்திருந்த நிகழ்வுகளை வெளிக்குணர இடவலமாக தலையாட்டி மறுத்தவள், 

 

“எப்பொழுதும் எல்லா நேரத்திலும் கோ வித் ஃப்லோவா இருக்க முடியாது சார்..! மனக்கட்டுப்பாடு அவசியம்..! நம்மை மீறி மனசு சொல்ற வழியில போனா வலி தான் நிச்சயம்..!” என்றவள், 

 

“வொர்க்.. முடிச்சுட்டு வரேன் சார்..!” என்று அவனிடம் தலையாட்டி விட்டு வெளியேறியவளை சுவாரசியத்தோடு பார்த்தபடி தன் இருக்கையில் சாய்ந்திருந்தான்‌ ஜிஷ்ணு..!

 

அதன் பின் வந்த நாட்களில் அவனிடம் இருந்து செக்ஸ் டார்ச்சர் வரப்போகிறது இல்லை எதிர் வீட்டு கோபால் போல பார்வையால் துகிலுரிய போகிறான் என்று எதிர்பார்த்து பயந்து, பின் ஏமாந்து போனாள். அவளிடம் அறை வாங்கிய பிறகும், அவன் மிக இயல்பாகவும் டீசண்டாகவும் நடந்து கொள்ள.. அவனுடைய குணம் ஏனோ அவளுக்கு புரியாமல் போனது. 

 

“என்ன மேக் இவன்? அனுமானிக்கவே முடியலையே?” என்று புலம்புவாள். ஆனால் எல்லாம் மனதோடு தான்..!

 

அவன் இயல்பு அவளையும் மாற்றியது மெல்ல மெல்ல..

வெண்பாவுமே மனதில் எதையும் வைத்துக் கொள்ளாமல் அவனுடன் இயல்பாக பேச ஆரம்பித்தாள். ஆனால் அந்த இயல்பிலும் ஒரு எல்லை இருக்கும்..!

 

“ஆமா ஏன் உன் ஹஸ்பண்ட் உன்னை விட்டு பிரிஞ்சிட்டான்?” என்று ஒரு முறை ஜிஷ்ணு கேட்டதும், விரக்தியாக சிரித்தவள் “என்னை விட சிறப்பான பொண்ணு அவருக்கு கிடைச்சுட்டாம் சார்” என்று அதோடு நிறுத்திக் கொள்வாள்..!

 

“உன்னை விட சிறப்பான பொண்ணா?” என்று தலையாட்டி சிரித்தவன்,

 

“வாய்ப்பே இல்ல..! நான் பார்த்த வரையில் நீ ரொம்ப அருமையான பொண்ணு. கூடவே…” என்று இழுத்தவன், அவளை மேலிருந்து கீழாக பார்வையால் அளவீட.. 

 

வெண்பா வெளிப்படையாக அவனை முறைத்தாள் “ யூ ஆர் எ எவரி குட் மதர்” என்று அவன் புன்னகைக்க..

 

அவன் பார்த்த பார்வையில் ஏதோ தன் அழகை பற்றி உளற போகிறான் என்று எதிர்ப்பார்த்தவள், சத்தியமாக இவ்வாரத்தையை எதிர்பார்க்கவில்லை அவனிடம். ஆச்சரியமாக விழி விரித்தாள்.

 

“அன்னைக்கு தியேட்டர்லயே தெரிஞ்சது வெண்பா. ஆரவ் எவ்வளவு சூட்டுகையான பையன்னு..! அவனை ரொம்பவும் பொறுமையா ஹேண்டில் பண்ற.. ரொம்ப அருமையாகவும் அவனை நீ வளர்த்து இருக்க, நாட்டியா இருந்தாலும் இந்த சின்ன வயசுலயே அப்படி ஒரு பக்குவம் அவனிடம்” என்றான்‌ உளமார..

 

எந்த தாய்க்கு தான் தன் மகனை யாராவது பாராட்டி பேசுகையில் உள்ளம் துள்ளாது? உவகை கொள்ளாது? அதுவும் ஜிஷ்ணு மகனைப் பற்றி கூறியதும் பேர் உவகை கொண்டது அவளது உள்ளம்..!

 

“நிஜமாவே நான் அவனை நல்லா வளர்த்திருக்கேனா சார்?” என்று குரல் நடுங்க.. உதடுகள் துடிக்க.. கண்கள் கலங்க.. ஜிஷ்ணுவிடம் கேட்டாள் வெண்பா.

 

“ஆப் கோர்ஸ்..!” என்றான் ஏன் அவள் கலங்குறாள் என்று புரியாமல். அவளது முகம் விகிசித்தது.

 

அது அத்தனையும் அவள் முகத்தில் வர்ண ஞாலங்களாக ஜொலிக்க.. “ஆரவ் பத்தி பேசினாலே நீ ரொம்ப இளகுன‌ மனசா மாறிடுற.. மகனை பத்திய பெருமை உன் கண்ணுல ஜொலிக்குது” என்றான்.

 

அதை கூறும்போது அவனது சிறுவயது ஞாபகங்கள் வர…

 

“வந்த இடத்துலயாவது கொஞ்ச நேரம் நிம்மதியா இருக்க முடியுதா? இத்தனை வால்தனம் பண்றான்.. அட்டெமண்டா பிஹேக் பண்றான்.. கண்டிக்கவே மாட்டியா நீ?” என்று ஜிஷ்ணுவின் அம்மா பைரவியிடம் அவள் அக்கா கேட்க..

 

“என்ன செய்றது? வீட்ல இந்த பிசாச தனியாக விட்டுட்டு வர முடியாது. பிள்ளைய பாக்கறதோட அப்படி என்ன வேலைனு பெருசுங்க ரெண்டும் கேட்கும். இவன சாக்கா வச்சு தான் நான் வெளியில வர வேண்டியதா இருக்கு. வந்தாலும் இந்த சனியன் எதையாவது பண்ணிக்கிட்டே இருக்கு.. ஒரு நிமிஷம் ஒரு இடத்துல உட்கார மாட்டேங்குது.. ரே ஜிஷ்ணு இங்க வா.. சிவனேன்னு கை கட்டி உட்காரல.. லன்ச் உனக்கு கிடையாது” என்று மகனின் கையை தரத்தர என்று இழுத்து அருகில் இருந்த இருக்கையில் அமர வைத்து அவன் தலை முதுகு என்று பட்டு பட்டு என்று அடித்த அன்னையின் ஞாபகம் வர.. தலையை உலுக்கி அந்நினைவுகளை விரட்டினான் ஜிஷ்ணு.

 

ஆரவ்வை வைத்து அவளை பேச வைத்தான் ஜிஷ்ணு. அவளைப் பற்றியோ அவளது திறமை பற்றியோ இல்லை..!

 

அவளின் கடந்த காலத்தை பற்றியோ.. அவளின் வீட்டாரை பற்றியோ.. எதை கேட்டாலும் சொல்லுவாள். பேச்சை மாற்றலாம் மாட்டாள்.. சொல்லுவாள் தான், ஆனால் அது அவனுக்கே புரியாமல் ஏதாவது ஒன்று சொல்லி அந்த பேச்சை அத்தோடு முடித்து விடுவாள். 

 

இதுவே ஆரவ் பற்றி பேசினால் தாய்மையின் பெருமை அவள் முகத்தில் தெரிவதோடு இன்னும் அவனைப் பற்றி அவளே பேச்செடுப்பாள்.

 

இப்படித்தான் ஆரம்பித்தது அவர்களது பழக்கம். இந்த இடைப்பட்ட இரண்டு மாதங்களில் அவர்களுடைய நட்பும்.. புரிதலும் நிறைய வளர்ந்திருக்கின்றன..!

 

இடையிடையே ஒரு தரம் இவள் மாலுக்கு சென்ற போது.. அங்கே ஜிஷ்ணுவும் வந்திருக்க.. யாரிடமும் ஒட்டாத ஆரவ்வே அவனோடு ஒட்டிக்கொண்டு அலைந்தான். அவர்கள் வாங்கிய பொருட்களை தூக்கி கொண்டு பின் அலைந்தாள் வெண்பா, புரியாத உணர்வோடு..!

 

அடுத்த மாதம் இவள் ஒரு என்டர்டெயின்மென்ட் பார்க் செல்ல அங்கேயும் அவன் நின்றிருக்க.. வெண்பா இப்பொழுது சந்தேகமாக அவனை பார்க்க…

 

கொஞ்சம் தள்ளி நின்ற அஸ்வத்தை காட்டினான். அவன் அங்கே ஒரு பெண்ணுடன் பேசிக் கொண்டிருந்தான்.

 

 “பாரு..! அவனுக்கு நான் பிஏவா? இல்ல எனக்கு அவன் பிஏ வானு தெரியல. அவன் வேலைக்கு என்னை இழுத்துட்டு வந்து இருக்கான்.. வொர்கிங் டேல தான் அவன் எனக்கு பிஏவாம். இந்த மாதிரி லீவ் டேஸ்ல நான் தான் அவனுக்கு பிஏவாம்” என்று அலுத்து கொண்டு பேசியவன், ஆரவ்வை தூக்கி மூக்கோடு மூக்கு உரசினான். அதில் அழகாய் சிரித்தாள் வெண்பா.

 

“யுவர் ஸ்மைல் சோ க்யூட்.. வெண்பா!” என்றான் ஜிஷ்ணு. சட்டென்று புன்னகையை அவள் முடித்துக் கொண்டு நகர்ந்து விட்டாள்.

 

‘நெருங்குற மாதிரி இருக்கா.. ஆனா.. நெருங்கல.. ம்ம்ம்.. வெண்பா.. யாரு நீ? இரு எல்லாத்தையும் கண்டுப்பிடிக்கிறேன்’ என்றவன் ஆரவ்வை தூக்கியப்படி பின்னால் சென்றான்.

 

எதற்கோ திரும்பியவளின் உதடுகள் அவன் நெஞ்சில் பதிய.. சாரி என்றவள் நகர, அவனுக்கோ அவ்விட ஈரத்தில் உறைந்தது.

 

அன்று இரவு மஞ்சத்தினுள் விழுந்தவன் உறக்கமின்றி தவித்தான். 

 

ஏன் இந்த பெண் இத்தனை என்னை ஈர்க்கிறாள்? என்று புலம்பி தவித்தவன் அவள் இதழ் பட்ட இதயத்தை நீவி விட்டான். இன்னும் அவள் இதழ்களின் ஈரம் இருப்பது போல் உணர்வு..! 

 

அன்று அவளுக்கு முத்தமிட்ட நினைவும் சேர்ந்தே வந்து அவனை அலைகழித்தது. புதிதாய் பல் முளைத்த குழந்தையாய் பரப்பரத்தது அவனது மனம் அவளது கன்னங்களின் மென்மையை சோதிக்க.. அவள் இதழ்களின் ஈரத்தை உள்வாங்க..!

 

அன்று‌ சுவாசித்த அவள்‌ வாசம் வேண்டுமென்று ஏங்கியது அவன் மனம்..!

 

மறுநாள் காலை அலுவலகத்திற்கு வந்தவன் தன் முதல் செடியூலை முடித்து ரவுண்ட்ஸ் சென்றான். அவ்வப்போது செல்வது தான். அவன் தயாரிப்புகளுக்கான புரொடக்ஷன் யூனிட் ஊருக்கு தள்ளி‌ இருக்கும். இங்கே அவனது தயாரிப்புக்களுக்கான அலுவலக சம்பந்தப்பட்ட வேலைகள்.. ஐடி விங்க்.. சேல்ஸ் டிஸ்கஷன் டீம்.. ப்ராடக்ட் ப்ரோமோஷன் டீம்.. இவர்கள் மட்டும் குறைந்தது 100 நபர்கள் வேலை செய்வார்கள். 

 

இதை தவிர தொழிற்சாலை.‌. அவனது இயற்கை பண்ணை..

இந்தியா மற்றும் உலகம் முழுவதும் இருக்கும் விற்பனை பிரதிநிதிகள் அவர்களின் சூப்பீரியர்கள் என்று குறைந்தது 2000 நபர்கள் அவனின் கீழ் வேலை செய்கிறார்கள்.

 

இந்த 2000 பேரிலும் ஏனோ இந்த பெண் மட்டும் அவனை பெரிதும் பாதிக்கிறாள்.

 

அனைவரின் காலை வணக்கத்தை ஏற்றபடி ரவுண்ட்ஸ் சென்றவனின் கண்ணில் பட்டது என்னவோ

வெண்பா அவளது ஐடி மேனேஜரிடம் ஏதோ கேட்டுக் கொண்டிருக்க.. அவனும் பதில் உரைப்பதை தான்.

 

இருவரையும் கூர்ந்து பார்த்த ஜிஷ்ணுவின் கண்களில் அத்தனை கோபம் கொந்தளித்தது. அலுவலகத்தில் ஆண் பெண் பேசக்கூடாது என்ற பத்தாம் பசலித்தனம் எல்லாம் அவனிடம் இல்லை.

 

கூடவே இருவருக்கும் இடையில் கண்ணியமான இடைவெளி தான். ஆனால் பதில் உரைத்திருந்தவனின் கண்களிலோ அந்த கண்ணியம் இல்லை. ஒரு ஆணாக அவனின் பார்வையை புரிந்து கொண்ட ஜிஷ்ணுவின் முகத்தில் அத்தனை ரௌத்திரம். 

 

அதுவும் வெண்பா அமர்ந்து கொண்டு திரையை காண்பித்து சந்தேகம் கேட்க.. இவனோ அவளது இருக்கையை பின்பக்கம் பற்றியப்படி குனிந்து அவளுக்கு பதில் கூறிக் கொண்டிருந்தவன், கைகளோ பின்னால் அவளை அணைத்தபடியும்.. முன்னால் அவளது ஏற்று இறக்கங்களை பார்த்தபடியும் தான் பதில் உரைத்துக் கொண்டிருந்தான். 

 

அதைக்கொண்டு தான் அத்தனை ஆத்திரம் அவனுக்கு.

 

சாதாரணமாக அவன் அலுவலகத்தில் வேலை செய்யும் ஏதாவது ஒரு பெண்ணை இப்படி பார்த்தாலே தன்னை பிடுங்கி காக்காக்கி போட்டு விடும் குணம் கொண்டவன் ஜிஷ்ணு.

 

அதிலும் இவள் வாழ்ந்தமா இல்லையா என்று தெரியாமல் ஏதோ ஒரு ஈர்ப்போடு வெண்பாவின் பின்னே இவன் சுற்றி கொண்டிருக்க.. தன் முன்னே கழுகு பார்வையோடு துர்ச்சாதனப் பார்வையையும் அனுமதிப்பானா என்ன? 

 

ஆனால் இங்கேயே அவனை போட்டு மிதித்து எடுத்தால் பேச்சு வேற மாதிரி செல்லக்கூடும் என்பதை யூகித்த ஜிஷ்ணு.. தன்னை அடக்கி கொண்டு,

 

அந்த அலுவலகமே அதிரும் வண்ணம் “வெண்பா..!” என்று கர்ஜித்தான்.

 

தன் அருகில் ஒருவன் தன்னை தப்பாக பார்ப்பதைக் கூட அறியாமல் அப்படி என்ன வேலை வேண்டி கிடக்க இவளுக்கு? பெண்களின் உள்ளுணர்வு கூறாதா அவன் பார்வை சரி இல்லை என்று? மொத்த கோபமும் இப்பொழுது வெண்பாவின் மேல் திரும்பியது அவனுக்கு.

 

அவளும் அதிர்ந்து “எஸ் சார்” என்று எழுந்து நிற்க.. அருகில் இருந்த இந்த மேனேஜருக்கு லேசாக உள்ளே வெடவெடுத்தது. அதை காட்டிக்கொள்ளாமல் அவனும் அசட்டு சிரிப்போடு “குட் மார்னிங் சார்.!” என்றான். இருவரையும் அழுத்தமாக ஒரு பார்வை பார்த்தவன், 

 

“கம் டு மை கேபின் வெண்பா” என்று மீண்டும் அவளிடம் எரிந்து விழுந்தவன், தன் அறை நோக்கி செல்ல..‌

 

அவளோ அருகில் இருந்த மேனேஜரிடம் “எக்ஸ்க்யூஸ் மீ.. சார்” என்று விட்டு அவன் பின்னால் ஓடினாள்.

 

கதவை தட்டிவிட்டு அவள் உள்ளே நுழைய, தன் மேஜையில் கைகள் கட்டியப்படி அமர்ந்திருந்தவன், அவளை தீர்க்கமாக பார்த்து, “அந்த நவீன் கிட்ட அப்படியென்ன பேச்சு?” என்று அழுத்தமாக கேட்க..

 

அவனின் மாற்றத்தை புரிந்து கொள்ளாத பேதையோ “அது.. நீங்க சொன்ன புது ப்ராடக்ட்டுக்கு வெப் பேஜ் கிரியேட் பண்றதுல சில டவுட்ஸ். அதை தான் கேட்டுட்டு இருந்தேன்..” என்றவள் முடிக்கும் முன், தான் அமர்ந்திருந்த மேஜையில் இருந்து தொப்பென்று இறங்கியவன், அவள் முகத்தருகே உருத்து விழித்தான்.

 

“ஹௌ டேர் யூ? உன் கிட்ட கான்ஃபிடென்ஷியலா நான் கொடுத்ததை.. ஊருக்கே வெளிச்சம் போட்டு காட்டிட்டு இருக்க.. யூ இடியட்..! எதையுமே மறைச்சு வைச்சுக்க தெரியாதா? எல்லாமே வெட்ட வெளிச்சமா காட்டானுமா?” என்றவனின் வார்த்தையில் அவள் தீச்சுட்டது போல நிமிர்ந்து பார்க்க..

 

“என்ன.. என்ன டி ரொம்ப ஒழுக்கம் போல முறைக்குற? ஒரு ஆம்பள உன்னை எப்படி பார்க்குறானு உனக்கு தெரியாதா? இல்ல பொம்பளைங்களுக்கு இருக்கிற உள்ளணர்வு உனக்கு சொல்லாதா? அவன் கிட்ட அப்படி காட்டிட்டு நிக்குற நீ? டோண்ட் யூ ஹேவ் ஷேம்?” என்று அவன் பேசிய வன் சொற்கள் அடர் அமிலத்தை அவள் மீது தெளித்ததை போல் இருந்தது. 

 

“நானா?? நானா?? அப்படி..?” என்று உதடுகள் துடிக்க கண்கள் கலங்க அவள் அவனை பார்க்க..

 

“இப்படி பாக்காத மொதல்ல.. இப்படி பார்த்து பார்த்து தான் நல்லவ வேசம் போட்டு சுத்திட்டு இருந்த.. நானும் உன்னை நம்பிட்டேன்..” அவன் பேச பேச, தன் மீது அநியாயமாக குற்றம் சாட்டும் அவன் முன் அழுது விடக்கூடாது என்று வைராக்கியத்தோடு உதடு கடித்து நின்றிருந்தாள் வெண்பா.

 

உண்மையில் அவளை வருத்தம் எண்ணமெல்லாம் அவனுக்கு இல்லை. அது எப்படி தான் பார்ப்பவளை இன்னொருத்தன் பார்க்கலாம்? அதுவும் என் கண்ணெதிரே என்று வந்த கோபம். 

 

ஆனால்.. அதை யார் மீது காட்டுவது கொட்டுவது என்று தெரியாமல் வழக்கம் போல பெண்ணினத்தின் மீது அனைத்து குற்றங்களையும் சுமத்தும் சமூகத்திற்குள் ஒருவன் ஆனான் ஜிஷ்ணு.

 

இவரிடம் விளக்கம் சொல்லி மாளாது. ஏன் சொல்ல வேண்டும்? அதுவும் மஞ்சள் நிற கண்ணாடியை போட்டுக்கொண்டு எல்லாருக்கும் மஞ்சள் காமாலை என்று கூறுபவனிடம் எதை சொல்லி? எதை விளக்க? என்று ஆழ்ந்த மூச்சு எடுத்து தன் அழுகையும் கட்டுப்படுத்திக் கொண்டு “இனிமே எந்த டவுட்ஸ்னாலும் உங்களை கேட்கிறேன் சார்’ என்றாள்.

 

அவனும் அதை தானே எதிர்பார்த்தான். “குட்..! இனிமேல் எதுனாலும் என் கிட்ட தான் வரணும். என்‌கிட்ட மட்டும் தான் வரணும்” என்றவனின் இரு பொருள் வார்த்தையில் அவள் திடுக்கிட்டு பார்க்க.. 

 

நீ போகலாம் என்பது போல கையசைத்தான் ஜிஷ்ணு.!

 

 

தொடரும்..

3 thoughts on “யாயாவும் உன்னதே.. 8”

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Scroll to Top